Advertisement

அடுத்த நாள்  பள்ளி முடிந்தது போகும்போது வினோதினியின்  சைக்கிளை பின்னாடி இருந்து ஒரு கை பிடித்து இழுத்தது வினோதினி சற்றென்று திரும்பி யார்? நம்ம சைக்கிளை பிடித்து இழுக்கிறது என்று பார்த்தாள். 

மோகன் தான் அவளுடைய சைக்கிளை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். “ஏய் என்ன  திமிரா உனக்கு? நேத்து என்னமோ நான் உன் பின்னாடி வர்ற மாதிரி சீன் போட்டா.?” என்று கேட்டான். “ஏன்..  ?வண்டியில் உட்கார மட்டிங்களோ  நான் என்ன கடிச்சா முழிங்கிருவேன் வாயத் தொறந்து பதில் பேசு” என்று உறுமினான். 

“நீங்க யாரு எனக்கு? எதுக்கு உங்ககிட்ட பதில் பேசணும் “என்று அலட்டாமல் பதிலளித்தாள். மோகன் , “திமிரு திமிரு உனக்கு உடம்பெல்லாம்  திமிரு” என்று கூறினான். வினோதினி “ஏய் யாருக்கு திமிரு? நீ தான் திமிரு புடிச்சவன் “என்று கூறினாள்.

 “ஏய் என்ன என்னைய பாத்தா எப்படி தெரியுது? ” “எரும மாடு மாதிரி தெரியுது “என்று வினோதினி கூறினாள்.மோகன் “நீதாண்டி பிசாசு” என்று கூறினான் .இப்படியாக சண்டை வளர்ந்து கொண்டிருக்கும்போது பிரியாவும் தாஸ் வந்து இருவரையும் விளக்கினர். 

பிரியா “வினோ வா வீட்டுக்கு போலாம் நேரம் ஆயிடுச்சு எல்லாரும் பாக்குறாங்க பாரு “என்று கூறி அழைத்துக்கொண்டு போனாள். வினோவிற்கோ  பயங்கர கோபம்  சும்மா போனவல கூப்பிட்டு வம்புக்கு இழுத்து விட்டு இருக்கிறான்,என்று கோபம் கோபமாக வந்தது. எல்லோரும் பார்த்தது வேறு எரிச்சலாக இருந்தது கடைசியாக வினோ போகும்போது” போடா மூஞ்சி மொகரையும் பாரு “என்று திட்டி விட்டு சென்றாள்.

 மோகன்  “இப்படியும் ஒரு பொண்ணு எப்படி எல்லாரும் முன்னாடி இப்படி வாய் அடிக்கிறாள் பாரு” என்று தாஸிடம் திட்டிக்கொண்டு இருந்தான் “போடி உன் மூஞ்சி மொகரையும் பாரு” என்று அவளை பார்த்து திட்டினான். இவர்கள் இருவரும் போட்ட சண்டையை வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் பார்த்துக்கொண்டிருந்தனர்.எல்லோருக்கும் என்ன இவர்கள் எப்போதும் ஒருத்தருக்கு ஒருத்தர் பார்த்துக்ககூட மாட்டாங்க இப்ப என்னடான்னா இப்படி சண்டை போடுகிறார்கள் என்று அங்கலாய்த்தனர்.

மோகனின் நண்பன் சந்தோஷ் ,”என்ன பிரச்சினை எப்பவும் பொறுமையா தானே இருப்ப இன்னைக்குதேவையில்லாம வினோவோட போய் சண்டை போடுற அது எல்லாரும் பார்க்கிற மாதிரி என்னதான் பிரச்சனை என்று கேட்டான்.”

○” உன்னுள் ரோஜாவாய் நான்”

○அத்தியாயம் -3   (2)

                 மோகன் தன் நண்பன் சந்தோஷ், இடம் நேத்து ஃபங்ஷனு சொல்லி இருந்தேல இல்ல அங்க தாண்டா பிரச்சனையே, எங்க அம்மா 

வினோத உடைய அம்மாவை கூட்டிட்டு வர சொன்னாங்க நானும் போயி லட்சுமி அத்தையை தேடிப்பார்த்தேன். அவர்களைக் காணவில்லை அதனால் வினோதவிடம் சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் வினோத அவங்க அம்மாகிட்ட கூப்பிட்டத சொல்லவே இல்ல அதுக்கு எங்கம்மா நான் போய் கூப்பிடவே இல்ல என்று என்னை எல்லார் முன்னாடியும் திட்டினாங்க அதைப் பார்த்து அவள் சந்தோஷமா சிரிச்சுகிட்டு இருக்கா. 

             அதுக்கு பிறகு, மாமா பிள்ளைகள் என்னுடையும் லத்திகாயுடையும் உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க ஆனால், வினோ வந்து இரண்டு பேரையும் கூட்டிகிட்டு போயிட்டா அப்புறம், சாப்பிடும் இடத்தில் நான் லத்திகா முகிலன் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது வினோத அவளது தங்கை தம்பியுடன் வந்தாள். நாங்க சாப்பிட்டுட்டு இருந்த இருக்கைக்கு பக்கத்திலேயே இடம் இருந்தது. எல்லோரும் அங்கே உட்கார சொன்னார்கள் சாப்பிட  ஆனால், அவள் “இல்ல வேணாம் நாங்க அடுத்த பந்தியில் உட்கார்ந்து சாப்பிடுகிறோம் “என்று சொல்லிவிட்டு போய்விட்டாள். உட்காரப் போனா அவள் தம்பி தங்கையையும் கூட்டிக்கொண்டு போய் விட்டாள்.

          அப்பொழுது ,முகிலன் என்னைய “அந்த பொண்ணு ஏன் உட்கார்ந்து சாப்பிட மாட்டேங்குது? உன்னை பார்த்த அந்த பொண்ணு போயிருச்சே என்று முகிலன் கேள்வி கேட்டான். அதற்கு நான் “நான் என்ன பண்றது இத நீ அவ கிட்ட தான் கேக்கணும்” என்று சொல்லிவிட்டேன். அப்பொழுதும், அவன் என்னை நம்பாத மாதிரி ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

         அடுத்து, வீட்டில் கொண்டுபோய் லட்சுமி அத்தை வினோத அவையும் அவள் தங்கையும் விட சொன்னார்கள்.நான் கிளம்பும்போது ,”நான் போகலாமா உங்களோட சேர்ந்தே போய்  கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டாள். அப்பொழுது, எங்க அம்மாவும் லட்சுமி அத்தையும் என்னை ஏற இறங்க பார்த்து வைத்தார்கள். அப்ப அவங்க என்ன நினைத்திருப்பார்கள் ?”நான் என்னமோ இவ பின்னாடியே திரியிற மாதிரியும் இவ என்னமோ என்ன அவாய்ட் பண்ற மாதிரியும் அவர்கள் நினைத்திருப்பார்கள் இல்லையா? என்று  கேட்டான் மேலும் வினோதினியை திமிரு திமிரு உடம்பெல்லாம் திமிரு அவளுக்கு என்று நன்குதிட்டினான்.

          என்னடாபொண்ணு,அமைதியா இருக்கேன் பார்த்தேன். இந்த பொண்ணு, அமைதியா இருந்தே எல்லாரையும் கலங்கடித்து விடும் போல என்று சந்தோஷ் கூறினான். சரி விடுடா அந்த பொண்ணு பார்த்தாலும் ,கெட்ட பொண்ணு மாதிரி தெரியல , உனக்கு பொண்ணுங்கள பார்த்தாலே பிடிக்காது அதனால் கூட ஒதுங்கிப் போய் இருக்கலாம். இல்லையா, என்று சரியாக கூறினான். ஆனால் மோகனோ,” அடேய் பேசாம இரு என் வாயில ஏதாவது வந்துரும் இனிமேல் அவள பத்தி எந்த பேச்சும் என்கிட்ட பேசாதே” என்று கூறி பேச்சை முடித்து விட்டான்.

         அதற்குப் பிறகு, இருவரும் ஒருவரை ஒருவர் எதிரெதிரே பார்த்தாலும் முறைத்துக் கொண்டு சென்றனர்.நாட்கள் வேகமாக நகர ஆனுவல் எக்ஸாம் வந்தது பரீட்சை முடிந்து ரிசல்ட் வந்தபின் அவர்கள் அவரவர் வழியில் சென்றனர். மோகன் தனக்கு விருப்பமான பி. டெக் எடுத்துப் படித்தான். வினோதவோ தனக்கு விருப்பமான சி ஏ படிக்க ஆசைப்பட்டாள்.ஆனால் வீட்டில் உள்ளவர்களோ அதெல்லாம், பெண் பிள்ளைக்கு சரியாக வராது என்று அவளை டிகிரி படிக்க ஏற்பாடு செய்தனர்.அதன் பிறகு டிகிரி முடித்த பிறகு b.ed படித்தாள்.அதன் பிறகு,இரண்டு வருடங்கள் தனியார் பள்ளியில் வேலை பார்த்தாள். 

       

         காலையில் வேலைக்கு செல்வதும் மாலையில் டுயூஷன் எடுப்பதுமாக  நேரம் சரியாக இருந்தது வினோதினிக்கு.அப்பொழுதுதான் ராஜன் வீரபாண்டியன் வீட்டிற்கு வந்து முகிலனுக்கு வினோதவை பெண் கேட்டார்.

முகிலன்  கடந்த ஐந்து வருடங்களாக பெங்களூரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். இப்பொழுது, நல்ல நிலைமையில் இருக்கிறான் அங்கே ஒரு பிளாட் ஒன்று வாங்கி  குடியிருக்கிறான். 

வீரபாண்டியோ, வினோதாவை ராஜன் வீட்டில் கொடுக்க முதலில் தயங்கினார்.  ராஜன் வீரபாண்டியிடம் பழசை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு பொண்ணு கொடுக்காமல் இருக்காதீர்கள் மச்சான் என்று கூறினார்.  பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும் அதற்கு ஒத்துக் கொண்டனர்.அதன்  பிறகு வீரபாண்டியன் 

ஒத்துக்கொண்டார்.வினோதினி யோ இது எதுவும் தெரியாமல் வேலைக்குப் போவதும் வருவதுமாக வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு கொண்டு இருந்தாள். பிறகு தான் லட்சுமி அவளிடம் சொல்லி விடுமுறை எடுக்க சொன்னது. வினோதினியோ அம்மாவிடம் சென்று,”அம்மா எனக்கு இதுல இஷ்டம் இல்லை”என்று கூறினாள்.

 போயும் போயும் அவங்க வீட்ல தான் என்னை கொடுக்கணுமா என்று சத்தம் போட்டாள். இது வீரபாண்டியன் காதில் விழுந்துவிட்டது ஏன் பாப்பா நீ வேற யாரையாவது விரும்புகிறாயா? என்று கேட்டார். வினோதினி, அப்படியெல்லாம் இல்லப்பா “அப்புறம் என்ன நாங்க சொல்வதை கேளு” உனக்கு எது நல்லது கெட்டது என்று எங்களுக்கு தெரியாதா ?சின்ன வயசுல இருந்து உனக்கு அவர்களை தெரியும். “நம்ம சொந்தகாரங்க கூட அதனால உனக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.”

” உன்னை அந்நியத்தில் கல்யாணம் பண்ணி கொடுத்து எப்பொழுது என்ன பிரச்சனை வரும் என்று பயப்படுவதை விட இவர்கள் நம்மளுக்கு நன்கு பழக்கமானவர்கள் சின்ன வயதில் இருந்தே உன்னை பார்த்தவர்கள் அதனால், நீ கவலைப்படாமல் இரு ! அவர்கள்  உன்னை  அன்பாக  பார்த்துக்கொள்வார்கள்”.  “மாப்பிள்ளை  முகிலனும்  கல்யாணம்  ஆனவுடன்  உன்னை  பெங்களூர் அழைத்துச் சென்றுவிடுவார்” என்று கூறினார். அதற்குப் பிறகு, வினோதினி எந்த பேச்சும்  பேச முடியவில்லை  கல்யாணத்திற்கு  நாள் குறிக்கப்பட்டது. 

   

          ஏற்கனவே சின்ன வயதில் இருந்து பழக்கமானவர்கள் என்பதால்  பெண்பார்க்கும் படலம் தவிர்க்கப்பட்டு கல்யாணத்திற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் என்று முடிவெடுக்கப்பட்டது ஏனென்றால் முகிலனுக்கு இடையில் லீவு கிடைக்காது என்றும் கல்யாணத்தப்ப முழுமையாக ஒரு மாதம் லீவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நிச்சயதார்த்தத்தை கல்யாணத்திற்கு முதல்நாள் வைத்தார்கள்.

       

ஜெயராணிகோ  இதில் இஷ்டம் இல்லை என்றாலும், தன் கணவனுக்கு ஆண்டி ஒப்புக்கொண்டார். மோகனோ தன் மேற்படிப்பை முடித்துவிட்டு மதுரையிலேயே, ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

          ஜெயராணியோ மோகனுக்கு அழைத்து அண்ணனுக்கு கல்யாணம் நிச்சயமாய் இருக்கிறது.அதனால், நீதான் வந்து எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என்று கூறினார். அண்ணனுக்கு லீவு கிடைக்கல இப்ப லீவு போட்டால் கல்யாணத்திற்கு லீவு கிடைக்காது என்று வர மறுக்கிறான். அதனால் நீ லீவு போட்டுவிட்டு வந்து அப்பாவுக்கு கூடமாட இருந்து உதவி செய் என்று கூறினார்.

   

மோகன் போயும் போயும் இவளை அண்ணிய கொண்டு வரணும் என்று மனதில் நொந்துகொண்டு இருந்தாலும் , தான் பேசுவதற்கு எதுவுமில்லை என்று நினைத்துக்கொண்டு நமக்கு என்ன அண்ணன் தானே வைத்து கட்டி வைக்க மேய்க்க போறன் என்று மனதில் நினைத்துக் கொண்டான். 

         நமக்கு என்ன கல்யாணத்துக்கு போனோம அப்பாவுக்கு உதவி பண்ணமனு  இருக்கப் போறேன் அதுக்கு அப்புறம் நானும் மதுரைக்கு போயிருவேன். அவளும் முகிலனும் பெங்களூர் போயிடுவாங்க அதனால டெய்லியும் அவள் முகத்தை பார்க்க வேண்டியதில்லை என்று நினைத்துக்கொண்டான்.

வினோதியோ கல்யாணம் நெருங்க நெருங்க மனதில் மிகுந்த பயத்துடன் இருந்தால் ,முகிலனை சின்னப் பிள்ளையிலிருந்து பார்த்திருக்கிறாள் தான் ஆனால் அவனிடம் ஒரு வார்த்தை பேசியதில்லை.

        “அவர் எப்படி இருப்பாரோ , ஒருவேளை மோகன் மாதிரியே அவரும் இருப்பாரோ அப்படி இருந்தால் என் பாடு ரொம்ப கஷ்டம்” என்றும் “அந்த வீட்டுக்கு போனா அந்த திமிர் புடிச்ச மோகனை பார்க்க வேண்டியிருக்கும்” என்று நினைத்துக்கொண்டாள். இருந்தாலும் கொஞ்சம் ஆறுதல் அளித்த விஷயம் கல்யாணம் முடிந்தவுடன் தான் பெங்களூர் சென்று விடுவோம் என்பதுதான்.

இனி……. 

Advertisement