Advertisement

டீஸர்:

கட்டுப்பாட்டை மொத்தமாக இழந்த சூர்யாவிற்கு கோவமோ, குழப்பமோ எதுவோ தந்த உந்துதலில் காற்றை கிழிக்கும் வேகத்தில் பறந்து கொண்டு இருந்தது அந்த கார்..

காரினுள் இருந்து கேட்ட விசும்பல்கள் அவனை நிதானிக்க செய்ய, உடனே பிரேக்கின் மீது காலை வைத்தவன், நிறுத்திய வேகத்தில் தான் காரினுள் இருந்த அனைவருமே நிஜத்தை உணர்ந்து, சுயத்தை அறிந்தனர்

இங்கு எதையும் பேச வேண்டாம் என்று எண்ணிய சூர்யா, காரை விட்டு இறங்க, அவனின் செயல் புரிந்த ஆதியும், வெற்றியும் கூட அவனுடனே இறங்கவும் செய்தனர்

டேய்.. என்னதான்டா நெனச்சுக்கிட்டு இருக்க நீ? கொஞ்சம் கூட யோசிக்காம இப்டி ஒரு காரியத்தை பண்ணிட்ட..உன்ன பத்தி மட்டுமே யோசிச்சியே.. மத்தவங்கள பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சி பாத்தியா?” ஆள் இல்லா அந்த சாலையில் உரக்க பேசி கொண்டு இருந்தான் வெற்றி.. பல முறை உலுக்கி தன் கேள்விக்கான பதிலை

“வேற என்னடா பண்ண சொல்லுறே. தெரிஞ்சோ தெரியாமலோ என்னால அந்த பொண்ணோட பேருக்கு களங்கம் வந்துடுச்சி. எங்களுக்குள்ள ஒன்னுமே இல்ல தான். ஆனா அத யார் கிட்ட சொல்ல முடியும்.

பார்த்தல ஊரே கூடி அந்த பொண்ணு தப்பு பண்ணிட்டா. பிளான் பண்ணி பண்ணிட்டா. இனி அவ இந்த ஊர்ல இருக்க  கூடாது. ஊருக்கே கலங்கம். பூஜை பண்ணது தீட்டு ஆயிடுச்சி. அதனால பரிகாரம் பண்ணனும்னு எவ்வளவு பேசுனாங்க.

இது எல்லாமே என்னால தானேடா. ஒரு  பொண்ணை அப்டி விட்டிட்டு வர மனசு  வரலடா. அதான் மனைவியா கவுரவமா  கூட்டிட்டு போகணும்னு முடிவு பண்ணி தாலி  காட்டுனேன்.

அந்த பொண்ணு மனசுல என்ன இருக்கோ  எனக்கு தெரியாது.  ஆனா நான் தெளிவா  யோசிச்சி தான் தாலியை காட்டுனேன். இனி இவ மட்டும் தான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணி தான் அவளை தொட்டு தாலி காட்டுனேன்.

அதுக்காக அவ என் கூடவே தான் வாழனும்னு அவளை கட்டாய படுத்த  மாட்டேன். இந்த பிரச்சனை கொஞ்சம்  அடங்குற வரைக்கும் நம்ப கூட நம்ப  ஊருல இருக்கட்டும். அதுக்கு அப்பறம் அவளோட முடிவு எதுவோ அத ஏத்துக்க நான் தயார்.

ஆனா இந்த  ஜென்மத்துல அவ தான் என்னோட மனைவி. அவ மட்டும் தான்  என்னோட மனைவி”. என்ற ஆதியின் அழுத்தம் திருத்தமான பேச்சில் சூர்யாவிற்கு ஏனோ நிம்மதி தான்

இதை எதையும் அறியா அஞ்சலி விழியில் மட்டும் கண்ணீர் கேட்பார் இன்றி வழிந்தோட, அதை நிறுத்த முற்படுவானா ஆதி.. நிற்குமோ அஞ்சலியின் துயர்

விடை தெரிய பயணிக்கலாம் “உன்னுள் உனதானேன்” கதையுடன்

 

 

 

Advertisement