Advertisement

ரவியும் பணத்தை கொடுத்து நிலத்தை வாங்கி பதிவு செய்யும் போது தான் அதில் இருந்த சிக்கல் வெளி வந்தது.அதாவது அந்த நிலத்தின் சரிபாதி அவரின் தம்பியுடையது அதனால் அவரின் கையொப்பமும் வேண்டும் என்று அவர்கள் கூறினர்.இதனால் சிக்கல் ஏற்பட்டது நில உரிமையாளரோ இந்த நிலம் என்னுடையது என்று வாதிட்டார்.இவ்வாறு பிரச்சனை தொடங்க ரவிசந்திரன் இந்த நிலம் எனக்கு வேண்டாம் என்று கூறி பணத்தை திரும்பி கேட்டார்.

ரவிசந்திரன் பணத்தை திருப்பிக் கேட்கவும் நில உரிமையாளர் தர மறுக்க ரவிசந்திரன் சக்கரவர்த்திக்கு தகவல் தந்தார்.அவரும் நண்பருடன் வந்து அந்த உரிமையாளரிடம் பேச அவரோ பிடிவாதமாக இந்த இடம் என்னுடையது தான் நான் அதை உங்களுக்கு கொடுத்துவிட்டேன் என்று வாதிட.இனி இவரிடம் பேசி பிரோயஜனம் இல்லை என்பதை உணர்ந்து நண்பர்கள் இருவரும் காவல் துறைக்கு தகவல் தந்தனர்.

காவல் துறையும் நில உரிமையாளரை  விசாரித்துவிட்டு அந்த நில உரிமையாளரிடம் இருக்கும் பத்திரம் போலி என்றும்,வருவாய்துறை அதிகாரிகள் கூறியது போல் நிலத்தில் சரிபாதி அவரின் தம்பிக்கு சொந்தம் என்று கூறி,ரவிசந்தினின் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கட்டளையிட அந்த நில உரிமையாளர் ரவிசந்திரன் கொடுத்ததில் பாதி பணம் தான் தன்னிடம் உள்ளது என்றும் மீதி பணத்தை அவர் குதிரை பந்தையத்தில் வைத்து இழந்திருந்தார் என்றும் தெரிய வந்தது.

ரவிசந்திரனுக்கு மன உளைச்சல் அதிகமானது.ரவிசந்திரனுக்கு முழுமையான பணம் கொடுக்க முடியாமல் போனது,போலி பத்திரம் வைத்து ஏமாத்திய குற்றத்திர்கு அந்த நில உரிமையாளர் கைது செய்யபட்டார்.தவறு செய்தவருக்கு தண்டனை கிடைத்துவிட்டது தான் ஆனால் எந்த வித தவறும் செய்யாத ரவியும் இதில் தண்டனை அனுபவித்தார் என்று தான் கூற வேண்டும்.

சக்கரவர்த்தி தான் தன் நண்பனை தேற்றி கிடைத்த பணத்தை வைத்து முதலில் இதில் முதலீடு செய்த இருவருக்கும் பாதியாக கொடுக்க சொன்னார்.ரவியும் சக்கரவர்த்தி கூறியது போல் செய்தார்.இதில் அந்த முதலீட்டாளர்களுக்கு பாதி பணம் தான் கொடுக்கப்பட்டது,மீதி பணத்தை வாசுகியின் நகையை விற்று கொடுத்துவிடலாம் என்று ரவியும்,வாசுகியும் முடிவு செய்தனர்.இதில் ரவி ஒரு தவறு செய்துவிட்டார் அவர் இங்கு நடக்கும் விஷயங்களை பிருத்திவியிடம் கூறவில்லை.மகனுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம் தானே சமாளித்துவிடலாம் என்று நினைத்தார்.ஆனால் அவருக்கு அப்போது தெரியவில்லை விதி அவர்களின் வாழ்வில் தன் விளையாட்டை தொடங்கிவிட்டது என்று.

ரவிசந்திரனும்,வாசுகியும் நகைகளை விற்று வந்த பணத்தை இரு முதலளிட்டார்களுக்கும் கொடுத்து ஒரளவிற்கு அடைத்தனர்.ஆம் பாதி பணம் தான் நகைகளை விற்றதில் கிடைத்தது.இதனால் ரவியால் அவர்கள் கொடுத்ததில் பாதி பணத்தை தான் கொடுக்க முடிந்தது.மீதி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துவிடுவதாக அவர்களிடம் கூறினார்.அவர்களுக்கு ரவிசந்திரனைப் பற்றி நன்கு தெரியும் மிகவும் நேர்மையான மனிதர் என்பதால் ஒத்துக் கொண்டனர்.

இந்நிலையில் தான் ரவிசந்திரனும்,வாசுகியும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று திரும்பும் போது கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரை நீர்த்தனர்.அவர்களின் இழப்பு அனைவருக்குமே அதிர்ச்சி தான்.மனதிர்களை பணத்தை வைத்து எடைபோடாமல் மனதை வைத்து பழகும் நல்ல உள்ளங்கள் இருவரும்.அப்படிப்பட்ட இருவரின் இழப்பு பிருத்திவிக்கு மட்டும் அல்ல அவர்களை சார்ந்தவர்கள் அனைவருக்குமே பாதிப்பை ஏற்படுத்தியது.

ரவியுடன் இணைந்து இருந்த இருமுதலீட்டார்களுக்கும் தங்களின் மீதி பணம் கைக்கு வருமா என்ற கவலை தொற்றிக் கொண்டது.அவர்கள் பிருத்திவியிடம் இதை பற்றி பேச தயங்கினர்.அதனால் அவர்கள் இருவரும் சக்கரவர்த்தியின் உதவியை நாடினர்.சக்கரவர்த்தியும் பிருத்திவி ரவியின் மகன் அதனால் கண்டிப்பாக உங்கள் பணத்திற்கு நான் பொறுப்பு என்று கூறி இதோ பிருத்திவியிடம் இதைபற்றி பேச வந்துவிட்டார்.

சக்கரவர்த்தி கூறிய அனைத்தையும் கேட்ட பிருத்திவிக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.அவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட அவனின் நிலையை எண்ணி வருந்திய சக்கரவர்த்தி,

“டேய் தம்பி…என்னடா இப்படி ஒடிஞ்சு போய் உக்கார்ந்துட்ட…உன்னால முடியும்டா எனக்கு நம்பிக்கை இருக்கு…நீ உங்க அப்பா கடையை எடுத்து நடத்து சீக்கரமே உன்னால பணத்தை அடைக்க முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கு….”என்று தன்னால் முடிந்தவரை பிருத்திவியை தேற்றிவிட்டு சென்றார் மனிதர்.இவை அனைத்தையும் கேட்ட சூர்யா பிருத்திவியிடம்,

“டேய் அங்கிள் சொன்ன மாதிரி உங்க அப்பா கடையை நீ எடுத்து நடத்து வர வருமானத்துல கடனை அடைச்சுடலாம் டா….இதுக்கா நீ இவ்வளவு வருத்தபடுற விடுடா…”என்று அவனும் அவன் பங்கிற்கு பிருத்திவியை தேற்றி கொண்டுவந்திருந்தான்.பிருத்தியும் தாய்,தந்தை இழப்பில் இருந்து சற்று மீண்டவன் எப்படியாவது பணத்தை அடைக்க வேண்டும் என்று கடையில் அமர்ந்து வேலை செய்ய தொடங்கினான்.

பிருத்திவி கடையை எடுத்து நடத்த தொடங்கி நான்கு மாதங்கள் எல்லாம் நல்ல முறையில் தான் சென்றது.சக்கரவர்தியும்,சூர்யாவும் பிருத்திவிக்கு பக்கபலமாக இருந்தனர்.அதனால் அவனும் தனிமையில் இருந்து தன்னை காத்துக் கொண்டு வந்தான்.இந்நிலையில் ஒருநாள் பிருத்திவி கடைக்கு வந்த சரக்குகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது தான் கண்டுப்பிடித்தான் வந்திருக்கும் அனைத்தும் போலி பாகங்கள் என்று.ஒருநிமிடம் பிருத்திவிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.உடனடியாக சரக்கு அனுப்பியவரிடம் அழைத்து தகவல் சொல்ல அவர் என் மீது தவறு இல்லை என்று கூறினார்.

தவறு நடந்திருக்கிறது ஆனால் அவர்களிடமா இல்லை தங்களிடமா என்று பிருத்திவிக்கு சந்தேகம் யாரை கேட்பது எப்படி கேட்பது என்று பல கேள்விகள் மனதிற்குள் வலம் வர மீண்டும் சோர்ந்தான்.என்ன முயன்றும் அவனால் யார் என்று கண்டுபிடிக்கமுடியாமல் போக சக்கரவர்த்திக்கு அழைத்து விஷயத்தைக் கூறினான்.அவரும் தன் ஆட்களின் உதவியுடன் யார் என்பதைக் கண்டுபிடித்தார்.

பிருத்திவியின் கடையில் வேலை செய்யும் இருவர் தான் இதை செய்திருந்தனர்.அவர்கள் திட்டமிட்டு இந்த காரியத்தை செய்திருந்தனர்.சக்கரவர்த்தி காவல்துறைக்கு தகவல் தந்து அவர்களை பிடித்துக் கொடுத்தவர் அவர்கள் திருடிய பொருட்களையும் மீட்டனர்.

பிருத்திவிக்கு கழிவிரக்கமாக போனது அனைவர் முன்னும் தன்னால் கடையை தன் தந்தை போல் நிர்வகிக்க முடியவில்லையே என்று மனதிற்குள் அல்லாடினான்.இந்த சம்பவங்கள் நடக்கும் போது சூர்யாவும் வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்ததால்,அவனாலும் பிருத்திவியை சரிவர தொடர்பு கொள்ள முடியவில்லை.

தாய்,தந்தை இறப்பிற்கு பின் பிருத்திவியின் நட்பு வட்டம் முற்றிலுமாக முறிந்து போனது என்று கூற வேண்டும்.எங்கே உதவி என்று தன்னிடம் வந்துவிடுவானோ என்று அஞ்சியே அவனிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தனர்.சூர்யா ஒருவன் மட்டுமே அவனின் ஒரே ஆறுதல்,அவனும் இல்லாத போது தன் மனதில் உள்ளதை யாரிடமும் பகிரவும் முடியாமல் தவித்தான்.மனதின் சோர்வு உடலையும் பாதித்தது.சரியாக உணவு உண்ணாமல் தினமும் கடை பற்றிய சிந்தனையிலேயே கழிய இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

சக்கரவர்த்திக்கு பிருத்திவியின் நிலை மேலும் கவலை கொள்ள செய்ய அவர் சூர்யாவிற்கு தகவல் தந்தார்.அவனும் நண்பனின் நிலை எண்ணி கலங்கியவாரே மருத்துவமனைக்கு வந்தான்.மனதின் போராட்டம்,உடல் சோர்வு என்று பிருத்திவி அரை உடலாக மாறியாருக்க சூர்யாவிற்கும்,சக்கரவர்த்திக்கும் மனது பாரமாகியது.

மருத்தவமனையில் இருந்து பிருத்திவி தேறி வரவே இரு வாரங்கள் ஆனது.சூர்யாவும்,சக்கரவர்த்தியும் மாற்றி மாற்றி அவனை கவனித்துக் கொண்டனர்.தாய்,தந்தை இழப்பில் இருந்து சற்று மீண்டு இருந்தவன் தற்போது நடந்த குளருபடியால் மீண்டும் தன் கூட்டுக்குள் சுருங்க தொடங்கினான்.தன்னால் தன் தந்தை போல் வியாபாரம் செய்ய முடியவில்லை என்று புலம்ப தொடங்க சூர்யாவும்,சக்கரவர்த்தியும் எவ்வளவு முயன்றும் அவனை தேற்ற முடியவில்லை.

பிருத்திவியின் உடல்நிலை பார்பதா,இல்லை மனதை தேற்றுவதா என்று சூர்யா சக்கரவர்த்தி இருவருக்கும் கஷ்டமாகி போனது.இந்நிலையில் கடையை சரிவர கவனிக்க முடியாமல் போக வருமானமும் குறைய தொடங்கியது.கடை நஷ்டத்தில் செல்ல தொடங்க சக்கரவர்த்தி மனதில் ஒரு முடிவுடன் பிருத்திவியிடம் பேச சென்றார்.மருத்துவர் கூறிய மருந்துகளை அவனுக்கு கிட்டதட்ட சிறு குழந்தைக்கு புகட்டுவது போல புகட்டிக் கொண்டிருந்தான் சூர்யா.

“எனக்கு வேண்டாம் டா சூர்யா…என்னால அப்பா மாதிரி கடையை பார்த்துக்க முடியல டா…என்னால தான் உனக்கும்,அங்கிளுக்கும் கஷ்டம்…”என்று புலம்ப தொடங்கினான்.இது தினமும் நடக்கும ஒன்று தான். பிருத்திவி மருத்துவமனையில் இருந்து வீடு வந்து இரு நாட்கள் ஆகிறது. சூர்யா தன் அலுவலகத்தில் மூன்று நாட்கள் விடுப்பு கூறி பிருத்திவியை கவனித்து வருகிறான்.

“டேய் என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற…ஒழுங்கா மருந்த குடிச்சிட்டு தூங்கு…உன்னை நல்ல ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க….”என்று சூர்யா தன் பொறுமை இழுத்து பிடித்தபடி பேசிக் கொண்டிருக்க பிருத்திவியோ,

“அதான் டா நானும் சொல்லுறேன்…என்னை விட்டுட்டு இப்படியே இருந்து நானும் எங்க அப்பா,அம்மாகிட்ட போயிடுறேன்…..உனக்கும் கஷ்டம் இருக்காது….”என்று குரல் கமறக் கூற,

“பளார்…..”என்ற சத்தம்.பிருத்திவி தன் எரியும் கன்னங்களை தேய்த்தபடி பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான்.அவனின் எதிரே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் சூர்யா.பிருத்திவிக்கு சிலகணங்கள் எடுத்தது என்ன நடந்தது என்பதை கணிக்கவே,அவனின் முன் யாரோ சொடுக்கிடும் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தான்.

“என்னடா உன் பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு…என்ன என்ன உன் மனசுல ஓடுது அத முதல்ல சொல்லு…”என்று சூர்யா பிருத்திவியை பற்றி உலுக்க,அவனின் கைகளை உதறிய பிருத்திவி,

“ப்ச் இன்னும் என்னடா என் வாழ்க்கையில நடக்கனும்…அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே…என்னை நேசிச்சவங்க எல்லாரும் என்னை விட்டு போயிட்டாங்களே…இனி நான் இருந்து என்ன பண்ண போறேன்…”என்று குரல் கரகரக் கூறியவன்,சூர்யாவின் அருகே மண்டியிட்டு அவன் கால்களை கட்டிக் கொண்டு,

“டேய் சூர்யா…மச்சி எனக்கு வாழவே பிடிக்கலடா…”என்றுவிட்டு அழத்தொடங்கினான்.சூர்யாவிற்கு மனது ரணமாக வலித்தது

“கடவுளே ஏன் ஏன் இப்படி இவன் வாழ்க்கையில விளையாடுறீங்க…அப்படி என்ன தப்பு செஞ்சான் அவன்…”என்று மானசீகமாக இறைவனிடம் சண்டையிட்டவன்,பின் சற்று நிதானித்தவன் இது நான் உடையும் தருணம் அல்ல,எப்படியாவது பிருத்திவியை மீட்க வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.தன் கால்களில் புதைந்து அழும் நண்பனை தூக்கி நிறுத்தி,

“சரிடா நீ நினைக்கிற மாதிரியே செய்…”என்றுவிட்டு சூர்யா விடுவிடு என்று அறையில் இருந்து வெளியேற,பிருத்திவிக்கு முதலில் சூர்யா கூறவது  புரியவில்லை,

“டேய் சூர்யா…டேய்…”என்று கத்திக் கொண்டு சென்றவன் சூர்யாவின் கையை பிடித்து நிறுத்த,சூர்யாவோ அவனது கைகளை வேகமாக உதறி தள்ளினான்.இதை எதிர்பார்க்காத பிருத்திவி நிலை தடுமாறி கீழே விழுந்தான்.ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடல் மிகவும் பலவீனப்பட்டிருக்க கீழே விழுந்த அவனால் எழக் கூட முடியவில்லை.தட்டுதடுமாறி எழமுயற்சி செய்து கொண்டிருந்தான் சூர்யாவோ அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டு நின்றானே தவிர உதவவில்லை.

அந்த சமயத்தில் தான் சக்கரவர்த்தி பிருத்திவியிடம் பேச அவனின் வீட்டிற்கு வந்தார்.வந்தவர் பிருத்திவி கீழே விழுந்து எழ முயற்சி செய்து கொண்டிருப்பதையும்,அவனின் எதிரில் சூர்யா முறைத்துக் கொண்டு இருப்பதையும் பார்த்தவருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற வேகமாக பிருத்திவியின் அருகில் சென்று அவனை தூக்கிவிட்டார்.

“என்னப்பா ஏன் இப்படி விழுந்து கிடக்கிற என்ன ஆச்சு…”என்று பதட்டமாக கேட்க அதற்கு பிருத்திவி பதில் கூறும் முன்,

“விடுங்க அங்கிள் அவனுக்கு உயிரோட இருக்க பிடிக்கலையாம்….அவனும் அவன் அப்பா,அம்மா கூட போறானாம்…விடுங்க செத்து தொலையட்டும்…இவனை இந்த நிலையில பார்க்கவா இவன் அப்பாவும்,அம்மாவும் ஆசைப்பட்டாங்க…இவனோட சின்ன முகசுழிப்புக்கே இவன் அம்மா அப்படி துடிச்சு போவாங்க…நீ இப்படி இருக்கிறத அவங்க ஆன்மா பார்த்துக்கிட்டு தான்டா இருக்கும்…எப்படி துடிச்சு போறாங்களோ….அதை பத்தி உனக்கு என்ன கவலை நீ போய் சாவு….”என்று கத்தினான் சூர்யா.அவனது குரலில் இருந்தது கோபமா,ஆற்றாமையா என்று எதிரில் நின்ற இருவராலும் புரிந்து கொள்ளமுடியவில்லை.ஆனால் இந்த வார்த்தைகளை கூறும் போது சூர்யாவின் குரல் கமறி ஒலித்தது.தன் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு பேசுகிறான் என்று இருவருக்கும் புரிந்தது.

தன்னால் தான் சூர்யா இவ்வளவு உடைந்து போய் பேசுகிறான் என்று உணர்ந்த பிருத்திவிக்கு மனதின் பாரம் கூடிக் கொண்டே போக தரையிலேயே மடிந்து பெருங்குரல் எடுத்து அழ தொடங்கி விட்டான்.அவனை எழுப்ப போன சக்கரவர்த்தியை தடுத்த சூர்யா,

“அங்கிள் விடுங்க அழட்டும் அப்ப தான் அவன் மனசுல இருக்குற ரணம் குறையும்…”என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு வரவேற்பறைக்கு வந்துவிட்டான்.பிருத்தி எவ்வளவு நேரம் அவ்வாறு அழுதான் என்று அவனுக்கே தெரியாது.மனதின் பாரத்தை தன் கண்ணீரில் வெளியேற்றினான்.சிறிய அழகான கூடு போல இருந்த அவனது குடும்பம் யாரின் கண் பட்டதோ இன்று சிதறி இருந்தது.வாழ்வில் மகிழ்ச்சி என்பதை மட்டும் கண்டிருந்த பிருத்திவிக்கு விதி இன்னொரு பக்கத்தையும் காட்டிக் கொண்டிருந்தது.

சிலமணிநேரத்திற்கு பின்பும் பிருத்திவி வெளியில் வராததால் சூர்யா உள்ளே சென்று பார்க்க அவனோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.ஆனால் முகத்தில் முன்பு இருந்த வேதனை இப்போது சற்று குறைந்து இருந்தது.மெல்ல அவனின் அருகே சென்று தோள்களை தொட்டான் சூர்யா.அவனது தொடுகையில் நிகழ்வுக்கு வந்த பிருத்திவியிடம்,

“டேய் போய் முகத்தை கழுவிட்டு வா…உன்கிட்ட கொஞ்சம் பேசனும்….”என்று கூற,அவனும் சம்மதமாக தலையசைத்துவிட்டு குளியல் அறை நோக்கி சென்றான்.தன்னை சுத்தப்படுத்துக் கொண்டு வெளியில் வந்த பிருத்திவி அப்போது தான் வரவேற்பறையில் சக்கரவர்த்தி அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு,

“வாங்க அங்கிள் எப்ப வந்தீங்க….”என்று கேட்க அவரோ அவனின் கேள்வியில் அதிர்ந்துவிட்டார்.தான் வந்தது கூட தெரியாமல் இருந்திருக்கிறானே என்று மனது கலக்கம் கொண்டது.அவர் தனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்துக் கொண்டே அவரின் எதிரில் அமர்ந்த பிருத்திவி,

“என்ன ஆச்சு அங்கிள்…ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க…”என்று கேட்க,அதற்கு சக்கரவர்த்தி பதில் கூறும் முன்,

“நீ பண்ண அலபரையில அங்கிள் பிரீஸ் ஆகிட்டாரு…அதான் பேச்சே வரலை…இல்ல அங்கிள்…”என்று அந்த கனமான சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு சூர்யா பேசிக் கொண்டே தங்கள் மூவருக்கும் காபி கலந்து எடுத்து வந்தான்.சூர்யாவின் கண்ஜாடையை கண்டு கொண்ட சக்கரவர்த்தி தன் முகத்தை சரி செய்து கொண்டார்.

“இப்ப எப்படி இருக்கு பிருத்திவி…”என்று சூர்யா கேட்க,

“ம்ம் கொஞ்சம் ஓகே தான்…சாரி மச்சான் உன்னையும் கஷ்டப்படுத்திட்டேன்….”என்று சூர்யாவின் கையை பிடித்து கேட்டான்.

“விடுடா நீ கொஞ்சமாச்சும் தெளிஞ்சா எனக்கு சந்தோஷம் தான்…”என்று சூர்யாவும் கூறினான்.சக்கரவர்த்தி அவர்கள் இருவரின் நட்பை கண்கள் கலங்க பார்த்துக் கொண்டு இருந்தார்.அவருக்கு ரவியின் நியாபகம் தான் வந்தது.அவர்களது நட்பும் இதே போல் தான் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு நடப்பர்.இவ்வாறு அவர் தன் பழைய நினைவுகளில் இருக்க அதற்குள் சூர்யா,பிருத்திவியிடம் சக்கரவர்த்தி வந்ததன் காரணத்தை கூறியிருந்தான்.

“டேய் பிருத்திவி…அங்கிள் ஒரு யோசனை சொல்லுறாருடா…”என்று பிடிகையுடன் நிறுத்த,

“சொல்லு டா என்ன யோசனை…”என்று பிருத்திவி கேட்டான்.சூர்யாவிற்குமே தயக்கம் இதை பிருத்திவி எவ்வாறு எடுத்துக் கொள்வான் என்று.நண்பன் பேசாமல் தயங்கவுமே அவனின் கைகளை பற்றிக் கொடண்டு,

“எதுவா இருந்தாலும் சொல்லுடா…என்கிட்ட என்ன தயக்கம் உனக்கு…”என்று ஊக்க,சூர்யாவோ,

“இல்ல மச்சான் இதை நீ எப்படி எடுத்துபனு எனக்கு தெரியல அதான் யோசனையா இருக்கு…”என்று கூற பிருத்திவியோ,

“எதுவா இருந்தாலும் சொல்லு…இனி நான் உடைய மாட்டேன்…எனக்காக இல்லனாலும் என் அப்பா,அம்மாவுக்காக நான் என்னை தேத்திக்க தான் வேணும்…நீ சொன்ன மாதிரி என் அம்மா,அப்பா ஆன்மா கலங்க நான் விடமாட்டேன்…..”என்று தெளிவாக பேச சூர்யாவிற்கும்,சக்கரவர்த்திக்கும் மனதிற்கு நிம்மதியாக இருந்தது.

“டேய் அங்கிள் என்ன சொல்லுரானுனா இந்த கடையை நாம அந்த பணம் கொடுத்தவங்களுக்கே கொடுத்து மீதி பணத்தை அடைச்சிடலாம்…அவங்களும் நம்ம கடையை வாங்க ரெடியா இருக்காங்களாம்….நீ உனக்கு பிடிச்ச மாதிரி உன்னோட சாப்டுவேர் கம்பெனி நடத்துனு சொல்லுரார்…நீ என்ன நினைக்கிற…”என்ற சூர்யா மேலும்,

“என்னடா அப்பா பார்த்த கடையை உன்னால பார்க்க முடியலையேனு மனசை விட்டுடாத….நீ இந்த தொழிலுக்கு புதுசு அதனால தான் உனக்கு இதெல்லாம் புரிஞ்சு வரவே நாள் எடுக்கும்…அதுமட்டும் இல்லாம உன்னோட ஆசையே வேற…நீ அதை ஏன் நினைவாக்க முயற்சி செய்யக் கூடாது….யோசி…”என்று சூர்யா நீண்ட விளக்கம் தந்தான்.ஆம் பிருத்திவிக்கு சொந்தமாக மென்பொருள் நிறுவனம் நடத்தவேண்டும் என்பது கனவு.அதற்காகவே வெளிநாட்டிற்கு படிக்க சென்றான்.தாய்,தந்தையின் இறப்பிற்கு பிறகு அவனுக்கு எதுவும் கருத்தில் இல்லை.

பிருத்திவி சூர்யா கூறியதை கேட்டு அதிரவெல்லாம் இல்லை.அவனுமே இனி கடையை தன்னால் நடத்துவது சற்று கடினம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு முன் அனுபவமும் இல்லை என்பதும் ஒரு காரணம்.என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தவனுக்கு சக்கரவர்த்தி கூறிய யோசனையை சரி எனப்பட எந்தவித மறுப்பும் கூறாமல் சரி என்று கூறிவிட்டான்.

பிருத்திவி சரி என்று கூறியவுடன் சக்கரவர்த்தி அனைத்து வேலைகளையும் துரிதமாக முடித்திவிட்டார்.கடையை அந்த இரு முதலீட்டார்களுக்கும் சரி சம்மமாக பிரித்து கொடுத்திவிட்டார்.அவர்களுக்கும் பணம் கிடைக்கவில்லை என்றாலும் கடை கிடைத்தில் அவர்களுக்கு மகிழ்ச்சியே.

பிருத்திவியும் அவனது கனவை நோக்கி முதல் படி எடுத்து வைத்துவிட்டான் சக்கரவர்த்தி,சூர்யா உதவியுடன்.தனது வீட்டை சக்கரவர்த்தியிடம் அடமானம் போல் வைத்து பணம் பெற்று தனக்கென்று சென்னை மத்தியில் சிறிய அளவிலான ஐடி கம்பெனி ஒன்றை இன்று இரு நண்பர்களும் இணைந்து நடத்திவருகின்றனர்.ஆம் சூர்யாவும் தன் வேலையை விட்டுவிட்டு பிருத்திவியுடன் இணைந்துவிட்டான்.

இருவரும் ஒன்று சேர்ந்து தங்கள் உழைப்பை மூலதனமாக இட்டு வேலை செய்துவருகின்றனர்.இதுவரை பெரிய புராஜெக்ட் என்று கிடைக்கவில்லை என்றாலும்.எந்த சிறிய வேலையையும் விடுவதில்லை.அதனால் வருமானத்திற்கு குறைவில்லாமல் சென்றது.

பிருத்திவி தனக்கு வரும் வருமானத்தில் தனக்கென்று செலவுக்கு போக மீதியை சக்கரவர்த்திக்கு அனுப்பிவிடுவான்.அவரும் மறுப்பேதும் கூறாமல் பெற்றுக்கொள்வார்.பிருத்திவியின் மனதில் இப்போதும் இருக்கும் ஒரே குறிக்கோள் தன் வீட்டை எப்படியேனும் மீட்கவேண்டும்.

மெல்லிய அலாரத்தின் ஒலியில் தன் நிகழ்வுக்கு வந்தான் சூர்யா.தனது அருகில் உறங்கும் நண்பனைக் கண்டவனுக்கு மனதில் சற்று வருத்தம் தான் என்றாலும் எப்படியும் தடைகளை தாண்டி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தது.அதே நம்பிக்கையுடன் தானும் உறங்க முற்பட்டான்

Advertisement