Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 20 1(இறுதி பதிவு)

பிருத்திவியின் பூர்வீக வீடு

காலைவேளை வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.சுமித்ரா தனக்கும் கணவனுக்குமான மதியவேளை சாப்பாட்டை டிபன் பாக்ஸில் அடைத்து வைத்துக் கொண்டிருந்தாள்.தனது அறையில் கண்ணாடியில் தலைவாரி கொண்டிருந்தான் பிருத்திவி.அவனது அதரங்களோ அவனுக்கு பிடித்த பாட்டொன்றை படிய படி இருந்தது.அப்போது அறைக்குள் வேகமாக வந்த சுமித்ரா,

“தேவா…இன்னும் கிளம்பாம என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க…”என்று கேட்டுக் கொண்டே தன்னுடயை உடையை எடுத்துக் கொண்டு தடுப்புக்குள் சென்றாள்.

பிருத்திவியும்,சுமித்ராவும் பிருத்திவியின் பூர்வீக வீட்டிற்கு குடியேறிவிட்டனர்.அனிதாவின் வளைகாப்பு முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு சிறிய அளவில் கிரஹபிரவேசம் போல் செய்து குடியேறினர்.சுமித்ராவிற்கு இறுதி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது.அதனால் அவளும் தன் படிப்பில் கவனமாக,பிருத்திவியும் தனது வேலைகளில் கவனமனான்.சூர்யாவும் அலுவலக வேலைகளை பார்ப்பதும் தனது மனைவியை பார்ப்பதுமாக இருந்தான்.அனிதாவின் பிரசவத்திற்கு இன்னும் சிறிது நாட்களே இருக்க பிருத்திவி தான் அலுவலகத்தை பார்த்துக் கொள்வதாக கூறி சூர்யாவின் வேலைகளை அவனும் பகிர்ந்து கொண்டான்.நாட்கள் அதன் போக்கில் வேகாமாக சென்றது பிருத்திவிக்கும்,சூர்யாவிற்கும்.

அனிதாவிற்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.பிருத்திவியும்,சூர்யாவும் தங்கள் வீட்டிற்கு வந்த புது வரவை மிகவும் சந்தோஷமாக கொண்டாடினர்.சூர்யாவும் தற்போது பிருத்திவி வீட்டிற்கு பக்கத்தில் தனக்கும் ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறான்.சுமித்ரா தனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டாள்.

இரவு நேரம் பிருத்திவியின் வீடு தனது மடிக்கணினியில் ஏதோ வேலையில் இருந்தான் பிருத்திவி.அப்போது அவன் மீது ஒரு தலையனை வந்து விழவும் நிமிர்ந்து பார்க்க கட்டிலின் பக்கத்தில் நின்றபடி அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள் அவனது மனைவி.

“ஏய் மித்து…”என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போதே அவனது மடிக்கணினியை மூடி வைத்தாள் சுமித்ரா.

“ப்ச் மித்துமா…இன்னும் கொஞ்சம் நேரம் தான்டா…”என்று கெஞ்சும் குரலில் கேட்க,

“முடியாது….அவ்வளவு தான் உங்க ஆபிஸ் டையம் முடிஞ்சு போச்சு…”என்று முறைப்பாக கூற,அவளை ஏற இறங்க பார்த்தான் பிருத்திவி.இரவு நேர உடையில் தலை சற்று கலைந்து பார்க்க சற்று கலைப்பாக இருந்ததாள்.இருந்தும் அவளது இயற்கை அழுகு அவனை கவர்ந்து இழுப்பதாகவே இருந்தது.அவளது இடையில் கைவிட்டு அவளை அப்படியே அள்ளி தன் மேல் போட்டுக் கொண்டு,

“ம்ம்….மித்து இன்னைக்கு என்ன ரொம்ப அழகா இருக்க….”என்று கூறியவாறே அவளது நெற்றியில் முத்தமிட,கணவனின் அணைப்பிலும் மனதும் உடலும் நெகிழ்ந்தாலும்,

“ஏன் இன்னைக்கு தான் நான் அழகாக இருக்கேனா…அப்ப இத்தனை நாளா இல்லையா…”என்று கணவன் கூறியதில் கோபம் போல கேட்டாள்.

“நீ எப்போதுமே மாமனுக்கு அழகு தான்டி செல்லம்ஸ்….”என்று கூறி அவளின் மேல் படர்ந்தான்.

“மித்து…மித்துமா குட்டி…”என்று பிதற்றல்களுடன் அவளின் மேனியெங்கு தனது அதரங்களால் முற்றுகையிட,சுமித்ரா கணவனின் அதிரடியில் மிரண்டவள்,

“தேவா…”என்று திணறலாக அழைக்க,

“ம்ம் மித்து…என்னடா…”என்று குழைந்து வந்தது பிருத்திவியின் குரல்,

“தேவா…நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்…விடுங்க…”என்று சற்று திணறியவாரே கேட்க,

“இப்பவே கேட்கனுமா…”என்று பிருத்திவியின் உடல் சிரிப்பில் குலுங்கியது.தனது கழுத்தில் முகம் புதைத்திருந்தவனின் தலை முடியை பிடித்து இழுத்த சுமித்ரா,

“இப்பவே தான்…விடுங்க முதல்ல…”என்று சற்று கோபமாகவே கூற முற்பட்டாள்,ஆனால் அவளாள் அது முடியாமல் போனது.பிருத்திவி அவளது கழுத்தில் குறுகுறுப்பை ஏற்படுத்த,அதில் அவளது மொத்த உடலும் சிலிர்த்து அடங்கியது.அடுத்த நிமிடம் அவள் மேல் இருந்து எழுந்தவன்,

“என்ன மித்துமா சொல்லு….”என்று கேட்க,சற்று முன் குழைந்த குரலா இது என்று அவனை வியப்பாக பார்த்தபடி இருக்க,மனைவியின் முகத்தையும் அவளது கலைந்த தோற்றத்தையும் கண்களால் பருகியபடி,

“ம்ம்…மித்து நான் நல்ல பிள்ளையா இருக்குனும் நினைச்சா கூட நீ விட மாட்ட போல…”என்று அவள் இருந்த நிலைக் கண்டு விஷம்மமாக கூற,வேகாமாக எழுந்து அமர்ந்தவள் அவனை தலையனையால் மொத்தினாள்.

“கொழுப்பு தேவா உங்களுக்கு….”என்று கூறிக் கொண்டே அவனை அடிக்க,அவளது அடிகளை வாங்கியபடி அமர்ந்திருந்தவன்,

“ஏய் நீ சொன்னது என்ன…இப்ப நீ செஞ்சிக்கிட்டு இருக்குறது என்ன…உனக்கு பேச வேண்டாம்னா….”என்று கிண்டலாக கேட்டவன்,மீண்டும் அவளது இடைகளில் கிச்சுகிச்சு மூட்ட,அவனது கைகளை தட்டிவிட்டு,

“இல்லை இல்லை நான் பேசனும்…ப்ளீஸ்…”என்று கண்களை சுருக்கி கெஞ்ச,

“சரி சரி சீக்கிரம் சொல்லு…”என்று பெரிய மனிதன் போல கூறினான் பிருத்திவி.

“நான் மேல படிக்கிட்டுமா தேவா….”என்று கணவனிடம் சுமித்ரா கேட்க,அவனோ யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.சுமித்ரா மேலும் தொடர்ந்தாள்.

“அது தேவா மேல பி.ஜி படிக்கலாம்னு இருக்கேன்….எனக்கு உங்களை மாதிரியெல்லாம் முழுநேரம் எல்லாம் வேலை பார்க்கபிடிக்கலை…அதைவிட நான் காலேஜ்ல புரோபோசர் வேலைக்கு முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்…..நீங்க என்ன சொல்லுரீங்க….”என்று கேட்க,

“வாவ்…சூப்பர் மித்து…நான் கூட இப்படி யோசிக்கலடா….”என்று தோள் அணைத்து கூறி தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.சுமித்ரவிற்கும் பிருத்திவியின் சம்மதம் கிடைக்கவும் மிகவும் சந்தோஷம்.அதன் பிறகு நேரம் இருவருக்கும் இனிமையாக சென்றது.

Advertisement