Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 19

அன்று ஞாயிற்றுகிழமை காலை வேளை சமையல் அறையில் பாத்திரங்களை உடைத்தபடி இருந்தாள் சுமித்ரா.குளியலறையில் இருந்து வெளி வந்த பிருத்திவி மனைவியின் கோபத்தை ரசித்தவறே,

“மித்து எனக்கு காபி கிடைக்குமா…”என்று கேட்க,அவனை திரும்பி முறைத்தவிட்டு காபி கலக்க தொடங்க,பிருத்திவிக்கு சிரிப்பாக இருந்தது.கணவன் கேட்ட காபியை கலந்து வந்து அவனிடம் நீட்டினாள்.காபியை வாங்கியவன் மற்றொரு கையால் விலக இருந்த மனைவியின் கை பிடித்து தன் மடியில் அமர வைத்தான்.அவள் திமறி விலக முற்படும் முன்,

“மித்து நீ அசஞ்சா காபி கொட்டிடும்…அப்புறம் உனக்கும் எனக்கும் காபி அபிஷேகம் தான்…”என்று கிண்டலாக மிரட்டல் விட,அவனின் சேட்டைகளில் பல்லை மட்டும் கடிக்க முடிந்தது சுமித்ராவிற்கு.மனதில் அவனை திட்டியபடி மடியில் அமர்ந்திருந்தவளின்,முதுகில் தனது இதழ்களால் கோலம் போட,அதில் நெளிந்தவள்,

“தேவா…கூசுது விடுங்க….”என்று கூறிக் கொண்டே எழ முற்பட,அவளது இடையில் தனது கரத்தைக் கொடுத்து இறுக்கி அணைத்தவன்,

“ம்ம்….மித்து….நீ ரொம்ப சாப்ட்….”என்று கூறிக் கொண்டே தனது இதழ்களால் அவளது மேனியில் குறுகுறுப்பை மூட்டினான்.சுமித்ராவிற்கு பிருத்திவியின் நோக்கம் புரிய,

“தேவா….தேவா…ஒரு நிமிஷம்….”என்று உரக்க கத்த அதில் சுயத்திற்கு வந்தவன் பதறி,

“என்னடாம்மா….என்ன….”என்று பதட்டத்துடன் கேட்க,அவனது கைகள் துவலவுமே அவனது அணைப்பில் இருந்து வெளி வந்தவள் அவனை முறைத்திவிட்டு,

“ம்ம்…ஒண்ணுமில்லை…எனக்கு வேலையிருக்கு…”என்று கூறிவிட்டு அவன் கைகளில் அகப்படாமல் ஓடினாள்.பிருத்திவிக்கு அப்போது தான் சுமித்ராவின் விளையாட்டு புரிய,

“ஓய்…என்னையவே ஏமாத்திரியா…இன்னைக்கு இருக்குடி உனக்கு…”என்று சத்தமாக கூறினான்.

“ஆமா…ஆமா…அப்படியே நைட்டு வீட்டுல இருக்கப் போற மாதிரி தான் பேச்சை பாரு….”என்று சத்தமாகவே முணுமுணுக்க,அது பிருத்திவியின் காதிகளிலும் தெளிவாக விழிந்தது.

“ஏய்…அது தான் கோபமா…ஓ…மித்து குட்டி என்னை தேடினாங்களோ….”என்று கேட்க,சமையல் மேடையில் இருந்த கரண்டியை தூக்கி அவன் மீது வீச,அதை லாவகமாக பிடித்தவன்,

“நோ வைலன்ஸ்….செல்லம்ஸ்…”என்று கண்ணடித்து கூற,

“ஓடிடுங்க…இல்லை எதை எடுத்து அடிப்பேனு தெரியாது….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு சுமித்ரா கூறினாள்.அவளது பாவனையில் பலமாக சிரித்தவன் அவள் மேலும் அடிக்க பொருளை தேடவும்,

“அச்சோ…மித்துமா…நான் சரண்டர்டா…இப்ப வெளில வேலை இருக்கு போயிட்டு வந்துடுறேன்….”என்று கூறிவிட்டு வெளியில் ஓடிவிட்டான்.

பிருத்திவி காலை வேலைக்கு சென்றால் இரவு வெகு நேரம் கழித்து தான் வருவான்.வந்தவன் அசதியில் படுத்து உறங்கிவிட்டு மீண்டும் காலையிலேயே வேலைக்கு சென்றுவிடுவான்.இருவரும் பேசுக்கொள்ளவே நேரம் இருக்காது.சுமித்ராவே வலிந்து போய் ஏதாவது பேசினால் கூட எனக்கு வேலையிருக்கு மித்து அப்புறம் பேசலாம் என்று கூறி அவளை அனுப்ப சுமித்ராவும் அதிக வேலை போல என்று கருதி அமைதியாகிவிடுவாள்.இதுவே ஒரு வாரமாக நீடிக்க சுமித்ராவின் பொறுமையும் பறந்து போனது.அதனால் இன்று கணவன் இருக்கும் நேரம் அவனிடம் தன் கோபத்தைக் காட்ட,அவனோ தன்னை கிண்டல் செய்துவிட்டு செல்லவும் அவன் மீது மேலும் கோபம் அதிகம் தான் ஆனது.

அன்றைய கூடலிற்கு பிறகு சுமித்ராவின் மனது பிருத்திவியை மிகவும் தேடத் துவங்க அவனோ இவளை சட்டை செய்யாமல் இருப்பது வேறு அவளை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்க,

“திரும்பி வரட்டும் அப்ப பேசிக்கிறேன்…”என்று மனதில் கணவனை தாளித்துக் கொண்டே மதிய சமையலை முடித்துவிட்டு குளிக்க சென்றாள்.

சுமித்ரா குளித்து முடித்து வரும் நேரம் பிருத்திவியும் வந்திருந்தான்.

“என்ன அதிசயம் சார்…அதுக்குள்ள வந்திட்டீங்க….”என்று சுமித்ரா கேட்க,

“வேலை முடிஞ்சிடுச்சு அதான் வந்துட்டேன்…”என்று கூறிவிட்டு தனது கைபேசியில் கவனமாக.சுமித்ராவும் துவைத்த துணிகளை காய வைக்க மாடிக்கு சென்றுவிட்டாள்.இவள் மாடியில் துணிகளை காய வைத்துக் கொண்டு இருக்க,அப்போது வேகமாக பிருத்திவி ஓடி வந்தான்.

“என்ன தேவா…ஏன் இப்படி ஓடிவரீங்க….என்ன…”என்று கேட்க,அவனோ பதில் கூறாமல் அவளது கைகளை பிடித்து இழுக்க,

“ப்ச்…விடுங்க…”என்றாள் கோபமாக.

“ஏய் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்…வீட்டுக்கு வா….”என்று கூப்பிட,அவளுக்கு சற்று சொத்து என்று தான் ஆனது.அவன் வேகமாக வந்து கை பற்றி இழுக்கவும் அவளது மனம் சற்று படபடக்க துவங்கியிருக்க அதை ஒரு வாலி தண்ணீரை ஊற்றி அணைத்திருந்தான் பிருத்திவி.

“ப்ச் இருங்க வரேன்…இந்த இரண்டு துணி மட்டும் தான்….”என்று கூறிவிட்டு துணிகளை கொடியில் காய போட்டு வர,அவனும் அவளின் பின்னே வந்தான்.வீட்டிற்குள் வந்ததும் அவளை தன் கைகளில் ஏந்தியிருந்தான் பிருத்திவி,

“என்ன இது தேவா…ஏதோ பேசனும்னு சொல்லிட்டு…”என்று அவள் கேட்க,அவளை கைகளில் ஏந்தி வந்து கட்டிலில் விட்டவன்,

“ஓய் ஒரு குட் நியூஸ்டி….எனக்கு எப்படி வெளிபடுத்துறதுனே தெரியலை…அவ்வளவு சந்தோஷமா இருக்கு…”என்று கண்கள் கலங்கியவாரே கூற,அவன் உணர்ச்சிவசபடுகிறான் என்று உணர்ந்த சுமித்ரா அவனது தலையை கோதியவாரே,

“என்ன தேவா…சொல்லுங்க…”என்று கேட்க,

“நம்ம குடும்பத்துக்கு ஒரு புது ஆள் வரப்போறாங்க….”என்று கூற,சுமித்ராவிற்கு எதுவும் புரியவில்லை அவள் திருதிருவென்று முழிக்க,அவளது தலையில் செல்லமாக தட்டியவன்,

“ஏய் அனிதா கன்சீவா இருக்காளாம்….இப்ப தான் சூர்யா போன் பண்ணான்….எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா….”என்று கூற,சுமித்ராவிற்கும் அவனது சந்தோஷம் தொற்றிக் கொண்டது.

“வாவ் இது கிரேட் நியூஸ்….இருங்க நான் போய் இப்பவே அனிக்கு இனிப்பு செய்யுறேன்….நாம போய் பார்த்துட்டு வரலாம்….”என்று கூறிவிட்டு செல்ல,

“உடனே செய்ய முடியலானா பரவாயில்லை மித்து…நாம போகும் போது கடையில கூட வாங்கிக்கலாம்….”என்று கூற,

“இதுல என்ன சிரமம்…அதெல்லாம் ஒண்ணுமில்லை…அனிக்கு வீட்டு இனிப்பு தான் கொடுக்கனும்…”என்று கூறி சுமித்ரா மறுத்துவிட்டாள்.

பிருத்திவிக்கும்,சுமித்ராவிற்கும் மனது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.இந்த தித்திப்பான செய்தியில் சுமித்ராவும் கணவன் மேல் இருந்த கோபம் கூட மறந்து போனது.பின்னே அனிதா குழந்தைக்காக எவ்வளவு ஏங்கியிருந்தாள் என்று அவளுக்கு நன்கு தெரியுமே அதனால் அவளுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தந்திருந்தது.

சுமித்ராவும் அனிதாவிற்கு பிடித்த அசோகா அல்வா செய்து கொண்டு சூர்யாவின் வீட்டுக்கு கிளம்பிவிட்டாள்.பிருத்திவியும்,சுமித்ராவும் சூர்யாவின் வீட்டை அடைந்த போது அனிதாவின் பெற்றோரும் வந்திருந்தனர்.

நண்பனைக் கண்ட சூர்யா வேகமாக வந்து அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிபடுத்த,பிருத்திவியும் சூர்யாவை அணைத்து விடுத்தவன்,

“மச்சி நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டா…”என்று மனதார கூற,

“நானும் தான்டா…”என்று கண்கள் கலங்க கூறினான் சூர்யா.

“வாழ்த்துக்கள் அண்ணா…”என்று சுமித்ரா கூற,

“வாம்மா…அனி உள்ள தான் இருக்கா போ போய் பாரு…”என்று கூறி அனுப்பி வைத்தான்.சுமித்ரா அனிதாவிடம் பேசிவிட்டு அவளுக்கு செய்து எடுத்து வந்த இனிப்பைக் கொடுத்துவிட்டு வந்தாள்.பிருத்திவியும்,சூர்யாவிடம்,

“மச்சி…கொஞ்ச நாள் வரைக்கும் நீ வீட்டுல இருந்தே வேலை பாரு…ஏதாவது முக்கியமான வேலைனா மட்டும் வா…நான் பார்த்துக்கிறேன்…”என்று கூற சூர்யாவோ,

“இல்லை டா….அது…”என்று தயங்க,

“அண்ணா…இந்த மாதிரி சமயத்தில அனிக்கு நீங்க பக்கத்தில இருந்தா இன்னும் கொஞ்சம் தெம்பா இருக்கும்…அதான் அவர் பார்த்துக்கிறேன்னு சொல்லுறார்ல…”என்று சுமித்ராவும் கூற ஒருமனதாக சூர்யாவும் தலையாட்டினான்.பிருத்திவியும்,சுமித்ராவும் திரும்பி வீடு வரும் போது இரவானது.பிருத்திவி படுக்கையில் விழ,சுமித்ராவும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள் அவனின் பக்கத்தில் படுக்க,அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டான்.

“என்ன மேடம் கோபம் போயிடுச்சா…”என்று அவளை பின்னிருந்து அணைத்தபடி காதில் கிசுகிசுக்க,

“ம்ம் கொஞ்சம் போயிடுச்சு…”என்று சுமித்ராவும் கூறினாள்.

“அது என்ன கொஞ்சம் தான் போயிருக்கு…தப்பாச்சே இரு முழுசா உன் கோபத்தை போக்குறேன்….”என்று கூறிவிட்டு அவளை திருப்பி தன் மேல் போட்டுக் கொண்டு தன் அதரங்களால் ஒற்றி எடுக்க,அதுவரை இருந்த மனசஞ்சலம் அணைத்தும் நீங்கி அவனுடன் ஒன்றினாள்.இருவரின் வாழ்வும் தெளிந்த நீரோடை போல சென்றது.

பிருத்திவி கூறியது போல சூர்யா மூன்று மாதங்கள் மனைவியின் கூடவே இருந்து கவனித்துக் கொண்டான்.அனிதாவிற்கு மசக்கை வேறு படுத்தியது.நான்காம் மாதம் ஆரம்ப தருவாயில் தான் அவளுக்கு சற்று சரியாகியது.இப்போது சூர்யாவும் பிருத்திவியுடன் வேலைக்கு வர துவங்கி இருந்தான்.இதோ அவர்கள் முன்பு செய்து இருந்த ஜே.பி குரூப் புராஜெக்ட் நல்ல லாபத்தில் சென்றிருந்தது.அதனால் கருணாகரனுக்கு பிருத்திவியின் மேல் தனி மதிப்பு.

பிருத்திவி நினைத்ததை போல் இப்போது அவர்கள் கை வசம் மேலும் நான்கு புராஜெக்ட்கள் புதிதாக வந்திருக்க,அவனுடன் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.இப்போது சுமித்ராவும் விட்ட படிப்பை தொடர்ந்து கொண்டு இருக்கிறாள்.அவள் கல்லூரி சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது.அவளும் முன்போல் இல்லாமல் படிப்பில் கவனத்துடன் இருக்க,முன்போல் இருவருக்கும் பேசிக் கொள்ளவே நேரம் இல்லை.தங்களின் வருங்காலத்திற்காக தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

பிருத்திவியும் வருகின்ற லாபத்தில் தனது அத்தியாவசிய செலவுக்கு என்று போக மீதியை சக்கரவர்த்தியிடம் அனுப்பிவிடுவான்.அதோ இதோ என்று அவனது கடன் தொகையும் அடைப்பட்டு இருந்தது.சக்கரவர்த்தி பிருத்திவியின் வீட்டு பத்திரங்களை அவனிடமே சேர்ப்பித்திருந்தார். விரைவில் தனது வீட்டிற்கு குடியேறுவதர்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான் பிருத்திவி.

மேலும் நான்கு மாதங்கள் கடந்திருந்த நிலையில் அனிதாவிற்கு வளைகாப்பிற்கு ஏற்பாடு செய்தான் சூர்யா.பிருத்திவி நான் அண்ணனாக அனைத்தும் அனிதாவிற்கு செய்வேன் என்று கூறி என்ன என்ன செய்ய வேண்டும் என்று சூர்யாவின் தாயிடம் கேட்டு விட்டு ஒன்றுவிடாமல் செய்தும்விட்டான்.வளைகாப்பை மண்டபத்தில் வைத்திருந்தான் சூர்யா.வளைகாப்பின் போது தன் அன்னையை முன்நிறுத்தி அனிதாவின் கழுத்தில் ஆறு சவரனில் ஆரம் ஒன்றை போட்டுவிட,சொந்தம் அனைத்தும் மூக்கில் விரல் வைக்காத குறைதான்.இதில் பிருத்திவி வேறு அனிதாவிற்கு தனியாக செய்திருக்க சிலருக்கு பொறாமையாக கூட இருந்தது.இதை அனைத்தையும் பார்த்திருந்த அனிதாவின் பெற்றோருக்கு உள்ளம் நிறைந்து போனது.

ரத்த சொந்தங்கள் மட்டுமே உண்மையான அன்பை வெளிபடுத்தும் என்ற கூற்றை பொய்யாகியிருந்தனர் சூர்யாவும்,பிருத்திவியும்.தூய்மையான அன்பை இருவரும் உணர்ந்து அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து அதில் வெற்றியும் கண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும்.நல்ல எண்ணங்கள் எப்போதும் ஒரு மனிதனை வெற்றியை நோக்கியே இழுத்து செல்லும் என்பது பிருத்திவி மற்றும் சூர்யாவின் வாழ்விற்கு பொருந்தும்.

Advertisement