Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 14

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்த சுமித்ரா அப்போது தான் அந்த அறையை  முழுதாக பார்த்தாள்.ஒரு சிறிய அறை தான் அவர்களது வீடு இப்போது.திருமணத்திற்காக புதிதாக வெள்ளை அடித்திருப்பது தெரிந்தது.வீட்டை சுற்றி பார்வையை சுழற்றினாள்.வீட்டின் மூளையில் ஒருவர் படுக்க கூடிய கட்டில் மடித்து வைக்கப்பட்டு இருந்தது,மற்றொரு மூளையில் தடுப்பு போல் ஒன்று சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.சமைப்பதற்கு என்று ஒரு சில பாத்திரங்கள் மற்றும் பிருத்திவியின் துணிகள் அடங்கிய ஓரு பெட்டி இருந்தது.இருவர் படுக்கக் கூடிய மெத்தை கீழே பொட்டப்பட்டிருந்தது.

பக்கவாட்டு சுவற்றில் பிருத்திவியின் தாய்,தந்தை படம் மாட்டப்பட்டு இருந்தது.அதற்கு பக்கத்திலேயே சில சுவாமி படங்கள் இருந்தன.வீட்டில் நுழைந்தவுடன் அங்கு தான் விளக்கு ஏற்றினாள் ஆனால் அப்போது அவள் இருந்த மனநிலையில் எதையும் கவனிக்கவில்லை.

“என்ன மேடம் வீடு பிடிச்சிருக்கா…எப்படி இருக்கு….”என்று மெத்தையில் சாய்ந்தபடி கேட்டான் பிருத்திவி.அவள் வீட்டை நோட்டம் விட்டப்படி இருப்பதைப் பார்த்துவிட்டு கேட்டான்.அவளோ மையமாக தலையாட்டினாள்.

அப்போது தான்  மெத்தையில் பூக்கள் தூவப்பட்டு இருப்பதை பார்த்தவளுக்கு அன்றைய நாள் என்ன என்பது புரிய மனதில் படபடப்பு தொடங்கியது.அவள் அதே நிலையில் நின்று கொண்டு ஏதோ யோசனையில் இருக்க,தனது கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்த மனைவியின் முகத்தை பார்த்த பிருத்திவிக்கு அவளது தயக்கம் எதனால் என்று புரிய முகத்தில் தன் போல் புன்னகை பரவியது.

“ஓய்…இங்க வா…”என்று அழைக்க,அவளோ மிரண்டு விழித்தபடி அங்கேயே நின்றாள்.இவ வரமாட்டா டா பிருத்திவி..என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் தானே எழுந்து சென்று அவளை கைப்பிடித்து அழைத்து வந்தான்.சுமித்ராவும் நடுங்கிய படியே அவனுடன் வந்தாள்.அவளது சில்லிட்ட கைகளை வைத்தே அவள் பயந்துள்ளாள் என்பதை உணர்ந்தவன்,அவளது மனநிலையை மாற்றும் பொருட்டு,

“ஏய்…மித்து…என்னடா…என்ன பயம்…”என்று கனிவாக கேட்க,அவளோ சற்று நடுக்கத்துடன்,

“அதெல்லாம் ஒண்ணுமில்லை….”என்று வார்த்தைகளை மென்று விழுங்க,அவளது தடுமாற்றத்தில் மேலும் சிரித்தவன்,

“ஓய் என்ன…நான் என்ன பாஞ்சிடுவா போறேன்…”என்று விஷமமாக கூற,அவள் அவன் நிஜமாக கூறுகிறானோ என்று பயந்து அவனை ஏறிட,அவனது முகத்தில் கண்ட குறும்பு புன்னகை கண்டவள்,

“உங்களை…”என்று செல்லமாக திட்டிக் கொண்டே பக்கத்தில் இருந்த தலையனையால் மொத்த,அவளது அடிகளை லாவகமாக தடுத்தவன்,அவளது கைகளை இழுக்க,இதை எதிர்பாராதவள் அவனின் மேலே விழுந்தாள்.அவளுடன் மெத்தையில் சரிந்தவன் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்க,சுமித்ராவிற்கோ உடல் முழிவதும் நடுக்கம் உருவானது.

ஒரு ஆண்மகனின் தொடுகையில் மனதும்,உடலும் கரைவது போல் ஒரு பிரம்மை உருவாகியது.அதுவே அவளை மேலும் பதட்டப்பட வைத்தது.

அவளை தன் மீது சாய்த்துக் கொண்டு இருப்பவனுக்கோ எதுவும் சொல்ல முடியாத நிலை.முதன் முதலில் ஒருபெண்ணின் நெருக்கம் அதுவும் மனைவி என்ற பொழுது ஆண்மகனாக அவனது உணர்ச்சிகள் அவனையும் ஆட்டிப்படைக்க தொடங்க ஒரு மோன நிலையில் அவளையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான்.

பிருத்திவியும் அறியாமல் அவனது கைகள் மனைவியின் வெற்றிடையில் பதிய,சுமித்ராவிற்கோ உடல் முழுவதும் ஏதோ மின்சாரம் தாக்கியது போல உடல் சிலிர்க்க ,அவனது பிடியில் இருந்து வெளிவர முயன்றாள்.அவள் விலக முயல்வது தெரிந்தவுடன் அவனது பிடி மேலும் இறுக,அவளை தன் முகத்தின் அருகே இழுத்தவன்,

“ஓய் மித்து….ஏன் இப்படி நடுங்குற…உன்னை என்ன பண்ணிடுவேனு இவ்வளவு பயம்….சொல்லு…”என்று அவளது தாடையை நிமிர்த்தி கேட்க,அவளோ பிருத்திவியின் செய்கையில் அதிர்ச்சியடைந்து அவனை நோக்கினாள்.

பயத்தில் சுமித்ராவின் இதயத் துடிப்பு எகிறியது.அவளது நிலை பிருத்திவிக்கு மனதில் உல்லாசத்தைக் கொடுக்க,அவளை மேலும் சீண்டும் எண்ணம் வர,

“ஓய்…என்னடி பொண்டாட்டி…இப்படி சிவக்குற…சும்மா தொட்டதுக்கே இப்படினா…நான் இப்படி பண்ணா…”என்று அவளது இடையில் கைகளை படரவிட்டு கிச்சுகிச்சு மூட்ட,அவ்வளவு தான் சுமித்ராவிற்கு உடல் முழுவதும் புது ரத்தம் பாய்வது போல உணர்ந்தவள்,அவனை தள்ளிவிட்டு துள்ளி எழுந்தாள்.அவளது செய்கையில் பிருத்திவிக்கு சிரிப்பு பீரிட,

“ஏய்..என்னம்மா…நான் சும்மா தான்…”என்று மேலும் என்ன கூறியிருப்பானோ,அவனை தலையணையால் மொத்திவிட்டாள் சுமித்ரா.

“சேட்டை….சேட்டை…உங்களை…”என்று திட்டிக் கொண்டே அவனை மென்மையாக அடிக்க,அவள் தன்னை வலிக்க கூடாது என்று மென்மையாக அடிக்கிறாள் என்று புரிந்தவனுக்கு மனதின் இதம் மேலும் பரவியிது.அதே மனநிலையுடன் அவளைப் பார்த்து,

“என்ன இப்ப பயம் போயிடுச்சா…”என்று கேட்க,அவனின் குரல் பேதத்தில் அடிப்பதை விட்டுவிட்டு அவனை பார்த்தவளுக்கு அப்போது தான் அவன் தன்னோடு விளையாடி இருப்பது புரிந்து.இருந்து அவன் தன்னை தவறாக நினைத்துவிட்டானோ என்று அவனது முகத்தை பார்க்க அதில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் நின்ற விதத்திலேயே அவளது மனநிலையை சரியாக ஊகித்தவன்.இந்த மாதிரியான விஷயங்களை பேச மனது முதலில் அமைதியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தவன்.அவளது மனநிலையை மாற்றும் பொருட்டு,

“முதல்ல இந்த பட்டு புடவையை மாத்து….”என்று கூறிவிட்டு படுக்கையில் இருந்து எழுந்தவன்,எதிரே சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டு இருந்த தடுப்பு போல அமைப்பை விரித்துவிட்டான்,

“நீ டிரெஸ் சேஞ்ச் பண்ணிக்கோ மித்து…நானும் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…”என்று கூறிவிட்டு கையில் டவலுடன் குளியில் அறைக்கு சென்றுவிட்டான்.

சுமித்ராவிற்கு தான் மனதிற்குள் பயமாக இருந்தது.அவன் கோபமாக உள்ளானோ என்று,இருந்தும் தனக்கு தேவையான மாற்று உடையை எடுத்துக் கொண்டு தடுப்பிற்குள் சென்றாள்.

குளியல் அறைக்குள் புகுந்த பிருத்திவியும் அவளிடம் எப்படி பேச வேண்டும் என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டே குளித்து முடித்து வெளிவந்தான்.

சுமித்ராவும் உடை மாற்றி விட்டு அமர்ந்ந்திருந்தாள்.பிருத்திவி குளியல் அறையிலேயே உடைமாற்றி வெளிவர,அங்கே மெத்தையில் ஏதோ யோசனை செய்தபடி அமர்ந்திருந்தாள் அவனது மனைவி.ஆனால் முன்பு போல் பதட்டம் இல்லை முகத்தில்.அமைதியாக அவளை நெருங்கிய பிருத்தவி அவளின் அருகில் அமர்ந்து,

“ம்ம்…என்ன ஓடுது இங்க ….”என்று அவளின் நெற்றியை நீவியபடி கேட்க,அவனது திடீர் அருகாமையில் அதிர்ந்தவள்,பின் தன்னை சமன் செய்து கொள்ள,அவளது கைகளை தன் கைகளுக்கு வைத்துக் கொண்ட பிருத்திவி,

“மித்து…ஏன் இவ்வளவு பயப்படுற…இதெல்லாம் உடனே நடக்கனும்னு இல்லை…பொறுமையாவே நடக்கட்டும்…நான் உன்னை எந்த விஷயத்திலும் வற்புறுத்த மாட்டேன்…நீ இந்த மாதிரி பயப்படாத எனக்கு என்னவோ போல இருக்கு…”என்று தன் மனதை மறையாமல் கூறினான்.பிருத்திவியின் பதிலைக் கேட்ட சுமிர்தாவிற்கு தான் நடந்து கொண்டது தவறு எனப்பட்டது.

“சாரி…தேவா…நான்…”என்று ஏதோ கூற வர அவளது வாயில் விரல் வைத்து பேச்சை தடுத்தவன்,

“சாரி எல்லாம் சொல்லாத…இப்ப நீ என் மனைவி…உனக்கு என்கிட்ட பேச எந்த தயக்கமும் தேவையில்லை….அதை முதல்ல மனசுல பதிய வச்சுக்க…நம்ம கல்யாணம் ரொம்ப வேகமா தான் நடந்துச்சு நான் ஒத்துக்குறேன்…உனக்கு பேசக் கூட வாய்ப்புக் கொடுக்காம தான் நான் கல்யாணம் பண்ணிக்கேட்டேன்….நான் செஞ்சது ஒருவகையில தப்பு தான்…”என்றவனை,

“நீ எந்த தப்பு செய்யல தேவா…எனக்கு உங்களை பிடிச்சதால தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…”என்று தன் மனதை மறையாமல் கூறினாள்.அவளது வார்த்தைகளில் நெகிழ்ந்தவன்,அவளது கைகளில் அழுத்தமாக தன் அதரங்களை ஒற்றி எடுத்தான்.இந்த முறை அவனது இதழ் ஒற்றலில் சுமித்ராவிற்கு உடல் சிலிர்த்ததே தவிர,அவனை கண்டு நடுங்கவெல்லாம் இல்லை மாறாக அவனையும் அவனது செய்கையும் ரசிக்கத் தூண்டியது.

மனைவியின் ரசிக்கும் விழிகளைக் கண்டவன்,

“ஓய் என்ன சைட் அடிக்கிறியா…”என்று அவளின் விரல்களோடு விளையாடியபடிக் கேட்க,அவனது கிண்டல் புரிந்த சுமித்ராவும்,

“என் புருஷன் நான் சைட் அடிக்காம….வேற யார் அடிப்பா….”என்று கூற,அவளை இழுத்து அணைத்தவன்,நெற்றியில் முத்தமிட்டு,

“மித்து…மித்து…”என்று அவளது மூக்கை செல்லமாக பிடித்து ஆட்ட,

“அது என்ன மித்துனு கூப்பிடுறீங்க…”என்று கேட்க,அவளை அணைத்தவாரே,

“உனக்கு நான் எப்படி தேவாவோ…அப்படி நீ எனக்கு மித்து…”என்று கூறிவிட்டு,

“ஏய் நான் ஒரு முக்கியமான விஷயம் பேசிட்டு இருந்தேன்…நீ என்னை டைவர்ட் பண்ணிட்ட…”என்று அவளை குற்றம்சாட்டுவது போல் பேச,வேகமாக அவனது நெஞ்சில் இருந்து எழுந்தவள்,

“நான் ஒண்ணும் உங்களை டைவர்ட் பண்ணலை…நீங்களே தான் டைவர்ட் ஆனிங்க…இப்ப என்னை குறை சொல்லுரீங்க…போங்க போங்க…”என்று முறுக்கிக் கொண்டு தள்ளி அமர,அவளது செல்ல கோபம் கூட பிருத்திவிக்கு மனதிற்கு இதமாக தான் இருந்தது.தனிமையில் வாடியவனுக்கு இன்று தன்னிடம் பேசவும்,கோபம் கொள்ளவும் ஒருவள் இருக்கிறாள் என்பது மனதிற்கு ஒருவித இதத்தை தந்தது.

பிணங்கிக் கொண்டு அமர்ந்திருந்த மனைவியை இழுத்து தன் மீது போட்டுக் கொண்டவன்,அவள் ஏதோ பேச வரும் முன் அவளது வாயின் விரல் வைத்து தடுத்தவன்,

“உஷ்…இப்ப நீ எதுவும் பேசக் கூடாது…நான் பேசுறது நீ கேட்குற…அவ்வளவு தான்…”என்று கூற,தன் போல் ஆடியது சுமித்ராவின் தலை.

அவளை இறுக அணைத்தவரே,

“மித்து…அப்ப எனக்கு எப்படியாவது உன்னை கல்யாணம் பண்ணிக் கூட்டுட்டு வந்திடனும் மட்டும் தான் தோணுச்சு…அதுக்கு முக்கிய காரணம் என்னோட தனிமை…”என்றுவிட்டு விட்டத்தை சில நிமிடம் வெறித்தான்.அவனது முகபாவனையை வைத்தே அவன் தனிமையில் தவித்திருக்கிறான் என்பது புரிய,மென்மையாக அவனது முடிச்சிட்ட புருவங்களை நீவிடல்லானாள் சுமித்ரா.

மனைவியின் மென்மையான தீண்டலில் சில நிமிடங்கள் தொலைந்து போனவன்.பின் ஒருவாரு தன்னை மீட்டு,

“அப்பா,அம்மா போனதுக்கு அப்புறம் எல்லாமே வெறுமையா ஆன மாதிரி ஒரு பீல் மித்து…வாழ்வே பிடிக்கல…சூர்யாவும்,அங்கிளும் இல்லைனா கண்டிப்பா உயிரோட இருந்திருக்க மாட்டேன்…”என்று கலக்கத்துடன் கூற,வேகமாக அவனது வாயில் ஒரு அடி வைத்தாள் சுமித்ரா.

“என்ன பேச்சு இது…அடிவாங்குவீங்க….”என்று கோபமாக மிரட்ட,அவனோ அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“என்ன பார்வை பலமா இருக்கு…”என்று அவன் பார்வை தந்த குறுகுறுப்பில் கன்னங்கள் சிவக்க சுமித்ரா கேட்க,

“என்னை திட்டவும்…என்கிட்ட கோபப்படவும் ஒரு ஆள் வந்தாச்சு….நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மித்து….”என்று கூறி அவளை இறுக அணைத்தான்.

“உங்களுக்கு மட்டும் தானா…எனக்கும் தான் என்னை பார்த்துக்க நீங்க வந்துட்டீங்க…”என்று கூற,அவளது பதில் நெகிழ்ந்தவன்,செல்லமாக அவளது கன்னங்களை கிள்ள,அவளோ பொய்யாக அலறினாள்.

“மித்து…உன்கிட்ட இன்னும் ஒரு விஷயமும் பேசனும்….”என்று  கூற,அவளும்,

“ம்ம் சொல்லுங்க…”என்றாள் ஆர்வமாக.

“ம்ம் இதை நீ எப்படி எடுத்தபனு எனக்கு தெரியலை…இருந்தாலும் இப்பவே சொல்லிடுறேன்…பின்ன நாளைக்கு என்கிட்ட நீ சண்டை பிடிக்கக் கூடாது பாரு….”என்று கூற,

“ஆமாம்….நான் சண்டை போட்டலும் நீங்க அப்படியே பயந்து போயிடுவீங்க….”என்று கிண்டல் போல கூறியனாள்.

“இல்லை தான் இருந்தாலும் முன்னாடியே சொல்லைனு நீ சொல்லக் கூடாது இல்லை…”என்று கூற,வேகமாக அவனைவிட்டு எழுந்தவள் அவனைப் பார்த்து கும்பிடு போட்டுவிட்டு,

“அய்யா சாமி…நான் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன்…போதுமா…நீங்க சொல்லுங்க….”என்று கூறிவிட்டு மீண்டும் அவளே அவனது தோள்களில் சாய்ந்து கொள்ள,பிருத்திவிக்கு மனதில் இருந்த அத்தனை கவலைகளும் மறைந்து மனதில் இதம் பரவியது.அதே மனநிலையுடன்,

“என் செல்லம் டி நீ…”என்று அவளது கன்னங்களை கிள்ள,அவனது கைகளை தட்டிவிட்டவள்.

“இப்ப என்னவாம்…”என்று கூற,அவனோ,

“அது அப்படி தான்…”என்றுவிட்டு மீண்டும் தொடர்ந்தான்,

“மித்து…..எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அதே போல தான் என்னோட வேலையும் முக்கியம்…சில சமயங்கள்ல நான் வேலைக்கு தான் முக்கியத்துவம் தருவது போல உனக்கு தோணும்….ஆமாம் என்னோட வேலைக்கு சில நேரங்கள்ல நான் முக்கியத்துவம் தருவேன் தான்…அதுக்காக உன்னை நான் மறுந்துட்டேன் நீ நினைக்கக் கூடாது……என்னோட அன்பை நான் வெறும் வாய் வார்த்தையால சொல்ல விரும்பல….உணர்த்த தான் விரும்புறேன்…கண்டிப்பா உனக்கு உணர்த்துவேன்…”என்று கூற,சுமித்ராவோ பிருத்திவியின் அன்பில் கரைந்துக் கொண்டு இருந்தாள்.

Advertisement