Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 13

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிருத்திவியின் குலதெய்வ கோவில் அது தான்.அவனது தாயின் விருப்படி அங்கு தான் தனக்கு திருமணம் என்று கூறிவிட்டான்.ஆம் இன்று சுமித்ரா,பிருத்திவிதேவின் திருமணம்.சுமித்ராவின் சம்மதம் கிடைத்தவுடன் பிருத்திவி சிறிதும் தாமதிக்கவில்லை சக்கரவர்த்தியை அழைத்து விவரத்தை கூற,அவருக்கு தலை,கால் புரியவில்லை அவ்வளவு சந்தோஷம்.எங்கே பிருத்திவி வாழ்க்கை தனிமையிலேயே சென்றுவிடுமோ என்று பயந்து கொண்டிருந்தவருக்கு இப்போது தான் மனதின் பாரம் நீங்கியது போல் இருந்தது.

சூர்யாவிடமும் தனது திருமணம் விஷயத்தை கூற அவனுக்கும் மனம் நிறைந்து போனது.பிருத்திவி வரும் வரை நடக்கும் புராஜெக்டை தான் பார்த்துக் கொள்வதாக கூறினான்.பிருத்திவி மேலும் இரு நாள் ஊட்டியில் இருந்தான்.சக்கரவர்த்தியை ஊட்டி அழைத்திருந்தான் முறைபடி அனைத்தும் பேச அவரும் தன் நண்பன் மகனின் திருமணத்தை ஒரு தந்தையாக முன்னின்று செய்ய வந்துவிட்டார் மனிதர்.

சுமித்ராவின் தரப்பில் இருந்து நல்லசிவமும்,பிருத்திவியின் தரப்பில் இருந்து சக்கரவர்த்தியும் பேசினார்கள்.பிருத்திவி அடுத்த மாத இறுதிக்குள் திருமணம் முடித்துவிடலாம் என்று கூற,அவன் கூறியது போலே நாளும் குறிக்கப்பட்டது.திருமணம் இருவீட்டாரும் சரி சமமாக                                                                                                                         சேர்ந்து செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.இதில் நல்லசிவம் சுமித்ராவிற்கு சீதனம் செய்தே தீருவேன் என்று பிடிவாதமாக இருக்க பிருத்திவி நான் வாங்கேவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்க தொடங்கினான்.இருவரும் அவரவர் பிடியில் நிற்க அங்கு பாசப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

இவை அனைத்தையும் ஒருவித பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் சுமித்ரா.தனக்கும் பிருத்திவிக்கும் திருமணம் என்பதிலேயே அவளது மனதில் படபடப்பு உருவாகியிருக்க இதில் இவர்களின் பாச போராட்டாங்களை கண்டு கண்கள் குலம் கட்டின.பேசா மடைந்தையாகி போனவள் போல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருக்க,வந்ததில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்த சக்கரவர்த்தியின் மனைவி தெய்வானைக்கு அவளது மனநிலை நன்கு புரிய,அவர் தன் பக்கத்தில் இருந்த கணவரின் காதில் ஏதோ கூற அவரும் அப்போது தான் சுமித்ராவை பார்த்தவர் ஒரு முடிவுடன்,

“கொஞ்ச நேரம் இரண்டு பேரும் அமைதியா இருங்க…”என்று நல்லசிவம் மற்றும் பிருத்திவியை பார்த்துக் கூறியவர்,சுமித்ராவிடம் திரும்பி,

“நீ சொல்லுமா…நீ என்ன நினைக்கிற…”என்று கேட்க,அவளோ திருதிருவென முழித்தவள்,

“என்ன அங்கிள்…நான் என்ன சொல்லனும்…”என்று தடுமாற,

“சுத்தம்…இங்க என்ன நடக்குதுனே தெரியாம தான் பார்த்துக்கிட்டு இருக்கியா…”என்று புன்னகையுடன் கூற,அவளோ முதலில் ஆமாம்,பின் இல்லை என்பதுமாக தலையை ஆட்டி வைத்தாள்.அவளது செயலில் அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட,சுமித்ராவிற்கு சற்று வெட்கமாக போய்விட்டது.அவளது முகபாவனைகளை ரசித்த பிருத்திவி தாங்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை கூறினான்.

“இப்ப நீ சொல்லுமா…நீ என்ன நினைக்கிற…உன்னோட அங்கிள் கண்டிப்பா நான் சீர் செஞ்சே தீருவேனு நிக்குறார்…உன் வருங்கால கணவன் வேண்டாம்னு சொல்லுரார்….ஆனா உன் மனசு என்ன சொல்லுது…”என்று சக்கரவர்த்தி கேட்க,சுமித்ரா சற்று அமைதியாக இருந்தவள்,நிமிர்ந்து இருவரையும் பார்த்து,

“என்னோட அப்பா உயிரோட இருந்திருந்தா இதெல்லாம் கண்டிப்பா செஞ்சு தான் எனக்கு அனுப்புவார்….அவரோட இடத்தில இப்ப அங்கிள் செய்யனும்னு ஆசைப்படுறாங்க….அவங்க செய்யட்டும் தேவா…ஆனா நீங்க சொல்லுற மாதிரி பொருள் எல்லாம் வேண்டாம் அங்கிள்….அந்த பணத்தை என்னோட பெயர்ல சேமிப்பு பணமா போட்டுங்க…”என்று கூற அவளது யோசனை அனைவருக்கும் சரியெனபட்டது.

பிருத்திவி சற்று முறைப்புடன் அமர்ந்திருக்க அவனை கண்களாலே சாமாதானம் செய்தாள் சுமித்ரா.அவள் ஏதோ ஒரு காரணத்துடன் தான் செய்கிறாள் என்பது புரிய பிருத்திவியும் அமைதியாக இருந்து கொண்டான்.நல்லசிவத்திற்கு அவ்வளவு மகிழ்ச்சி தன் பெண் போல பாவித்து வளர்த்தவர் ஆயிற்றே எங்கே எதுவும் செய்யமுடியாமல் போய்விடுமோ என்று பயந்தவருக்கு இப்போது மனது சற்று சமன்பட்டது.

இவ்வாறு சில சண்டைகள் பல சமாதானங்கள் என்று கல்யாண நாளும் வந்துவிட்டது.மதுரை கோவிலுக்கு அருகிலேயே உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து கிளம்பிக் கொண்டிருந்தனர் அனைவரும்.பிருத்திவியை தயார்படுத்துகிறேன் என்று அவனைப் படுத்திக் கொண்டு இருந்தான் சூர்யா,

“டேய் என்ன நீ இவ்வளவு சிம்பிளா கிளம்புற…இந்தா இதை போடு என்று அவனை பாடாய் படுத்த…”பிருத்திவியோ,

“டேய் போதும்டா…என்னை விட்டுட்டு…”என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

சுமித்ராவை அனிதா தயார்ப்படுத்தினாள்.இவ்வாறு சில கலாட்டகளுடன் இருவீட்டாரும் கோவிலுக்கு வர அங்கே மற்ற ஏற்பாடுகளை கவனித்தப்படி இருந்தனர் நல்லசிவமும்,சக்கரவிர்த்தியும்.இந்த ஒருமாதத்தில் இருவருக்குள்ளும் நல்ல தோழமை உருவாகியிருந்தது.வெகு நாட்களுக்கு பிறகு அவர்கள் இருவருக்கும் கிடைத்த நட்பை விட மனதில்லை அதனால் எப்போது எல்லாம் நேரம் கிடைக்கிறதோ இருவரும் தங்கள் பழைய கதைகளை பேசிக்கொள்ளவர்.

சிறிதாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் பிருத்திவி அமர வைக்கப்பட்டான்.திருமணத்திற்கான சடங்குகள் தொடங்க,நொடிக்கொரு தரம் பிருத்திவியின் பார்வை சுமித்ரா வரும் பாதை பார்த்துக் கொண்டும் ஐயர் கூறும் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டும் இருந்தது.இதை கவனித்த சூர்யா அவனிடம் குனிந்து,

“டேய் மச்சி…நீ எவ்வளவு நேரம் பார்த்தாலும் சுமி வரமாட்டா…”என்று நக்கலாக கூற,அவனை முறைத்த பிருத்திவி பின் தன் சடங்குகளில் கவனமனான்.ஐயர் பெண்ணை அழைத்து வரும்படி கூறவும் பிருத்திவிக்கு மனதிற்குள் ஒரு இதமான படபடப்பு,அவளை காண வேண்டும் என்று உடலில் உள்ள அனைத்து செல்களும் பரபரப்பு தொற்றிக் கொள்ள அவள் வரும் வழியே கண்களை பதித்திருந்தான்.

பிருத்திவியின் மனதை மேலும் வதைக்காமல் அனிதாவுடன் நடந்து வந்தாள் சுமித்ரா,அரக்கு நிற பட்டுப் புடவை அவளிற்கு அவ்வளவு பாந்தமாக இருந்தது.மிதமான அலங்காரம் தான் அனிதாவிடம் செய்ய சொன்னாள்.அவளும் சுமித்ராவின் விருப்படியே செய்துவிட மிகவும் அழகாக தெரிந்தாள் பெண்.நேசித்தவனையே கைப்பிடிக்க போகிறோம் என்ற நினைவா,இல்லை வெகு நாட்களுக்கு பிறகு தனக்கே தனக்கு என்று ஒரு உறவு வரப்போகிறது என்ற பூரிப்பா எதோவொன்று அவளின் முகத்தில் மேலும் பொலிவு கொடுத்தது.

மனதில் ததும்பும் மகிழ்ச்சியுடன் நடந்து வந்தவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் பிருத்திவி.முதன் முதலில் அவளைப் பார்த்தபோது முகத்தில் தெரிந்த குழந்தை தனம் தற்போது மீண்டு இருப்பதாக தோன்றியது அவனுக்கு.அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள் சுமித்ரா.அப்போது அவளது கண்களில் தெரிந்த நேசத்தைக் கண்டு பிருத்திவிக்கு ஆச்சிரியமாக போனது.அவளது கண்களே அவன் மீது அவள் கொண்ட நேசத்தை பறைசாற்றின அதில் பிருத்திவிக்கு சற்று கர்வமும் உண்டாயிற்று.

பிருத்திவியின் அருகில் அமர்ந்த சுமித்ரா அவனை ஒரு முறை பார்த்துவிட்டு திரும்பி மற்றவர்களை பார்க்கும் சாக்கில் பிருத்திவியின் கைகளை லேசாக கிள்ளி வைக்க அதில் சுயத்திற்கு வந்தவன்.அவளை முறைக்க முயன்று தோற்று போனான்.இருவரும் திருமண சடங்குகளை செய்ய,அவர்களை ஆனந்த கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தான் சூர்யா.

“நீ என்னைக் கூட இவ்வளவு சைட் அடிச்சது இல்லை…..”என்று கிண்டல் போல அனிதா கூற,அவளை முறைத்த சூர்யா,

“போடி…நானே இப்ப தான் நண்பன் முகம் மகிழ்ச்சியா இருக்குனு பார்க்குறேன்…வந்துட்டா கிண்டல் பண்ண…”என்று கூறிவிட்டு மீண்டும் பிருத்திவியை நோக்கினான்.அவனோ ஐயர் கூறும் மந்திரங்களை கவனமாக உரைப்பதும் அவ்வபோது சுமித்ராவை கவனிப்பதுமாக இருந்தான்.

சக்கரவர்த்திக்கும்,நல்லசிவத்திற்கும் கேட்கவே வேண்டாம் தங்கள் நண்பர்களின் பிள்ளைகள் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் அவர்களது அகமும்,முகமும் மலர்ந்து போனது.இருவரும் நன்றாக இருக்க வேண்டும் இரு நல்ல உள்ளங்களும் கடவுளை வேண்டிக் கொண்டனர்.

அனைவரின் ஆசியுடன் மங்கள நாணனை சுமித்ராவின் கழுத்தில் பூட்டி அவனை தனது சரிபாதியாக்கிக் கொண்டான் பிருத்திவி.சுமித்ராவும் தன்னவன் கைகளால் தாலி வாங்கிய மகிழ்ச்சியில் அகம் மகிழ்ந்து போய் இருந்தாள்.ஐயர் பிருத்திவியின் கைகளில் குங்குமத்தைக் கொடுத்து சுமித்ராவின் நெற்றியில் வைக்கும் படி பணிய அவனும் அவளது தோள்களில் சுற்றி வந்து வைக்க சுமித்ரா அறியாமலே அவளது கண்கள் கலங்கியது அதை கவனித்த பிருத்திவி,அவளது கன்னத்தை பற்றி திருப்பி,

“ப்ச்…இப்ப அழலாமா…நான் இருக்கேன் உனக்கு…அதே போல நீ தான் எனக்கு…”என்று கூறி அவளது நெற்றியில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தான்.அதில் அவளது உடல் முழுவதும் சிலிர்த்து அடங்கியது.பிருத்திவியோ அருகில் உள்ளவர்கள் யாரையும் கருத்தில் கொள்ளாமல் அவளது கன்னத்தில் வழிந்த விழிநீரை தொடைத்தபடி இருக்க சுற்றம் உணர்ந்த சுமித்ராவிற்கு தான் சற்று சங்கடமாகி போனது அவள் அவனது கரங்களை விலக்கப் பார்க்க,அவனோ,

“ப்ச்…இப்போ என்ன…”என்று கோபமாக கேட்டான்.கண்களால் சுற்று புறத்தை காட்டினாள் சுமித்ரா.அவளது பார்வை மொழியில் புன்னகைத்தவன் அவளை விட்டு பார்வையை திருப்பினான்.

அவனின் எதிரே சூர்யா அதிர்ந்த சிலை போல நிற்க மற்றவர்கள் இங்கு எதுவும் நடவாதது போல இருந்தனர்.அதிர்ச்சியில் உறைந்திருந்த நண்பனை பிடித்து இழுக்க,அதில் சுயத்திற்கு வந்த சூர்யா,அப்போது பிருத்திவியை பார்த்து,

“நீயாடா இது…”என்பது போல ஒரு லுக் விட்டுக் கொண்டு இருக்க,பிருத்திவியோ அசராமல்,

“இதை எல்லாம் கண்டுக்காத மச்சி…”என்று அவன் காதுகளில் கூறிவிட்டு கண்ணடித்தான்.

“டேய் நல்லவனே நீ நடத்துடா…நீ நடத்து…”என்று மனதார வாழ்த்திவிட்டு நகர்ந்தான்.

அதன் பின் அனைவரும் மதிய உணவை உண்டுவிட்டு சென்னை நோக்கி பயணம் புரிந்தனர்.அங்கே பிருத்திவியின் பூர்வீக வீட்டில் விளக்கு ஏற்றி விட்டு சற்று நேரம் இருந்தவர்கள் பின் பிருத்திவி தற்போது தங்கி இருக்கும் வீட்டிற்கு மணமக்களை அழைத்து வந்து விட்டு சென்றனர்.நல்லசிவத்திற்கு சுமித்ராவை பிரிவது சற்று கடினமாகவே இருந்தது.இருந்தும் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளிடமிருந்து விடைப்பெற்றார்.

சுமித்ராவுமே உணர்ச்சிவசபட்டப்படி இருக்க பிருத்திவி தான் அவளை தேற்றும் படி ஆனது.அனைவரும் மணமக்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு கிளம்பி சென்றனர்.அந்த சிறிய வீட்டில் இருவர் மட்டுமே பிருத்திவியின் தோளில் சாய்ந்தபடி இருந்த சுமித்ரா அவனிடம் இருந்து விலக நினைக்க,அவனது பிடி மேலும்  இறுகியது.இதுவரை இருந்த அணைப்பில் இருந்து இது வேறுபட சுமித்ரா தயக்கத்துடன் அவனை ஏறிட அவனோ விட்டத்தை வெறித்தப்படி ஏதோ யோசனை செய்து கொண்டு இருந்தான்.

“தேவா…”என்று சுமித்ரா அழைத்தது அவனுக்கு கேட்டாவாறே தெரியவில்லை.அவனது கன்னங்களை மெல்ல தட்ட அதில் சுயத்திற்கு வந்தவன் தன் மார்பில் சாய்ந்தபடி இருந்த மனைவியைக் கண்டு புன்னகைத்தவாரே,

“என்னடா…”என்று கணிவாக கேட்க,அவளோ அணைப்பில் இருந்து விடுபட முயல அவளை வேகமாக மீண்டும் அணைத்தவன்,

“இப்ப எதுக்கு எழற…இப்படியே இரு…”என்று கூற,தன் தலையை குனிந்தவரே ஒற்றை விரலை தூக்கி காட்டினாள்,அவளது பாவனையில் புன்னகைத்தவன்,அவளை விட்டான்.

இருவருக்குள்ளும் நெஞ்சு முட்டும் அளவிற்கு நேசம் இருந்த பொழுதிலும் அதனை வாய் மொழியாய் கூறுவதை விட உணர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தனர்.நேசத்தை பகிர்ந்து,உணர்வதில் இருவரும் வெற்றி காண்பார்களா?இல்லை தோற்று போவார்களா??என்பதை காலம் தான் கூற வேண்டும்.

Advertisement