Advertisement

உன்னில் உணர்ந்தேன் காதலை 10

சுமித்ரா சென்ற திசையே பார்த்துக் கொண்டு நின்ற பிருத்திவிக்கு ஆற்றாமை,கோபம் இரண்டும் ஒருங்கே வந்தது.நான் என்ன சொல்லவரேனு நின்னு கூட கேட்கமாட்டாலாமா இவ…அப்படி என்ன இவளுக்கு என் மேல கோபம்…என்று மனதில் சுமித்ராவை திட்டினான்.இதே பழைய பிருத்தவியாக இருந்தாள் சரிதான் போடி என்று சென்றிருப்பான்.ஆனால் இன்று அவ்வாறு செல்லமுடியாமல் ஏதோ ஒன்று அவனை தடுக்க அவளிடம் பேசாமல் இன்று விடுவதாய் இல்லை என்று தனக்குள் சொல்லிக் கொண்டு சுமித்ரா வேலை செய்யும் தொழிற்சாலைக்கு வந்துவிட்டான்.

சுமித்ராவிற்கு நல்லசிவம் எதற்காக அழைத்திருப்பார் என்ற யோசனை அதே யோசனையுடன் அவரது அலுவலக அறைக்கு வந்தவள்,அனுமதிக் கேட்டு உள்ளே செல்ல அங்கே நல்லசிவத்துடன் பேசிக் கொண்டிருந்த பிருத்திவியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துவிட்டாள்.அவள் அதிர்ச்சி அடைந்தது சில கணங்களே பின் பிருத்திவியின் மீது கோபம் கட்டுக் கடங்காமல் வந்தது.தான் என்ன இவனிடம் பேசிவிட்டு வந்தேன் இவன்  செய்து கொண்டிருக்கும் வேலை என்ன என்று மனது அவனை திட்டினாலும் கண்கள் அவனை முறைக்க தவரவில்லை.

சுமித்ரா வந்ததிலிருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிருத்திவிக்கு அவளது முகத்தில் வந்த அதிர்ச்சி,கோபம் என்று பல பாவனைகளை கண்டு ஒருநிமிடம் அசந்துவிட்டான்.இவளுக்கு கோபப்பட கூட தெரியுமா…எம்மா எவ்வளவு கோபம் வருது…என்று மனதிற்குள் நினைத்தான்.ஏனென்றால் அவன் கல்லூரியில் பார்த்த சுமித்ரா வேறு இப்போது பார்த்துக் கொண்டு இருக்கும் சுமித்ரா வேறு.முன்பு அனைத்திற்கும் பயந்து கலங்கும் கண்கள் இன்று ரௌத்திரத்தை பூசியிருந்தது.நடை,உடை பாவனை என்று அனைத்திலும் ஒரு நிமிர்வு அதுவே பிருத்திவியை அவளின் பால் இழுத்து வந்திருந்தது.

இருவரையும் தன் கூர்மையான விழிகளால் கூர்ந்தபடியே இருந்த நல்லசிவம் இருவரின் பார்வை யுத்ததை கலைக்கும் விதமாக தன் தொண்டையை கனைத்து தன் இருப்பை இருவருக்கும் உணர்த்தினார்.நல்லசிவத்தின் கனைப்பு சத்ததில் இருவரும் நிகழ்வுக்கு வந்தனர்.

“அங்கிள் எதுக்கு என்னை வர சொன்னீங்க….”என்று ஒன்றும் நடவாதவள் போல் சுமித்ரா கேட்க,பிருத்திவியோ,

“அடிப்பாவீ…எப்படி ஒண்ணுமே நடக்காத மாதிரி நடிக்கிறா…”என்று மனதில் நினைத்தபடி அவளை பார்த்துக் கொண்டு இருக்க,சுமித்ராவோ அவனை பார்வை உணர்ந்தும் பார்பதை தவிர்த்தாள்.அவளுக்கு உள்ளுக்குள் பயமாக இருந்தது எங்கே நல்லசிவம் அவளை தவறாக நினைத்துவிடுவாரோ என்று.அதனாலே தனது பார்வையை பிருத்திவியின் புறம் திருப்பவில்லை.

“இந்த தம்பியை உனக்கு தெரியுமா மா….”என்று சுமித்ராவிடம் கேட்டார் நல்லசிவம்.சுமித்ராவோ திரும்பி பிருத்திவியை பார்க்க,அவனும் இவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.அவனது கண்களோ எங்கே இப்போது தெரியாது என்று கூறு பார்ப்போம் என்னும் விதாமக இருந்தது.அவனது பார்வையின் அர்த்ததை உணர்ந்தவளும் தன் பல்லை கடித்தபடி நல்லசிவத்திடம் திரும்பி,

“தெரியும் அங்கிள்…என்னோட கூட படிச்சவங்க….”என்று கூறினாள்.

“நான் தான் சொன்னே சார்…சுமித்ராவுக்கு என்னை தெரியும்னு….”என்று கூறினான் பிருத்திவி.அவனது பதிலை அமோமிப்பதாக தலையசைத்தவர்,மீண்டும் சுமித்ராவிடம் திரும்பி,

“இவரு உன்னை தான் பார்க்க வந்திருக்காரு….உன்கிட்ட ஏதோ பேசனும்மாம்…”என்று கூறிவிட்டு அவளை காண,சுமித்ராவும்,

“சரி அங்கிள்….ஆனா இப்ப எனக்கு வேலையிருக்கு…அதை முடிச்சிட்டு மதியம் தான் வர முடியும்…”என்று கூற,பிருத்திவி,

“ஓகே சார்…நோ பிராபிளம்…நான் வெயிட் பண்றேன்…”என்றவன் நல்லசிவத்திடம் கைகுலுக்கிவிட்டு விடைபெற்றான்.அவன் தனக்காக காத்திருக்கேன் என்று கூறியது சுமித்ராவின் மனதிற்கு கஷ்டமாக இருந்ததது.தான் இவ்வளவு பேசிய பின்னும் அவனது இந்த பொறுமையான அணுகுமுறை மனதில் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது.அவள் அதே நினைவில் நிற்க,

“என்னம்மா நிஜமாவே இந்த பையனை உனக்கு தெரியுமா…”என்று நல்லசிவம் அவளையும் ஆராயும் பார்வை பார்த்தபடி கேட்க,

“தெரியும் அங்கிள்…என்கூட படிச்சவரு தான்…என்னோட நண்பரும் கூட….இப்ப என்னோட தோழி கல்யாணத்திக்கு போயிருந்த போது பார்த்தேன்…”என்று அவசரமாக கூறியவள்,

“என்கிட்ட பேசனும்னு அப்பவே கேட்டார்…எனக்கு தான் நேரம் இல்லை…அதான் இந்த பக்கம் ஒரு வேலையா வருவேன் அப்ப பாரக்கலாம்னு சொன்னார்…அதான்…”என்று அவருக்கு விளக்கும் பொருட்டு வேகமாக கூற,அவளது பதட்டம் எதனால் என்று புரிந்து கொண்ட நல்லசிவமும்,

“ம்ம்…உங்க அப்பா இருந்தா நான் இதெல்லாம் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது…அவனும் இல்லை…நீயும் என்னோட பாதுகாப்புல இருக்க..அதான் கேட்க வேண்டியதா இருக்குமா…”என்று அவரும் தன்னிலையை கூறினார்.

“அய்யோ அங்கிள்…நான் உங்களை தப்பால்லாம் நினைக்கல….”என்று அவசரமாக கூற,அவளது பதட்டத்தைக் கண்டு சிரித்தவர்,

“எனக்கும் தெரியும்மா…இருந்தாலும் சொல்லரது என்னோட கடமை…”என்றவர் மேலும்,

“நீ போய் உன் வேலை எல்லாம் முடிச்சிட்டு கிளம்பு…எங்க போறதா இருந்தாலும் போயிட்டு சீக்கிரம் வந்திடு…எனக்கு எங்க இருக்கனு சொல்லிடு…புரியுதா…”என்றார் ஒரு தந்தையை போல கண்டிக்கும் குரலில்.சுமித்ராவும் அவர் எதற்கு கூறுகிறார் என்று புரிந்தவள் சரி என்பதாக கூறிவிட்டு தன் இருக்கைக்கு வந்தாள்.

தன் இருக்கையில் அமர்ந்த சுமித்ரா எல்லாம் இவனால வந்தது என்று தன்னால் முடிந்தமட்டும் பிருத்திவியை திட்டிவிட்டு தன் வேலையில் ஆழ்ந்தாள்.அப்படி என்ன தான் என்கிட்ட பேசனும் அவனுக்கு என்று மனதில் கேள்வி எழும்பி கொண்டு தான் இருந்தது முயன்று அதனை ஒதுக்கி வைத்து முடிந்தளவு சீக்கிரம் தன் வேலைகளை முடித்துவிட்டு மதியத்திற்கு விடுப்பும் கொடுத்துவிட்டு வந்தாள்.

நல்லசிவத்தின் தொழிற்சாலையில் இருந்து வெளி வந்த பிருத்திவிக்கு கோபம் தான் என்னை தவிர்க்கவே வேலை இருப்பதாக கூறுகிறாள் என்று நினைத்தவனுக்கு சோர்வு தான் மிஞ்சியது.சுமித்ராவை சீக்கிரம் பார்க்கவேண்டும் என்று காலை எதுவும் உண்ணாமல் அவளுக்காக காத்திருந்தான் அவளோ அவனை ஒரு பொருட்டாக மதிக்கமால் சென்றதுமட்டும் இல்லாமல் இப்போது மதியம் தான் பார்க்முடியும் என்று கூறுகிறாளே என்று கோபம் தான் வந்தது.இவ்வளவு தன்னை தவிர்த்த பிறகும் நான் ஏன் இவளின் பின்னே செல்கிறேன் என்று மனதில் பட்டிமன்றம் நடத்தியபடி இருந்தான் பிருத்திவி.

ஊட்டியின் குளிர்ச்சி அவனுக்கு குளிரை தருவதற்கு பதில் வெம்மையை தான் தந்தது.கோபம்,கோபம் எதையாவது எடுத்து வீசும் ஆவேசம் என்று மனதில் ஒரு சூறாவேளி சுழன்று கொண்டிருக்க பிருத்திவிக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.தன்முன்னே யாரோ வந்து நின்ற அரவம் கூட உணராமல் ஏதோ யோசனையில் இருந்தான்.

தன் வேலைகளை முடித்துவிட்டு வெளியில் வந்த சுமித்ராவிற்கு பிருத்திவி எங்கு இருப்பான் என்று கேட்காமல் விட்டுவிட்டோம் என்பதே அப்போது தான் நியாபகத்திற்கு வந்ததது.எங்கு இருக்கிறான் என்று அழைத்து பேசலாம் என்று நினைத்தால் அவனது நம்பரும் இல்லை.இப்போது என்ன செய்வது என்று யோசனை செய்தவாறே தன் தொழிற்சாலையில் இருந்து வெளியில் வந்தவள்,தொழிற்சாலையின் எதிரே இருந்த சிறிய மரத்தின் கீழ் பிருத்திவி கண்டு அவனை நோக்கி சென்றாள்.

பிருத்திவி ஏதோ யோசனையில் இருப்பது அவனது முகமே காட்டிக் கொடுத்தது.தனக்காக இவ்வளவு தூரம் வந்து இப்போது தனக்காக இவ்வளவு நேரம் காத்திருப்பவனைக் கண்டு ஆச்சரியம் மேலோங்க அவனின் அருகில் வந்த சுமித்ரா அவனது தோள்கைளை தொட,அதில் உணர்வு பெற்றவனுக்கு அப்போது தான் தன் முன்னே சுமித்ரா நிற்பது புரிய,

“ஹாய்…”என்றான் சோர்வாக.காலையில் இருந்த மலர்ச்சி இப்போது இல்லை ஏதோ போல் இருந்தான்.அதுவே சுமித்ராவிற்கு ஏதோ போல் இருந்தது.

“சாரி..எனக்கு நிஜமாவே வேலை அதான் மதியம் பேசலாம்னு சொன்னேன்…”என்று கூற,பிருத்திவியின் முகத்தில் சின்ன புன்னகை கீற்று ஒன்று தோன்றி மறைந்தது.

“ம்ம்….”என்று கூறியவன்,அவளையே பார்த்தபடி இருக்க,சுமித்ராவிற்கு தான் அவனது பார்வையை எதிர் கொள்ள முடியாமல் வேறு புறம் திருப்ப வேண்டியதாயிற்று.அவளாக எதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்த பிருத்திவிக்கு ஏமாற்றமே மிஞ்சியது,இதில் பசி வேறு உயிர் போக,

“எனக்கு பசிக்குது சுமி….காலையிலேந்து சாப்பிடல…”என்று சிறுபிள்ளை போல கூற,சுமித்ராவிற்கு சர்வமும் ஒடுங்கி போனது,

“என்ன பிருத்திவி…ஏன் சாப்பிடாம இருந்தீங்க…முதல்ல வாங்க சாப்பிடுங்க….”என்று அவனது கையை பிடித்து அழைத்து சென்றாள்.பிருத்திவியும் கீ கொடுத்த பொம்மை போல் அவளின் பின்னே சென்றான்.அவனுக்கு சுமித்ரா தன் கைகளை பிடித்தது எல்லாம் தெரியவில்லை ஏதோ தாய் தன் பிள்ளை கையை பிடித்து அழைத்து செல்வது போல் இருந்தது.

சிறிது தூரம் நடை பயணம் பிருத்திவி பேசவில்லை அவனுக்கும் சேர்த்து வைத்து சுமித்ரா தான் பேசினாள்,

“அப்படி என்ன சாப்பிடாம…உங்களுக்கு என்கிட்ட பேசனும்…ரொம்ப பிடிவாதம்…”என்று திட்டிக்கொண்டே வர,பிருத்திவியின் முகத்தில் மலர்ந்த புன்னைகை.தன்னையும் உரிமையாய் திட்ட ஒரு ஜீவன் இருக்கிறது என்று நினைத்தவனுக்கு மனதின் சுமை நீங்குவது போல் ஒரு உணர்வு.சூர்யாவும் இதே போல் தான் உரிமையாக திட்டவான்,ஏன் சிலநேரங்களில் தன்னை அடித்தும் இருக்கிறான் தான் அப்போது எல்லாம் மனது இவ்வளவு லேசாக உணர்ந்தது இல்லை ஆனால் இப்போது சுமித்ரா திட்டும் போது சற்று உரிமை கூடுதலாக இருப்பது போல் இருந்தது.

தான் மட்டும் பேசிக் கொண்டே வர பிருத்திவியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக நடையை நிறுத்தி திரும்பி பார்க்க,அவனோ அவளையே பார்த்தபடி வர,

“நான் இவ்வளவு திட்டுறேன்…கொஞ்சம் கூட உங்களுக்கு கோபம் வரலையா…இப்படி சிரிச்சிக்கிட்டு வரீங்க…”என்று கேட்க,அதே சிரித்த முகத்துடன்,

“என்னையும் உரிமையா திட்ட ஆள் இருக்கும் போது நான் ஏன் கோப படனும் எனக்கு சந்தோஷமா இருக்கு….”என்று கூற,சுமித்ராவோ இவன் என்ன லூசா என்னும் விதமாக பார்த்தாள்.அவளது பார்வை உணர்ந்தவன்,

“பசிக்குது சுமி…நிஜமா நிக்கக்கூட முடியலை…”என்று கூற,

“அச்சோ வாங்க…பக்கத்தில தான் கடை இருக்கு…”என்று முன்னே நடக்க,பிருத்திவியோ அதே இடத்தில் இருந்தான்.முதலில் சிறிது தூரம் நடந்தவள் பின் தான் பிருத்திவி வராத்தைக் கண்டு அவனிடம் வேகமாக வந்து,

“என்ன பிருத்திவி..நடக்க முடியலையா…”என்று தவிப்பாக கேட்க,அவனோ இல்லை என்பதாக தலையசைத்தான்,

“பின்ன என்னாச்சு பிருத்திவி…ஏன் நின்னுட்டீங்க…ரொம்ப முடியலையா…இருங்க நான் அங்கிளுக்கு போன் போடுறேன்…”என்று கூறிவிட்டு தன் கைபேசியை எடுக்க போக தடுத்தவன்,

“எனக்கு ஒண்ணுமில்ல சுமி…நீ முதல்ல கூட்டிட்டு போன மாதிரி என் கையை பிடிச்சே கூட்டிட்டு போ….அப்ப தான் வருவேன்…”என்று பிடிவாத குரலில் கூற,அவனை முறைத்துவிட்டு,

“உங்களுக்கு பசிக்குதுனா வாங்க…இல்லைனா இங்கேயே இருங்க…”என்று விட்டு அவள் முன்னே நடக்க,பிருத்திவியும் பிடிவாதத்துடன் அதே இடத்தில் நின்றிருந்தான்.சிறிது தூரம் சென்றவள் அவன் பிடிவாதமாக நிற்பதைக் கண்டு,

“உங்களுக்கு ரொம்ப கொழுப்பு…சாப்பிடாம இருக்கீங்கலேனு பாவம் பார்த்தா…நீங்க ரொம்ப தான் பண்ணுறீங்க….”என்று திட்டியபடியே அவனது கைகளை பிடித்து உணவகத்திற்கு அழைத்து வந்தாள்.இருவரும் உணவிற்கு கூறிவிட்டு அமர்ந்திருக்க,அப்போதும் சுமித்ரா அவனை முறைத்தபடி தன் வாயிற்குள் ஏதோ முணுமுணுத்தபடி இருந்தாள்.

“நீ என்னை சத்தமாவே திட்டலாம் சுமி தப்பில்ல…”என்று பிருத்திவி குறுநகையுடன் கூற,சுமித்ரா பல்லை கடித்தபடி அமர்ந்து இருந்தாள்.சிறிது நேரத்தில் அவர்கள் சொன்ன உணவு வரவும்.இருவரும் உண்டனர்.பிருத்திவி உண்பதை பார்த்தவள்,

“இவ்வளவு பசி இருக்கரவர்…ஏன் சாப்பிடாம இருந்தீங்க…”என்று கேட்க,அவளதை பேச்சை கையுர்த்தி தடுத்த பிருத்திவி,

“முதல்ல சாப்பிடலாம்…அப்புறம் சண்டை போடலாம்…”என்று கூற,தன்னையும் மீறி சுமித்ரா சிரித்துவிட்டாள்.

வெகு நாட்களுக்கு பிறகு மனம் நிறைந்த புன்னகை உணவுடன் சிரித்தால் உணவு தலைக்கேற புரையேறியது அவளுக்கு,அதனால் இருமல் ஏற்பட வேகமாக அவளது தலையை தட்டிய பிருத்திவி,

“ஏய் ஒழுங்கா சிரிக்காம சாப்பிடு…அப்புறம் நாம பேசலாம்,சண்டை போடலாம்…”என்று சற்று கடுமையாக கூற,இவளும் தலையாட்டிவிட்டு தன் உணவை விழுங்கினாள்.வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் வயிறும் மனதும் நிறைய உண்டனர்.உண்ட பின் பிருத்திவி,

“இங்க பக்கத்துல ஏதாவது சுற்றுலா தளம் இருக்குதா சுமி….அங்க போகலாம்…நீ தான் என்னை உன் வீட்டுக்கு கூட கூப்பிட மாட்ட….”என்று காலை அவள் தன்னை வீட்டுக்கு கூப்பிடாததை கூற,அவள் அதற்கு பதில் கூறாமல் பக்கத்தில் ஒரு சிறிய நீர் வீழ்ச்சியிடன் கூடிய பூங்கா உள்ளது அங்கு போகலாம் என்று கூறி அழைத்து சென்றாள்.

மாலை நெருங்கும் நேரம் சூர்யன் மறைந்து கொண்டிருக்க அதன் ஒளி அங்கே நீர்வீழ்ச்சியில் பட்டு அழகிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுத்தது.நீர்வீழ்ச்சியின் அருகே சிறிய பூங்கா இருந்தது.அங்கு சிலர் குழந்தைகளுடன் அந்த மாலை நேரத்தை ரசித்தபடி அமரந்து இருந்தனர்.இருவரும் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஒரு கல் பெஞ்சில் அமர்ந்து எதிரே தெரிந்த நீர் வீழ்ச்சியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

இருவரும் பேச வேண்டும் என்று வந்து யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என்று யோசனை செய்தபடி அமர்ந்திருந்தனர்.பிருத்திவியின் முகம் அவ்வவபோது ஏதோ யோசனைக்கு சென்று பின் நடப்புக்கு மீள்வது போல் இருந்தது.சுமித்ராவிற்கோ ஏற்கனவே அவனை காயப்படும் படி பேசிவிட்டோம் அதனால் அவனே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று அவனை பார்ப்பதும் பின் நீர்வீழ்ச்சியை பார்ப்பதுமாக இருந்தாள்.சிறிது நேரம் அங்கு மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது.பிருத்திவி அதே நிலையில் இருப்பதைக் கண்ட சுமித்ராவிற்கு நேரம் ஆவது உணர்ந்து,

“ஏதோ பேசனும்னு சொன்னீங்க…என்ன பேசனும் சொல்லுங்க பிருத்திவி…எனக்கு நேரம் ஆகுது…”என்று கூற,அதுவரை அமைதியாக இருந்தவன் அவளை திரும்பி பார்த்து,

“நீ ஏன் சுமி என்னை உன் வீட்டுக்கு கூட கூப்பிட மாட்டேங்குற…அந்தளவுக்கு நான் உனக்கு வேண்டாதவன் ஆகிட்டேனா…”என்று கேட்க,சுமித்ராவும் பொறுமையாக,

“பிருத்திவி வீட்ல நான் மட்டும் தான் இருக்கேன்…இப்ப உங்கள நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போய் பேசினா….கண்டிப்பா அக்கம்பக்கத்தில உள்ளவங்க ஒருமாதிரி பேச ஆரம்பிப்பாங்க….எனக்கு உங்கள பத்தி தெரியும் ஆனா மத்தவங்க கண்ணுக்கு வேற மாதிரி தான் தெரியும்….நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கனு நினைக்கிறேன்….”என்று விளக்கம் கூற,பிருத்திவியும்,

“சாரி…சாரிமா….நான் இதை யோசிக்கல….ஏன் என்னை வீட்டுக்கு கூட கூப்பிடாம ரோட்டுல நிக்கவச்சுட்டேனு கோபம்…அதான் அப்படி கேட்டுடேன்…சாரி நான் யோசிருக்கனும்….”என்று மன்னிப்பை வேண்ட,அவனை கண்டு மென்மையாக புன்னகைத்தவள்,

“நீங்க மன்னிப்பு கேட்கனும் அவசியம் இல்லை பிருத்திவி….என் சூழ்நிலை அப்படி…ப்ச் விடுங்க…நீங்க சொல்லுங்க…”என்று கூற,

“தனிமை ரொம்ப கொடுமை தான் இல்ல சுமி…”என்று அவள் கண்களை பார்த்தபடி கேட்க,அவள் தன்னையும் மீறி கலங்கும் கண்களை மறைக்க முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.அவளது கலக்கத்தை கண்டு கொண்டவன் வேகமாக அவளது முகத்தை தன் புறம் திருப்பி,

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ சுமி….”என்றான் உணர்ச்சி பெருக்கோடு.

Advertisement