Advertisement

உன்னில் உணர்தேன் காதலை 15

சுமித்ரா பிருத்திவி திருமணம் முடிந்து ஒரு மாதம்  முடிந்திருந்தது.பிருத்திவி தனது புதிய புராஜெக்டில் கவனமாகிவிட்டான்.ஆம் பிருத்திவியின் அயராத உழைப்பின் பலன் அவனுக்கு கிடைத்துவிட்டது.அவன் மிகவும் எதிர்ப்பார்த்த ஜே.பி குரூப் கம்பெனி பிருத்திவியின் உழைப்பை அங்கீகரித்து அவனுக்கு ஒப்புதல் கொடுத்தது. சுமித்ரா அவனது வாழ்வில் வந்த பிறகு அனைத்தும் வண்ணமயமாக மாறியது போல் இருந்தது பிருத்திவிக்கு.எப்போதும் ஏதோ இறுக்கத்துடனே வலம் வருபவன் இப்போதெல்லாம் புன்னகை முகமாக வலம் வருகிறான்.சூர்யா கூட சில நேரங்களில்,

“என்ன மச்சான்…தங்கச்சி வந்ததுக்கு அப்புறம் உன் முகமே மலர்ந்து போச்சு…”என்று கிண்டல் செய்வான்.

“ஆமாம்..மச்சி…என் மித்து வந்ததுக்கு அப்புறம் எல்லாம் மாறி தான் போச்சு…”என்று கண்களில் கனவு மின்ன கூறுவான்.தான் கூறியதற்கு எந்த பிகுவும் பண்ணாமல் இயல்பாக பேசும் நண்பனைக் கண்டு சூர்யாவிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.பிருத்திவி பல கஷ்டங்களை அனுபவித்துவிட்டான் இனி அவனது வாழ்வு நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று சூர்யா இறைவனுக்கு வேண்டுதல் வைத்தான்.

பிருத்திவிக்குமே அவனது மாற்றம் சற்று வியப்பை தந்தது உண்மை தான்.தானா இவ்வளவு மாறிவிட்டோம் என்று கூட நினைத்துவிட்டான்.இவை அனைத்திற்கும் காரணம் சுமித்ரா தான் அவனுக்கு நன்கு தெரியும்.தனது மனைவியாக அவள் வந்த பிறகு தான் அவனுக்கு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணமே உருவானது.இன்றளவும் இருவரும் உடலால் ஒன்றுபடவில்லை என்றாலும் மனதால் மிகவும் நெருங்கி தான் இருந்தனர்.

காலை அவனை எழுப்புவதில் இருந்து,அவனுக்கு தேவையான அனைத்தும் செய்பவள் அவனது மனைவியே.சிலநேரங்களில் ஆசையாக செய்பவள்,பல நேரங்களில் இவன் செய்யும் குறும்பால்,

“என்னை ரொம்ப படுத்திரீங்க தேவா நீங்க…”என்று திட்டவும் செய்வாள். அதற்கு பிருத்திவியும்,

“நான் என்னடி செய்வேன் நீ தான் என்னை இப்படி மயக்கி வச்சிருக்க…”என்று கூறி அவளது இடையில் முகத்தால் குறுகுறுப்பு மூட்டி அவளை சீண்டுவான். சில நேரங்களில் நல்ல நண்பர்கள் போல இருப்பார்கள்,சில நேரங்களில் காதலர்கள் போல் தோள் சாய்ந்து கதை பேசுவார்கள்,சில நேரங்களில் விரோதிகளை போல சண்டைகளும் போடுவார்கள்.இப்படி அவனது வாழ்வில் பல பரிமாணங்களை கற்றுக் கொடுத்தாள் அவனது ஆரூயிர் மனைவி.

சுமித்ராவும்  அதே நேரம் பிருத்திவியை பற்றி தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.பிருத்திவி என்பவன் அவளது வாழ்வில் வந்த பிறகு அனைத்தும் மாறி போனது.அதுவரை ஏனோ தானோ என்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தவளுக்கு,இப்போது வாழ்வில் ஏதோ பிடிப்பு இருப்பது போன்று இருந்தது.வாழ்வின் சிறுசிறு விஷயங்களைக் கூட ரசிக்கத் தூண்டியது.பிருத்திவியுடனா வாழ்வு வண்ணமயமாக இருந்தது.

தனது சிந்தனையில் இருந்தவளை கலைத்தது அலைபேசி.பிருத்திவி தான் அழைத்திருந்தான்,

“மித்து…”என்று பிருநத்திவி குழைந்து அழைக்க,

“ம்ம்…சொல்லுங்க தேவா…”என்றாள்.

“ஓய் பொண்டாட்டி என்னடி பண்ணிக்கிட்டு இருக்க…”என்று கேட்க,

“சும்மா தான் உக்கார்ந்து இருக்கேன்…தேவா ரொம்ப போரடிக்குது…நானும் ஏதாவது வேலைக்கு போகவா…”என்று கேட்க,மறுமக்கம் மௌனம்.இப்ப மட்டும் பேச்சே இருக்காதே என்று மனதிற்குள் தன்னவனை திட்டியவள்,

“தேவா….”என்று குழைவாக அழைக்க,

“ம்ம்…இருக்கேன்…சொல்லு மித்து…”என்று சற்று காரதமாக ஒலித்தது பிருத்திவியின் குரல்,அவனுடனான ஒரு மாத வாழ்வில் பேச்சை வைத்தே அவனது மனநிலையை கணிக்க பழகியிருந்தாள்.

“இப்ப என்ன கோவம்…”என்று சிணுங்களாக கேட்க,இங்கே பிருத்திவியின் முகத்தில் இளநகை பூத்தது,இருந்தும் அதனை காட்டிக் கொள்ளாமல்,

“உன் பேச்சு அப்படி இருந்தா நான் என்ன பண்ணட்டும்…”என்றவன்,மறுமுனையில் சத்தமின்றி போகவும் மனைவி முகம் வாடியிருப்பாள் என்பதை உணர்ந்து,

“மித்து நான் உன்னை வேலைக்கு போக வேண்டாம்னு சொல்லலை….விட்டுப் போன படிப்பை முடிச்சிட்டு நல்ல வேலைக்கு போனு தான் செல்லுறேன்…”என்று மனைவிக்கு புரிய வைக்கும் எண்ணத்துடன் பொறுமையாக பேசினான்.

சுமித்ராவிற்கு பிருத்திவி கூறுவது சரியென தான் பட்டது இருந்தும் இப்போது இருக்கும் நெருக்கடியில் மேலும் அவனை நெருக்க மனதுவரவில்லை அவளுக்கு,அதனால் வேண்டாம் என்று மறுத்தாள்.ஆனால் அவளது மறுப்பு எதனால் என்று நன்கு உணர்ந்த பிருத்திவிக்கு கோபம் ,இருந்தும் அவளிடம் காட்டதான் மனது வரவில்லை அவனுக்கு.இவ்வாறு இருவருக்குள்ளும் அவ்வபோது சிறு விரிசல் விழுகிறது.கணவன்,மனைவி இருவரும் அந்த விரிசல் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வர்.அதேபோல் இப்போது சுமித்ரா,

“சரி தேவா நான் படிக்கிறேன்…”என்று கூற,பிருத்திவிக்கு முதலில் அவள் கூறியது உண்மை தானா என்று மீண்டும்,

“ஏய் மித்து நீ நிஜமா தான் சொல்லுரியா…”என்று குதுகலித்தான்.அவனது குரலே அவன் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளான் என்பதை கூற,சுமித்ராவிற்கும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

“சரி மித்து…நான் இப்பவே நம்ம காலேஜ் பிரின்சிபால் கிட்ட பேசுறேன்…”என்று உற்சாகமாக கூற,

“தேவா…தேவா இருங்க..அவசரப்படாதீங்க…நான் சொல்லுரத முழுசா கேட்டுட்டு அப்புறம் போங்க…”என்று கூற,

“என்னடி சொல்லு…”என்றான் இவனும்.

“தேவா…இப்ப எப்படியும் எனக்கு சீட் கிடைக்காது வருஷம் ஆரம்பிச்சு பாதி முடிய போகுது…எப்படியும் அடுத்த வருஷத்துக்கு தான் எனக்கு கிடைக்கும்….அதுக்குள்ள உங்க புராஜக்ட் வேலையும் முடிஞ்சிடும்…அதுக்கு அப்புறம் நான் படிக்க போறேன்…”என்று கூற,மனைவி தனக்கு இந்த நேரத்தில் நெருக்கடி குடிக்கக் கூடாது என்று நினைக்கிறாள் என்று புரிந்தவன்.இதற்கு மேல் இவளிடம் பேசினாள் கண்டிப்பாக படிக்க சம்மதிக்க மாட்டாள் என்று நினைத்து,

“சரி மித்து..உன் இஷ்டப்படியே செய்யலாம்…”என்று கூற,அவனது குரல் வேறுபட்டில் கோபமாக உள்ளானோ என்று அஞ்சியவள்,

“தேவா கோபமா…”என்று பரிதவிப்பாக கேட்க,

“ஓய் இல்லடா…எனக்கு உன்னை புரியுது…போதுமா….நீ சொல்லுற மாதிரியே செய்யலாம்…ஓகே வா…”என்று கூற,

“சரி தேவா…”என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தாள்.

இருவருக்கும் இது நாள் வரை இருந்த சிறு விரிசல் இன்று காணாமல் போனது போல் ஒரு உணர்வு.அது தந்த மனநிறைவுடன் இருவரும் அவரவர் பணிகளை தொடர்ந்தனர்.

வாழ்க்கை தெளிந்த நீரோடைப் போல் சென்றது இருவருக்கும்.வார நாட்கள் முழுவதும் தனது வேலையில் கவனத்தை வைத்திருப்பவன்,விடுமுறை நாட்கள் வந்துவிட்டாள் மனைவியுடன் தான் பொழுதைக் கழிப்பான்.சில சமயங்களில் சூர்யா,அனிதா தம்பதியரும் இவர்களுடன் சேர்ந்து கொள்வர்.இந்நிலையில் ஜே.பி குரூப் புராஜெக்ட் முடிவடையும் தருவாயில் இருந்தது.அதற்கான இறுதி கட்ட அறிக்கை சமர்பிக்க பிருத்திவி,சூர்யா இருவரும் டெல்லி செல்ல வேண்டியிருந்தது.பிருத்திவிக்கு மனைவியை பிரிந்து செல்வதில் மனதிற்குள் சற்று சுணக்கம் அதனால் அவன் சுமித்ராவை பாடாய் படித்தினான்.ஒருகட்டத்தில் அவனது அலும்பு தாங்க முடியாமல் சுமித்ரா,

“அய்யோ…போதும் தேவா…நான் இவ்வளவு நாள் தனியா தான் இருந்தேன்…அதே போல இப்பவும் இருக்க மாட்டேனா…இவ்வளவு பயப்படுரீங்க…”என்று கேட்க,பிருத்திவியின் முகம் கூம்பிவிட்டது.அவனது முக மாறுதளைக் கண்டவள்

“அச்சோ..சுமி உனக்கு வாய் ரொம்ப நீண்டு போச்சு…”என்று தன்னை தானே திட்டிக் கொண்டவள்.அவனது மடியில் அமர,பிருத்திவியின் கரங்கள் அவளது இடையை அழுத்தமாக பிடித்துக் கொண்டு,அவளது தோள்பட்டையில் முகத்தை வைத்து,

“இப்ப உனக்கு என்ன வந்துச்சு…”என்று கேட்டான்.அவனை சமாதானப்படுத்து பொழுதெல்லாம் மனைவி இவ்வாறு தான் செய்வாள் என்று அறிந்தவன்.இப்போது தன்னை பேசியதற்கு தான் வருந்துகிறேனோ என்று அஞ்சுகிறாள் என்று உண்ர்ந்தவன்,அவளது பின் முதுகில் தன் முகத்தை வைத்து தேய்க்க,எப்போதும் இது போல் செய்தாள் துள்ளிக் குதிப்பவள்,இன்று அவனுடன் இழைந்தாள்.மனைவியின் இழைவு பிருத்திவியின் தாபத்தைக் கூட்ட,அவனது கைகள் மனைவியின் வெற்றிடையில் பதிந்தது.

இருவருமே தங்கள் சுயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க,தன் மடியில் இருந்தவளை படுக்கையில் சரித்து அவள் மேல் சாய்ந்தவன்,மனைவியின் முகத்தைக் காண,கணவனின் தீண்டலில் முகம் செம்மை நிறம் பூண்டிருந்து.பிருத்திவியின் உதடுகள் மனைவியின் மேனியில் சிறிது சிறிதாக தன் அச்சாரத்தை பதிக்க,சுமித்ராவிற்கு  மேனி முவதும் புது ரத்தம் பாய்வது போல் உணர்ந்தவள்,தனது கைகளை அவன் மீது மாலையாய் கோர்த்தாள்,மனைவியின் மோனநிலையே அவளின் மனதை எடுத்துரைக்க,மேனியில் ஊர்ந்த அவனது உதடுகள் அவளது உதடுகளில் இளைப்பாறியது.முதல் இதழ் முத்தம் நீண்டு கொண்டே இருந்தது அதுவே இருவருக்குமான தேடலை எடுத்துரைத்தது.இருவருமே ஒருவரை ஒருவர் விடும் எண்ணம் இல்லாதவாறு பிணைந்தபடி இருந்தனர்.

இருவருமே தங்களுக்கான உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நேரம் பிருத்திவியின் அலைபேசி விடாமல் அழைக்க,அதில் முதலில் தன்னிலை பெற்ற சுமித்ரா,தன்மீது இழைந்துக் கொண்டிருந்த கணவனை எழுப்ப,அவனோ அவளது கைகளை தன் கைகளுக்குள் கொண்டு வந்து மீண்டும் தன் தேடலை தொடங்க,அழைப்பு விடாமல் வந்து கொண்டிருக்க,ஏதோ முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்த சுமித்ரா,இப்போது பலமாகவே பிருத்திவியே உலுக்க,தனது தேடல் பாதியில் தடைப்பட்ட கோபத்தில்,

“ப்ச்…என்ன மித்து…என்ன தான் உன் பிரச்சனை…”என்று கோபமாகவே கேட்க,அவளோ ,

“தேவா…அது …”என்று ஏதோ கூறவர,

“போடி…இன்னைக்கு நீ என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்…”என்று மீண்டும் அவளது உதடுகளை நோக்கி குனிய,வேகமாக தனது முகத்தை திருப்பியவள்,

“தேவா…தேவா…”என்று சற்று சத்தமாக அழைக்க,மனைவியின் குரல் மாறுதலை உணர்ந்தவன்,வேகமாக அவளிடம் இருந்து எழுந்து,கலைந்திருந்த அவளது ஆடைகளை அவள் மீது போர்த்திவிட்டு கட்டிலை விட்டு எழ,வேகமாக அவனது கைகளை பிடித்தாள் சுமித்ரா.

“சாரி…மித்து…நான்..ஏதோ…”என்று தான் ஏதோ தவறு செய்துவிட்டவன் போல் அவனது குரலே கலங்கி ஒலிக்க,சுமித்ராவிற்கு மனதிற்கு கஷ்டமாக போனது,

“ஓய் மக்கு புருஷா…நான் அதுக்கு …”என்று மேலும் கூற முடியாமல் தடுமாற,அப்போது மீண்டும் பிருத்திவியின் அலைபேசி ஒலிக்க,

“இதோ…இதோ இதுக்கு தான் உங்களை எழுப்புனேன்…”என்று கூறி தனது உடைகளை சரிசெய்தாள்.மின்னலென அவளது கைகளை பிடித்தவன்,

“அப்போ…உனக்கு ஓகே தான்….இல்ல…”என்று குறும்பாக கேட்டு வைக்க,அவனது குறும்பில் அவளது முகம் செம்மையுற,

“போங்க…போங்க….”என்று தலையணையால் மொத்தினாள்.தனது செயலால் மனைவி காயப்படவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு மனது லேசானது போல் இருந்தது.விடாமல் அலைபேசி ஒலிக்க எல்லாம் இதுவால வந்தது என்று திட்டிக் கொண்டே தனது கைபேசியை எடுக்க சூர்யா தான் அழைத்திருந்தான்,பிருத்திவி அழைப்பை ஏற்று காதில் வைக்கவுமே,

“டேய் மச்சி…எங்கடா போன…எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்…”என்று சூர்யா கத்த,

“டேய்…முதல்ல என்ன விஷயமா கால் பண்ண அத சொல்லு…”என்று இவனும் கத்தினான்.சுமித்ராவோ பிருத்திவியின் கத்தலில் நடுங்கியபடி நிற்க,சூர்யாவிற்கும் பிருத்திவியின் கோபம் புரிந்ததோ என்னவோ,

“என்ன மச்சான் கோச்சிக்கிட்டியா….பிளைட் அரை மணிநேரம் முன்னாடிய எடுக்குறாங்கடா…இப்ப தான் மெஸேஜ் வந்திருக்கு…நான் இப்ப உன் வீட்டுக்கு தான் கிளம்பிக்கிட்டு இருக்கேன்…நீயும் கிளம்புடா…”என்று கூறிவிட்டு வைத்தான்.பிருத்திவிக்கு தேவையில்லாமல் கத்திவிட்டோமோ என்று தோன்றியது.அப்போது அவனின் அருகே வந்த சுமித்ரா,

“தேவா…என்னாச்சு…”என்று நடுங்கியவாரே கேட்க,

“ப்ச்…ஒண்ணுமில்லடா…”என்று கூறியவன் பார்வை தன் மனைவியின் மீது படிந்தது,தலை கலைந்து முகம் முழுதும் செம்மை நிறமாக இருக்க,எப்போதும் சிவந்திருக்கும் இதழ்கள் இன்று மேலும் சிவந்து இருப்பதாக தெரிந்தது.அவளது தோற்றம் கணவனாக போதையை தூண்டியது,கணவனின் பார்வை உணர்ந்தவள்,

“ஏய் உதை வாங்குவீங்க….”என்று ஒற்றை விரல் காட்டி எச்சரிப்பது போல செய்ய,அவளை இழுத்து அணைத்தவன்,

“என்னடி ரொம்ப மிரட்டுற….உன்னை”என்று அவளை ஆவேசமாக அணைத்து இதழ்களில் முத்தம் பதித்து விலகியவன்,

“இப்ப நேரம் இல்லைடி…ஊருக்கு போயிட்டு வந்து உனக்கு இருக்குடி…”என்று விஷம்மாக கூறியவன் சூர்யா கூறியதை கூற,

“அச்சோ…கிளம்புங்க…கிளம்புங்க…நான் உங்களுக்கு காபி வைக்குறேன்…”என்று அவளும் பதிறியபடி சென்றாள்.அவளை பார்த்து புன்னகைத்தபடியே பிருத்திவியும் குளிக்கச் சென்றான்.சுமித்ராவிற்கு ஆயிரம் பத்திரங்கள் கூறிவிட்டு பிருத்திவி  பல கனவுகளுடன் டெல்லிக்கு புறப்பட்டான்.திரும்பும் போது அவனது கனவுகள் நினைவாகுமா இல்லை கருகுமா…என்பதை காலம் தான் கூற வேண்டும்.

Advertisement