Advertisement

இடம் 8
இரண்டு மாடிகளை கொண்ட அந்த காலத்து வீடு ஒன்று…
அதை சுற்றி அங்காங்கே சிறு செடிகளும், சில வாழை மரங்கள், சில தென்னை மரங்கள் என இருந்தது. மிக எளிமையாக கூற வேண்டுமானால் வீட்டு தோட்டம் என்று கூட சொல்லி கொள்ளலாம்… அமைதியான இடம்…
அந்த அமைதியை களைப்பது போல அந்த மாலையும் அல்லாத மதியமும் அல்லாத பொழுதில், ஒரு வயதான பெண்மணி கத்தி கொண்டு இருந்தார். இல்லை திட்டி கொண்டு இருந்தார் ஒருவரை.
அவர் சித்தம்மாள்… திட்டி கொண்டு இருந்தது. அப்படி என்றால் திட்டு வாங்குவது… அற்புதம்.
“கருவேப்பில கொழுந்து கணக்கா ஒத்த புள்ளையை பெத்தேன். அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணலாம் பாத்தா… நல்ல புள்ளைனு சொன்னீங்க… இராவோட இராவா அது எங்கையே போய்டுச்சி” என்று பல்லை கடித்து கொண்டே சொன்னவர் தொடர்ந்து, “எப்படியோ பாடுபட்டு அக்கா மவள கட்டிக்க சம்மதிக்க வைச்சா, அவக்கோட இவன் வாழற மாறியே இல்ல. அவ எங்கையோ இவன் எங்கையோனு இருக்கு. என் புள்ள வாழ்க்க இப்படி அமையனும்” என்று புலம்பினார் சித்தம்மாள்.
மேலும் அவர், “அவனுக்கு தட்டி தட்டி எப்படியோ கல்யாணம் பண்ணி வச்சா… அதையும் ஒழுங்கா வாழ முடியாம போச்சே!!” ஒரு சிறிய ஒப்பாரியை முடித்தவர், கோபத்துடன், “அப்படி உன் மவளுக்கு என்ன தாண்டி பிரச்சனை. எல்லாம் அவ விருப்பப்படி தானே நடந்தோம். அதுக்கு அப்பறமேட்டும் வீட்டை விட்டு போய், இப்படி எம் மவனை வாழ விடாம பண்ணிட்டாலே” என்று கீர்த்தியின் அன்னை அற்புதத்தை தான் மகள் என்றும் பாராமல் திட்டி கொண்டு இருந்தார் சரவண வேலின் அன்னை.
அங்கே இங்கே பார்த்து கொண்டு இருந்த நெருங்கிய உறவுகள் கூட சித்தம்மாளுக்கோ அற்புதத்துக்கோ ஒரு ஆறுதலும் கூறவில்லை. என்ன கூறுவது என்று அவர்களுக்கு தெரியவும் இல்லை.
அன்னேரம் உள்ளே வந்த சரவண வேலுக்கு அப்போது இருந்த வீட்டு சூழல் புரிந்தது. அதனால் அவன் யாரும் கேட்கும் முன்னே, “யாரும் என்ன பத்தி கவலைப்பட தேவையில்லை. அதான் நீங்க சொன்ன மாறி கல்யாணம் பண்ணிகிட்டேன் இல்ல. அதுக்கு மேல அது எனக்கும் என் பொண்டாட்டிக்கும் உள்ள பிரச்சனை. யாரும் அத பத்தி கவலை பட தேவையில்ல” என்று இதுக்கு மேல யாரும் எதுவும் பேச கூடாது என்ற தோரணையில் கூறினான். ஆனாலும் அங்கு இருந்தவர்கள் மனது அவனை பார்த்து வேதனை தான் அடைந்தது.
ஐந்து வருடமாக பெண் பார்க்கும் படலம் நடந்து இப்போது முப்பத்தி ஒரு வயதில் ஒரு சம்மந்தம் பொருந்தியது. அழகும் அறிவும் பணமும் படிப்பும் இருந்தாலும் ஏதோ தோஷம் என்ற ஒன்றை காரணம் காட்டியும், எதிர்பார்த்த அளவுக்கு படிப்பு இல்லை, சொந்த தொழில் செய்பவர்கள் வேண்டாம் மற்றும் இன்ன பிற என்று ஏதோ ஒரு காரணங்களை சொல்லி தான் நிராகரித்து இருந்தனர். அந்த பல தடைகளை தாண்டி அமைந்த பெண் தான் பவித்ரா. ஆனால்… அவளுக்கு என்னவோ தெரியவில்லை… கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு காணாமல் போய் விட்டாள். ஹ்ம்ம்… அதன் பிறகு அவன் வாழ்வில் நடந்தது எல்லாம் எதிர்பாராதது.
உள்ளே நடந்தவன் அங்கே இருந்த அற்புதத்தை பார்த்து கொண்டே பொதுவாக வீட்டினரிடம், “ப்ரியா வீட்டை விட்டு போனதுக்கு அவ செஞ்ச தப்பு தான் காரணம். அது மட்டும் தான் காரணம். அதை சொல்லி யாரும் இவங்களை திட்ட கூடாது” என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அக்கா அக்கா என்று வாய் நிறைய கூப்பிடுபவன் இப்போது அவங்க இவங்க என்று அழைப்பது அற்புதத்திற்கு தாங்க முடியவில்லை. ஆனால் என்ன செய்வது தவறு அவர் பக்கம் உள்ளது அல்லவா?!!. அவர் மீது மட்டுமல்ல அங்கு உள்ள அனைவரின் மீதும் தான் தவறு உள்ளது. ஆனால் அது அனைத்தும் இப்போது ப்ரியாவின் மீது மட்டுமே உள்ளது சரவணனின் பார்வையில்.
கலகலவென இல்லை என்றாலும் உர்ரென்று இருக்க மாட்டான் சரவண வேல். ஆனால் இப்போது எல்லாம் அப்படி தான் இருக்கிறான் உர்ரென… யாரை குறை சொல்ல…
அவன் ‘ப்ரியா செஞ்ச தப்பு’ என்றவுடன் உண்மை தெரிந்தவர்கள் அனைவருக்கும் ஒரு நிமிடம் பக்கென்று இருந்தது. அவனுக்கும் உண்மை எல்லாம் தெரிந்தால் என்ன செய்ய கூடும் என்று கணிக்க முடியவில்லை அவர்களால். அதனால் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
இங்கே சென்னையில்…
சங்கவியையும், கீர்த்தியையும் அழைத்து சென்று கீர்த்திக்கு ஒரு பரிசு பொருள் வாங்கினான் மிதுன்.
பரிசு பொருள் என்று வாங்க சென்ற போது கீர்த்திக்கு சரவணன் நியாபகம் தான் வந்தது. ஒவ்வொரு வருடமும் அவளுக்கு சரியாக பிறந்த நாள் அன்று உபயோகப்படுத்துவது போல் ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொடுத்து விடுவான். ஏன் தற்போது அவள் தன் வீட்டில் வைத்து இருக்கும் மடிக்கணினி கூட அவன் வாங்கி தந்தது தான். இப்போது அதை எல்லாம் நினைத்து பெரு மூச்சு தான் விட முடிந்தது.
எதெர்ச்சியாக கீர்த்தி, மிதுன் பக்கம் திரும்ப கவி மற்றும் மிதுன் இருவரும் சேர்ந்து பொருட்களை ஆராய்ந்து கொண்டிருந்தனர். அவர்களை நினைக்க கீர்த்திக்கு சிரிப்பு தான் வந்தது. ஒரு நேரம் அப்படி அடிச்சிக்கறாங்க… ஒரு நேரம் இப்படி ஒன்னுமண்ணா சுத்தறாங்க… இவங்கள புரிஞ்சிக்கவே முடியலையே… என்று எண்ணி கொண்டவள் அவர்கள் அருகே சென்றாள்.
“எப்படி இருக்கு கீர்த்தி??” என்று மூன்று விதமான செடிகள் இருக்கும் மூன்று வித பூந்தொட்டிகளை காட்டினர்.
கீர்த்தியும் அதை பார்த்து விட்டு ‘சூப்பர்’ என செய்கை செய்தாள்.
“நான் தான் சொன்னேன் இல்ல… இது கீர்த்திக்கு புடிக்கும்னு” என்று கெத்தாக மித்துவை பார்த்து கூறினாள் கவி.
“சரி தான்” என்ற மித்து அந்த செடிகளை தூக்கி கொண்டு பில் கவுண்டர் சென்றான்.
மேலும் இரண்டு தொட்டிகளை தூக்கி கொண்டு அவன் பின்னே சென்றாள் கவி. மித்து வைத்த தொட்டிகளின் அருகே அவள் கொண்டு வந்த இரண்டையும் வைத்தாள்.
மித்து கேள்வியாக பார்க்க, “எனக்கு தான்” என்றாள்.
“அதை ஏன் இங்கே கொண்டு வந்து வச்ச??. உனக்கு தனியா போய் பில் போட்டுக்கே” என்று அவன் கொண்டு வந்த மூன்றை மட்டும் தனியாக பிரித்தான்.
‘மறுபடியும் ஆரம்பிச்சிட்டீங்களா??’ என்று சிரிப்புடன் எண்ணி கொண்ட கீர்த்தி அந்த கடையை மீண்டும் ஒரு முறை சுற்றி பார்க்க சென்று விட்டாள்.
கவி, “ஏய் என்ன ஓவரா பண்ணற?!!. எப்படியும் எனக்கு பிறந்த நாள் அப்போ கிப்ட் வாங்கி தருவல்ல… அதுல கம்மி பண்ணிக்கோ” என்று சொன்னாள் கவி.
“ஒன்னு வாங்கறதே அதிசயம்… இதுல உனக்கு கம்மி வேற பண்ணுமா!!! ஆமா.. முதல்ல உனக்கு கிப்ட் எல்லாம் வாங்கி தருவன்னு யாரு சொன்னா??” என்று சிரிப்புடன் மித்து கேட்க, “ஹாஹா… ஹீஹீ…” என்று சிரித்தாள் கவி. அவளுக்கு தெரியாத அவனை பற்றி, இந்த இரண்டு வருடத்தில் அவளது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் மறக்காமல் வாழ்த்தி பரிசு வாங்கி தருபவனாயிற்றே!!!..
“சரி… நீ வாங்கி தரலனா பரவாயில்ல… எனக்கு கை இல்லையா??!!. நானே வாங்கிக்கறேன்” என்றவளை அவன் பார்க்கவும், “பில் மட்டும் நீ பே பண்ணிடு” என்றாள்.
அவனுடன் சிரிப்புடன் அவளுக்கும் சேர்த்தே பே செய்தான். அதற்குள் கீர்த்தியை தேடி உள்ளே சென்றாள் கவி. சும்மா அங்கு இருக்கும் பீங்கான் பொருட்களை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள் கீர்த்தி.
“எதுனா உனக்கு புடிச்சி இருக்கா கீர்த்து??. சொல்லு வாங்கிடலாம் நம்ம அடிமை அங்க பில் கவுண்டர்ல தான் இருக்கு” என்று சிரிப்புடன் கவி சொல்ல, “ஹாஹா… உங்க சண்ட ஓஞ்சதா கா??. சும்மா பாக்கலாம்னு தான் வந்தேன்” என்றாள் கீர்த்தி.
“சரி பரவாயில்ல… ஒன்னும் தப்பு இல்ல… இரண்டு கப் எடுத்துக்கலாம்” என்று இரண்டு பீங்கான் கோப்பைகளை எடுத்து கொண்டு மித்துவிடம் சென்றாள் கவி.
“மித்து… கீர்த்துக்கு இந்த கப்ஸ் பிடிச்சி இருக்காம்” என்று கொண்டு வந்து வைத்தாள். கீர்த்தியை திரும்பி பார்த்த அவனுக்கு தெரிந்து விட்டது இது யார் வேலை என்று… இருந்தாலும் எதுவும் சொல்லாமல் வாங்கி கொடுத்து விட்டான்.
அவர்களை பார்க்க பார்க்க கீர்த்திக்கு ஆச்சர்யம் தான். இரண்டு நாள் முன் சண்டை போட்டவர்களா??!! இவர்கள் என்று. அன்று ஒரு நாள் இரவு வெளியே உணவு வாங்கி வர சொன்ன போது கூட கவிக்கு வாங்கி வரவில்லை அவன். கவியும் கேட்கவில்லை அது தெரிந்ததை போல். ஆனால் இப்போது ஒன்றாக சுற்றுவது… என்று புரியாத புதிர் தான் இவர்கள் அவளுக்கு… எப்படி புரியும்??. சிறிது யோசித்து இருந்தாலும் புரிந்து இருக்கும். ஆறு மாத காலமாய் கீர்த்தியுடன் இருந்த நட்புக்கே இவ்வளவு செய்யும் மித்து, ஐந்து – ஆறு மாத அதாவது இரண்டரை வருட நட்புக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுப்பான் என்று. கீர்த்திக்கு தான் எதையும் ஆழ்ந்து யோசிக்கும் திறன் எப்போதோ போய் விட்டதே!!!. அப்படி யோசித்து இருந்தால் எப்போதோ சரவணனை பற்றி புரிந்து இருப்பாள்.
“வா கீர்த்து போகலாம்” என்று பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வந்த மித்து மற்றும் கவி கூறினர்.
“உங்களை வீட்டுல விட்டுட்டு, நான் வெளியே கிளம்பறேன். வாங்க” என்று அவனது காரை எடுத்தான் மித்து.
மித்துவின் விருப்பமான வாகனம் மகிழுந்து தான். நிறைய பேருக்கு பைக் பிடிக்க, இவனுக்கு கார் தான் பிடிக்கும். சில சமயம் யாராவது இவனிடம், “ட்ராப்பிக்கில் போகும்லாம் பைக் தான் பெஸ்ட்… கார்ல போனா எவ்ளோ நேரம் நின்னு நின்னு போக” என்று கூறினால், “பைக் போனா மட்டும் ட்ராப்பிக் சீக்கிரம் க்ளியர் ஆகிடுமா??. அந்த வெயில்ல பைக்ல நின்னு வியர்வை ஊத்தி அதும் வருத்தமா தான் இருக்கும். அதும் இல்லாம மழைலாம் வந்தா பைக்ல போறது ரொம்ப வருத்தம் தான்” என்று பைக்கின் இடையூறுகளை கூறி காரில் அந்த பிரச்சனைகள் இல்லை என்பதையும் கூறுவான் மிதுன். அப்படி ஒரு விருப்பம் கார் மீது அவனுக்கு.
அன்று மாலை சொன்ன போலவே தேவ்வும் வந்து விட்டான், மிதுன் அனுப்பிய லோகேஷனுக்கு…
கொடுப்பாள்…

Advertisement