Advertisement

இடம் 29
சரவணாவின் கேள்விக்கு எல்லாரும் அந்த சமயம் தாம் என்ன செய்து இருப்போம் என்று யோசிக்க, சண்முகமோ எந்த வித தடுமாற்றமும் இன்றி தனது பதிலை கூறினார்.
“நீ தமிழ தான் கட்டிகனும்னு நினைச்சி தான் பிரியா இல்லனா தமிழ நீ கல்யாணம் பண்ணனும்னு கேட்டேன்” என்றார் சண்முகம்.
‘நான் கேட்ட கேள்வி உங்களுக்கு புரிந்ததா?’ என்பது போல் ஒரு பார்வையை சரவணா பார்த்து வைக்க, சண்முகமே மேலும் தொடர்ந்தார், “நீ பிரியாவ கட்டிக்க நிச்சயமா சம்மதிக்க மாட்டனு தெரிஞ்சி தான் அதுல அவ பேர சேத்து உன்கிட்ட சொன்னேன். இல்லனா நீ அந்த நேரத்துல கல்யாணமே வேண்டாம்னு சொல்லி இருப்ப!” என்று எல்லாம் தெரிந்து தான் நான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார் சண்முகம்.
“ஆனா மாமா… என்னால நம்ப முடியல” என்று சரவணா, சொல்ல மற்றவர்களின் முகமும் அதையே பிரதிபலித்தது.
“சரி விடு. நீ கேட்ட கேள்விக்கே பதில் வேணும்னா… நீ பிரியாவுக்கு சரி சொல்லி இருந்தா அவளுக்கு புடிக்கலனு அப்பவே சொல்லி இருப்பேன் உன்கிட்ட… அது உன்ன வருத்தப்படுத்தும்னு தெரிஞ்சி இருந்தாலும்… ஒருத்தருக்கும் விருப்பம் இல்லாம பண்ணி வக்கற கல்யாணத்துல நிறைய மனதாங்கல்கள் வரும். அத வெளிய சொல்லனாலும் மனசுகுள்ளயாவது இருக்கும். புடிச்சி கல்யாணம் பண்ணறவங்களுக்கு வராதானு கேட்டா… கண்டிப்பா வரும்… ஆனா அந்த நேரத்துல நம்ம தான புடிச்சி கல்யாணம் பண்ணோம்… அத நம்ம சரி பண்ணனும்னு யாராவது ஒருத்தராவது முயற்சி எடுப்பாங்க. ஆனா புடிக்காம கல்யாணம் பண்ணா… அவங்கனால தான் என் வாழ்க்கை இப்படி ஆச்சினு அடுத்தவங்கள குறை சொல்லியே அவங்க மீத வாழ்க்கைய வாழ மாட்டாங்க… அது தான் வித்தியாசம்” என்று ஒரு நீண்ட விளக்கத்தை சண்முகம் கொடுத்தார்.
அந்த பதில் சரவணாவுக்கு ஏற்புடைய பதிலாய் இருக்க, மனம் சமாதானம் அடைந்து தனது அடுத்த கேள்வியை கேட்டான்.
“சரி… இது எல்லாம் ஏன் என்கிட்ட சொல்லல??” என்று கேட்டான் சரவணா.
“எது எல்லாம்??” என்று அசால்ட்டாய் கேட்டார் சண்முகம்.
சரவணா கேட்டதில் பயந்து இருந்து உறவுகள், சண்முகம் கேட்ட எதிர் கேள்வியில் அதிர்ச்சியாகி பேந்த பேந்த முழித்தனர்.
“மாமா… என்ன விளையாடுறீங்களா??. நான் இத்தன நாள் பிரியாவ தப்பா நினைச்சிட்டு இருந்தேன்னு உங்களுக்கு தெரியாதா??. அத ஏன் நீங்க யாரும் சரி பண்ணலனு கேட்டேன்!” இப்போது சரவணா கோபமாகவே கேட்க, சண்முகம் அதற்கும் அசரவில்லை.
“இங்க பாரு சரவணா. நாங்க யாரும் மறைக்கனும்னு நினைக்கல. அதே போல உன்கிட்ட இத தனியா வந்து சொல்லனும்னு கூட எங்களுக்கு தோணல.” என்று சொன்ன சண்முகம், பின் மெல்லிய குரலில், “பிரியா வீட்ட விட்டு போவான்னும் நாங்க நினைக்கல. அவ ஏன் போனான்னும் தெரியல. என் பொண்ண நான் சரியா புரிஞ்சிக்கலயா?? இல்ல நான் சரியா வளக்கலையானும் தெரியல. ஆனா உண்மையா நான் அவ மேல வச்சி இருந்த நம்பிக்கைய உடைச்சிட்டா!!” என்று வலியுடன் முடித்தார்.
“அப்பா… இல்லப்பா… நான் உங்கள ஏமாத்தனும்னு எதுவும் பண்ணல பா” என்று ஓரமாய் நின்று இருந்தவள், அவரிடம் ஓடி வந்து அவரது கையை பிடித்து கொண்டு கண்ணீருடன் சொல்லி கொண்டு இருந்தாள் கீர்த்தி.
ஆனால் அவர் அவளை நம்பாமல் ஒரு பார்வை பார்த்து, தனது கையை அவளிடம் இருந்து பிரித்து கொண்டார். அவரை பிடித்து இருந்த கைகளை கூட கீழே இறக்காமல் அவர் விலகிய பிறகும் அந்தரத்திலே வைத்து விட்டு, கண்ணீரை நிப்பாட்டாமல் அழுது கொண்டு இருந்தாள் கீர்த்தி.
சரவணாவோ, பேச்சு திசை மாறியதை எப்படி மீண்டும் தன் பக்கம் திருப்புவது என்று புரியாமல் இருக்க, சண்முகமே அவனுக்கு பதில் விடையளித்தார்.
“இவ வீட்ட விட்டு போன அப்பறம் நீ ரொம்ப கோவமா இருக்க மாறி இருந்தது, அந்த நேரத்துல இத பத்தி உன்கிட்ட சொல்ல எங்களுக்கு பயமா இருந்தது. எங்க நாங்க உன்கிட்ட பொய் சொல்லிட்டோம். உன்ன ஏமாத்திட்டோம்னு நினைச்சிடுவியோன்னு. தெரியும் போது தானா உனக்கு தெரியட்டும். நம்மளா சொல்ல வேண்டாம்னு இருந்தோம்” என்று எல்லோர் சார்பாகவும் அவரே பதில் அளித்தார். அதற்கு எல்லோர் முகமும் ஆமோதிப்பாக இருக்க, சரவணாவுக்கும் இதற்க்கு மேல் அதை கிண்டி கிளறி பெரிய பிரச்சனை ஆக்க வேண்டாம் என்றே தோன்றியது.
அவனுக்கு தேவையான கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதால் சமாதானம் ஆகி விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு பெரு மூச்சை விட்டு, “சரி… விடுங்க… ஆனது ஆச்சி. இனி அத பத்தி பேசி எதுவும் ஆக போறது இல்ல. அதனால அத எல்லாம் மறந்துடலாம். நான், என் பொண்டாட்டி தமிழ், என் அக்கா பொண்ணு… என் பொண்ணு மாறி பிரியா. இதுல எந்த மாற்றமும் இல்ல தான. அது போதும்” என்று எல்லாருக்கும் பொதுவாய் கூறி விட்டான்.
அதன் பிறகு எல்லோரும் ஒரு நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
ஆனால் இன்னுமுமே கீர்த்தி மட்டும் அழுது கொண்டு இருக்க, எல்லோர் பார்வையும் தற்போது அவளிடம் திரும்பியது.
இவ்வுளவு நேரம் அடங்கி இருந்த பிரியாவின் பெரியம்மா, “இப்ப எதுக்கு இந்த அழுகாச்சி நாடகம்??” என்று கீர்த்தியை நோக்கி கேட்டார்.
கண்ணீர் நின்று அதிர்ச்சியாக அவள் பார்க்க, அற்புதத்திற்கு தான் கோபம் கட்டுகடங்காமல் வந்தது. எல்லாரும் குறை சொல்லும் அளவுக்கு நடந்து கொண்டாளே என்று.
அதனால் பிரியாவின் அருகில் சென்று அவள் முதுகில் ஒரு அடி வைத்து, “எதுக்குடி வுட்ட வுட்டு போன??. ஊருக்குள்ள எதுவும் தெரியாம பாத்துதுகிட்டாலும், வூட்டுல இருக்கவங்களுக்கு தெரியாம இருக்குமா!!!. நீ கேட்ட மாறி தானே எல்லாம் நடந்தது. அப்பறம் என்ன எலவுக்குடி வூட்ட வுட்டு போன??” என்று தனது ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்தார்.
எல்லாரும் அவரவர் கருத்தில் செயல்களில் நல்லவர்களாய் இருந்தாலும், கூட இருப்பவர்களின் பேச்சை எண்ணியே தன் குணத்தை மாற்றி, உடனுக்குடன் முடிவு எடுத்து எதிர் இருப்பவரின் பக்கத்தை பொறுமையாக கேட்பதில்ல.
பிரியா கல்யாணம் வேண்டாம் சொன்னப்ப கூட கோபப்படாமல், முடிந்தளவு முயற்சித்து முடியாமல் போனதால் பிரியாவின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து தான் இருந்தார். ஆனால் இப்போது அவர் அடிப்பது என்றால், இவள் அவரை எந்தளவு புண்படுத்தி இருப்பாள்… சுற்றி இருந்தவர்கள் அவரை எவ்வாறு காயப்படுத்தி இருப்பார்கள்… அது எந்த அளவுக்கு இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சட்டென அற்புதம் சென்று அவளை அடிப்பார் என்று எண்ணாத குடும்பத்தார் ஒரு நொடி இடைவெளியில், “அற்புதம்”, “அக்கா”, “பெரிம்மா” என அழைத்து இருந்தனர்.
தமிழ் சென்று பிரியாவை இழுத்து தன் அருகில் நிறுத்தி கொண்டாள்.
சரவணா, “என்ன கா நீ பைத்தியம் மாறி பண்ணிட்டு இருக்க??. அவ வேலைக்கு தான் போனா… ஏதோ ஓடி போன மாறி நினைச்சிட்டு வந்து அடிக்கற!!. முத அவளுக்கு என்ன பிரச்சனைனு கேளு. அதுக்கு அப்பறம் என்ன முடிவு பண்ணறதுனு பாக்கலாம். சும்மா நீயே எதாவது கற்பனை பண்ணி எதாவது பண்ணிட்டு இருக்காத” என்று கோபமாக கேட்க, சண்முகம் இறுகிய முகத்துடன், “நீயும் இப்படி பண்ணுவனு நான் நினைக்கல அற்புதா!!. நான் உங்க இரண்டு பேரையுமே சரியா புரிஞ்சிக்கல நினைக்கறேன்” என்று கூறி விட்டு, அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.
அவரும் பாவம் என்ன செய்வார்!!!… தன் மனைவி எதையும் யோசித்து தான் முடிவெடுப்பாள் என்ற எண்ணம் போய்… சூழ்நிலையால் உணர்ச்சி வசப்பட்டு உணர்வுகளை கொட்டுவார் என்று எண்ணவில்லை. இத்தனை வருடம் இந்த மாறி நிகழ்வு ஒன்றும் ஏற்படவில்லை என்றாலும் தன் மகள் மற்றும் மனைவி பற்றிய அவரது கணிப்பு அல்லது புரிதல் தவறாய் இருந்ததாய் அவருக்கு தோன்றியது.
அற்புதா அவரை, ‘என்னை நீங்க புரிஞ்சிக்கலையா??’ என்ற ஒரு பார்வை பார்த்து விட்டு, “இங்க பாரு சரவணா… அவளுக்கு என்ன பிரச்சனைனாலும் நம்மகிட்ட வந்து சொல்ல வேண்டியது தான!!. அத விட்டுட்டு அது என்ன வீட்ட விட்டு போற பழக்கம். நாள பின்ன இது யாருக்காவது தெரிஞ்சாலும், இவள தான கொற சொல்லுவாங்க. அதும் இல்லாம நாட்டுல எவ்வளவு பிரச்சனை எல்லா எடத்துலயும் நடக்குது. அது எதுவும் தெரியாம இவ பாட்டுக்கு எங்கனா கிளம்பி போய் இருக்கா!!. அவ எங்க இருக்கா என்ன பண்ணறானு நீ கண்டு புடிச்சி சொல்லுற அந்த ஒரு வார்த்துல கருக்கு கருக்குனு இருந்தது எங்களுக்கு தான தெரியும்” என்று தனது மன உளைச்சல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் பக்க நியாயமும் தற்போது அவனுக்கு புரிய, அதற்கு என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தான் சரவணா. பிரியாவுக்கு அழுகை மேலும் பீறிட்டது. தான் வேலைக்கு செல்கிறேன் என்று வீட்டில் சொல்லி சென்று இருக்க வேண்டுமோ!!! என்று காலம் கடந்து யோசித்தாள்.
அற்புதம் போல தானும் உணர்ச்சி வசப்பட்டு அவள் பக்க நியாயத்தை கேட்காமல் பழி சுமத்தியதாக தோன்றியது. அப்படி இருக்க எப்படி நான் அற்புதாவை குறை சொல்வது இல்லை பிரியாவை தான் குறை சொல்வது என்று புரிந்து கொண்டார்.
“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க” என்றவர், “பிரி குட்டி அப்பாவ மன்னிச்சிடுடா… நீ என்ன நினைச்ச… ஏன் அப்படி பண்ணனு கேட்காம அப்பா உன் மேல கோபப்பட்டுட்டேன். இங்க வாங்க” என்று நாற்காலியில் அமர்ந்து கொண்டே தனது கையை நீட்டினார்.
“அப்பா” என்று ஓடி வந்து அவர் கையை பிடித்து கொண்டவள், அவர் மடியில் தலை சாய்த்தவள், கேவி கேவி அழுதாள்.
“நான் வேணும்னு எதுவும் பண்ணல பா”, “என்ன யாருக்கும் புடிக்காம போச்சி”, “நான் இங்க இருக்கறது யாருக்கும் புடிக்கல”, “அதான் பா நானே போய்ட்டேன்” என்று ஒரு வார்த்தைக்கு நடுவிலும் மூக்கை உறிஞ்சி கொண்டே பேசினாள்.
அவரது தலையை வருடி கொடுத்து கொண்டே, “சரிடா… சரிடா குட்டி… ஒன்னும் இல்ல… ஒன்னும் இல்ல…” என்று சொல்லி கொண்டு இருந்தார்.
அவளது அழுகை ஒருவாறு நின்று தேம்பலாய் மாறி, சிறிதாக விக்க, தமிழ் தண்ணீர் எடுத்து வந்து நீட்டினாள்.
சண்முகம் அதை வாங்கி தன் மகளுக்கு புகட்டி விட்டு, பொறுமையாக, “என்னடா ஆச்சி??” என்று கேட்டார். அவளும் அன்றைய தனது மனநிலையை அவரிடம் விளக்க ஆரம்பித்தாள்.
கொடுப்பாள்…

Advertisement