Advertisement

இடம் 25
அன்று விடுமுறை நாள் என்பதால் சரி தேவ்வுக்கு அழைத்து பேசலாம் என்று அவனுக்கு காணொலி அழைப்பை ஏற்படுத்தினாள் கீர்த்தி.
தேவ்வும் அந்த பக்கம் எடுத்தவுடன், அவனது புன்னகை முகத்தை தான் பார்த்தாள். அந்த முகம் அவளை அறியாமலே அவளது இதழிலும் சிரிப்பை வரவழைத்தது. அந்த சிரிப்புடனே, அவன் சென்ற காரியத்தை பற்றி கேட்டாள். அதனால் தான் அவன் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று நினைத்து.
அவன் சொன்ன பிறகே அவன் இருக்கும் இடத்தையும், அவன் சென்ற காரியத்தை பற்றியும் அறிந்து கொண்டாள். ஆனால் அறிந்து கொண்ட செய்தியை தான் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அதை பற்றி மேலும் அவளது யோசனை செல்லும் முன் கைபேசி கை மாறியது.
பல நாட்களுக்கு பின் தனது குடும்பத்தாரிடம் பேசுவதால், சற்று நெகிழ்வாக பேசி கொண்டு இருந்தாள் தனது அண்ணனிடமும் மாமாவிடமும். அடுத்து மீண்டும் அலைபேசி தேவ்விடம் செல்ல, பேச முடியாமல் துண்டித்து விட்டாள்.
அவளது மனது அமைதி இல்லாமல், பால்கனியில் வலது புறத்திலிருந்து  இடது புறமும், இடது புறத்திலிருந்து வலது புறமாகவும் மாறி மாறி நடந்து கொண்டு இருந்தாள். கைகளும் ஒரே ரிதமாக அசையாமல், கண்ட மேனிக்கு மேல கீழே என்று அசைந்து கொண்டு இருந்தது அவளது மனதை போல…
‘தேவ் எப்படி அப்படி பண்ணலாம்??’ என்ற கேள்வி அவள் மனதில் வந்து அவன் மீது ஒரு வித கோபத்தை தோற்றுவித்தது.
அந்த சமயம் அங்கே வந்த சங்கவி கீர்த்தியை பார்த்து, “என்ன கீர்த்தி?? அப்படியும் இப்படியும் உலாதித்து இருக்க?? வாக்கிங் ஆ??. அப்படியே இருந்தாலும் அதை ஏன் இப்படி மதிய நேரத்துல பண்ணிட்டு இருக்க??. வேணா என் கூட காலைலயும் சாய்ங்காலமும் வாக்கிங் வாவே… நானும் தனியா தான போறேன்” என்று அவளே கேள்வியை கேட்டு, அவளே ஒன்றை ஊகித்து, அவளே அதற்கான தீர்வு என்று ஒன்றையும் விடாமல் பேசி கொண்டே போக, “அக்கா” என்று சத்தமாக அழைத்து அதை தடை செய்தாள் கீர்த்தி.
‘ஏன் மா??’ என்ற கேள்வி பாவையுடன் அவளை பாவமாக பார்த்தாள் சங்கவி.
கொஞ்சம் தன்னை அசுவாசப்படுத்தி கொண்டு, “கா… கவிக்கா… நான் லீவ் போட்டுட்டு எங்க ஊருக்கு போலாம் இருக்கேன்” என்றாள் கீர்த்தி, சங்கவியிடம்.
“என்ன??” என்று அதிர்ச்சியாக கவி. ஏனென்றால் கீர்த்தி தான் அவர்கள் குடும்பத்தை பற்றியோ அவர்கள் வீட்டை பற்றியோ பேசியதில்லை. அப்படி இருக்க அங்கு செல்வது எல்லாம்… நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆனால் அது கவிக்கும் மகிழ்ச்சியே…
“ஆமா கா. போக வேண்டிய சூழ்நிலை. ஒரு வாரம் லீவ் எடுத்துட்டு போகலாம் இருக்கேன்” என்றவள், தனது அலைபேசியை எடுத்து மிதுனுக்கு அழைத்தாள். அவனிடம் தானே இவள் விடுமுறை எடுக்க அனுமதி பெற வேண்டும்.
“ஹலோ மிதுன். நான் ஒரு வாரம் லீவ் போட்டு எங்க ஊருக்கு போறேன்” என்று அவன் அழைப்பை ஏற்றவுடன் அவன் பதில் பேச நேரம் கொடுக்காமல், இவள் தன் தேவையை கூறினான்.
மிதுனுக்கு, தேவ் சென்ற காரியம் தெரிந்ததால் அது சம்மந்தமாக தான் கீர்த்தி ஊருக்கு செல்ல இருக்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
அதனால் அவள் மகிழ்ச்சியான மனநிலையில் தான் கேட்கிறாள் என்று சிரிப்புடன், “சரிடா…. எடுத்துக்கோ… நான் பாத்துக்கிறேன் உன் வேல எல்லாம்… எதுனா நோட்ஸ் எடுத்து வச்சி இருந்தா எனக்கு பார்வேட் பண்ணி விட்டுடு டா” என்று சொன்னான்.
“இரண்டே ரெண்டு தான் மித்து இன்னும் மீதி இருக்கு. நான் ஒரு ரவ் ட்ராப்ட் மாறி அத மட்டும் போட்டு வச்சிடுறேன். நீ அத பைன் ட்யூன் பண்ணிடு” என்று தனது கோபத்தை மறந்து வேல பக்கம் தாவினாள் கீர்த்தி.
“சரி கீரி குட்டி…” என்று மித்து மேலும் ஏதோ சொல்ல வர, கீர்த்தி இடை புகுந்து, ” ஆன்… அப்பறம் இரண்டு டாஸ்க் நம்ம ட்ரைனீ பசங்களுக்கு அசைன் பண்ணி இருக்கு. நாலு நாள் ஆச்சி… அது மட்டும் பண்ணிட்டாங்களானு பாக்கனும்” என்று விடுபட்ட வேலையையும் சொன்னாள்.
“ஓகே டா… பாத்துக்கறேன்” என்று சொன்ன மித்து, “சரி எப்போ கிளம்பற??.. எதுல கிளம்பற??. டிக்கெட் புக் பண்ணிட்டயா??” என்று கேட்டான்.
“இன்னிக்கே மித்து. இல்ல புக் பண்ணல… இன்னிக்கு சனிகிழமை தான நேத்துனா கூட டிராவல்ஸ்ல எல்லாம் புக் ஆகி இருக்கும். இன்னிக்கு ப்ரீயா தான் இருக்கும். நான் டிராவல்ஸ் ஆபிஸ் போய்ட்டு செக் பண்ணிக்கறேன் மித்து” என்று தனது திட்டத்தை கூறினாள் கீர்த்தி.
“சரி டா. பாத்து போயிட்டு வா. கிளம்பும் போது நான் வந்து பஸ் ஏத்தி விடுறேன்” என்று சொன்னான்.
“சரி மித்து. நான் ரெடி ஆகிறேன்” என்று சொல்லி விட்டு ஒரு ஐந்து நாட்களுக்கு உடை எடுத்து ஒரு டிராவல் பேகில் வைத்து விட்டு, குளிக்க சென்றாள்.
குளித்து விட்டு வந்தவள், “கவிக்கா நான் ஒரு வாரம் ஊருக்கு போறேன். அப்போ நீங்க தனியா இருப்பீங்களே!!. சாரி கா… எனக்கும் தெரியல… ஆனா நான் கண்டிப்பா போய் ஆகனும்கா… நீங்க?? எப்படி???” என்று என்ன சொல்வது என்று தயக்கமாக அவளை பார்த்து கொண்டு இருந்தாள் கீர்த்தி.
“எனக்கு ஒன்னும் இல்லமா. உனக்கு சொன்னது தான். பக்கத்து வீட்டுல என் டீம் மேட்ஸ் தான். நான் தங்கிக்கறேன்” என்று சொல்லி அவளது கையை தட்டி கொடுத்தாள் கவி.
அவளை பார்த்து ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்தாள் கீர்த்தி. “சரி கா… நான் போய்ட்டு வந்துடுறேன்” என்றாள்.
“சரி டா. பாத்து போயிட்டு வாமா” என்று சொன்னாள் கவி.
தலையை ஆட்டி விட்டு, தனது கைபேசியை எடுத்து மிதுனுக்கு அழைத்தாள் கீர்த்தி.
“மித்து… நான் ரெடி” என்று அவன் அழைப்பை ஏற்றதும் சொன்னாள் கீர்த்தி.
“சரி டா. ஒரு கால் மணி நேரம் வந்துட்டேன் பக்கத்துல” என்று சொன்னான் மித்து.
“சரி மித்து. மெதுவாவே ஒட்டிட்டு வா. பஸ்க்கு ஒன்னும் அவசரம் இல்ல” என்று சொன்னாள் கீர்த்தி.
“சரி டா. வரேன்” என்று அழைப்பை துண்டித்தான் மித்து.
மித்து தங்களது வீடு இருக்கும் இடம் வந்தவுடன், கீழே தனது காரில் அமர்ந்து கொண்டே கீர்த்திக்கு அழைத்தான். அவளும் அழைப்பை ஏற்று வரேன் என்று சொல்லி விட்டு, கவியிடமும் சொல்லி கொண்டு கிளம்பினாள் கீர்த்தி.
“சரி கா. வரேன். பாத்து இருங்க” என்று தனது பைகளை எடுத்து கொண்டு, கையை இட வலமாக அசைத்து ‘டாடா’ என்று சொல்லி கொண்டு, செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.
மித்துவுமும், கீர்த்தியும் பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கே விசாரிக்க, இன்னும் அரை மணி நேரத்தில் ஒரு பேருந்து அவர்கள் ஊருக்கு புறப்பட உள்ளது என்று சொன்னார்கள். பேருந்து கிளம்பும் வரை கீர்த்தியுடன் அங்கேயே அமர்ந்து இருந்து, பஸ் கிளம்பியதும் தான் மித்து விடை பெற்றான்… ஊருக்கு போன உடன் கால் பண்ணு என்ற கட்டளையுடன்.
கிட்டதட்ட ஒரு வருடம் கழித்து தனது சொந்த ஊருக்கு செல்ல இருக்கின்றாள் கீர்த்தி பிரியம்வதா… அங்கே தேவாமிர்தன் செய்த வேலையின் தாக்கம் ஆரம்பிக்கும் முன் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவள் மனதில் வந்து செல்ல தவறவில்லை.
இங்கே, கீர்த்தியின் சொந்த ஊரில்…
அவர்கள் விட்டு சென்ற இடத்திலே அமர்ந்து, எதனால் அவர்கள் அப்படி சொல்லி விட்டு சென்றார்கள் என்று புரியாமல் முழித்து கொண்டு இருந்த தேவ், சற்று நேரத்தில் எல்லாம் வரும் போது பாத்துக்கலாம். நம்மனால சமாளிக்க முடியாத காரியம் எதுனா இருக்கா என்ன!! என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு ஒரு தோள் குலுக்கலுடன் தான் தங்கி இருந்த விடுதிக்கு சென்றான் தேவ்.
அங்கிருந்து கிளம்பிய சரவணா, சுந்தரிடம் விடை பெற்று கொண்டு நேராக தனது இல்லம் சென்றான். தமிழிடம் இதை பகிர்ந்து கொள்ள… ஏனோ அவன் மனம் லேசாக இருக்க, இயல்பாகவே மனைவியை தேடியது. ஒருவேளை வீட்டில் உள்ளவர்களால் தான் பிரச்சனை என்ற பட்சத்தில், மனைவியை தேடினானோ என்னவோ…
சரவணாவின் இல்லம்…
“தமிழு… அடியேய் தமிழு” என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தான் சரவணா.
“என்னது இந்த மாமா நம்ம பேர சொல்லி கூப்பிடுது. இது அந்த அளவுக்கு எல்லாம் சீன் இல்லயே… ஒருவேளை இப்படி நடக்கனும்னு நம்ம கனவு காணுறமோ” என்று தனக்கு தானே பேசி கொண்டு, ‘நம்ம கனவு தான்’ என்று  முடிவு எடுத்து விட்டு பாத்திரங்கள் துலக்கி கொண்டு இருந்தாள்.
“இவள…” என்று பல்லை கடித்து வி்ட்டு, “கூப்பிட்டுட்டு இருக்கேன். காது என்ன வாடகைக்கு விட்டு இருக்கயா??” என்று கேட்டு கொண்டே அவளின் பக்கத்தில் வந்து நின்றான் சரவணா.
“என்னது??. என்ன கூப்பிட்டிங்களா??” என்று ஆச்சரியமாய் கேட்டு விட்டு, “என்ன எதுக்கு கூப்பிட்டுறீங்க??. உங்களுக்கும் எனக்கும் என்ன பேச்சு வார்த்த இருக்கு??. என்கிட்ட பேச உங்களுக்கு எதுனா இருக்கா என்ன??” என்று இன்னும் ஆச்சரியத்தை விடாமல் வைத்து கொண்டு கேட்டாள் தமிழ்.
“உனக்கு வாய் கொழுப்புடி!!. பாக்க பூன மாறி இருந்துட்டு என்ன பேச்சு பேசற” என்று அவளை பார்த்து இன்னும் நன்றாக பல்லை கடித்து கூறி விட்டு, “யாருடி உன்கிட்ட பேசறது இல்ல. நீ தான் என்ன பாத்துட்டு மூஞ்ச திருப்பிட்டு போன… நானா போனேன்??” என்று கேட்டான் சரவணா..
“நீங்க மட்டும் அப்படியே என்கிட்ட வந்து கிளு கிளுனு பேசிட்டீங்க பாரு” என்று கை வேலையை பார்க்க, வாய் அதன் வேலையாய் தனது மாமனிடம் பேசி கொண்டு இருந்தது.
“வாயி… வாயி..” என்று சொன்னவன், “உன்கிட்ட ஒரு முக்கியமான சேதி தான் சொல்ல வந்தேன். ஆனா அதுக்கு முன்ன இன்னொரு பஞ்சாயத்தை முடிக்கனும் போலயே” என்று சொல்லி கொண்டு, தமிழை தனது பக்கம் திருப்பினான் சரவண வேல்.
“என்னவா இருக்கும்??” என்று கொண்டே அவன் இழுத்த திசைக்கு திரும்பினாள் தமிழரசி.
கொடுப்பாள்…

Advertisement