Advertisement

இடம் 15 
கவி, மதன் தொடர்பான நிகழ்வுகள் எல்லாம் முடிந்து சில வாரங்கள் கடந்து இருந்தது.
இந்த வாரத்தில் கீர்த்திக்கு வேலைகள் நிறைய இருந்தது. எப்போதும் இருக்கும் வேலையை விட அதிகமாக… காரணம் என்னவென்றால், அவள் பணி புரியும் அலுவலகத்தில் மூன்று இணைய பயன்பாட்டு செயலிகள் உள்ளது. அது நாம் அறிந்தவையே… அதில் ஒரு செயலி ஏதோ பிரச்சனையின் காரணமாக கிட்டதட்ட பத்து மணி நேரமாக வேலை செய்யவில்லை. இவர்கள் செயலி உலகம் முழுதும் பயன்படுத்தும் செயலி இல்லை என்றாலும், சொல்லி கொள்ளும் அளவு வாடிக்கையாளர்கள் இருந்தனர். அவர்கள் தான் இதை புகார் செய்தனர். அதற்கு முன்னே செயலிகள் சரியாக வேலை செய்கிறதா என்று கண்காணிக்கும் குழு கண்டுபிடித்து விட்டது. அதன் காரணத்தை ஒரு ஆவணமாக தயாரித்து அவர்கள் வெளியில் காண்பிக்க வேண்டும். அந்த வேலையை கீர்த்திக்கு தான் ஒதுக்கி இருந்தான் மிதுன்.
அது தொடர்பாக தான் அந்த செயலியின் தலைவர் பொறுப்பில் இருப்பவருடன் பேசி, சில சந்தேகங்கள் கேட்டு, இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணியாக கூறப்படுவதின் பிரச்சனை மற்றொரு குழுவுடன் பேசி அறிந்து ஆவணம் தயாரித்து கொண்டிருக்கிறாள்.
“ஏன் இந்த பிரச்சனை வந்து இருக்கு??” – கீர்த்தி.
அவர் காரணத்தை விளக்குகிறார்.
“இதை எப்படி இனிமேல் நடக்காம தடுக்கிறது??” – கீர்த்தி.
“இந்த உலகத்தில் எதுமே நூறு சதம் சரியானதுனு எதுமே கிடையாது. ஆனால் இதுல எந்த பிரச்சனை வந்தாலும் வேற ஒன்னுக்கு மாத்தி விட்டுடுவோம். அதனால வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட மாட்டாங்க” – அவர்.
“ஓஓஓ..” – கீர்த்தி.
“ம்ம்ம்… நமக்கு உடம்பு சரி இல்லாம போகுது இல்ல. அது மாதிரி தான். நீ இந்த பேக்அப் ப்ளான்(Backup plan) வச்சி இருக்கிறோம்னு மட்டும் எழுதிடுமா” என்று சொல்லி விட்டு சென்றார் அவர்.
கீர்த்திக்கு இருக்கும் அடுத்த வேலை, இதனால் பாதிக்கப்பட்டவர் எத்தனை பேர் எந்த பகுதியில் இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள் என்று கேட்டு அறிந்து அதையும் சேர்க்க வேண்டும்.
அவள், அவள் வேலையை பார்க்கட்டும். நம்ம அதுக்குள்ள மத்தவங்கள போய் பார்த்துட்டு வந்துடலாம்.
இங்கே பேஷன் பள்டர்ஸ்ஸில்…
புதிதாய் ஒரு கட்டிடம் கட்டுவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டு இருந்தனர் நம் நாயகனும் அவனின் தோழர்களும். இரண்டு மணி நேரமாக அனைவரும் பேசி ஒரு வழியாக ஒரு முடிவு எடுத்து விட்டனர்.
ஐவரும் ஒன்றாக அமர்ந்து தேனீர் பருகி கொண்டே இலகுவாக பேசி கொண்டு இருந்தனர்.
“கீர்த்தி உனக்கு என்ன தான் பதில் சொன்னாள்??” என்று கேட்டாள் கீதா.
“ஆமா… என்ன ஆச்சி?? செட் ஆச்சா?? இல்லயா??. ஒன்னுமே சொல்ல மாட்டிங்குற” – பிரதீப். கௌதமும் கேள்வியாக பார்த்தான்.
“எங்கடா??. நல்லா பேசறா தான். ஆனால் என்னோட காதல் கல்யாணத்த பத்தி தான் ஒன்னும் சொல்ல மாட்டிங்குற” என்றான் தேவ்.
“ஓஓஓ… நீ கேக்கும் போது என்ன பண்ணுறா??. போன வச்சிட்டு போய்டுறாளா?? இல்ல அமைதியா இருக்குறாளா?? இல்ல பேச்சை மாத்திடுறாளா??” என்று கீதா யோசனையுடன் கேட்டாள்.
“இதுல எதுமே நடக்கலையே!!!” – தேவ்.
“ஏன்??. வேற என்ன தான் பண்ணுனா??” ஆர்வத்துடன் கீதா கேட்க, “நான் தான் அவகிட்ட கேட்டதே இல்லையே. அப்பறம் எப்படி இதுல ஏதோ ஒன்னோ இல்ல வேற எதுவுமோ நடக்கும்??” என்று புருவத்தை தூக்கி கேட்டான்.
“ஆமா… இதுல எல்லாம் தெளிவு தான். அவங்ககிட்ட பேசனா தான தெரியும். முதல கேளுடா. அன்னிக்கு என்னமோ பெரிய இவனாட்டம் அவளுக்கு புடிக்கலைனா விட்டுடுவேன். தொல்லை பண்ண மாட்டேன் சொன்ன… அதெல்லாம் நடக்கனும்னா நீ முத கேட்கனும்” என்று கௌதம் சொல்ல, அவன பாவமாக பார்த்த தேவ், “ஏன்டா எதிர்மறை செயல வச்சி சொல்லுற, நான் அவ சரி சொன்னதுக்கு அப்பறம் வீட்டுல சொல்லி கல்யாணம் பண்ணுவேன் சொன்னனே அது நடக்கனு சொல்லி இருக்கலாம்ல” என்று கேட்டான்
அதை கேட்ட மற்றவர்கள் சிரித்து விட்டனர்.
“சரி சரி… உன் கல்யாணம் சீக்கிரம் நடக்கனும்னா… நீ அந்த பொண்ணுகிட்ட இத பத்தி பேசுனா தான தெரியும்” என்றான் கௌ.
“ம்ம்ம்… சரிடா அடுத்த வாரம் பேசறேன்” என்ற தேவ்வை மற்ற மூவரும் ஏன் என்ற பாவனையுடன் பார்க்க, “அவளுக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்காம்டா. அதான்” என்க, அவர்களும் சரி என தலையாட்டி விட்டு தங்களது வேலையில் மூழ்கினர்.
இந்த பணிகள் எல்லாம் முடித்து தேவ் அன்று இரவு தாமதமாக தான் வீட்டிற்கு சென்றான்.
“என்ன அமிர்??. இன்னிக்கு ரொம்ப வேலையா??” என்று கேட்டார் அம்பிகா.
“ஆமா மா” என்று சோர்வான குரலில் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றான்.
முகம் கை கால் கழுவி விட்டு வீட்டில் பயன்படுத்தும் இலகுவான உடை அணிந்து மீண்டும் வெளியே வந்தான்.
“அம்மா இன்னிக்கு எனக்கு ரொம்ப பசிக்குது” என்று தனது வயிற்றை தடவி கொண்டே வந்து சாப்பிட அமர்ந்தான்.
“என்ன மா சாப்பாடு??” – அமிர்.
“சப்பாத்தியும், உருளை கிழங்கு பொரியலும்” – அம்பிகா.
“ஐ… சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சி. என்ன இன்னிக்கு ஆச்சிரியாம இத பண்ணி இருக்கீங்க??. இட்லி தோசைனு இருந்தவங்க… இப்ப சப்பாத்தி பண்ணி இருக்கீங்க??” சிரிப்புடன் தேவ்.
அவனை முறைப்புடன் பார்த்தவர், “ஏன்ன்ன்… மாவு தீந்து போச்சி அதான். நீ என்ன நினைச்ச??. ஊன் பையனுக்கு புடிக்கும்னு சமைச்சி அவனுக்காக காத்துகிட்டு இருந்தேன்னா” என்றார்.
ஏனென்றால் சென்ற வாரம் தான் இதே உணவை சமைத்து இருந்தார்.
“ஈஈஈ… கோச்சிக்காத அம்மு குட்டி.  சும்மா சொன்னேன்” என்று கன்னம் கிள்ளிவன் தனது கையில் இருந்த ஒரு வாய் உணவை அவருக்கு ஊட்டி விட்டு உண்ண ஆரம்பித்தான்.
அவன் உண்டு முடிக்க அமிரின் அப்பாவும் தான் பேசி கொண்டு இருந்த அழைப்பை முடித்து கொண்டு வந்தார்.
“அப்பா சாப்டீங்களா??” என்று கேட்டான்.
“இன்னும் இல்ல… நீயும் வந்த அப்பறம் சாப்பிடலாம் நினைச்சேன்” என்றவரும் வந்து அமர அவருக்கு பரிமாறினார் அம்பிகா.
“இல்லப்பா… ரொம்ப பசிச்சது. அதான் வந்ததும் சாப்பிட உக்காந்துட்டேன்” என்று மெல்லிய குரலில் கூறினான்… தனக்காக அவர்கள் காத்திருக்கும் போது, அவர்கள் உண்டார்களா என கேட்காமலே போனேனே என்று.
அவனை பார்த்து புன்னகைத்த இருவரும், “அதெல்லாம் தெரியும் சாப்பிடு” என்றார்கள். அதன் பின் மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.
அப்பாவும், மகனும் சாப்பிட்டு விட்டு அவர்கள் தட்டை மட்டும் கழுவி பக்கத்திலே கவிழ்த்து விட்டு வந்து வரவேற்பறையில் வந்து அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அதற்குள் அம்பிகாவும் தனது உணவை முடித்து கொண்டு சமையலறையை சுத்தம் செய்து விட்டு வந்து அவர்களுன் அமர்ந்தார். அது அவர்களின் குடும்ப நேரமாக இப்போது மாறி விட்டது. பேசி சிரித்து உறங்கும் நேரமும் வர அவர்கள் அறையை நோக்கி நடையை கட்டினர்.
அப்படியே ஒரு வாரமும் கடக்க, அன்று விடுமுறை நாளில் கீர்த்திக்கு அழைத்தான் தேவ்.
“சொல்லுங்க தேவ்” – கீர்த்தி.
“ஏய்… கீர்த்தி இன்னிக்கு வெளியே பாக்கலாமா??. ஒரு முக்கியமான விசயத்தை பத்தி பேசனும்” என்று சுத்தி வளைக்காமல் நேரிடையாக சொல்ல வேண்டியதை சொல்லி விட்டான் தேவ்.
அவன் எதை கேட்க போகிறான் என்பதை அவன் சொல்லமாலே புரிந்து கொண்டவள் யோசிக்க நேரம் வேண்டும் என்பதால், “சரி நாளைக்கு பார்க்கலாம்” என்றாள்.
“சரி” என்று சொன்னவனும் சில பல பேச்சுக்கு பின் அழைப்பை துண்டித்தான்.
கவியும் வெளியே சென்று இருந்ததால், கீர்த்திக்கு தனிமையில் யோசிக்க நிறைய நேரம் இருந்தது.
அவளது மனதில் கேள்விகள் வலம் வர ஆரம்பித்தது.
வினா : தேவ்வை காதலிக்கறயா??
தெரியல.
வினா : தேவ்வை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா??
தெரியல.
வினா : தேவ்வை புடிக்குதா?? இல்லையா??
தெரியல.
வினா : தெரியல தெரியல என்ற பதிலில் இருந்தே தெரியலையா?? உனக்கு தேவ்வை புடிச்சி இருக்கு என்று.
…..
அடுத்து என்ன என்று புரியாமல் இருக்கும் போது மனம் மற்றொரு வினாவை வினவியது.
வினா : கவிக்கு பாத்தா மாப்பிள்ளை தேவ்வா இருக்குமோனு நினைச்சப்ப ஏன் வருத்தப்பட்ட?? தேவ் மேல கோபப்பட்ட??
…..
புரிந்து கொண்டாள் தேவ்வை அவளுக்கு ஸ்பெஷலாக பிடித்து இருக்கிறது என்று. ஆனால் எப்படி??.
ரொம்ப நாட்களாக அவனுடன் பேசி கொண்டு இருப்பதால் பிடித்து இருக்குமோ!!!.
ஒரு வேளை அவளுக்கே தெரியாமல் அவன் மேல் ஒரு ஈர்ப்பு இருந்து அதனால் தான்  அவனுடன் பேசி கொண்டு இருந்தாளோ!!!
அவளுக்கு புரியவில்லை. இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது. மனதில் ஒரு வித தித்திப்பு திருப்தி ஏற்பட்டது. தேவ்வுடனான வாழ்வை எண்ணி…
ஆனால் இதை எப்படி தேவ்விடம் ஒப்புக் கொள்வது. தனக்கும் தனது குடும்பத்துக்கும் உள்ள உறவு நிலையில் இது எல்லாம் சாத்தியமா??. தனது அம்மா பாட்டி எல்லாம் உறுதியாக இதற்கு ஒப்பு கொள்ள மாட்டார்கள் என்று தெரியும். அதுவும் சரவண மாமா ஏற்று கொள்ளாமல் கண்டிப்பாக என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது.
அதனால் தேவ்விடம் நானும் அவரை விரும்புவதை சொல்லலாமா?? வேண்டாமா??.
ஒரு வேளை நான் சொல்லி அவரு என்ன தப்பா நினைச்சிட்டா!!!. நான் யாரை பத்தியும் யோசிக்காதவளா… இப்படி சுயநலமா இருக்க இவள போயா விருப்புனேன் நினைச்சிட்டா!!! என்று தன் மனதில் பல எண்ணங்களை போட்டு குழப்பி கொண்டு இருந்தாள் கீர்த்தி.
ஆனால் நமக்கு தெரிந்த ஒன்று அவளுக்கு இப்போது தெரியவில்லை அல்லது அதை எல்லாம் யோசிக்கும் நிலையில் அவள் இல்லயா??. அது என்னவென்றால் இந்த உலகில் சுயநலம் இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பது தான்.
தேவ்கிட்ட நம்ம விருப்பத்தை சொல்லி அப்பறம் சேர முடியலனா அவருக்கும் வருத்தம் எனக்கும் வருத்தம். வேண்டாம் என் விருப்பத்தை கண்டிப்பா நான் அவர்கிட்ட சொல்ல மாட்டேன். சொல்ல கூடாது. நான் கடைசி வரைக்கும் இப்படியே தனியா தான் இருப்பேன் என்று மனதினுள்ளே ஒரு முடிவு எடுத்து விட்டு, அது வருத்தமாய் இருந்தாலும் ஏற்று கொண்டாள்.
ஆனால் காரணம் இல்லாமல் இவள் முடிவை அப்படியே ஏற்று கொள்ள தேவ் என்ன முட்டாளா??. என்ன பிரச்சனை என்று அறிந்து அதற்கு தீர்வு காணாமல் விட மாட்டான். முயற்சி செய்யாமலே தோல்வியை ஒப்பு கொள்ள முடியாது அல்லவா??.
ஆனால் வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்று கொள்ள கூடிய மன பக்குவமும், இரண்டு முடிவுகளிலும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற திட்டமிடலும் கொண்டவன் ஆயிற்றே அவன்.
கொடுப்பாள்…

Advertisement