Advertisement

இடம் 10
நாட்கள் அதன் போக்கில் நகர, பிளானிங் டிசைன் இதர வேலைகள் எல்லாம் முடிந்து இப்போது வீட்டிற்கு கடைக்கால்(அஸ்திவாரம்) போடுவதற்கான நாளும் வந்து விட்டது. அதற்காக மிதுனின் வீட்டில் இருந்து அவனது தாயும் தந்தையும் வந்து இருந்தனர். மிதுனின் தந்தை மற்றும் அவனது அக்கா கணவர் தற்போது அவன் இருக்கும் வீட்டில் அவனது நண்பர்களுடன் தங்கி கொள்ள, மிதுனின் தாய் மற்றும் அவனது அக்கா, அவர்கள் பெண் எல்லாம் கீர்த்தி, கவி இருக்கும் வீட்டில் தங்கி கொண்டார்.
“அம்மா, அக்கா, கீர்த்தி, கவி எல்லாம் ரெடியா?? போலாமா??” என்று கீர்த்தி வீட்டு வாசலில் வந்து கேட்டான் மிதுன். விடுப்பு நாட்கள் அதிகமாக மீதம் இருந்ததால் கவி மற்றும் கீர்த்தியும் அன்று விடுப்பு எடுத்து இருந்தனர். அதனால் கீர்த்தியும் கவியும் கூட அவர்களுடன் செல்ல இருந்தனர்.
மிதுன் மற்றும் அவனது குடும்பத்தினர் மிதுனின் காரில் கிளம்ப, கீர்த்தி மற்றும் கவி, கவியின் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்.
சற்று நேரத்தில் மிதுனின் வீடு கட்டும் இடத்திற்கு அனைவரும் சென்றனர். அங்கே அருகில் இன்னும் இரண்டு மூன்று வீடுகளுக்கும் கடைக்கால் போட இருப்பதால் அங்கே சிறிது கூட்டமாக தான் இருந்தது. மிதுனின் குடும்பத்தார் முன்னின்று அனைத்தும் செய்ய, பேஷன் ப்ள்டர்ஸிலிருந்து தேவ் மற்றும் கீதா வந்து இருந்தனர்.
தேவ்வின் பார்வை கீர்த்தியையே தொடர்ந்து கொண்டிருந்தது. அதை அவன் தோழி கீதா பார்த்து விட்டாள்.
“என்ன தம்பி?? கண்ணெல்லாம் எங்கையோ இருக்கு??” – கீதா.
“அதெல்லாம் சரியான இடத்துல தான் இருக்கு. நீ என்ன நினைக்கறையோ அதே தான்” என்று பெரிதாக அலட்டி கொள்ளாமல் சொன்னான் தேவ்.
“என்னடா பொசுக்குனு ம்’ன்னு சொல்லிட்ட… நான் கூட நீ இல்ல… மாட்டேன்… தெரில… சும்மானு சொல்லுவனு நினைச்சேன். அப்பறம் நான் அப்படி இப்படி பேசி உன் மனச உனக்கே புரிய வச்சி…” என்று அவள் நிறுத்தாமல் பேசி கொண்டே போக, தேவ் தன் ஒற்றை வாக்கியத்தில் அதை நிறுத்தி இருந்தான்.
“ஒரு மாசம் முன்னாடி கேட்டு இருந்தனா இது எல்லாம் நடந்து இருக்கும். இப்போ அதுக்கு எல்லாம் அவசியம் இல்ல” என்று சொல்லி இருந்தான் தேவ்.
அவனை திரும்பி பார்த்து தலையாட்டி பொம்மை தனது தலையை ஆட்டி கொண்டே, “சரி தான்” என்று சொன்ன கீதா, கீர்த்தியிடம் சென்று பேச்சு கொடுத்தாள்.
“வணக்கம்… நான் கீதா… பேஷன் ப்ள்டர்ஸ்ல ஒன் ஆப் தி பாட்னர். எல்லாரும் பிசியா இருக்காங்க. யாரும் அறிமுகப்படுத்த மாட்டாங்க போல. நம்மளே பேசிக்கலாம்னு வந்துட்டேன்” என்று சிரித்து கொண்டே சொன்னாள் கீதா.
அவளை பார்த்து மெல்லிய சிரிப்பை கொடுத்த கீர்த்தி, “ஹாய்!! நான் கீர்த்தி பிரியம்வதா. அந்த ஐடி கம்பெனியில மிதுனோட வேர்க் பண்ணறேன். அப்பறம் இது சங்கவி. நாங்க மூணு பேரும் ப்ரெண்ட்ஸ்” என்று சொல்லி கவியையும் அறிமுகப்படுத்தினாள்.
“வணக்கம்” என்று கீதா கவியை பார்த்து சொல்ல, கவியை அதை எதிரொலித்தாள்.
அதன் பின் அவர்கள் மூவரும் பொதுவாய் பேசி கொண்டு இருந்தனர்.
அதற்குள் அனைத்து வேலைகளும் முடிந்து இருக்க, அனைவரும் அங்கே இருந்து கிளம்ப இருந்தனர்.
கீதா, “ஓகே… எல்லாம் முடிஞ்சது போல… நானும் கிளம்பனும். வாய்ப்பு கிடைச்சா திரும்ப சந்திக்கலாம்” என்று இருவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள்.
பேஷன் ப்ள்டர்ஸ் வந்ததும், கீதா தான் அறிந்தவற்றை தனது நண்பர்களிடம் கூறினாள். அது தான் தேவ்வின் கீர்த்தி மீதான காதலை.
“ஏய்!!! அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டயா??” – பிரதீப்.
இல்ல என்பதை போல இட வலமாக தலை அசைத்தான் தேவ்.
“ஏன்??” – கௌதம்.
“ஏன்னா!!! இவ்ளோ நாள் எனக்கு அது காதலானு புரியல!!. இப்போ தான் புரிஞ்சி இருக்கு” – தேவ்
“என்னது!? என்னடா உலறுற??” – பிரதீப்.
“ஆமா பிரதி. முதல்ல அவளை எனக்கு பாத்தப்ப புடிச்சி இருந்தது. அவ பண்ணறது எனக்கு தனியா தெரிஞ்சது. அதனால தான் அவ என் நினப்ப விட்டு போகல நினைச்சேன். வேற ஏதாவது இன்ட்ரஸ்டிங்ஆ தெரிஞ்சா அவ என் நினப்புல இருந்து போய்டுவா நினைச்சேன். அப்பனா அது ஈர்ப்பா தான இருக்கும். அதுக்குள்ள அத காதல்னு நினைச்சி அவகிட்ட அத சொல்லி, அப்பறம் அவ மேல எனக்கு இருந்த ஈர்ப்பு போய்டுச்சினா அது அவ லைப் என் லைப் எல்லாத்தையும் சிக்கல் ஆக்குன மாறி ஆகிடும். அதுல இருந்து எப்படி வெளில வரதுனு தெரியாம ரொம்ப வருத்தப்படனும். அதான் கொஞ்சம் வெயிட் பண்ணேன்” என்றான் தேவ்.
“இப்ப என்ன தெரிஞ்சது?? உன்னோட இந்த காத்திருப்புனால..” கீதா கேட்க மற்றவர்களும் ஆமோதிப்பாக அவனை பார்த்தனர்.
“எனக்கு அவளோட செயல்கள் வித்தியாசமா தெரியாத சாதாரண பொண்ணா தெரியுற அப்பவும் என் நினைவுல அவ இருக்கனும் அப்போ தான் அவ என் மனசுல நீங்காத இடம் புடிச்சி இருக்குனு அர்த்தம். அதுக்கு தான் இப்போ வரை வெயிட் பண்ணி என்ன நானே அனலைஸ் பண்ணேன். அப்பறம் இப்ப எனக்கு அவ மேல வந்து இருக்கற உணர்வு ஷாட் டெர்ம்(Short term) உணர்வு இல்லனு புரிஞ்சது. இனி அவ கிட்ட சொல்லி அவ விருப்பத்தை கேட்கனும். அது தான் இன்னும் மீதி.” என்று தன்னிலை விளக்கம் கொடுத்தான் தேவ்.
“ஓஓஓ” என்று அவன் சொன்னதை தங்களுக்குள் கிரகித்து கொண்டனர் அவன் தோழர்கள்.
“அப்ப அந்த பொண்ணுக்கு உன் மேல எதுவும் தோணலனா என்ன பண்ணுவ??. இல்லனா வேற யாரையாவது விரும்பனா??” – கௌதம்.
“வேற என்ன பண்ண முடியும் கௌ… என்ன பத்தி சொல்லி மறுபடியும் யோசிச்சி பாக்க சொல்லுவேன். அப்பவும் புடிக்கலனாவோ இல்ல நீ சொன்ன மாறி வேற யாரையாவது விரும்புனாவோ கொஞ்ச நாள் சோக கீதம் பாட வேண்டியது தான். அப்பறம் அப்போ என் மனநிலைக்கு என்ன தோணுதோ அத பண்ண வேண்டியது தான்” – தேவ்.
ஏன் அவளுக்கு கல்யாணம் ஆகி இருக்கலாம் என்று யாரும் நினைக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம் தானே!!!. என் அவங்களுக்கு சாதகமான பக்கங்கள் மட்டுமே பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை திருமணம் ஆனதிற்கான அடையாளம் எதுவும் இல்லாததால் இருக்கலாம். என்னவோ!!!
“சரி சீக்கிரம் சொல்லிடு. ரொம்ப நாள் காத்திருந்து அவ உன் மனசுல நல்லா பதிஞ்சிட போறா!!!. அதுக்குள்ள பேசி என்ன ஏதுனு முடிவு பண்ணிடலாம். இன்னும் அம்மாக்குலாம் தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ!!” என்று சொன்னாள் கீதா.
“ஹ்ம்ம் அது கொஞ்சம் யோசிக்க வேண்டியது தான். எனக்கு தெரிஞ்சி அம்மா, யாரு என்னனு தெரியாத பொண்ண விரும்புறேன் சொன்னா கண்டிப்பா கோபப்படுவாங்க. அவங்க குடும்பத்தை பத்தி சொல்லி அவங்களுக்கு புரிய வைக்கனும். அதுக்கு முன்ன நமக்கு முக்கியமா அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சி இருக்கா?? அப்பறம் அந்த பொண்ண பத்தி தெரிஞ்சுக்கணும்” என்று கூறினான் தேவ்.
“ஹ்ம்ம்… சரி எப்படி போய் அந்த பொண்ணு கிட்ட போய் பேச போற??. ஒரே ஒரு முறை தான அந்த பொண்ணு கிட்ட பேசி இருக்க இதுக்கு முன்ன” என்று கௌதம் கேட்டான்.
“ஆமாடா… பாக்கனும் எங்க போய் பேசறதுனு தான் ஒன்னும் தோணல” என்றான் தேவ்.
“பேசாம அவங்க ஆபிஸ்லயே போய் பேசிட்டா என்ன??” – பிரதீப்
“அது சரி வராது. அவ வெர்க் பண்ணற இடத்துல போய் அப்படி பண்ணா அவ மேல தப்பான இம்ப்ரஷன் வர சான்ஸ் இருக்கு. சோ அது வேண்டாம்” என்று கீதா மறுத்தாள்.
“அப்போ அவங்க அப்பார்ட்மெண்ட்ல” – பிரதீப்.
“ஆபிஸே வேண்டாம் சொல்லுறேன். இதுல வீடா??!!” லேசான முறைப்புடன் கீதா.
“அப்போ எப்படி தான் மீட் பண்ணறது??” – பிரதீப்.
கீதாவும் பிரதீப்பும் யோசனையில் ஆழ, அப்போது தன் நினைவில் இருந்து களைந்தான் தேவ்.
“அடப்பாவிங்களா??!!. போய் வேலைய பாருங்கடா. என் பீலிங்க்ஸ் தான் நான் சொன்னேன். நீங்க என்னடானா இப்பவே என்ன அவகிட்ட ப்ரபோஸ் பண்ண வச்சி நாளைக்கு கல்யாணம் பண்ணி நாளானைக்கு தேன் நிலவு அனுப்பிட்டு அடுத்த பத்து மாசத்துல என் குழந்தைக்கும் பேர் வச்சிட்டு தான் மறு வேலை பாப்பீங்க போல. இடத்தை காலி பண்ணுங்கடா முதல்ல. என்ன பண்ணனும்னு நான் யோசிச்சிகிறேன்” என்று கிண்டலாக ஆனால் நானே பார்த்து கொள்கிறேன் என்பதை தெளிவாக சொன்னான் தேவ்.
அதனை புரிந்து கொண்ட அவர்களும் அதற்கு மேல் அந்த பேச்சை வளர்க்காமல் அவர்கள் களைந்தனர்.
“இருந்தாலும் அவனுக்கு எவ்வளவு ஆச பாரேன். கல்யாணம் பண்ண அடுத்த நாளே அவன தேன் நிலவுக்கு அனுப்பி பத்தே மாசத்துல குழந்தைக்கு பேரு வைக்கனுமாம். ரொம்ப தான்” என்று பிரதீப் கீதா சொல்வது தேவ்வுக்கு கேட்டு சின்ன புன்னகையும் தோற்றுவித்தது.
சில நிமிடங்களிலே அடுத்து கீர்த்தி விசயத்தில் என்ன செய்வது என்ற சிந்தனையை பின்னுக்கு தள்ளி தேவ்வும் தனது வேலையை செய்தான்.
மறுபக்கம், சித்தம்மாள் கடவுளிடம் தனது பிரார்த்தனையை தொடங்கினார்.
“அம்மா தாயே என் மகனும் பேத்தியும் சீக்கிரமா சேர்ந்து நல்லபடியா வாழனும். அப்படி நடந்தா இங்கே என் மகனோட குழந்தைக்கு முத முடி இறக்கறேன். ஒரு நாள் முழுசா இந்த கோவில்ல சேவகம் செய்யறேன்” என்று அந்த அம்மனிடம் வேண்டி கொண்டு இருந்தார்.
அவராலும் என்ன தான் செய்ய முடிந்தது. சரவணனுக்கு திருமணம் மட்டுமே செய்ய முடிந்தது. அதன் பின் அவனும் சரி அவளும் சரி மற்றவர்களை பெரிதாக கண்டு கொள்ளாமல் தனித்தனியாகவே வாழ்கின்றனர். இவரும் எது சொன்னாலும் சரவணன், “நீங்க சொன்ன மாறி கல்யாணம் நடந்தது தான??. அப்பறம் என்ன??” என்று கூறியே அவரை மேலும் பேச விடாமல் செய்கிறான்.
இத்தனைக்கும் அவர்கள் செய்த முழு தவறும் அவனுக்கு தெரியாது. சின்னதாய் தெரிந்த அவர்கள் தவறுக்கே அவர்கள் பேச்சை கேட்காமல் கோபத்துடன் சுத்தி கொண்டு இருக்கிறான். முழுவதும் தெரிந்தால் என்ன நடக்குமோ!!!
கொடுப்பாள்…

Advertisement