Advertisement

இடம் 1
“ஹேய் ஹாய்”
“குட் மார்னிங்”
“குட் மார்னிங் கீர்த்தி”
“ஹாவ் எ நைஸ் டே கீர்த்தி”
“குட் மார்னிங் கீத்ஸ்”
“ஹேய் கீரிக்குட்டி!! வா வா குட் மார்னிங்…”
என பல குரல்களுக்கு பதில் குரல் கொடுத்து கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
கீர்த்தி, கீத்ஸ் என எல்லோராலும், கீரிக்குட்டி என அவளது அருகில் அமர்ந்து இருக்கும் அவளது மித்ரன், மிதுனால் அழைக்கப்படுபவள் தான் கீர்த்தி பிரியம்வதா, நமது கதையின் மையம். இவளது வாழ்வில் நடந்த, நடந்து கொண்டிருக்கும், இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளையே இந்த கதையின் வாயிலாக காண போகிறோம்.
இது போல் மரியாதை தான் மிதுனுக்கும் கிடைக்கும். இந்த அலுவலகம் மூன்று தளங்களில் இருக்கிறது. ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு இணைய பயன்பாட்டு  செயலி(Application) சம்பந்தப்பட்டது. அந்த மூன்று தளங்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கீர்த்தி மற்றும் மிதுனை நன்கு தெரியும். இவர்கள் இருவரும் தான் இந்த அலுவலகத்தின் கன்டன்ட் ரைட்டர்ஸ்(Content Writers). இவர்களுக்கு கணிணி சம்பந்தப்பட்ட அறிவும், அதாவது டெவலப்பர்ஸ்(Developers) கூறுவதை புரிந்து கொள்ளும் திறமையும், அதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி எழுதும் ஆங்கில புலமையுமே முதன்மையான தகுதியாகும்.
இவர்களது பணி என்னவென்றால், அந்த நிறுவனத்தின் மூன்று செயலிகளில் உள்ள அனைத்து தகவல்களும் கீர்த்தி மற்றும் மிதுனிடம் பகிரப்பட்டு அது டாக்குமென்ட் செய்யப்படும். மேலும் ஒவ்வொரு செயலியின் அம்சங்கள்(Features) அனைத்தும் அழகான வார்த்தைகளால் கோர்க்கப்பட்டு, அதன் பயன்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு(Customers) புரிந்து கொள்ளும் விதமாக எளிமையாகவும் தொகுத்து வழங்க வேண்டும்.
ஹம்ம்… இவர்களது பணியை பற்றி எளிமையாக விளக்க வேண்டுமெனில், நாம் மிக்ஸி அல்லது க்ரைண்டர் போன்ற சாதனங்கள் வாங்கும் போது அதில் சிறிய அளவிலான ஒரு புத்தகம் இருக்கும். அதில் பழச்சாறு செய்ய இந்த ஜாரை(Jar) உபயோகப்படுத்தவும். இதை திருப்பினால் அதி வேகமாக அரைப்படும் என்பது போன்ற தகவல்கள்/குறிப்புகள் இருக்கும் அல்லவா!!. அது போல் குறிப்புகளை இணைய செயலிகளுக்கு எழுதுவதே இவர்களது பணி.
கீர்த்தி தனது இருக்கையில் அமர்ந்தவுடன், “இன்னிக்கு என்ன லேட் கீரிக்குட்டி??. என்னுடனே வந்து இருக்கலாம் இல்ல” என்று கேட்டான் மிதுன்.
கீர்த்தி மற்றும் மிதுனின் வீடும் ஒரு அப்பார்ட்மென்ட் தான். தினமும் அவனுடன் தான் வருவாள் மற்றும் வீட்டிற்கும் போவாள். இன்று தான் நானே வரேன் என்று கூறி விட்டாள்.
அவன் ஒவ்வொரு முறை கீரிக்குட்டி எனும் போதும் அவளுக்கு கோபம் பொத்து கொண்டு வரும் தான். கூடவே ஒரு வித உரிமை உணர்வும் சேர்ந்து தோன்றும். ஒருவேளை அது பொய் கோபமோ!!?? அல்லது தற்போது உரிமையுடன் அவளிடம் கேலி பேசி கிண்டல் செய்வது அவன் மட்டும் தான் என்பதால் இருக்குமோ என்னவோ!!!.
எத்தனையோ முறை அவனிடம் சொல்லி பார்த்து விட்டாள். ஆனால், என்ன சொன்னாலும் அவன் கேட்க மாட்டான். அது மட்டுமில்லாம் அவளின் மீது மிகுந்த அக்கறை கொண்டவன். கீர்த்தியை விட ஐந்து வயது தான் பெரியவன். ஆனால் ஏதோ கீர்த்தி அவனே பெற்றெடுத்த பிள்ளை போல் பார்த்து கொள்வான். சிலரை காரணம் இல்லாமலே நமக்கு நெருங்கியவர்களாக எண்ண தோன்றும் அல்லவா!!?? அது போல் தான் மிதுனுக்கு கீர்த்தி மீது தோன்றியதும். அவனுக்கு எந்த தேவை என்றாலும் அவளை தான் நாடுவான். அதே போல் தான் அவளும். ஒன்றும் புரியாமல் இங்கே அவள் வேலைக்கு சேர்ந்த போது அவன் தான் அவளுக்கு துணையாக இருந்து பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தான்.
இங்கே பணிக்கு சேர்ந்த கடந்த ஆறு மாதங்களாக கீர்த்தி, தனது வீட்டிற்கு சென்றதில்லை. அலைபேசியில் பேசியதை போல் தெரியவில்லை. ஏன் அவளது குடும்பத்தை பற்றி கூட பேசியது இல்லை. அவளது குடும்பத்துடன் ஏதோ பிரச்சனை போல என்பதை மட்டும் புரிந்து கொண்ட மிதுனும் அவளிடம் அதை பற்றி கேட்க மாட்டான்.
மேலும் அவளது குழுவில் அவளை தவிர இருக்கும் ஒரே ஒரு நபர் அவன் மட்டும் தான். அதனால் அவர்களுக்குள் இன்னும் இன்னும் தான் நெருக்கம் ஏற்பட்டது.
மிதுன் குடும்பம் சிவகாசியில் உள்ளது. இவன் மட்டும் வேலை நிமித்தமாக சென்னையில் உள்ளான். அவன் அலுவலகம் அருகிலே ஒரு அப்பார்ட்மென்ட்டில் நண்பர்களுடன் இணைந்து தங்கி உள்ளான். அவனது வீட்டிற்கு மூன்று வீடுகள் தள்ளி கீர்த்தி அவளது அலுவலக தோழமைகளுடன் தங்கி உள்ளாள்.
முதலில் ஒரு விடுதியில் தங்கி இருந்தாள், அதன் பின் அலுவலக நண்பர்கள் கிடைக்கவும் அவர்களுடன் குடி பெயர்ந்து விட்டாள். அவள் தங்கி இருப்பது இரண்டு படுக்கை அறை வசதி கொண்ட வீடு. பொதுவாக இந்த மாதிரி வீடுகளில் தங்கும் நபர்கள் அறைக்கு இவ்வளவு தொகை என மொத்த வாடகையை பிரித்து விடுவர். கீர்த்தி தனக்கு தனி அறை வேண்டுமென கூறி அந்த அறைக்கான தொகையை கொடுத்து விடுவாள். மற்றொரு அறையை இருவர் பகிர்ந்து கொண்டு இருந்தனர். அதில் ஒருவள் ஒரு வாரத்திற்கு முன்பு தான் அறையை காலி செய்து விட்டு சென்றாள். அவளுக்கு நாளை மறுநாள் திருமணம். அதற்காக நாளை அவளது வீட்டுக்கு பள்ளி மற்றும் அலுவலக தோழமைகள் அனைவரும் செல்ல உள்ளனர்.
கீர்த்திக்கு அங்கு செல்ல விருப்பம் இல்லை என்றாலும் அவளால் ஒரு அளவுக்கு மேல் தவிர்க்க முடியவில்லை. அவளுக்கு இந்த கல்யாணம் என்ற வார்த்தையே ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகிறது.
சரி நாளை பிரச்சனை அதை நாளை பார்த்து கொள்ளலாம்.
தற்போது இருக்கும் பிரச்சனை…
இவர்கள் குழுவுக்கு புதிதாய் ஒரு நபரை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஹெச் ஆர் டீம் போட்டியாளர்களுக்கு எழுத்து தேர்வு வைத்து அதில் தேர்வானார்களின் ப்ரொபைலை மிதுனுக்கு அனுப்பி இருந்தனர். அவனுடன் இணைந்து கீர்த்தியும் அதை பார்க்க இருந்தாள்.
அதற்கு முன் அவனது கேள்விக்கு அவள் பதிலை கூறினாள்.
“இல்ல மித்து. சாப்பிட லேட் பணணிட்டேன். அதான்” என்று கீர்த்தி பதிலை சொல்லி விட்டு வேலையை தொடர்ந்தாள்.
“ஹேய் மித்து.. இந்த பையன் நல்லா எஸ்ஸோ(Eassy) எழுதி இருக்கான். ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் (Spelling Mistakes) கூட கம்மியா தான் இருக்கு” என்று ஒரு பையனின் எழுத்து தேர்வு விடை தாளை அவனிடம் காட்டினாள்.
“இந்த பொண்ணும் நல்லா பண்ணி இருக்கு. இதை பாரு” என்று அவன் ஒரு பெண்ணின் விடை தாளை அவளிடம் நீட்டினான்.
இருவரும் அதே போல் பேசி ஒரு ஐந்து நபர்களை அடுத்த கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுத்தனர்.
அதில் இருந்து மூவர் மட்டும் அதற்கு அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டு இறுதியாக இரு நபர்கள் ஒரு மனதாக மிதுனால் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இரு நபர்களை பற்றியும் ஹெச் ஆர் டீமுக்கு மெயில்(Mail) அனுப்பி விட்டான் மிதுன். அதன் பின் அவர்கள் கல்லூரியில் பேசி விட்டு எப்போது இங்கே வேலையில் இணைவார்கள் என்பது பற்றிய தகவல்களை தருவார்கள்.
இந்த வேலை எல்லாம் முடிப்பதற்கே மதிய உணவு இடைவேளையே வந்து விட்டது.
உணவு முடித்து விட்டு கீர்த்தி தனது இடத்திற்கு வருவதற்கும், கீர்த்தியின் லேன்ட்லென் எக்ஸ்டென்ஷன் ஒலிப்பதற்கும் சரியாய் இருந்தது.
லேன்டலைன் எக்ஸ்டென்ஷன் என்பது வேறு ஒன்றுமில்லை. நமது சாதாரண லேண்ட்லைன் போல தான். ஆனால் அதிலிருந்து அவர்களது அலுவலகத்திற்குள் மட்டுமே பேசி கொள்ள முடியும்.
“ஹலோ” – கீர்த்தி
“ஹேய் கீர்த்து… ஒரு புது அம்சம்(Feature) எங்க செயலியில் பண்ணி இருக்கு. அதை டாக்குமென்ட் பண்ணனும். நீ ப்ரீயா இருந்தா சொல்லு… நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுறேன்” என்றார் அந்த பக்கம் இருந்தவர்.
“இல்ல… நான் இப்போ வரேன்” என்று அவரிடம் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள்.
அதன் பிறகு மிதுனிடமும் சொல்லி விட்டு, ஒரு ரெக்கார்டர் மற்றும் தனது மடி கணிணியையும் எடுத்து கொண்டு அவரது இருப்பிடம் சென்றாள்.
ஹான்… இதை சொல்லல பாருங்களேன்… கீர்த்தியின் உயர் அதிகாரி/மென்டர்/மேனேஜர் என எல்லாம் மிதுன் தான்.
மீண்டும் தனது இடத்திற்கு வந்த கீர்த்தி அவரிடம் கேட்டு வந்த தகவல்களை எல்லாம் மிதுனிடம் கூறி, அதை எவ்வாறு ஒருங்கிணைந்து எந்த விதத்தில் கொடுப்பது என மிதுனுடன் கலந்துரையாடி முடிவு செய்து விட்டு அதற்கான வேலைகளை தொடங்கினாள்.
அந்த வேலைகளிலே நேரங்கள் கடந்து, ஆறு மணியை தொட்டு இருந்தது.
தினமும் மிதுனுடன் தான் வீட்டிற்கு செல்வாள் என்பதால் அவளை அழைத்து கொண்டு இருந்தான்.
“ஹேய் கீரி குட்டி… சீக்கிரம் வா.. உன்ன வீட்டுல விட்டுட்டு நான் வெளியே போகனும். மீதியை நாளைக்கு பாத்துக்கலாம். வா.” என்று அவரை துரிதப்படுத்தினான்.
“ஹான்… இதோ… வந்துட்டேன்… வந்துட்டேன்… வா போகலாம்” – கீர்த்தி.
“நாளைக்கு நான் மேரேஜ்க்கு வர மாட்டேன்டா. பாத்து போயிட்டு வரனும். எப்படியும் உன் ஹவுஸ் மேட் வருவாங்க இல்ல??” – மிதுன்.
“ஆமா மித்து… வருவாங்க” – கீர்த்தி.
“அப்போ சரி” என்றவன் தொடர்ந்து, “எப்படி கிளம்பறீங்க??” என்று கேட்டான்.
“நாளைக்கு ஆபிஸ் வந்துட்டு, ஈவ்னிங் ஒரு நாலு மணி போல வீட்டுக்கு வந்து அப்பறம் கேப் புக் பண்ணி அதுல போயிட்டு வந்துடுவோம். இன்னும் 2 பேர் எங்க கூட வருவாங்க” என்று நாளை எவ்வாறு கல்யாணத்திற்கு செல்வார்கள் என்று கூறினாள் கீர்த்தி.
“சரி” என்று சொல்லி விட்டு, அவளை அப்பார்ட்மென்ட் வாசலில் இறக்கி விட்டு விட்டு தனது வேலையை பார்க்க சென்று விட்டான் மிதுன்.
“வீடு பத்தின வேலையா??” – கீர்த்தி.
“ஆமாடா… என்னனு முடிவு பண்ணிட்டு சொல்லறேன்டா. இப்போ நீ உள்ள போ” – மிதுன்.
“மித்து… வரும் போது வெளிய சாப்பாடு வாங்கிட்டு வரயா??” – கீர்த்தி.
அவனிடம் கேட்பதற்கு அவளுக்கு எந்த தயக்கமும் ஏற்பட்டது இல்ல. அவனை தன் நெருங்கிய உறவென அவள் மனம் எண்ணுகிறது.
சிரிப்புடன், “சரி… என்ன வேணும்??” என்று அவன் கேட்க, “ஏதோ ஒன்னு. எனக்கு இன்னிக்கு வெளிய சாப்பாடு சாப்பிடனும் தோணிடுச்சி. அதான்” என்று பதில் கொடுத்தாள்.
“சரி… வாங்கிட்டு வரேன்” என்று அவளிடம் சொல்லி அவளது தலையை கலைத்து விட்டு வெளியே கிளம்பினான் மிதுன்.
கொடுப்பாள்…

Advertisement