Advertisement

“பாப்பாங்க., நான் சொல்லி இருக்கேன் கண்டிப்பா மெடிக்கல் பீல்ட் வேண்டான்னு சொல்லிட்டேன்., கண்டிஷனே  அதுதான்.,  பையன் கொஞ்சம் ஜாலியான டைப்பா இருக்கணும்., மத்த படி எந்த வேலையில் இருந்தாலும் எனக்கு ஓகே அப்படிங்கற மாதிரி தான் சொல்லி இருக்கேன்”…. என்றாள்.

“சரி சரி., உன் ஆசைப்படி மாப்பிள்ளை கிடைக்கட்டும் னு கடவுள் ட்ட  ப்ரையர் பண்ணுவோம்” என்று சொன்னபடி தோழிகள் இருவரும் அவர்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்தனர்…

இருவரும் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கின்றனர்., அவர்களுக்கு சமைப்பதற்கு என்று காலையில் ஒரு பெண்மணி வந்து சமையல் செய்து வைத்துவிட்டு வீட்டு வேலைகளையும் செய்து வைத்துவிட்டு போய்விடுவார்.,  இவர்கள் இருவருக்கும் அலுவலக வேலை சரியாக இருக்கும் என்பதால் மற்ற வேலைகள் எதுவும் செய்வதில்லை.,

இப்பொழுது வந்தவுடன் இரவுக்கு என்று தயார் செய்து வைத்திருக்கும் குருமாவை எடுத்து சூடு செய்து விட்டு.,  இருவருக்கும் சப்பாத்தி மட்டும் போட்டுக் கொள்வார்கள். அல்லது கடையில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்வார்கள். இதுதான் இவர்கள் இருவருக்குமான நடைமுறை வாழ்க்கை…

வீட்டிற்கு வந்து குளித்து உடை மாற்றிக் கொண்டு தன் ஹெட் சொன்ன வேலையை பார்ப்பதற்காக தன்னுடைய லேப்டாப்பை எடுத்துக் கொண்டு வேலையில் அமர்ந்தாள் சாரு., அதேநேரம் சித்து க்கு போன் வர அவள் வீட்டினரிடம் பேச அறைக்கு சென்றுவிட்டாள்..

சற்று நேரத்தில் இவளுடைய தம்பி போன் செய்து அழைத்தான். “சாரு  ஃப்ரீயா இருக்கியா” என்று கேட்டான்.

“சொல்லுடா.,  என்ன விஷயம் திடீர்னு கூப்பிட்டு இருக்க” என்று கேட்டாள்.

” அம்மா உன் கிட்ட பேசணும் சொன்னாங்க”., என்று அவன் பதில் சொன்னான்.

“டேய் என்னைய ஞாபகம் இருக்கா.,  உங்களுக்கெல்லாம் உலகமே ஹாஸ்பிடல் னு இருப்பீங்கன்னு., இப்பதான் சொல்லிட்டு இருந்தேன் சித்து ட்ட., பரவாயில்லடா என்னை ஞாபகம் வச்சிருக்கீங்க”., என்று சொல்லி “போனை குடு” என்று சொன்னாள்…

“ஏன் சாரு இப்படி பேசுற “., என்ற படியே பேச்சை தொடங்கினாள் சாரூபாவின் அம்மா..

“பின்னே எப்படிம்மா தொடங்கணும்.,  ஒவ்வொருத்தர் வீட்லையும் எவ்வளவு கேர் எடுத்துக்கிறாங்க.,  எக்ஸாம்பிள் சித்து வ எடுத்துக்கோங்க., அவ ஆபீசு விட்டு வர்ற டைமை கணக்கு பண்ணி., அவங்க அம்மா தினமும் எப்படியும்.,  அந்த டைம் கொஞ்சம் முன்னே பின்னே னாலும் கரெக்ட்டா கூப்பிடுவாங்க., வீட்டுக்கு வந்துட்டியா.,  சாப்டியா., என்ன செய்ற., ஆபீஸ் எப்படி போச்சு., ன்னு…, என்னைக்காவது நீங்க கேட்ருக்கீங்களா., சாப்டியா, தூங்கினியா ன்னு.,  எப்படியோ நம்மள தொந்தரவு பண்ணாம அவ எப்படி இருந்தாலும் சரி.,  அப்படிங்கற மாதிரி தானே யோசிக்கிறீங்க.,  உங்களுக்கு உங்க வேலை எவ்வளவு முக்கியமோ., அதைவிட உங்க பிள்ளைங்க முக்கியம் னு உங்களுக்கு தோனவே இல்ல இல்ல..,  அதனால தான் சொன்னேன் இதுல என்ன தப்பு இருக்கு” என்றாள் நீளமாக….

“ஆமாடி உனக்கு குறை சொல்ல ஒரு வாய்ப்பு கிடைச்சா போதும்., உடனே அதை புடிச்சிட்டு அதையே பேசிக்கிட்டே இரு., சரி இப்போ அதுக்கு  என்ன பண்ண.., உனக்கு ஒரு விஷயம் பேசுவதற்காக தான் கூப்பிட்டேன்”., என்றார்.

“தெரியும்., தெரியும்., நீங்க விஷயம் இல்லாம கூப்பிட மாட்டீங்கன்னு தெரியும்., சொல்லுங்க என்ன விஷயம்”., என்றாள்…

“ஒரு அலைன்ஸ் வந்து இருக்கு., நாளைக்கு போட்டோ கிடைக்கும்., கிடைச்ச உடனே அனுப்பி வைக்கிறேன்., பார்த்துட்டு உன் முடிவ சொல்லு”., என்று மட்டும் சொன்னார் அவளின் அம்மா…

“நான் பாக்குறேன் மா”., என்று சொன்னவள்., “சரி என்ன படிச்சி இருக்காங்க., அவங்க ஃபேமிலி ல எத்தனை பேரு” என்று கேட்டாள்.

“அதெல்லாம் நீ போட்டோ பார்த்ததுக்கு அப்புறம் சொல்றேன்., போட்டோ பார்த்து பிடிச்சிருக்கா., இல்லையான்னு சொல்லு”.,  என்று சொன்னபடி மற்ற விஷயங்களை பேசி விட்டு வைத்து விட்டார்…

இவளும் போனை பார்த்தபடி ‘அதுதானே அவங்க சொல்ல வேண்டிய விஷயம் சொல்லி முடிச்ச உடனே வச்சாச்சு.,  அவ்வளவுதான்’ என்று சொல்லி புலம்பிக் கொண்டு அவள் வேலையை தொடர்ந்தாள்.

அதே நேரம் சென்னையில் உள்ள அந்த மிகப்பெரிய மருத்துவமனையில் டாக்டர் மித்ரனின் அறையில் அவனது நண்பர்களோடு அமர்ந்திருந்தான்., “என்னடா கேஸ் கம்மியா” என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.,

“இல்ல இன்னைக்கு நிறைய அப்பாயின்மென்ட் கொடுக்கல” என்றான் மித்ரன்.,

“ஏன்” என்று கேட்டார்கள்.

“இன்னைக்கு  கொஞ்சம் ஹெவி ஒர்க்.,  பகல்ல ஆபரேஷன் முடிய லேட்டாகுது. அதனால  சாய்ந்திரம்  அதிகமா அப்பாயின்மென்ட் கொடுக்காதீங்க னு  சொல்லிட்டேன்.,  இப்போ எல்லாம் செம டயர்டா பீல் பண்றேன்.,  வீட்டுக்கு போகணும்”., என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மித்ரனின் அப்பாவிடமிருந்து போன் வந்தது…

“மித்ரா மேரேஜ்க்கு பதிந்து வைத்த இடத்திலிருந்து ஒரு பொண்ணோட போட்டோ அனுப்புறேன்னு சொல்லி இருக்காங்க டா., நாளைக்கு நீ பார்த்துட்டு முடிவு சொல்லு அதுக்கப்புறம் பேசலாம்”., என்று சொன்னார்…

“அப்பா மத்த டீடெயில்ஸ் என்னன்னு கேட்டுக்கோங்க.,  எதுல ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டுக்கோங்க.,  ஏஜ் என்ன எல்லாம் கரெக்டா கேளுங்க.,  அந்த பொண்ணுக்கு ஒரு 25 க்கு மேல இருந்தா நல்லா இருக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தான்.,

அவன் தந்தையோ “பொண்ணுக்கு 25 இதுதாண்டா சொன்னாங்க.,  எனக்கு தெரியல நாளைக்கு வரட்டும் கேட்டுட்டு பேசுவோம்”., என்று சொன்னார்.

” சரி பார்த்துக்கோங்க” என்று மட்டுமே சொன்னான்….

அவன் பேசுவதை பார்த்திருந்த நண்பர்கள் ஹே என்று சத்தம் போட்டனர். “இதுக்கு தான் இங்கே வந்தோம் நீ  என்ன சொல்லுற னு எங்க காதால கேட்கனும் னு தான் வந்தோம்” என்றனர்.

“டேய் ஒரு வழியா இப்பவாவது கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீயே.,  அதுவே பெரிய விஷயம் தெரியுமா”.,  என்று நண்பர்கள் கிண்டலாக சொன்னார்கள்.

” ஏண்டா இந்த வயசுக்கு அப்புறம் பண்ணினா., என்ன தப்பு” என்று கேட்டான்.

” தப்பு ஒன்னும் இல்ல ராசா., உன் வயசுல உள்ள நாங்க எல்லாம் கைல ஒரு குழந்தையோட சுத்துறோம்., நீ மட்டும்  பேச்சிலர் லைப்பை என்ஜாய் பண்ணிட்டு.,  இப்ப தான் கல்யாணம் பண்ணிக்க போற, அதை சொன்னோம்”.,  என்றனர்.

“ஏண்டா இனிமேலும் நான் பேச்சிலர் லைஃபை என்ஜாய் பண்ண தான் செய்வேன்”., என்றான்.

” டேய் கல்யாணமே பிடிக்காது பிடிக்காது ன.,  இப்ப மறுபடியும் என்ஜாய் பண்ண போறியா”., என்று கேட்டனர்.

” பார்க்கலாம்.,  வர்ற பொண்ணு கைல தான் இருக்கு”., என்றான்.

” எப்படியும் டாக்டர் பொண்ணு தான் பார்ப்பாங்க.,  பீல்ட் புரிஞ்சுகிட்ட பொண்ணா இருந்தா பிரச்சனை இல்ல.,  நம்ம வேலைய பாத்துட்டு போயிட்டே இருக்கலாம்., இதுலயும் புரியாமல் ஏதாவது சொதப்புற பொண்ணா இருந்தா., ரொம்ப கஷ்டம்.,  பாப்போம் டா நாளைக்கு பார்த்தா தானே தெரியும் அவசரப்பட்டு நம்ம முடிவு பண்ண வேண்டாம்… என்றனர்.

” பார்த்த உடனே பிடிக்கனும்., மனசுல அப்படியே ஒட்டிக்கனும்” என்றான் மித்ரன்

” டேய்… டேய்” என்று நண்பர்கள் கத்த….

“ஒரு பேச்சிக்கு சொன்னேன் டா… எல்லோரும் சேர்ந்து ஒட்டாதீங்க”., என்றான்.

“ஆமடா இப்படித்தான் சொல்லுவ.,  மேரேஜ் ஆனதுக்கப்புறம் அந்த பொண்ணு என்ன சொன்னாலும் தலையாட்டுற.,  நிலைமைக்கு வந்து விடாதே”., என்று சொல்லி நண்பர்கள் கிண்டல் செய்தனர்.

“கண்டிப்பா அப்படி இருக்காது.,  கல்யாணம் பண்ண சம்மதிச்சது., கல்யாணம் ஆகலைன்னு மத்தவங்க சொல்றத வச்சி வீட்ல ஒரு மாதிரி வருத்தப் பட்டாங்க அதுக்காக தான்.,  அது மட்டுமில்லாம சீக்கிரம் கல்யாணம் பண்ணி  ஒரு குழந்தை பெத்துக்கோ.,  வயசு போகுது அப்படின்னு சொல்றாங்க., கரெக்ட் ஆ  ஒரு வருஷத்துக்குள்ள  பேபி அவ்வளவு தான்” என்று சொன்னான்.

“டேய்., நீ என்னடா இதிலே போய் மெஷின் மாதிரி கால்குலேட்  பண்ணியா பேசுவ” என்று நண்பர்களில் ஒருவன் அதட்டினான்.

” வேற என்ன பண்ண சொல்ற,  பொண்டாட்டி பின்னாடி கொஞ்சிக்கிட்டு தாங்கிக்கொண்டு இந்த சினிமா இதிலெல்லாம் காண்பிக்கிறாங்களே., அந்த மாதிரி இருக்கணும் னு சொல்லுறீயா., என்று கேட்டான்.

“போடா., உனக்கு ரோபோ னு பெயர் வைத்திருப்பது கரெக்டா தான் இருக்கு”.,  என்று மற்றொருவர் சொன்னான்.

” போடா போடா பார்த்துவிடலாம்” என்ற படி வீட்டிற்கு கிளம்ப தயாரானான் மித்ரன்…

பெரிய திருமண தகவல் நிலையம் செல்லாமல் நால்வர் குடும்பத்திற்கும் வேண்டப்பட்டவர் கையில் பெண் பார்க்க  தேவையான தகவல்களை தந்திருக்க.,  அதே இடத்தில் சாரூபா வின் அம்மாவோடு அரசாங்க மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் மூலமாக சாரு வின் வீட்டிலும் தகவல்களை தந்திருக்க.,  திருமண தகவல் நிலையத்தில் ஏற்பட்ட குட்டி கலட்டாவினால் போட்டோவிற்கு பின்புறம் எழுதப்பட்ட பெயர் விலாசத்தோடு புகைப்படம் மட்டும் இருவீட்டிற்கும் பகிரப்பட்டது. கொடுத்திருந்த பயோட்டேட்டா மற்றும் ஜாதகம் ஏற்பட்ட கலாட்டா வில் தவறியிருந்தது.

விதி வலியது தான்மதி இருந்தும் விதி வழி செல்வது இயற்கை நீதி… 

Advertisement