Advertisement

இன்னும் டைம் இருக்கு பா…  எனக்கு தெரியும்  இன்னும் முடியாதுன்னு தோணுச்சுன்னா நானே வீட்ல இருந்துப்பேன்…. விடு பார்த்துக்கலாம்…  இறங்கி வந்து ட்டே இருக்கேன் கொஞ்சம் வெயிட் பண்ணு என்று சொன்னபடி மெதுவாக கிளம்பி அவர்கள் காத்திருக்கும் இடத்திற்கு  நடந்து வந்து கொண்டிருக்கும் போதே அவளுக்கு தோன்றியது….  இப்போதெல்லாம் சிவரஞ்சனை  அதிகமாக மனது தேடுகிறது என்று இது போன்ற நேரத்தில் தான் கணவன் அருகாமையை தேடும் என்று எங்கோ படித்தது மனதில் இன்னும் அழுத்தியது….

    அவன் தன்னைத் தேடி இருப்பானா என்று மனதிற்குள் சிறு எண்ணம் தோன்றி கொண்டே இருந்தது…..

     நண்பர்கள் இருக்கும் இடத்திற்கு வரும்போது அவளுக்கு தன் கண்களையே நம்ப முடியாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே வந்தாள்….ஏனெனில் அவர்களோடு ஷ்யாம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான்…. முன்பே வருவதாக சொன்னவனுக்கு சில முக்கிய ஆபரேஷன் இருந்ததால் வர முடியவில்லை எனவே அவனது பயணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்து நான்கு மாதம் கழித்து இப்போது தான் வந்திருந்தான்…  உடனே வர வேண்டும் என்று ஆசைப்பட்ட அவனுக்கு சந்தர்ப்ப சூழ்நிலை வரமுடியவில்லை…  இங்கிருந்த சூழ்நிலையும் அவள் கோபத்தையும் சொல்லியே நண்பர்கள் தடுத்து வைத்திருந்தனர்….

    தூரத்தில் பவித்ரா நடந்து வருவதை பார்த்தவன் ஒருமுறை அவள் வயிறை பார்த்துவிட்டு நண்பர்களிடம் ஹெல்த்த ஒழுங்கா பார்க்கிறாளா என்று கேட்டுக் கொண்டிருந்தான்….  இப்போ கொஞ்சம் கோபம் குறைந்து இருக்கும்னு நினைக்கிறேன்….  இப்ப அவ ஹஸ்பண்ட் மேலையும் கோபம் இருக்கிற மாதிரி  இல்லை…..  ஆனால் எந்த விஷயத்தையும் இதுவரைக்கும் சொல்லல நீங்க கேட்டு பாருங்க….  கண்டிப்பா உங்க கிட்ட சொல்லிருவா…..  ஆனால் ஸ்ட்ராங்கா சொல்லணும் நான் உன் பிரண்டு ன்னு  நெனச்சா  நீ சொல்லு அப்படின்னு சொன்னீங்கன்னா….  அவள் சொல்லிவிடுவாள்….  உங்களை அந்த அளவு ஒரு பிரண்டாதான் வச்சிருக்கா…..  உங்க அம்மாவும் அவங்க அம்மாவும் பண்ணின சொதப்பல்தான் எல்லாத்துக்கும் காரணம் தோணுது இல்லேன்னா இந்நேரம் கேக்குறதுக்கு முன்னாடி  உங்ககிட்ட வந்து சொல்லி அழுது இருப்பா என்று ரமேஷும் நிர்மலும் சொல்லிக் கொண்டிருந்தனர்….

   ஷ்யாம் அவள் அருகில் வரும் முன் சொன்ன வார்த்தை இதுதான் அது என்னமோ உண்மைதான் கண்டிப்பா சொல்லி இருப்பா…. தெரியாத்தனமா அம்மாகிட்ட ஃப்ரெண்ட்லியா இருக்கிறேன் கிற  சில விஷயங்களை சொல்ல போய்…  அவங்க  எல்லாத்துக்குமே ஒரு குழப்பத்தை உண்டு பண்ணி விட்டுட்டாங்க…  அதுதான் விஷயம் என்று பேசிக் கொண்டிருந்தனர். அவள் அருகில் வந்ததும் சிரித்தபடியே ஷ்யாம் அமர்ந்திருக்க அவள் வந்து எப்போதும் போல் உரிமையாக அவனைத் தோளில் தட்டி நல்லா இருக்கீங்களா ஷ்யாம் என்றாள்….

    அப்பாடா பேசிட்டியா நீ பேச மாட்டயோ ன்னு பயந்து போய் இருந்தேன் தெரியுமா…  என்றான் ஷ்யாம்….

   உண்மையான பிரண்ட்ஷிப் க்கு உண்மையான அன்போட இருக்கும் போது கோபம் ரொம்ப நாள் நிலைக்காது….  வாழ்க்கையில நிறைய அனுபவம் வந்துருச்சு… அதுதான் விஷயம் என்று சிரித்துக்கொண்டே அவனுக்கு பதில் சொன்னாள்….

   பப்பு நீ ரொம்ப மாறிட்டே டா என்றான் ஷ்யாம்…

    ஆமா நாங்க இப்ப மூணு பேரு நல்லா மாறி தான் இருப்பேன் என்றாள் சிரித்துக்கொண்டே….

     நண்பர்கள் எப்போதும் போல் அவளை அங்கு ஒரு பழச்சாறை அருந்த வைத்து பின்பு அழைத்துக் கொண்டு சென்றனர்…. எப்போதும் போல் இவர்களை கொண்டு வந்து அவர்கள் வீட்டில் விட்டு விட்டு உடனே கிளம்புபவர்கள்….  அன்று அமர்ந்துவிட்டனர் பவித்ரா எழுந்து ஏதாவது உணவு செய்யலாம் என்று கிளம்பும் போது ஷ்யாமும் மற்ற நண்பர்களும் பிடித்து வைத்து அவளை அமர வைத்தனர்…. இன்னைக்கு ஒரு நாளைக்கு வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம்…. நீ இப்போ வந்து எங்களுக்கு விஷயத்தை சொல்ற என்று பிடிவாதமாக இழுத்து வைத்து பேசவும்… சிரித்துக்கொண்டே கண்டிப்பா சொல்றேன் என்றபடி ஆனா ரெப்பிரஷ் ஆகி வர்றேன் என்று சொல்லி அனைவரையும் அமர வைத்து விட்டு சென்றாள்…. அவள் வருவதற்குள் இரவு உணவு களையும் நண்பர்கள் ஆர்டர் செய்துவிட்டு அனைவரும் அமர்ந்தனர்…..

ரெப்ரஷ் ஆகி வந்தவள் ஷ்யாமிடம் அமர்ந்தாள்…

என்ன தெரியணும் எல்லாரும் எதிர்பார்க்கிறீங்க சொல்லுங்க என்றபடி அமர்ந்தாள்…

    நீ ஊர்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் அங்க என்ன நடந்துச்சு அப்படிங்கிறதை எதுவுமே நீ சொல்லல உங்க அப்பாட்ட கேட்கும் போது ஒரே வார்த்தையில் உங்க அப்பா சொன்னது என்னன்னா உங்க அம்மா ஷியாம் பத்தி பேசி இருக்காங்க…  அதை வச்சு வீட்டில் பிரச்சனை வந்துருச்சு அப்படிங்கற மாதிரி சொல்லிவிட்டு வேறு எதுவும் சொல்லல…  நீ எங்க இருக்கே ன்னு கூட உங்க அப்பா விசாரிக்கலை இப்போ உண்மை தெரிஞ்சாகனும் சொல்லு நீ கோபத்தில் வந்த ன்னு மட்டும் தெரியும்…  அதையும் உங்க பேரன்ஸ்  சொல்லித்தான் தெரியும் சொல்லு என்று நிர்மல் சொல்லவும்….

அது ஃபேமிலி பிராப்ளம் எப்படி சொல்றதுன்னு எனக்கு புரியல…. அது எங்க அப்பாவோட தங்கச்சியால் வந்த பிரச்சனை அந்த பிரச்சனையால  இடையில எங்கம்மா வார்த்தை விட்டாங்க…. அந்த வார்த்தையால  நல்ல பிரச்சினை வந்திருச்சு…. பட்  நீங்க என்ன நினைக்கிறீங்க னு எனக்கு தெரியல….  பட் வேற எந்த பிரச்சினையும் கிடையாது….

    உனக்கும் உன் ஹஸ்பண்ட் கும் என்ன பிரச்சனை அத  சொல்லு….

    எங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சினையும் கிடையாது என்னோட ஸ்டடிஸ் முடியவும்  நான் என் ஹஸ்பன்ட் ட்ட போயிடுவேன்….

     நெஜமாவா சொல்ற…

     உண்மையா தான் சொல்றேன்….

   அப்புறம் ஏன் இங்க வந்து இத்தனை நாள்ள   உன் ஹஸ்பண்ட் பத்தி டீடெயில்ஸ் எங்களுக்கு சொல்லல…. உன் ஹஸ்பண்ட் நேம் கூட நீ எங்ககிட்ட சொல்லலை… உன் அப்பாட்ட கேட்டதற்கு  அப்பா அதுக்கு மேல எந்த டீடெய்லும் சொல்ல விரும்பல ன்னு போன வச்சிட்டாரு…. அவர் என்ன கோவத்துல இருந்தாரோ தெரியாது போன வச்சுட்டாரு நீ உன் ஹஸ்பன்ட் கூட  பேசின மாதிரி தெரியல….

உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் எந்த பிரச்சினையும் இல்லை ன்னா…. நீ அவர்கிட்ட பேசி இருக்கணும் அல்லது அவராவது உனக்கு கால் பண்ணி இருக்கனும்….  ரெண்டு பேருக்கும் எந்த கான்டக்ட் இருக்குற மாதிரி இல்ல…  அவர் பெயரைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு நாங்க உனக்கு வேண்டாதவர்களா போயிட்டோம்  இல்ல….

     லூசா டா நீங்க எல்லாம் அவரப் பத்தி சொல்லலைன்னா… சொல்லக்கூடாத அளவுக்கு ஒன்னும் கிடையாது….

அவரை மாதிரி ஒருத்தர் எனக்கு கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும்….ஹீ இஸ் அ லவ்லி பர்சன்….அவள் கணவனை பற்றி பேசும் போது அவள் முகம்   கண்டவர்கள்….இவள் எந்த அளவு அவனை விரும்பி இருப்பாள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது…. ஆனாலும் தன்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் முன் சில விஷயங்கள் பேச வேண்டும் என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்….

      சரி நான் சொல்றேன் எல்லாத்தையுமே சொல்றேன் ஆனா அதுக்கு முன்னாடி நான் சில விஷயங்கள் உங்க கிட்ட எல்லாம் பேசியாகணும்…..  அதுக்கு நீங்க எனக்கு  கோப்பரைட் பண்ணா மட்டும் தான் நான்  விஷயத்தை உங்க கிட்ட சொல்ல முடியும்….

   சரி உனக்கு என்ன தெரியணும் சொல்லு…. நீ  கேளு நாங்க சொல்றோம்….

     சார் நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம உக்காந்திருக்கீங்க அத சொல்லுங்க…. என்றாள் ஷியாமிடம்….

    நீ எப்ப உன் ஹஸ்பன்ட் கூட போய் சேருவியோ அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….

     நீ குழந்தைகளுடன் தனியாக இருக்கிறது நான் விரும்பல… என் மனசுல ஒரு கில்ட்டி கான்சியஸ் இருந்துட்டே இருக்கு…  ஏன்னா எங்க அம்மாவளா  தான் பிரச்சனை ஆரம்பிச்சிடுச்சு ன்னு எனக்கு தெரியும்… எங்க அம்மா உன் மேரேஜ் பேசின சமயத்துல உங்க அம்மா கிட்ட பேசி இருக்காங்க…. இது சம்பந்தமா  எனக்கு  அப்போ தெரியாது…. ஆனா உங்களுக்குள்ள பிரச்சனைன்னு சொன்னதுக்கப்புறம் எங்கம்மா வ புடிச்சு கேட்கும்போது எங்க அம்மா உங்க அம்மா கிட்ட பேசினது சொன்னாங்க…. சோ எனக்கு அது மனசுல ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கு…. இத வேற உங்க அம்மா அங்க  பேசி அதை வச்சு பிரச்சினை வந்து சேருகிற மாதிரி ஒரு விஷயம்….  எனக்கு மனசுக்குள்ள ஒரு கில்டி அது தான் நீ இப்போ ஹஸ்பண்ட் கூட போயிட்டனா நான் தாரளமா கல்யாணம் பண்ணிக்குவேன்…. நீ இல்ல குழந்தைங்களோட நான் இப்படித்தான் இருப்பேன் என் குழந்தைங்க என் லைஃப் நான் பார்த்துப்பேன் அப்படின்னு சொல்லிட்டு நீ தனியா இருக்கிறதா இருந்தா….  நானும் தனியாதான் இருப்பேன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்….  என்னால உன் வாழ்க்கை கெட்டுச்சு ன்னு  இருக்க கூடாது…..

     சரி உங்க வீட்ல சொல்லி பொண்ணு பாக்க  ஆரம்பிக்கலாம்….   எனக்கும் என் ஹஸ்பண்டும் எந்த பிரச்சினையும் கிடையாது….  உங்கள சந்தேகப்படவும் இல்ல அவங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்…. எங்க மூணு மாச வாழ்க்கையிலயும் அவர் என்னை புரிஞ்சுகிட்ட அளவுக்கு இங்க என்னோட பேரன்ஸ் கூட என்ன புரிஞ்சுக்கல…  சோ நீங்க பொண்ணு பாக்க ஆரம்பிங்க….

இல்லடா பப்பு உன் டெலிவரி முடியட்டும் அதுக்கப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….

  நீங்க நம்பள இல்ல… என் ஹஸ்பண்ட் பத்தி தெரிஞ்சிக்கிட்டா  நம்புவீங்களா… இல்ல அப்பவும் இதே மாதிரிதான் பேசுவீங்களா…..

  “என் உதிர துளிகளில்

   கலந்து காதல்

   கற்றுத் தந்தாயா என்ன….

   உடம்பின் செல்கள்

   எல்லாம் உன்  பெயரை

    உருப்போட்டு  உருகுகிறதே….”

Advertisement