Advertisement

டெலிவரிக்குப் முன்பே திருமணம் செய்ய வேண்டும் என்று பவித்ரா சொல்லியிருந்ததால் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டது….டெலிவரி நேரம் ரமாவை இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல்வதாக முடிவு செய்திருந்தான் ஆனால் ஷ்யாமின் தாயோ தான் அங்கு செல்வதாக பவித்ராவை பார்த்துக்கொள்வதாக சொல்லிக் கொண்டிருந்தார்…. எனவே உடனடியாக திருமணம் செய்து வைத்துவிட்டு ஷ்யாமின்  தாயார் பவித்ராவின் டெலிவரிக்கு அங்கு செல்வதாக இருந்தது….

   திருமணத்திற்கு இரண்டுநாள் முன்பு  ஷியாம் பவித்ராவிற்கு போன் செய்தான்… பப்பு மா   நீ உன் ஹஸ்பன்ட் ட்ட பேசிட்டியா என்று கேட்டான்… அப்போதுதான் அவள் அவனிடம் பேச வேண்டும் என்று யோசித்து இருந்ததால் கண்டிப்பாக ஒரு வாரத்தில்  பேசி விடுவேன்..  இன்று தான்யோசித்துக்கொண்டு இருந்தேன் என்று சொன்னாள்…  ஒருவேளை அதற்கு முன் என்னவர் உன்னை பார்க்க வந்தாலும் வரலாம் என்று சொன்னாள்…

   எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற பப்பு என்று கேட்கவும்….

   அவரே என்னை தேடி கொண்டிருப்பார் என்பது எனக்கு உறுதியான விஷயம் அவர் என்னைத் தேடிக் கொண்டிருப்பது உறுதியானால் கண்டிப்பாக உன்னைப் பற்றியும் விசாரித்து இருப்பார்… அதனால் கண்டிப்பாக உன்னை சந்திக்க வருவார் என்று மட்டுமே சொன்னாள்….

    திருமணம் சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் போதே

திருமணச் சடங்குகள் முடிந்து உடை மாற்றி வந்து வரவேற்புக்கு அமரும்போது தான் கவனித்தான்…..  முன்வரிசையில் சிவரஞ்சன் அமர்ந்திருப்பதை அருகில் இருந்த போலீஸ் அதிகாரி அவனிடம் மரியாதையாக பேசிக் கொண்டிருக்கும்போதே புரிந்து கொண்டான்… உடனே அருகிலிருந்த ரமாவிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு பெற்றோர்களிடம் சொல்லி விட்டு வேகமாக கீழே இறங்கி வந்தான்….

    வந்தவன் மரியாதையாக சிவரஞ்சன் முன் வந்து நின்று அண்ணா வாங்க என்று சொன்னாள்….

     என்னை தெரியுமா பாத்திருக்கீங்களா.,  என்று ஆச்சரியமாக கேட்கவும் பப்பு ஃபோட்டோ காமிச்சா….

    எங்க நான் தான் உங்க கிட்ட வந்து அறிமுகம் செஞ்சுக்கணுமுன்னு நினைச்சேன்….  ஷ்யாம்..  வாழ்த்துக்கள் என்று கீழே வைத்தே பேசிக் கொண்டிருக்கும்போதே ஷியாமின் அம்மாவும் அப்பாவும் கீழே இறங்கி வரவும் அவரிடம் அறிமுகம் செய்து வைத்தான்… நம்ம பவித்ராவின் கணவர் என்று….

    அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்கனவே கதையெல்லாம் ஷியாம் சொல்லி இருந்ததால் மிகவும் சந்தோஷமாக வரவேற்றனர்… அதுமட்டுமில்லாமல் இவன் ஷியாமின் அம்மாவையும்…  அப்பாவையும்… நீங்க வாங்க  என்று பொதுவாக கூப்பிடவும்… அப்படி எல்லாம் கூப்பிடாதீர்கள் நீங்களும் எங்களுக்கு மகன் போல தான் அம்மா அப்பா என்றே அழையுங்கள் என்று ஷாமின் அம்மா அழுத்தமாக சொன்னார்….

    சிவரஞ்சனக்கு அந்த வார்த்தை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது…  நட்புகளுக்கு எந்த அளவு உரிமையுடன் இருக்கிறார்கள் என்பதை மிகவும் ஆனந்தமாக உணர்ந்தான்…..

   அன்று திருமண நிகழ்வு முடிந்த உடன் மதியத்திற்கு மேல் கிளம்புவதாக சொல்லிவிட்டு கேட்டான்… பவித்ரா கல்யாணத்திற்கு வரவில்லையா என்று…  அவளே உங்க கிட்ட பேசணும் சொன்னா… அவளே பேசுவா…  அவளே எல்லாம் சொல்லுவா… நான் சொல்ல கூடாது என்று சொன்னான் …

     நீங்க இப்படி சொல்றீங்க என்று சிரித்துக்கொண்டே கேட்கவும்….  நீங்க கல்யாணத்துக்கு வருவீங்க என்று  சொல்லல…. நீங்க என்ன கண்டிப்பா பார்க்க வருவீங்க அப்படிங்கறது அவதான் சொன்னா…  இரண்டு நாள் முன்னாடி பேசும் போது பப்பு சொன்ன வார்த்தை இதுதான்…  கண்டிப்பா உன்ன பாக்க வருவாங்க  அப்படின்னு மட்டும் சொன்னா…  நீங்க அவளை தேடி கிட்டு இருக்கீங்க..  என்பதையும் சொன்னாள்….எப்படி தேடிகிட்டு இருக்காங்க ன்னு நீ சொல்றே ன்னு கேட்டேன்….   கண்டிப்பா அவர் உன்னை நேரில் பார்க்க வரும்போது தான் நீ  நம்புவ ன்னு சொன்னா…. நான் இப்ப அதேதான்  சொல்றேன்….   கண்டிப்பா இந்த வாரத்தில் பேசுவா….  என்று சொல்லிவிட்டு  பப்பு க்கு உங்க கிட்ட பேசணும் ரொம்ப நாளா ஒரு எண்ணம் இருந்திட்டே இருந்துச்சு அதனால கூப்பிடுவா….

    எப்படி இருக்கா…படிப்பு முடிஞ்சிடுச்சா டைம் முடிஞ்சு இருக்கனும் இல்ல…  என்று கேட்கவும்…

      இல்ல உங்களுக்கு அவளே சொல்லுவா…. நான் பேசினா ஓட்ட வாய்ல உளறி விடுவேன்…நான் உங்க ட்ட  சொன்னேன் தெரிஞ்சா என்ன வச்சி சாத்தி எடுத்துட்டுவா… அதனால அவளே சொல்லட்டும் என்று சொல்லிவிட்டு….

     உன்கிட்ட ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே என்று கேட்கவும் என்ன என்று கேட்டான்…

       நான் எப்பவும் போல அவளை நீ ன்னு கூப்பிடலாம் இல்லை என்று கேட்கவும்…

      அவ எப்பவுமே உங்க பப்பு தான்… என்னோட அம்மு தனி… உங்களோட பப்பு தனி… என்று மட்டும் சொன்னான்….

     அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு நட்போடு ஒரு சிறு தோள் அணைப்போடு ஷ்யாமும் சிவரஞ்சனும் நின்றனர்….

     அப்போதுதான் ஷியாம் சொன்னான் நான் உங்கள் அண்ணானே கூப்பிடுறேன்… தப்பா எடுத்துக்க மாட்டீங்களே என்று கேட்கவும் கண்டிப்பா என்று சொன்னேன்….

    தம்பி லீவு கிடைக்கும் போது கண்டிப்பா வீட்டுக்கு வாங்க என்று அவங்க அம்மா சொல்லவும்…

     கண்டிப்பா வரேன் அம்மா என்று சொல்லி விட்டு விடை பெற்றான்… அனைவரிடமும் விடைபெற்று ஏர்போர்ட்டிற்கு செல்லும்போது ஷியாமின் அப்பா அவருடைய டிரைவரை அனுப்பி ஏர்போட்டில் விட்டு விட்டு வரும்படி கூறிக் கொண்டிருந்தார்…

   ஹைதராபாத்தில் வந்து இறங்கி அவன் கலெக்டரின் இல்லத்திற்கு வரும் போது அவன் மனம் முழுவதும் நிரம்பி இருந்தது…

       என்னவள் என்னை தவறாக நினைக்கவில்லை எனவும்… அதே அம்முவாக இருக்கிறாள் என்று மனம் முழுவதும் அவளுடைய நினைவுகளோடு அன்றைய இரவு நிம்மதியான உறக்கம் அவனை தழுவியது….

    அந்த வாரக் கடைசியில் அவன் அலுவலகத்தில் முக்கிய வேலைகள் எல்லாம் முடித்துக்கொண்டு மதிய உணவிற்கு அமரும்போது அவனுக்கு பர்சனல் நம்பரில் அழைப்பு வந்தது…. எடுத்துப் பார்க்கும்போது அது இந்தியாவில் உள்ள எண் இல்லை என்று தெரிந்தது…. வெளிநாட்டில் இருந்து தனக்கு யார் போன் செய்வார்கள் என்று யோசனையோடு போனை அட்டெண்ட் செய்து காதில்  வைத்து ஹலோ என்று அவன் அழைக்கவும்…  மறுமுனையில் சற்று நேரம் எந்த சத்தமும் இல்லை அந்தப்புறம் பவித்ரா அவன் குரலை மெதுவாக உள்வாங்கிக் கொண்டு  ஹலோவிற்கு பதிலாக சிவாமா என்று மட்டும் அழைத்தாள்….

     அவளுடைய சிவாமா என்ற அழைப்பு அவனது இதயத்துடிப்பு வெளியில் கேட்கும் அளவிற்கு அவனுக்கு தோன்றியது….

    அம்மு என்றான் நிதானமாக ஆனால் அவன்  அழைத்த குரலின் கரகரப்பு அவன் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறான் என்று அவளுக்கு உணர்த்தியது…. எப்படிடா இருக்க என்று கேட்கும் போது அவன் குரல் மிகவும் உள்ளே போயிருந்தது….

    நல்லா இருக்கேன் பா… நீங்க எப்படி இருக்கீங்க என்று அவ கேட்கவும்…

ம்ம்ம்… இருக்கேன்….. இது இந்தியாவிலுள்ள நம்பர் மாதிரி இல்லையே நீ எங்க இருக்க டெல்லி பிளைட்ல போனதா கேள்விப்பட்டேன் அதுக்கப்புறம் இப்ப எங்க இருக்க என்றான்…

    சோ என திட்டி அனுப்பிட்டு… அப்புறம் நான் எங்க இருக்கேன் ன்னு தேடிட்டு இருக்கீங்க என்றாள்  சாதாரணமாக பேச முற்பட்டு….

   நீ என் உயிர் டா….  உன்னை அனுப்பிட்டு வெறும் உடம்பு மட்டும்தான் இங்க இருக்கு….

      நீ என்னை தப்பா எடுத்துக்காதே…  எனக்கு உன் படிப்பு முடியனும்…  அதுதான் முக்கியம் அதற்காகத்தான் நான் உன்னை சத்தம் போட்டது…. மத்தபடி நான் உன்னை எந்த நேரத்திலும் தப்பா நினைக்க மாட்டேன்…. ஏன்னா எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும் நம்ம சேர்ந்து இருந்தது கொஞ்சம் நாளா இருக்கலாம் ஆனா உன்னோட அன்பு எனக்கு புரிய வைத்தது எல்லா விஷயத்தையும் எத்தனை வருஷமா ஒர்க் பண்றேன்…  இந்த இடத்துல இருந்துட்டு ஒருத்தரை பார்த்து உடனே புரிஞ்சுக்க தெரியாத அளவுக்கு முட்டாள் இல்லை…  நானே எனக்கு உன் கேரியர் முக்கியம் என்னால உன் படிப்பு  உன்னோட கேரியரை வீணாக கூடாதுன்னு நினைச்சேன்… ஆனா நீ எவ்ளோ ஆசையா இந்த படிப்பை செலக்ட் பண்ணி இருப்ப… எவ்வளவு ஆசையா உன்னோட ஹையர் ஸ்டடிஸ் போயிருப்ப எல்லாம் எனக்கு புரியும் அது என்னால வீணாப் போயிட கூடாதுங்கிற ஒரே நினைப்பு தான் மத்தபடி வேற ஒன்னும் இல்ல…..

   சரி சொல்லு இப்ப எங்க இருக்க….

     லண்டன்ல தான்  இருக்கேன்…  கல்யாணத்துக்கு முன்னாடி அங்க இருந்துதான் லீவு போட்டுட்டு வந்தேன்… இப்ப வேற வழி இல்ல நீங்க போக சொன்னீங்க… அதனால வேற வழி இல்லாம இங்க வந்துட்டேன்…  ஆனா இப்போ  நினைச்ச உடனே திரும்ப முடியாத சிட்டுவேஷன்….

      ஏன்டா நான் கேட்டப்ப நைன் மன்த் படிப்பு இருக்குன்னு சொன்ன….

    ஆமா சொன்னேன்….

     இப்ப தான் நைன் மன்த் முடிஞ்சு இருக்குமே….

     ம்ம்ம்… சில காரணங்களால் லீவு போட வேண்டியது ஆகிருச்சி….

     ஏன்டா உடம்பு சரியில்லை யா…

       அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை…. அப்புறம் நான் இன்னைக்கு எதுக்கு கூப்பிட்டேன் ன்னா…   இன்னைக்கு நம்மளோட வெட்டிங் டே அதுக்காக தான் கூப்பிட்டேன் என்று சொல்லவும்…

அவனுக்கு  ஆச்சரியமாக இருந்தது ஒன் இயர் ஆயிடுச்சா கண்ணம்மா அதுக்குள்ள என்று கேட்டான்…..

     ஆமா ஒன் இயர் ஆயிடுச்சு அப்போ அடுத்த பதினைந்து நாள்ல வந்துருவியா என்றான்…

    ஏன் என்று அவள் பதில் கேள்வி கேட்கவும் அவன் சிரித்துக்கொண்டே கேட்டான்…. எனக்கு பிறந்தநாள் வருதுல்ல… நீ கிப்ட் தரணுமே….

      அவளும் சிரித்துக்கொண்டே கண்டிப்பா கிப்ட் என்று ரெடியா இருக்கு பட் என்னால வர முடியாது என்று சொல்லவும் ஏன் என்ற கேள்வியோடு யோசனையில் இறங்கினான்…..

      அது பிறந்தநாள் அன்னைக்கு சொல்லுவேன் என்றாள்…..

   “உன் பிரிவில் என்னுள்

   வளர்ந்த உன் உயிரை

    உனக்கு பரிசாக…

   என்ன சொல்வாய்

    உன் பிம்பமாக

    உன் உயிர் உன்

    கையில் தவழும் போது….”

Advertisement