Advertisement

அத்தியாயம் 8

 

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை

மனம் தேடுதே வெயில் தாரொழுகும்

நகர வீதிகளில் மையல் கொண்டு

மலர் வாடுதே மேகம் சிந்தும்

இரு துளியின் இடைவெளியில்

துருவித் துருவி உனைத் தேடுதே

உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனைஉருகி உருகி

மனம் தேடுதே

அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால்அமைதியில்

நிறைந்திருப்பேன்

நுனிவிரல் கொண்டு

ஒருமுறை தீண்டு

நூறு முறை பிறந்திருப்பேன்”

அம்மு என்ற அழைப்பு போய் பவித்ரா என்று முதன்முதலாக அழைக்கவும் சற்று நேரம் திணறித்தான் போனாள் பவித்ரா திருமணம் ஆனதிலிருந்து அவன் அவளை பவித்ரா என்ற அழைத்ததே கிடையாது முதல் முதலாக அழைத்ததே அம்மு என்றுதான்….

    அவன் ஏதோ முடிவெடுத்து விட்டான் என்று அவளுக்குப் புரிந்தது…. அமைதியாக நின்று கொண்டு இப்ப நீங்க என்ன முடிவெடுத்து இருக்கீங்கன்னு மட்டும் சொல்லுங்க ஏதோ முடிவுக்கு வந்துட்டீங்க நல்ல தெளிவா தெரியுது…..

    நீ உங்க பேரன்ஸ் கூட ஊருக்கு போ….  தெளிவா யோசி… நிதானமா யோசி….  முடிவெடு உன் படிப்பை பாரு..  உன் கேரியர் உனக்கு முக்கியம்… உங்க அம்மா எப்படி சொல்றதுன்னு தெரியல உன் லைப் நல்லா இருந்தா நான் சந்தோஷப்படுவேன்… அது மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்…  என்னை பற்றி யோசிக்காத எனக்கு எப்பவுமே தனியா இருந்து பழக்கம்தான் இனிமேலும் தனியா தான் இருக்கனும் விதித்து இருக்கு போல… 3 மாசம் நீ எனக்கு துணையா இருந்து இருக்க…. வாழ்க்கையில் முதன் முதலில் ஒரு 3 மாசம் மனசுக்கு புடிச்ச மாதிரி நல்ல சந்தோஷமான வாழ்க்கை… ரொம்ப நல்ல நிம்மதியான வாழ்க்கை… ஹாப்பியா இருந்தேன் அவ்வளவுதான்… நான்தான் உன் கிட்ட முன்னாடியே சொன்னேன் இல்ல., நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி என்றால் அப்படித்தான் இருக்கும்….   அதை மாற்ற முடியாது அம்மு சாரி பவித்ரா….

சோ நான் உங்களுக்கு வேண்டாம் அப்படி தானே….

பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அவனுடைய துணிகளை மட்டும் எடுத்து வைத்து அவன் கிளம்ப தொடங்கவும் சற்று நேரம் நின்று பார்த்தவள் அவனிடமிருந்து பதில் வரவில்லை என்றதும்….

    நேராக அவனிடம் போய் அவனை இழுத்து பிடித்து அவன் முகமெங்கும் முத்தம் பதித்து இறுதியாக இதழில் இளைப்பாரி அவன் நெஞ்சோடு தலைசாய்த்து இறுக்கி கட்டிக் கொண்டாள்…. உங்களுக்கு எப்படியோ தெரியாது., என்னோட வாழ்க்கை நீங்க மட்டும் தான்…. உங்கள எதிர்பார்த்து காத்திருப்பேன்…

    அவனும் அவளை இறுக கட்டிக்கொண்டு அவள் நெற்றியிலும் உச்சியிலும் முத்தம் பதித்து கிளம்புறேன் என்று சொல்லி விட்டு போய்விட்டான்…. அவன் அவனை கட்டுப் படுத்திக் கொள்வது அவனை கட்டிக்கொண்டு அவன் மீது சாய்ந்து இருக்கும் போது உணர்ந்து கொண்டாள்…..

அவன் அங்கிருந்து கிளம்பி சென்ற பிறகு தான் அவளுக்கு தெரியும்…. அப்பாவிடம் போய் உங்கள் மகளை நீங்கள் அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று அவன் சொல்லிவிட்டு சென்றது… பெரியம்மா எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் அவன் கேட்க வில்லை என்பதும் அம்மா மட்டும் வாயை திறந்து எதுவுமே சொல்லாமல் இருக்க பவித்ரா அவள் அப்பாவிடம் போய் நின்றாள்….பவித்ராவின் அப்பா அப்போதுதான் சொன்னார் நீ இப்போ என் பொண்ணு இல்ல உன்ன நான் கூட்டிட்டு போக முடியாது என்று மட்டுமே சொல்லி விட்டு அவர் கிளம்பவும்….

    அவள்  அம்மாவை நிறுத்தி ஒரே வார்த்தையில் கேட்டால் இப்ப சந்தோஷமா இதுக்குதான் வந்தீங்களா….  அவரோட நிம்மதியா இருந்தேன் அது உங்களுக்கு பிடிக்கலை அஞ்சு நிமிஷத்துல என் வாழ்க்கையை கெடுத்து விட்டுட்டீங்க  இல்ல… பெத்த அம்மா செய்ற வேலையா  நான் ஒரு பிரண்ட்லியா இதுவரைக்கும்  உன்கிட்ட எந்த விஷயத்தையும் மறைச்சது கிடையாது….  அப்பாவுக்கும் தெரியும் இது… நான் அவனைப் பிரண்டா மட்டும் தான் பார்த்தேன்  அவனுக்கும் தெரியும்… அவங்க அம்மா ஏதோ ஒரு லூசு வாக்கில் உங்ககிட்ட சொன்னா அத அப்படியே  நீங்க சொல்லுவீங்களா….  நான் தான்  உங்க கிட்டயும் சொன்னேன்ல அவன் எனக்கு ஃபிரெண்டு மட்டும்தான் ன்னு….  என்னால காதல் பண்ண முடியாது மா…  ஆனா ஒரே நிமிஷத்தில் என் வாழ்க்கையை கொஸ்டின் மார்க் ஆக்கிட்டீங்கல்ல….  இனிமேல் என் வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சு பார்க்கணும் உங்களுக்கு தோனல…  ஏன் என் வீட்டுக்காரர் க்கு என்ன குறைச்சல் எதை வைத்து அவரை நீங்கள் குறை சொன்னீங்க…. அவரோடு பேசி பார்த்திருக்கீங்களா ஒரு நிமிஷம் அவர் முகத்தை பார்த்து பேசி இருந்தீங்கன்னா உங்களுக்கு தெரியும்மா…  இப்பவும் சிரிச்ச முகத்தோட தான் வெளியே போறாரு… ஆனா அவர் மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டம் இருக்குனு எனக்கு மட்டும்தான் தெரியும்….  உனக்கு தெரியாது தயவு செய்து இனிமேல் என் மூஞ்சில கூட முழிக்காத நான் உனக்கு பொண்ணு இல்ல,  நீ எனக்கு அம்மாவும் இல்லை உன் பொண்ணு செத்துப்போயிட்டா ன்னு  நினைச்சுக்கோ…  இனிமேல் உங்க கண்ணு முன்னாடி வந்திர மாட்டேன் என்று சொல்லவும்… முதன் முதலாக அவள் அப்பாவும் அதட்டினார் அவளை….

       இப்படி எல்லாம் சொல்லாத பவித்ரா நீ எப்பவும் எங்க பொண்ணு தான்… நான்  மாப்பிள்ளை பேசுறேன் என்று சொல்லவும்….

        வேண்டாம்ப்பா….  எனக்கு தெரியும் அவருட்ட  எப்ப பேசனும்ன்னு…. அவரை கொஞ்ச நாள் ஃப்ரீயா விடுங்க தனியா இருக்கட்டும்.. அவரும் அவரை அனலைஸ் பண்ணட்டும் விட்ருங்க…. எல்லாரும் பேசிப்பேசியே வாழ்க்கையை  கெடுத்துட்டீங்க தயவு செய்து இனிமேல் யாரும் என் வாழ்க்கையில் பேச வேண்டாம்….  விடுங்க என் வாழ்க்கை எனக்கு பாத்துக்க தெரியும் இனிமேல் என்னை பத்தி நீங்க பேசாதீங்க….

    அதன் பிறகு இரண்டு நாட்களாக பெரியம்மா வீட்டில் இருந்தவள்… யோசித்துவிட்டு அவள் உடைகள் எல்லாம் லண்டனில் இருப்பதால் கையில் கொண்டு வந்த இரண்டு மூன்று துணிகளோடு அங்கு வீட்டில் இருந்ததையும் எடுத்துக் கொண்டு ஏற்கனவே அவள் அக்கவுண்டில் இருந்த காசை வைத்து டிக்கெட் ஏற்பாடு செய்து பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு லண்டன் கிளம்பினாள்…. அவளுடைய பாஸ்போர்ட் ஏற்கனவே மதுரையில் தான் அவளுடைய மற்றொரு சூட்கேஸில் வைத்துவிட்டு சென்றிருந்தாள் எனவே அதை எடுத்துக் கொண்டு இப்போது கிளம்பினாள்….

    இப்போது அதை எல்லாம் நினைத்துப் பார்த்து கொண்டிருந்தவளுக்கு ரஞ்சனின் மனதில் ஏதாவது மாற்றம் வந்து இருக்குமா என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்….

     குழந்தை விஷயத்தை சொல்லக்கூடாது.. என்பதில் உறுதியாக இருந்தாள்…

     மனம் தானாகவே மாறவேண்டுமே அன்றி… குழந்தையை சொல்லி மாற்றக்கூடாது என்று நினைத்து கொண்டாள்……

     நினைவுகளோடு கலந்து  போராடி கொண்டிருந்தாலும் நாட்கள் நகர்வது நின்று போகப்போவதில்லை…. நேரம் அதன் போக்கில் ஓடிக் கொண்டேதான் இருக்கும்…  நாம்தான் கடந்த காலத்தை விட்டு நகர மறுத்து சில இடங்களில் தேங்கி நிற்கிறோம்….

    நாட்கள் வேகமாக நகர இது பவித்ராவிற்கு ஏழாவது மாதம் முடிந்து எட்டாவது மாதம் பிறந்தது லீவ்  எடுத்துக்கொண்டு வீட்டில் இரு என்று சொன்னதற்கு கேட்க மறுத்துவிட்டாள்…. ஹாஸ்பிடலும், கல்லூரியிலும் சொன்னது இதுதான்… டெலிவரி வரை கல்லூரி வருகிறேன்… அதன்பிறகு லீவு எடுத்துக் கொண்டு மீதி இருக்கும் படிப்பை லீவு முடிந்தவுடன் முடித்துக் கொள்கிறேன் என்று மட்டுமே சொல்லி இருந்தாள்… அவள் அன்று எழுதிவைத்த முடிவும் அதுதான்….

    9 மாத படிப்பு மீதமிருந்தது வந்து மூன்றாவது மாதத்தில் அதாவது அவளது வயிற்றில் 4 மாத குழந்தை இருக்கும் போது நண்பர்கள் கேட்டது என்ன முடிவு என்று…  அதற்காக அவள்  யோசித்து எடுத்த முடிவு தான் இது….மூன்று மாதம்  படிப்பு முடிந்தது…  இன்னும் 6 மாதம் படிப்பு இருக்கிறது டெலிவரி வரை கல்லூரிக்குச் என்றால் எப்படியும் ஒரு நான்கைந்து மாத படிப்பு முடிந்து விடும்… மீதி ஒரு மாத படிப்பையும் குழந்தை பிறந்து எப்போது கல்லூரிக்கு செல்ல முடியும் என்று தோன்றுகிறதோ அப்போது முடித்துவிட்டு அதன் பிறகு மற்ற முடிவுகளைப் பற்றி யோசிப்பது என முடிவு செய்து இருந்தால் அதனால் பிடிவாதமாக கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்தாள்….

    அன்று அவள் படிப்பிற்கான நேரம் டிரெயினிங்  நேரம் முடிந்து அவள் எக்ஸ்ட்ரா பார்க்கும் பார்ட் டைம் வேலை இரண்டு மணி நேரத்தையும் முடித்தும் இன்னும் வராதது கண்டு தோழி போன் செய்ய அப்போதுதான் பழைய நினைவுகளில் இருந்து கலைந்து வந்தாள்…

   சொல்லு சுமி.. குரல் வாட்டமாக இருப்பதைக் கண்டு

       என்ன ஆச்சுடி பெயின் எது இருக்கா….

      சேச்சே அதெல்லாம் ஒன்னுமில்ல கொஞ்சம் உட்கார்ந்திருந்தேன் டயர்டா இருக்க மாதிரி இருந்துச்சு….

       சொன்ன பேச்சைக் கேட்க மாட்டேங்குற.,  லீவ் போட்டு வீட்டில் இரு சொன்னா கேக்குறியா….

Advertisement