Advertisement

அத்தியாயம் 9

 

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை

அடஒரே தொடுதல் மனம் ஏங்குதே

முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம்

அது நித்தம் வேண்டும்

என்றும் ஏங்குதே

வேர்வை பூத்த உந்தன்

சட்டை வாசம் இன்றுஒட்டும்

என்று மனம் ஏங்குதே

முகம் பூத்திருக்கும் முடியில்

ஒன்றிரண்டுகுத்தும்

இன்பக் கணம்

கேட்குதேகேட்குதே…

பாறையில் செய்ததும்

என் மனம் என்று

தோழிக்கு சொல்லியிருந்தேன்

பாறையின் இடுக்கில் வேர்

விட்ட கொடியாய் நீ நெஞ்சில்

முளைத்து விட்டாய்….”

நான் உன்னை நம்பல  ன்னு நினைக்கிறியா பப்பு என்று ஷியாம் கேட்கவும்….

இல்ல நான் ஏற்கனவே இது முடிவு பண்ணினது தான்… என்று தான் எடுத்த முடிவுகளையும் யோசித்து வைத்த  வழிகளைப்  பற்றி சொல்லி அதனால் தான் ட்ரெயினிங் மற்றும்  படிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று டெலிவரி வரை கல்லூரி செல்வதை பற்றியும் சொன்னாள்…

சோ பேபி பிறந்து தீரி மன்ஸ் வரைக்கும்  குழந்தைங்க கூட  இருப்பேன் இல்ல….  அதுக்கு அப்புறம் ஒன் மன்த் கிளாஸ் இருக்கும்… சோ கிளாஸ் முடிஞ்சு உடனே கண்டிப்பா பேபி எடுத்திட்டு போய்டுவேன்…

     நெஜமாதான் சொல்றியா….

     கண்டிப்பா…. ஏன்னா என் குழந்தைங்க அவரோட தான் வளரனும்….. ஆனால் அவருக்கு அது முக்கியம்.. எனக்கு எந்த அளவு முக்கியமோ அதைவிட அவருக்கு ரொம்ப முக்கியமான ஒரு விஷயம்…

குழந்தைங்க அவரோட தான் இருக்கணும் என்று அவள் சொல்லவும்….

         சரி அப்போ உன் ஹஸ்பண்ட் வந்து உன்னை கூட்டிட்டு போ சொல்லு….

    நாங்கள் ஏற்பாடு பண்ணட்டுமா என்று அவன் கேட்கவும்….

       அவள் சிரித்துக்கொண்டே அவர் அப்படி எல்லாம் இந்தியால இருந்து உடனே கிளம்பி வர முடியாது…. 1008 பிராசஸ் இருக்கு அவருக்கு……   அவர் கவர்மெண்ட் சர்வன்ட் அப்படி எல்லாம் வர முடியாது…

      ஏன் கவர்மெண்ட்ல ஒர்க் பண்றவங்க எல்லாம் ஃபாரின் போறதே கிடையாதா… அதுக்கு  ஆபீசில் லட்டர் கொடுத்துட்டு போலாம்னு தெரியுமில்ல….

       கண்டிப்பா போலாம் தெரியும் ஆனா…  கலெக்டர் போறதா இருந்தா ஆயிரத்தெட்டு கண்டிஷன் உண்டு அது தெரியுமா… முதல்ல அவருக்கு லீவு கிடைக்காது அது தெரியுமா….

      கலெக்டர் என்று ரமேஷ் கேட்கவும்….

சிவரஞ்சன் ஐஏஎஸ். வேணா கூகுள்ல போய் பாரு இப்ப எந்த டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் இருக்கிறார் என்கிறது வரைக்கும் வந்துடும் உனக்கு… என்று சொல்லவும் ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்  தோழிகள்….

       ஷ்யாம் மட்டும் நீ உண்மையை சொல்றியா, பொய் சொல்றியா, என்று கேட்டான்…

         ரெப்ரெஷ் பண்ண போகும் போது அவள் டைனிங் டேபிள் மேல் போனை வைத்துவிட்டு சென்றிருந்தாள்…. அதனருகே சுமி அமர்ந்து இருந்ததால் சுமி அந்த போனை கொஞ்சம் எடுத்துக் கொண்டேன் என்று கேட்டாள்…..

   ஆமா இது என்ன புது பழக்கம் போன லாக் போட்டு வச்சிருக்க.. நம்ம  யார் போன்லேயும் லாக் கிடையாது தெரியும் இல்ல…..  இன்னும் ஆறு பேரு கூட யாரும் எதையும் மறைக்க மாட்டோம்., அதுவும் தெரியும் இல்ல… என்று ஷ்யாம் கேட்கவும்

     அவள் சிரித்துக்கொண்டே சுமி நான் சொல்ற நேம் போட்டு போன் ஓபன் பண்ணு ஓபன் ஆகும்… அதுக்கப்புறம் செட்டிங்கில் போயி  லாக் எடுத்து விடு  என்று சொல்லவும்…

உண்மையாவா சொல்ற என்று ரீனா கேட்கவும்…. நான் அவர்கிட்ட போகணும் ன்னு முடிவு பண்ணிட்டேன்… அவரைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும்னு ஏற்கனவே நினைச்சிருந்தேன்.., டெலிவரிக்கு முன்னாடி சொல்ல நினைச்சேன் சரி இன்னும் ஒரு மாசம் தானே இருக்கு…. ஒரு மாசம் முன்னாடி சொன்னா தப்பு இல்லை இல்ல… அதனால தான் சொல்றேன் சிவா ன்னு போடு அன்லாக் ஆகும்.. என்று சொல்லவும், அவள் சிவா என்று போட்டு ஒபன் செய்து விட்டு அவள் முகத்தைப் பார்க்கவும் என்ன என்று கேட்டாள் பவித்ரா…  ஒபன் ஆயிடுச்சு என்று சொல்லவும் அதுல  கேலரி போ., சிவா ன்னு தனியான ஒரு போல்டர் இருக்கும்…அதை ஓபன் பண்ணு என்று சொன்னாள்.,  அவசரமாக தோழிகள் ஓபன் செய்து பார்க்கும்போது  பவித்ரா அவள் கணவனோடு எடுத்த அத்தனை புகைப்படங்களும் அதனுள் அடங்கி இருந்தது…. அவர்களின் போட்டோவை வரிசையாக பார்த்த சுமி கண்கலங்க வந்து பவித்ராவை கட்டிக்கொண்டாள்…

          அதன்பிறகு ஒவ்வொருவராக புகைப்படங்களை எல்லாம் பார்த்து முடித்த பின் அனைவரும் சேர்ந்து சொன்னது உன் ஹஸ்பண்ட் ரொம்ப அழகு என்று….

    மறுபடியும் அவள் போட்டோக்களைப் பார்த்துக் கொண்டிருந்த ரீனா தான் இது என்ன போட்டோ உன் சேலை முந்தானையை அவர் சட்டை மேல் போட்டு நீ சாப்பாடு ஊட்டிக்கொண்டிருப்பது போல என்று கேட்கவும்… சிரித்துக்கொண்டே சொன்னாள் அவருக்கு அன்னைக்கு முக்கியமான மீட்டிங் கிளம்ப வேண்டியது இருந்துச்சு சாப்பிடாம கிளம்பினாரு.,  சாப்பாடு ஊட்டி விட்டேன் டிரஸ் ல படக்கூடாது ன்னு  சொன்னாரு…. அதனால சேலை முந்தானையை எடுத்து குழந்தைகளுக்கு துணி போட்டு விடற மாதிரி போட்டு விட்டு ஊட்டினேன் என்று சொன்னாள்…

      எல்லா போட்டோவிலும்., சேலை கட்டி இருக்க…

      அவங்களுக்கு அது தான் பிடிக்கும்….

   அவரைப் பற்றி நாங்கள் தெரிந்து கொள்ளலாமா என்று கேட்கவும் சொல்லத் தொடங்கினாள்…. தான் அறிந்த அத்தனை விஷயங்களையும் சொன்னாள் சில விஷயங்களை மட்டும் மறைத்துவிட்டு…

     அதைக் கேட்ட அனைவரும் சொன்ன ஒரு வார்த்தை இனிமேல் அவர் வாயிலிருந்து அந்த வார்த்தை வரக்கூடாது யாரும் இல்லை என்கிற வார்த்தையை அவர் சொல்லக் கூடாது….  நாங்க எல்லாம் இருக்கும் என்று ஒன்று போல சொன்னார்கள்….

     இவ்வளவு அன்பா இருந்துட்டு… அப்புறம் ஏன் உன்னை பிரிஞ்சி இருக்க வைத்தார்….

    அவங்க மனசோட வேதனை என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்… அந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்…, தப்பு என் மேல தான்., என்னை பற்றி எதுவும் தெரியாமலே., என்னை முழுசா நம்புனாங்க…., அப்படி இருக்கும் போது வர்ற கோபம்., அதை நான் தப்பா எடுத்துக்கலை….

        அவருக்கு இனி தனிமை இருக்க கூடாது…

         அதை கேட்டு விட்டு அவள் சொன்னாள் அதனால்தான் டெலிவரி முடிஞ்ச உடனே அவர் கிட்ட போகனும் ன்னு சொல்றேன்… என்னால் எல்லாம் அவரை விட்டிட்டு இருக்க முடியாது… கண்டிப்பா இந்நேரம் அவர் நான் எங்க இருக்கேன் ன்னு தேடிட்டு இருப்பாரு….  எனக்கு தெரியும் நான் சொல்றது உண்மையா இருந்தா கண்டிப்பா இந்நேரம் தேடிக்கிட்டு இருப்பாரு கூடிய சீக்கிரம் உங்களுக்கும் தெரியும் அவர் என்ன தேடியது என்று மட்டுமே சொன்னாள்…..

      உங்க அஞ்சு பேருக்கும் நான் எவ்வளவு முக்கியம் நினைக்கிறீங்களோ…. அதைவிட எனக்கு அவர் முக்கியம் அவர் தான் என் உயிரு… அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம்  அவர் என் படிப்பை கெடுக்க கூடாது என் கேரியர் போயிடக் கூடாதுன்னு மட்டும்தான் யோசிச்சாரே தவிர கண்டிப்பா  ஒரு வார்த்தை கூட சந்தேகப்பட்டு கேட்கல…  அவருக்குத் தெரியும் என்னை பத்தி எங்க அம்மாவோட ஆதங்கம் அவருக்கு வருத்தத்தை உண்டு பண்ணிடுச்சு ஒழிய அவர் என் மேல எந்த தப்பையும் வைக்கல….

  அன்றைய இரவு உணவிற்குப் பிறகு ஆண்கள் மூவரும் கிளம்பி அவர்களுடைய அறைக்கு செல்ல சாப்பிட்டுவிட்டு உறக்கம் வராமல் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா…  அப்போது அவளிடம் வந்த சுமி ஒரு வார்த்தை நீ போன் பண்ணி  பேசி பாரேன்…ஒருவேளை உன்னை தேடி கிட்டு இருந்தா நீ எங்க இருக்குன்னு தெரியாம இருந்துச்சுன்னா என்று அவள் சொல்லவும்….  யோசிக்கிறேன் சுமி கொஞ்சம் போகட்டும் என்று மட்டுமே சொன்னாள்…..

அன்று பழைய விஷயங்கள் அனைத்தையும் பேசியதால் பவித்ராவிற்கு உறக்கம் வர நேரமானது…. கிட்டத்தட்ட விடியும் தருவாயில் தான் தூங்கப் போனாள்…அதே நேரம் இந்தியாவில் அதிகாலை அங்கு சிவரஞ்சன் எப்போதும் போல் அவள் புடவை முகத்தில் போட்டு தூங்கிக் கொண்டிருந்தான்… சற்று நேரத்தில் எழுந்தவன் அந்தப் புடவையில் முகம் புதைத்து படுத்துக்கொண்டு சாரிடா அம்மு உன்னை கஷ்டப் படுத்திட்டேன்…. நீ அன்னைக்கு சொல்லும்போது நான் அதை யோசிக்கல நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது நீ சொன்ன….  அது அப்போ எனக்கு புரியல ஆனா இப்போ புரியுது நீ இல்லாம என்னால இருக்க முடியாது என்கிறது…..  எங்க இருக்க ன்னு தெரியல…   நான் உன்னை தேடிட்டு இருக்கேன் ங்கிறது உனக்கு புரியுமா….  எங்க இருந்தாலும் சீக்கிரம் வந்துரு….  உன்ன பாக்காம என்னால இதுக்கு மேல இருக்க முடியும்னு தோணலை என்று தனியே பேசிக் கொண்டிருந்தான்…

    அதேபோல அங்கு பெங்களூரில் ஷியாம் க்கு திருமணம் பேசி முடிவு செய்யப்பட்டது ரமாவோடு., பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டது….

அப்படியே நாட்கள் கடந்து செல்ல அவள் டெலிவரிக்கு பதினைந்து நாள் முன்பு அவளுக்கு சிவரஞ்சனோடு பேச வேண்டும் போலிருந்தது அவன் குரல் கேட்க மனது தவித்தது… இனிமேலும் தாமதிக்க கூடாது என்ற எண்ணத்தோடு அவனிடம் பேச முடிவு செய்தாள்…

      அன்று அதிகாலையிலேயே அவசர மீட்டிங் இருந்ததால் சிவரஞ்சன் தன் வேலைகளில் மூழ்கிப் போயிருக்கும் போது அவனுடைய பர்சனல் நம்பருக்கு அழைப்பு வந்தது…. எடுத்தவன் யோசனையுடன்  பேசத் துவங்கினான்…

     சொல்லுங்க என்று மட்டும் சொன்னான்

         சார் நீங்க சொன்ன பெங்களூர் ல இருக்குற ஷியாமுக்கு நாளை மறுநாள் காலையில மேரேஜ் சார் என்று மட்டும் சொல்ல…

      என்ன சொல்றீங்க என்று மட்டும் கேட்டான்…

        ஆமா சார்…டாக்டர் ஷியாம் வெட்ஸ் டாக்டர் ரமா  அப்படின்னு இன்விடேஷன் கையில கிடைச்சிருச்சு… உங்ககிட்ட சொல்லணும்னு அதற்காக தான் சொன்னேன்…. என்ன பண்ணனும்

      ஓகே கல்யாணத்திற்கு நான் பெங்களூர் வரேன்… பெங்களூர்ல நேரில் பார்ப்போம் என்று மட்டுமே சொன்னான்….

Advertisement