Advertisement

அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவின் அம்மா அப்போது பவித்ராவின் அப்பாவிடம் சண்டை போட தொடங்கினாள்…  உங்க தங்கச்சி பொண்ணு கேட்கும் போது என்ன சொன்னேன்…. அவளை நம்பி கொடுக்காதீங்க ன்னு சொன்னேன் இல்லை…. எத்தனை பேர் விரும்பி கேட்டாங்க…. எங்க அப்பா சொல்லுறவங்கள தான் கல்யாணம் பண்ணுவேன் ன்னு… பிடிவாதம் பிடிச்சவ தானே இவ….

    அப்பா இங்க பாருங்க உங்க பொண்டாட்டி கிட்ட சொல்லி வைங்க….. எனக்கும் அவங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லன்னு சொல்லி ரொம்ப நாளாச்சு தேவை இல்லாம பேசக் கூடாது….

    என்ன  தேவை இல்லாம பேசக் கூடாது…  உண்மையை தானே சொன்னேன்…. அந்த பையன் உன்ன விரும்புவதை அவங்க அம்மா வந்து சொன்னாங்க….   நான் உன்கிட்ட எத்தன அட்வைஸ் பண்ணினேன்…  உங்க அப்பா உனக்கு கல்யாணம் பேச வரும்போது உங்க அத்தை காரியமில்லாமல் வந்து பேச மாட்டா…. சம்மதிக்காத ன்னு தான் சொன்னேன் இல்லையா…..

   அம்மா பிரண்ட்ஷிப் வேற காதல்ங்கிறது வேற மா…  இரண்டையும் போட்டு குழப்பாதீங்க அசிங்கப்படுத்தாதீங்க…  எனக்கு ன்னு ஒரு  லிமிட் இருக்கு நான் அந்த லிமிட்டை தாண்டி யார்ட்டையும் பழகுனது கிடையாது… பேசினது கிடையாது…  புரிஞ்சுக்கோங்க பெத்த பொண்ண நீங்களே புரிஞ்சுக்கில்ல ன்னா…  அப்புறம் அடுத்தவங்க எப்படி புரிஞ்சுப்பாங்க…உன்கிட்ட பேச கூடாதுன்னு தான் இருக்கேன்… இப்ப நீங்க பேச போய் தான் பதில் பேச வேண்டி இருக்கு வாய மூடிட்டு போங்க…

    நான் என்னடி தப்பா கேட்டுட்டேன் டாக்டருக்கு படிக்க வச்ச பொண்ண….  என்ன படிச்சிருக்கான் இன்னும் வேலை பாக்கனும்னு தெரியாத ஒருத்தனுக்கு கட்டிக் கொடுக்கிறது க்கு உங்கப்பா சம்பாதிக்கும்போது… டாக்டருக்குப் படிச்ச பொண்ணு டாக்டர் மாப்பிள்ளை கட்டிக்கொடுக்கணும் ஒரு அம்மா ஆசைப்பட்டதில் என்ன தப்பு….

   அவள் டாக்டர் என்பதே அவனுக்கு அப்போதுதான் தெரியும் அதுவரை அவனும் கேட்டது கிடையாது அவளும் சொன்னது கிடையாது பேச்சுவாக்கில் கூட இருவரும் எதுவும் பேசிக் கொண்டது கிடையாது….

      அம்மா திரும்ப திரும்ப நீங்க தப்பா பேசுறீங்க அவரு யாருன்னு தெரியுமா….  யார் கிட்ட பேசுறீங்க என்று தெரியுமா…ஒரு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் முன்னாடி உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கீங்க அதை ஞாபகம் வச்சுக்கோங்க….

    இப்போது மற்ற அனைவரும் வாய்பிளக்கும் முறை ஆகிப்போனது ஏனென்றால் அவன் கலெக்டர் என்று அன்று தான் அனைவருக்கும் தெரியும்…. பெரியம்மாவிற்கும்., பெரியப்பாவிற்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது…..

     அதுவரை பேசாமல் இருந்த பெரியப்பா சொத்தைப் பற்றி இனிமேல் யாரும் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது…. என்று முக்கியமாக பவித்ராவின் அத்தையை பார்த்து சொன்னார்…. அதோடு நிறுத்தாமல் ரஞ்சன் இந்த வீட்டுப்பிள்ளை அவனுக்கு உரிமை இல்லைன்னு சொல்றதுக்கு மத்தவங்க யாருக்கும் உரிமை கிடையாது… அவன பத்தி பேசுறதுக்கு யாருக்கும் உரிமை கிடையாது… அதனால உங்க வேலைய பாத்துட்டு போங்க யாரும்  பேசக்கூடாது….  இதுக்கு தான் அவங்கள எல்லாம் நீ வர வச்சேன்னு தெரிஞ்சிருந்தா நான் யாரையும் வர சொல்லி இருக்க மாட்டேன்….என்று சத்தம் போட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்று சென்றார்…..

  பவித்ராவின் அம்மாவின் ஒதுக்கத்திற்கான காரணம் அன்றுதான் ரஞ்சனுக்கு புரிந்தது….  ஏனெனில் திருமணம் ஆன  மூன்று மாத காலத்தில் ஒரு முறை கூட பவித்ராவுடன் அம்மா பேசியது கிடையாது… பவித்ராவின் அப்பா மட்டும் அவ்வப்போது  போனில் அழைத்துப் பேசுவார் என்பது அவனுக்கு தெரியும்…

அவன் எழுந்து அறைக்கு செல்லும்போது அம்மு என்கூட வா என்று மட்டும் சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்….  இவளும்  பெரியம்மாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தவள் அவசரமாக எழுந்து அவனோடு பின் சென்றாள்….

  உள்ளே சென்றவுடன் அவன் வேறு எதுவும் பேசாமல் நீ ஹையர் ஸ்டடிஸ் ல இருந்தீயா இல்ல  ஒர்க் பண்ணி விட்டு இருந்தியா என்று மட்டுமே கேட்டான்….

    அவளும் எங்கு படித்தால் என்பதை சொல்லாமல்  ஹையர் ஸ்டடிஸ் என்று மட்டுமே சொன்னாள்….

  முடிஞ்சதா… முடியலையா….

   முடியல இன்னுமொரு நயன்ஸ் மன்த்ஸ் பேலன்ஸ் இருக்கு…

    ஏன் அதைப் பத்தி நீ பேசவே இல்லை….

   நான் அப்படி விடலாமான்னு யோசிச்சேன். இல்லேன்னா இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு சொல்லிக்கலாம் அப்படிங்கிற மாதிரி யோசிச்சேன்….. இரண்டுவிதமான யோசனையில் இருந்ததால் தான் என்ன பண்ணறது புரியாமல் கொஞ்சம் குழப்பத்தில் இருந்தேன்….

   நீ முதல்ல விட்ட படிப்பை கன்டினியூ பண்ணு மீதி அப்புறம் பாத்துக்கலாம்…. இதை என் கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணுவே  இல்ல அப்படி தானே……

   சொல்லக்கூடாது ன்னு இல்ல….  எனக்கு படிப்பை விட இப்ப நீங்க முக்கியம் தோணுச்சு அதனாலதான்….

  தப்பு என்ன விட உனக்கு படிப்பு தான் முக்கியம்… பொண்ணுங்களோ.. பசங்களோ படிப்புதான் அவங்களோட  சொந்த காலில் நிற்க வைக்கும்…  லைஃப்ல மத்ததெல்லாம் அப்புறம்தான்…  இப்ப இதுக்கு தான் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும்  புரிஞ்சுக்கோ….

    நான் லீவு ல தான் இருக்கேன்…. அப்புறமா கூட கண்டீனீயூ  பண்ணிக்கலாம்.   இப்ப வேண்டாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஜாயின் பண்ணிக்கிறேன்….

இல்லடா மொதல்ல படிப்பு முடியட்டும்…. இப்போ நீ உங்க அம்மா கூட கிளம்பி ஊருக்குப் போ என் கூட வர வேண்டாம்….

   திருமணமான நாட்களில் சிறு சிறு சண்டைகள் மனஸ்தாபங்கள் வந்தாலும் அடுத்த நிமிடம் இருவருமே மறந்து விடுவார்கள்….  ஆனால் இந்த முறை அவனுக்கு கொஞ்சம் வீட்டில் நடந்த பிரச்சினைகள் கொஞ்சம் எரிச்சலை கொடுத்ததால் அந்த எரிச்சலை அவளிடம் காண்பித்து விடக்கூடாது என்பதற்காக அவளை தன்னோடு வரவேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்….. அவனுக்கு எப்போதும் கோபத்தை காட்டி பழக்கம் இல்லை… இதை அங்கிருக்கும் போது அவளிடம் சொல்லி இருக்கிறான்… உரிமையானவங்க ட்ட மட்டும் தான் கோபத்தை காட்ட முடியும்… எனக்கு தான் அப்படி யாருமே இல்லையே….

    நீங்க  இல்லாம என்னால இருக்க முடியும்னு தோணலை ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க….

   சொன்னா கேளு எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு  என்று சொல்ல…. அம்மு மா… எனக்கு ஒரு விதத்தில் உன் மேல கோபமா இருக்கு…  அது மட்டும் இல்லாம நான் உன்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணி இருக்கேன் நீ  எதுவுமே சொன்னதில்லை….  ஏன் ஒருத்தர் ப்ரொபோஸ் பண்ணி இருக்காரு உன்ன கல்யாணம் பண்ணனும்னு ஆசைப் பட்டு இருக்கிறாரு  உங்க அம்மா வரைக்கும் தெரிஞ்சிருக்கு…. எங்கிட்ட சில விஷயங்களை சொல்லாட்டிலும்… பரவாயில்லை ன்னு நான் நினைக்கலாம்… ஆனா உன் படிப்பு பற்றி கூட சொல்லனும் ன்னு தோணலை இல்லை….

   புரிஞ்சுக்காம பேசாதீங்க ஷ்யாம் என்னை பொருத்தவரைக்கும் நல்ல பிரண்ட் அவங்களும் அப்படித்தான்…. ஆனா அவங்க அம்மாகிட்ட பர்ஸ்டு அவருக்கு புடிச்சிருக்கு சொல்லியிருக்காங்க  உண்மைதான் இல்லன்னு சொல்லல…. ஆனா நா ப்ரண்டா மட்டும் தான் இருப்பேன் சொன்னேன். அவரும் ஃபிரண்டா மட்டும்தான் இருந்தாரு…   அவங்க அம்மா தெரியாம எங்கம்மா  ட்ட ஒரு நாள் பேச்சுவாக்கில் போன் பண்ணி கேட்டுட்டாங்க….  அங்க தான் பிரச்சனை ஸ்டார்ட் ஆயிடுச்சி போதுமா அதிலிருந்து எங்கம்மாக்கு மனசுக்குள்ள ஒரு எண்ணம்……

நான் எங்க அப்பாட்ட படிக்கும்போதே சொன்னது இதுதான்…. எங்க அப்பா சொல்றவங்கள  தான் கல்யாணம் பண்ணுவேன்….  எங்கப்பாக்கு மெடிஸன் படிக்க வைக்க இஷ்டம் இல்ல…. என்னோட ஆசைக்காக எங்கப்பா அனுப்பினாங்க…… அதனால தான் எங்க அப்பா சொல்றவங்களை  கல்யாணம் பண்ணிக்குவேன் சொல்லியிருந்தேன் இதுதான் உண்மை….

   உங்ககிட்ட நான் இதைப் பற்றி சொன்னேன் எங்கப்பா பாத்துட்டாங்க எனக்கு அதனால ஓகே சொன்னேன் ன்னு…  உங்ககிட்ட நான் கல்யாணம் ஆனா புதுசுலே சொல்லியிருந்தேன்….

   இப்பவும்  உங்க அப்பா காக தான்… என் கூட இந்த  வாழ்க்கையா….

    என்ன சொல்றீங்க இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு….  இப்ப நம்ம வாழ்க்கையில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா… எங்க அப்பாகாக வாழுற மாதிரியா தெரியுது… ஏன் இப்படி பேசுறீங்க…  என்னால உங்களை விட்டு இருக்க முடியாது அது மட்டும் புரிஞ்சுக்கோங்க….

    இந்த உங்க அம்மா சொன்ன டாக்டர் உன்னை இன்னும் விரும்புகிறாரா….

    லூசா நீங்க….  அவங்கதான் ஏதோ தெரியாம பேசுனா  நீங்களும் பேசுறீங்க…  அவர் என் பிரண்டு….

  எனக்கு பஸ்ர்ட்  இருந்தே ஒரு உறுத்தல் நான் உனக்கு சரியானவன் இல்லையோ அப்படின்னு…  நான் உன்கிட்ட முதலிலேயே சொன்னேனே ஞாபகம் இருக்கா நீ என் பக்கத்துல ரொம்ப சின்னப் பெண்ணா தெரியுற ன்னு….  நீஅந்த டாக்டர் கல்யாணம் பண்ணி இருந்தா நல்லா இருக்கும்னு எனக்கு இப்ப தோணுது….

   லூசு மாதிரி பேசுனீங்க அடித்துக் கொன்று போடுவேன்….  நான் சிவரஞ்சனோட  வொய்ப்…  அதை மனசுல வெச்சுட்டு பேசணும்….

   ஒரு கில்ட்டி கான்சியஸ் இருக்கு… அந்த கான்சிஸ் போயிடுச்சுன்னா நானே உன்னை தேடி வருவேன்…  போகலைன்னா நம்ம இப்படியே இருந்து விடலாம்… மே பி நீ  நல்லா இருந்தா சந்தோஷப்படுற முதல் ஆள் நான் தான்….

   சிவா என்று சத்தமாக கத்தினாள்…  உண்மையிலேயே உங்களுக்கு லூசு தான் புடிச்சிருக்கு நினைக்கிறேன்…. அறிவே இல்லையா உங்களுக்கெல்லாம்… படிச்சிருக்கீங்க தானே… எப்படி எல்லாம்  பேசுறீங்க…..

   படிப்பு என்கிறது அறிவு சம்பந்தப்பட்டது இது மனசு சம்பந்தப்பட்டது உனக்கு புரியாது பவித்ரா….

அழகான நேரம் அதை

நீ தான் கொடுத்தாய்

அழியாத சோகம் அதையும்

நீ தான் கொடுத்தாய் கண்தூங்கும் நேரம்

பார்த்து கடவுள் வந்து போனது போல்

என் வாழ்வில் வந்தே போனாய்

ஏமாற்றம் தாங்கலையே….”

நொந்து போனவளாக அமைதியாக நின்றாள்….

உன் வாசத்தை

சுவாசித்து கொண்டே

வாழத் தொடங்கி

விட்டவள் தான் நான்…

இனி  நீ

இன்றி நான் ஏது….”

 

Advertisement