Advertisement

அத்தியாயம் 7

 

கலைந்தாலும் மேகம் அது

மீண்டும் மிதக்கும்அது போல தானே

உந்தன் காதல் எனக்கும்

நடை பாதை விளக்கா காதல்

விடிந்தவுடன் அணைப்பதற்கு

நெருப்பாலும் முடியாதம்மா

நினைவுகளை அழிப்பதற்கு

உனக்காக காத்திருப்பேன்

உயிரோடு பார்த்திருபேன் ”

மூன்றரை மாதம் சென்ற நிலையில் பெரியம்மாவிடம் இருந்து போன் வந்தது இருவரும் ஒரு முறை ஊருக்கு வந்து விட்டு செல்லும்படி….. சிவரஞ்சனோ ஒரே வார்த்தையில் விடுமுறை கிடைத்தால் வருகிறேன் என்று மட்டும் சொல்லி விட்டான்…

    அதிலிருந்து 4 நாளில் ரஞ்சன் பவித்ராவிடம் அம்மு எனக்கு டிரான்ஸ்பர் ஹைதராபாத் தான் இருக்கும்னு நினைக்கிறேன் போலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்…

   இது என்ன கேள்வி போலாமான்னு போலாம் என்றாள்…..

   பவித்ராவை தன் விட்டு வந்த படிப்பைப் பற்றிய நினைவே இல்லாமல் வேண்டாம் அனைத்தையும் மூட்டை கட்டி பரணில் போட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்…..

     அவளுடைய எண்ணம் முழுவதும் சிவரஞ்சனை மட்டுமே சுற்றி நின்றது….

   இந்நிலையில் மறுபடியும் ஊரில் இருந்து போன் வந்தது பவித்ராவின் அம்மா அப்பாவையும் வரச் சொல்லி பவித்ராவின் அத்தை போன் செய்து வர வைத்திருப்பதாகவும்…. நீங்கள் இருவரும் வர வேண்டும் என்று அவள் சொல்லி கொண்டிருப்பதாகவும்… பெரியம்மா மறுபடியும் போன் செய்தாள் எப்படியும் டிரான்ஸ்பர் என்று வந்து வேறு மாநிலம் செல்லும் போது திருப்பி எப்பொழுது விடுமுறை கிடைத்து வர முடியுமோ என்ற எண்ணத்தில் அவனும் சரி வருகிறோம் என்று சொல்லி விட்டான் பெரியம்மாவின் வற்புறுத்தலுக்காக…

     டிரான்ஸ்பர் ஆகப்போவது உறுதியானதால் கொண்டு செல்லவேண்டிய துணிமணிகளையும் மற்ற பொருட்களையும் தயாராக பேக் செய்து வைத்துவிட்டே இருவரும் ஊருக்கு கிளம்பினர்….

     இவர்கள் ஊருக்கு சென்று சேரும் போது மதிய நேரம் ஆனதால் அங்குள்ள நிலவரம் எதுவும் சரியில்லாதது போல இருவருக்கும் தோன்றியது…. அன்றே இருவரும் தோட்டத்திற்கு எல்லாம் சென்று விட்டு திரும்பி வந்தனர்….  மாலை நேரம் பவித்ராவின் அத்தை அவள் முகத்தை தூக்கி கொண்டு சுத்த பவித்ராவின் அப்பா ஏதோ ஒரு வகை டென்ஷனில் இருப்பதை உணர்ந்தாள்…. பவித்ராவின் அம்மாவோ பவித்ராவின் அப்பாவிடம் சண்டை போடுவதில் இருந்தாள்….. பெரியம்மா மட்டும் என்ன செய்வது என்ற என்று தெரியாமல் ஒருவித படபடப்புடன் இருப்பது தெரிந்தது…. சரி எதுவாக இருந்தாலும் அவர்கள் வாய் வழியாகவே வரட்டும் என்ற எண்ணத்தில் இருவரும் எதுவும் கண்டுகொள்ளவில்லை…

   ஆனால் பவித்ராவின் உள்ளுணர்வு மட்டும் ஏதோ தவறுதலாக நடக்கப்போவதாக அறிவுறுத்திக் கொண்டே இருந்தது…. அதை ரஞ்சனிடம் தெரியப்படுத்தவும் செய்தாள்… சிவாமா எனக்கு என்னமோ பயமா இருக்கு இங்கே ஏதோ தப்பா  சம்திங் நடக்க போற மாதிரி ஒரு ஃபீல் இருக்கு… நாம  இங்கு வந்து இருக்க கூடாதுன்னு தோணுது என்றாள்…..

    ஆமாடா அம்மு எனக்கும் என்னமோ ஒரு வித்தியாசம் தெரியுது….  சரி எதுவா இருந்தாலும் அவங்களை சொல்லட்டும்  பொறுத்திருந்து பார்ப்போம்…..

    மறுநாள் விடியும் நேரம் விடியலை சரியில்லாதது போல தோன்றியது அவ்வீட்டினருக்கு…

காலையில் எழும்பும் போது பவித்ராவின் அத்தை சண்டையை தொடங்கி இருந்தார் அவள் அண்ணனிடம்….

    உன் பொண்ண எதுக்கு இங்க கட்டி வைக்கனும்னு நெனச்சேன் ன்னு நினைக்க…  நல்ல வேலையில் தான் இருக்கான் அவன் அவ அம்மா வழி ல  வேற சொத்து வந்து இருக்கு… அது போதாதா அவனுக்கு இங்கு உள்ள சொத்து வேண்டாம் எழுதிக் கொடுக்கச் சொல்லு என் பிள்ளைகளுக்கு வேணும்ல… ஜாதக தோசம் அது இதுன்னு சொல்லி என்ன ரெண்டாம் தாரமா கட்டி வைத்துவிட்டாங்க….

   இந்த பாரு உன் கல்யாணம்  முடிஞ்சு வருஷக்கணக்காகுது….  அப்ப பிடிக்கலேன்னா அப்பவே பிடிக்கலைன்னு சொல்லி இருக்கணும்…. அதை விட்டுட்டு இப்ப சொல்லிக் காட்டக் கூடாது அம்மா அப்பா இருக்கும்போதே நீ சொல்லிக்காட்டி இருந்தா அது வேற…. இப்ப என்கிட்ட எதுக்கு இதெல்லாம் சொல்றே…

   ஏன் நீ நெனச்சா தடுத்திருக்க முடியாதா நீ நெனச்சா ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்திருக்க முடியாத உன் மகளுக்கு  ஆபீஸர் மாப்பிள்ளை பார்க்க செல்லுவ…. அப்போ உன் தங்கச்சிக்கு கட்டி வைக்கும் போது அப்படி  தோணல இல்ல உனக்கு…

    இப்போ உனக்கு என்ன நீ நல்லா தானே இருக்கே…. ஏன் தேவையில்லாமல் பேசுற… உனக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்கு… அவங்க வீட்டுல ரெண்டு பிள்ளைகள்… மாப்பிள்ளை யோட சேர்த்து மொத்தம்  அஞ்சு பேருக்கு சொத்து வைக்க முடியாத அளவுக்கா இந்த குடும்பம் இருக்கு…. நல்லாத்தான் இருக்காங்க தோட்டம் துரவு ன்னு… ஏன் இப்படி இருக்க யாரும் சொத்தை பத்தி பேசலையே உனக்கு இந்த புத்தி ன்னு தெரியலை….

இங்க பாரு என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது உன் மகட்ட சொல்லி உன் மருமகன் கிட்ட சொல்ல சொல்லு சொத்து வேண்டாம் எழுதி கொடுத்துட்டு போக சொல்லு… இந்த வீட்டில என் பிள்ளைக்கு தான் உரிமை இருக்கு அவனுக்கு தான் அம்மா வீட்டு சொத்து வந்திருக்கு இல்ல….. அதுமட்டுமில்லாம உனக்கும் இவ ஒரு பொம்பளைப் பிள்ளை ஒரு பையன் தான் இவளுக்கு உள்ள பங்க கொடுக்காமலா இருக்க போற……

   இங்க பாரு நானும் கல்யாணம் வாழ்க்கை உன் இஷ்டப்படி இல்லாமல் போயிருச்சே ன்னு…. தான்  நீ ஆசைப்பட்டு அந்தப் பையனுக்கு பொண்ணு கேட்கும்போது நான் சரின்னு சொன்னேன்…..  என் தங்கச்சி குடும்பம் பிரிஞ்சிற கூடாது…  அந்த பையனுக்கு வர்ற பொண்ணு குடும்பத்தில் பிரச்சினை உண்டு பண்ணிறகூடாது  அப்படிங்கிறது காகத்தான் என் மகளை கட்டி வச்சேன்…..  இந்த குடும்பத்துல நீ  எப்பவும் போல இருக்கலாம் என்கிற   என்னத்துக்காக தான்….. ஆனா நீ என்ன எண்ணத்தில கேட்டே ன்னு இப்ப எனக்கு புரியுது….

   ஆமா நான் அப்படிப்பட்ட எண்ணத்தில் தான் கேட்டேன்…. உன் மக வந்தா சொத்துக்கு வேண்டாம் எழுதி வாங்கலாம் ன்னு  தான் கேட்டேன்…. இப்ப என்ன பண்ணனும் ங்கிற…. அதுமட்டுமில்லாம யாரும் இல்லாத அனாதை பயலே கட்டி வைத்தால் தான் உனக்கும் தெரியும் கஷ்டம்…  என்னையும் நீ அப்படித்தானே அம்மா அப்பா என்ட்ட  கேட்காமல் அவசர அவசரமா கட்டி வைக்கும் போது நீயும் ஒன்னும் சொல்லாம கல்யாணத்துக்கு சம்மதித்த…. நீ மட்டும் நல்ல அழகா சொத்து உள்ளவளாக கட்டின எனக்கு மட்டும் சொத்து மட்டும் இருக்குங்கிறத காரணம் காட்டி இரண்டாம் தாரமாக கட்டி வச்சிட்டாங்க ஜாதகத்தை சொல்லி…..

   அதுவரை குடும்பத்தினர் அமைதியாக இருந்தனர்…..  ஆனால் அப்போது பெரியம்மா தான்  தேவையில்லாம அவன் அப்படி பேசினா கெட்ட கோவம் வரும்….. இதுவரைக்கும் நீ என்ன பண்ணுனாலும் நாங்க பதில் சொன்னது கிடையாது…. இப்ப ரஞ்சன்ன பத்தி பேசுற வேலை நீ வச்சுக்க கூடாது…. சின்ன வயசிலிருந்தே அவன் எந்த விஷயத்துக்கும் உன் கிட்ட வந்து நின்றது கிடையாது…. ஏன் அவன் அப்பன் சம்பாத்தியத்திலும் படிச்சது கூட கிடையாது….. அது மட்டும் இல்லாமல் நீ கேள்வி கேட்க உனக்கு உரிமை கிடையாது….. தேவையில்லாமல் பேசாத இது குடும்ப சொத்து பரம்பரை சொத்து  இதுல அவனுக்கு அப்புறம் தான் உன் பிள்ளைகளுக்கு உரிமை…. ….

பெரியம்மா பேசிக்கொண்டிருக்கும்போதே ரஞ்சன் அமைதியாக பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தான்…..  எதுவும் சொல்லவில்லை ஆனால் பவித்ரா பேசத் தொடங்கினாள்….. பெரியத்தை ஒரு நிமிஷம் நான் கொஞ்சம் பேசலாமா என்றாள்…..

        தேவையில்லாம அவரைப் பற்றி தேவையில்லாத வார்த்தை பேசினா….  நான் சும்மா இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அதுவரை மாமனாரிடம் பேசாதவள்…. அன்று ஒரே ஒரு வார்த்தை மட்டுமே கேட்டாள்…. பெற்ற அப்பா நீங்க குத்துக்கல்  மாறி இருக்கும் போது அவரை உங்க பொண்டாட்டி அதாவது   இரண்டாவதாக வந்த பொண்டாட்டி அந்த வார்த்தையை சொல்லும்போது எப்படி உங்களால பார்த்துகிட்டு இருக்க முடியுது… நீங்க எல்லாம் என்ன மனுஷன் அப்போ ஒரு பொண்ணோட வாழ்ந்தது அவள்  மூலம் ஒரு குழந்தை பிறந்தது அதெல்லாம் உங்களுக்கு தெரியல இல்ல….

      ஆனா நீங்க பண்றது தப்புனு என்னைக்காவது ஒரு நாள் தெரியும்….. தெரியும் போது காலம் கடந்து போயிருக்கும் அதுமட்டுமில்லாம உங்க ஒய்ப் கிட்ட சொல்லுங்க  சொத்து வேண்டான்னு கையெழுத்து போட்டுக் கொடுக்க முடியாது ன்னு….  இது அவருக்கான  இடம் அவரோட உரிமைய எந்தவிதத்திலும் யாரும் பறிக்க நான் அனுமதிக்க மாட்டேன்…. நீங்க என்ன சொல்றது….

   ஆஹா….  அண்ண  மகளாச்சே உன்னை கட்டி வச்சா…,  சத்தமில்லாம எல்லா காரியம் சாதிக்கலாம் பார்த்தா நீ அவனுக்கு சப்போட்டா பேசுறியா….  நான் நெனச்சேன்னா இந்த பய இவருக்கு பொறக்கலை ன்னு.,  நான் சொல்லுவேன்…

   நான் டிஎன்ஏ டெஸ்ட் மூலமா நிரூபிப்பேன்…  என்ன பண்ணுவீங்க ஓவரா பேசாதீங்க… இந்த வயசுக்கு உங்களுக்கு இந்த வார்த்தை தேவை இல்லாத வார்த்தை தப்பா பேசினா…   நடக்கிறதே வேற பாத்துக்கோங்க…

    அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த ரஞ்சன்…. ஏற்கனவே கேட்கக் கூடாத வார்த்தைகள் எல்லாம் வீட்டினர் வாயால்  கேட்டவன் மனதளவில் நொந்து போயிருந்தான்….  அவன் பவித்ராவை மட்டுமே அழைத்தான் அம்மு இதுக்கு மேல பேசாத….  தேவையில்ல விடு நான் கையெழுத்து போட்டு கொடுக்காம எதுவும் நடக்காது அதனால பேசாம இரு….  பேசுறவங்க ஆயிரம் பேசுவாங்க பேசிட்டு போகட்டும்…..  இதெல்லாம் எனக்கு பழகிப்போன ஒன்று…..  இவங்க சின்ன வயசுல இருந்து பேசாத பேச்சா இப்ப பேசுறாங்க விடு…..  முதல்ல  இங்க வா என்று அவளை அவன் அருகில் அழைத்தான்….

Advertisement