Advertisement

    அவ்வளவுதானா என்றான்… உதட்டை காட்டி…

     சிரித்துக் கொண்டே அவன் கேட்டதை அவள் மெதுவாக கொடுத்து விட்டு நகரும் முன் மிச்சத்தை அவன் தனதாக்கிக் கொண்டான்…. பிறகு அவசரமாக கிளம்பி அலுவலகம் செல்லும் முன் அவள் கையால் இனிப்பையும் சாப்பிட்டு விட்டு சென்றான்…

    இத்தனை வருடங்கள் கழித்து தனக்கு ஒரு தேவதையின் மூலமாக பிறந்தநாள் கொண்டாடும் வாய்ப்பு என்று நினைத்துக்கொண்டான்…

     அலுவலகம் சென்று கொண்டிருக்கும்போது பவித்ராவிடம் இருந்து அவனுக்கு போன் வந்தது.. சாரி நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி கேட்க நினைச்சேன் கொஞ்சம் வெளியே போயிட்டு வரட்டுமா என்று கேட்டாள்…

    என்ன விஷயம் திடீர்னு வெளியே ஏதும் வாங்கிட்டு வரணுமா… சொல்லு வாங்கிட்டு வரேன் என்றான்…..

     இல்ல சும்மா கடையில போய் ஒரு திங்ஸ் வாங்கணும் என்று அவள் மென்று முழுங்கி சொல்லவும்…..

       அவன் புரிந்து கொண்டான் இவள் பிறந்த நாள் பரிசு வாங்க வெளியே செல்ல வேண்டும் என்று விரும்புகிறாள் என்று….

     அம்மு எனக்கு நேத்து கொடுத்த கிப்ட் திருப்பித்தா போதும் வேற ஒன்னும் வேண்டாம் என்று கேட்டான்…

     அவன் கேட்டவுடன் வெட்கத்தில் பதில் சொல்ல திணறிப்போனாள் அவளுடைய திணறலை புரிந்து கொண்டவன்…

சிரித்துக்கொண்டே அந்த கிப்ட் மட்டும் போதும் என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டான்…..

    அவனுக்கு மதிய உணவை அலுவலக உதவியாளர் மூலம் அனுப்பி விட்டு அவளுடைய செல்லில் தாங்கள் இருவரும்  சில சமயங்களில் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் போட்டோக்களை ரசித்துக்கொண்டிருந்தாள்…. தான் அவனை இந்த அளவு ரசிப்போம் என்று திருமணத்தன்று சொல்லியிருந்தால் கண்டிப்பாக சிரித்திருப்பாள்  ஆனால் இன்று அவள் ரசிப்பதை பார்த்து அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்….

புது கொள்ளைக்காரன் நீயோ

என் நெஞ்சைக் காணவில்லை

நான் உன்னைக்கண்ட பின்னால்

என் கண்கள் தூங்கவில்லை”

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல் திருமணம் செய்தவர்கள் என்றால் அவர்களாலேயே நம்ப முடியவில்லை… அந்தளவு இருவருக்குள்ளும் நல்ல நெருங்கிய அன்பு இருந்தது…   அப்படிப்பட்ட ஒரு நாளில் தான் அவன் கை அளவிலிருந்து கதை கேட்டாள்….

   இந்த விஷயம் எல்லாமே  மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டதுதான் அம்மு…

  ம்ம் ம்ம்….

அம்மா ரொம்ப அழகா இருப்பாங்களாம்…

    உங்களை மாதிரியா…..

    நான் அவங்க ஜாடையாம் ஆனா அவங்க அளவுக்கு இல்ல…. அப்படின்னு அம்மா பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்…

  ம்ம் ம்ம்… ஆனா  நீங்க அழகு தெரியுமா உங்களுக்கு பிளஸ் இந்த மீசை தான் என்றால் மீசையை இழுத்தபடி….

ஏய்…. வலிக்குதுடா…. என்கவும்… அவனது மீசையில் முத்தம் வைத்தவள்…

ம்ம்ம்… அத்தை அழகு… அவங்க பையனும் அழகு.. என்கவும்.. அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு சொல்லத் தொடங்கினான்…

உனக்குதான் தெரியுமே அப்பா  அப்படி ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி கிடையாது… அம்மாக்கு அப்பாவை பிடிக்கவே இல்லையாம்…  பிடிக்காத கல்யாணம் கடமைக்காக ஒரு வாழ்க்கை அதுல நான்…. நான் வயித்துல இருக்கும்போதே அம்மா சாக முயற்சி பண்ணினாங்கலாம்…. இதுவும் இன்னொருத்தங்க சொல்லிதான் கேள்விப்பட்டேன்…. அதுக்கப்புறம்  அப்பா கூட இருக்கவே இல்ல  அம்மா… பாட்டி வீட்ல தான்  இருந்திருக்காங்க…. டெலிவரி டைம்ல அவங்களுக்குள்ள என்ன வெறுப்போ நான் பொறக்குறதுக்கு முன்னாடியே டாக்டர் சொல்லிட்டாங்களாம்… அம்மாவை காப்பாத்த முடியாதுன்னு நான் பிறந்த உடனே இறந்துட்டாங்க…. என்னை அவங்க பார்த்தாங்களா என்று கூட எனக்கு தெரியல…..

ஒரு வயசு வரைக்கும் அம்மா பாட்டி வீட்டில் வளர்ந்திருக்கேன்…. அதுக்கப்புறம் பெரியப்பாவும் பெரியம்மாவும் என்னை கேட்டு வாங்கிட்டு வந்துட்டாங்களாம்…. அப்புறம் பெரியம்மாதான் இன்னும் நல்ல பார்த்துக்கிட்டாங்க…. அப்புறம் அப்பா சித்தியை கல்யாணம் பண்ணிட்டு வந்தாரு எல்லார் சம்மதத்துடன் தான் கல்யாணம் நடந்தது…..  அதுவும் இன்னொருத்தங்க சொல்லித்தான் தெரியும் கல்யாணம் ஆனப்போ பெரியம்மா என்ன அவங்ககிட்ட உடவே மாட்டாங்களாம்…. கொஞ்ச நாள் கழிச்சு சாதாரணமா வீட்ல எல்லாரும் இருக்கும்போது சித்தியோட நடவடிக்கை ய பெரியம்மா கவனிச்சிட்டாங்க… மத்தவங்க முன்னாடி நல்ல பார்த்துக்கிறேன் மாதிரி ஒரு நடிப்பு விடுவார்களாம்… தனியா இருக்கிற நேரம் எத்தனையோ நாள் சொல்ல தெரியாத வயசுல என்ன அடிச்சு இருக்காங்களாம்…. இதுவும் வெளிய உள்ளவங்க சொல்லித்தான் தெரியும் ஆனா பெரியம்மா ஒருநாளும் மத்தவங்கள பத்தி என்கிட்ட தப்பா சொல்ல மாட்டாங்க…. நான் போர்த் படிக்கும்போதே ஹாஸ்டலில் போய் சேர்ந்துட்டேன் பெரியப்பா தான் என்ன கொண்டு போய் கொடைக்கானல் சேர்த்துட்டு வந்தாங்க…  அங்க தான் படிச்சேன் அப்புறம் லீவுக்கு மட்டும் தான் ஊருக்கு வருவேன் பெரியப்பா தான்  என்னை படிக்க வைக்கிறது….   முயற்சி பண்ணினது எல்லாம்…. பெரியம்மா என்ன நல்ல பார்த்துப்பாங்க அவங்களை நான் எந்த விதத்திலும் குறை சொல்ல மாட்டேன்…. ஆனா நான் என்ன எதிர்பார்த்தேன் எனக்கு தெரியல எனக்கு சில நேரங்களில் ஒரு வித்தியாசம் தெரியிற மாதிரி ஒரு உணர்வு என்னதான் இருந்தாலும் அவங்க பிள்ளைகளை பார்க்கிறதுக்கும் என்ன பாக்குறதுக்கும் சில சமயங்களில் வேறுபாடு இருக்குதோ அப்படின்னு தோணும்…. அம்மா வழியிலேயும் அப்படித்தான் அதனால ரெண்டு பக்கமும் போவேன் வருவேன் ஆனா யார் வீட்டிலும் தங்கமாட்டேன்… டென்த் வரைக்கும் பெரியம்மா  கூட இருப்பேன்., லீவுக்கு வரும் போது எல்லாம்…..  அப்புறம்  எங்க அம்மாக்கு எழுதிக் கொடுத்த சொத்து எல்லாம் என் பெயருக்கு மாறுச்சு … அப்புறம் நான் அந்த தோட்டத்துக்கு போய் தங்க ஆரம்பிச்சுட்டேன்…. அதுக்கப்புறம் லீவுக்கு வந்தா  அங்க தான் போவேன், அங்க தான் இருப்பேன், நானே எனக்கு தெரிஞ்சது சமைச்சு சாப்பிடுவேன்.,  கஷ்டமாதான் இருக்கும் ஆனால் பழகிக்கணும் ஒரு வைராக்கியம் யாரையும் எதிர்பார்க்கக்கூடாது யார்கிட்டயும் போய் நிற்கக் கூடாது என்கிற ஒரு வெறி அதுதான்  இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துருச்சு….   நல்ல மார்க் ஸ்கோர் பண்ணேன்….. பெரியப்பாவிற்கு  டாக்டராக இன்ஜினியராக ஆகணும் ன்னு ரொம்ப ஆசைப்பட்டாரு….  ஆனால் எனக்கு அது எதுவும் பிடிக்கல அப்பதான் விசாரிச்சேன் என்ன படிச்சா என்ன நிலைமைக்கு வரலாம்  ன்னு….  அப்படி  விசாரிக்கும் போது எனக்கு தெரிஞ்சது இது…. டிகிரி முடிச்சா போதும் அதுக்கப்புறம் எக்ஸாம் கோச்சிங் எடுக்கணும் அப்படின்னு சொன்னாங்க…  முதல்ல யூஜி பண்ணும் போதே நிறைய புக்ஸ் எடுத்து படிக்க ஆரம்பிச்சேன்…. அப்புறம் பிஜி பண்ணிக்கிட்டே கோச்சிங் கிளாஸ் போக ஆரம்பிச்சேன்… என்னுடைய 27வது வயசுல என்னுடைய எக்ஸாம் க்லியர் பண்ணி உள்ள வந்தேன்… ஃபர்ஸ்ட் ஒரு தடவை அட்டம்ட் போட்டேன்..  இரண்டாவது தடவையும் மெயின் ல போயிருச்சு…. அதுக்கப்புறம் முடிச்சு வந்தேன் தமிழ்நாட்டுக்குள்ளேயே தான் இவ்வளவு நாள் போஸ்டிங்…. நெக்ஸ்ட் டைம் டிரான்ஸ்பர் ஆகிறது வேற ஸ்டேட் டா இருக்கலாம் எப்படி வருதுன்னு தெரியல இதுதான் நான்…..

    ஏதோ அம்மாவோட சொத்து அதுல வர்ற வருமானம் அது இருக்கப் போய் என்னோட படிப்பு என்னோட டிரஸ் இதெல்லாம் அதுல பார்க்க முடிஞ்சிச்சி….  இப்போ என்னோட சம்பளத்தில் பாதிக்கு மேல  படிக்கிற குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணிட்டு தான் இருக்கிறேன்….  கல்யாணத்துக்கு அப்புறம் தோட்டத்தில் வர்ற வருமானத்துல இந்த மாதிரி படிக்கிற பிள்ளைகளுக்கு ஹெல்ப் பண்ண கொடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்….  இனி சம்பளம் நமக்கு வேணும் இல்லையா அதனால….

   நீங்க தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள ஒரு மனுஷன்  அதனாலதான் உங்களால சக்ஸஸ் ஆக முடிஞ்சிருக்கு…. வலியும் வேதனையும் இல்லாத மனுஷன் யாருமே கிடையாது ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான வலி ஒவ்வொரு விதமான வேதனை மத்தவங்களோட வாழ்க்கையெல்லாம் கம்பேர் பண்ணி பார்த்தா….  நாம எவ்வளவோ பரவாயில்ல ன்னு சொல்ற லெவலுக்கு தான் சில நேரங்களில் நம்ம வாழ்க்கை நமக்கு பாடம் கத்துக் கொடுக்குது…… ஒவ்வொருத்தர் சூழ்நிலை அவங்களை நமக்கு சரியில்லாதவங்களா காட்டலாம்…. ஆனா அப்படி இல்லை….

      நீ இப்போ அம்மாவை சொல்லுறீயா…..

      நீங்க அம்மாவை தப்பா நினைக்காதீங்க… புரியுது அந்தந்த இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்… வலியும் வேதனையும்…. உங்களையும் சேர்த்து தான்…  வேணும் ன்னா பாருங்க… உங்க அம்மாவே உங்களுக்கு பொண்ணா வந்து பிறப்பாங்க…

    நிஜமாவா அம்மு என்றான்…

      ம்ம்ம்….

    அம்மு….   நம்மளோட பேபிஸ்க்கு மட்டும் சேர்த்து வச்சா போதும் இல்ல… வீடெல்லாம் கட்டணும்னு எதிர்பார்ப்பு இருக்கா என்ன….

   கண்டிப்பா இல்ல நமக்கு உங்க அம்மாவோட தோட்ட வீடு மட்டும் போதும்…. மீதி எல்லாம் நம்ம குழந்தைகளுக்கு….

    அம்மு எனக்கு ஒரு ஆசை டா….

     எனக்கு ஃபர்ஸ்ட் டே டுவின் பேபியா வேண்டும் .. ரெண்டும் பொண்ணா வேணும்..

அதுக்கு என்ன சொல்லிட்டா போச்சி….

என்னது சொல்லனுமா….

பின்னர் நீங்க கேட்கிறது அப்படித்தான் இருக்கு ஃபர்ஸ்ட் டூவின் பேபி… ரெண்டும் பொண்ணு அப்போ ஆர்டர் கொடுத்து தான் செய்யணும்….

கிண்டல் பண்ற நீ….

எந்த பேபி நாளும் ஓகே…  கிடைக்காட்டி வரிசையா பெத்து விடுவோம்….

  நெஜம்மாவா உனக்கு ஓகேவா…

ம்ம் ம்ம்…. என்று சிரிப்புடன் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டாள்…

    “உனை நான் சுமக்க

     என் மகளாக

     பிறந்திடு…

     தனிமையில் தவித்த

     எனை தாயாய் தாங்க

      எனக்கே மகளாக

      பிறந்திடு…

      தாய்மடி அறியா எனக்கு

      உன் தளிர் கரம் கொண்டு

      தலைகோதிடு……”

Advertisement