Advertisement

அத்தியாயம் 5

 

நீதானே நீதானே

என் நெஞ்சைத்தட்டும் சத்தம்

அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்

என் மாலை வானம் மொத்தம்

இருள் பூசிக்கொள்ளும் சத்தம்

இங்கு நீயும் நானும் மட்டும்

நீதானே நீதானே

என் கண்கள் தேடும் இன்பம்”

தோட்ட வீட்டிற்கு செல்ல தேவையானவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டு போய் சேர்ந்தனர்…. அங்கு போன பிறகு அந்த இயற்கையான சூழ்நிலை அவளுக்கு மன அமைதியைக் கொடுத்தது… அடிக்கடி அங்கு வந்து போய் பழகி இருந்ததால் எல்லா இடமும் அவனுக்கு பழக்கப்பட்ட இடமாக இருந்தது… வேலைக்கு வருபவர்களும் பழகியவர்களாக இருந்தனர்…

வீட்டில் இருந்து கிளம்ப சற்று தாமதம் ஆனதால் மதிய உணவை பெரியம்மாவே கொடுத்து விட்டு விட்டார்… வீட்டிற்கு தேவையான சாமான்கள் ஏற்கனவே வீட்டில் இருந்ததால் உணவு தயாரிக்க தேவையான சாமான்களை மட்டும் அவனுடைய அம்மா பாட்டி கொடுத்துவிடுவதாக சொல்லி இருந்தார்….

வந்த சற்று நேரத்திற்கெல்லாம் மதிய உணவை முடித்துவிட்டு வெளியே இருந்த மாமரத்து நிழலில் அங்கிருந்த நார் கட்டிலை எடுத்து போட்டு அமர்ந்து விட்டான்.. அங்குள்ள கணக்கு வழக்குகளை பார்க்க தோட்டத்தை பார்த்துக்கொள்ளும் ஆள் வரவும் அவரோடு பேச வேண்டியது இருந்ததால் பவித்ராவை நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு போ என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டான்….

அதேநேரம் பாட்டி வீட்டிலிருந்து தேவையான அரிசி பருப்பு முதற்கொண்ட மளிகை சாமான்கள் வந்து சேரவும்., அதை எடுத்து வைத்து கிச்சனில் தேவையான எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா…

அன்றைய நிலையில் அவளை நினைத்து அவளுக்கு சிரிப்பாக வந்தது… எங்கே என்ன வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்., இப்ப இங்க வந்து என்ன செஞ்சிட்டு இருக்கேன் ன்னு நினைத்து கொண்டாள்.. ஆனால் அதுவும் அவளுக்கு மனதிற்கு சந்தோஷமாகவே இருந்தது. இவனை புரிந்து கொள்ளவே முடியவில்லை சில நேரம் நன்றாக பேசுகிறான் சில நேரம் ஏதோ யோசனையில் இருக்கிறானே என்று யோசித்துக்கொண்டிருந்தாள்….

மாலை நேரம் கொறிப்பதற்கு அவளே ஆன்லைன் பார்த்து பாட்டி கொடுத்து விட்டுருந்த பொருளை வைத்து பாக்கோடா தயார் செய்து விட்டு…. டீ தயாரிக்க பாலும் எடுத்து வைத்துவிட்டு வெளியே வரவும் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த தோட்டத்தை கவனிக்கும் பொறுப்பாளர் கிளம்பிக் கொண்டிருந்தார்…. அவர் போன பிறகு எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு இருந்த ரஞ்சன் இவளைப் பார்த்து வர்றியா ஒரு வாக் போயிட்டு வரலாம் என்று அழைத்த உடன் சரி என்று கதவை பூட்டிக் கொண்டு அவனோடு இறங்கி நடக்கத் தொடங்கினாள்…..

ஆனால் அவளிடம் எந்த விஷயங்களையும் அப்போது அவன் பகிர்ந்துகொள்ளவில்லை… பொதுப்படையான விஷயங்கள் தவிர வேறு எதுவும் அவன் பேசவும் இல்லை…..

மாலை சிற்றுண்டி யோடு டீ குடித்த பிறகு அங்கிருந்த தொலைக்காட்சியில் செய்தியை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான்… இரவு உணவுக்காக பவித்ரா என்ன செய்வது என்று அவனிடம் கேட்கும் போது….

நான் செய்றேன் நீ உட்காரு என்று சொல்லிவிட்டு செய்யத்தொடங்கினான்…

இவளும் கூட சேர்ந்து செய்யவும் இரவுக்கான உணவாக சப்பாத்தியும் கிழங்கும் செய்துகொண்டு இருந்தனர்….. இருவருக்கும் தேவையான அளவு செய்தவுடன் அவன் அனைத்தையும் ஒதுக்கி வைக்க அவன் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் அவ்வளவு சுத்தமாகவும் சுறுசுறுப்பாக வேலை செய்தான்…..

அவன் அவ்வேலைகளை முடிக்கவும் இவள் இவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி எடுத்து வைத்தாள்… அவனை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டே செய்வதை பார்த்து….

என்ன அப்படி பார்க்கிற என்று கேட்டான்…

சமையலும் ஸ்பீடா பண்றீங்க., ரொம்ப நீட்டா பண்றீங்க., அந்த கிச்சன் முதற்கொண்டு ரொம்ப நீட்டா வெச்சிருக்கீங்க அதை பார்த்தேன்….

நான் டென்த் படிக்கும்போது இருந்து செய்றேன்…. அப்படியே பழகிருச்சு., மத்தபடி ஸ்கூல் படிக்கிறப்போ ஹாஸ்டல்ல இருந்து லீவுக்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவேன்… டென்த் வரைக்கும் பெரியம்மா கூடத்தான் வீட்டில் தான் இருந்தேன்…. அதுக்கப்புறம் எனக்கு அங்க இருக்க பிடிக்கல., அதனால நான் இங்கே வந்துருவேன்…. மேக்சிமம் இங்க தனியாதான் இருப்பேன்… அதனால இது எனக்கு பழகி போன ஓண்ணுதான் என்று பதில் சொன்னான்…

இவன் அந்த வயதில் எப்படி இந்த இடத்தில் தனியாக இருந்திருப்பான் என்று யோசித்தாள் மனதிற்குள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது….

துணையோடு சுற்றிக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டு பெற்றோரின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய வயதில் தனிமையில் வாழ்ந்த அவனது நிலை அவளது மன உணர்வுகளுக்கு பாரமாகவே தோன்றியது…..

ஏன் இந்த சூழ்நிலை வீட்டில் என்ன நிலை என்று தெரியாததால் இவளுக்கு அவனிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது பெரியம்மா பாசமாக தான் இருக்கிறார்கள்… அம்மா வழிபாட்டியும் பாசமாக தான் இருக்கிறார்கள்… அவர்களுடைய குடும்பத்தினரும் பாசமாக தான் இருக்கிறார்கள்… எதற்காக இவன் தனிமை தேடி வந்தான் என்றே மனதில் தோன்றியது… அவனிடம் கேட்க தயக்கமாக இருந்தால் அவன் முகத்தை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்….

ரொம்ப யோசிக்காத எல்லாத்தையும் ஒரு நாள் சொல்றேன்….

அவள் அவனை பார்த்து எப்படி என்கவும்….

நீ பாக்குறத தெரியுது யோசிக்கிற ன்னு… விடு ரொம்ப யோசிக்காத….

வலிய முகத்தில் சிரிப்பை வரவழைத்து கொண்டாலும்… அவள் மனதில் பாரம் ஏறுவதை அவனும் உணர்ந்தான்….

அப்போதுதான் மெதுவாக அவளைப் பற்றி விசாரித்தான் ஆனால் படிப்பை பற்றி கேட்கவில்லை…. இவளும் சொல்ல விரும்பவில்லை…

உனக்கு ஏஜ் என்ன இருக்கும் என்று மட்டும் தான் கேட்டான்…

ஏன் என்றாள்…..

ரொம்ப சின்னப் பொண்ணா தெரிகிற என் பக்கத்துல அதனாலதான் கேட்டேன் என்றேன்….

25 என்கவும்…

என்னை விட ஆறு வயசு சின்னப் பொண்ணு….

இப்ப எல்லாம் எல்லாரும் லைஃப்ல செட்டில் ஆனதுக்கப்புறம் தானே கல்யாணம் பண்ணிக்கிறாங்க இது ஒன்னும் பெருசு இல்லையே….

செட்டில் ஆன அப்புறம் கல்யாணம் பண்ணிக்கணும் ன்னா…. நான் 28 பண்ணி இருக்கனும் நான் 28 செட்டில் ஆயாச்சு…

அப்புறம் ஏன் பண்ணிக்கல….

கல்யாணத்துல பெருசா இன்ட்ரஸ்ட் இல்லை…. எப்படி சொல்றது இப்ப சொன்னா நீ என்ன விரோதி மாதிரி பார்த்தாலும் பார்ப்பே ன்னு நினைக்கிறேன்…. எனக்கு பொண்ணுங்கள பிடிக்காது அது தான் விஷயம்…

ஆஆ என்று வாயை திறந்தபடி அவனைப் பார்த்து ஒரு அசட்டு மொழி முழித்துக் கொண்டிருந்தாள்…

அவள் முழிப்பதை பார்த்தவுடன் அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது வாய் விட்டு சிரித்தான் அவன் சிரிப்பதை பார்த்தவுடன் அவளுக்கு வெட்கம் வந்துவிட்டது….

ஏன் என்ன ஆச்சு அப்படி பார்த்த…

பொண்ணுங்கள பிடிக்காது என்றால் அப்புறம் எப்படி என்ன கல்யாணம் பண்ணிகிட்டீங்க நான் பார்க்க பொண்ணு மாதிரி இல்லையா…

பொம்மை மாதிரி இருக்க போதுமா…. பொண்ணுங்கன்னு பொதுவா சொன்னேன்…. அதுல சில கேரக்டர் இருக்கு போக போக நீ என்ன பத்தி புரிஞ்ச பிறகு…. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்ட அப்புறம் நான் உனக்கு நிறைய விஷயங்கள் சொல்றேன்…. ஸ்டார்டிங் லேயே உன் கிட்ட வந்து நான் எல்லா விஷயங்களையும் சொன்னேன் னா அது எனக்கு சரியா வரும்னு தோணலை சரியா.. போகப் போக உனக்கு ஒவ்வொரு விஷயமா சொல்றேன்…

அங்கிருந்த நான்கு நாட்களும் அவனோடு என்ன பேசினோம் என்று தெரியாவிட்டாலும் அவளுக்கு நல்லபடியாகவே கழிந்தது இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்து சில தோல்விகளையும் பல வெற்றிகளையும் கண்டது போல் உணர்ந்தனர்…. எங்கு வேலை பார்க்கிறான் என்று கூட தெரியாத நிலையில் ஐந்தாவது நாள் வீட்டிற்கு சென்று விட்டு அவளுடைய உடைகள் அடங்கிய சூட்கேஸ் மட்டும் எடுத்துக்கொண்டு இவன் கொண்டு வந்த பையையும் எடுத்துக் கொண்டு கிளம்ப தயார் ஆகினர்…. அப்போதும் இவள் எங்கே போகிறோம் எந்த ஊர் என்றெல்லாம் கேட்கவில்லை…. அவனோடு கிளம்பினால் அப்போது போன் செய்து அவள் அப்பாவிடம் பேசினால் அவனோடு கிளம்ப போவதாக மட்டும்…. கல்யாணம் பேசி முடித்த நாளிலிருந்து கல்யாணம் ஆன பிறகு அவள் அம்மா அவளிடம் சுத்தமாகப் பேசுவதே இல்லை அப்பா சொன்ன உடன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டால் என்ற கோபம்…. ஏற்கனவே அம்மாவிற்கும் அத்தைக்கும் ஆகாது இதில் அத்தை சம்பந்தப்பட்ட இடத்தில் திருமணம் செய்திருப்பது அம்மாவிற்கு பிடிக்கவில்லை… திருமணம் பேசி முடித்த நாளிலிருந்து அம்மாவிற்கும் அப்பாவிற்கும் சண்டை அந்த கோபத்தை பவித்ராவிடம் பவித்ராவின் அம்மா காட்டிக் கொண்டிருந்தார்….

அவள் ரயில் நிலையம் அழைத்துச் செல்வான் இல்லையெனில் எங்காவது பஸ் அது போல் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்க அவன் கிளம்பி தயாரான சற்று நேரத்தில் ஒரு கார் மட்டும் வந்து நின்றது அதிலிருந்து இறங்கியவன் மரியாதையாக நின்று பேசிக் கொண்டிருந்தான் இவளுடைய சூட்கேஸ் எடுத்து வரவும்… டிரைவர் வேகமாக வந்து வாங்கி அனைத்தையும் டிக்கியில் வைத்தான்… அதை தவிர பெரியம்மா கொடுத்தனுப்பிய சிலபொருள்களும் ஏற்றப்பட்டது… இவளுக்கு கார் கதவை திறந்து வைத்து ஏறியவுடன் அவனும் ஏறிக்கொண்டு டிரைவரிடம் போகலாம் என்று சொன்னான்…. பின்பு பவித்ரா பேசத்தொடங்கும் போது அவள் கையை பிடித்து பேசவேண்டாம் என்பதாக சிறு செய்கையின் மூலம் உணர்த்தினான்…. இவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை….

போகும் வழியில் இரவு உணவிற்காக ஒரு கடை பக்கம் நிறுத்த நல்ல உயர்தர ஹோட்டலாக இருந்தது…. அவளும் அவனும் மட்டும் செல்ல டிரைவரிடம் சாப்பிட்டுவிட்டு வந்து விடுங்கள் என்று மரியாதையாக சொல்லிவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்…. அவர்கள் உணவு முடிந்து வரும் முன் டிரைவர் ரெடியாக காத்திருந்தார் இவளுக்கோ ஏதோ காட்டுக்குள் செல்வது போலவே முதலில் தோன்றியது….

சாப்பிடும் இடத்தில் வைத்து அவளிடம் சொன்னது டிரைவர் முன்பு எதுவும் பேச வேண்டாம்…. எதுவாக இருந்தாலும் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம்….

நாளைக்கு சண்டே என்கிறதால் நான் வீட்டில்தான் இருப்பேன்…. அப்ப இன்னும் எல்லா டீடைல்ஸ் சொல்லிருவேன்…. திங்கட்கிழமையில் இருந்து நீ பாத்துக்கோ… ஏன்னா எனக்கு ஒர்க் ஸ்டார்ட் ஆயிடும் அதுக்கப்புறம் நீதான் பாத்துக்கணும் என்றபடி காருக்கு அழைத்து வந்தான்….

ம்ம்.. என்ற படி அவனைத் தொடர்ந்து வந்தாள்…

வீட்டிலிருந்து கிளம்பவே 7 மணியை தாண்டியிருந்தது அவர்கள் வீடு வந்து சேரும் போது மணி பதினொன்னரை யை தாண்டியிருந்தது…..

மதுரையில் இருந்து 4ம் நான்கைந்து மணி நேர பயண வித்தியாசமே அவன் இருந்த ஊருக்கும் இருந்தது.,..

இரவு உணவு முடித்து விட்டு காரில் ஏறி அதிலிருந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தவளிடம்…. தனது பர்சனல் நம்பர் உள்ள செல்லில் இருந்து பாடல்களை ஆன் செய்து ஹெட்போனில் அவளுக்கு ஒரு பக்க காதில் வைத்து விட்டு தானும் ஒரு பக்கம் வைத்துக்கொண்டான்…. அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக புடிச்சி இருந்தா கேளு இல்லடி எடுத்துடு என்று சொன்னபடி வைத்துவிட்டான்….

மிகப்பெரிய இசையமைப்பாளரின் மெலோடி பாடல்களாக அதில் இருந்ததால் இவளும் கேட்டுக்கொண்டே வந்தாள்… சற்று நேரத்தில் கண்ணயர்ந்து அவன் தோளில் சாய்ந்து விட மெதுவாக அவள் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்…. இது எதுவும் தெரியாத பவித்ரா அவன் தோளில் சாய்ந்து நன்கு தூங்கிக் கொண்டே வந்தாள்…. வீட்டு அருகில் வந்த உடனே தான் மெதுவாக எழுப்பினான் வீடு வந்தாச்சு என்ற அபோது கண்விழித்த பவித்ராவிற்கு எங்கிருக்கிறோம் என்று முதலில் தெரியாமல் பின்பு அவன் கை அணைப்பில் இருப்பதை பார்த்து அவன் தோளில் தலைசாய்த்து இருப்பதையும் கண்டு அவசரமாக எழுந்து அமர்ந்து சரியாக அமர்ந்து கொண்டு அவனிடம் சாரி என்றாள்….

 உங்க ஊர்ல தூங்குவது எல்லாம் சாரி கேட்பார்களா என்ன என்றான்….

இல்ல அது வந்து என்று அவர்கள் இழுக்கவும் ..அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்து கொண்டவன்…

ஹஸ்பண்ட் தோள்ல சாய்ந்ததுக்கு எல்லாம் சாரி கேட்பாங்களா…. சிரித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தாள்…. டிரைவர் ஹார்ன் அடிப்பதை பார்த்து அப்போது தான் திரும்பி வீட்டை பார்த்தாள் கேட் திறக்க வந்த காவலரை கண்டவுடன் அவனை திரும்பி பார்த்துவிட்டு மறுபடியும் வீட்டைப் பார்த்தாள்…. அப்போதுதான் புரிந்து கொண்டால் அது கலெக்டர் பங்களா என்பதை….

வீட்டைப் பார்த்துவிட்டு மறுபடியும் அவனைத் திரும்பிப் பார்க்க என்ன என்றான்…மெதுவாக இல்ல நீங்க என்றாள்….

வீட்டுக்குள்ள வா அப்புறம் பேசுவோம் என்பதுடன் நிறுத்திக் கொண்டான்….

வீட்டிற்கு வந்த அந்த இரவு நேரத்திலும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் இருவரும்… வீட்டில் செய்வது வேலை செய்பவர்கள் இருவரும் இவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர்…. டிரைவர் காரில் இருந்து பொருட்களை இறக்கி வைக்கவும் மற்றவர்கள் அதை உள்ளே எடுத்துக் கொண்டு வைத்தனர்…. வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண் ஆரத்தியோடு வந்து அவளை வரவேற்றார்… பவித்ராவிற்கு ஒரு நிமிடம் என்னவென்று புரியாவிட்டாலும் அவளது கை மெதுவாக நடுங்குவதை உணர்ந்தாள் என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவித பதட்டத்தோடு அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டாள்….

ஏய் என்ன ஆச்சு என்றான் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி காதருகில் குனிந்து…. ரிலாக்ஸா இரு உள்ள போய் பேசிக்கலாம் என்று மட்டும் சொன்னான் மறுபடியும்…..

சமையல் செய்யும் பெண் பின்புறம் உள்ள சிறிய வீட்டில் தான் இருப்பதாகவும், காலையில் சீக்கிரம் வந்து விடுவதாகவும் சொல்லிவிட்டு சென்றாள்… அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் மற்றவர்களும் சொல்லிக்கொண்டு கிளம்பவும்… காவலர் வாசல் பகுதியில் இருந்த அந்த அறைக்கு சென்றார்…. அனைவரும் சென்றபிறகு ரஞ்சன் கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்து என்ன ஆச்சு என்றான்… சமையல் செய்யும் பெண் போகும் முன் இருவருக்கும் பால் சூடு செய்து கொடுத்து விட்டு சென்றதால் அதை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்…

ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் நுழையும் போது தான் வீட்டு வாசலில் இருந்த பெயர் பலகையை பார்த்தாள் சிவரஞ்சன் ஐஎஎஸ் என்று இருந்தது…

இல்ல நீங்க….. வந்து…. என்று இழுக்கவும்…

ஏன் எனக்கு என்ன…. ஒண்ணுமில்லை…. சரியா…. மத்தவங்களுக்கு தான் இந்த பதவி , மரியாதை எல்லாம்…. உன்னை பொருத்தவரை உன்னோட ஹஸ்பண்ட் மட்டும் தான்… புரிஞ்சதா… என்கவும்…

அவளோ… யோசனையோடு தலையசைக்கவும்….

யாரைப் பார்த்தும் பயம் தேவையில்லை… இத்தனை நாளாக எப்படி வாய் அடித்துக்கொண்டு இருந்தீயோ… அதே போல இரு என்று அவன் சொல்லியும்… அவள் பதட்டம் குறையாமல் இருப்பதை கண்டவன் அவள் கையிலிருந்த பால் டம்ளரை வாங்கி வைத்துவிட்டு கை இரண்டையும் விரித்து அவளை அருகில் வரும்படி அழைத்தான்… அருகில் வந்தவளை இழுத்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக்கொடுத்து…. நீ நீயாக இரு உன்னை எந்த விதத்திலும் மாற்றிக்கொள்ள வேண்டாம் என்று சொன்னான்…. ஊருக்கே கலைக்டராக இருந்தாலும்., என் பொண்டாட்டிக்கு நான் புருஷன் மட்டும்தான் என்று காதுக்குள் மீசை உரச சொல்லி அவளை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டான்…. அவளது படபடப்பு சற்று அடங்குவதை கண்டதும் தள்ளி நிறுத்தியவன் இப்போ ஓகேவா என்று கேட்டான்…..

ஏன் நீங்க ஏதுவும் சொல்லல என்று கேட்டபோது ஊரில் யாருக்கும் தெரியாது…. ஆபிஸர் ரேங்க் என்று மட்டும் தான் சொல்லியிருக்கிறேன்…. பெரியம்மாவை தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது… என் சம்பளத்தில் பாதியை மட்டும் தான் வெளியில் சொல்லி இருக்கிறேன்…

அவர்களுக்கான தனிக்குடித்தனம் குடும்பத்தினர் யாரும் இன்றி நல்லபடியாக தொடங்கியது…..

எனக்கு நீ மட்டுமே

உலகமாகி போனதன்

ரகசியம் யார் அறிவார்….

உரக்க சொல்லிவிடு

உன் அன்பில்

நான் அடிமையான

கதையை…..”

Advertisement