Advertisement

அத்தியாயம் 4

 

உயிர் வாழ்ந்திடும் வரையில்

உனக்கே மடி குடுப்பேன்.

இனி ஓர் ஜென்மம் இருந்தால்

உனக்காய் மீண்டும் பிறப்பேன்

உனது கனவில் நினைவில் உருவில்

நானே என்றும் இருப்பேன்.”

சில பிரச்சனைகளுக்கு பிறகு அவள் படிக்க அனுப்ப பெற்றவர்கள் சம்மதித்தனர்…. பவித்ராவின் தந்தை ஆபீஸர் ரேங்கில் இருந்தாலும் நேர்மையானவர் எனவே சாதாரண அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கை….  அதில் எங்கே அவளை வெளிநாட்டில் படிக்க அனுப்ப என்ற எண்ணத்துடன் யோசனையுடன் இருந்தார்….

     ஐந்து பேரும் சேர்ந்து ஐந்து பேர் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கினார்கள்…. அங்கு இருக்கும் இவர்களுடைய சீனியரின் உதவியுடன் மற்ற ஏற்பாடுகளை செய்து கொண்டனர்…. ஆனால் முதலில் பரீட்சையில் பவித்ரா ஆசை பட்ட படிப்பு கிடைக்க பவித்ரா கிளம்பி விட்டாள்….

   பவித்ரா வந்து ஒரு வருடம் கழித்தே மற்ற நால்வரும் வந்து சேர்ந்தனர்… அங்கு இருந்த அந்த நாட்களில் மிகவும் சந்தோஷத்துடன் நட்புடனும் நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர்….  மூன்றாம் வருடம் தொடங்கும்போது வீட்டிலிருந்து போன் வந்தது உடனே கிளம்பி வர வேண்டும் என்று….. படிப்பை பற்றி பிறகு யோசிக்கலாம் விடுப்பு எடுத்துக் கொண்டு வா என்று மட்டுமே செய்தி வந்தது….

      வந்த பின்தான் பவித்ராவிற்கு தெரியும் அவள் அப்பா வழியில் உள்ள அத்தை குடும்பத்தில் பிரச்சினை….

      அத்தையின் சூழ்ச்சியை அப்பா உணரவில்லை என்பது கடைசியாக வந்த பிரச்சனையின் போது தான் தெரிந்தது ஆனால் இதில் எந்த விதத்திலும் அவனை மட்டும் குறை சொல்ல அவளால் முடியவில்லை, ஏனெனில் அவன் மீது எந்த தப்பும் இல்லை என்பது அவனோடு வாழ்ந்த அந்த மூன்று மாத வாழ்க்கை உணர்த்தியது…

     தாய் அன்பை தேடும் ஒரு குழந்தையாகவே அவன் அவளுக்கு தெரிந்தான்….. எதையும் மறைத்துவைக்கவில்லை அவன் மனதை அழுத்தும் விஷயங்கள் அனைத்தையும் தன் சிறு பிராயம் முதல் தான் வளர்ந்து வந்த இந்த நிலை வரைக்கும் உள்ள அனைத்தையும் அவளிடம் பகிர்ந்து கொண்டான்…..

அவன் கையணைப்பில் கேட்ட கதைகள்

கண்முன்னே வந்து போனது….

    ஊரிலிருந்து வந்து இறங்கியவளிடம் அப்பா சொன்ன ஒரே வார்த்தை இதுதான்…. அத்தை வீட்டில் பிரச்சனை., அத்தையை ஏற்கனவே இரண்டாம் தாரமாக கல்யாணம் செய்து கொடுத்தது அவளுக்கு வருத்தம், இந்த சூழ்நிலையில் அவள் வாழ்வில் பிரச்சனை என்று வந்தால் அவள் பாவம் அதனால் அவள் வீட்டில் தான் உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறேன்…. மாப்பிள்ளை ஆபீஸர் ரேங்கில் இருப்பதால் தான் நானும் சம்மதம் சொன்னேன்.,  பார்க்கவும் பையன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று மட்டுமே தான் அப்பா சொன்னார்….

    அப்பா என் படிப்பு என்று பவித்ரா யோசிக்கவும்….

    நீ தான்மா சொன்ன கல்யாணம் என்று வரும் போது நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்கிறேன் ன்னு சொன்னேன்ல என்றார்…

   ஆமாப்பா அப்படித்தான் சொன்னேன் இப்பவும் அதே தான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை ஆனால் இன்னுமொரு ஒன்பது மாதம் படிப்புதான் இருக்கு படிப்பு முடிஞ்ச உடனே கல்யாணம் பண்ணிக்கிறேன் பா….

    இல்லடா இப்போ ஒரு பிரச்சனை  இருக்கிறதா சொல்லி அத்தை அழுகுறா… அவள் சொல்லும்போது நான் என்ன பண்ண முடியும்…. அவ கேக்கும்போது மாட்டேன்னு சொல்ல முடியல….  அதுமட்டுமில்லாம பையனோட பெரியப்பா பெரியம்மா எல்லாரும் தான் வந்தாங்க…. உங்க அத்தை என்கிட்ட ரெண்டு நாள் முன்னாடி சொல்லிட்டு போனா ரெண்டு நாள் கழிச்சு பையன் வீட்டிலுள்ள எல்லாரும் வந்து கேட்டாங்க முறைப்படி பேசினா நானும் சரின்னு சொல்லிட்டேன் இன்னும் 15 நாள்ல கல்யாணம் என்று மட்டுமே அறிவித்தார்….

    மேற்கொண்டு இவளும் படிப்பை பற்றி மாப்பிள்ளையின் வேலை பற்றி கேட்கவில்லை… கல்யாண பத்திரிக்கையிலும் இவளுடைய படிப்பு சம்பந்தமாக எதுவும் இல்லை மாப்பிள்ளையின் படிப்பு சம்பந்தமாக எதுவும் இல்லை பொதுவாக பெயர் மட்டுமே இருந்தது அதைத்தவிர இவளுக்கு அவனைப்பற்றி திருமணத்திற்கு முன்பு வரை எதுவும் தெரியாது….

    அத்தையின் வாழ்க்கை பற்றி தெரியும், அத்தையை ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுத்தார்கள்….  சற்று வயது போய் திருமணம் செய்ததால்,  அத்தை கல்யாணம் செய்தவருடைய மூத்த தாரத்து மனைவியின் மகன் தான் இப்போது இவளுக்கு பேசி முடித்திருப்பது….

     எப்போதாவது தேவை என்றால் மட்டுமே பேசும் அத்தை இப்போது திடீரென அப்பாவிடம் வந்து பெண் கேட்டிருப்பது இவளுக்கு சற்று உறுத்தலாகவே இருந்தது…  ஆனால் அப்பா சொன்ன விவரங்களை வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று மட்டுமே நினைத்து விட்டாள்….

    பதினைந்து நாள் கழித்து திருமணம் கோவிலில் நடந்தது அது மாப்பிள்ளையின் விருப்பம் என்று மட்டுமே தெரியும்…. விமர்சையாக செய்ய விரும்பவில்லை என்று மாப்பிள்ளை சொன்னதாக மற்றவர்கள் தெரிவித்தார்கள்…. அது ஏன் என்று இவளுக்கும் அப்போது தெரியவில்லை….

மாலை மாற்றும் போதுதான் முதன்முதலாக அவனின் முகத்தையே பார்த்தாள் அதில் இருந்த ஒருவித சோகமும் ஏதோ மறைக்கப்பட்ட கோபமும் இருப்பதாக தோன்றியது….  ஆனால் அவன் கண்ணை நேருக்கு நேர் பார்க்கும் போது சில வினாடிகளுக்கு மேல் அவளால் பார்க்க முடியாமல் குனிந்து விட்டாள்… அப்போது அவன் முகத்தில் தெரிந்த பாவத்திற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை…..

    அவனும்  அப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தான்…. சின்ன பொண்ணாக  இருக்குதே என்று அவனுக்கும் தோன்றியது…

       அதன்பிறகு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவும் இல்லை திருமணம் முடிந்த பிறகு மதுரைக்கு அருகில் உள்ள அவனது ஊருக்கு அழைத்துச் சென்றார்கள்… அப்பா செய்ய வேண்டிய முறைகளை செய்து விட்டு அவனுடைய பெரியப்பாவிடமும் பெரியம்மாவிடம் சற்று நேரம் பேசியிருந்து விட்டு எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அவர்கள் அன்றே ஊருக்கு கிளம்பினார்கள்…. ஏதோ அவசர அவசரமாக திருமணம் செய்து எங்கோ பிடித்துத் தள்ளியது போல பவித்ரா உணர்ந்தாள்….

    அத்தை வலிய வந்து  பெண் கேட்டதாக அப்பா  சொன்னதை இப்போது நினைத்துக்கொண்டாள்…. ஆனால் திருமணம் முடிந்த அந்த நாளில்…. அத்தை திருமணம் ஆன அந்த நிமிடத்திற்கு பிறகு இவளிடம் எதுவுமே பேசவில்லை…. அவள் அவருடைய முகத்தில் தெரிந்த முகபாவம் எதை உணர்த்துகிறது என்று ஆராய முற்படவில்லை ஏனோ ஒரு கோபம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டாள்…. அவள் முகத்தில் இருந்த அந்த பாவத்திற்கு என்ன அர்த்தம் என்று பின்னாளில் புரிந்து கொண்டாள்…..

    ஆனால் அவனுடைய பெரியம்மா மிகவும் அன்பாக நடந்து கொண்டார்…. பெரியம்மா வீட்டினரும் அப்படித்தான் அவளைப் பார்த்துக் கொண்டனர்….. அப்போதுதான் அங்கிருந்த வயதான தம்பதியினரையும் அவர்களோடு இருந்த குடும்பத்தினரையும் பெரியம்மா அறிமுகப்படுத்தினார்…. அவனுடைய அம்மா வழி தாத்தா பாட்டி அவர்கள் குடும்பத்தினர் என்று அறிமுகம் செய்வித்தார்…..  அவர்களும் இவளிடம் மிகவும் அன்பாகவே நடந்து கொண்டனர்…

      அம்மா வழி பாட்டியும் தாத்தாவும் இவளைத் அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தனர்… அவன் பிறந்த உடனே எங்க பொண்ணு போய் சேர்ந்துட்டா…. தாயில்லாமல் வளர்ந்த புள்ள ஏதும் தப்பு பண்ணுனா மன்னிச்சுக்கோ அம்மா… அவனை நல்லபடியா பார்த்துக்கோ….  ஒரு தாய் இருந்து சொல்லி வளர்க்கிறதுக்கும்….  மத்தவங்க சொல்லி வளர்ப்பதுக்கும் வித்தியாசம் இருக்கு எதுனாலும் எங்க கிட்ட கேளு மா….  அவனே கோபத்தில் எதுவும் வார்த்தை விட்டாலும் மனசில் வெச்சுகாதே எதுவா இருந்தாலும் எங்க கிட்ட சொல்லு அவன் குணத்தை பத்தி உனக்கு போக போக புரியும்… எங்களுக்கே இன்னும் சரிவர புரியாதும்மா…. சில நேரம் நல்லா பேசுவான் சிலநேரம் கோவத்தில பேசுவான்…. ஆனா நல்ல பையன் மா அத மட்டும் நாங்க உறுதியா சொல்லுவோம்…  நீ நல்ல பார்த்துக்கோ அன்புக்காக ஏங்குற புள்ள பார்த்துக்கோ என்று மட்டுமே அவர்கள் சொன்னார்கள்…

இவளும் பெரியவர்களிடம் சிரித்த முகமாகவே பேசிக்கொண்டிருந்தாள்….

அன்றைய அவர்களுக்கான தனிமையான நேரம் கிட்டும் வரை அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை இவளும் அவனிடம் பேச முயற்சிக்கவில்லை…

  முக்கியமான சொந்தங்கள் மற்றும் ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் வந்து இவளைப் பார்த்து விட்டு  பேசி விட்டு சென்றனர்…. அவனிடம்  வந்தவர்களும் சற்று மரியாதையாகவே தள்ளி நின்று பேசி விட்டு சென்றுவிட்டனர்….பவித்ராவோ யாரிடமும் பேச மாட்டார் போல என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்…. மற்றபடி அவளுக்கும் அவனைப் பற்றி எதுவும் தெரியாததால் அதற்கு மேல் யோசிக்கவில்லை….

       பாதி நேரம் அவனுடைய அறையிலேயே இருந்தான் மீதி நேரமும் அவனுக்கு போன் வந்தபடி இருந்தது அதில் பேசிக் கொண்டிருந்தவன் பேச்சை வைத்து அவன் ஒரு வாரம் மட்டுமே விடுப்பில் வந்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள்….

    அன்றைய தனிமையான நேரத்தில் தான் இவள் அவனுடைய அறைக்குள் வந்ததும் சாதாரணமாக பேச்சை துவங்கினான்….

    என்னை பத்தி என்ன தெரியும் என்று அவன் கேட்கவும் இவள் முதலில் சற்று நேரம் விழித்து விட்டு தெரியாது என்று தலையை ஆட்டினாள்…

   என்னை பார்க்கவுமில்லை , என்னை புடிச்சிருக்கா புடிக்கலயானு உங்க வீட்ல உன்கிட்ட கேட்கவும் இல்லை,  அவங்க சொன்னாதிற்காக  கல்யாணம் பண்ணிக்கிட்டு.,  கடைசி வரைக்கும்  நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போக போற ஒரு பயணம் ன்னு கூட வச்சுக்கோ….  பக்கத்து சீட்ல இருக்க மற்றவங்களப் பத்தி நமக்கு எதுவும் தெரியனும் என்று அவசியமில்லை….  ஆனால் வாழ்க்கை ஃபுல்லா பக்கத்துல கைக்கோர்த்து  கொண்டு நடக்கப்போறோம்… ஒருத்தரை பற்றி ஒருத்தர் பத்தி தெரிஞ்சுக்கணும் உனக்கு தோணலையா….

    அது அப்பா விசாரிச்சுருப்பாங்க….  அப்பா பார்த்திருப்பாங்க அப்படிங்கற நம்பிக்கை நான் எதுவும் கேட்கலை…. அப்பாவுக்கும் தெரியும் இல்லையா அதனாலதான்… என்றாள் மெதுவாக…

     சரி…. என்ன பத்தி உனக்கு எதுவுமே தெரியாது ஓகே….  நீ கேட்கலாம் என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும் கேட்டனா எனக்கும் எதுவும் தெரியாது…..

    நான் நேத்திக்கு மார்னிங் தான் வந்தேன்…  எங்க பெரியம்மா மட்டும் தான் உன் போட்டோ பார்த்து இருக்கேன்னு சொன்னாங்க…..  மற்றபடி நான் யாரு என்ன எதுவுமே தெரியாது…. இன்னைக்கு காலைல தான் எனக்கு தெரியும் நீ சித்தியோட அண்ணன் பொண்ணு ன்னு….

        ரைட்…. எனக்கு அதைப்பற்றி எல்லாம் ஒன்னுமில்ல…..  இது நாம சேர்ந்து போக போற வாழ்க்கை உனக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா என்று தெரியாமல் நம்ம வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணனுறதைப் பற்றி நான் யோசிக்க தயாரா இல்லை…

அவன் பேச பேச இவள் அமைதியாகவே இருந்தாள்….

இவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை அவன் பேசுவது நன்கு யோசித்து நிதானமாக முடிவெடுத்து பேசுவது போல இருந்ததால் அமைதியாக கேட்டுக் கொண்டாள்…..

   எனக்கு பைவ் டேஸ் தான் லீவு….  நாளைக்கு எனக்கு வேற வேலை இருக்கு….  எங்க அம்மா வழியில்ல எனக்கு வந்த ப்ராப்பர்டி   நிறைய தோட்டம் இருக்கு….  பண்ண வீடு இருக்கு…. அங்க போறோம் இங்க வந்தா நான் பொதுவா ஒரு நாளைக்கு மேல தங்கமாட்டேன்…. எனக்கு இங்க இருக்குறது பிடிக்காது…..  சோ என் கூட வர்றதா இருந்தா நாளைக்கு என் கூட கிளம்பி வா.,  இல்லன்னா இங்கயே இரு.,  நான் பைவ் டேஸ் கழிச்சு ஊருக்கு போகும்போது உன்னை வந்து கூட்டிட்டு போறேன்… என்ன முடிவு பண்ணி இருக்கே ன்னு நீ தான் சொல்லணும்….

ம்ம்.. சரி…

என்ன சரி… வர்றியா… இருக்க போறியா….

      வரேன்…  ஆனா என்ன பத்தி என்ன தெரியும் என் கூட வர்றேன்னு கேட்டுடாதீங்க…. எனக்கு இங்கு உள்ளவங்களை பற்றியும் எதுவும் தெரியாது… அதனாலதான் இங்கே இருக்கிறதுக்கு பதிலா உங்க கூடவே வந்து விடலாம் என்று முடிவு பண்ணினேன்….

  இங்கு உள்ள மத்தவங்கள பத்தி தெரியாது ஏன் உங்க அத்தையை பற்றியும் தெரியாதா…

தெரியாது என்னும் விதமாக  குறுக்காகத் தலையாட்டினாள்….

   வாட்…. தெரியாதா….

  அம்மாக்கும் அத்தைக்கும் ஒத்து வராது அதனால அத்தை அங்க ரொம்ப வர மாட்டாங்க…. அம்மாவும்  எதுவும் சொன்னது கிடையாது…..  ஏனோ தெரியல அத்தைக்கு அம்மாவுக்கு சுத்தமா ஆகாது… அம்மாவை பார்த்தாலே டென்ஷன் பண்ண  ஆரம்பிச்சுடுவாங்க….  அதனால அவங்கள பத்தி நான் ரொம்ப தெரிஞ்சுகிட்டது இல்ல அது மட்டும் இல்லாம .,  நாங்க வேற ஊரிலேயே இருந்தால்ல எனக்கு வேற ரொம்ப தெரியாது….

   அவங்க எல்லார்ட்டையும் அப்படித்தான் போல…. நான் இங்க மட்டும் தான் அப்படின்னு நெனைச்சேன்….

பவித்ராவிற்கு புரியாமல் என்ன என்று கேட்டாள்…

  உனக்கு சில விஷயங்கள் புரிய வைக்க வேண்டியது இருக்கு அப்ப சொல்றேன் இப்ப சொல்ல முடியாது…. வேண்டாம் இந்த பேச்ச விட்டுருவோம் என்று மட்டுமே சொன்னான்…

     சமைக்கத் தெரியுமா…. பைவ் டேஸ் தோட்டத்து வீட்டுக்கு போனோம் ன்னா நம்மளே தான் சமைக்கனும்….

ஏதோ பரவாயில்லை ன்னு சொல்லுற அளவுக்கு சமைப்பேன்…

    ஓரளவுக்கு எனக்கும் சமைக்க தெரியும் சமாளிச்சுக்கலாம் ரெண்டு பேரும்….

     மறுநாள் தோட்ட வீட்டிற்கு போவதாக பெரியம்மாவிடம் சொல்லவும்…. அவர்களுக்கு சிறு வருத்தம் இருந்ததே தவிர சரி போய் வா என்று மட்டுமே சொன்னார்கள்…

     கிளம்புமுன் பவித்ராவை அழைத்து ரஞ்சனுக்கு இங்கு வர பிடிப்பதே இல்லை அவன் விபரம் தெரிந்த நாளிலிருந்து….

       முடிந்தால் அவன் மனம் மாறினால் இங்கு தங்கும்படி அழைத்து வா என்று மட்டுமே சொன்னார்கள்….. அவர்கள் சொன்னதும் அதேதான் அவன் அன்பிற்காக ஏங்குபவன் அவனை நன்றாகப் பார்த்துக்கொள் என்று மட்டுமே…. ஏனோ பவித்ராவிற்கு திருமணமான ஒரே நாளில் தன் தலையில் பெரிய பாரம் சுமத்தப்பட்டது போலுணர்ந்தாள்….. பாரம் என்று சொல்வதைவிட தான் பெரிய மனித தோரணையில் இருப்பது போல உணர்ந்தாள்…

      அவனுடனான வாழ்க்கையில் அவனோடு சேர்ந்து கைகோர்த்து நடக்க தொடங்கிய போது அவளுக்குத் தோன்றியது ஒன்று மட்டும்தான்…..  நடந்து போகும் பாதை எல்லாம் முள்ளா….  இல்லை பூப்போட்ட பாதையா என்று தெரியாது ஆனால் இந்த கோர்த்த கையை மட்டும் விடக்கூடாது என்று உறுதியுடன் சென்றாள்…..

அன்பை மட்டும் தேடும்

வானம்பாடியாய் நீ…

சாரலாய் தூவுமா

அடை மழையாய் பொழியுமா

எந்தன் அன்பு

எதுவாக இருந்தாலும் உன்னை

நனைக்காமல் போக

மாட்டேன் என்கிறது

என் மனதினுள்

உன்னுடன் இருக்கும்

உறவிற்கான பிணைப்பு….”

Advertisement