Advertisement

அத்தியாயம் 3

பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு

பட்டா எதுக்கு – அட பாசம்

மட்டும் போதும் கண்ணே

காசு பணம் என்னத்துக்கு ….”

       நட்பு என்பது கடவுள் கொடுத்த வரம்… அந்த வரம் பவித்ராவுக்கும் சரி ஷ்யாமிற்கும் சரி நன்றாகவே கிடைத்திருந்தது…..

      அன்றைய வகுப்பில் 2 மணி நேரம் யாரும் வராததால் இவர்கள் அனைவரும் வகுப்பை கட் அடித்து விட்டு வெளியே சுற்ற கிளம்பினர்… அதேநேரம் ஷ்யாமும் அவனது பயிற்சி நேரம் முடிந்து வெளியே வர இவர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்…..

     ஏ கிளாஸ் கட் அடித்துவிட்டு  எல்லாரும் எங்க போறீங்க…..

    பாதி நேரம் ஹாஸ்பிடல் பாதி நேரம் கிளாஸ் ரூம் போரடிக்குது….. அதனாலதான் எல்லாரும் பீச் கிளம்பிட்டோம்…. வந்து ஜாயின் பண்ணிக்குங்க….. இல்லை ன்னா உங்க ஹாஸ்டலுக்கு போங்க….

     வெளியே போய் நாங்க கிளாசை காட்டடித்த சொன்னீங்க நடக்குறதே வேற….. என்று மிரட்டினாள் பவித்ரா….

    சரிங்க மேடம் சொல்லல…..நான் உங்க கூடவே வரேன்….. கூட கூட்டிட்டு போவீங்க இல்லை…. என்றான் பவ்வியமான குரலில்…

     கிண்டலா  பண்றீங்க…… வாங்க பீச்சுல உங்களுக்கு ஒன்றுமே வாங்கி தர மாட்டேன்…..

       அது தெரியுது…. நீ பீச்சுக்கு சாப்பிட மட்டும்தான் போறேன்னு…..

       ஏன் நீங்க எல்லாம் சாப்பிடமாட்டீங்களா…

     நாங்க எல்லாம் பசிச்சா மட்டும் தான் சாப்பிடுவோம்…… நீ பாக்குறதெல்லாம் சாப்பிடுவ…..

      இது எல்லாம் டூ மச் தெரியுமா….. நான் ஒன்னும் உங்களை வாங்கித்தர சொல்லல….

    நீ மட்டும் ம்ம்ம் ன்னு சொல்லு…. நானே எல்லாத்தையும் வாங்கி  தரேன்…..

   ஒன்னும் தேவை இல்ல நானே வாங்கி சாப்பிட்டுக்கிறேன்….

      இவ என்னடா….. சாப்பிடுற  மாதிரி பில்டப் பண்ணுறா….ஆளப்பார்த்தா நிறைய சாப்பிடுற மாதிரி இல்லையே……

     அது ஒண்ணும் இல்ல ண்ணா…… பார்க்குற எல்லாவற்றையும் கேட்டு வாங்கிருவா….. ஆனால் சாப்பிடுறது என்னமோ கொஞ்சுண்டு தான்….. கேட்டா பார்க்க நல்லா இருந்துச்சு…. அது தான் வாங்கினேன் என்பா…..

        அதெல்லாம் மூளையோட வேலை பார்க்கும் போதே அதை சாப்பிடணும் மனசுக்குள்ள ஆசை உண்டு பண்ணும்……

    நீ இப்படி சொல்லி தப்பிக்கலாம் பார்க்காத…..  இப்படி சொன்னா உனக்கு மூளை இருக்கு ன்னு…  நாங்க நம்பிடுவோம் ஆக்கும்….

    நிர்மல் …… நீ எல்லாம் ஒரு பிரண்டா  டா கூட இருந்தே குழி பறிக்க……

     இவ வெறும் பேச்சு மட்டும் தான் அண்ணா… கடலில் இறங்கி கால நனைக்க சொல்லுங்க பாப்போம்…..

        ஏன் பப்பு கடலில் இறங்கினா என்ன… இன்னைக்கு நீ என்கூட இறங்குற…

      கடலில் இறங்கி திருப்பி வெளியே வந்து நடக்க முடியாது… கால் எல்லாம் மண்ணாகும்….

    ஓவரா சுத்தம் பார்க்காதே…

     நான் ஒன்னும் சுத்தம் பார்க்கல….. சுத்தம் பார்த்து இருந்த பீச் பக்கம் வரவே கூடாது…..

     அவள் மட்டும் கடற்கரையிலேயே அமரவும் மற்றவர்கள் அனைவரும்  கடலிலே கால் நனைத்து விளையாடத் தொடங்கினர்…..  சிறிது நேரம் அவர்களோடு நின்று விட்டு ஷ்யாம் மட்டும் வந்து பவித்ராவின் அருகில் அமர்ந்தான்…..

பப்பு…..  கொஞ்சம் உன்னோடு பேசலாமா….

       பேசுறதுக்கு எல்லாமா பெர்மிஷன் கேட்பாங்க…. பேசுங்க

        உங்க  வீட்ட பத்தி சொல்லேன்…

         என்ன திடீர்னு….

          ஏன் நான் தெரிஞ்சுக்கோ கூடாதா…

         பெரிய ராணுவ ரகசியம் பாத்தீங்களா சொல்றதுக்கு… அம்மா அப்பா நான் என் தம்பி அவ்வளவு தான் எங்க வீடு…

       ரொம்ப சிம்பிளா சொல்லி முடிச்சிட்ட…

  பெருசா என்ன சொல்ல….நாங்க ரொம்ப ஹாப்பியா ன்ன பேமிலி….  அம்மா அப்பா  பேச்சை நான் மீற மாட்டேன்…..

எங்க வீட்ல நான் ஒரே பையன்…

     ம்ஹூம்….. ம்ம்….

     அப்பா டாக்டர்… அம்மா ஹவுஸ் வைஃப்….  என்னோட பேச்ச எங்க வீட்டில மீற மாட்டாங்க…. நான் வச்சதுதான் சட்டம்….

     அப்ப நீங்க தான் ராஜா…. நீங்கதான் மந்திரி…. ன்னு சொல்லுங்க…

     கிட்டத்தட்ட அப்படித்தான்……

      படிப்பு முடிந்தவுடனே என்ன ஐடியா வச்சிருக்கே…

      ஜஸ்ட் ஹையர் ஸ்டடிஸ் பத்தி தான்… யோசிக்கணும்…

      இங்கேயா வெளியே வா…..

       நாங்க அஞ்சு பேரும் பிளான் பண்ணி இருக்குறது இலண்டன் ல……

       ஏன் லண்டன்ல…..

       எங்க சீனியர் அங்க படிக்கிறாங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க….

    அஞ்சு பேரும் லண்டன் போற பிளான்ல இருக்கீங்க…

    ஆமா…..

         வேற…..

         என்ன வேற…….

        ஹையர் ஸ்டடிஸ் வீட்ல அலவ் பண்ணுவாங்களா…… இல்ல நீங்க போராடணுமா….. ஃபீஸ் ஜாஸ்தி ஆகுமே அதுக்காக கேட்டேன்…..

         நாங்க அஞ்சு பேரும் பிளான் பண்ணி இருக்கிறது பார்ட் டைம்ல வொர்க் பண்ணிட்டு படிக்கிற பிளான்….. எங்களோட செலவை நாங்க பார்த்துக்கிறோம் அப்பா அம்மாவை ரொம்ப  கஷ்டப்படுத்தக்கூடாது ன்னு நினைத்து இருக்கோம்… நாங்க அஞ்சு பேருமே சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி.,  வீட்ல உள்ளவங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்……

        இவங்க நாலு பேரும் ஜோடியா சுத்துறாங்களே வீட்டுக்கு தெரியுமா……

    தெரியும்….. ரமேஷ் வீட்டிலையும் தெரியும்….. நிர்மல் வீட்டிலையும் தெரியும் ரெண்டு வீட்டிலும் சம்மதிச்சிட்டாங்க அவங்களோட ஸ்டடிஸ் முடிச்சிட்டா அவங்களோட மேரேஜ் பத்தி யோசிப்பாங்க….

    உனக்கு அவங்கள பாத்த உடனே ஜோடியா சுத்தணும் ன்னு தோணலையா…..

     மெடிசன் கிடைச்சப்ப…. சொந்தக்காரங்க சொன்னது….  பொம்பள பிள்ளைய  அவ்வளவு தூரம் அனுப்ப வேண்டாம் …… சாதாரணமா டிகிரி படிச்சா போதும் ன்னு சொன்னாங்க..

    அப்பா சொன்னதுஇது தான் உன்னை நம்பி படிக்க அனுப்புறேன் வெளியே நாளைக்கு வேற ஏதும் பிரச்சினை ன்னு வந்து நின்னு குடும்பத்தில் பிரச்சினை ஆயிட கூடாதுடா பாத்துக்கோ அப்படின்னு சொன்னாங்க ……..

     அப்ப நான் எங்க வீட்டுல சொன்னது இதுதான்…  நான் படிச்சு முடிச்சிட்டு வரும் போது நீங்க யாரை சொல்லுறீங்களோ…  அவங்கள கல்யாணம் பண்ணிப்பேன்…. இப்படி மாப்பிள்ளை வேண்டும்…… அப்படி மாப்பிள்ளை வேணும் நான் சொல்ல மாட்டேன் நீங்க யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிப்பேன் அப்படின்னு தான் சொல்லி இருக்கேன்……….

வாக்கு குடுத்துட்டு வந்து இருக்க…..

ஆமா…….

     நான் இப்போ பிரப்போஸ் பண்ணா என்ன சொல்லுவ…..

    ஒரு நிமிடம் அவனை நேருக்கு நேராக பார்த்தவள்..

    கண்டிப்பா முடியாது என்றுதான் சொல்லுவேன்…

  ஏன் பப்புமா இப்படி……  நான் உனக்கு பொருத்தமில்லை ன்னு நினைக்கிறீயா…

   நான்தான் உங்களுக்கு பொருத்தமில்லாதவ…..  அதுமட்டும் இல்லாம எனக்கு இந்த லவ்வு அதெல்லாம் ஒத்து வராது வேண்டாம்… நீங்க எனக்கு எப்பவுமே ஒரு நல்ல பிரண்டா இருங்க அது போதும்….

இல்ல உங்களால அப்படி இருக்க முடியாது அப்படின்னு நினைச்சிங்க ன்னா என்கூட பேசாதீங்க…

நான் உங்க வீட்ல வந்து முறைப்படி பேசுறேன்டா…..

ப்ளீஸ் அப்படி நினைச்சீங்கன்னா இனிமேல் என்கூட பேசாதீங்க….

ஏன் ஏத்துகிட்டா நாளைக்கு ஒருவேளை கல்யாணம் நடக்கலைன்னா தப்பு பண்ணிட்டேன்னு பீல் பண்ணனும் அப்படின்னு நினைக்கிறீயா…

  பிரண்ட்ஷிப் ல கிடைக்காத ஒரு சந்தோஷம் லவ்வுல கிடைக்கும்னு நம்புறீங்களா….

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நடக்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண் பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து

பூமியை கட்டி நீ நிருத்து

நட்பு நட்புதான் காதல் காதல்தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா”

பிரண்ட்ஷிப் எவ்வளவு முக்கியமானது தெரியுமா…

ஒரு ஹஸ்பண்ட்… நல்ல பிரண்டா இருந்தா லைஃப் நல்லா இருக்கும் தெரியுமா……

    ஹஸ்பண்ட் தான் பிரண்டா மாறனும்…. ப்ர்ண்ட்  ஹஸ்பண்டா மாற முடியாது…. மாறவும் கூடாது…. அது நல்லா இருக்காது….

     நட்புக்கும் காதலுக்கும் இடையில் ஒரு நூல் அளவு தான் வித்தியாசம் தெரியுமா….

     சொல்லுவாங்க ஆனா எனக்கு தோன்னுறது என்ன தெரியுமா…  காதல்  என்னைக்கு நாளும் முறிஞ்சு போகலாம்…. ஆனா நட்பு லைஃப் லாங் இருக்கும்… அதை யோசிக்கணும்….

       உன் வாழ்க்கைல அப்ப  காதல் என்கிறதே கிடையாதுன்னு சொல்றியா….

       கண்டிப்பா இல்ல… அப்படி சொல்லல… எங்க வீட்டில எனக்குனு ஒருத்தனை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க… அவன் மேல வரணும் அப்பதான் அது காதல்…

        அது வந்து நார்மல் ஒரு வாழ்க்கை… எல்லாருக்கும் வீட்டில் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க…. நமக்கு இவன்தான் அப்படிங்கிற த  மனசுல செட் பண்ணிட்டு அதை விரும்புகிறாங்க… உனக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு… எனக்கு  இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் அந்த மாதிரி எதுவுமே தோணலையா….

        ஊர்ல எத்தனை பேருக்கு எதிர்பார்க்கிற மாதிரி லைஃப் கிடைச்சிருக்குன்னு சொல்லுங்க…. கண்டிப்பா இல்ல யாருக்கும் அவங்க எதிர்பார்க்கிற மாதிரி லைஃப்  கிடைக்கவே கிடைக்காது….எதிர்பார்த்து  ஏமாந்து போறத விட…..  கிடைக்கிற லைஃப் அ சந்தோஷமா ஏத்துக்கிறது புத்திசாலித்தனம்…..

       அப்ப லவ் மேரேஜ் பண்ணிக்கிறவன் எல்லாம் என்ன முட்டாளா…..

      நீங்க என்ன பிரச்சனை ல கோர்த்துவிட டிரைப் பண்றீங்க ன்னு நினைக்கிறேன்….

     ஏய்…. அப்படி இல்ல பப்பு….

      பின்ன….

    அப்படி சொல்லல லவ் மேரேஜ் பண்றவங்ககிட்ட அன்டர்ஸ்டன்டிங்  இருக்கும்…. அரேஞ்ச் மேரேஜ் பண்ணுறவங்களுக்கு   அந்த அன்டர்ஸ்டன்டிங் வரதுக்கு லேட்டாகும்…. பிரச்சினை எல்லாம் வராது ன்னு  சொல்லலை….. ஆனா அண்டர்ஸ்டேண்டிங் இருக்கிறது ன்னால ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போயிடுவாங்க…. இல்லையா அதை தான் சொன்னேன்…..

      அரேஞ்ச் மேரேஜ் அ விட லவ் மேரேஜ் இல்ல தான் பிராப்ளம் அதிகம் வரும்…. எப்படி சொல்றேன் ன்னா லவ் பண்ணும் போது பிளஸ் மட்டும்தான் தெரியும்…. கல்யாணத்துக்கு அப்புறம்தான் மைனஸ் தெரியும்…..ஆனா அதே இது அரேஞ்சிடு மேரேஜ் பிளஸ் மைனஸ் இரண்டையும் பேரன்ஸ் பார்த்துருவாங்க…. எதுனாலும் அரேன்ஜ் மேரேஜ்தான் பெஸ்ட்….

      சேப் ஸோன் ல இருக்கணும்னு ஆசை படுற….

       அதுதானே நல்லது……

       நான் உன்கிட்ட சொன்னதாவது புரிஞ்சிச்சா…..

       நான் ஒன்னும் குழந்தை இல்லை…. எனக்கும் 21 வயசு தாண்டிருச்சு….

      லவ்வ விட பிரண்ட்ஷிப் தான் பெஸ்ட் என்று எப்படி சொல்ற……

      லவ் பண்றவங்களுக்கு பிரச்சனை  வந்தா ப்ர்ண்ட்ஸ் தான் தீர்த்து வைக்கிறாங்க…. பிரண்ட்ஸ் கூட சண்டை போட்டுட்டு யாரும் லவ்வர் கிட்ட போய் சொல்லிட்டு இருக்க மாட்டாங்க….. பிரண்ட்ஸ் நாளைக்கு வேலை.,  குடும்பம் அப்படின்னு பிரிஞ்சிருந்தா கூட…. என்னைக்காவது பார்க்கும்போது சந்தோஷமாக பேசிக்க முடியும்….ஆனால் லவ் பண்றவங்க பிரிஞ்சுட்டாங்க ன்னா…  பேசினால் பிரச்சினை வந்துருமே பயந்து ஓட தான் செய்வாங்க…. பிரண்ட்ஸ் லாஸ்ட் வரைக்கும் ப்ர்ண்ட்ஸா  இருக்க முடியும்…

      இப்ப நீங்களே சொல்லுங்க பிரண்ட்ஸ் ஆ  இருந்தா ஒரு கஷ்டம்னா சொல்லிட்டு தோளில் சாஞ்சிக்க முடியும்…. என் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க முடியும்…. சாய்ந்து கொள்ள தோள் கொடுக்கிற நல்ல பிரண்டா எப்பவும் உனக்கு நான் இருக்கிற ன்னு…. சொல்லுற  ஒரு நல்ல பிரண்டா இருந்தா பிரண்ட்ஷிப் நீடிக்கும்….. மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது…..

பிரிந்து போன நட்பினை

கேட்டால்பசுமையாக கதைகளை

சொல்லும்பிரியமான காதலும்

கூடபிரிந்தப்பின் ரணமாய் கொல்லும்”

அது மட்டும் இல்ல…. எனக்கு தெரிஞ்சி எந்த கஷ்டம் வந்தாலும் உனக்கு நான் இருக்கிறேன் அப்படின்னு சொல்லுற ஒரு பிரண்ட் கூட இருந்தாச்சுன்னா….  என் பிரண்டு எனக்காக இருக்கா அப்படிங்கிற ஒரு நம்பிக்கை கூட இருக்கிறவங்களை எங்கேயோ கொண்டு போய் விடும்….. வாழ்க்கைல யார்கிட்டயும் சொல்ல முடியாத விஷயத்தை….. ஏன் வாழ்க்கைத் துணையோடு  ஷேர் பண்ண முடியாத விஷயத்தை கூட ப்ர்ண்ட்ஸ் ட்ட ஷேர் பண்ண முடியும்….. அதுதான் வாழ்க்கை….  நட்பு அதை எங்கேயுமே யாராலும் விளக்க முடியாது…. நல்ல ஃப்ரெண்ட்ஷிப் நல்ல சப்போர்ட்…. அஸ்திவாரம்…. எல்லாமே சொல்லலாம்….

     கடைசி வரை என்னை உன்னுடைய அப்படிப்பட்ட நல்ல ப்ர்ண்டாக ஏற்றுக் கொள்வாயா என்று சொல்லும்போது ஷ்யாமின் குரல் குறைந்து இருந்தது….

    கண்டிப்பா நீங்க எப்பவும் நல்ல ப்ர்ண்ட்….

    ஆனா அவங்க நாலு பேருக்கு அப்புறம்தான் இல்ல….

    உங்களை இப்ப தானே தெரியும்…. அவங்க எனக்கு நாலு வருஷமா ஃப்ரெண்ட்ஸ் இல்லை….

    ம்ம்ம்…. அதுவும் சரிதான்….

    கடற்கரையில் இருந்து திரும்பி வரும்போது…  நிர்மல் ம் ரமேஷ் ம் ஷ்யாமுடன் பேசிக் கொண்டு வந்தனர்… இரண்டு நாள் கழித்து அனைவரும் சேர்ந்து அவளிடம் கேட்டுப் பார்த்தனர்…. ஷ்யாம் இவளிடம் கேட்ட விஷயத்தைப் பற்றி…. ஷ்யாமிடம் சொன்னதுதான் இவர்களிடமும் சொன்னாள்…. எப்போதும் நல்ல நண்பன் மட்டுமே என்று……

      அவர்கள் படிப்பு முடியும் சமயம் ஷ்யாமின் அம்மா சென்னை கல்லூரிக்கு வந்திருந்தார்…. அப்போது அனைவரையும் அறிமுகப்படுத்தி வைக்கும் போது முதலில் சாதாரணமாக பேசினாலும்…ஷ்யாம் இல்லாத நேரம் அவனுடைய அம்மா பவித்ராவிடம்…. நீ ஏன் என் பையன வேண்டாம் ன்னு சொன்ன…. என் பையன் நல்லா இல்ல ன்னு நினைக்கிறாயா…. உனக்கு பொருத்தமா இருக்க மாட்டான் ன்னு  நினைக்கிறியா…… இல்ல நாங்க உன்ன நல்லா பாத்துக்க மாட்டோம் ன்னு நினைக்கிறாயா…. நீ எப்பவும் என் பிரண்டு தான் சொல்லிட்டியாம்…. என் பையன் உன்னை இந்த அளவுக்கு விரும்பி னான் தெரியுமா என்று வருத்தத்துடன் கேட்டார்….

        முதலில் பவித்ராவிற்கு அதைக் கேட்கும் போது அதிர்ச்சியாக இருந்தாலும் அதன் பின்னர் அவன் அம்மாவிடம் எடுத்து பேசினாள்…லவ் பண்ணனும் ன்னு தோணலை ஆன்டி…. அவுங்க என்னோட பெஸ்ட் பிரண்ட் …. அவுங்க குணத்திற்கு நல்ல பொண்ணு கிடைப்பா,… ப்ளீஸ் இந்த பேச்ச இதோட விட்டுருங்க…..

          படிப்பு முடியும் இந்த காலத்திற்குள் மற்ற நால்வரையும் விட ஷ்யாம் பவித்ராவிற்கு நெருங்கிய நண்பனாகிவிட்டான்…. அவனிடம் நட்பை பகிர்ந்து கொண்டு நல்ல நட்புடன் இருந்து வந்தாள்…. ஷ்யாமும் அதே நட்பை தொடர்ந்து வந்தான்….  ஆனால் அவன் மனதில் இருந்த காதல் அப்படியே தான் இருந்தது….  அவள் மனது மாறுமா என்று எதிர்பார்ப்போடு காத்திருந்தான்….

     ஷ்யாமின் அம்மா அவனுடைய விருப்பத்தை சொல்லிவிட…. பவித்ராவிற்கு தான் கஷ்டமாக இருந்தது…. ஷியாம் எப்படி மனதில் காதலை வைத்துக் கொண்டு நட்புடன் பழகினான்…. என்ற கோபம்… அவனை நம்பிய  ஏமாற்றம்….. அவனை மாற்ற முடியாதா என்ற வருத்தத்துடன்… அவனிடமே  கோபப்பட்டாள்….

    “தோள்சாய தோழமை தான்

     கேட்டேன்  நட்பே…..

     உனக்கு நட்பை விட காதல்

      தான் வரும் என்றால்….

     நான் தள்ளி நிற்கிறேன்

     என்று நீ தோள்சாய

     தோழமை தருவாயோ

அன்றே நான் வருகிறேன்….

     என்றும் நட்புடன் –  உன்

     நட்பை மட்டும் வேண்டி…..”

        அதன் பிறகு அவனிடம் பேசுவதை குறைத்து கொண்டாள்…. லண்டன் சென்ற பிறகு அவனிடம் எப்போதாவது மட்டுமே பேசினாள்…..  கேட்டதற்கு உங்கள் திருமணத்திற்கு பிறகு என் பிரண்ட்ஷிப் உங்களுடன் கண்டினியூ ஆகும் என்று சொல்லிவிட்டாள்….

      அவன் திருமணத்தை தள்ளிப்போட்டு கொண்டிருக்கவே…. அவளுடைய லண்டன் மேற் படிப்பு முடிவதற்குள் அவள் தந்தை சொல்லவும் அவசரமாக முடிவு எடுத்துவிட்டாள்…..

Advertisement