Advertisement

அத்தியாயம் 2

 

நாட்குறிப்பில் நூறு தடவை

உந்தன் பெயரை எழுதும் என் பேனா”

நிர்மல், ரீனா இருவரும் அருகில் உள்ள காபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது….  ரமேஷும் சுமியும் வந்து சேர்ந்து கொண்டனர்…..

          ரீனா நீ ஏதாவது பேசி பார்த்தியா….

          அட இப்படி அடமென்ட் அ   மாறுவா ன்னு…. நினைக்கவே இல்லை….  வாயிலிருந்து ஒரு வார்த்தை வரமாட்டேங்குது….. நேத்து நான் வரதுக்கு முன்னாடி நீ வந்துட்ட இல்ல….  நீ பேசி பார்த்தியா….

        நார்மலா தான் பேசினேன் அவரைப் பற்றி குறை சொன்னா…. நம்ம பொண்ணு உனக்கு  அவங்கள பத்தி என்ன தெரியும் ன்னு கேட்கிறா….தெரியாத விஷயத்தை நம்ம ரொம்ப பேச முடியாது…. அவ விட்டுக் கொடுக்க மாட்டீங்கிறா… தெரியுமா…

      நீங்கதான் கூட இருக்க கேர்ள்ஸ் உங்களுக்கு தான் தெரியும்….. அது லவ்வா இல்ல சென்டிமென்ட்டா…..

       கண்டிப்பா சென்டிமென்ட்டா இருக்க வாய்ப்பு இல்லை… அவளே நேத்து கேட்குறா….  என்கிட்ட நான் லவ் பண்றேனா டி அப்படின்னு….

      எங்க கிட்ட சொல்றீங்கள…. நீங்க பேசி பார்க்க வேண்டியது தானே…. நீங்க தான் பெஸ்ட் பிரண்ட்ஸ் ஆச்சே…..

     நாம எல்லாம் கிளாஸ் முடிஞ்சிடுச்சி… எக்ஸ்ட்ரா நம்ம பண்ற ஒர்க் டூ ஹவர்ஸ் முடிஞ்சிடுச்சு….. வெளிய வந்தா இவ என்ன செய்ற இன்னும் வரல….

       அவ இன்னும் எக்ஸ்ட்ரா ஒன் ஹார் ஒர்க் பண்ற….. கேட்டா அவளுக்கு செலவு இனிமேல்தான் நிறைய இருக்காம்…. நம்ம  யார்ட்டையும் அவ வாங்க மாட்டாளாம்…. அவளே பார்த்துப்பாளாம்…..

      இன்னைக்கு வரட்டும் அவகிட்ட நான் பேசுறேன்…..

      நிர்மல் நீ சொல்றதெல்லாம் சரியா சொல்ற…. ஆனா பேச மட்டும் மாட்டீங்க….

     வேற ஒன்னும் இல்ல அவளை ரொம்ப ஹட் பண்ணிட கூடாது…. என்று ஒரு பயம் அவ்வளவுதான்…..

     எவ்வளவு  ஹாப்பியா எப்படி துரு துருன்னு இருந்த பொண்ணு……

     இத  தான் நேத்து நான் கேட்டேன்….

     என்ன பதில் சொன்னா ரீனா….

     நான் இப்பவும் அப்படி தாண்டி இருக்கேன்…..  அதே சிரிப்போடு தான் இருக்கேன் என்ன கொஞ்சம் டயர்டாக இருக்கு என்ன செய்ய…. துருதுருன்னு இருக்க முடியல…. அவ்வளவுதான் உங்களுக்கு தான் டிப்பரண்ட் ஆ  தெரியுறேனா….

     அவளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற யோசனையுடன் நால்வரும் அமர்ந்து இருக்க….. அவர்களின் கவலையை பற்றி கொஞ்சம் கூட அறியாதவள்…… அவளுக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தபடி வந்து  அவர்களுடன் அமர்ந்தாள்……

         அவளின் முன்னே அனைவரும் சாதாரணமாக காட்டிக்கொண்டாலும்…. அவளைப் பற்றி யோசனையோடு இருந்தனர்…..

          என்னமோ பாட்டிக்கிட்டே வந்த மாதிரி இருந்துச்சு…..

         இப்ப எல்லாம் நிறைய பாட்டு டவுன்லோட் பண்ணி கேட்கிறேனா…. அதனால லாஸ்ட் கேட்ட பாட்ட ஹம் பண்ணிட்டு வந்தேன்….

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல

பூக்களின் வண்ணம் கொண்டு

பிறந்த மகளே என் மகளே

நான் வாழ்ந்தது கொஞ்சம்

அந்த வாசத்தில் வந்துதித்து

உயிரில் கலந்தாய் என் உயிரே”

அவள் பாடியதைக் கேட்டு மனதிற்குள்…. அனைவருக்கும் வலித்தாலும்…. வெளியே காட்டிக் கொள்ளாமல் சுமி கிண்டலில் இறங்கினாள்….

      ஹலோ…. உன் பேபிக்கு நாலு மாசம்தான் ஆகுது…. வயிற்றுக்குள் வந்தே…..அப்புறம் பேபி வேற பையனா பொண்ணா னே தெரியாது நீ பாட்டு பாடிக்கிட்டு இருக்க……

      பையனா இருந்தா மாத்தி பாட்டுறேன்….

     டேப்லெட் எல்லாம் ஒழுங்கா எடுக்குறையா… என்றான் நிர்மல்…

         அதுக்குத்தான் இவ ரெண்டு பேர் இருக்காலே…. கரெக்ட்டா சாப்பிட வெச்சிடுறா….

      இங்க வந்த மூணு மாசத்துல…. நீ எங்ககிட்ட இந்த மாத்திரை மருந்து விஷயத்தைத் தவிர… வேறு எதையுமே சொல்ல மாட்டேங்கிற…. பவி…. என்று வருத்தப்பட்டான் ரமேஷ்…..

      கண்டிப்பா சொல்லுவேன் இப்ப இல்ல…. சொல்ல வேண்டிய நேரத்துல…..

       இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஷ்யாம் அண்ணா போன் பண்ணி இருந்தார் என்று பேச்சை தொடங்கினான் ரமேஷ்…..

          அவங்க என்ன சொல்லியிருப் பாங்கன்னு உனக்கு தெரியும்…. பவி…. உன்னோட பதிலை எதிர் பார்த்திட்டு இருக்காங்க என்றான் நிர்மல்….

          இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு…. இது என்னோட லைஃப் நான் பாத்துக்குறேன்….  நீங்க ப்ர்ண்ட்ஸ் ஆ எனக்கு சப்போர்ட் குடுங்க போதும் ….. கடைசி வரைக்கும் நீங்க இப்படியே என் கூட இருந்தீங்கன்னா அது போதும்…

         ரமேஷ் கோபத்துடன் அழுத்தமாக பவித்ரா என்று சத்தமாக அழைத்தான்…..

          என்ன ரமேஷ் சொல்லு…… என்றாள் நிதானமாக….

          எப்படி சமாளிப்ப….  யோசிச்சியா…. இரண்டு பேபி….. பேபி பொறந்து த்ரீ மன்த்ஸ் உனக்கு லீவு கிடைக்கும்….. அதுக்கப்புறம் த்ரீ மன்த்ஸ் ஸ்டடிஸ் இருக்கு….  ஆறு மாதம் வரைக்கும்  எங்களோடு தான் இருப்ப எல்லாரும் பார்த்துப்போம்…. அதுக்கப்புறம் என்ன பண்ண போற….  இங்கேயும் இருக்க மாட்டேன்னு சொல்ற…. இந்தியா போனால் யார் பேபிஸ் பார்த்துப்பா நீ எப்படி வேலைக்கு போவ யோசி…..

         யோசிச்சு சொல்றேன் ரமேஷ்… கண்டிப்பா நல்ல பதிலா தான் சொல்லுவேன்…. ஆனா நீங்க எதிர்பார்க்கிற அந்த பதில் வரவே வராது…. குழந்தை எப்படி வளர்கிறது…. இங்க இருப்பேனா இல்ல….  நான் இந்தியா போறனா…. அத மட்டும் தான்…..

      ஏதோ இந்த அளவுக்கு யோசிக்கேன் ன்னு மட்டுமாவது சொன்னாலே என்று நினைத்துக் கொண்டனர்… அவர்களுடைய நட்பு குழுவை பொருத்தவரை அவள் இங்கிருந்தால் குழந்தைகளை எல்லோரும் சேர்ந்து வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்…..

          அனைவரும் அங்கிருந்து கிளம்பிய பின்னர்…. அவர்களை கொண்டு வந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டில் விட்டுவிட்டு…  ரமேஷ் ம் நிர்மல் ம் அங்கிருந்து கிளம்பினர்.

      பவித்ரா நன்றாக படிக்கக்கூடிய மாணவியாக இருந்ததால் முதல் தேர்விலேயே அவளுக்கு லண்டனில் மேற்படிப்பு கிடைத்தது….. அது மூன்று வருடம் என்பதால் இவள் தான் முதலில் இங்கு வந்தது….. பிறகு தான் மற்ற நால்வரும் வந்து சேர்ந்தனர் அவர்களுக்கு இரண்டு வருடங்கள்தான்…. இடையில் நான்கு மாதம் விடுப்பு எடுத்து ஊருக்குச் செல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் படிப்பும் முடிவுக்கு வந்திருக்கும்……

        அவர்களுக்கு மாலை நேரம்…. பெங்களூரில் அது இரவு நேரம் … ஷ்யாமும்… ரமேஷ் நிர்மல் ம் போனில்  பேசிக்கொண்டிருந்தனர்…..

         மாலை காபி ஷாப்பில் நடந்த அனைத்து விஷயங்களும் பகிர்ந்து கொண்டனர்……

        நான் கிளம்பி வரவா…. என்று ஷ்யாம் கேட்டான்…..

      இல்லன்னா வந்தாலும் பிரயோஜனம் இருக்காது…. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம்.. நீங்க சொல்ற மாதிரி இது சென்டிமென்ட் கிடையாது… அவ மனசுல அன்பு இருக்கு… கண்டிப்பா அத அவ வாயால வெளியே சொல்ற வரைக்கும்…..  நாம கேட்கவும் முடியாது…. டீட்டெயில்ஸ் எல்லாம் அவள் சொன்னதுக்கு அப்புறம் சொல்றோம் அதுக்கப்புறம் கிளம்பி வாங்க…..

         எனக்கு தாண்டா கில்டியா இருக்கு…. ஒருவகையில அவளோட இந்த கஷ்டத்துக்கு காரணம் நானும் தான்….

        நீங்க என்ன பண்ணுவீங்க…. அவங்க அம்மா பேச தெரியாமல் பேசி பிரச்சினையை இழுத்திட்டாங்க… விடுங்க…

      சரி….. அவங்க அம்மா பேச தெரியாமல் பேசிட்டாங்க…. இவள புரிஞ்சிருந்தா….  இந்த விஷயத்தை இவ்வளவு பெருசா ஆக்க கூடாதுல்ல….

      அண்ணா…. இதுவும் நம்ம அவங்க வீட்ல கேட்டதால்ல அவங்க சொன்ன சில டீட்டைல்ஸ் மட்டும் தான்…. அவங்க அப்பாவும் ஃபுல் டீடைல்ஸ் சொல்ல மாட்டேங்கிறாங்க…. சொன்னாதான் என்ன நடந்துச்சுனு நமக்கு தெரியும் இவளும் சொல்ல மாட்டேங்குறா…. அப்புறம் எப்படி தெரிஞ்சிக்கிறது…. இது தவிர பிராமிஸ் வாங்கிட்டா எதைப்பற்றியும் பேச கூடாதுன்னு…..

       அவ கிட்ட நான் பேசட்டுமா…. நான் போன் பண்ணா எடுப்பாளா….

       வேண்டாம்…. ண்ணா…. இப்பதிக்கு பேசாதீங்க….இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும்….

       மனசு கேட்கல டா…. ஒரே ஒரு தடவை வந்து பார்த்துட்டு வந்திடுறேன்….

       சரி ண்ணா…. பாத்துக்கோங்க…. அவ கோபப்பட்டாலும் நீங்கதான் வாங்கிக்கணும்…. எங்களுக்கு தெரியாது…

     நான் பார்த்துக்கிறேன் டா…..

      ஒரு பெருமூச்சுடன் போனை வைத்துவிட்டு அவனுடைய ரோலிங் சேரில் சாய்ந்து சுற்றி வந்தான்….

       சென்னையில் எம் எஸ் கார்டியாலஜி வந்து சேரும் போது…. எம்பிபிஎஸ் நான்காமாண்டு மாணவர்கள் தான்  இந்த ஐந்து பேரும்….. ரமா யாருடனும் பேச மாட்டாள் அமைதியான பெண் பவித்ராவிடம் மட்டும் பேசுவாள்…. ஹாஸ்டலில் ரூம் மேட்…

       ரமா பவித்ரா கிட்ட மட்டும் மனதில் உள்ளதை பகிர்வாள்….. அப்படி ஒரு முறை பகிர்ந்தது தான் அவளுக்கு ஷ்யாமை மிகவும் பிடிக்கும் என்று……

       பி.ஜி  படித்தாலும் சுற்றுவது என்னவோ இவர்களோடு தான் அதற்குக் காரணம் பவித்ரா தான்….. ஷ்யாம் அவளிடம் பிரப்போஸ் செய்தபோது அவள் முடியாது என்று சொல்லிவிட்டாள்…..

     சாரி தப்பா எடுத்துக்காதீங்க….. எனக்கு லவ் மேல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல…  நான் எங்க வீட்ல பார்க்கிறவங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்…..  ஃப்ரண்டா இருக்குதா இருந்தா பேசுங்க…. இல்லாடி பேசக்கூட செய்யாதீங்க ப்ளீஸ் என்பதோடு நிறுத்திக் கொண்டாள்……அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் தான்…… வாழ்க்கையை புரட்டிப் போட்டது…..

             ஹைதராபாத்  அருகில் உள்ள மாவட்டத்தின் கலெக்டர் பங்களாவில் அவன் வேலைகளில் மூழ்கி இருந்தவனை அவனது பெர்சனல் நம்பரில் அழைப்பு வந்து கலைத்தது…..

         சார் டிடக்டீவ் ஏஜென்சியில் இருந்து பேசுறோம்…..

         ம்ம்ம்…… சொல்லுங்க என்ன டீடைல்ஸ் கிடைச்சுச்சு……

         சார்…..மதுரையில் தான் மூணு நாள் இருந்திருக்காங்க….. உங்க வீட்ல…. அதுக்கப்புறம் உங்க வீட்டு காரிலேயே மதுரை ஏர்போர்ட் போயிருக்காங்க…….

      ஏர்போர்ட் அ….. அவங்க பேரன்ஸ் ஒட போகலையா…..

      இல்ல சார்….. அவங்க டெல்லி ஃப்ளைட் ல போயிருக்காங்க…… டைரக்டா டெல்லி…

      டெல்லி தானா….  நல்ல விசாரிச்சீங்களா…

       ஆமா சார் டெல்லி போக தான்…. டிக்கெட் எடுத்து இருக்காங்க…..

       வேற டீடைல்ஸ் எதுவும் கிடைத்ததா….

        இல்ல சார் டெல்லியில விசாரிக்கணும்…  நீங்க சரின்னு சொன்னா.. மேற்கொண்டு விசாரிப்போம்…..

         வேண்டாம் நான் சொல்றேன்…… என்றபடி போனை வைத்தவன் தலையை பிடித்துக்கொண்டு…. யோசனையில் அமர்ந்துவிட்டான்…..

        தப்பு பண்ணிட்டேன்….. சித்தியோட குணம் தெரிந்தும்…. நானே பிரச்சினையை வளர விட்டுட்டேன்…. பெரியம்மா எத்தனை தடவை சொன்னாங்க…..  கொஞ்சம் பொறுமையா பேசு ன்னு…..

      பிறந்த உடனே தாயை பறிகொடுத்தவன் அப்பாவுடன் பிறந்த அண்ணன் வீட்டில் பெரியம்மாதான் வளர்த்தார்….. அப்பா குழந்தையாக இருந்த தன்னை சாக்கிட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்….. சித்தியாக வந்தவள் அப்பாவை கைக்குள் வைக்கவே முயற்சி செய்தாள்….  குழந்தை என்ற பாசம் கூட இல்லை…. வேண்டாத பொருள் போல நடத்தினாள்…. மற்றவர்கள் முன்னால் பாசமாக இருப்பது போல் நடித்தாள்…..

        அம்மாவின் பிறந்த வீட்டிலிருந்து இவன் பெயருக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்கள் ஏராளம் இருந்தது….. அதிலிருந்து வந்த பணமே இவனது படிப்புச் செலவிற்கும்., ஹாஸ்டல் செலவிற்கும்., உதவியது விடுமுறைக்கு மட்டுமே பெரியம்மா வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிருந்தான்….. அப்பாவுடைய அண்ணன்… அப்பாவும் ஒரே வீட்டில் இருந்தாலும்….. ஏதோ அந்த வீட்டிற்கு போக அவனுக்கு பிடிக்காது…. அவர்கள் வற்புறுத்தி அழைக்கவே  அவளை அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்…. இப்படி ஆகும் என்று தெரிந்தால் அழைத்துச் சென்றிருக்க மாட்டான்……

           ஆனா அவ நிதானமா தான் இருந்தா…

நான் அவ்வளவு கோபத்திலிருந்தும்…. எவ்வளவு தெளிவா அழகா முடிவெடுத்தா…. தெளிவாக பேசினா….

         இப்ப நான் தேடுவது தெரிஞ்சா என்ன நினைப்பா…. அவ தெளிவா தான் முடிவு எடுப்பா….. நான்தான் என்னையே குழப்பிக்கிறேன்….. அவ லைஃப் சந்தோஷமா இருக்குன்னு… தெரிஞ்சா.., எனக்கு நிம்மதியா இருக்கும்…..

       மனதில் அத்தனை குழப்பம் இருந்தாலும்….  சிறு பிரார்த்தனையோடு தான் இருந்தான்.. அவளைப் பற்றிய நல்ல தகவலை கொடு என்று…..

       ஏனோ அன்றைய இரவின் தனிமை அவளை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது…. தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தவன்….அவளை முதல் முதலாகப் பார்த்த நாளிலிருந்து கடைசியாய் நடந்த நிகழ்வு வரை அனைத்தும் நினைவில் வந்து போனது…. கடைசியில்  முடியாமல் எழுந்து  சென்று  அவளது புடவையை எடுத்து வந்து தன் முகத்தில் போட்டு மூடி கொண்டு தூங்கினான்…

        பெங்களூரில் இரவு வெகு நேரம் சென்று விடியலை நோக்கும் நேரத்தில் வீடு திரும்பிய ஷ்யாம்… தன் அறைக்கு சென்று உடை மாற்றிவிட்டு அவன் அறையில் இருந்த பால்கனியில் வந்து வெறும் தரையில் படுத்தான்…..  மனம் கல்லூரி நாட்களுக்கு திரும்பத் தொடங்கியது…..

நினைவுகளின் ஓட்டத்தை

யார் நிறுத்துவது…..

நிஜங்களைப் பின்னுக்கு

தள்ளிவிட்டு…….

நினைவுகளோடு பயணம்..,

நினைவுகளை நிறுத்திவிட்டு

நிஜங்களோடு

என்று கரையேறுவது…..”

லண்டனின் இரவுக் குளிரில் இழுத்து போர்த்தியபடி தோழிகள் தூங்கி இருக்க…. பவித்ராவும் தனது அறையில் போர்வைக்குள் யோசனையோடு தூங்காமல் விழித்திருந்தாள் என்ன முடிவு செய்வது என்ற குழப்பத்தில் தூக்கத்தை அருகில் வர விடாமல் செய்து இருந்தது….

          அப்பா அன்று ஏன் அப்படி சொன்னார்… நீ இப்போ என் பொண்ணு இல்ல…. என் பொண்ணா இருந்தா நான் உன்னை கூட்டிட்டு போலாம்…… ஆனால் அப்படி சொன்ன பிறகு தான்……. அவளுக்குள்ளும் ஒரு தெளிவு பிறந்தது…..

           சற்று நேரம் அறைக்குள்ளேயே நடந்தவள்…. முடிவுகளை தனது டைரியில் எழுதி பார்த்து…. அதற்கான தீர்வு என்னவாக இருக்கும் என்று யோசித்தாள்..  என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று மனம் தெளிவானவுடன் நிம்மதியான உறக்கம் அவளை தழுவியது….

Advertisement