Advertisement

அத்தியாயம் 12

உன்னருகில் வாழுவதொன்று  

 போதும் இந்த மண்ணிலே    

வேறு ஒன்றும் தேவை இல்லை   

 யாவும் உந்தன் அன்பிலே    

எனை ஆளவே வந்த மகராசனே   

 நான் உனக்காகவே பல பிறவிகள்    

துணை வருவேனே ”  

     ரமேஷ் சுமி நிர்மல் ரீனா திருமணம் சென்னையில் நடப்பதாக இருந்தது…

   ரிஜிஸ்டர் ஆபீஸில் முதலில் திருமணத்தை முடித்துக்கொண்டு பின் அவரவர் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு தனித் தனி மண்டபத்தில் வரவேற்பு வைப்பதாக இருந்தது எனவே அனைவரும் சென்னை செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்….

    இவளிடம் போன் செய்து எப்படி திருமணத்திற்கு வரப்போகிறாள் என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது இவள் வருவேன்….  முடிவு தெரியவில்லை கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று மட்டுமே சொல்லி இருந்தாள்….

     இது சம்பந்தமாக சிவரஞ்சனிடம் கலந்து பேசும் போது அவன் எனக்கு லீவு கிடைப்பது கஷ்டம் காலையில் வந்து இரண்டு மண்டபத்திற்கும் சென்று திருமணத்தை பங்கேற்றுவிட்டு நான் அன்றே திரும்பவும் ஹைதராபாத் வரவேண்டும்…. எனவே நீ எப்படி போவது என்று தோழிகளிடம் கேட்டு முடிவு செய்துகொள் என்று சொல்லிக் கொண்டிருந்தான்….

   இது தெரிந்த உடன் ரமாவும் ஷியாமும் அவளை தாங்கள் அழைத்து செல்வதாக கூறினர்…. ஷியாமின் அம்மா  குழந்தையை தான் பார்த்துக் கொள்வதாக சொன்னாள்… அனைவருமே திருமணத்திற்கு முதல் நாள் அங்கு சென்று விட்டு திருமணத்தன்று மாலை திரும்பி விடுவதாக இருந்தது ஏனென்றால் இரு வீட்டிலும் தனித்தனி கல்யாணம் ரிஜிஸ்டர் ஆபீஸில் மட்டும்தான் ஒன்றாக பார்க்க முடியும் என்பதால் இரண்டு திருமணங்கள்  அதிக நேரம் செலவிட முடியாது என்பதால் அதை சொல்லும் போது சிவரஞ்சன் குழந்தைகளை வைத்துக் கொண்டு அலைய வேண்டாம் என்று மறுத்து விட்டான்…  தானே அதிகாலை ஃபிளைட்டில் சென்னை அழைத்து வந்து விட்டு   இரண்டு திருமணத்திலும் பங்கேற்று விட்டு பிறகு மாலை வரை இருந்து விட்டு மாலை அவளை அழைத்துக்கொண்டு ஹைதராபாத் வந்து விடுவதாகச் சொன்னான்… அப்படி செய்தால் மட்டுமே  அவனால் அலுவலகம் செல்ல முடியும் குழந்தைகளையும் அதிகம் அலைச்சல் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று கூறிக் கொண்டிருந்தான்….  இந்த ஏற்பாடேசிறந்தது என்று அனைவரும் முடிவு எடுத்துக் கொண்டனர்…..

    திருமணத்திற்கு கிளம்புவதற்கு  தயார் செய்து கொண்டிருக்கும் போது அவன் அவளுக்காக ஒரு பட்டுப் புடவை வாங்கி அதற்கு தேவையான பிளவுசும் தெரிந்தவர்கள் மூலமாக கொடுத்து தைத்து வாங்கி வைத்திருந்தான்…

    எப்போது வாங்கியது என்று கேட்டபோது

     நம் திருமண நாளுக்காக  வாங்கியது என்று சொன்னான்… அதோடு சேர்த்து ஒரு நகை பெட்டியையும் கொடுத்தான்..

    அவள் யோசனையோடு பார்க்கவும் என்னோட சம்பளத்தில் பில் போட்டு வாங்கினதுமா வித்தியாசமாக பார்க்காதே என்று கேட்கவும்….

  உங்கள பத்தி எனக்கு தெரியாதா என்று அவள் சொன்னாள்… ரஞ்சன் நேர்மையானவன் சில இடங்களில் விட்டுக்கொடுத்து போக வேண்டிய அவசியம் வந்தால் விட்டு கொடுத்து போவான்…. ஆனால் தன் நேர்மை தவற மாட்டான்….

அவள் குழந்தைகளை கிளப்பித் தரவும் குழந்தைகளை எடுத்து கொண்டு வெளியே வந்தான்…  இரட்டை குழந்தைகளுக்கான ஸ்டாலரில் குழந்தைகளை வைத்து பெல்ட் போட்டு வைத்திருந்தான்…  குழந்தைகளுக்கு  தேவையானவற்றை ஒரு பையில் எடுத்து வைத்து அதையும் ஸ்டாலரின் கீழுள்ள ராக்கில் எடுத்துவைத்தான்… அதற்குள் அவள் கிளம்பி வரவும் அவளை பார்த்துக்கொண்டே வீட்டில் இருப்பவர்களிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி விட்டு இருவரும் கிளம்பினார்கள்… டிரைவர் வந்து ஏர்போர்ட் ல் விட்டு விட்டு வந்தார்….டிரைவரிடம் சொல்லி  மாலை வந்து அழைத்துச் செல்ல வரும்படி சொல்லிவிட்டு கிளம்பி விட்டனர்…..

    சரியாக திருமண நேரத்திற்கு சற்று முன்னர் வந்து ரிஜிஸ்டர் ஆபீஸில் இறங்கினார்கள்… சத்யா ஸ்டாலரில் தூங்கிக்கொண்டிருக்க சமுத்ரா கண்விழித்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவளை சிவா தூக்கி வைத்து இருந்தான்….

   ரெஜிஸ்டர் ஆபிஸில் இரண்டு ஜோடிகளுக்கும் நல்லபடியாக திருமணம் முடிய அவரவர் சம்பந்தப்பட்ட கோயிலுக்கு சென்றுவிட்டு தனித்தனி மண்டபங்களுக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது….. இரண்டு ஜோடிகளுக்கும் அவர்களுடைய சொந்தங்கள் அவரவர் சம்பந்தப்பட்ட மண்டபங்களுக்கு கிளம்ப நண்பர்கள் மட்டும் முதலில் எங்கு செல்வது என்று குழப்பத்துடன் தேங்கி நின்றனர்…  பின்பு ஒரு முடிவோடு அனைவரும் ஒவ்வொரு இடமாக சென்று விட்டு மதிய உணவிற்குப் பிறகு இருவரும் கிளம்ப தயாராகினர்….

    பெங்களூரில் இருந்து காரில் வந்து இருந்ததால் அவர்கள் அப்படி கிளம்ப… இவர்கள் ஏர்போர்ட் சென்று தங்களுடைய பிளைட் ற்காக காத்திருந்தனர்…  அன்று மாலையே ஹைதராபாத் வந்து சேரவும் குழந்தைகள் எப்போதும் போல் தான் இருந்தனர்… ப்ளைட்டில் சென்று வந்ததால் சோர்வு தெரியவில்லை… ஆனால் பவித்ரா சற்று சோர்வுடன் இருந்தால் இரண்டு குழந்தைகளின் சமாளிக்க வேண்டியது இருந்தது மட்டுமல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கும் பசியாற்ற வேண்டியது இருப்பதால் அவளால் முடியாத சமயம் சற்று பாட்டிலிலும் கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள்…. ஆறு மாதம் ஆன பின்தான் திட உணவு கொடுக்க முடியும் என்பதால் இரு குழந்தைகளுக்கும் தேவையான அளவு பசியாற்ற  முடியாமல் சில நேரங்களில் பால் பவுடரையும் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் சூழ்நிலைகள் வாய்த்தது… ஆனால் வீட்டில் இருந்தால் ஓரளவு அவளால் சமாளிக்க முடியும் அங்கு வேலை செய்யும் சமையல் அம்மா  குழந்தை பெற்றவள் என்பதால் பார்த்து பார்த்து சமைத்துக் கொடுப்பார்கள்….  அது ஓரளவுக்கு அவளுக்கு சரி ஆக இருந்தது… இன்று வெளியே சென்று வந்ததால் சரியாக அவளால் முடியவில்லை….  அதை  அவனும் உணர்ந்திருந்ததால் அன்று இரவு உணவை கடையில் ஆர்டர் செய்து வாங்கி வரும்படி சொல்லி இருந்தான்…..

     அவர்களது வாழ்க்கை அழகான நதி போல ஓடிக் கொண்டிருந்தது… நதிக்கு அடியில் எத்தனை குறைகள் இருந்தாலும் வெளியே தெரிவதில்லை அதுபோலதான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் உள்ளுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் நதிபோல ஓடிக் கொண்டிருக்க வேண்டும்… அப்போதுதான் வாழ்க்கை கடந்து போக முடியும் இது இவர்களுக்கு அது மட்டுமல்ல அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்று…

    குழந்தைகளுக்கு ஐந்து மாதம் முடிந்து ஆறு மாத தொடக்கத்தில் இருந்தனர்… அவள் வந்து ஒன்றரை மாதம் கடந்து விட்டது … கல்யாணமான  இரு  தம்பதியரும் ஒருமுறை இவள் வீட்டிற்கு வந்து விட்டு அவர்களும் லண்டன் கிளம்பி விட்டனர்…. அவர்கள் வந்து போன போது ஷ்யாமும் ரமாவும் ஒருமுறை வந்து சென்றனர்… சிவாவின் விடுமுறைக்காக காத்திருந்தனர் விடுமுறை கிடைக்கும் நேரம் ஊருக்கு சென்று வரவேண்டும் என்று….   பெரியம்மாவும் குழந்தையைப் பார்க்க விரும்புவதாக சொல்லிக்கொண்டே இருந்தார்….

      அவ்வப்போது அனைவரும்  போனில் நலம் விசாரித்துக்கொண்டனர்….  நேரில் பார்க்க முடியாவிட்டாலும் வீடியோ காலில் பார்த்துக் கொண்டனர்….

   விடுமுறை கிடைத்தவுடன் இருவரும் குழந்தைகளை எடுத்துக் கொண்டு ஊருக்கு கிளம்பினர்…. ஹைதராபாத்திலிருந்து அவன் ஃபிளைட் டிக்கெட் போட்டு விட்டான் குழந்தைகளை எடுத்துக்கொண்டு ட்ரெயினில் போவது கஷ்டம் என்ற முடிவுடன்….  மதுரைக்கு சென்று இறங்கியதும் பெரியப்பா வந்து அழைத்துச் செல்ல வந்து விட்டார்., குழந்தைகளை பார்த்தது அவர்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் அவ்வளவு சந்தோஷம் பவித்ராவின் அத்தை மட்டும் மூஞ்சியை திருப்பிக் கொண்டு சென்றாள்…  முதல்முறையாக பெரியப்பா சிவாவின் அப்பாவை சத்தம் போட்டு அழைத்து இது உன் பேர குழந்தைகள் பார் என்று சொன்னார்…..

    அவனுடைய அம்மா வழிபாட்டு வீட்டினரும் அனைவரும் வந்து பார்த்து விட்டு சென்றனர்…. ரஞ்சனின் அம்மா குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் இருந்தார் என்றும்…. அவரே தன் மகனுக்கு மகளாக பிறந்து விட்டார் என்றும் பாட்டி சொல்லிச் சென்றார்….

     இவர்கள் சென்ற அன்று மாலை நேரத்தில் பவித்ராவின் வீட்டினரும் வந்திருந்தனர்…  பவித்ராவின் அப்பா சாதாரணமாக அவளோடு பேசிக் கொண்டு குழந்தைகளை தூக்கி கொஞ்சினாலும் அவள் அம்மா சற்று கடுப்புடனே இருந்து அதன் பிறகு அனைவரும் சத்தம் போட்டவுடன் குழந்தைகளை கையில் வாங்கினாள்….

   ஆனால் பவித்ரா மட்டும் பேசவில்லை பிறகு அவள் அம்மா வந்து சிவாவிடம் நான் அப்படி சொல்லிருக்க கூடாது சாரி  என்று சொன்ன பிறகு தான்.. இவள் சாதாரணமாக பேச தொடங்கினாள்… அவளைப் பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் தவறுதான் என்பதில் பிடிப்பாக நிற்பவள் எனவே அந்த முடிவில் அவள் உறுதியாக நின்றாள்..

    ஊரில் சொந்த பந்தங்களோடு என்றுமில்லாத அளவு கலகலப்புடன் நாட்களை நாளை கழித்துவிட்டு பெரியம்மா பெரியப்பா வை அழைத்துக்கொண்டு அவர்களுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்…

பெரியம்மா பெரியப்பா விற்கு முதல் ஒரு வாரம் பழகுவதற்கு கஷ்டமாக இருந்தாலும் பின்பு போகப் போக பழகிக் கொண்டார்கள்…  குழந்தைகள் அவர்களின் நேரத்தை பாதி  வாங்கிக் கொண்டார்கள்…..

   நாட்கள் செல்லச் செல்ல ஒரு அழகான குடும்பச் சூழலை ரஞ்சன் உணரும் நிலைக்கு வந்திருந்தான்…. அவளிடம் தனியாக பேசும் நேரங்களில் எல்லாம் இப்படிப்பட்ட குடும்பச்சூழல் தனக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பான்…

    ஆனால் இப்போது அவனும் அந்த குடும்பச் சூழலுக்குள் அழகாக பொருந்திக் கொண்டான்…. பவித்ரா அருகில் உள்ள மருத்துவமனையில் தனது ட்ரைனிங் தொடங்கியிருந்தாள் மருத்துவர்களுக்கு புதிதாய் கற்றுக்கொள்ள நிறைய  இருக்கும், அது  எப்போதுமே படித்துக் கொண்டிருப்பது போல தான்…

      குழந்தைகளை பெரியம்மாவும் பெரியப்பாவும் பார்த்துக் கொள்வதால் சுதந்திரமாக சென்று விட்டு வந்துக் கொண்டிருந்தாள்…. ரஞ்சனுக்கும் அது மகிழ்ச்சியாகவே இருந்தது அப்படி ஒரு நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வரும் போது தான் வீட்டு வாசலில்  நுழைந்தவள் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கேட்க நேர்ந்தது….

      வீட்டு ஹாலில் அமர வைத்துக் கொண்டு பிள்ளைகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார் பெரியம்மா…. பெரியப்பா ஏதோ சொல்ல குழந்தைகள் இரண்டும் அவரையே பார்த்துக்கொண்டு சமத்தாக உணவை வாயில் வாங்கிக் கொண்டிருந்தனர்…. அங்கே அமர்ந்து ரஞ்சனும் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்…. அவன் இப்பொழுதெல்லாம் அலுவலக அறைக்குள் நுழைவதில்லை குடும்பச்சூழலுள்ளே தன் வேலைகளையும் வைத்துக்கொண்டு பார்த்துக் கொள்கிறான்…. அப்போதுதான் பெரியப்பா ஏதோ அவர் காலத்தில் உள்ள கதையை சொல்ல ரஞ்சனும் தன் வேலையை மூடி வைத்துவிட்டு அவர் சொல்வதை குழந்தை போல கேட்டுக் கொண்டிருந்தான்…. அப்போதுதான் பெரியப்பா இது எப்ப நடந்தது….  என்ன ஆச்சு அதுக்கப்புறம் என்று குழந்தை போல கதை கேட்க தொடங்கவும்…. பெரியம்மாவும் பெரியப்பாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு திரும்பவும் சொல்லத் தொடங்கினார் பெரியப்பா….

      அதுபோல அந்தக் கதை முடியவும் பெரியம்மா சாப்பாடு ஊட்டி முடித்துவிட்டு குழந்தைகளை சுத்தம் செய்து வைக்கவும்… பெரியம்மாவிடம் மறுபடி கதை கேட்கத் தொடங்கினான்….  பெரியம்மா நேத்து ஏதோ வனதேவதை என்று ஒரு கதை குழந்தைகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேங்க இல்ல….  அது என்ன ஆச்சு பாதியில விட்டுட்டுப் போயிட்டீங்க என்று கேட்டான்……

     ரஞ்சன் நீ என்னடா சின்ன புள்ள மாதிரி கதை கேட்டுட்டு இருக்க… அது சும்மா உன் பிள்ளைங்க   கதை மாதிரி ஏதாவது அப்படி இப்படி என்று சொன்னால்தான் ரெண்டு என்ன பாத்துகிட்டே  வாயை திறக்கும் சாப்பாடு ஊட்ட முடியும்…. அதுக்காக ஏதோ கதை சொன்னது நீ அத போய் திரும்ப கேட்டுகிட்டு இருக்கே….  அது நானா சும்மா சொன்னது…..

          அப்படியா நானும் ஏதோ கதையோ நினைச்சேன் தெரியுமா என்று பேசவும்…  இழந்துவிட்ட சந்தோஷங்கள் திரும்ப அவனுக்கு கிடைத்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான்….

    இதை வாசலில் இருந்து பார்த்த பவித்ராவிற்கு அவன் குழந்தையாகவே கண்ணுக்கு தெரிந்தாள்….

     அவள் வந்ததை பார்த்த பெரியம்மா குழந்தைகளையும் மறைத்துக் கொண்டார்…. ஏனெனில் அவள் குளிக்காமல் குழந்தையை தூக்க மாட்டாள் குழந்தைகளும் அவளைப் பார்த்தவுடன் தூக்க சொல்லி அடம் செய்யும் அதனால் அவள் சென்று குளித்து வந்த உடனே குழந்தைகளை கையில் கொடுத்தார்…..

    பெரியம்மாவும் பெரியப்பாவும் எப்பொழுதும் போல சீக்கிரமாகவே தூங்கப் போய் விட இவள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு அவள் அறைக்கு சென்றாள்…  அவன் வேலைகளை முடித்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டான்…

குழந்தைகள் இருவரையும் தூங்க வைத்து முடிக்கவும்….  அவனும் வந்து அவள் அருகில் சாய்ந்து கொண்டு எனக்கு ஒரு கதை சொல்லேன் என்று கேட்கவும்…

      ஐயோ ஏன் இப்படி ஆரம்பிச்சீங்க… வரும் போதே கவனித்தேன் என்ன ஆச்சு என்று கேட்டாள்…..

       இந்த கதை கேட்பது ரொம்ப நல்லா இருக்கு தெரியுமா பிள்ளைகளுக்கு கதை சொல்லும் போது அப்படியே சூப்பரா இருக்கு…. என்னவோ பழைய காலத்திற்கு போன மாதிரி ஒரு பீல் தெரியுமா…. நான் இதெல்லாம் அனுபவிச்சது இல்ல……  எனக்கு  ஹேப்பியா இருக்கு.. என்று சந்தோஷமாகவே சொன்னான்…..

          அப்போது அவள் சொன்னாள் நான் தான் உன் கிட்ட கேக்கணும் உங்களுக்கு தான் ஆபீஸ்ல தினம் புதுசு புதுசா கதை கிடைக்கும்., என்று சொல்லவும்

    சிரித்துக் கொண்டே அதை இன்னொரு நாள் சொல்றேன்… இப்போது கதை சொல்லு என்கவும்….

         கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தா உங்க பிள்ளைகளுக்கு கதை சொன்னேன்  அப்ப கேட்டு இருக்கலாம் இல்ல….

        இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்…. அப்போது அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் சொன்னான்…. என் வாழ்வில் இழந்த அத்தனை சந்தோஷங்களும் எனக்கு கிடைத்து விட்டது போல ஒரு ஃபீல் கிடைச்சிருக்கு…. அம்மு ரொம்ப ஹேப்பியா இருக்கேன்…  மனசுல அளவுல ரொம்ப ஹேப்பியா இருக்கேன்…. நீ மட்டும் அப்பப்ப சண்டை போடாம இருந்தா இன்னும் நல்லா இருக்கும் தெரியுமா, என்று கேட்டான்….

       அவன் தான் ஒருமுறை எங்கிட்ட உரிமையா சண்டை போட கூட., யாரும் கிடையாது., என்று சொல்லி இருந்தான்… அதற்கு தான் இந்த சண்டை எல்லாம்….,

      அப்பொழுது அவள் பதிலுக்கு முறைத்துக்கொண்டே சண்டை வராத குடும்பமே கிடையாது….  நீங்க சண்டை போடக் கூடாது என்கிறீர்களா… அப்படித்தான் சண்டை போடுவேன் என்று  அவனோடு வம்பு சண்டைக்கு தயார் ஆனால்…..

      அவனுக்கு சண்டையை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரிந்திருந்ததால்., சண்டைகள் வருவதும் சமாதானம் ஆவதும் எல்லோர் குடும்பத்திலும் உள்ளது என்று என்பது போல போய்க் கொண்டிருந்தது….

           அவனது சமாதான படுத்தும் முறை இருவருக்கும் பிடிக்கும்….

          குழந்தைகள் முதல் பிறந்தநாளை கொண்டாடிய அன்று களைத்துப் போய் அனைவரும் உறங்க சென்றனர்….

இவள் குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு அவனருகே வரவும் அவன் தூங்காமல் அவளுக்காக காத்திருந்தான்….

என்ன விஷயம் என்று கேட்கும்போது….

அம்மு நான் உன்னை வயிறு பெருசா இருக்குற  போஸ்ல பார்த்ததே இல்லை…

  அதுதான் போட்டோவை பாத்துட்டீங்க இல்ல…. போதும்…..ரெண்டு பேபி வீட்ல… எனக்கு மூணு பேபி இருக்கு போதும்…

        என்னால உங்களையும் உங்க பிள்ளைங்களையும் சமாளிக்க முடியல… இதுல இன்னொன்னா…..

      எனக்கு உன்ன அப்படி பார்க்கணுமே என்று சொல்லவும்…..

          போட்டோ  பார்த்துக்கோங்க என்று சொல்லி அவனோடு அன்றைய சண்டையை தொடங்கினாள்….

       இல்ல இல்ல ஒன்னே ஒன்னு தான் என்று அவன் பேசவும்…..

      முடியாது மறுபடி இரண்டா வந்தா….  என்னால வளர்க்க முடியாது என்று சொல்லி சிரித்துக் கொண்டாள்….  அவளுக்கு தெரியும் அவன் அவளிடம் அடிக்கடி கிண்டல் செய்ய கேட்பது தான் இது என்று…..

      அப்போதுதான் ரஞ்சன் சொன்னான் என்னோட வாழ்க்கை இவ்வளவு அழகான நந்தவனமாக மாறும் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை… எல்லாரும் கடவுளுக்கு தான் சொல்வாங்க… ஆனா அம்மு நான் உனக்கு மட்டும் தான் தேங்க்ஸ் சொல்லுவேன்….  என்னோட வாழ்க்கை இன்னிக்கி  சந்தோஷமா இருக்கேன் ன்னா அதுக்கு காரணம் நீ மட்டும்தான்.., என்று மிக மகிழ்ச்சியோடு அவள் உச்சியில் முத்தம் வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து  மகிழ்ச்சியை தேடத் தொடங்கினான்…

எல்லாம் வல்ல இறைவனின் அருளால்  அனைவரும் சந்தோஷமாய் இருக்க ஆண்டவனை பிரார்த்திப்போம்….

Advertisement