Advertisement

வீட்டிற்கு சென்ற பிறகு ஆனந்த அதிர்ச்சி காத்திருந்தது அவன் அங்கிருந்து கிளம்பி வரும் போதே குழந்தைகளுக்கு தேவையான தொட்டிலில் இருந்து அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டு பெங்களூர் வந்திருந்தான்….

         குழந்தைகளுக்கு தேவையான அனைத்தும் அவர்களுடைய அறையில் நிறைத்திருந்தது…. பார்த்துப் பார்த்து வாங்கி இருந்தான் ஒவ்வொரு பொருளையும்  இவள் பார்த்த உடனே கண்டு கொள்ள முடிந்தது ஏனெனில் தரம்  ஏ சொல்லியது அதை எந்த அளவு பார்த்து வாங்கியிருப்பான் என்பதை…..

   வீட்டிற்கு வந்தவுடன் முன்பு இருந்ததை போல ஒரு சாதாரண குடும்பத் தலைவியின் பொறுப்பை எடுத்துக் கொண்டாள்… செய்யவேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்து துணிகளை பிரித்து அடுக்கி குழந்தைகளை  தூங்க வைத்துவிட்டு…  குழந்தைகளுக்கு தேவையான மற்ற எல்லாவற்றையும் தயார் செய்து வைத்துவிட்டு… வரும்போது பின் மாலைப் பொழுதாகி இருந்தது…. ஆனாலும் அவளுக்கு இருந்த சோர்வில் சற்று நேரம் படுத்து உறங்கி விட்டாள்….

      வந்தவுடன் சிவாவிற்கு அவனது கடமை அழைக்க வீட்டில் இருந்தபடியே சில வேளைகளில் மட்டும் முடித்துவிட்டு மறுநாள் அலுவலகம் செல்வதாக இருந்தான்…. வேலைகளை முடித்துக்கொண்டு குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க உள்ளே வரவும் குழந்தைகள் ஒருபுறம் தூங்கிக் கொண்டிருக்க…  அவளும் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான்…. அவள் வந்த பிறகுதான் இந்த அறை ஒழுங்காக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது… சற்று நேரம் அவள் உறங்குவதே பார்த்துக்கொண்டிருந்தவன் பின் மெதுவாக அறையின் கதவை சாத்திவிட்டு ஏசியை குழந்தைகளுக்கு ஏற்றார் போல் சரி செய்து வைத்துவிட்டு வெளியே சென்றான்…..

    அவன் வேலைகளில் மூழ்கிப் போக மறுபடியும் குழந்தைகளின் சிணுங்கல் சத்தம் கேட்டு மெதுவாக கண் விழித்த பவித்ராவிற்கு முதலில் எங்கு இருக்கிறோம் என்று புரிய சற்று நேரம் ஆனது….  தெரிந்தவுடன் சிரித்துக்கொண்டே எழுந்து இருட்டத் தொடங்கிய அறைக்குள் விளக்கை போட்டுவிட்டு வெளியே வந்தால் வேலை செய்பவர்கள் மற்ற வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்…. குழந்தைகளுடன் அவர்களுக்கு தேவையானவற்றை பார்க்க தொடங்கினாள்…

சத்யா பசியில் அழத்தொடங்கியிருந்தான்… அதே நேரம் சமுத்திரா  எழும்ப தொடங்கியிருந்தாள்… அவளுக்கு பசி இருப்பது போல தெரியவில்லை தூங்கி எழுந்தவுடன் மிகவும் உற்சாகமாக கையையும் காலையும் ஆட்டி கொண்டு அவளுக்கு தெரிந்த பாசையில் சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தாள்…. பின் மெதுவாக சத்யாவை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு சமுத்திராவை அருகில் போட்டுக்கொண்டு அவனுக்கு பசியாற்ற தொடங்கும் முன் சத்யாவின் அழுகை தொடங்கியது அவன் அழுகை சத்தம் வெளியே வரை கேட்டதால் சற்று நேரத்திலேயே சிவா அங்கு வந்து நின்றான்….

   கதவைத் தட்டிவிட்டு திறந்தாலும் சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்று கேட்டான்…  சம்மு வ  நான் தூக்கிட்டு போய் விடவா என்று கேட்கவும் சரி என்று தலையை அசைக்க…. என்ன என்று சைகையில் கேட்க அவள் மடியில் இருந்த சத்யாவ காட்டினாள்…. பசியாற்றும் போது பேச்சு சத்தம் கேட்டால் அழத் தொடங்கிவிடுவான்…. எனவே தான் சைகை மட்டும்….

சமுத்திராவை வெளியே தூக்கி கொண்டு சென்று விட்டான்….

    சமுத்திரா அவனோடு நன்கு ஒட்டிக் கொண்டாள்….  குழந்தைகள் இருவருமே அவன் குரல் கேட்டவுடன் திரும்பிப் பார்த்து சத்தம் கொடுக்க கற்றுக்கொண்டிருந்தனர்…  தினமும் வீடியோ காலில் அவர்களோடு பேசுவதை கொண்டு குரல் அடையாளம் நன்கு தெரிந்தது….

          குழந்தைகளை கவனித்துக் கொண்டும் மற்ற வேலைகளை பார்த்துக்கொண்டும் இருந்ததாள் சிவாவுடன் அவளுக்கு நேரம் செலவழிக்க முடியவில்லை.. வீட்டில் உதவிக்கு இருப்பவர்கள் இரவில் கிளம்பி விட அதன் பிறகு குழந்தைகளுக்கு தேவையானதை அவள்தானே பார்த்தாக வேண்டும்… அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு குழந்தைகளை இருவரையும் பசி அமர்த்தி தூங்க வைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது… எல்லாம் முடித்து விட்டு வரும்போது சிவா தூங்காமல் அவளைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்….

   நாளைக்கு நீங்க ஆபிஸ் போகனும் இல்ல…  தூங்காம உட்கார்ந்து இருக்கீங்க என்றாள்…  என்னதான் இருந்தாலும் ரெண்டு நாள் அடுத்தவங்க வீட்டில் தங்கியிருந்தோம் எவ்வளவுதான் பிரண்ட் ஆ இருந்தாலும்….  நம்ம வீட்டுக்கு வந்தா தான் ப்ரீயா இருக்கு இல்ல என்றான்…  அவள் சிரித்துக்கொண்டே படுத்து தூங்குங்க என்றவள்… அவன் படுக்காமல் அமர்ந்திருப்பதை  பார்த்த பின்பு அவன் கையைக் கோர்த்துக் கொண்டு அவன் தோளில் தலைசாய்த்து அமைதியாக அமர்ந்திருந்தாள்… சில முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதைப் பற்றி அவனிடம் கூறிக் கொண்டிருந்தாள்… ஊருக்கு செல்வது நண்பர்களின் திருமணம் இவற்றைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் அவனும் கேட்டுக் கொண்டிருந்தான்…

குழந்தைகள் இருப்பது அவள் தந்தைக்கு சிவாவின் மூலமாக தெரிந்திருந்தது…  அவள் தந்தை அவளிடம் போன் செய்து வருத்தப்பட்டதை சொல்லிக் கொண்டிருந்தாள்… அம்மாவிடம் இன்னும் பேச வில்லை என்பதும் அவனுக்குத் தெரியும்… ஊருக்கு குழந்தைகளோடு செல்லவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…

     கண்டிப்பா போவோம் நீ ஒழுங்கா சாப்பிடு ஹெல்த் அ பாரு ரெண்டு பேபிஸ் பார்த்துக்கிறது என்பது பெரிய விஷயம்…. நான் உனக்கு ஹெல்ப் க்கு ஆள் ரெடி பண்றேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்……

   இல்ல ஹெல்ப்புக்கு ஆள் வைக்கிறது ன்னு சரியா வராது… நம்ம வீட்டு ஆட்கள் கையில் குழந்தை வளர்ந்தால் தான் நல்லா இருக்கும் என்று அவள் சொல்லவும்… ரெண்டு மாசம் கழிச்சு பெரியம்மா வரேன்னு சொல்லி இருக்காங்க… சாயங்காலம் நான் பேசினேன் பெரியம்மாட்ட நீ வந்து இருப்பதை சொன்னேன்… ரொம்ப சந்தோஷப்பட்டாங்க உன்கிட்ட பேசணும் சொன்னாங்க… நீ தூங்கிட்டு இருக்க அப்படி ன்ன உடனே உன்னை எழுப்ப வேண்டாம்னு சொல்லிட்டாங்க…. ரெண்டு மாசம் கழிச்சு ஊருக்கு போகும் போது அவங்களை கூட்டிட்டு வந்து விடலாம்….

             அது வரைக்கும் எனக்கு ஹெல்ப் வேண்டும் என்று கேட்கும் போது பகல்ல வர்றவங்களே இருக்கட்டும் போதும் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்….  மாலை நேரத்தில் தான் கவனித்து விடுவதாக சொல்லிக்கொண்டு இருந்தாள் சரி என்று சொன்னான்…

   அவர்களுக்குள் பேசி தீர்க்க வேண்டிய விஷயங்கள் அதிகம் இருந்ததால் மற்ற எதைப் பற்றி பேசாமல் குழந்தைகளும் அவளும் அருகில் இருக்கும் நிம்மதியோடு அவன் இருக்க .. அவன் அருகே வந்து சேர்ந்ததே போதும் என்ற நிம்மதியோடு அவள் இருக்க அன்றைய இரவு இருவருக்கும் நிம்மதியான தூக்கம் கிடைத்தது….  இருவரும் மற்ற எதையும் பற்றி நினைக்கவும் இல்லை யோசிக்கவும் இல்லை….

      வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் செல்ல வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்ததால் வேறு எதைப் பற்றியும் பேசி பிரச்சினைகளை இழுத்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்…  ஆனால் பேசித்தீர்க்க வேண்டிய விஷயங்களை கண்டிப்பாக நிதானமாக ஒருநாள் பேசிவிட வேண்டும் என்பதையும் அன்று முடிவு செய்து கொண்டார்கள்….

       சில விஷயங்கள் அடுத்து வந்த நாட்களில் பேசி முடித்தனர்… மற்றவற்றை அவர்களுக்குள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டனர்…. குழந்தைகள் ஓரளவு வளரும் வரை அவளுடைய வேலை பற்றியும் யோசிப்பது இல்லை என்று நினைத்துக் கொண்டனர்…

    ஹைட்ராபாத் வந்து பத்து பதினைந்து நாட்களுக்கு பிறகு அவர்களுக்குள் பழைய நெருக்கமும் பழைய அன்னியோன்யமும் வந்தது…. மாலை வரை குழந்தைகளை கவனித்துக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அதற்குக்கு பிறகு அவன் சில வேலைகளை ஒதுக்கி வைத்துக்கொண்டு இவளுக்கு சில விஷயங்களில் உதவும் முடிந்தது மற்றபடி குழந்தைகளை அவளே பார்த்துக் கொண்டாள்…..

     அவனோடு குடும்பம் நடத்த தொடங்கிய பின் முன்பு எப்பொழுதும் போல் புடவையை கட்டத் தொடங்கினாள்…. அப்படி ஒரு நாள் அவள் ஒரு புடவையை தேடிக் கொண்டிருந்தாள் அவளுக்கு நன்கு நினைவு இருந்தது அந்தப் புடவையைப் பற்றி…..

    அவனோடு அவள் தமிழ்நாட்டில் இருந்த போது ஒருமுறை கைத்தறி கண்காட்சியை திறந்து வைக்க கலெக்டர் என்ற முறையில் சென்றிருக்கும் போது அங்கு உள்ளவர்கள் நீங்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்று அவனை அழைக்க….  அவனும் பவித்ராவுக்கு போன்  செய்து கேட்டான் என்ன வேண்டும் என்று ஏனெனில் முதல் முதலாக அவளுக்கென வாங்க அவன் வந்திருப்பதால் என்ன வாங்க வேண்டும் என்று கேட்க உங்கள் இஷ்டம் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டால்….  பின்பு அங்கு இருந்த புடவை பகுதியில் பார்க்கும்போது அழகிய வண்ணங்களில் இருப்பதை கண்டு அவளுக்கு மறுபடியும் போன் செய்து என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டான் அப்போதும் அவள் சொன்னது உங்களுக்கு பிடித்தது போல் என்று மட்டுமே சொன்னாள் அங்கிருந்து எடுத்து வந்த புடவையை தான் அன்று தேடிக்கொண்டிருந்தாள்….  ஏனென்றால் அவன் முதன்முதலாக அவளுக்கு பார்த்துப் பார்த்து வாங்கி வந்தது அவளுடைய துணிகள் எல்லாம் இங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது இவள் அங்கு விட்டுச் சென்றதே அவன் அப்படியே எடுத்து வந்து இங்கு வைத்திருந்தான் ஏனெனில் அந்த புடவை ஒருமுறைதான் கட்டியிருந்தாள் கோயிலுக்குப் போய்விட்டு வந்து அப்படியே  மறுபடியும் மடித்து உள்ளே வைத்து இருந்தாள்…. எனவே அந்த புடவை ஒருமுறை கட்டலாம் என்று தேடிக் கொண்டிருந்தாள்… குழந்தைகள் இருப்பதால் அந்தப் புடவை கட்டினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தோடு அதைத் தேடும் போது தான் அவன் வந்து நின்றான்…

என்ன தேடிக்கிட்டு இருக்க அம்மு…

அது என்று அந்தப் புடவையை பற்றிய விபரம் சொல்லவும்…

   இவன் சிரித்துக்கொண்டே அவன் கப்போர்டிலிருந்து எடுத்து கொடுக்கவும்… இந்த புடவை எப்படி உங்க கப்போர்டு க்கு வந்துச்சு….  அதுவும் நான் ஒரு தடவை தான் கட்டியிருந்தேன் அப்படியே மடிப்பு கலையாம உள்ள மடித்து வைத்திருந்தது கசங்கிப் போய் இருக்கு என்று கேட்டாள்

    அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்…. தினமும் நான் அந்த புடவை  மூடிக் கொண்டு தூங்குவேன்  அதில் தான் உன் வாசம் அப்படியே இருந்தது என்று சொன்னான்….

     நான் கட்டிட்டு எடுத்து வச்ச அழுக்கு புடவை என்று சொல்லவும்…

    அதனாலதான் உன் வாசம் அது அப்படியே இருந்துச்சு….  அதனால தான் நான் வச்சு இருந்தேன் என்று சொல்லவும்..

     இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்துக்கொண்டு நின்றவளை கையை விரித்து தன் கை அணைப்பிற்குள் அழைத்தாள் அவளும் மறுக்காது சென்று  அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்…..

சுவாசத்தில் உன் வாசம்

தேட சொல்லித்தந்தது

சுவாசம் இல்லாமல்

வாழவா….

மூச்சு காற்றில் எங்கோ

வாசம் இருப்பதை

உணர்த்தி செல்கிறது

உன்னை உரசி

சென்ற காற்று….”

Advertisement