Advertisement

அத்தியாயம் 11

 

நான் போகிறேன் மேலே மேலே

பூலோகமே காலின் கீழே

வின் மீன்களின் கூட்டம்

என் மேலே பூவாலியின்

நீரைப்போலே நீ சிந்தினாய்

எந்தன் மேலே நான் பூக்கிறேன்

பன்னீர் பூப்போலே

தடுமாறிப்போனேன்

அன்றே உன்னைப்பார்த்த நேரம் அடையாளம் இல்லா

ஒன்றைக் கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னைப் பார்த்தேன்

என்றே உள்ளம் கேள்விக்கேட்கும்

ஆனாலும் நெஞ்சில்

அந்த நேரத்தை நேசிக்கும்”

     நான்கு மாதங்களை இப்படியே கழித்துவிட்டு குழந்தைகள் ஓரளவு உடல் தேறியவுடன் அவளும் படிப்பு முடிக்கவும் ஷியாமின் அம்மா அவர்களை அழைத்துக்கொண்டு பங்களூர் முதலில் செல்வதாகச் சொன்னார்.. அங்கிருந்து ஹைட்ராபாத் கொண்டு விடுவதாகவும் பேசினார்… அவர் சொல்வதை மாட்டேன் என்று சொல்லவும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது…  நான்கு மாதங்கள் அனைவரையும் விட்டுவிட்டு இவளுக்காக வந்து இருந்து குழந்தைகளை பார்த்து கொடுத்தார்… இவளையும் பார்த்துக்கொண்டார் அப்படிப்பட்டவருக்காக  இது கூட செய்யாவிட்டால் எப்படி என்று யோசித்துக்கொண்டே அன்று இரவு சிவாவிடம் பேசும்போது கேட்டாள்… அம்மா இப்படி சொல்றாங்க என்ன செய்ய என்று கேட்கவும் அவனும் சரி நீயும் ஷ்யாம் ரமா கல்யாணத்திற்கு வரமுடியவில்லையே..,  அதனால் பெங்களூர் வந்து விடு நான் பங்களூர் வந்து வந்து விடுகிறேன், என்று சொன்னான்…  இவள் வரும் தினத்தை கணக்கிட்டு அவன் அதற்குரிய முறையில் விடுமுறை கான ஏற்பாடுகளை செய்து கொண்டு பெங்களூர் கிளம்பினான் ….

  அனைவருமே படிப்பு முடிந்ததால் தங்களுக்கான வேலைகளை ஏற்பாடு செய்து கொண்டு உடன் வருவதாக ஏற்பாடுகள் செய்து வைத்துக் கொண்டனர்..  நிர்மல் வீட்டிலும் ரமேஷ் வீட்டிலும் பேசி திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது எனவே அனைவரும் சேர்ந்து பெங்களூர் வந்து ரமாவையும் ஷியாமையும்  பார்த்து விட்டு அதன் பிறகு அவரவர் ஊருக்கு செல்வதாக இருந்தது…  குழந்தையை வைத்துக் கொண்டு வருவது கஷ்டம் என்று நினைத்து கொண்டிருந்தவளுக்கு அத்தனை பேரும் சேர்ந்து வர குழந்தைகளை ஆளாளுக்கு பார்த்துக் கொள்ள வசதியாக இருந்தது….

பெங்களூர் ஏர்போர்ட்டில் ஷியாம் ரமாவோடு சிவரஞ்சன் மற்றும் ஷியாமின் அப்பாவும் காத்திருந்தனர்…

வந்து இறங்கிய பின்னர்  ஏர்போர்ட்டில் உள்ள ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் முடித்துக்கொண்டு அனைவரும் வெளியே வருவதற்குள் வெளியே நின்றவர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்…. ஏனெனில் அனைவரும் குழந்தைகளை வீடியோ காலில் மட்டுமே பார்த்து இருந்ததால் நேரில் பார்க்கும் ஆர்வம் அனைவருக்கும்…..

ஆனால் சிவரஞ்சன் மட்டும் பவித்ராவை காண தவித்துப் போய் நின்றான்….  அவனுக்கான ஒரே உறவு புதிதாய் வந்த உறவுகளோடு வருகிறாள் என்ற எண்ணமே அவனை சந்தோஷத்தில் மூழ்க வைத்தது… நிலை கொள்ளாமல் எழுந்து நடப்பதும் பின்பு அமர்வதும் ஆக இருந்தான்….

   குழந்தைகள் இருவரும் ஷ்யாமின் அம்மா கையிலும் சுமி கையிலும் இருக்க மற்ற மூவரும் அனைவருடைய லக்கேஜையும் கலெக்ட் செய்து கொண்டு டிராலியில் வைத்து தள்ளிக் கொண்டு வர பவித்ரா மட்டும் கையில் எந்த கனமான பொருளையும்  எடுக்காமல் குழந்தைகளுக்கான பையை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு வந்து  கொண்டிருந்தாள்… ஏனெனில் ஷியாமின் அம்மா அவளை நம்மூரில் உள்ள மக்கள் எப்படி கவனிப்பார்களோ அப்படியே கவனித்துக் கொண்டார்… அங்குள்ளவர்கள் சிசேரியன் என்று தனியாக எந்த கவனிப்பும் கிடையாது… அங்கு எல்லா டெலிவரியும் ஒன்றுதான் ஆனால் ஷ்யாமின் அம்மா அப்படி விட மறுத்து விட்டார்….

       அவள் அவன் அருகில் வரவும் பவித்ராவை சிவா சேர்த்து அணைத்தபடி அனைவர் முன்னிலையிலும்  நெற்றியில் முத்தம் வைத்தான்…  அவளும் அவனை  கட்டிக்கொண்டு சேர்ந்து நின்றாள்…  இதைப் பார்த்துவிட்டு ஷியாம் தான் கிண்டலில் இறங்கினான் புள்ளைங்க இரண்டையும் கழட்டி விட்டுட்டு இதுக்கு தான் நீ முன்னாடி வந்தியா என்று கேட்கவும்….

   பவித்ரா பதில் கூறும் முன் சிவா பதில் சொன்னான்…. முதலில் எனக்கு என்னோட அம்மு தான் அதுக்கு அப்புறமா என்னோட குழந்தைங்க என்று….

    குழந்தைகளை அருகில் கொண்டு வந்தவுடன் சிவா தூக்கினான் இரண்டு குழந்தைகளையும் இரண்டு கையிலும் வாங்கிக்கொண்டு கலங்கிய கண்களை துடைக்க கூட தோன்றாமல் குழந்தைகளை அணைத்தபடி வைத்திருந்தான்… பின்பு ஒவ்வொருவரும் குழந்தையை வாங்கி ஆளாளுக்கு தூக்கவும் ஷியாமின் அம்மா தான் பிள்ளைகளை பாடாக படுத்தாதீர்கள் மேல் வலிக்கும் வீட்டிற்கு போய் பார்த்துக் கொள்ளலாம் என்று பழையபடி அவர் கையில் வாங்கிக் கொண்டார்….

வீட்டில் போய் நண்பர்களுக்கே உரிய கலகலப்புடன் சந்தோஷமாக கழித்துவிட்டு ஷியாமின் அம்மா பவித்ராவின் சிவரஞ்சனையும் ஒன்றாக வைத்துக் கொண்டே குழந்தைகளை எப்படி கவனித்துக்கொள்ள வேண்டும்., என்னென்ன செய்ய வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்தார்…  குழந்தைகளை பார்க்க யார் இருக்கிறார்கள் என்று கேட்டு வீட்டில் வேலைக்கு தனியாக ஆட்கள் வந்தாலும் குழந்தையை கவனிக்க யாராவது தனியாக பார்த்துக்கொள்ள வேண்டும்,என்று சொல்லி அனுப்பினார்…

    அனைவரும் ஒரே நாளில் கிளம்புவதாக இருந்தது அவரவர் ஊருக்கு கிளம்ப தயாராக சிவாவும் பவித்ராவும் ஹைட்ராபாத் கிளம்பினர்…  ஷ்யாம் ஏர்போர்ட் வரை சென்று வழியனுப்பி விட்டு வந்தான் குழந்தைகளுக்கு தேவையான பொருள் அடங்கிய பையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு மற்றவற்றை லக்கேஜ் ல்  போட்டு விட்டு இருவரும்  ஆளுக்கு ஒரு குழந்தைகளாக வைத்துக் கொண்டு கிளம்பினர்… வந்ததிலிருந்து அவளை சுடிதாரிலும் மாடல் ட்ரெஸ் என்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான்….

     பிளைட்டில் போகும்போது ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே என்றான்…

     இல்ல நினைக்க மாட்டேன் சொல்லுங்க

என்கனவும்….

        இப்பெல்லாம் நீ புடவை கட்டுவது கிடையாதா என்று கேட்டான்…  ஏனெனில் அவனுக்கு அவளை புடவை கட்டினால் மிகப் பிடிக்கும் என்பது , அவளுக்கும் தெரியும் அவனோடு இருந்த நாட்களில் அவள் ஒருமுறை கூட மாடல் உடைகளை அணிந்தது  இல்லை எப்போதும் புடவை மட்டுமே அணிவாள்.. அதை கல்யாணம் முடிந்த மூன்றாவது நாளே தோட்ட வீட்டில் வைத்து அவன் ஒருமுறை சொல்லியிருந்தான்….

      இங்க இருந்து போன நாளிலிருந்து இப்ப வரைக்கும் புடவை கட்டவில்லை….

      ஏன் என்று ஒற்றை வார்த்தையில் அவன் கேட்க…

      நான் புடவை கட்டினால் ரசிக்கிற ஆள் என் கூட இல்ல அதனால கட்டலை என்றாள்…

       இப்போ ரசிக்கிற ஆள் பக்கத்தில் தான் இருக்கும்  கட்டுவியா….  என்று கேட்கவும்

      இனி கட்டுவேன் என்றாள்…

          ஏய் சும்மா தான் கேட்டேன் குழந்தைகளை வைத்து கொண்டு உனக்கு எது வசதியோ அந்த மாதிரி போட்டுக்கோ….  குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த  அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று அவன் சொல்லவும்….

      இல்லை இல்லை நான் பார்த்துக்கிறேன் என்று மட்டும் சொன்னாள்…. பிறகு பெரியம்மாவிடம் பேசினீர்களா குழந்தையை பற்றி சொன்னீர்கள் என்று கேட்கும்போது……

       நீதான் அதற்கு முன்னாடியே சொல்லிட்டியே என்று கேட்கவும்….

       நான் சொன்னேன் நீங்க சொன்னீங்களா., என்று மறுபடியும் கேட்டாள்….

       ஆமா சொன்னேன் என்று மட்டும் சொன்னான்…..

       சரி பெரியம்மாவை  வர சொல்லலாமா.. என்று கேட்டுக் கொண்டிருந்தாள்….

         நேர்ல போய் கூட்டிட்டு வருவோம் இப்ப வேண்டாம்…  ஒரு டூ மன்த்  போகட்டும் அதுக்கப்புறமா ஊருக்கு போய் கூட்டிட்டு வந்து விடலாம்….. இப்ப  பெரியப்பா வீட்டில் பசங்க எல்லாம் பாத்துக்கறாங்க…  பெரியம்மா பெரியப்பா சும்மா மேற்பார்வைக்கு தான் இருக்காங்க… இனி நம்ம கூட்டிட்டு வந்து பார்த்துக்கலாம் என்று சிவா சொல்லவும் சந்தோஷமாக இருந்தது… அவளுக்கு

         அப்போது தான் அவன் கேட்டான் உன்னோட கேரியரை பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க என்று கேட்கவும்….

      குழந்தைகள் கொஞ்சம் வளரட்டும் அதுக்கப்புறம் பார்த்துக்கிறேன்….  என்று மட்டுமே சொன்னாள் இப்பதிக்கு உங்கள கவனிக்கணும்… குழந்தைகளை கவனிக்கணும்… இது தான் எனக்கு முக்கியம் என்று மட்டுமே சொன்னாள்…

  கவனிக்கிறது எப்படி என்று அவன் நமட்டு சிரிப்போடு கேட்கவும்…..

       கவனிக்கிறது ன்னா.. சேட்டை பண்ணா அடி போடுவது….  செல்லம் கொஞ்சினாள் கொஞ்சுறது….  சாப்பாடு ஊட்டுவது…  தூங்க வைக்கிறது….  இந்த வேலை மட்டும் தான் என்று சொல்லவும்….

ம்ம்ம்…. முடிவோடு தான் இருக்க… என்று சொன்னான்…. அப்புறம் உன் ஹெல்த் முதல்ல  பார்க்கணும்…..  அங்கிருந்து கிளம்பி வரும்போது டாக்டர் செக்கப் முடிச்சிட்டு வந்தியா என்று கேட்டுக் கொண்டிருந்தான்….

    ஆமா பாத்துட்டு தான் வந்தேன் என்று சொல்லவும்…

   இங்கே ஏதும் டாக்டர் பார்க்கணுமா என்று கேட்கவும்….

     ஆமா குழந்தைகளுக்கான டாக்டர் பாக்கணும்… ஒரு அப்பாயின்மென்ட் வாங்கி கொடுங்க என்று கேட்டாள்…

      விசாரிக்கிறேன்  போன உடனே விசாரிச்சுட்டு  நல்ல டாக்டரை பார்த்து அப்பாயின்மெண்ட் வாங்கிடலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்….

   அவர்கள் ஹைட்ராபாத் வந்து இறங்கவும் ஹைட்ராபாத் தில் அவனுடைய பி ஏ வும் டிரைவரும் வந்து இவர்களை அழைத்துக்கொண்டு வீடு சென்றனர்….

Advertisement