Advertisement

அத்தியாயம் 10

 

புல்லாங்குழலே! பூங்குழலே!

நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலேஉனக்கும்

எனக்கும் சரிபாதி

கண்களை வருடும்

தேனிசையில்என் காலம் கவலை மறந்திருப்பேன்

இன்னிசை மட்டும்

இல்லையென்றால்

நான்என்றோ என்றோ

இறந்திருப்பேன்! ”

சரியாக திருமண நாள் முடிந்து பத்து நாட்களில் அவளுக்கு பிரசவ வலி வந்து நிறை மாதத்திலேயே சிசேரியன் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தன…

   நிறைமாதம் வரை வருவதற்கு காரணம் நட்பு தான்.. வீட்டில் உள்ளவர்கள் பார்ப்பதை விட அதிக கவனத்துடன் பார்த்து கொண்டதால்…..  குழந்தைகளுக்கு அங்கு பெயர் எழுதிக் கொடுக்கும் போது சமுத்திரா சிவரஞ்சன்.,  சத்யா சிவரஞ்சன் என்று எழுதிக் கொடுத்தாள்….

  ஏனெனில் கடைசி மாத ஸ்கேன் அங்குள்ளவர்கள் இவளும் டாக்டர் என்பதால் அவளுக்கு முதலிலேயே தெரியும் வயிற்றில் இருப்பதில் ஒரு ஆண் ஒரு பெண் என்று இரட்டைக் குழந்தைகளும் அழகாக வந்து பிறந்தனர்… பெண் அப்படியே சிவரஞ்சனை உரித்து வைத்து பிறந்திருந்தாள்…. பையன் இருவரின் ஜாடையும் கலந்து பிறந்திருந்தாலும் பார்ப்பதற்கு சிவரஞ்சன் போலவே தான் இவளுக்கு தெரிந்தது…. டெலிவரி நேரத்தில் தோழிகளும் தோழர்களும் அவளுக்கு பக்கத் துணையாக இருக்க அழகாக குழந்தை பெற்றெடுத்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் அவள் வீட்டிற்கு வந்த மறுநாளே ஷ்யாமின் தாயாரும் வந்து சேர்ந்தார்…..

    இடையிடையில் சிவரஞ்சனிடம் அவள் பேசிக் கொண்டாலும்… ஏன் படிப்பு முடிய லேட் ஆகுது என்று அவன் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தான்….

      வீட்டிற்கு வந்த மறு நாள் அவனிடம் சொன்னாள் உங்களுக்கு அடுத்த வாரம் தான் பிறந்தநாள்…  ஆனால் கிப்ட் நான் இப்பவே தர்றேன் என்று சொல்லவும் அவனுக்கு முதலில் புரியவில்லை நீ அங்க இருந்துட்டு இங்கே எப்படி கொடுப்ப என்று கேட்கவும் நான் வீடியோ கால் வரட்டுமா என்று கேட்டாள்… இதற்கு முன்பு ஒருமுறை அவன் வீடியோ கால் வா என்று அழைக்கும் போது வேண்டாம் என்று மறுத்து விட்டாள்… இப்போது அவனிடம் இவள் கேட்கவும் அவனும் சரி என்று சொன்னான்……

  வீடியோ கால் ஆன் செய்தவுடன் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் சற்று நேரம் பார்த்துக் கொண்டே இருந்தனர்….

பவித்ரா சிவாமா நீங்க மெலிஞ்சிட்டீங்க… முகம் டல்லா இருக்கு என்று சொல்லும் நேரம்….

      அவனும் அதையே சொல்லிக் கொண்டிருந்தான். அம்மு உனக்கு எதுவும் உடம்பு முடியலையா வித்தியாசமா தெரியுற என்று சொன்னான்….

இருவரும் சாதாரணமாக சில விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது சிவாமா உங்களுக்கான கிப்ட் என்னன்னு கேட்கவே இல்லையே என்று அவள் கேட்க  அதுதான் இன்னும் ஒரு வாரம் இருக்கே டா என்று அவன் சொன்னான்….

   அப்ப ஒரு வாரம் கழிச்சு தான் வேணுமா இப்ப வேண்டாமா என்றாள்….

   உனக்கு என் மேல கோபம் இல்லை என்பதே எனக்கு பெரிய கிப்ட் தங்கம் அதுமட்டுமில்லாம நீ நேர்ல வந்துட்டனா… அதை விட பெரிய கிப்ட் ஆயிடும்….  கிளம்பி வர்றியா…

       கிளம்பி வரலாம் ஆனா இப்ப முடியாது இன்னும் ஒரு மாசம் படிப்பு இருக்கே என்றவுடன் அப்போ ஒரு மாசத்துல வந்துருவியா என்று திரும்பவும் கேட்டான்…

முடியாது…. நான் இப்போ மூணு மாசம் லீவுல இருக்கேன் ஒரு மாச படிப்பை முடிஞ்சா ஒரு மாசம் லீவு கேன்சல் பண்ணிட்டு முடிச்சிடலாம்னு ஒரு ஐடியா ல இருக்கேன் ஆனா அது முடியுமான்னு தெரியல பார்க்கலாம் என்றாள்….

   ஏண்டா லீவ் போட்டு இருக்க ஆளும் ஒரு மாதிரி இருக்க எதுவும் உடம்பு முடியலையா…  என்று மறுபடியும் கேட்கவும் கொஞ்சம் கண்ணை மூடுங்க உங்ககிட்ட இப்ப உங்க கிப்ட்  பார்க்கலாம் என்றாள்….

  அவனும் சிரித்துக் கொண்டே சரி என்றபடி கண்ணை மூடவும்….  இவள் குழந்தைகளை அவனுக்கு தெரியும் படி சரியாக வைத்துக் கொண்டு வீடியோ காலுக்கு வந்து சிவாமா இப்ப கண்ணை திறந்து பாருங்க என்றாள்..

   கண்ணைத் திறந்து பார்த்தவனுக்கு முதலில் நம்பவே முடியவில்லை இரண்டும் பொம்மை போல் இருந்தது…  அப்போது அவன் கண் கலங்கி கண்ணீர் தேங்கி நிற்பதை இவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்….

   பின்பு அழக்கூடாது… நீங்க  ஆசைப்பட்டு என்று சொன்ன டூவின் பேபிஸ்… செய்ய குடுக்கல தானாவே கிடைச்சிருச்சு என்று சொல்லவும்…. அவனுக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை…..

  அவன் தன்  அழுகையை  கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் கேட்டான்…. ஏன் என்ட்ட  சொல்லல என்று கேட்கும்போது

      இல்ல நான் லண்டன் வரும்போது பார்டி டேஸ் தான் நான் செக் பண்ணல….  அங்க வச்சு எனக்கு தெரியவும் இல்லை… அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது ஆனால் குழந்தையை காரணங்காட்டி உங்க கோபத்தை குறைக்க எனக்கு பிடிக்கல… உங்க கோபம் தானாகவே குறையனும் நீங்க தானாகவே சரியாகும் நாளை  எதிர் பார்த்திட்டு இருந்தேன்…. ஆனால் அதே சூழ்நிலை என் படிப்பையும் முடிக்கணும்…  இப்பவும் ஆனா என்ன நீங்க கேட்ட மாதிரி ரெண்டும் பொண்ணு இல்ல ஒரு பையன் ஒரு பொண்ணு என்று சொல்லவும் அவன் ஆனந்தக் கண்ணீரோடு சிரித்துக் கொண்டே சொன்னான் எந்த குழந்தையா இருந்தா என்னடா நம்ம குழந்தை என்றான்….

   சிவாமா உன்கிட்ட கேட்காமலேயே நானே பெயர் வைத்து விட்டேன் உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே என்று கேட்கவும்….

      உன் இஷ்டம் தான் டா…  இது ஒன்னும் பெரிய விஷயம் கிடையாது.. நீ கரெக்டா தான் செய்வ…  என்ன பெயர் என்று கேட்கும்போது சொன்னாள் சமுத்திரா, சத்யா என்று…

ஏன் ஒரே மாதிரி வச்சுட்ட என்று கேட்கவும் சிவரஞ்சன் புள்ளைங்க அதே எழுத்தில்தான் பேர் ஆரம்பிக்கணும் அதனாலதான் ஓகேவா..  சிவாமா என்று கேட்டாள்….

நான் கவர்மெண்ட்ல பெர்மிஷன் வாங்கி வந்து விடுவேன் முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன் என்று அவன் சொல்லவும்… இல்லப்பா வேண்டாம் கஷ்டப்பட்டு  பண்ணாதீங்க வேஸ்ட் ஒன்னு பண்ணலாம்..  நான்  எவ்வளவு சீக்கிரம் வர முடியும் ன்னு பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்….

   அவனும் சரி என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே அவள் கேட்டால் உங்களுக்கு பாஸ்போர்ட் இருந்தா….  பாஸ்போர்ட் நம்பர் குடுங்க பேபிஸ் ரெண்டுக்கும் பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும்… ஒரு ஒன் மன்த் கழிச்சு தான் அப்ளை பண்ணுவேன் அப்படி பண்ணும்போது பேரன்ட்ஸ் பாஸ் போர்ட் நம்பர் கொடுக்கணும் தர்றீங்களா என்று கேட்டாள்…

     டீடைல்ஸ் எல்லாம் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னான் அதை தவிர குழந்தைகளின் பாஸ்போர்ட் சம்பந்தமாக சில டிடையில்ஸ் அவனைப் பற்றியும் தேவைப்பட்டதால் அதைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள் அவன் எல்லாவற்றையும்  ஸ்கேன் செய்து அவளுடைய மெயில் ஐடிக்கு அனுப்புவதாக சொல்லிக் கொண்டிருந்தான்…. அதன் பிறகு தினமும் குழந்தைகளை பார்க்க வீடியோ காலுக்கு வருவது வழக்கமாகிவிட்டது…. அந்த நேரத்தில் ஷியாமின் அம்மாவும் பேசுவார்…. இவளிடம் பேசத் தொடங்கிய பிறகு இருவரின் மன நிலையும் நன்றாக இருந்தால் குழந்தைகளும் அருமையாக உடல்நிலை தேறி வந்தனர்….

தோழிகளும் நண்பர்களும் தினமும் வீடியோக்கால்  வரும்போது சிவரஞ்சனை பார்த்து பேசுவது வழக்கமாகிவிட்டது… அனைவரும் அவனுடன் தோழமையும் நட்பும் பாராட்டியதோடு உரிமையும் பாராட்டி கொண்டிருந்தனர் அண்ணன் என்று பெண்கள் அழைக்க அத்தான் என்று நண்பர்கள் அழைக்க மிக சந்தோஷமாக உணர்ந்தான் சிவரஞ்சன்….

   அவள் இந்தியா வரும் நாளுக்காக காத்திருக்க தொடங்கினான்…. வேலை பளு ஒரு புறம் இருந்தாலும்… குழந்தைகளின் சிரிப்பும்… அவளது மலர்ந்த முகமும் அவனை உயிர்ப்புடன் இருக்க வைத்தது…. அவளை பிரிந்து இருக்கும் போது இருந்த வெறுமை சற்றே குறைந்திருப்பதாக உணர்ந்தான்….

  அப்படித்தான் ஒரு முறை தோழிகள் இவள் சிவரஞ்சனிடம் பேசிவிட்டு போனை வைக்கவும்… ரீனாவும் சுமியும் இவளை பிடித்துக் கொண்டார்கள் எப்படிடி ரெண்டு பேரும் இவ்வளவு அன்பா  இருந்துட்டு இத்தனை நாள் எப்படி பேசாமல் இருந்தீங்க என்று கேட்கவும்… ஷியாமின் அம்மாவும் அங்கே தான் இருந்தார்….

   எனக்கு அங்கிருந்து கிளம்பி வரும்போது கஷ்டமாதான் இருந்துச்சு….  இங்க வந்து பேபி கன்ஃபார்ம் ஆனது தெரிஞ்சதுக்கு அப்புறம் நான் தனியா இல்ல என்  குழந்தை என் கூட இருக்குது அப்படிங்கற பீல் ல இருந்தேன்…. அப்புறம்  டூவின் பேபி அப்படின்னு தெரிஞ்ச உடனே இன்னும் ஹாப்பியா இருந்துச்சு…. என் சிவா ஆசைப்பட்டு முதன்முதலில்  சொன்னது அது தான்…. ஏன்னா அவங்களுக்கு குழந்தைங்கன்னா அவ்வளவு பிடிக்கும் அடிக்கடி அவங்களுக்குள்ள உள்ள ஒரு பீல்…  தனக்கு யாரும் இல்ல அப்படிங்கற  அந்த எண்ணத்தை போகனும் அதுக்காக நான் யோசிப்பேன்….  அது நம்ம கையில இல்ல இல்லையா அப்படினு யோசிப்பேன்….  ஆனா பேபிஸ் பற்றி தெரியும் போது ரொம்ப ஹாப்பியா இருந்தது… என் சிவாவோட முதல் ஆசையே எனக்கு நிறைவேற்ற சான்ஸ் கிடைச்சிருக்கு அப்படின்னு அதனால் தான் தைரியமாக இருந்தேன்….  அப்போ என்ன நினைச்சிருந்தேன் ன்னா… அவங்க கோபம் குறைந்து அவங்களா போன் பண்ற வரைக்கும் நான் போக கூடாது அப்படிங்கிற மாதிரி நினைச்சிருந்தேன்…. ஆனா பேபிஸ் உள்ள வளர வளர எனக்குள்ள ஒரு எண்ணம் இந்த பேபிஸ் எனக்குள்  இருக்கும் போது தான் அவங்களுக்கு அந்த சந்தோஷம்  கிடைக்கல…. சிவா அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போயிருச்சு….  சோ குழந்தைகள் வளர ஒவ்வொரு ஸ்டேஜ்லும் சிவா பக்கத்தில் இருக்கணும் அப்படிங்கிற பீல் வந்துச்சு… அப்ப முடிவு பண்ணினேன் பேபி பிறந்த உடனே ஸ்டடிஸ் ஸ  எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமா முடிச்சுட்டு உடனே போயிரணும் அப்படின்னு…..

மூச்சுக்கு முன்னூறு தடவை சிவா சிவான்னு சொல்லுற…. எப்படி அவங்க இல்லாம இத்தனை நாள் இருந்த நெனச்சுப் பார்க்க முடியல என்னால…  அப்ப மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டு புதைத்துவிட்டு கஷ்டத்தோட இருந்தியா….

    கண்டிப்பா இல்ல அவங்க நினைவுகளோடு இருந்தேன் அவ்வளவுதான்….  ஏன் இப்ப நம்ம ஊர்லயே பொண்ணுங்க எல்லாம் எடுத்துக்கோயேன் எத்தனையோ பொண்ணுங்க கல்யாணம் முடிஞ்ச உடனே ஹஸ்பண்ட் அ ஃபாரின் அனுப்பிட்டு தனிமையில் எத்தனை பேர் இருக்காங்க அவங்க எல்லாம் என்ன பண்றாங்க.. ஹஸ்பண்ட் மேல பாசத்தோட இருப்பாங்க….  அவங்க நினைவுகளோடு வாழ்ந்துட்டு அவங்க கிட்ட போன்ல பேசிட்டு போன்லயே பாதி நாள் அவங்க வாழ்க்கை போயிருது…. எதுக்காக அவங்க குழந்தைகளுக்காக., அவங்க குடும்பத்துக்காக.,அப்படித்தான் இதுவும்… என்ன பொருத்த வரை சிவா என்னோட ஃபர்ஸ்ட் குழந்தை…  அவரோட சந்தோஷம் எனக்கு முக்கியம் அவருடைய சின்ன சின்ன கோபங்கள் கூட நியாயமானதா இருந்துச்சுன்னா அதை ஏற்றுக்கொள்ள அளவுக்கு நானும் கரெக்டா இருக்கணும்னு நினைக்கிறேன்…. ஆக்சுவலா அவங்க அவங்களைப் பத்தின அத்தனை விஷயத்தையும்  சொல்லும்போது நான் அட்லீஸ்ட் என் படிப்பு  இதை மட்டுமாவது நான் சொல்லி இருக்கணும் இல்லையா…. என்னோட ஃப்ரெண்ட்ஸ் பற்றி மட்டுமாவது சொல்லி இருக்கணும் இல்லையா…  சொல்லாமல் இருந்தது என் தப்பு தானே….      நான் தான் எதையுமே அப்ப சொல்லலையே என்னோட தப்புக்கு என்னோட மனசுல இது நமக்கான பனிஷ்மென்ட் அப்படின்னு ஏத்துக்கிட்டேன்….

   அந்த அண்ணன் எப்படிடி இருந்தாரு நீ குழந்தைகளை சொல்ற…. அண்ணா என்ன யோசிச்சிட்டு இருந்திருப்பார் என்று நினைக்கிற….

            கண்டிப்பா அவர் என்ன யோசித்திருப்பார்… முதல்ல கோபத்தில் தள்ளி இருந்தாலும் அப்புறம் அவர் மனசுல என்ன தேடி இருக்கும்…. எனக்கு தெரியும்  கண்டிப்பா தேடியிருப்பாரு அவரோட பீல் எப்படி இருந்திருக்கும்…   படிக்கிற பிள்ளை  படிப்பை கெடுத்திட்டோம் அப்படிங்கிற ஒரு எண்ணம் இருந்திருக்கும்….  இன்னொன்னு ஏற்கனவே அவர் என்ன சின்ன பொண்ணு அழகா இருக்கேன்னு சொல்லிட்டே இருப்பார்…. எங்கம்மா வேற லூசு மாதிரி வாய் விட்டாங்களா அதில் அவர் இன்னும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகி இருப்பாரு சோ அவ படிப்பு முடியட்டும் அவர் கேரியர் அப்படிங்கற மாதிரி யோசிச்சுப்பாரு….  சம்திங் வேற மாதிரி கூட யோசிச்சிருப்பாரு  அவர் மைண்ட் அப்படித்தான்…. அவரோட மைண்ட் செட் அப்படித்தான்…. அவருக்கு வந்து என்னோட ஹேப்பினஸ்  ரொம்ப முக்கியம் அப்படின்னு எதிர்பார்ப்பாரு…

ஒவ்வொரு விஷயத்தையும் நான் சந்தோஷமா இருக்கிறனா ன்னு ஒவ்வொரு நாளும் செக் பண்ற அளவுக்கு என் முகம் பார்ப்பாரு….. ரொம்ப டல்லா இருந்தா கூட ஏன் எதுக்குன்னு ஆயிரத்தெட்டு கொஸ்டின் வரும் அவர் கூட இருக்கிற டைம்ல…ஏன் சாதாரண லேடிஸ் பிரபலத்துக்கு எவ்வளவோ டென்ஷன் ஆனாங்க தெரியுமா….

    மேரேஜ் ஆன அந்த பர்ஸ்ட் மன்த் லேடிஸ் ப்ராப்ளம்  இருக்கும்போது தேவையானதை வாங்குவதற்கு நான் டிரைவரை கூட்டிட்டு போய் நான் தான் மெடிக்கல் ஸ்டோர்ல வாங்கிட்டு வந்தேன்… எனக்கு அவங்ககிட்ட சொல்றதுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு… அப்புறம் அத பாத்த உடனே புரிஞ்சிக்கிட்டாங்க அவங்களுக்கு  முகம் லைட்ட டல்லானாலும் உடம்புக்கு ஏதும் பண்ணுதா… டாக்டர் ட்ட போலாமான்னு கேட்பாங்க எனக்கு சிரிப்பா வரும் ஆனா அவங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது ன்னு தெரியாது… அதுக்கு அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சொல்லி சொல்லி புரிய வச்சேன்…. அதுக்கு அப்புறமும்  அவங்க பயப்பட தான் செய்வாங்க எனக்கு உண்மையிலேயே கஷ்டமா இருக்கும்…. அப்ப அவங்க கவனிக்கிறது பார்த்தேனா சர்வன்ட்  ட்ட அவ்ளோ ஆர்டர் போட்டு போவாங்க ஜூஸ் போட்டு கொடுங்க பால் கலந்து கொடுங்க ன்னு…  சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லுவாங்க… நான் தான் அவங்களை சத்தம் போடுவேன் ஒன்னும் இல்லை இது எல்லாம் நார்மல் நீங்க போங்கன்னு சொன்னாலும் கேட்க மாட்டாங்க… எல்லாமே அவங்களும் படித்திருப்பாங்க… இந்த மாதிரி  பொசிஷனுக்கு வருவதற்கு அவங்க எல்லாமே படிச்சிருக்கணுமே எக்ஸாம் க்கு….  ஆனாலும் அவங்களுக்குள்ள ஒரு பயம்…

       என்னோட கேரியரை மட்டும்தான் யோசித்திருப்பாங்க  நம்மளால அவளோட கேரியர் போயிடக்கூடாது அப்படிங்கிறதுல ரொம்ப யோசிப்பாங்க….  உனக்குனு ஒரு தனித்துவம் இருக்கணும் அப்படின்னு அடிக்கடி சொல்லுவாங்க அந்த லாஸ்ட்  வீட்டில் பிரச்சினை வரும்போது கூட அவங்க சொன்னது உன்னோட தனித்துவத்தை என்னால நீ இழந்ததா இருக்க கூடாது என்னால உனக்கு தனித்துவம் கூடினதா  தான் இருக்கணுமே  ஒழியே குறைந்ததா…  எப்பவுமே இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க உனக்கு என்ன விட உன் படிப்பு தான் இம்போர்ட்டண்ட் அப்படின்னு சொல்லுவாங்க சோ அவங்க அப்படித்தான் யோசிச்சிட்டு இருப்பாங்க இத்தனை நாளா….

எவனோ ஒருவன் வாசிக்கிறான்

இருட்டில் இருந்து நான்

யாசிக்கிறேன்

தவம்போல் இருந்து

யோசிக்கிறேன்

அதைத் தவணை

முறையில் நேசிக்கிறேன்

கேட்டுக் கேட்டு நான்

கிறங்குகிறேன்

கேட்பதை அவனோ

அறியவில்லை

காட்டு மூங்கிலின்

காதுக்குள்ளேஅவன்

ஊதும் ரகசியம் புரியவில்லை”

சிவரஞ்சன் இது போன்ற நினைவுகளோடு… இதை தான் நினைத்துக் கொண்டு இருந்திருப்பாள் என்று அவனும் தான் அவள் படிப்புக்காகவே அவள் படிப்பு முடியும் வரை அவளை தொந்தரவு செய்யக் கூடாது..  என்பதற்காகவே அவளை தேடுவதை விரைவு படுத்தாமல் காத்திருந்ததை யோசித்துக் கொண்டிருந்தான்…..  அவளைப் பார்க்கும் அந்த தருணம் தான் தன் வாழ்வின் மறக்க முடியாத தருணமாக இருக்கும் என்று நினைவுகளோடு அவளுக்காகவும் குழந்தைகளின் வருகைக்காக காத்திருந்தான்….

 “இறக்கை தேடும் மனது

  இறக்கை இன்றி

 மிதக்கிறது…..

காதல் பறக்க வைக்கிறது….

உன் நினைவுகளின்

பின்னால்…..

உடல் இங்கிருக்க

உயிர் மட்டும் உன்னிடம்

உணர்ந்தாயா…

உயிரினிலே கலந்தவளே….”

Advertisement