த்தியாயம்6

மறக்க முடியாத நினைவுகளே காதல்….

அன்று காலை அலாரம் அடிக்கும் முன் எழுந்து அலாரத்தை அணைத்த இன்பா, வேக வேகமாக கிளம்பினான்.

இன்பாவின் அவசரத்திற்கு காரணம் மகா, அவள் அன்று தான் வேலைக்கு சேர போகிறாள், அவளை பார்ப்பதற்கே இந்த அவசரம்.

எப்போதும் கிளம்பும் நேரத்திற்கு முன்பே கிளம்பியவன், எப்போதும் போல பைக் ஹெல்மெட்டை எடுத்தவனுக்கு திடீரென்று தலையில் உதித்த யோசனையில் அந்த ஹெல்மெட்டை கீழே வைத்து விட்டான்.

“மகாக்கு வீடு கிட்ட தான? அதுவும் இரண்டு இல்ல மூணு ஸ்டாப்பிங் தான். அன்னைக்கு கூட அவுங்க சித்தப்பா பஸ்ல தான அவ வருவான்னு சொன்னாரு.

அப்போ நான் பஸ்ல இப்போ போனா ரிட்டர்ன் வரும் போது மகா கூட பஸ்ல வரலாம். என்ன… நமக்கு முன்னயே அவ இறங்கிடுவா. பரவாயில்ல மூனு ஸ்டாப்பிங் கூட வருவாள… “

என்று யோசித்தவன் விசில் அடித்த படி கையில் இருந்த பைக் கீ செயினை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.

“இதோ வந்துட்டேன் தங்கமே…” என்றபடி பஸ் ஸ்டாப்பை நோக்கி சென்றான்.

இன்பா நினைத்தது என்னவோ வீட்டிற்கு திரும்பி வரும் போது மகா உடன் ஒன்றாக வருவதை பற்றி மட்டும் தான். ஆனால் நடந்ததோ வேறு.

அவனுக்கு பிடித்தமானவள் அவன் மடியில், அதில் நெஞ்சில் சாறல் வீச மகாவை பார்த்து சிரித்த படியே எழுந்து நின்றவன்

இவன் மேலே விழுந்ததை நினைத்து மகா வெட்கி இவனை பார்த்து தயங்கி நிற்பதை பார்த்து விட்டு.

அவள் அருகே செல்லவும் அதில் பயந்து மகா மீண்டும் கீழே விழ போக, அதற்குள் அவள் கையை பிடித்து இழுத்து பிடித்திருந்தான் இன்பா.

அதில் பதட்டமான மகா இன்பாவை பார்க்கவும். அவன், அவள் அருகே சென்று மிக மெல்லிய குரலில் “போலாமா தங்கமே..” என்று கேட்கவும் அதில் அதிர்ந்த மகா.

“என்ன போலாமா “ என்று அவனை பார்க்க இன்பா அவளின் அதிர்ச்சியில் கீழ் உதட்டை கடித்து சிரித்த படி

“ம்ம்ம்…. ஆபிஸ்கு தான். ஸ்டாப்பிங் வந்துருச்சி மகா எந்த உலகத்துல மிதந்துட்டு இருக்கிங்க “

என்று வெளியே கையை காட்டவும் ஸ்டாப்பிங்கை பார்த்து விட்டு,

“அச்சோ…” என்று வேகமாக கீழே இறங்கி நிற்க அவள் பின்னாலயே இன்பாவும் இறங்கினான்.

“அப்பறம் மகா பஸ்ட் டே ஆபிஸ்…. ஆல் த பெஸ்ட். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுங்க “ என்று வாழ்தியவனை புரியாமல் பார்த்து

“அ… தேங்க்ஸ்…” என்று தடுமாறி நின்றவளை பார்த்து கண்களை சிமிட்டி சிரித்தவன்,

“மகா… பஸ்ட் ஹெச்.ஆர் கிட்ட போய் ஃபார்மாலிட்டிஸ் முடிங்க. அவுங்களே சொல்லுவாங்க உங்கள எங்க அசைன் பண்ணிருக்காங்கன்னு.

ஹெச்.ஆர் பிளேஸ் அங்க இருக்கு மகா. ஓகே எனக்கு டைம் ஆச்சி நான் போறேன் முடிஞ்சா பாக்கலாம் “

என்று சொல்லி நடந்து அந்த பில்டிங் உள்ளே சென்றவனை வியந்து தான் பார்த்தாள்.

“என்ன இவன் தங்கம்னு கூப்பிட்டு அடுத்த நிமிஷமே அப்படி ஒன்னு நடக்காத மாதிரி பேசிட்டு போறான். யாருடா நீ…. என்ன இப்படி புலம்ப வைக்குற “

என்று புலம்பிய படியே அவன் சொன்ன இடத்துக்கு சென்றாள்.

இங்கு அவனின் இடத்தில் வந்து அமர்ந்த இன்பா சிரித்த படியே அங்கே இருந்து கீ போர்டில் டைப் செய்து கொண்டிருக்க

“கம்ப்யூட்டர ஆன் பண்ணாம என்ன டா பண்ற…” என்ற மகேஷின் சத்தத்தில் அவனை திரும்பி பார்த்த இன்பா

“மாமா…..” என்று அவன் கையை பிடித்து சுற்ற விட அவன் கால் இடறி தோப் என்று கீழே விழுந்து விட்டான்.

விழுந்த வேகத்தில் மகேஷ் இடுப்பை பிடித்து கொண்டு

“ அம்மா… என் இடுப்ப உடைச்சிட்டானே…” என்று வலியில் கத்துக்கொண்டு இருக்க

அதை எதையும் கண்டுகொள்ளாத இன்பா சேரில் அமர்ந்தபடி சேரை ஆட்டிக்கொண்டும் அவ்வப்போது வெட்கப்பட்டு தலையை கோதி சிரித்து கொண்டும் இருந்தவனை பார்த்த மகேஷ்

“ அட பாவமே… என்ன ஆச்சிடா… நட்டு கிட்டு கலண்டுருச்சா டா உனக்கு “ என்று அவன் கஷ்டப்பட்டு எழுந்து இன்பா முகத்தை திருப்பி பார்க்க

”மாமா… என் மகா ….. என் மேலேயே விழுந்துட்டா டா “ என்று சொல்லிவிட்டு கைகளால் கண்களை மூடவும்

“அட டெல்லி எருமை இதுக்கா இப்படி குறளி வித்தை காமிக்குற..” என்று மகேஷ் பேசியது அவன் காதில் விழுந்தாலும் அவன் எங்கே இவனை பார்த்தான். அவன் தான் பஸ்ஸிலேயே உறைந்து விட்டானே.

என்னும் மகா அவன் மடியில் அமர்ந்து இருப்பது போலவே தோன்றவும் இன்பா இன்பாலோகத்திற்கே சென்று விட்டான்.

அடிக்கடி முடியை தொட்டு பார்பதும் கண்களை மூடி சிரிப்பதுமாக இன்பா இருக்க

மகேஷ் அவனை போட்டு உலுக்கி ஆட்டி என்று விதவிதமாக முயற்சி செய்து டயர்டாகி

“டேய் நான் சும்மாவே வேலை செய்ய மாட்டான்டா ….நீ வேற இன்னைக்கு என்ன காலையிலேயே இப்படி டயர்ட் ஆக்கிட்ட. இனிமே போய் என்னன்னு வேலை செய்ய போறேனோ “ என்று புலம்பிய படி சென்று விட்டான்.

அவன் போன பிறகும் இன்பா அப்படியே தான் சிரித்த படி இருந்தான். நேற்று தான் மகா இவன் டீமுக்கு வர போவதாக தகவல் கிடைத்தது அதிலிருந்து இன்பா இப்படி தான் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

சரியாக அரை மணி நேரம் கழித்து எச். ஆர் மகாவை இன்பா வின் டீமுக்கு அழைத்து  வர, மகா இன்பாவை அங்கு பார்த்து மீண்டும் அதிர்ச்சியில்

“ என்ன இங்கயா…” என்று சத்தமாக கேட்டு விட அங்கிருந்த அனைவரும் இவளை வினோதமாக பார்த்தனர்.

அவர்களின் பார்வையில் முகத்தை இயல்பாக வைத்து கொண்டு “ இல்ல இந்த பில்டிங்கான்னு கேட்க வந்தேன் “ என்று சிரித்து சமாளிக்க, எச். ஆர் சாலினி

“ இவுங்க இன்பா….இவுங்க டீம்ல தான் நீங்க இருக்க போறிங்க. ஏதாவது இஸ்யூனா என்ன பின் பண்ணுங்க.. ஓகே. ஆல் த பெஸ்ட் “ என்று சொல்லிவிட்டு இன்பாவிடம் சென்று விட்டாள்.

இன்பா இன்டர்னல் ஆடிட்டர் இவனுக்கு கீழே மூன்று டீம்கள் இருக்கின்றனர் கம்பெனியில் இருக்கும் பணம் சம்மந்த பட்ட அனைத்து வேலையும் இவனை தாண்டி தான் செல்லும்.

இந்த மூன்று டீமில் ஒரு டீமில் தான் மகா ஜாயின் செய்திருக்கிறாள்.

சாலினியிடம் பேசிவிட்டு மகாவிடம் வந்த இன்பா அவளை அழைத்து கொண்டு அவன் டீமிடம் இன்ட்ரோ செய்து வைத்து விட்டு

“அயன்…. மகா பண்ற வொர்க்க நீங்க தான் செக் பண்ணனும். அண்ட் அவ பண்ற எல்லாத்தையும் டே ஓட எண்டு எனக்கு மெயில் பண்ணிருங்க “ என்று சொல்லி மகா புறம் திரும்பி

“ எதுவா இருந்தாலும் அயன் கிட்ட கேளுங்க அவன் ஹெல்ப் பண்ணுவான். முடிஞ்ச அளவு எல்லாம் பாஸ்ட்டா கத்துக்க பாருங்க. அண்ட் வெல்கம் டு அவர் டீம் ஆல் த பெஸ்ட் “ என்று சிரித்தவனை

ஆ… என்றுதான் மகாவுக்கு பார்க்கத் தோன்றியது. “நம்மளைப் பார்க்கும் போது வாயைப் பிளந்தவனா இவன்..”

என்று அதிர்ந்து போயிருந்தவளை அயன்தான் களைத்து அவளுடைய இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

அன்று முழுவதும் இன்பா இவளைப் பார்க்கவே இல்லை. இவள் பாட்டுக்கு இவள் வேலையைப் பார்க்க, இன்பா அவன் வேலையில் மூழ்கி இருந்தான்.

சொல்லப்போனால், மகா தான் அடிக்கடி இவளை அவன் பார்க்கிறானா என்று திரும்பிப் பார்த்தாள். ஆனால், அவன் உஷாராக இது இப்படித்தான் நடக்கும் என்று யூகித்தவனாக அவளைப் அவனை பார்க்க வைத்து ஆட்டம் காட்டிக்கொண்டிருந்தான்.

அப்படியே அன்றைய வேலை அம்சமாக முடிந்துவிட, மகா அனைவரிடமும் சொல்லிக்கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கிச் சென்றாள். அவள் பின்னாலேயே இன்பாவும் செல்ல

அப்போது அயன் பைக்கில் இவர்களை கிராஸ் செய்தவன், இன்பாவைப் பார்த்துவிட்டு பைக்கை நிறுத்தி

“இன்பா….. எங்க உங்க பைக்?” என்றவனின் சத்தத்தில்தான் மகா

“என்னது இன்பாவா..” என்று திரும்பிப் பார்த்தாள்.

“பைக் ரிப்பேர் அயன். சரியாகி வர வரை பஸ்தான்” என்று சிரித்தவனை

“அப்படியா? நான் வேணா டிராப் பண்ணவா இன்பா?” என்று அயன் கேட்டு நிற்க

“அட இவன் வேற நேரம் தெரியாம..” என்று முனங்கியவன்

“அச்சோ நோ அயன், ஐ கேன் மேனேஜ்”

என்று அவனை அனுப்பி வைத்துவிட்டு திரும்ப அங்கே மகா இவனைப் பார்த்தும் பார்க்காதது போல நின்று கொண்டிருந்தாள்.

“என்னது பைக் ரீப்பேரா…. எனக்கு டவுட்டா இருக்கே பைக் ரீபேர்னா அதோட கீய மட்டும் வச்சிருக்கான். எதோ இடிக்கிதே…” என்று மகா தீவிர யோசனையில் இருக்க

அவளைப் பார்த்துவிட்டு அவள் அருகே சென்று நின்ற இன்பா “அப்புறம் மகா, வொர்க் எப்படி போச்சு?”

என்று எதார்த்தமாகப் பேசவும், மகாவும் “நல்லா போச்சு சார்…” என்று வாய் மட்டும் சிரிக்க, கண்கள் இவனை சந்தேகமாக அளக்க தொடங்கியது.

இன்பாவும் அவள் கண்களை படிக்க முயன்றபடி  “அட மகா சார்லாம் வேணாம்” என்று சொல்லப் போனவன் மகாவின் கண்ணில் இருந்த எதையோ படித்தவனாக

“அ…. மகா… உங்க வீடு பக்கம் தான?” என்று ஏதோ சொல்லி சமாளிக்கவும் மகா

“தப்பிச்சிட்டான். சார்ன்னு கூப்பிடாதன்னு நீ சொல்லிருக்கனும். அண்ணா ன்னு கூப்பிட்டு உன் ஹாட்ட வெடிக்க வச்சிருப்பன். ஜஸ்ட் மிஸ்” என்று மகா நினைக்க

“ஜஸ்ட் மிஸ்ஸா மகா?” என்று இவளைப் படித்தது போல இன்பா பேசவும், மகா

“ஹா… என்ன என்ன மிஸ் ..” என்று முழித்து நிற்க

“அட மகா ரிலாக்ஸ் வெய் டென்ஷன். நான் பஸ்ஸைத்தான் ஜஸ்ட் மிஸ்ஸான்னு சொன்ன”

என்று குறும்பாகப் பார்த்தவனின் பார்வையை பார்க்க முடியாமல் திரும்ப, அப்போது பார்த்து சரியாக ஒரு பஸ் கூட்டமாக வந்து நின்றது.

கூட்டம் இல்லாத பஸ்ஸில் செல்லலாம் தான் நின்றால் ஆனால், இப்போதைக்கு இன்பா விட்டுச் சென்றாலே போதும் என்று தோன்ற, வேறு எதுவும் யோசிக்காமல் அந்த பஸ்ஸில் ஏறிவிட்டாள்.

திடீரென்று பஸ்ஸில் மகா ஏறுவதைப் பார்த்தவன் அவள் பின்னாலேயே ஏறினான்.

மகா பஸ்ஸின் கூட்டத்தில் எங்கே நிற்பது என்று தெரியாமல் பின்னே சென்று நிற்க, அவள் அருகிலேயே இன்பாவும் வந்து நின்றான்.

“ஏன் மகா இவ்வளவு கூட்டத்துல ஏறுனீங்க? வேற பஸ்ல போயிருக்கலாம்ல” என்று இன்பா கேட்டதற்கு மகா அவனைப் பார்த்து முறைத்து நிற்க

“என்ன தப்பா கேட்டுடன்னு இவ இப்போ இப்படி முறைக்குறா “

என்று இன்பா யோசிக்கும் போதே அடுத்த பஸ் ஸ்டாப்பில் இருந்து மேலும் ஆட்கள் ஏற மகா இன்பா இருவரும் அந்த கூட்டத்தில் சக்கையாக நசுங்கி வீட்டுக்கு போய் சேர்ந்தனர்.

என்ன தான் இன்பா மகாவை முழுங்குவது போல பார்த்தாலும் ஆபிஸில் அவை எதையும் காட்ட மாட்டான். மிஞ்சி போனால் மதியம் அவள் உண்ணும் போதும் பார்ப்பான். பின் அவளுடன் பஸ்ஸில் செல்லும் போது பார்த்து பேச முயல்வதோடு சரி வேறு எதுவும் செய்ய மாட்டான்.

என்ன… இவன் மகாவை சைட் அடிப்பது இவன் டீம் முழுக்க தெரிந்தாலும் அனைவரின் முன்னும் கர்மமே கண்ணாக தான் இருப்பான்.

ஆரம்பத்தில் மகாவும் “இவன் வந்து லவ் சொல்லட்டும் ஒரு வழி ஆக்கிறன் …”என்று தினமும் காத்திருந்தவள் இப்பொதெல்லாம்

“இவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான்ப்பா. சைட்டை தாண்டி வர மாட்டான் …”என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தான்.

பாவம் மகா இங்கு புலி பதுங்குவது பாய என்று புரியாமல் புலியை பூனையாகவே பார்த்து கொண்டிருந்தாள் மகா.

அப்படியே மகா வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகியிருக்க அந்த கம்பெனியின் ட்வென்டி ஃபிஃப்த் அனுவர்சரி செலெபிரெசன் அழைப்பிதல் அனைவருக்கும் வந்திருந்தது.

அதுக்கு இரண்டு பேரை அழைத்து வரலாம் என்று போட்டிருக்க அதை படித்து பார்த்த மகா முகம் சோர்ந்து போக கணினியை அனைத்து விட்டு மதிய உணவு உண்ண சென்றிருந்தாள்.

அங்கே மகா உடன் அயன், அஞ்சலி, ரமேஷ் என்று அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மகாவின் சோக முகத்தை தூரத்தில் இருந்து பார்த்த இன்பா அவள் எதிரே இருந்த சேரில் அமர்ந்து

“என்ன ஆச்சு…” என்று அவளை பார்க்கவும், அங்கிருந்த அனைவரும் மனதுக்குள் சிரித்த படி

“என்ன ஆச்சு…. ஒன்னும் இல்லையே இன்பா “ என்று அஞ்சலியின் கிண்டல் குரள் காதில் விழுந்தால் தான் அதிசயம் என்பது போல இன்பா மகாவையே பார்க்கவும் கடுப்பான மகா

“ஒன்னும் இல்ல…. எல்லா கம்பெனி அனுவர்சரி பார்ட்டிக்கு வர சொல்றாங்க நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன் “ என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றவளை இவன் புரியாமல் பார்க்க அயன்

“அது அவங்க சிஸ்டர் மூனு பேரையும் கூட்டிட்டு வரனும் னு ஆசையா இருக்கான். ஆனா பாஸ் ரெண்டு பேருக்கு தான அலோ பண்ணும் அதான் வரலன்னு சொல்றாங்க “ என்று சொல்லிவிட்டு அவனும் சென்று விட இன்பா

“எது வருதோ இல்லையோ அந்த கோபம் மட்டும் தாராளமா வருது “ என்று வாய்க்குள் முனுமுனுத்த படி சென்றான்.

அன்றைய மாலை, வேலை முடிந்து மகாவுடன் இன்பாவும் ஒன்றாக பஸ் ஸ்டாப் செல்ல அவர்களை கடந்து சென்ற அயன்

 “ ஆறு மாசமா பைக் சரியாது…..ம்ம்ம்…. ம்ம்ம்… நடக்கட்டும்….. நடக்கட்டும்..” என்று சொல்லி செல்ல மகா அதை கேட்டு இன்பாவை விட்டு தள்ளி வேகமாக நடந்து சென்றாள்.

அதில் இன்பா “ இவனுங்க வேற உசுப்பேத்தி விட்டுட்டு…… “ என்று அவள் பின்னே வேகமாக சென்றான்.

மகா பஸ் ஸ்டாப்பை அடையவும் ஒரு பஸ் காலியாக வர அதில் வேகமாக ஏறியவள்

அந்த பஸ்ஸில் கடைசி சீட் முழுக்க காலியாக இருக்க அங்கே சென்று ஜன்னல் ஓரம் சென்று அமர்ந்து விட்டாள்.

மகா பஸ்ஸில் ஏறியதை பார்த்து ரன்னிங்கில் இன்பாவும் ஏறிவிட்டான். ஏறியவன் மகாவை பார்த்து விட்டு இருவருக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துகொண்டு அவள் அருகே இடைவெளி விட்டு அமர்ந்தான்.

இன்பா அருகில் அமரவும் மகா அவள் ஹேண்ட்பேக்கை இடையே வைத்து விட்டு ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பி கொள்ளவும்

“ஹா… ரொம்ப தான்” என்று முனங்கியவன்

“மகா ….” என்று அழைக்க அவள் திரும்புவேனா என்று அமர்ந்திருந்தாள். அதில் பல்லை கடித்த இன்பா

“ஹலோ மகா.. இந்தாங்க உங்க டிக்கெட்டு..” என்று சத்தமாக சொன்னவன்

“ எதோ அவுங்க அப்பா வீட்டு பஸ் மாதிரி ஏறி உக்காந்த போதும்மா…. டிக்கெட் எடுக்கவேனா “ என்று அவன் வாய்க்குள் முனங்கியது அவளுக்கு தெளிவாக கேட்டு விட அவள் பையை திறந்து டிக்கெட் கான காசை எடுத்து எழுந்து டிக்கெட் எடுக்க போகவும்

“ப்ச்… மகா ….” என்று அவளிடம் இருந்த காசை பிடுங்கியவன் அவள் டிக்கெட்டை அவள் கையில் திணித்திருந்தான்.

“ ரொம்ப தான் கோபம் வருது. தெரிஞ்சவன், மகா ன்னு கூப்பிட்டா என்னன்னு அவது திரும்பி பார்க்க வேணா அதான் கோபத்துல எதோ சொன்ன “ என்று மீண்டும் அவன் முனங்கவும் மகா

“என்ன சார் இப்போ உங்களுக்கு “ என்று அவன் பக்கம் திரும்பி கோபத்தில் அமர

“அப்பா திரும்பிட்டா…” என்று சந்தோஷமான இன்பா

“நீ அன்வர்சரிக்கு கண்டிப்பா வரணும் மகா… ஓகே “ என்று கட்டளையாக சொன்னவனை முறைத்த மகா அப்படியே அவனை பஸ்ஸில் இருந்து உருட்டி விட்டாள் என்ன என்று தோன்றியது.