“ஓ… ஐ சீ… “ என்று அவளை நன்றாக பார்த்து விட்டு இன்பா புறம் திரும்பி அவனை ஒரு முறை மேலிருந்து அளந்தவன்
“ரொம்ப கஷ்டம் தான்…” என்று வாய்க்குள் பேசியவன்
“யாரு மாமா தெரிஞ்ச பொண்ணா? இல்ல தெரிஞ்சிக்க வேண்டிய பொண்ணா …” என்று அவன் இழுத்து நிறுத்தவும், இன்பா இவனை கண்டு கொள்ளாமல் மகாவை நோக்கி செல்லவும் சரியாக இருந்தது.
“இவன… பொண்ண பாத்ததும் எப்படி கழட்டி விட்டு போறான் பாரு “ என்று அங்கே என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
அங்கே சீனி மகாவுக்கு அறிவுரையை மழையாக பொழிந்து கொண்டு இருந்தார்.
“உள்ள இன்டர்வியூ முடிச்சதும் எனக்கு ஒரு கால் பண்ணு ம்மா, நான் வண்டி எடுத்துட்டு வந்திடுறேன். வேற எங்கயும் போகாத மகா “
“ம்ம்ம் …சித்தப்பா” என்று மகா தலையை ஆட்டவும் அவள் அருகே இன்பா வந்து நின்றான்.
இன்பாவை தலையை நிமிர்த்தி பார்த்த மகா
“யாருடா இது ? பனை மரத்துல பாதி சைஸ் இருக்கான், இவன பெத்தாங்களா இல்ல தண்ணி ஊத்தி வளத்தாங்களா “ என்ற யோசனையில் அவனை லேசாக தலையை சாய்த்து கண்கள் சுருக்கி அவளை அறியாமல் அவனை பார்க்க
அந்த பார்வையில் சுயம் இழந்து அவள் அருகே செல்ல போனவனை சீனியின் குரலே கலைத்தது, அதில் சுதாரித்து அவர் பக்கம் திரும்பியவன்
“கொஞ்ச நேரத்துல என்ன பண்ண பார்த்த இன்பா… என்னடா நீ இவ்வளவு வீக்கா இருக்க பீ ஸ்டேடி…” என்று மனதில் பேசியபடி மகா பக்கம் திரும்பவே கூடாது என்று முடிவோடு சீனியுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
மகாவோ இன்பாவின் நொடி நேர தடுமாற்றத்தை கண்டுகொண்டவளாக “என்ன இது இப்படி பாக்குறாரு….” என்று அந்த பார்வையை நினைவில் ஓட்டி பார்த்து விட்டு தலையை உலுக்கியவள்
“நோ… மகா வொர்க் காக வந்திருக்க அதை பத்தி மட்டும் யோசி …” என்று அவன் பக்கம் பார்வையை போக விடாமல் நின்று கொண்டாள்.
பின் உள்ளே இருந்து மகாவை அழைக்கவும் அவள் சென்று விட்டாள்.
“தம்பி எப்போ இந்த இன்டர்வியூ முடியும் தம்பி “ என்று சீனி கேட்கவும்
“அது ஒரு மூனு ரவுண்ட் இருக்கு ங்க முடிய ஒரு டூ ஹவர்ஸ் ஆகும் “
“ஓ… அப்போ சரி நான் ஒரு ஆர்டர் விஷயமா தான் வந்தேன் தம்பி, அதை அதுக்குள்ள பாத்துட்டு வந்துறேன், கொஞ்சம் மகாவ பாத்துக்கோங்க தம்பி “ என்று அவரும் கிளம்பி விட இன்பா
“பிள்ளையார் அப்பா… எப்படியாவது மகாவ இன்டர்வியூல பாஸ் ஆக்கிடுப்பா “ என்று இன்பா வாய் விட்டு வேண்டிக்கொள்ளவும்
“அவர் கிட்ட சொன்ன எப்படி… அவர் பிட் எடுத்துட்டு போய் தருவாராடா “ என்று கேட்டபடி மகேஷ் அவன் அருகே வந்திருந்தான்.
“டேய் சாமி விஷயத்துல கிண்டல் பண்ணாத மகேஷ் “ என்று முறைக்கவும்
“சரி டென்ஷன் ஆகாத. இப்போ சொல்லு யாரு அந்த லிட்டில் கேர்ள் “
“அவ மகா மாமா …” என்று தொடங்கியவன் நேற்று மண்டபத்தில் நடந்ததிலிருந்து இன்று அவளை பார்த்தது வரை கூறி முடிக்கவும்.
“ஓ…. உன் ரிலேஷனா…. ஆமா அந்த பொண்ணு உனக்கு என்ன வேணும்டா “ என்று இன்பாவை பார்க்க அவன் ஒரு நிமிடம் திகைத்து நின்றவன்
“அது… அது… வந்து தெரியலையேடா… அத்தை கிட்ட நான் கேட்கவே இல்லையே டா “
“சூப்பர் போ…. எதுவும் தெரியாம சார் விழுந்திட்டிங்க, பாத்து மாமா…. தங்கச்சி முறையா இருக்க போது “
என்று அணுகுண்டை அசால்டாக போட்டு விட்டு அவன் சென்று விட இங்கே இன்பா தான் பயந்து போனான்.
“என்னது தங்கச்சி முறையா…. சீ சீ… இல்ல இல்ல இருக்காது .” என்று உள்ளே அவன் டேபிளுக்கு நடந்து சென்றவன் நேத்து நடந்ததை நன்றாக யோசித்து பார்த்து விட்டு
“நம்ம அத்தை மகா அப்பாவ அத்தான்னு கூப்பிட்டாங்க அப்போ நமக்கு என்ன முறை ஆகும்..” என்று ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவனை அவன் கீழ் வேலை பார்க்கும் அயன்
“இன்பா….” என்று தோளைத் தொடவும் யோசனையில் இருந்து கலைந்தவனாக அவனை என்ன என்பது போல பார்த்தான்.
அவனும் வந்த வேலையைச் சொல்லிவிட்டு செல்ல போனவனை நிறுத்திய இன்பா
“அயன் எனக்கு ஒரு டவுட், அதை கிளியர் பண்ணுறீங்களா ப்ளீஸ் “
“சொல்லுங்க இன்பா என்ன டவுட் “
“அது வந்து…. ஒருத்தனோட அத்தை ஒருத்தர அத்தான்னு கூப்பிட்டு பேசுறாங்க. அப்போ அவனுக்கு அந்த பேசுனவரோட பொண்ணு என்ன முறை வரும் “
என்று குழப்பியவனை புரியாமல் அயன் பார்க்கவும் இன்பா அவனை அருகில் அமர வைத்து
“என் தூரத்து உறவுல தம்பி ஒருத்தன் கால் பண்ணி இந்த டவுட் கேட்டான்” என்று அயனின் முகம் பார்க்க அவனும் இன்பாவை தான் அப்பறம் என்பது போல பார்த்தான்.
“ அது எங்க அத்தை தெரிஞ்சவர் ஒருத்தர அத்தான்னு முறை வச்சி கூப்பிட்டாங்க. அந்த அவருக்கு ஒரு பொண்ணு இருக்கு அந்த பொண்ணு எனக்கு என்ன முறை வரும்”
என்று அயனை பார்க்க அவனோ சந்தேகமாக இன்பாவைப் பார்த்தான். அவன் பார்வையில்
“ஏ… நான் தம்பிக்காக தான் கேட்டேன். எனக்காக இல்லை. நீ தான் பிக் ஃபேமிலில இருந்து வர்றியே அதான் உன் கிட்ட கேக்குறேன் “ என்று சமாளிக்கவும் , அயன்
“உங்களுக்கு இல்ல உங்க தம்பிக்கு மாமா முறை வரும் “ என்று சிரித்த படி சொல்லி சென்றவனை முறைக்க முடியாமல் முகம் அவன் பதிலில் பளிச்சென்று மாறவும் அதன் பின் சந்தோஷமாக வேலையைப் பார்த்தான்.
வேலையைப் பார்த்தாலும் அடிக்கடி கீழே இன்டர்வியூ நடக்கும் இடத்திற்கு சென்று பார்த்து வருவதையும் அவன் மறக்கவில்லை. இப்படி மேலும் கீழும் சென்று வந்தவனை ஆபிஸே வினோதமாக தான் பார்த்து வைத்தது.
எப்போதும் வேலை என்று வந்தால் அடிக்கடி அவன் சீட்டை விட்டு எழுந்து சென்றிடாதவன் இன்று மட்டும் பத்து முறைக்கு மேலே வெளியே சென்று வந்து விட்டான்.
அவனுக்கே அவனை நினைத்து சிரிப்பாக தான் இருந்தது. அழகான பெண்களை ரசித்து பார்ப்பதோடு சரி அதற்கு மேலே போனது இல்லை காதல் என்று சில பெண்கள் இவனை அணுகினாலும் ஏனோ யார் மீதும் காதல் செய்யும் அளவு ஈர்ப்பு வந்தது இல்லை.
அதனாலேயே சிங்கிளாக சுத்திக்கொண்டு இருந்தவனை இப்படி அவன் முன் வந்து நின்று ஒருத்தி அவனை மயக்கி சுத்த விடுவாள் என்று எதிர்பார்த்திருந்தான என்ன?
மாயம் தான் செய்து விட்டாளோ என்னை என்று நினைத்து சிரித்தவனாக கீழே இறங்கி செல்ல அங்கே மகா தனியாக நின்று கொண்டிருந்தாள்.
மகாவைப் பார்த்தும் எகிறி துடித்த மனதை “ டேய் ரிலாக்ஸ் எடக்குடமா எதவது பண்ணி அவளை பயமுடுத்திடாத டா..” என்று அவனுக்கு அவனே சொல்லியபடி அவள் அருகே சென்றான்.
திடீரென்று வந்து நின்றவனை பார்த்து முதலில் திகைத்தாலும் பின் லேசாக சிரித்து தலையசைத்தாள்.
அதற்கு பதிலுக்கு சிரித்தவன் “ உங்க சித்தப்பா வர வரை வெளிய பெஞ்ச்ல உட்காரலாமே” என்று சொல்லவும் சம்மதமாக தலை அசைத்து அவன் பின்னே சென்றாள் மகா.
வெளியே ஊழியர்களுக்காக பார்க் போல அமைத்து பெஞ்சுகள் போடப்பட்டிருந்தது. அதில் ஒன்றை கைகாட்டி இன்பா அமர சொல்லிவிட்டு அவன் சிறிது தள்ளி நின்று கொண்டான்.
இன்பா அமரவில்லை என்றதும் தான் மகா அந்த பெஞ்சில் அமரவே செய்தாள்.
அதன் பின்னும் மகா அமைதியாக அவனைப் பார்ப்பதும், தரையைப் பார்ப்பதும், வாசலைப் பார்ப்பதுமாக இருக்க, இன்பா
“ஹாய் மகா, நான் இன்பாரசன். இன்பான்னு கூப்பிடுவாங்க. இங்க டூ இயர்ஸா இன்டர்னல் ஆடிட்டிங்ல வொர்க் பண்றேன்.”
என்று சொன்னவனை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு பின் அவனைப் போலவே,
“நான் மகாலட்சுமி. மகான்னு கூப்பிடுவாங்க. பி.காம் முடிச்சிருக்கேன், ஃபிரஷ்ஷர்.” என்று சொல்லி முடித்தாள்.
“ஓ… பி.காம்…அ நீங்க.
ஆமா இன்டர்வியூ எப்படி போச்சு?”
“ம்ம்ம்… குட். ஒன் வீக்ல கால் வரும்னு சொன்னாங்க. கால் வந்து நெக்ஸ்ட் டே ஜாயின் பண்ணிக்க சொன்னாங்க.”
“ஓ… சூப்பர் சூப்பர் மகா…” என்று சந்தோஷப்பட்டவனை அப்போதுதான் நிமிர்ந்து முழுமையாகப் பார்த்தாள் மகா.
லேசாக வீசும் தென்றலில் அசையும் முடியை அடிக்கடி கோதி விட்டபடி இருந்த அவன் விரல்கள், வெயிலின் காரணத்தால் தூளி தூளியாய் நெற்றியில் வழியும் வியர்வை, அதன் கீழே கற்றை மீசை, வளர்த்தும் வளராத தாடி, தலையை கோதும் போது லேசாக தெரியும் ஹார்ம்ஸ், கூர்மையான கண்கள், அதில் தெரியும் லேசான பதற்றம், அதை மறைக்க முயலும் உதட்டின் புன்னகை என்று இன்பாவை முழுவதுமாக அவளை மீறி ரசித்து கொண்டிருக்கும் போது,
“மகா உங்க சித்தப்பா வந்துட்டாங்க” என்று சீனிக்கு இன்பா கைகாட்டி அவரை இங்கே அழைக்கவும் தான் மகாவுக்கு அவள் இத்தனை நேரம் செய்த செயலே அறிவுக்கு எட்டியது.
“என்ன இது? நம்ம ஏன் அவன இப்படி பார்க்கிறோம்? அச்சோ…. இது தப்பு. இப்படி பண்ணக்கூடாது. பார்வைய அழைய விடாத மகா.
இந்த வயசுக்கு எல்லாம் தோணும் தான். அதை எல்லாம் கடந்து வரணும்” என்று அவளுக்கு அவளே பேசிக்கொண்டவள் கண்களை இறுக்க மூடி திறந்தவளாக இன்பாவை யாரோ போல பார்த்து,
“தாங்க்ஸ் அண்ட் பாய்…” என்று தலையசைத்து சென்று விட்டாள்.
இங்கு ஒருவனின் உறக்கத்தை கையோடு பறித்து எடுத்து செல்வது தெராயாமல் சென்றாள் மகா.
மாகாவை அனுப்பி வைத்த இன்பா அப்படியே மகா அமர்ந்திருந்த பெஞ்சில் கண்களை மூடி அமர்ந்து விட்டான்.
சற்று நேரம் முன் நடந்ததை கண் முன் ஓட்டிப் பார்த்தவன் உதடு புன்னகையில் விரிந்தது.
மகாவின் பார்வையை கண் முன் கொண்டு வந்தவன் உடல் சிலிர்க்க கண்களை இறுக மூடி திறந்தவன் “மை கேர்ள்….” என்று முனங்கியவன் சிறிது நேரம் கழித்தே எழுந்து அவன் இடத்திற்கு சென்றான்.
அன்று முழுவதும் இன்பாவின் முகம் புன்னகையில் தான் நிறைந்திருந்தது. மகாவின் ஒவ்வொரு அசைவையும் கண் முன் கொண்டு வந்து அதை ரசித்து சிலிர்த்து என்று சுற்றி திரிந்தான்.
இங்கே இன்பாவின் நிலை இப்படி இருக்க மகாவோ அவளை அவளே திட்டியபடி மனம் கலங்கி போயிருந்தாள்.
கண்களை மூடினாலும் அவன் தான், யாரிடம் பேசினாலும் அவன் தான், அவளிடம் ஏற்படும் மாற்றங்களை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் மகா, இன்பாவின் மகா.