“அதன பாத்தேன் எங்கடா புலி புள்ளி மேய போகுதேன்னு இதுக்கு தானா” என்று முகத்தை சுளித்தபடி அவள் வேலையை பார்க்க தோடங்கி விட்டாள்.

இங்கு காஃப்பி ஷாப்பில் மகேஷ் காப்பியை கையில் வைத்தபடி எதோ யோசனையாக இருக்க அவனை பார்த்து இன்பா.

“டேய் மாமா காப்பி ஆருது டா.” என்று உலுக்கவும் தெளிந்தவனாக

“ப்ச்…. இன்பா மாமான்னு கூப்பிடாதன்னு எத்தன வாட்டிடா சொல்ல.”

“அதான் நானும் கேக்குறன் ஏன் மாமான்னு கூப்பிட கூடாது.”

“அது…..அது…. வந்து இன்பா முறை….”

“என்ன முறை யார இப்போ முறைக்கனும்.”

“டேய் இன்பா மொக்க போடாத டா.”

“நீ சொல்ல வந்ததை சொல்லாமல் இப்படி கனவு கண்டுட்டு இருந்தா நான் வேற என்ன பண்ண?” என்று இன்பா முறைக்கவும்

“சரி, டென்சன் ஆகாத டா. சொல்றேன், நீ பொருமையா கேளு.”

“சரி, சொல்லு.” உடனே மூச்சை இழுத்து வெளியே விட்ட மகேஷ்.

“இப்போ லிட்டில் கார்ல் ஓட சிஸ்டர நான் லவ் பண்ணினால நீ எனக்கு ப்ரோ தான” என்று சொல்லி முடித்து இன்பா முகத்தை பார்க்க அவனுக்கு இவன் சொல்ல வருவது ஒன்றும் புரியவில்லை முதலில். பின் தலையில் அதை ரீவயின் பண்ணி பார்த்து விட்டு புரிந்ததும்.

“டேய், பக்கி பர….” என்று திட்ட வந்தவனின் வாயை அடைத்த மகேஷ்,

“டேய், பப்ளிக் டா, எதுவா இருந்தாலும் இருக்க இடத்தை பார்த்து பேசு.”

உடனே அவர்களை சுற்றி பார்த்த இன்பா கண்களை மூடி அமைதி படித்துக்கொண்டு.

“டேய், அவ காலேஜ் கூட என்னும் முடிக்கலடா.”

“என்னும் ஒரு வருஷம் தானடா,” என்று இழித்தவனை முறைத்தவன்.

“அந்த சுபா பொண்ணுக்கு இந்த விஷயம் தெரியுமா?”

“அவங்களுக்கு ஏன்டா தெரியனும்?” என்று மகேஷ் புரியாமல் பார்க்க

“ சுத்தம்,  லவ் பண்ற பொண்ணோட பேரு கூட தெரியலயாடா உனக்கு “

“டேய், இன்பா பேர் மாத்தி சொல்றடா. நான் லவ் பண்றது குணலட்சுமி ய மகா க்கு அடுத்து தங்கச்சி.”

“எருமை, எருமை, அவ  மகா இரண்டவது  தங்கச்சி டா காலேஜ் செகண்ட் இயர் தான் படிக்குது டா. பக்கி, அவ எத்தனாவது தங்கச்சின்னு கூட தெரியாம என் கிட்ட பேச வந்துட்ட” என்று துப்பியவனை கண்டு கோள்ளாத மகேஷ் விறள் விட்டு எதோ கணக்கு பார்த்துக்கோண்டு இருக்கவும்.

“என்டா என்ற…”

“அதுவா, எனக்கு குணா க்கு ஏஜ் எத்தன வருஷம் டிப்ரண்டு வருதுன்னு பாக்குறன். பறவாள, நான் கூட பயந்துட்டேன், ரோம்ப வருமோன்னு வெறும் ஏழு வருஷம் தான் வருது.” என்று சிரித்தவனை முறைத்த இன்பா

“எ… அது வெறும் ஏழு வருஷம் இல்ல, ஏ…ழு வருஷம் இப்படி சொல்லனும் டா நீ.”

“அவன், அவன் பத்து பதினைஞ்சு வருஷம் வித்தியாசத்துல கல்யாணத்தை பண்ணிட்டு ஹப்பியா இருக்கும் போது, நான் எழு வருஷம் வித்தியாசத்துல பண்ண கூடாத டா.”

“அப்போ, நீ ரோம்ப வெயிட் பண்ண வேண்டியதா இருக்குமேடா. முதல்ல சுபாக்கு முடிச்சு, இவளுக்கு பண்ண லேட் ஆகுமே.”

“பறவாள, என் பப்லி காக நான் வெயிட் பண்ணுறன் டா.”

“என்னமோ டா, அன லவ்வுன்னு போய் நின்னுறாத அப்பறம் பொண்ணு தர மாட்டாங்க.” அதில் மகேஷ் ஜெர்க் ஆனவன்

“என்னடா சொல்ற?”

“வெண்ண சொல்றன், இப்போ நான் ஏன் ? லவ் கூட சொல்லாம அவசரமா மகாவ கல்யணத்துக்கு கேட்டிருக்கேன் ல   ஏன்னு நினைக்குற.. அவங்க ஃபேமலிக்கே லவ் பிடிக்காதுடா.”

“அப்பறம் நான் என்ன டா பண்ண?” என்று பாவமாக முழித்த மகேஷின் தொலை தட்டி.

“முதல்ல குணா படிக்கட்டும் டா, அதுக்கப்புறம் அத்தை முலமா போலாம், பயப்படாத. ஆனா அதுக்கு முன்னாடி அந்த குடி பழக்கத்தை விடனும் நீ.”

“டேய், உடனே எப்படி டா…..கோஞ்சம் கோஞ்சமா விடுறன் டா?”

“அப்போ இது சரி வராது, என் கொழுந்தி உனக்கு இல்லை, குடிகாரனுக்கு எல்லாம் பொண்ணு இல்ல.”

“ஒரு ஏழு மாசம் முன்னாடி இதே டயலாக் உனக்கும் பொருந்தும் டா.”

“அதான் சொல்றேன் மகேஷ், முன்னாடி எப்படியோ நீ, உன்னை நம்பி ஒரு பொண்ணு வர்றான்னா முதல்ல உன்னை நீ நல்லா பாத்துக்கணும்டா, அப்போ தான் அவளை உன்னால பாத்துக்க முடியும்.”

“ சரி விட்டுடுறேன் இன்பா, இதுக்கு அப்புறம் தொட மாட்டேன்.”

“தொட்டினா குணா கிடையாது உனக்கு.”

“அப்படி சொல்லாதடா, வார்த்தைக்கு கூட என் பப்லி எனக்கு இல்லன்னு சொல்லாத.”

“சரி சரி அழாத அழாத” என்று அவன் கண்ணை துடைத்து விட்டவன்   பேசி சிரித்தபடி அலுவலகம் சென்றனர்.

மாலை ஒவ்வொருவராக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்ப, மகாவும் வேகமாக பஸ் பிடிக்க கிளம்பி சென்றாள்.

எப்போதும் இன்பா முடிக்கும் வரை காத்திருப்பவள், இன்று அவன் பைக்கை கொண்டு வந்திருப்பதை பார்த்துவிட்டு தனியாக கிளம்பி விட்டாள்.

அலுவலகம் விட்டு வெளியே வேகமாக சென்றவளை மறைப்பது போல பைக்கை இன்பா வந்து நிறுத்தவும், பயத்தில் மகா பின்னே நகர்ந்து நின்று

“அறிவில்லையா? பைக்கை இப்படித்தான் வந்து நிறுத்துவாங்களா?” என்று சீறிய மகாவை முறைத்தான் இன்பா.

“எப்பவும் நான் கிளம்பின அப்பறம் தான கிளம்புவ மகா, இன்னைக்கு என்ன அவசரமா சொல்லாகிளம்புறிட்ட?”

“அது, அதான் பைக் எடுத்துட்டு வந்திருக்கீங்களே, நான் ஏன் வெயிட் பண்ணணும்?”

“ஏன் பைக் எடுத்துட்டு வந்தா என்ன?”

“நீங்க பைக்ல போறத நான் ஏன் வேடிக்கை பாத்து நிக்கனும் சார்….” என்று இழுத்து நிறுத்தியவளை முறைத்தான் இன்பா.

“ஒழுங்கா பைக்ல ஏறு மகா.”

 “அ… பைக்ல நான் ஏறனுமா? வீட்டுல தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? காலைல அம்மா அத்தனை வாட்டி சொல்லி தான் அனுப்புனாங்க வேலைய மட்டும் தான் பாத்துட்டு வரனும்னு.”

“சரியான தொடை நடுங்கி தங்கம் நீ…”

“நான் ஒன்னும் தொடை நடுங்கி இல்ல. என்னால உங்கள அம்மா எதாவது சொல்லிருவாங்களோன்னு தான் யோசிச்சேன்.”

“அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க வா….” என்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பைக்கில் சென்ற அயன் பார்த்துவிட்டு,

“மாப்பிள்ளைய ரொம்ப கெஞ்ச வைக்காதீங்க மகா” என்று சிரித்த படி அவன் சென்று விட,

“இவுங்களுக்கு எப்படி சார் தெரியும் நீங்க தான் மாப்பிள்ளைன்னு?”

“நான் உன்ன பொண்ணு பாக்க வரதுக்கு முன்னாடி நாளே சொல்லிட்டேன் இதுக்கு தான் லீவ் போடுறேன்னு. நீ தான் லேட்டு.”

“என்னது எல்லாருக்கும் தெரியுமா அப்போ?”

“இல்ல நம்ம டீம்க்கு மட்டும் தெரியும்…ப்ச் .. இப்போ இது ரொம்ப முக்கியம் இல்ல. வந்து வண்டில ஏறு தங்கம்.”

“புரிஞ்சுக்கோங்க வீட்டுல தெரிஞ்சா திட்டுவாங்க.”

“அட தங்கமே…எல்லாம் மார்னிங்கே பெர்மிஷன் வாங்கிட்டேன். ஈவினிங் மட்டும் உன்ன வந்து டிராப் பண்ணிரேன்னு.”

“என்னது நிஜமாவா? அப்பா எப்படி விட்டாரு?”

“உங்க அப்பா ஈசியா விடுவாரா என்ன? எதேதோ பிட்டுலாம் போட்டு நான் ஒத்துக்க வெச்சேன்.”

“சூப்பர் நீங்க.”

“உன் பாராட்டு பத்திரத்தை அப்பறமா வாசி. இப்போ வண்டில ஏறு. ரோட்ல எல்லாம் நம்மள தான் பாத்துட்டு போறாங்க பாரு.”

அதில் உடனே வண்டி பின்னே ஏறி இரட்டை கால் போட்டு அமர்ந்தவள் சீட்டை இருக்கமாக பிடித்துக்கொண்டு “ ம்ம்ம்… போலாம்” என்று சொன்னவளை கண்ணாடி வழியே இன்பா முறைக்கவும்,

“என்ன முறைப்பு? ரொம்ப யோசிக்காம வண்டிய எடுங்க” என்று தலையை திருப்பி முகத்தை சுளித்தவளை கடித்து உண்ணும் ஆசை வர அதை கண்களை மூடி நிலை படுத்தியவன்,

“இன்ப அரசன் கன்ட்ரோல் மிஸ் பண்ணிடாத டா” என்று முனங்கிய படி வண்டியை எடுத்தவனின் வேகத்தில் தோப் என்று இன்பா மீது மோதிய மகா அவன் இடுப்பை இறுக பிடித்துக்கொண்டு,

“அய்யோ…. இன்பா…. பொறுமையா போங்க பயமா இருக்கு” என்று மகா கத்தியதில் வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி விட்டு அவளை பார்க்க,

மகா கண்களை திறப்பாளா என்றபடி கண்களை மூடி இன்பாவை இருக பிடிதபடி இருந்தவளின் தலையில் லேசாக இடித்த இன்பா,

“டேய்… தங்கமே…. என்னடா பண்ற என்ன?” என்று சிரித்தவனின் நெஞ்சில் ஜில் என்ற உணர்வு இறங்கியது.