[]என்னில் கலந்திட வா….

“ஃபைனல் போர்டிங் கால் ஃபார் பேசன்ஜர்ஸ் புக்குடு ஆன் ஃபிலைட் நம்பர் 6பி1653 டு டெல்லி சிட்டி. ப்ளீஸ் ப்ரோசிட் டு கேட் 7 “

என்று ஆங்கிலத்தில் அனௌன்ஸ்மென்ட் சத்தம் கேட்ட உடன் தோளில் இருந்த பையைப் பிடித்தபடி வேகமாக எட்டி கால்களை போட்டு நடந்தாள் என்பதை விட பறந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.

அத்தனை வேகம் அத்தனை வேகத்திலும் யாரையும் இடிக்காமல் நெற்றியில் வழியும் வியர்வையை துடைத்தபடி எப்படியோ ஒரு வழியாக கேட் முன்னே வந்து தான் நின்றாள்.

மூச்சு வாங்க வந்து நின்றவள் “ சா…. சாரி….” என்று அங்கிருந்த பெண்ணிடம் டிக்கெட்டை நீட்ட, அந்த பெண்ணும் டிக்கெட்டை வாங்கி சரிபார்த்து விட்டு உள்ளே அவளின் சீட்டை காட்ட

“தேங்ஸ்…” என்று சிறு புன்னகையை உதிர்த்து விட்டு உள்ளே வந்தவள் அவளின் நெற்றியில் ஓடி வந்ததில் கலைந்து இருந்த அவளின் கேசத்தை கைகளால் நகற்றியபடி அவள் சீட் எண்ணை சரி பார்த்து விட்டு அமர்ந்தாள்.

“ப்பூ…” என்று காற்றை இழுத்து ஊதியவல்.

“பொறுப்புத் துறப்புன்னு ஏதாவது உனக்கு இருக்க ஜெனி, இப்படி தான் லாஸ்ட் மினிட்ல ஃபிலைட்ல ஏறுவியா?.

இது என்ன கவர்மெண்ட் பஸ்ஸா பக்கி கைகாட்டி ரன்னிங்ல ஏற… பிசாசே… இனிமே ரீனா கூப்டா டீனா கூப்டான்னு வேலையை வச்சுட்டு போன உனக்கு அவ்வளவு தான் டி…”

என்று அவளை அவளே கை நீட்டி மெல்லிய குரலில் திட்டியபடி இருக்க, என்னதான் ஜெனிஸா மெல்லிய குரலில் திட்டியிருந்தாலும் அவள் பேசியது அனைத்தையும் கேட்டு சிரித்தபடி அமர்ந்திருந்தாள் மகா.

அப்போது ஜெனிக்கு ஏதோ தோன்ற திரும்பியவள், அவளின் அருகில் தன்னையே சிரித்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் மகாவைப் பார்த்துவிட்டு நெஞ்சில் கை வைத்து.

“எந்த தேவ மாதவே….” என்று வாயைப் பிளக்க அவளின் அதிர்ச்சியைப் பார்த்து மகா தலையை லேசாக சாய்த்து புருவம் சுருக்கி என்ன என்பது போல பார்க்க.

“மேம்…. நீங்களா மேம்… அச்சோ மேம்…. அது நீங்க தானா… அய்யோ இது கனவு இல்ல தானா அச்சோ… அச்சச்சோ மேம் என்னால நம்பவே முடியல “ என்று அவள் கையை வேறு கிள்ளிப் பார்த்துக்கொண்டு கைகளை உதறியபடி இருந்தவளைப் பார்த்து.

“ரிலாக்ஸ்…ஏ.. ரிலாக்ஸ்….கேர்ள்  …என்ன ஆச்சு… உனக்கு ”

“அச்சோ மேம் பேசுறீங்க… அய்யோ எங்க மேம் என் கூட பேசிட்டாங்க “… என்று பதட்டத்தில் கத்தியவளை கைகளைப் பிடித்து

“ஏ… கேர்ள்… என்ன.. அமைதியா இரு எல்லாரும் இங்க தான் பாக்குறாங்க” என்று சொன்ன பிறகு தான் சுற்றம் உறைந்து மூச்சை இழுத்து வெளியே விட்டு அவளை அமைதியாக்க முயன்று தோற்றவளாக.

சிரித்த முகத்துடன் “ மேம்…. மேம் …. நீங்க என் ஃபேன் மேம் “ என்று உளறி வைத்தவளை

“அ… “ என்று மகா புரியாமல் அவளை பார்க்க அதில் தவறு புரிந்து தலையில் அடித்து கொண்டாவள்

“அச்சோ லூசு ஜெனி….” அவளை திட்டிக்கொண்டு

“ அது நான் உங்க ஃபேன் மேம். உங்க பத்தின நியூஸ் எல்லாம் ஒன்னு விடாம கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன் மேம்.

இப்போ கூட ரீசன்டா எம்.கே தீம் பார்க்க ஸ்டாப் பண்ணதுல வேற லெவல் மாஸ் காட்டிட்டீங்க மேம்!

எப்படி மேம் பத்து வருஷம்…. முன்னாடி இருந்த மாதிரியே இருக்கீங்க. அச்சோ மேம் ஒரு செல்ஃபி மேம் ப்ளீஸ் மேம்…”

என்று மூச்சை பிடித்து பேசியவள் கடைசியாக கண்களை சுருக்கி கேட்டதும் அவள் செய்கையிலும், அவள் பேச்சிலும்  எல்லாம் அவன் போல இருக்க, அவனிடம் செல்ல சென்ற மனதை அடக்கி மாறாத சிரிப்புடன்

“மெதுவா கேர்ள் நான் எங்க போக போறேன் ஏன் இவ்வளவு வேகம் “ என்று அவளை அடக்க பார்க்க

“அச்சோ மேம் என் பேரு ஜெனிஷா நீங்க ஜெனின்னு கூப்பிடுங்க மேம் “

“சரி ஜெனிஷா..” என்று சிரித்தவரை பார்த்து

“மேம் யூ ஆர் ஸ்டில் பிரிட்டி மேம் “ என்று கன்னத்தில் கை வைத்து வெட்க சிரிப்பு உதிர்த்தவளை பார்த்து.

“ஏ… ஜெனி… ரொம்ப ஐஸ் வைக்காத ம்மா… பிக் தான வேணும், எடுத்துக்கோ “

“மேம் பிக்காக லாம் சொல்லல மேம் உண்மையா சொல்றன் மேம். உங்களை நானு ஃபர்ஸ்ட் டைம் பத்து வருஷம் முன்னால பாக்கும் போது எவ்வளோ அழகா என் கண்ணுக்கு தெரிஞ்சீங்களோ ஸ்டில் அவ்ளோ அழகா இருக்கீங்க மேம் “

ஜெனிஷா சொல்வது போல தான் இருந்தால் மகா யாரிடமாவது இவருக்கு நாற்பது வயது இருக்கும் என்று சொன்னால் நம்பாமல் தான் பார்ப்பார்கள்.

இந்த வயதிலும் ட்வென்டி பிளஸ் என்று சொல்லும் படி தான் இருந்தாள்.

“பத்து வருஷம் முன்னாடியா.. என்ன எங்க நீ பார்த்த?”

“மேம் நீங்க படிச்ச அதே கவர்மென்ட் கேர்ள்ஸ் ஸ்கூல்ல தான் மேம் நான் படிச்சேன். நீங்க கலெக்டர் ஆகி ஸ்பீச் கொடுக்க வந்திங்களே மேம்.

அப்போ நான் கூட நீங்க அழகா இருக்கீங்க மேம்னு ரோஸ் கொடுத்தேனே. என்ன அப்போ நான் எய்த் படிச்சிட்டு குட்டியா இருந்தேன் சோ உங்களுக்கு ஞாபகம் இருந்திருக்காது. இட்ஸ் ஓகே மேம்”

என்று அவள் கைகளை விரிக்க,  இங்கே மகா

“அ…… எனக்கு ஞாபகம் இருக்கு… அந்த ஊதா கலர் ரிப்பன் பாப்பாவா நீ..” என்று மகா ஷாக் ஆகா.

ஜெனிஷா சந்தோஷத்தில் மகாவின் கையை பிடித்து கொண்டு “ மேம் நீங்க மறக்கலயா என்ன?” என்று கண்களை விறிக்க

“எப்படி மறப்பேன்? க்யூட்டா பயந்து பயந்து வந்து நீ ரோஸ் கொடுத்தது இப்போ நடந்தது மாதிரி ஞாபகம் இருக்கு. ஆமா.. நீ என்ன பண்ணிட்டு இருக்க ஜெனி?”

“நானா மேம் உங்கள உங்கள ரோல் மாடலா வச்சி எப்படியோ முட்டி மோதி ஜெர்னலிஸ்டா ஆகிட்டேன் மேம்”

“எ… ஜெர்னலிஸ்டா நீ சூப்பர் ஜெனி …”

“ஆமா மேம் நீங்க பேசுனத கேட்டு தான் எனக்குள்ள இருந்த ஆசைய எப்படியாவது நிறைவேற்றியே ஆகணும்னு… ஒரு ஃபயர் வந்து இப்போ ஒரு ஜர்னலிஸ்டா உங்க முன்னாடி நிக்கிறேன் மேம்”

“நான் பேசுனத கேட்டா…” என்று மகா வாயை பிளக்க

“ஆமா மேம் அன்னைக்கு செம்மையா பொண்ணுங்க யாருக்காகவும் உங்க கனவை பூட்டி வைக்காதீங்க. பொண்ணோ ஆணோ உங்க கனவை தேடி போங்கன்னு சொன்னீங்க தான.”

“இது சாதாரணமா எல்லாரும் சொல்ற டயலாக் தானம்மா இதுல என்ன இம்ப்ரஸ் ஆனா”

“இன்னும் முடியல நீங்க சொன்னத முழுசா கேளுங்க. அது அப்பறம் நீங்க இத ஈசியா சொல்லிட்டு  எல்லாம் போயிடுவாங்க எங்க நம்மளால முடியும்? னு நினைக்காதீங்க. நானும் உங்கள மாதிரி இந்த இடத்துல இருந்து தான் வந்திருக்கேன்.

நான் இங்க வந்து நிக்க காரணம் என் கனவை எந்த சூழ்நிலையிலும் விடாம அதை துரத்தி போனது தான்.

இதே ஸ்கூல்ல படிச்ச என்னால முடியும் போது ஏன் உங்களால முடியாதா? ன்னு பேசி முடிச்சீங்க பாருங்க அப்பா ….” என்று கன்னத்தில் கை வைத்து ரசித்து அன்று மகா பேசியதை வார்த்தை மாறாமல் பேசியவளை பார்த்து அதிர்ச்சி கலந்த ஆர்வம் தோன்ற

“சூப்பர் ம்மா நீ …. இத்தனை வருஷம் ஆகியும் நான் பேசுனத மறக்காம இருக்கியே”

“அது மேம் எங்க வீட்டுல பொண்ணுங்கள படிக்க வைக்கிறதே பெருசு இதுல ஜெர்னலிஸ்ட் ஆசைலாம் வரவே கூடாதுன்னு எதோ படிச்சிட்டு அடுத்து படிக்க வைப்பாங்களா இல்ல கல்யாணம் பண்ணி வச்சிருவாங்களா ன்னு ஒரு தெளிவில்லாத குழப்பத்துல இருக்கும் போது தான் உங்க ஸ்பீச் எனக்கு ரொம்ப தைரியத்தை தந்துச்சி மேம்.

நம்மளாலும் முடியும்னு வீட்ட எதிர்த்து போராடி படிச்சி இப்போ இப்படி இருக்கேன் மேம்.“

என்று கர்வத்துடன் பேசியவளை பொறுமையாக மகா பார்க்க ஜெனிஷா

“ஆமா மேம் எங்க டெல்லிக்கு எதாவது மீட்டிங்கா?”

“மீட்டிங்லாம் இல்ல ம்மா பெர்சனல் வர்க் என்று சொல்ல வந்தவள். அதை மாற்றி சிரித்த முகமகா”

“என் பையனுக்கு டெல்லியில அவார்ட் தர்றாங்க. அதுக்கு என்ன வரச்சொல்லி கூப்பிட்டான்மா. அதுக்கு தான் போறேன்.”

“டெல்லியில அவார்ட்னா கவர்மெண்ட் தர்ற அவார்ட பத்தி பேசுறீங்களா மேம்?” அதற்கு ஆமாம் என்பது போல மகா தலையசைக்க

“மேம்…… நானும் அங்க தான் போறேன். அங்க ஒரு இன்டர்வியூக்காக போறேன் மேம்” என்று மகிழ்ச்சியில் துள்ளியவளை பார்த்து

“எனக்கு உன்ன பார்க்க என் இன்பா தான் ஞாபகம் வர்றாங்க ம்மா” என்று கண்கள் மின்ன பேசியவள் சீட்டில் தலை சாய்ந்து அமர்ந்துவிட

“யாரு மேம் சார்ரா…?” என்று ஏதோ யோசனையாக கேட்டவளை பார்த்து

“எப்படி கெஸ் பண்ண ஜெனி?” என்று அவளை திரும்பி புன்னகை முகமாக இவள் பார்க்க

“சார் பேர் எனக்கு தெரியும் மேம். இன்பரசன் கரெக்டா மேம்?” என்றதும் தலையை இவள் புறம் திருப்பி புருவம் சுருக்கி

“என் ஹஸ்பெண்ட் பேரு உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டவளை பார்த்து

“சாரி மேம், நீங்க பிரைவசின்னு உங்க ஃபேமிலி டீடைல்ஸ் எதுவும் வெளியில வராம தான் பாத்துட்டு இருந்தீங்க. நான் ஜெர்னலிஸ்ட் வேற, இதுல உங்க தீவிர ஃபேன். சோ ரொம்ப… ரொம்ப கஷ்டப்பட்டு தான் சார் நேம் மட்டும் கண்டுபிடிச்சேன் மேம்.” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு

“ஆனா ப்ராமிஸ் மேம், அதுக்கு மேல வேற எதுவுமே என்னால கண்டுபிடிக்க முடியல மேம்” என்று அவள் தலையில் கை வைத்து சத்தியம் செய்தவளை பார்த்து மேலும் சிரிப்பு தான் வந்தது.

“சரி சரி நம்புறேன்…” என்று மகா சிரித்த பிறகு தான் மூச்சே வந்தது ஜெனிக்கு. பின்,

“நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே மேம்?” என்று மீண்டும் இவள் கண்கள் சுருக்கி கேட்கவும் அதில் இவள் தலை தன்னை போல சரி என்று ஆடியது.

“ஏன் மேம் உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோரையும் பத்தி அவ்ளோ சீக்ரெட்டா வச்சிருக்கீங்க மேம்?”

“அதுக்கு காரணம் அவங்க சேஃப்டிக்காக தான். நான் கொஞ்சம் ரொம்ப கரெக்டா இருக்கனும்னு நினைப்பேன். அது பல பேருக்கு பிடிக்காது.

அப்போ அவங்க என்ன மடக்க முதல்ல தேடி போறது என் ஃபேமிலிய தான் இருக்கும். அதான் கேர்ஃபுல்லா இருக்கேன்” என்று தலையை ஒரு பக்கம் அசைத்து சொன்னதை பார்த்த ஜெனி

“மேம் எப்படி… மேம் நீங்க சூப்பர் மேம்.” என்று ஜெனி கண்களை மூடி சிரித்தவளை வினோதமாக பார்த்த ஜெனி

“என்ன ஆச்சு ஜெனி ஒரு மாதிரி சிரிக்கிற?”

“மேம் எப்படி மேம் அப்படியே இருக்கீங்க. சார் ரொம்ப லக்கி மேம். உங்களை பார்த்தா கலெக்டர் ஃபீல் வரல மேம். பக்கத்து வீட்டு அக்கா மாதிரி இருக்கிங்க மேம்”

என்று உளறியவள் பின் அவசரப்பட்டு உளறியதில் அவள் வாயை அவளே வேகமாக மூடிக்கொண்டு பாவமாக மகாவை பார்க்க

“சரியான வாலு போல ஜெனி நீ ” என்று அவள் தலையை ஆட்ட, அதில் ஆசுவாசம் ஆனவள்.

“ சாரி மேம் என் வாய் கொஞ்சம் ஓட்டை “ என்று இளிக்கவும், மகா சிரித்தவள்.

“ பரவாயில்லை இப்படியே பேசு க்யூட்டா இருக்க “ என்று மகா சொன்னதும் ஜெனிஷாவுக்கு அந்த ஃபைலைட்டை விட்டு வானில் பறப்பது போல இருக்க அந்த உணர்வுடனே அவள் பலக்க தோசத்தை தொடங்கினாள்.

“ உங்களுக்கு எப்படி மேம் கலெக்டர் ஆகணும்னு தோணுச்சு “ என்று ஜெர்னலிஸ்ட் மோடுக்கு ஜெனி செல்ல அதை ஊகித்த மகா

“என்ன ஜெனி இன்டர்வியூ எடுக்கிறியா என்ன “ என்று கோபமாகலாம் இல்லை சிரித்த முகமாக தான் மகா கேட்டாள்.

அதில் ஜெனிஷா முகமே மாறிவிட “ அது மேம் நான் இதை என் வேலைக்காக கேட்கல மேம் எனக்கு ரொம்ப பிடிச்ச என் ரோல் மாடல் உங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்னு தான் கேட்டேன் தப்பா நினைக்காதீங்க சாரி”

“அட ஜெனி நான் எதார்த்தமா தான் கேட்டேன். சரி என்ன பத்தி என்ன தெரிஞ்சுக்கணும் கேளு சொல்றேன் .” என்று அவள் தலையை பிடித்து ஆட்டினாள்.

மகா இது போல் புதிய நபர்களுடன் இயல்பாக பேசுபவள் இல்லை. எப்போதும் அவள் எல்லைக்குள்ளேயே நின்று விடுவாள்.

நன்றாக தெரிந்தவர்களிடமே புன்னகையுடன் ஓரிரு வார்த்தையுடன் நிறுத்திக் கொள்பவள் இன்று ஏனோ அப்படி இந்த பெண்ணிடம் இருக்க முடியாமல் போனது தான் அதிசயம்.

ஒரு வேளை இவள் செய்வது அனைத்தும் இன்பாவைப் போல இருப்பதுனாலேவா… என்று நினைத்தவளிடம்.

“உண்மையாவா…மேம் “ என்று கண்களை விரிக்க

“ம்ம்ம் உண்மையா தான் கோளு “ அதை கேட்டு மகிழ்ந்தவலாக

“ம்ம்ம்…. முதல்ல என்ன கேட்க….” என்று கண்களை மூடி யோசித்தவள்

“அ…. உங்களுக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை எப்படி மேம் வந்துச்சு “

“அதுவா அது ஒரு பெரிய ஸ்டோரி ஆச்சே….”

“பெரிய ஸ்டோரியா பரவால சொல்லுங்க மேம் “

“அது நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க எதிர் வீட்டுல ஒரு பையன் கலெக்டருக்கு படிச்சி பாஸ் ஆயிருந்தான்.

அதை அவுங்க அம்மா எங்க அம்மா கிட்ட பெருமையா பேசினப்போ நான் வாயை வச்சிட்டு சும்மா இல்லாம நானும் கலெக்டர் ஆவேன்னு சொன்னது தப்பா போச்சு “

“ஏன் அதுல என்ன தப்பு மேம் “

“அதுக்கு அந்த அக்கா அரை பக்கத்துக்கு நீ பொண்ணு உன்னை இவ்ளோ படிக்க வைக்க மாட்டாங்க கல்யாணம் பண்ணி தான் அனுப்புவாங்க. உன்னால படிக்க முடியாதுன்னு சொன்னாங்க “

“அச்சோ அப்பறம் “

“அப்பறம் என்ன அந்த அக்கா சும்மா எதுவும் சொல்லாம விட்டுருந்தா கூட நான் அதை மறந்துருப்பேனோ என்னமோ இவங்க இப்படி சொல்லிவிடவும் அது என் மனசுல ஆழ பதிஞ்சி போச்சு .

அதை நினைச்சே எப்படியாவது கலெக்டர் ஆகணும்னு பிடிவாதமா இருந்து ஆகிட்டேன் “

“அப்போ அந்த ஆண்டிக்கு தான் தேங்க்ஸ் சொல்லனும் போல மேம் “ அதை கேட்டு முகம் பளிச்சென்று மாற

“இன்பாவும் இப்படி தான் சொல்லுவாங்க “ என்றவளின் முகத்தில் இருந்த பிரகாசத்தில்

“சாரும் நீங்களும் லவ் மேரேஜா மேம் “ என்று கன்னத்தில் கைவைத்து இவள் ஆர்வமாக கேட்க அதற்கு வெட்கப்பட்டபடி மகா

“ம்ம்ம் லவ் மேரேஜ் தான் “

“வாவ் சூப்பர் மேம் உங்க லவ் ஸ்டோரி சொல்லுங்க மேம். யார் ஃபர்ஸ்ட் லவ் சொன்னது சார்க்கு உங்கள பாத்ததும் லவ் வந்துச்சா எல்லாம் சொல்லுங்க மேம் “ அதில் மகா ஜெனி புறம் முழுவதும் திரும்பி

“ இன்பாவுக்கு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் என்ன பாத்ததும்…… விழுந்துட்டேன்னு சொல்லுவாரு “ என்று மகா புன்னகைக்க

“அப்போ உங்களுக்கு மேம் சார்ர முதல் தடவ பாத்தப்போ என்ன ஃபீல் பண்ணீங்க. சேம் லவ் ஃபீலிங்கா மேம் “

“என்னது லவ் ஃபீல் ங்க ?” என்று சிரித்தவள் ”  நான் என்ன நினைச்சேன்னு தெரியுமா…”

என்றதும் ஆர்வமாக ஜெனிஷா பார்க்க

“என்ன பனை மரத்துல பாதி அளவு இருக்காரே இவர பெத்தாங்களா? இல்ல தண்ணி ஊத்தி வளர்த்தாங்களா..ன்னு நினைச்சேன் “

“என்னது….”

“ஆமா நான் ஃபைவ் ஃபீட், இன்பாவோ சிக்ஸ் ஃபீட் மேல அவ்ளோ ஹைட்ல ஒருத்தன பாத்ததும் எனக்கு இது தான் தோணுச்சு “ என்று மகா கண்கள் சிமிட்டினாள்.