Advertisement

துர்கா சிறு கூச்சத்துடன் அவனை பார்த்தவாறு திரும்பி அமர்ந்து கொள்ள, அவளை முறைத்தான் திரு. திருவின் முகம் இயல்பாக இல்லை என்பதை ஒரே பார்வையில் உணர்ந்து கொண்டவள் “என்ன ஆச்சு.. ஏன் இப்படி இருக்கீங்க… முகமே சரி இல்லையே.. எதுவும் பிரச்சனையா திரும்ப..” என்று வரிசையாக கேள்வி கேட்க

                 திரு சிரித்துக் கொண்டான் அவள் கேள்விகளில். அவள் முகத்தை தன் அடிபடாத கைகளில் பிடித்துக் கொண்டவன் அவளை நெருங்க, பின்னால் சாய்ந்து கொண்டவள் “என்ன மறைக்குறிங்க நீங்க.. என்னை டைவர்ட் பண்றிங்க..” என்று கேட்க

                 திருவோ “ஆமா.. பண்றாங்க..” என்றவன் “கிட்ட வருவியா மாட்டியா..” என்று கேள்வி கேட்டு நிற்க

                                துர்கா “என்ன ஆச்சு இப்போ.. குளிக்க போறவரைக்கும் நல்லா தானே இருந்திங்க.. அதுக்குள்ள என்ன ஆச்சு..”

                           “இப்போகூட ஒன்னும் ஆகலடி..” என்று கூறி அவளை சாதாரணமாக இழுத்து அணைத்துக் கொண்டான் திரு. துர்கா விலக முற்பட “ப்ளீஸ் துர்கா.. தள்ளி போகாத..” என்று வேறு கூறினான். அவன் அணைப்பு அழுத்தமாக இருந்தாலும் அடுத்தகட்டத்திற்கு செல்லவில்லை அவன்.

                                  துர்காவிற்கு அவன் செயல்கள் புரியாமல் போக, அவன் தலைமுடியை பற்றி தன்னிடம் இருந்து விலக்கியவள் அவன் முகத்தை நேராக பார்க்க, திரு “தேங்க்ஸ்டி..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டான் மீண்டும். “என்னடா ஆச்சு இவனுக்கு..” என்று துர்கா பார்த்திருக்க

                      திரு அவனாகவே பேச தொடங்கினான். “அம்மா ஞாபகம் வந்துடுச்சு துர்கா.. எனக்கு தெரிஞ்சு எனக்கு இருந்த ஒரே உறவு, அதுவும் வெறும் ஆறு வருஷம் மட்டுமே என்கூட இருந்த உறவு… அவங்க முகம் கூட பெருசா ஞாபகம் இல்ல.. ஆனா என்னவோ இன்னிக்கு உன்னால ஞாபகத்துக்கு வந்துட்டாங்க..”

                      “எனக்கு தெரிஞ்சு எனக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட ஒரே ஆள் என் அம்மாதான்.. அதுவும் அவங்க ஊட்டிவிட்டதெல்லாம் எனக்கு ஞாபகமே இல்ல..

                     எனக்கு நல்லா நினைவு தெரிஞ்சு இன்னிக்கு நீ ஊட்டி விட்டு இருக்க.. அதான் அம்மா இப்படி தான் இருப்பாங்களோ ன்னு ஒரு எண்ணம்.. ம்ச்.. இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்ல..” என்று திரு முடிக்க, துர்காவிற்கு கண்கள் கலங்கி போயிருந்தது.

                     இன்று வரை அவள் “ஊட்டிவிடும்மா..” என்று ஒரு வார்த்தை சொன்னாலே வள்ளி வேறு எதுவுமே கேட்காமல் அவளுக்கு சாதம் ஊட்டி விடுவார்..

                           அவள் வேலைக்கு சேர்ந்துகூட நிறைய முறை அவளுக்கு ஊட்டி இருக்கிறார் வள்ளி. அவளை பொறுத்தவரை ரொம்பவும் சாதாரணமான விஷயம் அது.

                       ஆனால் அதே விஷயம் எதிரில் இருப்பவனுக்கு ஏக்கமாகவே இருந்திருக்கிறது என்று நினைக்க, துர்காவால் தாங்கவே முடியவில்லை. கடவுள் மீது தான் கோபம் வந்தது.. “ஏன் இப்படியெல்லாம் வதைக்க வேண்டும்” என்று படைத்தவனை நொந்து கொண்டவள் அதே நினைவோடு தான் திருவை பார்த்தாள்.

                       அவனோ கலங்கிய அவள் கண்களை துடைத்து விட்டவன் “அழ வைக்கிறேனா..” என்று கேட்க, துர்கா மறுப்பாக தலையசைத்தாள்.

                       திரு “இதுக்கே அழுவியா நீ.. இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து அழுதுட்டே தாண்டி இருக்க.. உனக்கு ஏதோ ஒரு காரணம் கிடைக்குது..” என்று அவளை வம்பிழுக்க

                        அவனை முறைக்க கூட இல்லை துர்கா.. எப்போதும் அவன் அணைப்பது போல அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். திருவின் கன்னத்தில் அவள் முத்தமிட, திருவும் அமைதியாகி விட்டான். சில நொடிகள் இந்த மௌனம் நீடிக்க திருவுக்கே பிடிக்க வில்லை போலும்.

                       அவள் நெஞ்சில் புதைந்த படியே “ரொம்ப படுத்துறேனா..” என்று கேட்க, துர்கா அவன் தலையை அசையாமல் பிடித்துக் கொண்டாள்.

                                அவன் அசைய முற்பட்ட போதும் கூட “அப்படியே இருங்க..” என்று கூற

                      திரு “இப்படியே இருந்தா.. உனக்கு சமாதானம் பண்ண கூட தெரியலடி..” என்று மீண்டும் கூறிவிட

                அவனை தானாகவே விலக்கிவிட்டாள் துர்கா. அவன் பேசப்பேச அவன் உதடுகள் உரசிய இடங்கள் கூச்சப்படுத்த விலக்கி விட்டாள். திரு கூறிய வார்த்தைகளும் ரோஷத்தை கொடுக்க “என்ன.. என்ன சமாதானம் பண்ண தெரியல எனக்கு..” என்று சூடாக கேட்டு விட்டாள்.

                   திரு அப்போதும் “ஆமா.. நான் சோகமா இருக்கேன். நீ அமைதியா இருக்க.. ஏதாச்சும் சொல்லணும் இல்ல..”

                      “என்ன சொல்லணும்..”

                 “அதையும் நானே சொல்வேனா..”

                    “எனக்கு உங்க அளவுக்கு வசனம் பேச வராது… அதனால நீங்களே சொல்லுங்க..” என்றவள் அவனை “என்ன சொல்லப்போறான்..” என்று குறுகுறுப்பாக பார்க்க, திரு அவள் வயிற்றில் கைகொடுத்து இழுத்து கொண்டு

                       “நீங்க அழாதீங்க மாமா.. நான் உங்க அம்மா மாதிரியே உங்களுக்கு ஒரு குட்டி அம்மாவை பெத்து தரேன் ன்னு சொல்லணும் இல்ல..” என்றான்.

                        துர்கா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.. அவள் அவனையே பார்க்கவும் “அப்படி என்னடி கேட்க கூடாததை கேட்டுட்டேன்.. இப்படி பார்க்கிற..” என்று திரு கேட்க,

                            “சீக்கிரமா பெத்துக்கலாம்.. ” என்று கண்ணடித்தாள் துர்கா. இப்போது திரு அவளை அதிசயமாக பார்க்க,

                       அவன் பார்வையை கண்டு கொள்ளாதவள் “ஆமா.. வேணும்ன்னு முடிவு பண்ணிட்டு அது ஏன் ஒண்ணே ஒன்னு.. நாம ஒரு அஞ்சு இல்ல ஆறு பெத்துப்போம்.. அப்புறம் பாருங்க.. வீடு முழுக்க குட்டி திருவும், குட்டி துர்காவும் தான்…”

                              “அவங்களை நல்ல பிள்ளைகளா என் திருவை போலவே வளர்த்து, நல்ல பொண்ணு, பையனா பார்த்து கட்டி வச்சிட்டா போதும்… அப்புறம் மருமகன், மருமகள் எல்லாம் வந்துடுவாங்க..

                     சீக்கிரமே வீட்டையும் இன்னும் கொஞ்சம் பெருசா கட்டணும்.. எல்லாருக்கும் நிறைய இடம் வேணும்ல..” என்றவள் திருவை பார்க்க, அவன் துர்காவை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

                              துர்கா என்ன என்பது போல் புருவம் உயர்த்த “இல்ல.. உங்களோட எதிர்கால திட்டம் அவ்ளோதானா.. இல்ல இன்னும் இருக்கா..” என்று அவன் கேட்டு வைக்கவும்

                               “ஏன்.. ஏன் அவ்ளோதான்.. அடுத்து பேரன் பேத்தி எல்லாம் வருவாங்க இல்ல.. அப்படியே அவங்களோட ஜாலியா டைம் போய்டும்.. அப்புறம் திருவுக்கும் துர்காவுக்கும் நெறைய சொந்தங்கள் கிடைச்சுடும்.” என்று துர்கா மேலும் அடுக்க

                               “இருடி.. மூச்சு விட்டுக்கறேன்.. உன் லிஸ்ட்டை கேட்டே தலை சுத்தி போய் உக்காந்துட்டு இருக்கேன்.. ” என்றான் திரு..

                துர்கா சிரிக்க ஆரம்பிக்க “உனக்கு சிரிப்பு வருதா.. கல்யாணமாகி ஒரு வாரம் தான் ஆகி இருக்கு.. இதுல வெறும் மூணு நாள் தான் நீ பாயசம் கொடுத்து இருக்க.. இதுல பேரன், பேத்தி வரைக்கும் கண்ணை திறந்துட்டே கனவு வேற.. ஒரு மனசாட்சி வேண்டாமாடி..”  என்று கேட்க

                             “என்ன நியாயம்.. நானா உங்களை வேண்டாம் ன்னு சொன்னேன்.. நீங்கதானே என்கிட்டே சண்டை போட்டிங்க.. விட்டுட்டு போனீங்க.. இதுல என்னை சொல்றிங்க..” என்று அவளும் சரிக்கு சரியாக நிற்க

                             திரு  “உனக்கு வெட்கமெல்லாம் வரவே வராதா..” என்று கேட்டுவிட

                       “இப்போ என்ன.. நீங்க குழந்தை கேட்டதும் நெளிஞ்சுக்கிட்டே காலால தரையில கோலம் போட்டு இருக்கணுமா..” என்றவள் “போயா..” என்று அவன் மேலிருந்து எழுந்து கொள்ள, திரு அவளை விடாமல் பிடித்து இழுத்து அமர்த்திக் கொண்டான்..

                        அவன் மடியில் அமர்ந்து கொண்டபோதும் கூட “பாயசம் கேட்டிங்க..” என்று துர்கா இழுக்க,

                       திரு “நானே எடுத்துக்கறேன்..” என்றவன் அவளை பேசவே விடாமல் அவள் இதழ்களை வன்மையாக முற்றுகையிட்டு கொண்டான்.

                        அவள் மூச்சுக்கு திணறவும் அவளை திரு விடுவிக்க, அந்த சோஃபாவில் தான் படுத்திருக்க, தனக்கு மேலாக அவன் முழுதாக சரிந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள் அவள்.

                      அவன் முதுகிலே ஒன்று வைத்து விலகியவள் எழுந்து கொண்டாள். திருவும் அவளுடனே எழ, துர்கா கிட்சனுக்குள் நுழைந்தாள்..

                          டம்ளரை எடுத்தவள் அடுப்பின் மேல் வைத்திருந்த பாத்திரத்தில் இருந்து கொஞ்சம் பாயசத்தை அந்த டம்ளரில் ஊற்றி திருவிடம் கொடுக்க, சற்று முன் திரு கேட்டும் வராத வெட்கம், இப்போது அவன் பார்வையிலேயே வந்து தொலைத்தது.

                                  திரு அந்த டம்ளரை வாயில் கவிழ்த்துக் கொண்டவன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டான். அந்த இரவு நிச்சயம் அவர்களுக்கு ஒரு நிறைவான தருணம் தான்..

                                            இதுவரை இல்லாத அளவு காதலை திரு துர்காவிடம் காண்பிக்க, துர்காவும் அவனுக்கு சற்றும் குறையாத வகையில் அவனை தாங்கி கொண்டாள்.

                            அதுவும் இருவரும் களைத்து விலகிய நேரத்தில் திரு, “குட்டி திருவா இல்ல துர்காவா..” என்று கேட்டு வைக்க, சிரிப்பு பொங்கியது துர்காவுக்கு.

                          அதுவும் அவன் நாளை காலையே குழந்தை வந்துவிடும் என்பது போல் கேட்க, சிரித்துக் கொண்டே அவன் நெஞ்சில் புதைந்து கொண்டாள் அவள்..

                    காலை திரு எப்போதும் போல நான்கு மணிக்கே எழுந்து ஓடிவிட, துர்கா வழக்கம் போல் எட்டு மணிதான்.. அப்போதும் மெதுவாகவே எழுந்து கொண்டவள் அதே பொறுமையுடன் வேலைகளை பார்க்க, திருவும் வழக்கம் போல வந்து உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

                   இவள் அமைதியாக வந்து ஹாலில் அமர்ந்தவள் டிவியை இயக்க, அதில் சென்னையில் இன்று அதிகாலை நடந்த ஒரு என்கவுண்டரை பற்றிய செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.

                     மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக கடத்தி வரப்பட்டிருந்த பதின்ம வயது பிள்ளைகள் 17 பேர் காப்பாற்ற பட்டிருப்பதாகவும் கூறிய அந்த செய்தியாளர் டிஎஸ்பி ருத்ராவையும் புகழ்ந்து கொண்டிருந்தார்.

                     அவளின் புகைப்படம் டிவியில் ஒளிபரப்பாக அந்த குழந்தைகளை மீட்ட விதம் குறித்து ஒரு ஐந்து நிமிட பேட்டி கொடுத்திருந்தாள் அவள்…

                      துர்காவிற்கு அவள் தோரணையும், அவளின் பேச்சும் அத்தனை பிடித்திருக்க அவளுக்கு விசிறியாகி இருந்தாள். இதுவரையும் கூட அவளுக்கு தன் விஷயத்தில் ருத்ரா சம்பந்தப்பட்டிருப்பது தெரியாது.

                     ஆனால் , ஒரு மூன்றாவது மனுஷியாகவே, ஒரு உயர்பதவியில் இருக்கும் காவல் அதிகாரியாகவே அவளை பார்த்து பிரமித்தாள் துர்கா..

                        செய்தி முடிந்து அடுத்த செய்திகள் தொடர, சேனலை மாற்றினாள். இவள் டீவியை மாற்றிக் கொண்டு அமர்ந்திருந்த நேரத்தில் தான் வள்ளி அவள் வீட்டிற்கு வந்தார்.

                     அவர் வந்ததே அதிசயம் என்றால், அவரோ துர்காவிடம் “நான் கடைக்கு போறேன் துர்கா.. வீட்டுல வெட்டு வெட்டுன்னு உட்கார்ந்திருக்க முடியல.. நீ திரு கிட்ட சொல்லு..” என்று நிற்க, முழித்தாள் அவள்.

Advertisement