Advertisement

இவள் எந்தன் சரணமென்றால் 13

 

                                                        அந்த டீபாயில் இருந்த மதுபாட்டில்களும்,காலி பாட்டில்களும் திருவை பார்த்து நக்கலாக சிரிப்பது போலவே தோன்றியது அவனுக்கு. மதியம் அவள் கேட்டதும் சாவியை கொடுத்து சென்ற தன் மடத்தனத்தை நொந்து கொண்டவன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.

 

                                                 “இதுல நீயே திறந்து பாரு ன்னு ஐடியா வேற.. உனக்கு தேவைதான்..” என்று அவன் மனம் அவனை கொஞ்சி கொண்டிருக்க, மீண்டும் பாவமாக துர்காவை பார்த்தான் திரு. அவள் பார்வை அவன் வந்தது முதல் அவன் முகத்தை விட்டு வேறெங்குமே அசையவில்லை.

 

                                                  அவன் முகம் வரிசையாக காட்டிய அத்தனை உணர்ச்சிகளையும் பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தவள் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திரு எப்படி முழித்தாலும் ஏனோ துர்காவுக்கு அது திருட்டு முழியாகவே தோன்றியது.

 

                                                என்ன தான் சொல்றான்.. பார்க்கறேன்என்ற எண்ணத்தில் தான் அவள் அமர்ந்திருந்தாள். திரு எதுவும் பேசவில்லை என்றதும் அவள் பாட்டிற்கு எழுந்து அவர்களின் அறைக்கு சென்றுவிட, திரு அவசரமாக அவள் பின்னால் ஓடினான்.

 

                                              அறைக்குள் நுழைந்தவள் தான் இந்த வீட்டுக்கு வரும்போது கொண்டு வந்திருந்த பேக்கை தேடி எடுத்தவள் பீரோவில் இருந்த துணிகளை எடுத்துக் கட்டிலில் போட, திரு அதிர்ந்தே போனான். “அடிப்பாவி வீட்டை விட்டு போறாளாஎன்று பயந்து போனவன் வேகமாக அவளை நெருங்கி அவள் கையில் இருந்த துணிகளை பிடுங்கி பீரோவில் போட்டு பீரோவின் கதவை மூட, துர்கா அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

 

                                             இப்போது திரு தானும் அவளை முறைத்தவன் கட்டிலில் இருந்த பையை தூக்கி தூரமாகி வீசிவிட்டான். துர்கா அப்போதும்நீ செய்டாஎன்றுதான் நின்றிருந்தாள். அவள் பார்வையை உணர்ந்தவனாக அவளை நெருங்கியவன்எதுக்கு இப்போ துணியெல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்க.. என்ன செய்றதா பிளான்..” என்று முறைப்பாகவே கேட்க

 

                                      “ஒரு குடிகாரனோட குடும்பம் நடத்த வேண்டாம்அதுதான் பிளான்நான் என் அம்மா வீட்டுக்கே போறேன்.. நீங்க தினமும் குடிச்சிட்டு கூத்தடிங்க.. ” என்றுவிட்டாள் அவள்.

 

                                     அவள் குடிகாரன் என்றதில் கோபம் கனன்றது திருவிற்கு. இவள் ஏதோ என்னை முழுநேர குடிகாரன் போல் சொல்றாளே என்று கடுப்பானவன்ஏய்.. யாரை குடிகாரன் ன்னு சொல்ற.. வாய் அதிகமா ஆகுதா.. உனக்கு ரொம்ப தெரியுமா??” என்று அவளை கடுமையாக முறைக்க

 

                                    அவனின் கோபம் பயம் கொடுத்தாலும் தயங்கவே இல்லை அவள். ஒரு குடிகார தந்தையால் தன் தாயின் வாழ்வு நாசமானதை கண்முன் கண்டவள் அல்லவா. அந்த நிலை தனக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாள். இப்போதும் அவன் கோபமாக கத்தி முடித்து நிற்க, அவள் நக்கலாக வெளியே தெரிந்த அந்த டீப்பாயை எட்டிப் பார்த்து மீண்டும் அவனை பார்த்தாள்.

 

                                 அவள் பார்வை திருவுக்கு புரியஏய் அதெல்லாம் என்னோடது தான்.. ஆனா நான் மொடா குடியன் கிடையாது. நீ நினைக்கிற மாதிரி தினமும் எல்லாம் குடிக்க மாட்டேன்எப்போவாவது தோணும்போதுதான். அதுக்கு இவ்ளோ பண்ணுவியா நீ..”

 

                                “பையை தூக்கிட்டு கிளம்புவியா.. இந்த வாசலை தாண்டிப் பாரு, தெரியும் திரு யாருன்னுஎன்று வெளிப்படையாகவே மிரட்டினான் அவன்.

 

                                   அவன் பேச்சில்செய்றதையும் செஞ்சிட்டு இவ்ளோ வாய் பேசுறான் பாரேன்என்று கடுப்பான  துர்காஎன்னை பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ஒருமுறை குடிச்சாலும் குடிகாரன் தான். என் அம்மா பட்ட அத்தனை கஷ்டத்தையும் கண்முன்னாடி பார்த்துருக்கேன் நான். எனக்கு இந்த குடியோட குடும்பம் நடத்துற வாழ்க்கை வேண்டாம்.”

 

                                     “இந்த மூணு நாளா நீங்க அப்படி ஒன்னும் என்னை தேடலையே.. இதோட தானே குடும்பம் நடத்தி இருக்கீங்க. இனிமேலும் அப்படியே இருங்க. நான் வேண்டாம் உங்களுக்கு..” என்று ஆத்திரமாக கத்தியவள் வாசலை நோக்கி முன்னேற, அவளுக்கு எதிரில் நின்றிருந்த திரு தன் இடக்கையை அவள் வயிற்றுக்கு குறுக்காக நீட்டி இருந்தான்.

 

                                      அவள் கவனிக்காமல் இன்னொரு அடி எடுத்துவைக்க, அவளை ஒரே இழுப்பில் இழுத்தவன் கட்டிலில் தள்ளி இருந்தான். துர்கா அவள் முதலில் எடுத்து வெளியில் போட்டிருந்த துணிகளின் மீதே விழுந்து வைக்க, திரு அவளை முறைத்து கொண்டு நின்றான்.

 

                                   துர்கா அவனின் இந்த அடாவடியில் பயந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவே இல்லை. அவளும் அவனை விடாமல் முறைத்து கொண்டிருக்க, திரு தான் தணிந்து போக வேண்டி இருந்தது. தவறு அவன் மீதானது அல்லவா.

 

                                  எனவே இந்த விஷயத்தை முடிக்க நினைத்தவன் பொறுமையாகவே அவளிடம் பேச முடிவு செய்தான். “துர்கா.. நீ நினைக்கிற அளவுக்கு நான் குடிக்க மாட்டேன். என் லிமிட் என்ன ன்னு எனக்கு தெரியும். அதுகூட எப்பவும் குடிக்கமாட்டேன்டி. எப்போவாவது ஒரு நேரம் தான். அதெல்லாம் ரொம்ப முன்னாடி வாங்கி வச்சதுஇன்னிக்கு உன் கண்ல பட்டுடுச்சு..” என்று அவன் அமைதியாக கூறிவிட்டு அவள் முகம் பார்க்க

 

                          “இந்த மூணு நாளா நீங்க குடிக்கவே இல்லையா..” என்று தீவிரமாக கேட்டாள் மனைவி.

 

            மறுக்க முடியாதே அவனால்..”முதல் நாள் மட்டும்.. நீ சண்டை போட்டு, அழவும் கஷ்டமா இருந்தது.. அதனாலதான்அன்னிக்கு மட்டும்தான்.” என்று அவன் இழுக்க

 

                         “சோ என்கூட சண்டை போட்டா திரும்பவும் குடிப்பீங்க..” என்று அதிலேயே நின்றாள் அவள்.

 

                “லூசாடி நீஅடுத்த நாள் கூடத்தான் நாம சண்டை போட்டோம். அப்போ குடிச்சேனா..” என்று அவன் கத்த,

 

                 “எவ்ளோ சத்தம் போடறீங்க நீங்க. குடிக்கறதே தப்பு, இதுல கோபம் வேற வருதா உங்களுக்கு. ரெண்டாவது நாள் நாம எங்க சண்டை போட்டோம்.. அதான் அன்னைக்கு தொட்டு இருக்க மாட்டிங்க..” என்று சரியாகவே சொன்னாள் அவள்.

 

                       அவளிடம் தானே சென்று மாட்டிய தன் விதியை நொந்து கொண்ட திருநான் என்ன சொன்னாலும் நம்பவே மாட்டியா துர்கா நீ.. ” என்று பாவமாக கேட்க

 

                      “என்ன சொன்னிங்க நீங்க..” என்றாள் மனைவி.

 

               “இவ்ளோ நேரம் உன்கிட்ட தானடி பேசிட்டு இருக்கேன்..”

 

           “இப்போதான் சரியா சொல்றிங்க.. என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க.. இதுவரைக்கும் குடிக்கறது தப்பு ன்னும் சொல்லல.. இனி குடிக்கமாட்டேன் ன்னும் சொல்லல..” என்று அவனை அழுத்தமாக பார்த்தாள் துர்கா.

 

                   அவள் எங்கே வருகிறாள் என்று அப்போதுதான் புரிந்தது திருவுக்கு. ஆனால் புரிந்த விஷயம் நடக்கும் என்று தோன்றவில்லை. அவனின் குடிப்பழக்கம் அவன் இன்று நேற்று பழகியதில்லை. அவனது இருபது வயதில் உடல் வலிக்காக அவன் பழகிக் கொண்டது. இப்போது அவனுக்கு வயது முப்பதை தொட்டிருக்க, ஒரேநாளில் விட்டுவிட முடியாது என்பது திண்ணமாக புரிந்தது அவனுக்கு.

 

                       அதை அப்படியே மனைவியிடம் சொல்லவும் செய்தான் அவன். “துர்கா.. என்னால ஒரேடியா விட முடியும் ன்னு தோணல எனக்கு..” துன்று ஆன் ஆரம்பிக்கும்போதே அவன் மனைவி கடுமையாக முறைக்க  “ஏய் உனக்கு புரியுதா இல்லையாகிட்டத்தட்ட பத்து வருஷமா பழக்கம். ஒரேநாள்ல மறந்திடுவேனாஉன்கிட்ட சத்தியமா குடிக்க மாட்டேன் ன்னு சொல்லிட்டு, திரும்ப குடிச்சுட்டு வந்தா என்ன பண்ணுவ..” என்று கேள்வி கேட்டு நின்றான் திரு.

 

                       “நான் உங்ககிட்ட சத்தியம் பண்ணுங்க சொன்னேனா.. அட்லீஸ்ட் விட்டுடறேன் ன்னு ஒரு வார்த்தை சொல்லலாம் இல்ல. அதுக்கு வாய் வருதா உங்களுக்கு..” என்று துர்கா கத்த

 

                        “சரி.. கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கறேன்.. இதோட இதை விடறியா.. ” என்று அவன் சலிப்பாக சொல்லிவிட்டு கட்டிலில் அமர்ந்தான்.

 

                   அவள் அதோடு விடுவதாக இல்லை. சில நிமிடங்கள் அவன் முகத்தையே பார்த்தவள் அவன் திரும்பி அவளை பார்க்கவும்அப்போ அதையெல்லாம் என்ன பண்றது.. ” என்று அந்த டீப்பாயை காட்டினாள்.

 

                   “என்ன பண்றது.. அதான் குறைச்சிக்கறேன்னு சொல்லிட்டேனேடி..” என்று பாவமாக கேட்க

 

              “எப்படி இதையெல்லாம் மேலே ரூம்ல ஒளிச்சு வச்சிட்டு நீங்க கொஞ்சம் கொஞ்சமா குறைப்பீங்க.. இதை நான் நம்பனும்.. என்னை பார்த்தா பைத்தியக்காரியா தெரியுதா உங்களுக்கு. ” என்றவள் மீண்டும் அவனை முறைக்க

 

                       “என்னதான்டி செய்ய சொல்ற என்னை..”

 

             “எல்லாத்தையும் தூக்கி கீழே கொட்டுங்கஉங்களுக்கு திரும்பவும் எப்போவாவது ஞாபகம் வந்தா அப்போ போய் வாங்கிக்கோங்க.. இதெல்லாம் தூக்கி வெளியே போடுங்க.. இப்போவேஎன்று அவள் ஒரே பிடியாக நிற்க, திருவோ அதிர்ந்து போனான்.

Advertisement