Advertisement

               மற்றபடி பெரும்பாலும் நீ இங்கு நலமாயிருக்கிறாய். நான் அங்கு நலமாயிருப்பேன் என நம்புகிறேன். மாமாவைக் கேட்டதாகச் சொல். உறவினர் யாவரையும் மிக அன்புடன் விசாரித்திருப்பதாக கூறு என்று நல்ல முறையில் எழுதி விட்டு காதுக்குள் பேசுகிறான் அரசு என்று ஒரு பக்கம் எழுதுவான்.

               அதனை வாசிக்கும் பொழுது கனகுக்கு இப்படியும் ஒருவர் எழுதுவாரா என்று தோன்றும். எழுத்துகளின் சாரம்சம் அவன் தொலைவில் இருக்கிறான் என்பதையே மறந்து இருவரும் ஒருங்கிணைந்து குடித்தனம் நடத்தும் காட்சியைத் தான் உருவாக்கும். அதனால் பிறரிடம் மடல் காண்பிக்க முடியாது. அவள் மட்டுமே படித்து படித்து இன்புறுவாள்.

               மடலைத் தூக்கித் தரமுடியாது. யான் பெற்ற இன்பம் பிறர் பெறக்கூடாதல்லவா. சிரிப்புடன் தந்தையிடம் மடல் காட்ட மறுத்து விடுவாள்.

               மாதத்திற்கு ஒரு நாள் அருகிலிருக்கும் நகரத்திலுள்ள பேங்கிற்குச் சென்று ரூபாய் முவாயிரம் மட்டுமே குடும்பச் செலவிற்கு எடுத்து வருவாள்.

               அரசு தனது பெயருக்கு அரசுடமை வங்கியில் கணக்கு ஆரம்பித்து, அவனது சம்பளம் அப்படியே இங்குள்ள வங்கி பாஸ்புக்கில் சேர்ந்து விடும்படிச் செய்திருந்தான்.

               கனியிடம் பேங் செக்புக் ஒன்றும் வாங்கிகொடுத்திருந்தான். உனக்குத் தேவையான பணத்தை நிரப்பி உன் கையெழுத்திட்டு பெற்றுக்கொள் என்று ஏற்பாடு செய்திருந்தான்.

               இருவரும் ஒருவருக்கொருவர் உள்ளத்தால் மிக நெருக்கமாக இருந்ததால் பிரிவு அதிகமானச் சோர்வை ஏற்படுத்தவில்லை.

               அரசு புகைப்படத்துக்குள்ளும் கனி மடலுக்குள்ளும் காலத்தைக் கழித்தனர்.

               இருப்பினும் ஒர் ஆண்டுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாதென்பதை அறிந்த கம்பெனி மேலிடத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்தான்.

               விண்ணப்த்தை பார்த்த நிர்வாகி அரசுவை நேரில் வந்து சந்திக்க சொன்னார். அரசு சென்றான். நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய். இந்தியாவில் உன் அப்பன் வீட்டில் இருப்பதாக நினைப்பா? தினம் எனக்கு விடுப்பு விடுப்பு என்கிறாய். உன் வேலை முடக்கத்தால் கம்பெனிக்கு எவ்வளவு இழப்பு ஏற்படும்.

                                             விண்ணப்பத்தைத் தூக்கி அதை மேல் வீசி விட்டு இரண்டு வருடத்திற்கு பின்தான் உனக்கு விடுப்புத் தரமுடியும் நீ சொல்லலாம் என்று கூறிவிட்டார்.

                                             அரசுக்கு ஆத்திர ஆத்திரமாக வந்தது அடித்து விடலாம் போல் முரட்டுத்தனம் ஆவேசமாய் எழுந்தது. கனியின் அன்பு முகம் தோன்றி தடுத்து நிறுத்தியது. தன் கையாலாகாத் தனத்தை எண்ணி வெறுப்புற்றான் வேதனை அடைந்தான்.

                                             கனகு தீ என்ன சொன்னாய் பத்துமாதத் தானே பாந்தமாய் சென்று வாருங்கள் பொறுத்திருப்பேன் என்பாயே. படுபாவிகள் இருபத்து நான்கு மாதம் நீண்ட தூரத்தை அனுபவிக்க வைத்து விட்டார்களே.

                                             முதல் நம்பிக்கையே இப்படி வீணாகி விட்டதே. நீ என்னைப் பற்றி என்ன நினைப்பாய். என் வருகைக்காகக் காத்திருந்து ஏமாந்து விற்றம் கொள்வாயே என்று புகைப் படத்துடன் பேசினான்.

                                             ஒரு வாரம் தான் பொறுத்திரு அடுத்த வாரத் துவக்கத்தில் கனியின் அரசன் கனியின் கரங்களில் அடைக்கலம் தேடுவான். என்ற வாசகத்தைப் படித்துப் படித்து நெஞ்சினில் பதித்து விட்டார்.

                                             சூரியன் வருவுக்காகக் காத்திருக்குதல் பனித்துளி போல உருகிக் கரைந்து கொண்டிருந்தான்.

                                             மணாளன் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தவள் கரங்களில் மடலை மட்டுமே தந்து சென்றார். தபால்காரர்,

                                             வழக்கமான களிப்புடன் மடலை வாங்கிய கரத்தில்லாமல் வாங்கி ஏதோ வாவிக்கலானாள். இன்னும் ஓராண்டுக் காலம் காத்திருந்து கான் தொடர வேண்டும் என்ற செய்தி அவளை மயக்க முற்று கீழே விழச்செய்தது.

                                             மகள் கீழே சாய்ந்தகை அறிந்த தந்தை ஓடி வந்து அவள் கையிலிருந்தக் காகிதத்தை எடுத்துப் படித்தார். செய்தியறிந்து கவலையடைந்த போதும் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மகளை மயக்கம் தெளிவித்தார்.

                                             அம்மா மகளே இது தான் இப்படித் தான் நடக்கும் என்றுதான் மலைத்து மலைத்து நின்றேன் புரிகிறதா. இனி என்ன செய்ய காத்திரு காதல் கனிந்தது போல் காலம் கனியட்டும் என்றார்.

                                             சூரியன் தன் வரவை மறந்தாலும் வாரம் ஒரு மடல் வருவது மட்டும் தவறியதில்லை. அரசு புறப்பட்டு வருகிறான் என்ற செய்தியைத் தாங்கிய மடலும் வந்தது. மகிழ்ந்தது கனியின் உள்ளம்.

                                             அரசு இன்று வருகிறான். மணமகளாய் வரவேற்று குதுகலித்ததைக் காட்டிலும் மாப்பிள்ளையாய் வருவதை மிக ஆர்வத்தோடு வரவேற்கலானார் சண்முகநாதன்.

                                             புகை வண்டி நிலையம் சென்று காத்திருந்தனர். அன்றைக்கென்று தாமதமாக வந்து கனியின் வயிற்றெரிச்சலைக் கட்டிக்கொண்டது புகைவண்டி

                                             அரசுவை உதிர்த்து விட்டு புகைவண்டி நகர்ந்தது. இரண்டு ஆண்டுகள் தேக்கி வைத்திருந்த காதல் வெள்ளம் அவைகடலெனப் புரண்டு வர அரசு கனியைத் தாவி அணைத்தான்.

                                             மாப்பிள்ளை இது புகைவண்டி நிலையம் மறந்து விடாதீர்கள். ஊர் கூடி தேர் இழுப்பது போல அனைவர் கண்களும் உங்களையே இழுக்கிறது.

                                             கார் கொண்டு வந்திருக்கிறோம் வாருங்கள் வீட்டிற்குச் செல்வோம். அங்கு போய் எல்லாம்.. என்றார்.

                                             என்ன மாமா நீங்கள் கண்ணை மூடி கொள்ளுங்கள். என்கனி என் பாடு இடையில் நீங்கள் வராதீர்கள் என்றான்.

                                             புதுமணத்தம்பதிகள் போன்று காரணமில்லாமல் சிரித்தனர். பொருளே இல்லாது பேசினர். இருவீட்டு உறவினர்கள் வீட்டிற்கும் சென்று வந்தார்கள். இரவில் சொந்தக் கூட்டுக்குள் அடைந்து கொண்டார்கள்.

                                             கனி இது மிக நன்றாயிருக்குதில்லையா என்றான். எதுங்க என்றவருக்கு சமையல் வேலை வீட்டு வேலை என்று எதுவுமே இல்லாமல் என் கனி என் அருகினிலே இருக்கிறாய். வீடு வீடாய்ச் சென்று வயிறு வலி இருந்தாதின்று வருகிறோம். இரவினில் களியாட்டம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கப்பா. உனக்கு எப்படியே என்றான்.

                                             எனக்கும் பிடித்திருக்கிறது. காய்ந்த மாடு கம்பிலே விழுந்த கதையாகி விடாமல் பகலில் தப்பித்துக் கொள்கிறேனே அதனால் என்றாள்.

                                             அன்று வெள்ளிக்கிழமை கனி இன்று கோவிலுக்குச் சென்று வருவோமா என்று கேட்டான் அரசு

                                             சரிங்க எனக்கும் கோவில் வர ஆசைதான் ஆனால் இன்று எழுந்திருக்கும் பொழுதே தலை பாரமாய் இருப்பது போல் இருக்கிறது.

                                             இன்று சமையல் வேலை வேறு இருக்கிறது. முடித்து குளித்துத் தயாராகிறேன் என்றாள்.

                                             சொன்னபடியே புறப்பட்டு வந்தாள். வாயில்படியில் இறங்க முயன்ற பொழுது சரிந்து விழுந்தாள்.

                                             தந்தை கனகு எம்மா கனகு என்று எழுப்பினார். கணவன் பதறினான். மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள் கனகு. மருத்துவர் கனகு கருவுற்றிருப்பதை உறுதிசெய்தார். கனியும், அரசுவும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். விடுமுறை முடிந்து அரசு பணிக்குச் சென்றான். பேறுகால சமயத்தில் அரசு விடுமுறைக்கு விண்ணப்பித்தான்.      மனம் இரங்கினார் முதலாளி. பத்து நாட்கள் விடுமுறைக்கு அனுமனுதி கொடுத்தார்.

                                             அரசு விடுமுறைக்கு வந்த மூன்றாம் நாளே கனி அழகான ஆண் மகவை ஈன்றெடுத்தாள். அனப்பறிய சந்தோஷம் அடைந்தனர்.

                                             மனையாட்டியையும் மகனையும் கையில் வைத்துத் தாங்கிய அரசு நொடியாய்க் குறைந்து விட்ட விடுமுறையைத் தாண்டி புறப்பட்டான்.

                                             வேலையில் சேர்ந்த பின்பும் எண்ணமெல்லாம் பாரியாளையும், பாசமிகு மகனைச் சுற்றியுமே வந்தன.

                                             மாதங்கள் உருண்டோடின. பணமும் பல்கிப் பெருகியது. அருமை மகனுக்கு பிரகாஷ் ஆனந்த் என்று பெயர் சூட்டி அருமைப் பெருமையாய் வளர்த்து வந்தாள் கனி. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பிரகாஷ் பிரகாசித்தான்.

                                             குழந்தையின் மழலையிலே லயித்திருந்த கனி ஆண்டுகள் இரண்டு கழித்திருந்ததைக் கவனித்தாளில்லை அமிழ்தினும் இனிய மழலைக் குரலை தன் கணவன் கேட்கக் கொடுத்து வைக்கவில்லையே. நம் தந்தை இதையெல்லாம் அறிந்து தான் வெளி நாட்டு வேலை வரன் வேண்டாம் என்று எண்ணினார் போலும் என்று எண்ணி மனதிற்குள் மறுகதிர் தொடங்கினாள்.

                                             அரசுவோ நேர் மாறாகச் சிந்தித்தான். இது நாள் வரைதான் நான் மட்டுமே மடல் எழுதிக் கொண்டிருந்தேன். இப்பொழுது கனிமழலைச் சொல் கேட்க எத்தனை ஆவலாய் உள்ளேன். நம் பிள்ளை இப்படி பேசுகிறான். அப்படி செய்கிறான் என்று ஒரு மடல் கூடவா எழுதக் கூடாது.

                                             மடலிலாவது என் மகனின் பிள்ளை விளையாட்டைப் படித்து ரசிப்பேனே. கனிமழலை குரல் கேட்க இயலாதவனாகி விட்டேனே என மனம் வருந்தினான்.

                                             என் மகனுக்கு இரண்டு வயது ஆகிவிட்டது. இனியும் கிராமத்திலே குடியிருந்தால் நாம் கனவு கண்டதுபோல ஆங்கிலக்கல்வி பயில வைக்க முடியாது.

                                             எனவே நகரத்தில் ஒரு வீடு கட்டி நகரத்தில் குடியேற வேண்டும். கனிக்கும் அந்த விஷயங்கள் எல்லாம் விடுமுறை வாங்கிச் சென்று அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டான்.

                                             கம்பெனியின் எம்.டியிடம் நேராகச் சென்றான். ஐயா தாங்கள் தான் எனக்கு உதவிட வேண்டும். எனது ஒப்பந்த காலத்தில் ஐந்து வருடங்கள் கழிந்து விட்டன. ஐந்து வருடத்தோடு ஒப்பந்தத்தை நிறைவு செய்து தருவதாயிருந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

                                             இல்லையெனில் எனக்கு ஓராண்டு விடுமுறை தாருங்கள். அந்த ஒரு வருடத்தையும் சேர்த்து ஆறு ஆண்டுகள் நான் பணிபுரிகிறேன். அதற்கு மேலும் கூட பணி புரிவதானாலும் பணியாற்றுகிறேன். இப்பொழுது ஓர் ஆண்டு விடுமுறை வேண்டும் தயவுபண்ணுங்கள் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.

                                             எம்.டி-க்கு ஏனோ அரசுவிடம் தனி ஒரு பாசம் ஏற்பட்டிருந்தது. அவன் குடும்பத்தின் மீது வைத்தப் பற்று அவருக்கு வியப்பாயிருந்தது. சரி உன்னை நான் நம்புகிறேன். நீ ஓராண்டு விடுமுறை எடுத்துச் சென்று வா. அதற்காக விண்ணப்பங்கள் ஆவணங்கள் நிரப்பி நிர்வாகியிடம் சேர்த்து விடு என்றார்.

                                             அளவில்லா ஆனந்தம் கொண்ட அரசு அவருக்கு நன்றி சொல்லி அவர் கரங்களை எடுத்துக் கண்களை ஒற்றிக் கொண்டான்.

                                             வருகிறேன் என்று மடல் கூட எழவில்லை. யாரும் எதிர் பாரா வண்ணம். பண்டம், பரிசு பொட்டல்களுடன் காரில் வந்து இறங்கினான்.

                                             அவசரத்தில் அண்டாவிற்குள் கை நுழையாது என்பது போல கனகு அங்கும் இங்கும் ஓடினாள். என்னசெய்வதென்று புரியவில்லை. தொட்டிலில் படுத்திருந்த குழந்தையைத் தூக்கி அரசு கையில் கொடுத்தாள்.

                                             குழந்தை தனகு உருண்டை விழிகளை அகல விரித்து அரசுவைப் பார்த்து முல்லைப் பல் வரிசை தெரியச் சிரித்தது. கனகு அப்பா செல்லம் அப்பா சொல்லு உன்னுடைய அப்பாடா கண்ணா என்றாள் கனகு.

                                             அரசுவின் தோளை இறுகப் பற்றிக் கொண்டு அப்பா என்று கொஞ்சியது. இரத்தப் பாசம் என்பது இது தானோ மகன் கன்னத்தில் முத்தமழை பொழிந்தான்.

                                             மக்கள் மெய்தீண்ட உடற்கின்பம் என்பதால் இன்பமடைந்தான். சிறு கை அழாவிய கூழ தேவாமிர்தமாய் தித்தித்தது. கனகும், அரசம் இனிமையாக இல்லறத் தோணியில் பயணித்தனர்.

                                             மதியமைச்சராம் மனைவியிடம் தன் திட்டமனைத்தும் கூறி ஒப்புதல் வாங்கி நகரத்தில் நிலம் வாங்கி, அரண்மனை போன்று வசதிமிக்க வீடு ஓன்றைக் கட்டத் துவங்கினான்.

                                             டவுணுக்கும் ஊருக்குமாக கம்பி, டைல்ஸ் அது இது வாங்கவென்று அலைந்து திரிந்தான்.

                                             ஒருவாறு வீட்டினைக் கட்டி முடித்து, புதுமனை புகுவிழா நடத்தினான். மனைவிக்கும் மகனுக்கும் தங்க நகைகள் வாங்கிப் பரிசளித்தான். உறவினர்க்கெல்லாம் புத்தாடை பரிசளித்தான்.

                                             புகுமனை புகுவிழாவன்றே தனது மகனின் நான்காவது பிறந்த நாளையும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.

                                             அன்று இரவு அலங்காரக் கட்டிலில் பட்டு மெத்தையில் படுத்திருந்த பொழுது கனகைப் பார்த்து என் இதயக்கனிக்கு அவளின் அரசு கொடுத்த வசந்த மாளிகைச் சுவர்க்கம் இதுதான் உனக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டான்.

                                             நீங்கள் என் அருகில் இருந்தால் குடிசை வீடு கூட எனக்குச் சுவர்க்கப்புரிதான்.

                                             நீங்களே உழைத்துச் சம்பாதித்தப் பணத்தில் பார்த்துப் பார்த்து ஒவ்வொரு இஞ்சாக வளர்வதைப் பார்த்து ரசித்து கட்டிய இந்த இல்லம் எனக்குப் பிடிக்காமல் போகுமா?

                                             என்ன விடுமுறை முடிந்து நீங்கள் வேலைக்குச் சென்று விட்டால் இத்தனை பெரிய வீட்டில் நானும் என் மகனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு எப்படி இருக்க முடியும் என்பது தான் பிரச்சினை என்றான்.

                                             நான்தான் வெகு விரைவில் நாட்களைக் கடத்தி விட்டு வந்து விடவேனே. நம் மகனை பள்ளியில் சேர்த்து விட்டுச் செல்கிறேன். நீ சமையல் வேலையோடு மகன் படிப்பையும் சேர்த்துக் கவனித்தால் நேரம் போவதே தெரியாது.

                                             மேலும் முன்பு தொலைபேசி இணைப்பு கிடையாது. நான் தொலைபேசி இணைப்பிற்கான அத்தனை காரியங்களையும் செய்து விட்டேன். அடுத்த வாரமே இணைப்பு கிடைத்து விடும். தொலைபேசியில் வாரமொரு நாள் பேசிக் கொள்வோம் என் மகன் குரலையும் கேட்டுக் கொள்வேன். உனக்கும் மடலைப் படிப்பதைவிட தொலைபேசியில் பேசும் பொழுது இருவரும் கருத்தை பரிமாறிக் கொள்வதால் சந்தோசமாகவே இருக்கும்.

                                             எனவே நீ கவலையடையாதே. எல்லாம் நன்மைக்கே என்று நினைத்திடு என்றான்.

                                             நீங்கள் கூறும் ஆறுதல் மொழி தென்றலாய் என் இதயத்தை வருடுகிறது. இருப்பினும் மனதிற்குள் என்னையறியாமல் ஏதோ ஒரு வெறுமை ஊடுறுவது போலவே உள்ளது என்றாள்.

                                             மகனை நகரத்திலேயே நல்ல பள்ளி என்று பெயர் வாங்கிய பெரிய பள்ளியில் அதிகளவு நன்கொடை கொடுத்துச் சேர்த்தான்.

                                             தொலைபேசி இணைப்பும் கிடைத்து விட்டது. இனி பிரயாணத்திற்கான ஏற்பாடுதான் பாக்கியுள்ளது. கனி இங்குள்ள அதிரசம், அச்சுமுறுக்கு, தேன் மிட்டாய் போன்ற பலகார வகைகள் அங்குள்ள என் நண்பர்க்கு மிகவும் விருப்பமானது.  உன்னால் செய்து தர முடியுமா அல்லது கடையில் வாங்கிக் கொள்ளட்டுமா என்று கேட்டான்.

                                             கடையில் ஏன் வாங்க வேண்டும். அது அவ்வள நன்றாய் இராது. நானே பக்குவமாய் செய்துத் தருகிறேன் எடுத்துச் செல்லுங்கள் என்றாள்.

Advertisement