Advertisement

               கனகு எப்படித்தான் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாளோ. அனிச்சை செயலாய் நடத்த போதிலும் கை, கால்கள் வெடவெடத்து நெஞ்சம் படபடப்பதை அவளால் உணர முடிந்தது.

               என்னம்மா கனகு எங்கு சென்றாய்? பசிக்கிறதே அன்னபூரணித்தாயே பசியாற்ற வருவாயா பெரியண்ணன் கேட்க தன்னைச் சுதாரித்தாள் கனகு.

               அண்ணா. கோவிலிலிருந்து வந்த பின்பு தான் பார்த்தேன். குடத்தில் தண்ணீர் இல்லை. தண்ணீர் எடுத்து வந்து உணவு பரிமாறலாம் என்று தண்ணீர் எடுக்கச்சென்றேன். என்றாள் கனகு.

               இந்த வீட்டில் எதுவானாலும் அத்தையை தானே தேடுகீறீர்கள். அத்தை என்ன உங்கள் எல்லோருக்கும் எடுபிடியா? இங்கே பாருங்கள் எங்கள் வெல்லக்கட்டி கறுப்பு அத்தை இன்னொரு வீட்டிற்கு விளக்கு ஏற்றச்செல்ல வேண்டிய பைங்கிளியாக்கும்.

               அவர்களை உட்கார வைத்து சும்மாக நீங்களே பரிமாறுங்கள் என்று ஒரு போடு போட்டாளே மூத்த அண்ணனின் பரந்தாமன் மூத்த மகன் சுபேஷ்.

               அனைவரும் கொல்லென்று சிரித்தனர். கனகுக்கு நெஞ்சம் திண்ணென்று அதிர்ந்தது.

               சரிடா சுபேஷ் உன் அத்தை எடுப்பார் கைப்பிள்ளையில்லை. உன் அத்தை உட்காரட்டும் நாங்கள் பரிமாறுகிறோம். அவள் நம் வீட்டு குத்துவிளக்கு நம் எல்லோரையும் இத்தனை காலமும் ஒளி தந்து காத்து வந்தாள்.

               அவள் அடுத்தாத்து குடும்ப விளக்காக மாறியதும் நாம் அவளைத் தாங்கி கொள்வோம் என்றாள் சுபேசனின் தாயார்.

               போங்க அண்ணி அவன் சின்னப் பயைன் ஏதோ குறும்பாகச் சொல்கிறானென்றால் நீங்கள் போய் நான் அடுத்த வீட்டிற்கெல்லாம் போக மாட்டேன். இலை போட்டுவிட்டேன். எல்லோரும் உட்காருங்கள் என்றாள் கனகு.

               அண்ணி! போக மாட்டேன் என்பது என்னை சீக்கிரம் அனுப்புங்கள் என்று சொல்வது மாதிரியில்லை. விரைவிலேயே நம் வீட்டில் கல்யாண முழக்கம் கேட்கும் என்றான் இரண்டாவது அண்ணன்.

               சிரித்துப்பேசி குதுகலமாக உணவை உண்டனர். சண்முகநாதன் பேச்சிடையே என் பேரன் சொல்லியதை நினைவு வைத்திருந்து வரன் தேட முயலுங்கள் என்றான். கனகுவின் மூன்றாவது அண்ணன் சேர்மநாதன் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றான்.

               அண்ணா என்னைத் தள்ளிவிட்டால் உனக்கு வழிபிறக்கும் என நினைக்கிறாயா? நான் தடையாக இருக்கவில்லை. முதலில் நீ உன் காலில் பூ விலங்கை மாட்டிக்கொள். அதன் பிறகே எனக்கு திருமணம் பற்றி பேச வேண்டும் என்றாள்.

               கனகு எப்படி பேசி சமாளித்தாலும் அவளால் நிதானத்தில் இருக்க முடியவில்லை. கூட்டு வைக்கச் சொன்னால் குழம்பு ஊற்றினாளர். ரசம் ஊற்றச் சொன்னால் பாயாசம் ஊற்றினாள்.

               எப்படியோ விருந்துச் சாப்பாடு நிறைவடைந்தது. அடுத்த நாளே முதல் இரண்டு அண்ணன்களின் குடும்பமும் கோவை சென்றது. மூன்றாமானவன் உத்தியோகத்திற்கு தருமபுரி சென்றான். நான்காமானவன் பொறியியல் பட்டப்படிப்பு படித்து மதுரையில் நல்ல உத்தியோகத்திலிருக்கிறான். அவன் மதுரை சென்றான். தகப்பனும் மகளும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.

               தெருவில் பேச்சொலி கேட்க எட்டிப் பர்த்தாள் கனகு. முருகானந்த்தும் கனியரசனும் சென்று கொண்டிருந்தனர். கனியரசன் கழுத்து வலிக்க இவள் வீட்டையே எட்டிப் பார்த்துக்கொணடு சென்றான்.

               டேய் அரசு வேகமாக வாடா இந்தப் பேருந்தை விட்டு விட்டால் இனி மாலை மூன்ற மணிக்குத்தான் உன் ஊருக்கான பேருந்து வரும். கழுத்துச் சுருக்கி கொள்ளப் போகிறது. நேர்கொண்ட நன்னடை நடந்து வா என்றான் முருகானந்த் தண்ணீரில் அமிழ்த்து விடப்பட்ட பந்து மேலெழும்புவதுபோல் சுவருக்கு மேலாக கறுப்பழகி கனகுவின் தலைதெரிய காந்தக்கண்களைப் பார்த்த அரசு கையசைத்து விடை பெற்றான்.

               மணம் மல்லிகை மலரென மகிழ்ந்து மணம் பரப்ப, சூரியக்காந்திப்பூவாய் முகம் பிரகாசிக்க வீட்டிற்குள் வந்தாள். கனகா குடும்பத்தினர் வருகையால் கலகலவென்று இருந்த வீடு அவர்கள் சென்று விட்டால் கொலுசுகளணிந்த காலில் கொழுசு கழற்றப்பட்டுவிட்டது போல் வெறுமையாக அடைத்திருந்தது. அப்படியும் அவள் மனம் துள்ளியது ஏன் என்று அவளையே கேட்டுக்கொண்டாள்.

               இதுதான் காதலாக இருக்குமோ என்று நினைத்த மறுகணமே வேண்டாம் நமக்கு காதலே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டாள்.

               பேதை மணமே துள்ளாதே பொறுத்திரு பேசாதிரு என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக்கொண்டாள்.

               நானானால் அவரை பார்த்து பேதலித்து நிற்கிறேன். அண்ணன் மகன் திருமணப் பேச்சை எடுக்கிறான் எப்படி? தென்னந்தோப்பில் நடைபெற்றதை அச்சிறுவன் பார்த்திருப்பானா? அல்லது யதார்த்தமாக நடந்ததா?

               கல் எரியப்பட்ட கிணற்று நீர்போல மனதில் என்ண அலைகளை எழும்ப குழம்பித் தவித்தான்.

               தந்தையிடம் இது பற்றியெல்லாம் பேச முடியுமா? வேலைக்கார அம்மாவிடம் மனம் திறந்து பேச முடியாமா? தன் ஒரே தோழி கண்ணமாவிடம் இது பற்றி பேசிப் பார்ப்பபோமா?

               தனது நல்லது கெட்டதுகளில் ஆலோசனை கூறி தனக்கு ஆறுதல் தரும் தோழி கண்னம்மா மட்டும் தான். அவளிடம் போய் நான் கனியரசனை காதலிக்கிறேன். அவரும் என்னைக் காதலிக்கிறார். நாங்கள் மனப்பூர்வமாக அன்பு செலுத்துகிறோம். எங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய் என்று கூறவா முடியும். என்ன செய்யலாம் என்று சிந்தித்த வண்ணமே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

               தற்செயலாக அன்று தண்ணீர் எடுக்க சென்ற பொழுது கண்னம்மா இவளைப் பார்த்து ஏண்டி எதனையோ பறிகொடுத்த மாதிரி தெரிகிறாய்? ஏதாவது திருடு போய் விட்டதா? அல்லது நீ திருடி விட்டாயா? கிலி பிடித்தவள் போல் உள்ளளாய் என்று கேட்டார்.

               ஒன்றுமில்லையே கண்ணம்மா கனகு. ஏண்டி என்னிடமா முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைத்த மாதிரி பொய் சொல்கிறாய். அகத்தின் அழகு தான் முகத்தில் தெரிகிறதே. சொல்லு உண்மையைச் சொல்லு யார் அவன் என்று முகத்திற்கு நேரே கேட்டு விட்டார்.

               ஆங், அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் எனக்கே என்னிடம் ஏதோ மாற்றம் தெரிவது போல் உள்ளது.

               எனக்கு புரிந்து விட்டதடி. காதல் என்பது நாமே உருவாக்கி கொள்வதில்லையடி. தானே வருவது. அது உனக்கு தானோகவே வந்து விட்டது போலும் உன்னைப் பார்த்தால் பசலை நோய் பிடித்த மாதிரியே இருக்கிறாய் யார் உள்ளத்தைத் திருடினாய், அல்லது உன் இதயம் திருடப்பட்டு விட்டதா எதுவாகிலும் என்னிடம் சொல் செல்லக்கிளியே, இந்தப் பைங்கிளி மாருதி விடு தூது போல் நன்மை பயக்கும் தூது சொல்வாள்.

               கனகு தலையைக் கவிழ்ந்துக் கொண்டு தென்னந்தோப்பு நிகழ்ச்சியைத் தெளிவாகக் கூறினாள். காதல் என்றால் காததூரம் ஒடும் என் நிலையைப் பார்த்தாயா கண்ணம்மா. நான் கடைத்தேறுவேனா. கானல் நீராய் மறைந்து விடுவேனா கண்ணம்மா பயமாயிருக்கிறது.

               வலையில் விழுந்தாகி விட்டது. வலையையே தரமான பாதுகாப்பு வளையமாய் அமைத்துக் கொள்வதும், சிலந்தி வலைச் சிக்கலாய் உருவாக்கி விடுவதும் நம் கையில் தான் இருக்கிறது. உன் வலை எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம். பதறாத காரியம் சிதறாது. நீ பதட்டம் கொள்ளாது உறுதியுடன் முயன்றிடு என்றாள் கண்ணனம்மா.

               அன்று வெள்ளிக்கிழமை வாசலில் இடப்பட்ட பல வண்ண மலர்க்கோலத்தை அழித்து விடுவது போல் ஒரு வேன் வந்து நின்றது.

               வாகனச் சத்தத்தைக் கேட்ட கனகு முற்றத்திற்கு விரைந்தாள். வேனிலிருந்து இறங்கியவர்களில் அரசு முகம் கண்டதும், கதிரவன் வரவால் மகிழ்ந்து அன்றலர்ந்த தாமiராயாய் ஒடிச்சென்று அப்பாவிடம் அப்பா யாரோ வேனில் வந்திருக்கிறார்கள் என்று கூறி வீட்டுச் சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

               வாசலுக்கு விரைந்த சண்முகநாதன்னை பார்த்து ஊர்த்தியிலிருந்து இறங்கியவர்கள் அனைவரும் வணக்கம் சார் என்று கூறி கை கூப்பினார்கள். ஒருவர் மட்டும் சண்முகநாதன் சார் வீடு இது தானே என்று கேட்டார்.

               ஆம், நான் தான் சண்முகநாதன் நீங்கள் எந்த விஷயமாய் வந்துள்ளீர்கள் வாருங்கள் என்று அழைத்தார்.

               வந்தவர்கள் கூடத்திலிருந்த நாற்காலி, கட்டில், ஸ்டுல்களை இழுத்துப்போட்டு அமர்ந்தார்கள். சண்முகநாதன் ஒரு இருக்கையில் அமர்ந்தார்.

               அம்மா கனகு விருந்தினர்கள் சிலர் வந்திருக்கிறார்கள் பருகவதற்கு குளிர்பானம் தயாரித்து எடுத்துவாம்மா என்று கூடத்திலிருந்தவாறு சமையலறை நோக்கி குரல் கொடுத்தார்.

               கூடத்திலிருந்தவர்களைப் பார்த்து எலலோரும் குளிர்பானம் அருந்துவீர்களா? அல்லது காப்பி, டீ ஏதாவது வேண்டுமா என்று அன்புடன் கேட்டார்.

               எல்லோரும் குளிர்பானமே போதும் என்றார்கள்.

               திருவிழாவிற்கு செய்திருந்த இனிப்பு, கார வகைகள், அண்ணன்மார் எடுத்துச் சென்றது போக மீதி இருந்ததில் ஒரு ட்ரேயில் காரமும் ஒரு ட்ரேயில் இனிப்பும் எடுத்து வந்தாள் கனகு.

               சண்முகநாதன் அதனை வாங்கி அனைவரின் முன்பும் வைத்துச் சாப்பிடுமாறு உபசரித்தார். பின் குளிர்பானத்தை டம்ளர்களில் நிரப்பி ஒரு ட்ரேயில் வைத்துக் கொண்டிருந்தார். அதை அவளே வநியோகித்து விடும்படி சண்முகநாதன் கூறினார்.

               அனைவரும் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு குளிர்பானம் அருந்தினர்.

               அதன் பின்னரே சண்முகநாதன் வந்த விஷயம் என்ன என்று வினவினர்.

               சார் தயவு செய்து எங்களின் தவறுக்கு எங்களை மன்னித்து விடும்படி அன்பாய்க் கேட்கிறேன். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பெண் பாக்கவென்று வந்து நிற்பது தவறுதான் நெருப்பு சுடும் என்று அறிந்த பின்பும் அதை தொட்டு பார்ப்பது தவறு என்று நாங்களும் அறிவோம். ஆனாலும் மன்னிக்க முடியாத பெரும் குற்றமன்று என்ன நான் சொல்வது சரிதானா என்று கேட்டு வைத்தான் அரசுவின் மூத்த அண்னன் மனோகரன்.

               சரி, மேற்கொண்டு சொல்லுங்கள் என்றார் சண்முகநாதன்.

               ஐயா, இவன் எங்களின் இளைய சகோதரன் கனி அரசனைச் சுட்டிக் காட்டினான். மூத்தவர் நாங்கள் மூவரும் சிறு கடைகள் வைத்துக் குடும்பத்தை நடத்துகிறோம். மணமாகிக் குழந்தைகளும் உள்ளனர்.

               தாய், தந்தையிரில்லாத நாங்கள் அதிகம் படிக்க இயலவில்லை. தம்பியை மட்டும் கொஞ்சம் படிக்க வைத்தோம். வெளிநாட்டில் வேலை செய்கிறான். கைநிறையச் சம்பாதிக்கிறான்.

               இந்த விடுமுறைக்கு வரும்பொழுது மணம் முடித்துவிட வேண்டும் என நினைத்தோம். விடுமுறைக்கு வந்தான் நாட்கள் கடந்தது. இரண்டொரு பெண்னையும் பார்த்தான் மனதுக்குப் பிடிக்கவில்லை.

               ஆனால் திருவிழாவிற்கு முருகானந்த் அவர்கள் வீட்டிற்கு விருந்திற்கு வந்தபொழுது, தற்செயலாக உங்கள் மகளைப் பார்த்திருக்கிறான். அவன் மனதிற்கு மிகவும் பிடித்துஇருக்கிறது எங்களிடம் வந்து கூறினான்.

               அண்ணா விடுமுறை முடிவடைவதற்கு இன்னும் பதினைந்து நாட்களே உள்ளன. இன்றே நாம் அங்கு செல்வோம். பேசி முடித்து விடுமுறையிலேயே திருமணத்தை நடத்திவிடுவோம். அவளுக்கும் என்னுடன் வெளிநாடு வருவதற்கு மனமிருந்தால் ஆறே மாதத்தில் விசா எடுத்து அழைத்துச்செல்கிறேன் என்றார்.

               அதனால்தான் நாங்கள் பெரியவர் உங்களிடம் கேட்டு எல்லாம் பேசிக்கொள்வோம். பெண்ணையும் பார்த்து வந்து விடுவோம் என்று கிளம்பி வந்து விட்டோம் என்றான்.

               சண்முகநாதன் மெல்லிய நகைமுகத்துடன் சிரித்துக்கொண்டே, சிறியார் வீட்டு வெள்ளாமை விளைந்தாலும் களம் சேராது என்பது அந்தக்கால பழமொழி.

               இளையவர்கள் நீங்கள் வந்ததில் தப்பில்லை தவறுதான். நான் பேசுவதையும் அதில் உள்ள நியாயத்தையும் நிதானித்துக் கேளுங்கள் என்று பேசத்துவங்கினார்.

               நான்கு ஆண்குழந்தைகளுக்குப் பின் பிறந்த ஒரே செல்ல மகள் எங்கள் கனகு. பையன்கள் தான் சற்று தூர்த்தில் இருக்கிறார்கள். என் அன்புமகளை அருகிலிருக்கும் ஊர்களில் உள்ளவருக்குத்தான் மணம் முடித்துக்கொடுக்க வேண்டும். தாயற்ற என் தங்கத்திற்கு தாயாகவும், தந்தையாகவும் இருந்து அவள் இல்லறத்தை நல்லறமாக இயற்றும் விதம் பார்த்து மகிழ வேண்டும் என்பது என் ஆசை.

               உங்கள் சகோதரர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் என்கீறீர்கள். வெளிநாட்டில் வேலை செய்பவருக்கு என் மகளைத் தருவதற்கு என் மனம் ஒப்பவில்லை. தயவு செய்து சென்று வாருங்கள். வேறு இடத்தில் பெண் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார்.

               ஐயா, மன்னிக்கவும் கிட்ட இருந்தால் முட்டப் பகை, தூரத்துப் பச்சைதான் கண்ணுக்குக் குளிர்ச்சி என்கிறார்கள். நீங்கள் ஒரேடியாய் மறுக்கிறீர்கள். சற்று யோசித்துப் பாருங்கள் என் தம்பியின் குணம் நலம் பண்பு பற்றியெல்லாம் விசாரித்துத் தெரியுங்கள்.

               மேலும் அவன் உள்ளம் எனும் கோவிலில் கனகலட்சுமிக்குத் தவிர யாருக்குமே இடமில்லை. இன்றில்லா விட்டாலும் அடுத்த விடுமுறையின் போதாவது நான் அவள் கழுத்தில் தான் மாலை சூட்டுவேன் என்று பிடிவாதமாயிருக்கிறானே. எங்கள் வேண்டுகோளையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்று விட்டனர்.

               அரசுவின் முகம் மேகம் மூடிய சூரியனாக சோர்வாக கணத்து போனதைக் கண்ட கனகு பதறித் துடித்தாள். பெருந்தன்மையோடு நானும் கூட்டுதான் என்பதைக் காட்டி கொடுக்காமலே சென்று விட்டார். எவ்வளவு நல்லவர். இவருக்காக அப்பாவிடம் சந்தர்ப்பம் பார்த்து நாம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

               சண்முகநாதன் அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருப்பதைக் கவனித்த கனகு அப்பாவிடம் நாம் இப்பொழுது ஒன்றும் பேச வேண்டாம். அவராகவே நம்மை அழைத்து ஏதாவது கேட்டால் வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போல் நம் கருத்தைக் கூறி விட வேண்டும் என்று தனக்குள்ளாகவே பேசிக்கொண்டார்.

               கனகுக்கு அரசுவின் முதல் பார்வையை மறக்க முயன்றுத் தோற்றுக் கொண்டிருந்தாள்.

               எத்தனை முயன்றும் அரசு மனச் சிம்மாசனத்தில் சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டு என்ன அன்பே நீ முன் வந்து ஒன்றுமே பேசவில்லையே. ஏன்? என்னைப் பிடிக்கவில்லையா உன் மனதை மறைக்கிறாயா என்றான்.

               ஷ்….சும்மாயிருங்கள் உங்கள் பார்வை என்னை தூண்டில் முள்ளில் சிக்கிய மீனாய் துள்ள வைக்கிறது. விடுவித்து அணைத்து ஆறுதல் தர மாட்டீர்களா? இப்படிப் பார்க்காதீர்கள். நெருப்பில் விழுந்த புழுவாய் நான் சுருண்டு விடுவேன். நீங்கள் வேண்டும் எனக்கு நீங்கள் வேண்டும் இப்படி மனத்திரையில் பேசி மகிழ்ந்திருந்தாள்.

               தந்தை இந்தச் சம்பந்தம் வேண்டாம் என்று கூறி அனுப்பிய போதும். கனகு தனக்கும் அரசுவுக்கும் உண்டான உறவில் வண்ணக்கனவுகள் கண்டு திளைத்திருந்தாள்.

               சண்முகநாதன் தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையில் ஈடுபட்டார். திருமணத்தகவல் நிலைய திருமணத் தரகர் இவர்களிடமெல்லாம் சொல்லி வைத்தார்.

               சாதகம் பொருந்தினால் பணம் பொருந்தவில்லை. குணமும் பொருந்தினால் சாதகம் பொருந்தவில்லை. திருமணங்கள் சொர்க்த்தில் நிச்சியிக்கப்படுகின்றன என்கிறார்கள். என் மகள் திருமணம் எங்கே நிச்சயப்பட்டிருக்கிறதோ தெரியவில்லையே என்ற சிந்தனையிலேயே ஆண்டொன்று ஒடியது.

               கனகுக்கு வயதொன்று கூடியது.

               இந்த ஆண்டும் திருவிழாவிற்கு முருகானந்த் வீட்டிற்கு கனியரசன் வந்தான். கனகைச் தென்னந்தோப்பில் சந்தித்தான்.

               கனகு நான் ஒன்றும் கண்டதும் காதல் கொண்ட கோலம் என்ற அவசர கதியில் உன்னைக் காதலிக்கவில்லை. என் உள் மனம் என்னை இடித்துரைத்து உன் மீது அன்பு செலுத்தச் சொல்லியது.

               இந்த ஒர் ஆண்டு காலம் உன் பார்வை பேச்சு இதனையே என் தாகம் தணிக்கும் தண்ணீராகக் கருதி வாழ்ந்து வந்துள்ளேன். வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்பதற்காக நம் உறவு முறியலாமா?

               நான் ஒய்வதில்லை, கஜினி முகமது போல உன் துணைவேண்டி ஒடி, ஒடி வருவேன். நீ உன் அப்பாவிடம் நம் உள்ளக் கிடக்கையை எடுத்துக்கூறலாகாதா என்று கேட்டான்.

               நான் என்ன செய்ய முடியும். இது கிராமங்க. அப்பா நான் அவரைக் காதலிக்கிறேன் என்று சொல்ல முடியுமா? சொன்னால் என் பிள்ளையா இப்படி. குடும்பத்தைக் கொடுக்கும் கோடரி கம்பாய் வளர்த்து விட்டிருக்கிறேனே. இச்சொல் கேட்ட பின்பு உயிர்தரித்தல் ஆகாது என்று உயிரை மாய்க்கத் துணிவார் என் அப்பா.

               நீங்கள் கஜினி முகமதுவாய் படையெடுப்பிர்களா? அல்லது பிரிதிவிராஜாய் தூக்கிச் செல்வீர்களா? அது உங்கள் சாமர்த்தியம். என்னால் மற்ற வரன்களைத் தட்டிக் கழித்து காத்திருக்க மட்டுமே முடியும் என்றாள் கனகு.

               அது சரி அந்தக் காலத்துப் பெண் முறத்தால் புலியையே விரட்டினாளாம். நீ என் வயிற்றில் புளியைக் கரைக்கிறாயா?

               நான் முன் வைத்தக் காலை பின் வைக்க மாட்டேன். உன் தந்தை உன் உறவினர் சம்மத்ததோடேயே மாலையிட்டு உன்னை மனைவியாக்கி வாழ்ந்து காட்டுகிறேன் பார் என்று கூறிச் சென்றான்.

Advertisement