Advertisement

               என்னம்மா நீங்கள் என்னைப் போய் கெஞ்சிக் கொண்டு, தம்பி அடுத்த வாரம் வருகிறான் என்பது தெரியும் தானே. அவன் வந்த பின்பு அவனிடம் கலந்து ஆலோசிக்கலாம். அம்மா கவலைப்படாமல் இருங்கள். நான் அலுவலகம் சென்று வருகிறேன்.

               இந்த ஒரு வாரம் அவர் என்ன செய்வாரப்பா பாவம் இல்லையா? பாலைவனத்திலிருந்து பசுஞ்சோலையைத் தேடி வந்த என் தெய்வத்தை தூரத்தி விட்டாயே மகனே என்றாள்.

               இத்தனை நாள் இருக்கவில்லையா? இந்த ஒரு வாரத்தில் எந்தக் கோட்டையைக் கட்டப்போகிறார். நீங்கள் பேசாதிருங்கள் எது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்கும். நம்மை அவர் கிள்ளுக் கீரையாக நினைத்துவிடக்கூடாடது. இப்படி ஒருமுறுக்குப் போட்டால்தான் நாம் பட்ட கஷ்டமும் அவருக்குத் தெரியும் என்று கூறிச் சென்றான்.

               அரசு வண்டியிலேறி நேராக நகரத்திற்குச் சென்றான். எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு பயணிகள் விடுதியில் தனக்கென ஒரு அறையை ஒரு வார காலத்திற்கு அமர்த்தினான்.

               எல்லாப் பொருட்களையும் இறக்கிச் சென்று முடித்து ஒழுங்குபடுத்தினான். காலைக்கடன்களை முடித்து உணவு தருவித்துச் சாப்பிட்டான்.

               பிரயாண அலுப்பும், மகன் கொடுத்த கௌரவ வரவேற்பும் அசத்தி படுக்கையில் தள்ளியது. தூக்கமென்று சொல்லி நினைவுகளுடனே சஞ்சரித்தான்.

               மகன் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. அவர்களிடம் எந்த முகத்தோடு செல்ல முடியும். ஆனால் என் கனி உருகுகிறாளே. பிள்ளைகளை விட்டு விட்டு என் பின்னால் வருவாளா? வரவே மாட்டாள் அப்படி நான் எதிர்பார்ப்பது மகாப் பெரிய தவறு. என்ன செய்யலாம். எல்லோரும் சேர்ந்தே ஆக வேண்டும் முயற்ச்சிப்போம். முயற்சி திருவினையாகட்டும் என்று எண்ணியவாறு தூங்கி விட்டான்.

               சுமார் பத்து மணியளவில் எழுந்து தயாராகி வங்கிக்குச் சென்றான். தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக்கொண்டான். வங்கிக் கணக்கை எடுத்துக் காட்டும்படி பணிவுடன் கேட்டான் அரசு.

               வங்கி நிர்வாகி கணக்காயரிடம் சொல்லி கணக்குப்பதிவேடு எடுக்கப்பட்டு அரசுவிடம் காட்டப்பட்டது.

               என்னையா இத்தனை ஆண்டுகள் பணம் எடுக்ப்படாமலே சேர்ந்து கொண்டே போய் ஒரு கோடியைத் தாண்டி நிற்கிறது. பணத்தை யாரும் வாங்க வரவில்லையா என்று அரசு அதிகாரியிடம் கேட்டார்.

               முதல் துவக்கத்தில் ஒரு வயதான பெரியவரும் ஒரு பெண்மணியும் மாதாமாதம் வந்து மூவாயிரம் மட்டும் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

               பெரியவர் காலமாகி விட்டதாகக் கேள்வி. அதன்பின் பணம் எடுப்பதற்காக யாருமே வரவில்லை. பணம் எடுக்கப்படாததாலும் மேலும் பணம் வந்து கொண்டே இருந்ததாலும் என்ன செய்வதென்று புரியாமல் கவர்ன்மெண்ட் ஆர்டரிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்று தீர்மானம் செய்திருக்கிறோம். நீங்களும் வந்து நிற்கிறீர்கள். எங்களுக்கு வேலை எளிதாயிற்று என்ற வங்கி நிர்வாகி கூறினார்.

               நல்லது இன்னும் ஒரிரு மாதங்களில் மொத்தப் பணம் தேவைப்படுகிறது. எடுத்துக்கொள்ளலாம் அல்லவா என்று கேட்டார் அரசு.

               எடுத்துக்கொள்ளலாம். மொத்தமாக அத்தணையும் எடுத்து வங்கிக் கணக்கை முடிவு செய்யாமல் சிறிது பணம் பேலன்ஸில் இருக்கட்டும். வரவு செலவு கணக்கு இருந்து கொண்டே இருந்தால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நன்மை உண்டு என்றார். மேலாளர்.

               வங்கியில் விடைபெற்றுக்கொண்டு தனது அண்ணன் வீட்டிற்குச் சென்றார்.

               அண்ணா அண்ணா என்று விழித்தும் குரல் வராததால் அழைப்பு மணியை அழுத்தினான். பத்து நிமிட அவகாசத்திற்குப் பின் மூதாட்டி ஒருவர் உட்கதவைத் திறந்து மெல்ல எட்டிப் பார்த்தார்.

               யார் நீங்க என்றாள். நான் கனியரசு. மதியரசு அண்ணனின் இளைய தம்பி. நீங்கள் அண்ணனின் மாமியார்தானே என்று கேட்டான்.

               வாங்க தம்பி வாங்க இருங்கள். உங்க அண்ணாவும் அண்ணியும் பெண் வீட்டிற்கு ஆவடிக்குச் சென்றுள்ளார்கள்.

               அப்படியா சந்தோசம். நான் வரட்டுமா என்று எழுந்தான்.

               அதற்குள் என்ன அவசரம். தம்பி உங்களுக்கு ஒன்று தெரியுமா? கனி மிகவும் அவசரக்காரி நீங்கள் அந்த பக்கம் செல்லவும், அருமையாக பார்த்து பார்த்துக்கட்டிய வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு அப்பா வீட்டிற்கு சென்று விட்டாள்.

               இந்த வீட்டிலே இருந்திருக்கலாமல்லவா. அல்லது உங்க அண்ணணிடம் இந்த வீட்டைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி கொடுத்திருக்கலாம். அவர் என்ன வீட்டை தின்று விடவா போகிறார்.

               வீட்டு வாடகைப் பணத்தையும் உங்கள் பெயரில் வங்கியில் போடச்சொல்லியிருக்கிறார். அப்படி பணத்தை போடத்தான் முடியுமாம் எடுக்க முடியாதாம்.

               என் மாப்பிள்ளை பொண்ணு திருமணத்திற்காக ஐம்பதாயிரம் ரூபாய்கு அலைந்தார். மூன்று இலட்ச ரூபாய்க்கு மேல் இருக்கிறதாம் பைசா எடுக்க முடியாது. என்னிடம் இருபதாயிரம் இருக்கிறது. வைத்துக்கொள்ளுங்கள் என்று கொடுக்கிறாள்.

               சரியான சாகசக்காரி. நீ தான் அவளை மெச்சிகிடனும். இங்கே இருந்தால் என்ன உங்க அண்ணன்மார் ஒத்தாசை பண்ண மாட்டார்களா? இங்கே இருந்தால் அவ இஷ்டத்துக்கு மேய முடியாதல்லவா? அதுதான் அங்கே போய் சீரழிஞ்சுப் போயிற்றா. உன் பணத்திற்காக உன்னை மயக்கிடுவாள். ஏமாந்துவிடாதே என்று கூறி முகத்தை நொடித்துக்கொண்டாள்.

               இப்படியும் ஒரு பழி சொல்லா என் கனியின் மீது. நிச்சயம் என் கனி தவறு எதுவும் செய்திருக்க மாட்டாள். என் பணத்தின் மீது இவர்களுக்குத்தான் மோகம். அதைப்பெறுவதற்கு பொய்யுரைத்து ஏமாற்றுகிறார்கள் என எண்ணினான்.

               அடுத்தக் கனமே என்ன பேசுகிறோம் என்றே அறியாமல். நீ ஒரு பொம்பளையா? என் கனி மீது பொய்யுரைக்கிறாயே. என் கனி அக்னிப்பிரவேசம் செய்த சீதாதேவி. அவள் தங்கம். உங்கள் பொல்லா மனம் அறிந்துதான் அவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்.

               அவள் இங்கிருந்திருநதால் பணத்திற்காக நீங்கள் அவளைச் சித்திரவதை செய்து சிரழித்திருப்பீர்கள். பதினெட்டு ஆண்டுககள் வாழக்கையை பாலைவனமாக்கி தொலைத்த என்னிடமே இப்படி கூறுகிறாயே. உன் பெண்ணுக்கு இந்த நிலை வந்தால் என்ன செய்வாய். விதைக்கிற விதை படியே அறுவடை அமையும் என்பதை மறந்து விடாதே என்று கூறிவிட்டு வெகுண்டெழுந்தான்.

               தனது சொந்தவீடு எந்த நிலையில் இருக்கிறது என கானச் சென்றான்.

               பார்ப்பதற்கு அந்த மனிதர் நல்லவராக தோன்றினர். அய்யா தயவு செய்து ஒருமாத அவகாசத்தில் வீட்டைத் திரும்பத் தரமுடியுமா என்று கேட்டான். நான் வெளிநாட்டில் இருந்து வந்து விட்டேன். இனிமேல் இங்கு தான் தொழில் நடத்தவேண்டும் குடியிருப்பதற்கு வீடு அவசியம் வேண்டியதிருக்கிறது என்றான்.

               அந்தப் பெரிய மனிதர் மிகவும் மகிழ்ச்சி அய்யா, நாங்களும் புதியதாக வீடு கட்டி உள்ளோம். வருகிற வெள்ளிக்கிழமை புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நீங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றான்.

               நாங்கள் இத்தனை ஆண்டுகள் இந்த வீட்டில் வளமாக, நலமாக சந்தோசமாக வாழ்ந்தோம். ஒரு வார அவகாசத்திலேயே தந்து விடுகிறோம் என்று கூறினார்.

               விடைபெற்று விடுதிக்கு வந்து சேர்ந்தார் கனியின் அண்ணன்கள், மற்றும் மிக வேண்டியவர்க்குத் தொலைபேசியில் பேசினான். நான் இந்தியா வந்தது. தன் மகன் பேசியது அணைத்தும் கூறி, நான் செய்தது தவறுதான் மீண்டும் எங்களைச் சேர்த்து வையுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டான்.

               எல்லோரும் ஏன் இப்படி நடந்தது. ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள். ஏன் ஏன் என்று கேட்டுவிட்டு நடந்து முடிந்தது போகட்டும் நடப்பது நன்றாக நடக்கட்டும் நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று கூறினர்.

               ஒரு குறிப்பிட்ட நாளைக் கூறி எல்லோரும் ஆலந்தாவிற்கு வந்து விடுங்கள். நீங்கள் எல்லோரும் வந்த பின்பே நான் அங்கு வருவேன். அதன்பின் எல்லோரும் டவுண் வீட்டுக்கு வந்து எங்கள் இல்லத்திற்கு வேண்டுவென செய்வோம் என்று கூறினான்.

               சற்று மனநிலை தெளிவடைந்து துயில் கொள்ள முயன்றார் அரசு.

               பிராகாஷ் மட்டும் தானே குமுறும் அக்னிக் குழம்பாக எரிமலையாக நின்றான். பெண்னைக் காணவில்லையே. தூங்கியெழவில்லையா? அல்லது கனியின் அப்பா காலமாகிவிட்ட மாதிரி..சீ..சீ அப்படியெல்லாம் இருக்காது. எதைத்தான் கேட்க விட்டான் என் மகன். இத்தனை காலம் காத்திருந்த எனக்கு ஒரு வாரமென்பது நொடியாய் கரைந்து விடும் என எண்ணியவாறு தூங்கி விட்டார்.

               குறிப்பிட்ட நாளில் அரசு ஒரு தனியார் பேருந்து அமர்த்தி ஆலந்தலை சென்றார்.

               வீட்டு உறவினர்களின் பேச்சொலியும் சிரிப்பொலியும் கலந்து மங்கள காரியம் நடக்கும் இடமாக காட்சியளித்தது.

               பேருந்தின் ஒலிச் சத்தம் கேட்டதும் முதன்முதலாக முகுந்த் ஒடோடிச் சென்று புகைப்படத்தில் பார்த்திருந்த முகத்தை கண்டு அப்பா என்று கட்டிப் பிடிததான். நெஞ்சினில் முகம் புதைத்து இத்தனை காலப்பிரிவையும் ஒரு நொடியில் மறந்து பாசப்பிணைப்பில் முத்தமாரி பொழிந்தான்.

               பதினெட்டு வயது கனியரசு மீசையரும்பி ஒரு பையனாக எப்படி இருந்தானோ அப்படியே இருக்கும் இவன் என் இரண்டாவது பையனா? பிறக்கலையா என்று எண்ணமிட்டான் அரசு.

               அப்பா நான் முகுந்த். அண்ணனை ஒருவழியாக சமாதானப்படுத்தி வைத்திருக்கிறேன். நீங்கள் சற்று அமைதியாக இருங்கள். தானே பாசப் பெருக்குடன் ஒடிவருவான் என்று அலையென அன்பு வீசப் பாசமழை பொழிந்தான் மைந்தன்.

               எல்லோரும் அரசுவை வாங்க, வாங்க என்று வரவேற்க பிரகாஷ் மட்டும் ஒரு ஒரமாகத் திரும்பி நின்று கொண்டான்.

               பேருந்தில் ஏறி டவுனில் உள்ள அவர்களின் சொந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். வீடு அவர்களை நகைமுகத்துடன் வரவேற்றது.

               வெள்ளையடித்து, வண்ணம் தீட்டி, அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு அரசுவின் ஏற்பாட்டால் வீடு விழா கோலம் பூண்டிருந்தது.

               செவிக்குணவில்லாத போழ்து சிறுது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதாய் அறுசுவை உணவு அருந்தி மகிழ்ந்தனர்.

               பின் பொதுவான ஹாலில் அமர்ந்து அரசு பேச ஆரம்பித்தார். எங்கள் வாழக்கையில் பிரிவினை ஏற்பட்டு சேர்ந்துவிட்டோம். பணமோ கொட்டோ கொட்டென்று கொட்டிக் கிடக்கிறது.

               எனது பிரிவால் மகள் வாடியது கண்டு பொறுக்க முடியாது தான் மாமா காலமாகி விட்டார். அவரது ஆன்மா இத்தனை நாள் கனியைத்தான் சுற்றிக்கொண்டிருந்திருக்கும். அவரது ஆன்மா சாந்தி அடைவதற்காக தான் எங்கள் பணத்தை கொண்டு சண்முகா ட்ரஸ்ட் என்ற நிறுவனத்தை நிறுவப்போகிறேன்.

               ஆதரவற்ற சிறுவர் சிறுமியர், முதியோர்களுக்கு ஆதரவு அளித்தல் முறையாக கல்வி பெற முடியாத ஏழை மாணவர்களுக்கு  படிப்புக்கு உதவித்தொகை கொடுத்தல் முதலிய நற்செயல்கள் புரியலாம் என்றிருக்கிறேன். வாழக்கைத்தான் வீனானது. என் கடும் உழைப்பால் வந்தப்பணமாவது நல்லபடி பயன்படட்டுமே என்று நினைக்கிறேன்.

               கணவனைப் பிரிந்து வாழும் பெண்களால் அத்தனை அவலங்களiயும் கண் கூடாகக் கண்டும் கேட்டும் வேதனை அடைந்தேன். என் கனியை மாசு மருவற்ற குன்று மணியை என்னிடமே குறை கூறிய வஞ்சக நெஞ்சத்தை நினைத்துப்பார்த்தேன். என் கனி அலையிடை. அகப்பட்டத் துரும்பாய்த் தானே இத்தனை காலம் துடித்திருப்பா. அவள் போன்று அல்லல்படும் பெண்களுக்கென என ஒரு தொகை ஒதுக்கி உதவிடப்போகிறேன்.

               காலங்கடந்த எங்கள் வாழ்க்கை இனியாவது ஒளிவிளக்காக ஒளிரட்டும் என்று எல்லோரும் வாழ்த்துங்கள்.

               மாமோய் அவ்வளவுதானா. பிராகஷ் அத்தானுக்கும் எனக்கும் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் மாமோய் என நான் கனியின் கடைக்குட்டி அண்ணன் வாசவனின் மகள் ரேனுகா.

               எல்லோரும் கொல்லென்று சிரித்தனர். பிரகாஷ் மட்டும் புன்முறுவல் பூத்து தந்தையை ஆரத்தழுவி அப்பா என்னை மன்னித்து விடுங்கள்.

               பராவாயில்லை உன் தாய்பாசத்தை நான் மெச்சுகிறேன். உன் நிலையில் நான் இருந்தாலும் இப்படித்தான் பேசியிருப்பேன்.

               பிரகாஷ், முகுந்த் இருவரும் கவனியுங்கள் இன்று நாங்கள் வெள்ளிவிழா கானும் தம்பதிகள். எனவே நாங்கள் இங்கேயே தங்கியிருந்து வெள்ளி விழாவை கொண்டாடி மகிழ இருக்கிறோம். உங்கள் பங்கு எப்படி என்ற கேட்டார். பெரிய மாமா.

               அசத்திப்புடுவோம் மாமா பீப்பி டும்,டும் இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.

               இரவில் கனி அரசன் ஐம்பதிலும் ஆசைவரும் ஆசையுடன் பாசம் வரும் என்று சிவாஜி ஸ்டைலில் பாடியப்படியே கனியை அனைத்துக்கொண்டார். மடை திறந்த வெள்ளமென பாசப்பினைப்பில் கட்டுண்டனர்.

சுபம்

               by

எம்.மணிமொழி பாலா

Advertisement