Advertisement


                   அத்தியாயம் 17

கல்லூரியில் நாட்கள் வேகமாக நகர்ந்து. நம் வானர படையும் முதலாமாண்டு தேர்வை வெற்றிகரமாக முடித்திருந்தனர். நாளை முதல் விடுமுறை என்றிருக்க அன்று சீனியர் மாணவர்களுக்கு பிரியாவிடையளிக்க மாணவர்கள் அனைவரும் கூடியிருந்தனர்.

ஆடல் பாடல் என கலை நிகழ்ச்சிகள் ஒருபக்கம் நடைபெற, இறுதியாண்டு மாணவர்களோ சோக கீதம் வசித்துக்கொண்டிருந்தனர்.

எங்கோ பிறந்தோம்

இங்கே இணைந்தோம்

ஒன்றாய் வளர்ந்தோம்

உலகை உணர்ந்தோம்

எல்லாம் அறிந்தோம்

அன்பால் கலந்தோம்

நட்பால் மலர்ந்தோம்..

Farwell முடிந்து மாணவர் கூட்டம் கலைந்துவிட கட்டிட துறை மாணவர்கள் மட்டும் அந்த இடத்தை ஆட்கொண்டிருந்தனர்.

கல்லூரி வளாகத்தினுள் நான்கு கட்டிடங்கள் சூழ்ந்திருக்க அதற்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த புல்வெளியில் அமர்ந்திருந்தனர்.

மெல்லிய பாடல்கள் ஒருபுறம் ஒலித்துக்கொண்டிருக்க மாணவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஆத்ரேயனிற்கு அங்கிருக்க மனமேயில்லை, அவன் செல்லவேண்டும் என்று கிஷோரிடம் கூற ஆரு தான் ஏதேதோ கூறி அவனை இருக்கவைத்தாள்.

அக்னிக்கும் அங்கு இருக்க கடுப்பாக தான் இருந்தது ஆனால் ஆரு நேஹா இருப்பதால் அவனும் வேண்டா வெறுப்பாக அமர்ந்திருந்தான். அக்னி ஆத்ரேயன் இருவரின் விருப்ப வெறுப்புகளும் ஒரே போலிருப்பதை ஆருவும் முதல் நாளிலிருந்தே கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் ஆனால் ஏன் இவர்கள் இப்படி முட்டிக்கொள்கிறார்கள் என்று தான் பெண்ணவளுக்கு விளங்கவில்லை, இருவரிடமும் அதை கேட்டாலும் பலனிருக்காது என்பதை இந்த ஒரு வருடத்தில் அவள் உணர்ந்திருந்தாள்.

ஷக்தி மற்றும் அவள் வகுப்பு நண்பர்கள் அமர்ந்திருக்க ஜீவாவையும் இருக்கவைத்துவிட்டாள். அஷ்வின் ஏதோ வேலை இருப்பதாய் சென்றிருக்க ஷக்தியை சுற்றி அமர்ந்த வானர கூட்டம் அவளை கதை கூறும்படி நச்சரிக்க,

ஷக்தி “இப்போ எதுக்கு எல்லாரும் என்ன கேட்குறீங்க.. இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க ப்ரெசிடெண்ட் வருவாரு அவர்கிட்டயே கேளுங்க” என்க

ஆரு “அதெல்லாம் முடியாது.. அவர் வந்தா ஸ்பீச் தான் கொடுப்பாரு, நீங்களே சொல்லுங்க” என்று கண்களை சுருக்கி கேட்க

கிஷோர் “ஆமா ஆமா உங்க காவிய காதல் பத்தி சொல்லுங்க.. இங்க சில பேருக்கு ஒரு எழவும் புரிய மாட்டிங்கிது” என்று ஓரக்கண்ணால் ரேயனை பார்க்க அவனோ கிஷோரை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.

ஆரு “இப்போ நீங்க சொல்ல போறீங்களா இல்லையா” என்று இடுப்பில் கைவைத்து முறைக்க

ஜீவா “ஹே நீ என்ன அவளையே மிரட்டுற” என்று கேட்க

ஆரு “அண்ணே.. நான் அக்காவ மிரட்டுனேன்னா.. கடவுளே” என்று ஓவர் ஆக்டிங் செய்ய

ஜீவா “நடிக்காத.. அராத்து.. முதல போய் சாப்ட்டு வாங்க”

ஷக்தி “ஆமா போயிட்டு வாங்க போங்க”

சிவா “ப்ரோ நாங்க சாப்பிட்டோம்.. இன்னும் ஆரு அண்ட் குரூப் தான் சாப்பிடல” என்று பொறுப்பாக பதிலளிக்க அதே சமயம்  கிஷோரும் ரேயனிடம் உணவுண்ண கேட்டுக்கொண்டிருந்தான். ஆத்ரேயனோ வேண்டாம் என்று அமர்ந்திருக்க ஷக்தி “ரேயா போய் சாப்பிடு.. போ” என்றாள், ரேயனும் அவளின் பேச்சிற்கிணங்கி உணவுண்ண சென்றான்.

அக்னி ஆரு நேஹா கதிர் மற்றும் ஆத்ரேயன் உணவுண்ண சென்றனர். கிஷோர் முன்னரே உணவுண்டதால் அவன் வரவில்லை.

பாஃபே முறையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்னி ஆருவிற்கு கதிருக்கு நேஹாவிற்கு உணவை எடுத்துவைத்துவிட்டு ஒரு மேசைக்கு சென்றான். ஆத்ரேயன் பெயருக்கு உணவை எடுத்துவைத்துக்கொண்டு தனியே அமர்ந்தான்.

‘நம்மலும் எல்லார்கிட்டயும் பேசி பிரெண்ட் ஆகிருக்கணும் போல’ என வாழ்வில் முதல் முறை நினைத்துக்கொண்டிருந்தான்.

உணவு மேசையில் அமர்ந்த ஆராத்யா ஆத்ரேயனை திரும்பி பார்த்த பொழுது அவன் முகமே யோசனையில் சுருங்கியிருந்தது. அதில் தன்னிசையாக பெண்ணவளின் முகமும் யோசனையில் சுருங்கியது. ஏனோ அவளுக்கு அவன் அவ்வாறு அமர்ந்திருப்பது பிடிக்கவில்லை அவனுடன் சென்று அமரலாம் என்றெண்ணியவள் அக்னியிடம் “அகி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே” என்றவளை நிமிர்ந்து பார்த்த அக்னியின் கண்ணில் ஆத்ரேயன் தனியே அமர்ந்திருப்பது பட்டது.

ஆருவை ‘என்ன’ என்பதாய் அவன் பார்க்க

ஆரு “இல்ல.. எனக்கு தெரியும் உனக்கும் அவனுக்கும் பிரச்சனைன்னு ஆனா மோஸ்ட்டா எல்லா ஆக்டிவிடிலையும் அவன் என்கூட தான் இருக்கான் டு பி ஹானஸ்ட் என்கிட்ட அவன் எதுவும் அட்வான்டேஜ் கூட எடுத்துக்கல அவ்ளோ ஏன் அவன் ஒழுங்கா பேச கூட மாட்டான் ஆனா அவன் நல்லவன்னு தான் தோணுது” என்று கூறும் போதே நேஹாவின் இதயம் வெளியில் வந்து விழுந்துவிடும் அளவிற்கு வேகமாக துடித்தது.

கதிர் ஒரு படி மேல் சென்று நேஹாவின் கையை பிடித்துக்கொண்டு “பேசுறது அவ ஆனா நம்ம கை ஏன் இப்படி நடுங்குது” என்று கேட்க

நேஹா அக்னியை பார்த்தவாறே “ஏன்னா நம்ம வாக்கப்பட்ட இடம் அப்படி டா குரங்கே” என்று பாவமாக உரைத்தாள்.

ஆரு “பாவம் அகி அவன்.. அங்க தனியா இருக்கான்.  நான் கூட போய் கம்பெனி கொடுக்கவா” என்று எதிர்பார்ப்போடு அவனை ஏறிட அவனோ அவளை தான் ஆராயும் பார்வை பார்த்தான்.

ஆரு “அகி எதாச்சு சொல்லு.. நீ வேண்டாம்ன்னு சொன்னா நான் போல” என்றிட

அக்னி “இங்க பார் ஆரு, நான் உன்ன எதுக்காகவும் தடுக்க மாட்டேன் அதுக்கான உரிமையும் எனக்கு கிடையாது” என்க

ஆரு அவனை தடுத்து “அப்படியெல்லாம் சொல்லாத.. ஷட் அப்” என்று முறைத்தாள்.

அக்னி “கேளு.. நீ இல்லன்னு சொன்னதும் அது தான் உண்மை.. சோ உனக்கு என்ன வேணுமோ நீ பண்ணலாம் தப்பு கிடையாது.. நீ மறைக்காம இருந்தா அதுவே போதும் எனக்கு.. அண்ட் என்ன மீறி யாரும் உன்ன எதுவும் பண்ணவும் முடியாது” என்று ரேயனை பார்த்தபடி கூற, ஆருவும் அவன் அன்பில் நெகிழ்ந்து தான் போனாள். அவனை தோளோடு அணைத்தவள் “சரி நீங்க சாப்பிடுங்க.. நான் வரேன்” என்றுவிட்டு செல்ல

அக்னி “ஹே தண்ணி எடுத்திட்டு போ” என்று கத்த அவள் தலையசைத்துவிட்டு ஆத்ரேயன் மேசைக்கு சென்றாள்.

அக்னி பேசியதை கேட்டு கதிர் உறைந்து நிற்க அக்னி அவனை புரியாமல் பார்த்து “ஹே என்னடா” என்று உலுக்க

கதிர் “ஆன்.. அது.. அவங்க” என்று உளற,

அக்னி “என்னடா உளறுற”

நேஹா “அவனுக்கு நாக்குல fracture.. நீ வா சாப்பிடு” என்று பேச்சை மாற்றி அவன் கைபிடித்து அழைத்து சென்றாள்.

ரேயனின் மேசைக்கு வந்தவள் “ஹாய்” என்க ரேயன் புன்னகைத்தான். ஆரு அவள் தட்டிலிருந்த சிலவற்றை அவன் தட்டில் வைத்து “இதெல்லாம் சாப்பிடு.. டெஸ்ட் நல்லா இருக்கு” என்றாள். ‘நம்ம மனசுல நினைச்சது இவளுக்கு கேட்டிடுச்சா’ என்ற ரீதியில் ரேயன் அவளை பார்க்க, அவன் குறுகுறு பார்வையை கண்டவள் “எதுக்கு அப்படி பாக்குற” என்று புருவம் சுருக்க

ரேயன் “இல்ல அவங்கெல்லாம் அங்க இருக்காங்க நீ ஏன் இங்க வந்த” என்று கேள்வியெழுப்ப

ஆரு “நீ மட்டும் தனியா இருக்கல அதான் கம்பெனி கொடுக்க வந்தேன்.. அங்க தான் மூணு பேர் இருக்காங்களே” என்றிட

ரேயன் “அதெல்லாம் ஒன்னுமில்ல.. யூ கேரி ஆன்” என்க

ஆரு “எனக்கு என்ன பண்ணனும்ன்னு தெரியும் நீ அமைதியா சாப்பிடு” என்று கூற அதற்கு மேல் ரேயனும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஆரு பேசிக்கொண்டே உணவருந்த ரேயனிற்கு தான் புரை ஏறியது. ஆரு அவனுக்கு நீரை நீட்ட அதை வாங்கி பருகினான்.

ஆரு “இப்போ ஓகேயா.. இல்ல தண்ணி கொண்டு வரவா” என்று பரிவாக கேட்க

ரேயன் “இல்ல போதும்” என்றான். அப்போது தான் அவன் தட்டை கவனித்த ஆரு “ஹே உனக்கு சைனீஸ் பிடிக்கும்னு சொன்னல.. அது எடுக்கலயா” என்று கேட்க, ரேயனோ மறுப்பாக தலையசைத்தான்.  இந்த பஃபே முறையில் உண்ணுவது அவனுக்கு எப்போதும் பிடிக்காத ஒன்று, கிஷோர் இருந்திருந்தால் அவனே ரேயனுக்கு தேவையானவற்றை எடுத்து வைப்பான் அவன் இல்லாத காரணத்தால் ரேயன் வேண்டா வெறுப்பாக தான் உணவை எடுத்து வந்திருந்தான்.

ரேயன் “எனக்கு இதுவே போதும்” என்றிட, ஆரு அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஏன் உன் பொண்டாட்டி எடுத்து வச்சா தான் சாப்பிடுவியா” என கேலி செய்ய, அவள் கிஷோரை தான் அப்படி கூறுகிறாள் என்பதை உணர்தவன் அழகாக இதழ் விரித்தான். ஆரு “நானே கொண்டு வரேன் கொடு” என்று அவனுக்கு பிடித்தவற்றை எடுத்துக்கொண்டு வர ரேயனுக்கு தான் அவளின் செயல் ஏதோ பெரிதாக தோன்றியது. ஆரு “பிடிச்சா சாப்பிடனும்… அவ்ளோதான்” என்றவள் மீண்டும் உணவுண்ண அவன் தான் எப்போதும் போல் அவளை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆம் அவனுக்கு ஆராத்யா ஒரு ஆர்ச்சிர்யம் தான். அவன் பேசவில்லை என்றாலும் அவனுக்காக ஒவ்வொன்றையும் கவனித்து செய்யும் ஆருவின் மீது அவனுக்கு தனி பாசம் வர தான் செய்தது அதே போல் அவளுக்காக தான் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்று நினைப்பு அவனுக்கு குற்றவுனர்ச்சியாக கூட இருக்கும். அவளின் இச்செயல்கள் வழக்கம் போல் அவனுள் ஒரு தடுமாற்றத்தை விதைக்க செய்தது.

ஆத்ரேயன் “நான் ஒன்னு கேட்கவா” என்று முதல் முறை அவனே பேச்சை தொடங்க, ஆரு வானையும் பூமியையும் ஒருமுறை பார்த்தாள்,

ரேயன் தான் அவள் செய்கை புரியாமல் “என்ன” என்று கேட்க

ஆரு “இல்ல வானம் கீழ விழுதா இல்ல பூமி ரெண்டா பிளக்குதான்னு பார்த்தேன்.. அதிசயமெல்லாம் நடக்குதே” என்று கேலி செய்ய, ரேயன் வாய் விட்டே சிரித்தான். ஆரு “போச்சு போச்சு.. கண்டிப்பா இன்னிக்கி ஏதோ நடக்க போகுது..” என்க சட்டென சிரிப்பதை நிறுத்தியவன் அவளை பொய்யாய்  முறைத்தான். அதில் வாய்விட்டு சிரித்தவள் “சரி சொல்லு.. என்ன கேட்கனும்” என்று அவனை பார்க்க

ரேயன் “இல்ல.. நான் உனக்கு எதுமே பண்ணதில்ல அவ்ளோ ஏன் ஒழுங்கா முகம் கொடுத்து பேசுனது கூட இல்ல அப்போ ஏன் நீ என்கிட்ட இப்படி” என்று தடுமாற

ஆரு “எப்படி” என்றாள் சுவாரசியமாக

ரேயன் “இல்ல.. அது” என்று திணற

ஆரு “சரி சரி கூல்.. கஷ்ட படாத நானே சொல்றேன்” என்றிட ரேயன் அவள் என்ன கூற போகிறாள் என்பதை ஆர்வமாய் பார்க்க

ஆரு “சிலர ஏன்னே தெரியாம பிடிக்கும்ல அப்படி தான் நீ எனக்கு.. ஏன் பிடிக்கும்னு கேட்டா என்கிட்ட பதில் இல்ல ஆனா எனக்கு உன்ன பிடிக்கும்.. உன்கூட இருக்க பிடிச்சிருக்கு சோ நானே வந்து பேசுறேன்.. உனக்காக நானே செய்றேன்.. அண்ட் என் அப்பாகூட இருக்கும் போது அகி கூட இருக்கும் போது எனக்கு எப்படி செக்கியூர்ட்டா இருக்குமோ அதே தான் உன்கூட இருக்கும்போதும் தோணும்” என்று கூற அவனுக்கு தான் அதெல்லாம் புதிதாய் இருந்தது.

ரேயன் “ஆனா நான்தான் திருப்பி பேச கூட மாட்றனே.. உனக்கு வெறுப்பாகலையா” என்று கேட்க

ஆரு “சரி இதுக்கு பதில் சொல்லு.. நான் பேசிட்டே இருக்கேன் உனக்கு வெறுப்பாகுதா” என்று கேட்க ரேயன் இல்லை என்பதாய் தலையசைத்தான்.

ஆரு “அதே தான் எனக்கும்.. நீ இப்படி தான்னு தெரியும்.. அது உன் நேட்சர் சோ எனக்கு ஏன் வெறுப்பாக போகுது.. ஒருத்தங்கள அவங்களாவே தான் நமக்கு பிடிக்கனும்.. நம்மளுக்கு ஏத்த மாதிரி மத்திகிட்டு இல்ல” என்று பெரிய மனுஷி போல் கூறியவளை விழியாகளாமல் பார்த்துக்கொண்டிருந்தான் இல்லை ரசித்துக்கொண்டிருந்தான்.

ஆரு “கடைசில என்னையே இப்படி தத்துவம் பேச வைக்கிறியே.. ஓ காட் கருப்பசாமி” என்று தலையில் கைவைக்க, ரேயன் சிரித்துக்கொண்டே “தேங்க்ஸ்” என்றான். ஆரு அவனை புரியாமல் பார்த்துக்கொண்டே “ஏன்” என்று கேட்க,

ரேயன் “என்னையும் மதிச்சு என்கூட இருக்குறதுக்கு” என்றிட

ஆரு “அட நீ வேற நான் என்னமோ  தியாகம் பண்ண மாதிரி பெருசா பேசுற” என்று அலுத்துக்கொள்ள

ரேயன் “சரி விடு.. சாப்பிடு” என்றான்.

ஆரு “ஐயோ முடியல எனக்கு.. வயிறு புள்.. ஆனா இதை சாப்பிடாம எந்திரிக்க முடியாது” என்று முகத்தை சுருக்க

ரேயன் “ஏன்.. வேஸ்ட் பண்ண கூடாதுன்னா” என்று கேட்க, மறுப்பாக தலையசைத்தவள்

“நான் வேஸ்ட் பண்ணா வந்து தலையிலேயே அடிப்பான் அந்த அகி பைய” என்று புலம்ப இம்முறை ஆத்ரேயனிற்கு கோபம் வரவில்லை மாறாக அவர்களின் நட்பை பார்த்து பொறாமையாக தான் இருந்தது.

அக்னியை பற்றி பேசியதால் ஆரு நாக்கை கடித்துக்கொண்டு ரேயனை பார்க்க அவனோ “இட்ஸ் ஓகே.. நீ நீயா இரு” என்று உணவுண்ண தொடர்ந்தான். இருவரும் உணவை முடித்துவிட்டு மீண்டும் மானவர்கள் கூடியிருந்த இடத்திற்கு சென்றனர்.

ரேயன் கிஷோருடன் அமர்ந்துக்கொள்ள ஆரு  அக்னியுடன் அமர்ந்துக்கொண்டாள்.

மீண்டும் மாணவர்கள் அனைவரும் ஷக்தியை நச்சரிக்க அவளும் அவர்களின் காதல் கதையை கூறினாள்.

விழா அனைத்தும் இனிதே நிறைவடைந்தது. அஷ்வின் “யாருக்கு என்ன ஹெல்ப் வேணாலும் கேளுங்க சரியா” என்றான். ஆரு தான் எப்போதும் அஷ்வினிடம் சந்தேகம் கேட்டு அவனை கொல்வாள், ஏனென்று பிரித்தரியா சகோதர பாசம் அஷ்வின் மீது அவளுக்கு உண்டு, அவர்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்ததை நினைத்து அவள் தான் அதிகம் வருந்தினாள்.

ஆரத்யாவின் முகவட்டத்தின் காரணமறிந்த அஷ்வின் “ஹே ஜூனியரே.. ஏன் உன் மூஞ்சி இன்னும் கேவலமா இருக்கு” என்று வம்பிழுக்க

ஆரு “எல்லாம் இருக்குற மூஞ்சி தான்” என்றாள் முணுமுணுப்பாக

ஷக்தி “அவ உன்ன மிஸ் பண்ணுவ அஷ்.. என்ன டி அதானா” என்று அவள் தோளை இடிக்க

ஆரு “உங்களையும் தான் மிஸ் பண்ணுவேன்” என்றாள்

ஷக்தி “உனக்கு உன் சீனியர தான் ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும்.. எனக்கும் அது தான் பிடிக்கும்.. எதுனாலும் கால் பண்ணு” என்று அவள் தலையை பிடித்து ஆட்ட

ஆரு “ஆமா உங்களுக்கும் அத்து.. சாரி ஆத்ரேயனை தான பிடிக்கும்” என்று கூற

ஷக்தி “ஆமா.. அவன் என் கூட பிறக்காத தம்பி டி” என்றாள்.

அஷ்வின் “ஹே இந்த பிசைஸையும் என் தங்கத்தை நல்லா பார்த்துக்கனும் புரிதா” என்று அக்னியிடமும் ஆத்ரேயனிடமும் கூற

ஆரு “அது என்ன அவ மட்டும் தங்கம்.. அப்போ நான் என்ன பித்தலையா” என்று இடுப்பில் கைவைத்து முறைக்க

அஷ்வின் “ஏன் அதை சொன்னா தான் புரியுமா” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க

நேஹா “ஐயோ அண்ணா நீங்க வேற” என்று புன்னகைக்க

அஷ்வின் “ஆமா டா.. நீ ஒருத்தி தான் நான் என்ன பண்ணாலும் அது கரெக்ட்டா இல்லையான்னு தெளிவா சொல்லுவ.. அதான் நீ எனக்கு தங்கம்” என்றான்

ஆரு “ஐயோ முடியல” என்று கேலி செய்ய

அஷ்வின் “முடியலனா போடி குட்டி பிசாசு..” என்று கூற

ஆரு “என்னதான் நீங்க என்ன அசிங்கப்படுத்துனாலும்.. நீங்க சொன்னது உண்மை.. அதனலா விடுறேன்” என்று பெரிய மனதுடன் கூற

ஷக்தி “உண்மையா தங்கம் தான்.. இந்த பிசாசை.. ஒரு குரங்கை அப்பறம் அந்த ஃபையர எல்லாம் சமாளிக்கிறாளே” என்றுவிட்டு சிரிக்க

ஆரு “ஆமா.. எங்க பேக்போனே அவ தான்..” என்று நேஹாவை தோளோடு அணைத்தபடி புகழ

நேஹா தான் “போதும் டி.. இவ்ளோ ஐஸ் வைக்காத” என்றாள் புன்னகையுடன்.

அதில் ஆரு “சே.. அவமானம்” என்று முகத்தை திருப்ப

அஷ்வின் “சரி.. எப்போவெனா கால் பண்ணுங்க.. உடனே நான் வந்திடுறேன்” என்க

ஆரு “சீனியரே.. நாளையோட ஐடி எக்ஸ்பையர் ஆகிடும் பார்த்து பேசுங்க” என்றாள்

அஷ்வின் “மணி அண்ணன் இருக்க பயமேன்” என்றான் தோளை உலுக்கிக்கொண்டே.

இவர்களிடம் பேசியவன் அடுத்ததாக ரேயன் அக்னியிடம் “ரேயா அக்னி.. நெக்ஸ்ட் நீங்க தான் பார்த்துக்கனும்” என்று இருவர் தோளையும் தட்ட

ரேயன் “கண்டிப்பா ண்ணா” என்று கூற அக்னியா சரியென்பதாய் தலையசைத்தான்.

அக்னிக்கு அஷ்வினை விட ஜீவாவை தான் பிடிக்கும்,

ஜீவா அங்கில்லாததை கவனித்துவிட்டு அக்னி அவனை பார்க்க சென்றான்.

விளையாட்டு அரங்கத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த ஜீவாவின் அருகே வந்த அக்னி “என்ன ண்ணா இங்க தனியா இருக்கீங்க”

“ஒன்னுமில்லடா சும்மா தான்.. நான் ஒரு சீனியரா இல்லாம அண்ணாவா சொல்லுறேன் அக்னி.. இந்த கோபத்தை கம்மி பண்ணுடா.. உன்ன பார்க்குற அப்போ மூணு வருஷத்துக்கு முன்னாடி என்ன பார்த்த மாதிரியே இருக்கு.. இந்த கோபத்தால நான் இழந்தது அதிகம் அதனால தான் சொல்றேன்..  அப்பறம் எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணு உள்ளயே வச்சிருந்தா அது நமக்கு தான் கஷ்டம்.. இது ஒரு அட்வைஸ்ஸா தான் சொல்லுறேன் அதை எடுத்துகிறதும் எடுத்துக்காததும் உன் இஷ்டம்.. சரி வா உள்ள போவோம்” என்றவன் அக்னியின் தோள் மீது கைபோட்டு அழைத்து சென்றான்.

அனைவரும் விடைபெற்றுக்கொண்டு சென்றனர். ஜீவா அக்னியை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றிருக்க நேஹா கதிர் ஆரு மூவரும் அவனுக்காக காத்திருந்தனர்.

கிஷோர் கார் எடுத்துக்கொண்டு வருவதாய் கூறியிருக்க ரேயன் வாசலில் அவனுக்காக காத்துக்கொண்டிருந்தான்.

அத்து நிற்பதை பார்த்த ஆரு அவனிடம் பேசிவிட்டு வரலாம் என்றெண்ணிள நேஹாவை பார்க்க, ஆராத்யாவின் பார்வையை வைத்தே அவள் நினைத்ததை புரிந்துக்கொண்ட நேஹா “போ போய் பை சொல்லிட்டு வா” என்றிட ஆரு அவளை அதிர்ந்து நோக்கினாள்.

நேஹா “சீக்கிரம் போயிட்டு வாடி” என்க,

ஆரு மனதில் ‘அகிக்கு ஏத்த பீஸ் தான்’ என நினைத்துகொண்டு “ஓகே” என்று எப்போதும் போல் துள்ளல் நடையுடன் சென்றாள்.

ஆத்ரேயன் அருகே சென்றவள் “அத்து” என்றழைக்க, அவனோ “சொல்லு” என்றான் உணர்ச்சிகளற்ற குரலில். ஆரு ‘நல்லதான இருந்தான்.. இப்போ என்ன ஆச்சு’ என்று புருவமுடிச்சுடன் பார்க்க

ரேயன் “என்ன” என்றான் அதே குரலில்.

ஆரு “என்ன கோபமா இருக்க மாதிரி இருக்க.. யார்கூடயாவது சண்டையா” என்று கேட்க, அவளை நன்றாக முறைத்தவன்

“என்ன பார்த்தா போற வரவன் கூடலாம் சண்டை போடுற மாதிரி தெரியுதா.. இல்ல எப்போவும் யார்கூடயாச்சு சண்டை போட்டுட்டு இருக்குறவன் மாதிரி இருக்கா” என்று அனல் தெறிக்க கேட்க

ஆரு “இல்ல இல்ல அவ்ளோலாம் வர்த் இல்ல தான்” என்று ஆள்காட்டி விரலின் நகத்தை கடித்தபடி ஒரு மாதிரி குரலில் கூற அதற்கு மேல் எங்கு அவனுக்கு கோபம் நிலைக்கும், அவளை பார்த்து  சிரித்தவன் “உன்ன.. ப்பா” என்று தலையில் அடித்துக்கொள்ள

ஆரு “சரி சரி சொல்லு என்னாச்சு”

“ஒன்னுமில்ல” என்றான் மறுப்பாய் தலையசைத்தபடி

ஆரு “உன் முகத்தை பார்த்தாலே தெரியுது.. என்னனு சொல்லு” என்று இடுப்பில் கைவைத்து கேட்க, அவளையே சில நொடிகள் பார்த்தவன் “ஏன் உனக்கு டப்ட் அஷ்வின் அண்ணாகிட்ட மட்டும் தான் கேட்க தோணுமா” என்று பல நாள் உறுத்திய கேள்வியை பொறுக்க முடியாமல் கேட்டுவிட, ஆரு சிரிப்பை அடக்கிக்கொண்டு “நான் வேற எந்த சீனியர் கிட்டயும் க்ளோஸா இல்லையே” என்று தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு கூற

ரேயன் “ம்ம்” என்றான்.

அவன் முகத்தை பார்த்து சிரித்தவள் “அத்து எதுவா இருந்தாலும் வாய திறந்து சொன்னா தான் தெரியும்” என்று கூற

ரேயன் “ஒன்னும் சொல்றதுகில்ல கிளம்பு.. உன் டிரைவர் வருவான்” என்றான், அதில் ஆரு கோபமாக “அவன் ஒன்னும் என் டிரைவர் இல்ல..” என்றவள் தன்னை அடக்கிக்கொண்டு “சரி என்ன இப்போ” என்று அவனிடம் கேட்க

ரேயன் “நான் ஒன்னுமே சொல்லல” என்றான் உதட்டை பிதுக்கி, ஆரு அவனை கூர்மையாக பார்த்துக்கொண்டே  “நான் டப்ட் கேட்டா சிலர் ரிப்ளை பண்ணுவாங்களோ இல்லையோ யாருக்கு தெரியும்” என்று கையை விரிக்க

ரேயன் “பண்ணுவாங்க பண்ணுவாங்க” என்றான் எங்கோ பார்த்தபடி

ஆரு “ஓ.. நான் பண்ண மாட்டாங்கன்னு நினைச்சேன்”

ஆரு “நீங்களா நினைச்சிக்கிட்டா.. அவங்க பொறுப்பாக மாட்டாங்க” என்று கூற,

ஆரு “சரி இனி நினைக்கில”

“ம்ம்”

“அத்து நான் ஒன்னும் உன்ன மாதிரி பேசமாட்டேன்.. சோ நேரடியா சொல்லுறேன்”  என்றவளை அவன் இப்போது ஆர்வமாக பார்க்க

ஆரு “இனி எனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் டாப்பர் உங்ககிட்ட கேட்பேன்.. ஓகேயா” என்றவள் ஹை பை அடிக்க கை நீட்ட அவனும் புன்னகையுடன் ஹை பை அடித்தான்.

ஆரு “ப்பா.. இந்த சின்ன விஷயத்துக்கு பேஸ் பக்கத்து தெரு போயிட்டு வருது.. ப்பா” என்று போலியாக அலுத்துக்கொள்ள அதற்குள் கிஷோர் கார் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.

கிஷோர் காரை நிறுத்திவிட்டு பக்கத்து இருக்கைக்கு மாற, ஆத்ரேயன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ரேயன் தூரத்தில் நின்றுகொண்டிருந்த நேஹாவை பார்த்து கையசைக்க அவளும் கையசைத்தாள். கதிர் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது போல் எங்கோ பார்க்க, ரேயன் ஆருவை பார்த்து புன்னகைத்தான்.

கிஷோர் “பார்ட்னர்.. உன்ன தான் பாக்கனும்னு நினைச்சேன்.. பை பார்ட்னர்.. ஐ வில் மிஸ் யூ” என்று வராத கண்ணீரை துடைக்க

ஆரு “நானும் உன்ன மிஸ் பண்ணுவேன் பார்ட்னர்.. சீக்கிரம் மீட் பண்ணுவோம்” என்றவள் ஆத்ரேயனிடம் “பை அத்து.. மீட் யூ சூன்” என்க,

ரேயன் ‘அவனுக்கு மட்டும் மிஸ் யூவா’ என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்து வைத்தவன், வெளியில் “சியூர்.. டேக் கேர்” என்றான்.

ரேயன் கார் எடுக்க விழையும் போது  “அத்து ஒரு நிமிஷம்” என்றவளின் தொண்டை வரை மிஸ் யூ என்று வர அவளோ அதை கூற தடுமாறினாள். ரேயன் அதை புரிந்துகொண்டு ஒரு புன்னகையுடன் “பை தியா.. போ உள்ள இரு..” என்றான், அவளும் தலையசைத்துவிட்டு திரும்ப

ரேயன் “தியா ஒரு நிமிஷம்” என்றான்,

ஆரு அவனை திரும்பி பார்க்க

ரேயன் “டெக்ஸ்ட் பண்ணு” என்றிட

“கண்டிப்பா” என்றவள் திரும்பி உள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு வண்டியை கிளப்பினான்.  கிஷோர் தான் அவர்களுக்குள் நடந்த சம்பாஷனையை பார்த்து ‘எல்லாம் பண்ணுங்க.. கேட்டா பிரெண்ட்ன்னு சொல்லுவாங்க.. நமக்கு எதுக்கு’ என நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

ஆத்ரேயன் கிளம்பிய சிறிது நேரத்தில் அக்னி வந்திருந்தான். அவன் முகமே யோசனையில் குழம்பியிருக்க நேஹா அவனை பார்த்து புருவமுயர்த்த மறுப்பாய் தலையசைத்தவன் வண்டியை எடுக்க செல்லும் முன் “எல்லாரும் இன்னிக்கி என் வீட்டுக்கு வரிங்களா.. ரொம்ப நாள் ஆகுதுல” என்று அவர்களை பார்க்க

ஆரு “ஹை… அகி நான் வரேன் நான் வரேன்” என்று குதிக்க, நேஹாவை பார்த்தான்

நேஹா “எதாச்சு சொல்லிட்டு வரேன்” என்றவள் அறிவாள் அக்னி ஏதோ யோசனையில் இருப்பதை.

அக்னி வீட்டு மாடியில் அனைவரும் அமர்ந்திருக்க, அக்னி ஜீவா கூறிய வார்த்தைகளில் உழன்றுக்கொண்டிருந்தான்.

ஆரு “டேய் அகி என்ன.. ஏதோ பறிகொடுத்த மாதிரி இருக்க.. ஹே நேஹா உனக்கு தெரியுமா” என்று கேட்ட, நேஹாவும் உதட்டை பிதுக்கினாள்.

கதிர் “மச்சா.. என்ன ஆச்சு” என்று அவன் தோளை பிடித்து உலுக்க,

“ஒன்னுமில்ல டா.. அந்த farewell பாத்து கொஞ்சம் ஒரு மாதிரி இருந்துச்சு அவ்ளோதான்” என்று மழுப்ப

ஆரு “நிஜமாவா.. அதுக்கா இப்படி இருக்க” என்று கேட்க அக்னி ஒன்றுமில்லை என்று மறுத்தான்.

கதிர் “டேய் நம்ம என்ன காலேஜ் முடிச்சிட்டு பார்காம இருக்க ஆளுங்களா.. இங்கயே தான இருக்கோம்.. அப்பறம் எதுக்கு அதெல்லாம்” என்று சமாதானம் செய்ய

ஆரு அவனை வம்பிழுக்கும் பொருட்டு “ஒருவேளை காலேஜ்ல யாரையாச்சு ரூட் விடுரியா” என்று கேட்க

அக்னி அவள் கூறியதை கேட்டு ஓரக்கண்ணால் நேஹாவை பார்க்க அவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

ஆரு ‘இது தேராது’ என்று இடமும் வலமும் தலையசைத்தபடி அக்னியை பார்க்க அவனும் அதே போல் தான் அமர்ந்திருந்தான்.

அக்னி “சரி போதும்.. ஏற்கனவே லேட் ஆகிடுச்சு.. போங்க போய் படுங்க” என்று விரட்ட

ஆரு “போங்கலா.. நீ என்ன மூன் பாத் எடுக்க போறியா” என்று நக்கலாக கேட்ட, அவள் தலையில் தட்டியவன் “நான் வரேன் கொஞ்ச நேரத்துல.. இங்க மோட்டார் கொஞ்சம் பார்க்கனும்” என்றிட நேஹா அவனை சந்தேகமாக பார்த்துக்கொண்டே கீழிறங்கினாள்.

அவர்கள் இறங்கி சென்றவுடன் அக்னி தடுப்பு சுவரின் மீது கைவைத்து யாருமற்ற சாலையை வெறித்தான் அவன் முகமே சரியில்லை.

கீழே சென்ற நேஹாவிற்கோ இருப்புக்கொள்ளவில்லை அவள் மீண்டும் மாடி செல்வதற்கு படியில் ஏற, ஆரு “ஹப்பா வர்க் அவுட் ஆகும் போலயே” என்று வாய்விட்டு உளற அதை கேட்ட கதிர் “என்ன வர்க் அவுட் ஆகுது” என்று புரியாமல் கேட்க

ஆரு “அங்க பாரு” என்று நேஹாவை பார்த்து கண்காட்ட

கதிர் “அவ ஏன் திருப்பி போறா.. தூக்கம் வரல போல” என்று ஆருவிடம்  கூற, அவளோ அவனை ஒரு மாதிரி பார்த்துவிட்டு “இருந்தாலும் நீயெல்லாம் உருப்பட மாட்ட” என்றபடி தன் அறைக்குள் புகுந்தாள்.

மாடிக்கு சென்ற நேஹா அக்னியின் பின் நின்று “மோட்டர் ரோட்ல இருக்கோ” என்று கேட்க

அக்னி  திருப்பி “தூக்கம் வரலையா உனக்கு” என்றான் கேள்வியாக,

“உனக்கு வரலையா” என்று அவளும் பதிலுக்கு கேள்வி கேட்க

அக்னி “எனக்கு தெரியும் நீ போ” என்றான்.

நேஹா அசையாது அவனை பார்க்க,

அக்னி பொறுமையிழந்து “என்ன டி உனக்கு பிரச்சனை.. போய் தூங்கு.. நான் போவேன்” என்றிட

நேஹா “போலனா என்ன பண்ணுவ” என்று இடுப்பில் கைவைத்து கேட்க

அக்னி “அப்பறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பில்ல” என்று மிரட்ட,

நேஹா “ஏன்.. என்ன பண்ணுவ” என்று புருவம் சுருக்கி அவனை பார்க்க,

அக்னி ‘ஐயோ உன்ன வச்சிக்கிட்டு முடியலடி’ என்று நொந்தவன் “மா.. போ.. இங்க நிக்க நல்லாயிருக்கு அதான்” என்று கரகரத்த குரலில் கூறினான் பாவம் அவளை பார்த்தவுடன் அவனுள் எழும் உணர்ச்சிகளை அவனும் எத்தனை நேரம் தான் அடக்கி வைப்பான்.

அக்னி அவ்வாறு கூறியும் அவள் நகரவில்லை,

நேஹா “இங்க இருந்தா நல்லாயிருக்கா.. சரி நானும் இருக்கேன்” என்று நிற்க அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் அக்னி அவளை இழுத்து தன் முன் நிற்கவைத்தான்.

தடுப்பு சுவரில் கைவைத்து அவளை நகர முடியாதபடி சிறை செய்தவன் அவள் கூந்தலின் வாசத்தில் கிறங்கி தான் போனான்.

நேஹா அறிவாள் அக்னி அவளை காயப்படும்படி எதுவும் செய்ய மாட்டானென்று இருப்பினும் பெண்களுக்கே உரிய அச்சம் அவளை நெளிய வைத்தது.

நேஹா “அகி.. அது நான்” என்று அவள் தடுமாற

அக்னி “என்ன.. நீ” என்றான் அதே கரகரப்பான குரலில்.

நேஹா “இல்ல ஒன்னுமில்ல” என்றவள் அந்த இருளை ரசிக்க

அக்னி அவள் செவிமடலில் “திடீர்னு யாராச்சு உன்கிட்ட வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன பண்ணுவ” என்று மெல்லிய குரலில் கேட்க, அவன் குரலில் திடுக்கிட்டு திரும்பியவள் அவனை ஏறிட அவனோ வெகு சிரமப்பட்டு முகத்தில் எதையும் காட்டாது நின்றான்.

நேஹா “இப்படி கேட்டா நான் என்ன சொல்லுவேன்.. “

“என்ன சொல்லுவன்னு சொல்லு” என்று கேட்க மீண்டும் சாலையை பார்த்தவாறு நின்றவள் “இங்க எவனோ மூட் அஃப்பா இருக்கான்னு நினைச்சேன்” என்று முணுமுணுப்பாக கூற

அக்னி “நான் அப்படி சொல்லவே இல்லையே” என்றவனின் குரலும் குறைந்த ஒலித்தது.

நேஹா “அப்போ தள்ளு.. நான் கீழ போறேன்” என்று அவன் கையை பிடித்து நகர்த்த அவனோ அசைந்தானில்லை.

ஆணவனின் ஸ்பரிசம் பெண்ணவளுள் புதுவித உணர்வுகளை தட்டி எழுப்ப,

நேஹா “என்னடா உனக்கு இப்போ.. நைட் ஆனாலே உனக்கு ஏதோ ஆகுது” என்றிட அவள் வார்த்தைகள் காற்றில் தான் கரைந்தது அதில் வாய்விட்டு சிரித்தவன் அவளை இன்னும் நெருங்கி “நான் ஒரு கேள்வி தான் கேட்டேன்.. வேற எதாச்சு பண்ணேன்னா” என்று கேட்க, அவள் கன்னக்கதுப்புகளோ ரோஜாவை போல் சிவந்திருந்தது. அதை அவனிடமிருந்து மறைத்தவள் “அப்போ நீ சொல்லு.. உன்கிட்ட யாராச்சு வந்து ப்ரொபோஸ் பண்ணா என்ன பண்ணுவ” என்று கேட்க,

அக்னி “ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்றேன்மான்னு சொல்லிடுவேன்.. சிம்பிள்” என்று வெகு சாதாரணமாக உரைத்திட, நேஹா தான் அதிர்ந்து நின்றாள்.

நேஹா “எது.. யாரு.. யார லவ் பண்ற” என்று திக்கி திணறி கேட்க

அக்னிக்கு அவளிடம் விளையாட வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.

அக்னி “வேற யாரு.. என்ன லவ் பண்ற ஆளை தான்” என்றான்.

நேஹாக்கு தான் தான் எப்படி உணர்கிறோம் என்றே தெரியவில்லை “யார சொல்லுற” என்று மெதுவாக அவள் கேட்க

“வேற யாரு ஸ்வேதாவை தான் சொல்லுறேன்.. பாவம் எவ்ளோ நாள் என் பின்னாடி சுத்துறா” என்று அடித்துவிட, நேஹாவின் முகம் சற்றே வாடியது அக்னியும் அவளை கூர்மையாய் அளந்தபடியே நின்றான்.

நேஹா “என்ன சடன்னா..  உனக்கு தான் அவளை பிடிக்காதே” என்று கூற

அக்னி “யார் சொன்னா.. ஒரு பொண்ணு தானா வந்து இப்படி நம்ம பின்னாடி சுத்துனா யாருக்கு தான் பிடிக்காது.. சும்மா வெளிய தான் அப்படி பில்டப்.. அண்ட் அத தான் உன்கிட்ட இன்னிக்கி சொல்லனும்னு யோசிச்சிட்டு இருந்தேன்” என்றிட

நேஹா “அப்போ ஆரு கதிருக்கு தெரியுமா” என்று கேட்க அக்னி சிரிப்பை அடக்கிக்கொண்டு “எப்பவோ தெரியும்.. உன்கிட்ட தான் புள்ளா சொல்ல வெயிட் பண்ணிட்டு இருந்தேன்” என்றிட

நேஹா “ஓ.. ஓகே” என்றாள்.

அக்னி “என்ன டி ஓகே சொல்லுற.. எப்போ சொல்ல போறேன்னு கேட்கமாட்டியா” என விஷம குரலில் கேட்க, அவன் குரலில் என்றுமில்லாமல் இன்றிருந்த ஆர்வத்தில் அவன் கூறியதெல்லாம் உண்மை என நம்பியவள் “எப்போ சொல்ல போற” என்று கேட்க

அக்னி “தெரியல.. ஆனா அவ கண்டிப்பா செம்ம ஹேப்பி ஆகுவா.. எனக்கு தெரியும்” என்று அழுத்தமாக கூற

நேஹா கடுப்பாகி “உன் லவ் கண்டிப்பா நிறைவேறும்.. போதுமா” என்று அவனை திரும்பி பார்க்க அவனோ அவள் இடைப்பற்றி இறுக அணைத்து “தேங்க்ஸ் டா.. எனக்கு இப்போதான் சந்தோஷமா இருக்கு” என்று கூற நேஹா தான் அவன் அணைப்பில் உறைந்து நின்றாள்.

அக்னி அவள் செவிகளில் “நீதான் எல்லாமே பார்க்கனும்.. எனக்கு எப்போவும் எல்லாம் நீதான்” என்றவன் இரண்டாவதாய் கூறிய வாக்கியத்தில் அழுத்தத்தை கூட்டி கூறிவிட்டு அவளிடமிருந்து விலகி “சரி வா கீழ போகலாம்” என்று அவள் கை பற்ற

நேஹா “அகி ஒரு நிமிஷம்”

“என்ன”

“இல்ல.. அவகிட்ட உடனே சொல்லிடாத.. கொஞ்ச நாள் போகட்டும்” என்று கூற அவனும் நல்ல பிள்ளையாக அதை ஆமோதித்தான். அவனோ மனதில் ‘எப்போதான் நீ சொல்லுறன்னு பாக்குறேன்.. நான் லவ் சொல்லலானாலும் புரிய வைப்பேன்’ என எண்ணிக்கொண்டான்.

ரித்துவை  இறக்கிவிட்டுவிட்டு வீடு திரும்பும் போது அக்னி இது அனைத்தும் நினைவு வர, “ஒருவேளை நான் உன்கிட்ட எல்லாம் சொல்லிருக்கனும் போல நேஹா.. அட்லீஸ்ட் நீயாச்சு என்கூட நின்னிருப்ப” என்று தனக்கு தானே கூறியவன் அடுத்த நொடியே “இல்ல.. எனக்கு யாரும் தேவையில்ல” என நினைத்துக்கொண்டு காரை செலுத்த நேஹாவின் எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

அவள் அழைப்பை புருவம் சுருக்கி பார்தத்வன் அதை ஏற்க

நேஹா “அக்னி நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்ல.. இனி நீயே நினைச்சாலும் நான் உன் மூஞ்சில முழிக்க மாட்டேன்” என்று கத்திவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.

அவள் கூறியதை கேட்டவன் ‘நான் அவ்ளோ திட்டியும் கூட இருந்தவ இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி சொல்றா’ என்று குழம்பி போனான் அவன் மனமோ மேலும் பாராமகியது.

அவளை கத்திக்கொண்டே இருந்தாலும் இதுவரை அவளை தன் கண் முன்னே வைத்திருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் வலிக்க தான் செய்தது. அனைத்தும் தன்னை விட்டு சென்றதை போன்ற வெறுமை அவன் மனதை தாக்கியது. வண்டியை செலுத்திக்கொண்டிருந்தவனின் கண்களில் ‘ஏ. ஆர். குரூப்ஸ்’ பெயர் பலகை பட “உன்னால தான்டா எல்லா பிரச்சனையும்..” என்று ஸ்டியரிங்கை குத்த அவன் மனமோ அவர்கள் பகை தொடங்கிய நாளை அசைபோட்டது.

அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்

எங்கோ தெரிவது போல் மறைவது காதல்…

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே

இங்கே இருந்தவள் இன்று இல்லையே

என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே

இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே..

Advertisement