அத்தியாயம் 23 :

கேஸ்  பற்றிய அடுத்தடுத்த வேலைகள் உள்ளிழுத்துக் கொள்ள அன்று முழுவதும் தீரனுக்கும் விவேக்கிற்கும் நேரம் சரியாக இருந்தது. இடையில் வீட்டில் இருந்து வானதி அழைத்துக் கொண்டே இருக்க அழைப்பை ஏற்கும் நிலையில் அவன் இல்லை.

“ஆல் செட் அதி” என்றான் விவேக்.

“தட்ஸ் குட் விவேக்” என்றவன் ஆசுவாசமாய் நிமிர,

“ஆனா அந்த தாரிக் இப்போ வரைக்கும் அந்த ஜித்தேஷை தேடிப் போகலை. அது தான் கொஞ்சம் இடிக்குது” என்றான் விவேக்.

“ரொம்ப அறிவா யோசிப்பானா இருக்கும். நாம அவனைப் பாலோ பண்ணிட்டா? அதான் போக்குக் காட்டுறேன்னு காமெடி பண்ணிட்டு இருப்பான்” என்றான் தீரன்.

“என்னவோ போ, இந்த கேஸை முடிக்க முன்ன நாம லூசாகிடுவோம் போல?” என்றான் விவேக்.

“தென் நான் கேட்ட டீட்டெயில்ஸ் என்னாச்சு விவேக்?”

“எல்லாமே ரெடி. லாஸ்ட் ஒன் இயரா நாம சஸ்பெக்ட் பண்ண காலேஜ் அண்ட் ஸ்கூல்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா டீட்டையில்சும் கலெக்ட் பண்ணியாச்சு. லிஸ்ட் நாம எக்ஸ்பெக்ட் பண்ணதை விட அதிகம்” என்றான்.

“எதிர்பார்த்தது தான விவேக்” என்ற தீரன், வானதி இப்போதும் விடாமல் அழைக்கவும் கடுப்புடன் அழைப்பை ஏற்றான்.

“இப்போ என்னம்மா உங்களுக்கு பிரச்சனை?”

“கொஞ்சமாவது பொறுப்பிருக்கா அதி உனக்கு? நாளைக்கு மேரேஜ் வைக்கனும்னு சொல்லிட்டு டியூட்டிக்கு கிளம்பி போய்ட்டா, புடவை தாலி எல்லாம் யார் வாங்குறது? முறைன்னு ஒன்னு இருக்குல்ல. இல்ல அதுவும் வேண்டாமா?” என்று கோபத்தில் பொரிந்து தள்ளினார் வானதி.

“இதெல்லாம் ஒரு விஷயமாம்மா. ஏன் நீங்களும் அப்பாவும் போய் வாங்கிட்டு வந்தா ஆகாதா? இல்லை மொழி கிட்ட புடவையே இருக்காதா? இப்போ ரொம்ப முக்கியமா இது? ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு எந்த புடவைய கட்டிட்டு போனா என்ன?” என்று இருக்கிற கடுப்பில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

வானதி எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்க, அவரின் அமைதியில் இயல்புக்கு திரும்பியவன், தன்னைத் தானே நொந்து கொண்டான்.

“சாரிம்மா” என்றான் சற்று இறங்கிய குரலில்.

“ஒன்னும் தேவையில்லை” என்றார் கோபமாய்.

“அதான் சாரி சொல்றேன்ல வானதி. இங்க வேற டென்ஷன்ல இருந்தேன். என்ன தேவையோ அதை உங்களை பார்த்துக்க சொல்லிட்டு தான வந்தேன்” என்றான் பொறுமையாய்.

“என்கிட்ட பேசாத அதி? எங்களுக்கு இருக்குறது ஒரே பையன்” என்று அவர் ஆரம்பிக்க தலையில் கை வைத்தவன்,

“அப்பா இருந்தா போனை குடுங்க” என்றான். வானதியோ கடுப்புடன் நரேந்திரனிடம் போனை நீட்டினார்.

“அதி சொல்லுப்பா”

“அப்பா என்ன செய்விங்களோ எனக்குத் தெரியாது. உடனே எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ ரெடி பண்றிங்க?” என்றான் டென்ஷன் குறைந்து சிரிப்பை அடக்கியபடி.

“அதி” என்ற நரேந்திரனுக்கும் சிரிப்பு வந்தது.

“பின்ன என்னப்பா? எப்போ பார்த்தாலும் எனக்கு இருக்குறது ஒரே பையன்.. ஒரே பையன்னு சொல்லியே என்னை நோகடிக்கிறாங்க? அவங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்? ஒரே பையன்ற கவலை இனி அம்மாவுக்கு இருக்கக் கூடாது” என்றான் சிரிப்புடன்.

அவனின் பேச்சை அருகில் இருந்த கேட்ட வானதி தலையில் அடித்துக் கொண்டார்.

“மை டியர் சன்.. உங்கம்மாவுக்கு பிரச்சனையில்லைன்னா எனக்கும் அப்ஜெக்ஷன் இல்லை” என்றார் நரேந்திரன் சிரிப்புடன்.

“விவஸ்தை கெட்ட மனுஷன். பெத்த பிள்ளை கிட்ட பேசுற பேச்சைப் பாரு. பேரன் பேத்தியை வளர்க்குற வயசுல” என்று போனைப் பிடுங்கியவர்,

“நீ வரவே வேண்டாம் அதி. உன்னைய கூப்பிட்டது எங்க தப்பு தான். நாங்களே பார்த்துக்கிறோம்” என்று படபடவென்று பேசியவர் போனை வைத்து விட்டார்.

வானதி அழைப்பை துண்டித்த வேகத்தில் தீரனுக்கு அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்திருந்தது.

“அதி இதெல்லாம் ஓவர்”என்றான் விவேக்கும் சிரிப்புடன்.

“இல்லைன்னா அம்மா இன்னைக்கு என்னை ஒரு வழியாக்கிருப்பாங்க மச்சான். அவங்களைப் பத்தித்தான் தெரியுமே உனக்கு” என்றான் இலகுத் தன்மையுடன்.

“இருந்தாலும் அவங்களுக்காக நீ போயிருக்கலாம்” என்றான்.

“டேய்! அதெல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. அப்பா மதியமே எனக்கு மெசேஜ் போட்ருக்கார். என்னை வீட்டுக்கு வர வைக்கிறதுக்கு மம்மி போடுற பிளான் இது. டைம் என்னன்னு பார்த்தியா? யாராவது இப்போ போய் கடைக்கு போவாங்களா?” என்றான் சிரிப்புடன்.

“இருந்த டென்ஷன்ல டைம் போனதே தெரியலை மச்சான். அப்போ கிளம்பலாமா. இன்னைக்கு தூங்கி எழுந்தா தான் கொஞ்சம் பிரஷா இருக்கும்” என்றான் விவேக்.

“வாய்ப்பில்லை ராஜா” என்ற தீரனை கடுப்புடன் பார்த்தான் விவேக்.

“டேய் நாளைக்கு உனக்கு கல்யாணம்”

“நாளைக்குத் தான..! நமக்கு நைட் ஆபரேஷன் இருக்கு” என்றான் தீரன்.

“நோ அதி. இன்னைக்கு எனக்கு செம்ம டயர்ட். சத்தியமா என்னால முடியாது. எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்” என்ற விவேக்கின் முகத்தில் களைப்பு அப்பட்டமாய் தெரிந்தது.

தீரனுக்கும் அது புரிந்ததோ என்னவோ,

“ஓகே விவேக்..! நீ ரெஸ்ட் எடு” என்றான்.

விவேக் அங்கிருந்த அவர்கள் ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று விட, ஆயாசமாய் சீட்டில் சாய்ந்து அமர்ந்தவனுக்குள் சிந்தனைகள் விரிந்து கொண்டு சென்றது.

‘ஒவ்வொருத்தரையும் பிளாக் பண்ண ஒவ்வொருத்தர் சம்பந்தப்பட்ட வீடியோ அவன்கிட்ட இருக்கு” என்று தான் சொன்னது தனக்குள்ளேயே மீண்டும் ஒலிக்க, சட்டென்று ஞாபகம் வந்தவனாய் மொழியின் அலைபேசியில் இருந்து தனக்கு அனுப்பிய கோப்புகளை ஆராயத் தொடங்கினான். மொழியை எதை வைத்து பிளாக்மெயில் செய்திருப்பான் என்கிற பதட்டமும் உடன் சேர்ந்து கொள்ள,அதில் எதுவும் இருப்பதைப் போல் தெரியவில்லை அவனுக்கு. அவன் இறுதியாக அனுப்பிய வீடியோ மட்டுமே இருந்தது.

“ஒருவேளை மொழி அதை டிலீட் பண்ணியிருக்கலாம்” என்று எண்ணியவனின் கண்களில் பட்டது அந்த யுஆர்எல் லிங்க்.

“ஒரு வித டென்ஷனுடன் அதை அவன் ஓப்பன் செய்ய, அதில் இருந்த வீடியோவில் அதிர்ந்தவன், பட்டென்று லேப்டாப் திரையை மூடி விட்டான். இரண்டு மூன்று லின்ங்க்குகள் இருக்க எதையும் திறந்து பார்க்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.

தலையில் கை வைத்து தன் கோபத்தை கட்டுப்படுத்த முயன்றவனுக்கு அது முடியாமல் போக,

“ஷிட்” என்று ஓங்கி மேஜையில் தட்டியவன், எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடக்கத் தொடங்கிவிட்டான்.

தண்ணீரைக் குடித்து தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனின் முகம் இப்போது யோசனையில் சுருங்கி விரிந்தது.

விவேக்கை அழைத்துக் கொண்டு கிளம்ப எண்ணியவன் சற்று யோசித்து அந்த எண்ணத்தைத் தள்ளிப் போட்டான்.

சரியாக ராஜ ராஜன் அந்த நேரத்திற்கு அழைக்க, ஏதோ பிரச்சனை என்று புரிந்தது அவனுக்கு.

“சொல்லுங்க அங்கிள்” என்றான் எதையோ எதிர்பார்த்தவனாய்.

“தீரன்! இந்த பொண்ணு அந்த தாரிக் கூடத்தான் போவேன்னு நிக்கிறா. இப்போ நான் என்ன பண்ணனும்? அவனும் சட்டமா வந்து வீட்ல உட்கார்ந்திருக்கான். எனக்கு எதுவும் சரியா படலை? நான் பார்த்தாலே பயப்படுற பொண்ணு இப்போ என்னை எதிர்த்து நிக்கிறா?” என்றார் ராஜன்.

“விடுங்க அங்கிள் போகட்டும்” என்றான் அமைதியாய்.

“தீரன்” என்ற ராஜனுக்கு பேச்சே வரவில்லை.

“என் மேல உங்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கோ அதே அளவுக்கு உங்க பொண்ணு மேலயும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கணும். நான் பார்த்துக்கிறேன். நீங்க இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்” என்றான் தீரன்.

“எதுவும் பெரிய பிரச்சனையா தீரன்? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க?” என்றார் ராஜன்.

“இப்போ என்கிட்ட கேட்ட இந்த கேள்வியை உங்க பொண்ணுகிட்ட நீங்க கேட்டிருந்தா பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது அங்கிள். நான் பார்த்துக்கிறேன். நீங்க என்ன நடக்குதோ அதை வேடிக்கை மட்டும் பாருங்க” என்றவன் போனை வைத்து விட்டு கத்திய கத்தலில் விவேக் அடித்துப் பிடித்து எழுந்து வந்தான்.

“அதி??”

“என்ன பண்ணி வச்சிருக்கிங்க விவேக். நான் தான் அந்த தாரிக்கை பாலோ பண்ண சொன்னேன்ல. பாலோ பண்றவங்க என்ன பண்றாங்க டேமிட்?” என்று வாயில் வந்த கெட்ட வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ள, விவேக் வேகமாய் அவர்களுக்கு அழைத்தான்.

“யோவ் அந்த தாரிக் எங்க இப்போ?” என்றான் விவேக்.

“சார் அவன் மினிஸ்டர் வீட்டுக்குள்ள போயிருக்கான் சார்” என்றனர் எதிர்முனையில்.

“அந்த ம..று எல்லாம் தெரியுது. அதை இன்பார்ம் பண்ணனும்ன்ற அறிவு இல்லை உங்களுக்கு? அப்பறம் எதுக்கு பாலோ பண்றிங்க?” என்று கடித்துக் குதறியவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது.

“அதி காம் டவுன்..!எப்பவும் நிதானத்தை இழக்க மாட்டியே? இப்போ என்னாச்சு?” என்று விவேக் முடிந்த அளவு அவனை நிதானப்படுத்த,

“அவன் மொபைல் லொக்கேஷனை கனெக்ட் பண்ணு விவேக்” என்றவன், அதை தீவிரமாய் கண்காணிக்க, தாரிக்கோ கமிஷனர் ஆபீஸ் இருக்கும் ரூட் வழியாகத் தான் வந்து கொண்டிருந்தான். தீரன் புரியாமல் பார்க்க, அவனுக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“என்ன ஏசிபி? என்னமோ என் தம்பிகிட்ட என்னை விசாரிச்சியாம்? அதை நேரா என்கிட்டவே விசாரிச்சிருக்கலாம். சரி விஷயத்துக்கு வருவோம், வாக்கு மூலம் குடுத்தா மொழி கூட அவனை சேர்த்து வைக்கிறதா சொன்னியாமே? அதான் என் தம்பி வாக்கு மூலம் குடுத்துட்டானே. நீ என்ன பண்ற? என் தம்பி அவளைக் கூட்டிகிட்டு நேரா இப்போ அங்க தான் வருவான். நாளைக்கு உனக்கும் அவளுக்கும் கல்யாணமாமே.

அதே நேரத்துல உன் தலைமையில என் தம்பிக்கும் அவளுக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்குற? என்ன. பண்ணி வைப்ப தான? இல்லைன்னா என்ன நடக்கும்னு உனக்குத் தான் தெரியுமே? நீ மத்த போலீசு மாதிரி இல்லை ஏசிபி. கற்பூரம் மாதிரி டக்குன்னு புரிஞ்சுக்குவன்னு நினைக்கிறேன். அப்பறம் உன் இடத்துக்கு என் தம்பியை மறுபடியும் அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு எந்த சேதாரமும் இருக்கக் கூடாது. ஏதாவது ட்ரிகர் பண்ண யோசிச்ச அப்பறம் நாளைக்கு மொத்த மீடியாவும் நாறிடும்” என்றவன் அழைப்பைத் துண்டிக்க, பல்லைக் கடித்த தீரன் விவேக்கை முறைத்தான்.

“அதி”

“அவன் மொபைலை ஹேக் பண்ணி, அவன் என்ன பேசுறான்? யாரை காண்டாக்ட் பண்றான்னு பார்க்க சொன்னேன்? அதை செய்யாம இங்க எல்லாரும் புடுங்குற வேலை பார்க்குறிங்களா?” என்று கத்தினான்.

அவனின் கோபத்தில் மிரண்டவர்கள்,”சார் நீங்க சொன்ன நம்பரை ஹேக் பண்ணிட்டோம் சார். வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கோம் சார். இது வரைக்கும் அந்த நம்பர்ல இருந்து யாரையும் காண்டாக்ட் பண்ணலை சார்” என்றனர் டீமில் இருந்தவர்கள்.

“அவன் ஸ்பேர் மொபைல் யூஸ் பண்ணியிருக்கலாம் அதி” என்றான் விவேக்.

“டேமிட்..! இதை எப்படி மறந்தேன்” என்றவன் தலையைத் தாங்கிக் கொண்டு அமர்ந்து விட்டான். மூச்சை விட்டு ஆசுவாசப்படுத்தியவன்,

“இப்போ எனக்கு கால் வந்த நம்பரோட லொக்கேஷன் எடுக்க முடியுமான்னு பாருங்க. இவ்வளவு கிரிமினலா யோசிக்கிறவனோட லொக்கேஷனை கண்டுபிடிக்கிறது கஷ்ட்டம் தான். பட் சின்ன க்ளூ கிடைச்சளும் போதும்” என்றான் சற்று தணிந்த குரலில்.

தாரிக் கமிஷனர் அலுவலகம் அருகில் வந்து விட்டது தெரிந்தது தீரனுக்கு.

“விவேக்..! இங்க இருக்குற புல் சிசிடிவியையும் ஆப் பண்ண சொல்லு” என்றான்.அவன் உள்ள வந்ததுக்கு அப்பறம், ஐ மீன் நம்ம கிட்ட வந்ததுக்கு அப்பறம் ஆன் பண்ண சொல்லு” என்றான்.

சரியாக பத்தாவது நிமிடத்தில் உள்ளே நுழைந்தான் தாரிக். அவனுக்கு பின்னால் குனிந்த தலையுடன் வந்த வெண்மொழியை பார்த்தவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர, அடக்கிக் கொண்டான் தீரன்.

“சார் நீங்க சொன்ன மாதிரி நான் வாக்குமூலம் குடுத்துட்டேன். இதோ வெண்மொழியையும் அழைச்சுட்டு வந்துட்டேன். எங்களை நீங்க தான் சேர்த்து வைக்கணும்” என்றான்.

தன் டென்ஷனை மறைக்க டேபிளில் தாளம் தட்டியவன்,

“கண்டிப்பா தாரிக்! அது என்னோட கடமை இல்லையா? கண்டிப்பா சேர்த்து வைக்கிறேன். எப்படி விடிஞ்சதும் மேரேஜ் பண்ணிக்கிறிங்களா? இல்லை இப்பவே பண்ணிக்கிறிங்களா?” என்றான் மொழியை உறுத்து விழித்தபடி.

“நாளைக்கு தான் நாள் நல்லா இருக்காம் சார்” என்றான் தாரிக். அவன் பேசுவது அப்பாவி போல் தெரிந்தாலும் அவன் நிஜமாகவே அப்பாவி இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் தாரிக்.

தீரன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தாலும் மொழியால் நிமிர முடியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று துரத்திக் கொண்டு நின்றது.

“அப்போ காலையிலேயே கிளம்பி வந்திருக்கலாமே தாரிக். இப்பவே வர வேண்டிய அவசியம்?” என்றான் தீரன்.

“மொழிக்கு நாளைக்கு அவங்க வீட்ல மேரேஜ் ஏற்பாடு பண்ணியிருக்காங்க சார். மொழி எனக்கு போன் போட்டு அழுதா. அதான் உடனே போய் கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான் தாரிக். அவன் தீரனைப் பார்த்த பார்வையில் நக்கல் தெரிந்தது.

“இசிட்..!” என்றவன் கோபத்தை அடக்க பெரும்பாடு பட்டான்.

“நீங்க என்ன சொல்றிங்க மிஸ். வெண் மொழி. உங்களுக்கும் இந்த மேரேஜ்ல சம்மதமா? ஏன் கேட்குறேன்னா? ரெண்டாவது தடவையா கமிஷனர் ஆபீஸ் வந்திருக்கிங்க பாருங்க?” என்றான் நக்கலாய்.

“நான் தான் சொல்றேனே? அப்பறம் மொழிகிட்ட என்ன சார் கேட்குறிங்க?” என்றான் தாரிக்.

“தாரிக் சார் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க” என்ற தீரன் அவனை விலக்கி விட்டு மொழியின் முன்னால் நின்று அவளை முறைத்தபடி கேட்டான்.

“சொல்லு உனக்கு சம்மதமா?” என்றான்.

அவள் தலை ‘சம்மதம்’ என்பதைப் போல் ஆடப் போக,

“என்னைப் பார்த்து சொல்லுடி..! உனக்கு சம்மதமா?” என்று தீரன் கத்திய கத்தலில் சட்டென்று நிமிர்ந்தவளின் முகம் பதட்டத்தில் இருக்க, கண்ணீர் வழிய நின்றவளைப் பார்த்து அவனுக்கு கோபம் தான் கூடியது.

“வாயைத் திறந்து பதில் சொல்லுடி. உனக்கு இவனைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என்றவனின் கோபத்தில் மிரண்டு அவள் பின்னே சென்று சுவரோடு ஒட்டிக் கொள்ள,

“என்ன சார் சத்தம் கூடுது?” என்று தாரிக் நக்கலாய் பேசி முடிக்கவில்லை, தீரன் அறைந்த அறையில் தூரப் போய் விழுந்திருந்தான் தாரிக்.

“என்ன மனசுல அண்ணனுக்கும் தம்பிக்கும் பெரிய பருப்புன்னு நினைப்பா? இருக்கறவன் எல்லாம் சட்டையை கிழிச்சுப் போட்டு சுத்திட்டு இருக்கோமா?” என்றவன் இருந்த வெறியில் அவனை புரட்டி எடுத்து விட்டான்.

“ஒரு தேர்ட்ரேட் கிரிமினல்..! இப்படி வந்து தெனாவெட்டா பேசுற அளவுக்கு இருக்குன்னா உங்களை விட்டு வச்சது எவ்வளவு பெரிய தப்பு? ஏன்டா டேய்! நீ கிரிமினல்னு தெரிஞ்சும் உன்னை வெளிய விடுறேன்னா யோசிக்க வேண்டாம்? உங்க அண்ணன் என்னமோ புடுங்குறேன்னு சொன்னானே? பார்க்குறேன், நாளைக்கு அவன் என்னத்தை புடுங்கிக் கிழிக்கிறான்னு?” என்று அவன் அடித்த அடியில் தாரிக் குத்துயிரும் குலை உயிருமாக,

“அதி! காம் டவுன்..! இன்னொரு அடி அடிச்சா செத்துடுவான்” என்றான் விவேக்.

“சாகட்டும் நாய்! எத்தனை பொண்ணுங்க, எத்தனை ஸ்டூடண்ட்ஸ். இவனெல்லாம் இருந்து என்ன செய்ய போறான்?” என்று ஆத்திரம் தீர புரட்டி எடுத்தான் தாரிக்.

“தப்பு பண்ற ஏசிபி. இப்பவும் சொல்றேன். மொழி எங்களுக்கு வேணும். எங்க வழிக்கு குறுக்க வராத. விளைவு ரொம்ப மோசமா இருக்கும்” என்றான் தாரிக்.

மொழி அதிர்ந்து போய் தாரிக்கைப் பார்க்க, நக்கலாய் சிரித்துக் கொண்டான் தீரன்.