இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இந்த இரண்டு நாட்களிலும் மொழியின் நினைவு ஓராயிரம் முறை வந்து சென்றிருந்தது. அவளை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்தாலும் சில காரணங்களுக்காக அதை தள்ளிப் போட்டிருந்தான் தீரன்.
இதோ அன்று மொழியுடன் ஹோட்டல் அறையில் இருந்தவனின் முன்பு நின்று அவனைப் பார்த்த பார்வையில் அவனோ நடுங்கிக் கொண்டிருந்தான்.
“சார் என்னை விட்ருங்க.நீங்க நினைக்கிற மாதிரி பையன் நான் கிடையாது” என்றான்.
“அப்போ உன்னைப் பத்தி நாங்க என்ன நினைக்கிறோம்னு உனக்குத் தெளிவா தெரிஞ்சிருக்கு. சரி சொல்லு நாங்க என்ன நினைக்கிறோம்?” என்றான் தீரன் அதிராமல் அழுத்தத்துடன்.
“இல்ல நீங்க அப்படி பார்க்கவும் ஏதோ பேசிட்டேன்” என்றான்.
“சாருக்கு இப்போ போதையெல்லாம் தெளிஞ்சிடுச்சா. முழுசா மூணு நாள் ஆகிடுச்சே. இன்னுமா தெளியாம இருக்கும்? அப்பறம் என்ன? நாங்க என்ன கேட்போம்னு தான் உனக்குத் தெரியுமே. சொல்லிட்டு கிளம்ப வேண்டியது தான?” என்றான் தீரன்.
“நீங்க என்ன சார் கேட்குறிங்க? எனக்கு எதுவும் புரியலை?” என்றான்.
“அன்னைக்கு அந்த ஹோட்டலுக்கு ஏன் வந்த? மொழி அங்க எப்படி வந்தா? மொழிக்கு ஏன் டிரக்ஸ் குடுத்த?” என்ற தீரனின் கேள்வியில் அதிர்ந்தவன்,
“அய்யோ சார், மொழிக்கு நான் எங்க ட்ரக்ஸ் குடுத்தேன். நான் எதுவும் பண்ணலை சார். என்னை விட்ருங்க” என்றான்.
“உன் பேர் என்ன?”
“ரூ..ரூபன் சார்”
“இங்க பார் ரூபன், மொழிக்கு நீ டிரக்ஸ் குடுக்கலைன்னா நீ ஏன் ட்ரக்ஸ் எடுத்துகிட்ட?” என்றான் தீரன்.
“சார் சத்தியமா தெரிஞ்சே நான் ட்ரக்ஸ் யூஸ் பண்ணலை சார். ஆனா எப்படி அப்படி ஆனதுன்னு எனக்கு தெரியலை” என்றவனின் முகத்தில் பொய் இருப்பதை போல் தெரியவில்லை.
“சென்னையில இருந்து நீ கோயம்புத்தூர் வர வேண்டிய அவசியம்?” என்றான் தீரன்.
“அது வந்து” என்று தயங்கியவன் “மொழி தான் என்னை உடனே பார்க்கனும்னு சொல்லி வர சொன்னா சார். அதனால தான் நான் வந்தேன். ரூம் கூட அவ தான் புக் பண்ணா” என்ற ரூபனின் வார்த்தைகளில் தீரனுக்கு தலையே சுற்றியது.
“பொய் சொல்லாத ரூபன்? மொழி உன்னை பார்க்கணும்னா இங்க சென்னையிலேயே வச்சு பார்த்திருக்கலாமே? எதுக்காக கோயம்புத்தூர் வர சொல்லணும்?” என்றான்.
“அது தான் எனக்கும் புரியலை சார். எங்க பிரண்ட்ஸ் கேங்ல எனக்கு மொழியை ரொம்ப பிடிக்கும். ஆனா அவ என்கிட்ட அப்படி ஒன்னும் சரியா பேச மாட்டா. திடீர்னு அவளே கால் பண்ணி என்னை கூப்பிடுறான்னா முக்கியமான விஷயமா இருக்கும்னு நினைச்சு தான் சார் போனேன்” என்றான்.
“பொய்”
“சத்தியமான உண்மை சார். வேணும்னா நீங்க கால் ஹிஸ்டரியை செக் பண்ணிக்கோங்க” என்றான் ரூபன்.
“பிரண்ட்ஸ் கேங்னு சொல்ற? அந்த ஷிப் ட்ரிப்ல நீ இல்ல?” என்றான் தீரன்.
“நான் தான் சொன்னேனே சார். நான் எதுக்கெடுத்தாலும் கொஞ்சம் ஆட்டிட்டியூட் காட்டுவேன். அது மொழிக்கு பிடிக்காது. அதான் நான் ட்ரிப்க்கு போகலை” என்றான்.
“இந்த அளவுக்கு உன்னை பிடிக்காத மொழி ஏன் உனக்கு கால் பண்ணனும்? அதை யோசிக்க மாட்டியா நீ?” என்றான் தீரன்.
“எனக்கு அப்போ யோசிக்கத் தோணலை சார். அதுவுமில்லாம மொழி சொன்னா என்ன வேணும்னாலும் செய்வேன். இங்க இருக்குற கோயம்புத்தூர் போக மாட்டேனா?” என்றான் ரூபன்.
“ஹோ அப்படி” என்று புருவத்தை உயர்த்திய தீரன்,
“தாரிக் உன்னோட பிரண்ட் தான? மொழியும் தாரிக்கும் லவ் பண்றது உனக்கு தெரியாமையா இருக்கும்? தெரிஞ்சும் இப்படி ஒன்சைட் லவ் வளர்த்துக்கிறது தப்பில்லை?” என்றான் தீரன்.
“தாரிக் மூணு வருஷம் அவ பின்னாடியே சுத்தி, மொழியை பாடா படுத்தி தான் சரின்னு சொல்ல வச்சான். மொழியும் அவன் தொல்லை தாங்காம தான் சரின்னு சொன்னா. ஆனா பெருசா தாரிக் கூட பேசிக்க கூட மாட்டா. அவங்க வீட்ல அவ்ளோ ஸ்ட்ரிக்ட்” என்றான் ரூபன்.
“ஹோ..” என்று யோசித்தவன்,
“ஹோட்டல் ரூம்க்கு போன பிறகு நீ மொழிக்கு கால் பண்ணியா?” என்றான் நேர்பார்வையாய்.
“பண்ணேன் சார்”
“அதுக்கு மொழி என்ன பதில்?”
“நான் வர ஆப்டர்நூன் ஆகிடும். உனக்கு என்ன வேணுமோ எல்லாமே ரூம்க்கே வந்துடும். சாப்பிட்டு ரெஸ்ட் எடுன்னு சொன்னா சார்” என்றான் ரூபன்.
“என்ன சாப்பிட்ட?”
“மார்னிங் டிபன் சாப்பிட்டேன் சார். அன்ட் அதுக்கப்பறம் ஒரு ஜூஸ்” என்றான்.
“நீ ஜூஸ் குடிச்சதுக்கு அப்பறம் என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?” என்றான் தீரன். தலைகுனிந்தான் ரூபன். அதிலிருந்தே நடந்தது அவனுக்கு சிறிது நினைவில் இருக்கிறது என்று தெரிந்து போனது தீரனுக்கு.
“சாரி சார்..! நான் வேணும்னு மொழியோட ட்ரசை கிழிக்கலை. இன்பேக்ட் நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்னு எனக்கே தெரியலை. நான் கொஞ்சம் ஆட்டிட்டியூட் பெர்சன் தான் இல்லைன்னு சொல்லலை. பட் அப்படி பட்ட பையன் இல்லை சார். என்னை எங்க வீட்ல அப்படி வளர்க்கலை சார். எனக்கும் ஒரு தங்கச்சி இருக்கா” என்றவனின் கண்கள் கலங்கிப் போக,
“இல்ல சார்..! அப்படி எதுவும் என் கண்ல படலை சார்” என்றான் ரூபன்.
“ரிலாக்ஸ் ரூபன்! இந்த ஜூசை குடி” என்றபடி வெளியே வந்த தீரனைப் பிடித்துக் கொண்டான் விவேக்.
“அதி எனக்கென்னவோ மொழி மேல தான் டவுட்டா இருக்கு. நம்ம கிட்ட நல்லா பிளே பண்றாங்கன்னு நினைக்கிறேன்” என்றான் விவேக்.
“நோ விவேக்..! ஷீ இஸ் இன்னோசன்ட்” என்றான் தீரன்.
“நீ மொழி மேல இருக்குற காதலை தள்ளி வச்சுட்டு பாரு அதி. உண்மை என்னன்னு உனக்கே புரியும்” என்றான் விவேக்.
“என்னையப் பார்த்தா காதலுக்காக கடமையை விக்கிறவன் மாதிரி இருக்கா விவேக்” என்றான் கோபமாய்.
“நான் அப்படி சொல்ல வரலை அதி? ஆனா மொழி மேல மட்டும் ஏன் இப்படி ஒரு கண்மூடித்தனமான நம்பிக்கை? அதான் எனக்கு ஒன்னும் புரியலை” என்றான் விவேக்.
“உண்மையும் அது தான் விவேக். என்னவோ தெரியலை அவளை முழுசா நம்பனும்னு தோணுது” என்ற தீரன்,
“இப்போ ரூபன் சொன்னதை யோசிச்சு பாரு. ஹோட்டல் ரூம்க்கு வந்த ரூபன் மொழிக்கு கால் பண்ணி பேசினதா சொன்னான் இல்லையா?” என்றான்.
“ஆமா” என்றான் விவேக்.
“அன்னைக்கு ரூபன் இயர்லி மார்னிங்கே செக்கின் பண்ணிட்டதா நீ தானே விசாரிச்சு சொன்ன விவேக்?” என்றான் தீரன்.
“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றான் விவேக் புரியாமல்.
“சம்மந்தம் இருக்கு விவேக்..! அன்னைக்கு இயர்லி மார்னிங் மொழி, கார்ல நம்ம கூட தான் இருந்தா. அந்த நேரத்துல மொழி யார் கூடவுமே போன் காண்டாக்ட் பண்ணலை. ஏன் அவங்க அப்பாகிட்ட கூட என் மொபைல் மூலமா தான் பேசினா. நல்லா ஞாபகப் படுத்திப் பாரு” என்றான் தீரன் தீவிர முகத்துடன்.
“எஸ் அதி! மொழி எந்த போன் காலும் பேசலை. இன்பேக்ட் அதிக நேரம் தூங்கிட்டு தான் இருந்தாங்க” என்றான் விவேக்.
“எஸ்! நாம ஹாஸ்பிட்டல் போய் டாக்டரை பார்த்துட்டு விமலைப் பார்க்கப் போற வரைக்கும் கூட மொழி யார் கூடவும் பேசலை. டாக்டர் தாரா கூட அனுப்பி வச்ச பிறகும் கூட மொழி யார் கூடவும் பேசலை. இதை டாக்டர் தாரா ரூம் சிசிடிவி புட்டேஜ் வச்சு கன்பார்ம் பண்ணிட்டேன்” என்றான் தீரன்.
“ஆனா மொழி தான் பேசினதா இந்த ரூபன் உறுதியா சொல்றானே? அப்போ நம்ம கிட்டயே பொய் சொல்லியிருக்கான் ராஸ்கல்” என்றான் விவேக்.
“நோ..! அவனும் பொய் சொல்லலை. அவன் சொன்ன மாதிரி கால் ஹிஸ்டரில மொழி நம்பருக்கு கால் போனதுக்கான எவிடன்ஸ் இருக்கு. இது ரூபனோட நம்பருக்கு கால் டீட்டையில்ஸ் போட்டு எடுத்தப்போ கன்பார்ம் பண்ணது” என்றவனை விவேக் புரியாமல் பார்க்க,
“சிம்பிள்..! மூணாவதா பிளே பண்ண ஆள் ரொம்ப கிளவரா ப்ளே பண்ணியிருக்கான். அவனோட நோக்கம் மொழியை சிக்க வைக்கிறது மட்டுமில்லை, அசிங்கபடுத்தனும். அதே சமயம் தன்னோட ட்ரக்ஸ் டீலிங் வெளிய வந்தா சிக்குறதும் மொழியா இருக்கணும். அதுக்காகத்தான் அவளுக்கு எதிரா இத்தனை எவிடன்ஸ். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா கான்சப்ட் தான்” என்றான் தீரன்.
“அப்போ ரூபன் இருக்குறது மொழிக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. அப்பறம் எப்படி ஏதோ தெரிஞ்சவங்களை பார்க்க போற மாதிரி கார்ல இருந்து இறங்கி இயல்பா நடந்து போக முடியும்?” என்றான் விவேக்.
“இது தான் பாயின்ட்..! மொழி வர சொன்னதா நினைச்சு ரூபன் போயிருக்கான். பட் ரூபன் வர சொல்லியிருந்தா மொழி போயிருக்க மாட்டா. ஏன்னா அவனை அவளுக்கு சுத்தமா ஆகாது. லைக் ஹாஸ்பிட்டல் டூ ஹோட்டல் போகும் போது இன்பிட்வீன் கேப்ல ஏதாவது நடந்திருக்கலாம். இல்லைன்னா மொழிக்கு வேண்டப்பட்டவங்க மாதிரி பேசி வரவழைச்சிருக்கலாம். இது அனுமானம் எல்லாம் இல்லை. அக்யூரட்டா இது தான் நடந்திருக்கணும்” என்றான் தீரன்.