Advertisement

அவள் சொன்னதைத் தான் ரேணுகாவும் மனசுக்குள் யோசித்துக் கொண்டிருந்தார். விக்கியிடம் தன் வருத்தத்தைக் காட்டினால் அவன் மனமொடிந்து போவான்… அவனிடம் சாதாரணமாய் காட்டிக் கொள்ள வேண்டும்… என நினைத்துக் கொண்டாலும் அவரது கண்ணீர் சுரப்பிகள் மட்டும் அவ்வப்போது அவர் பேச்சைக் கேட்காமல் கண்ணீரை உற்பத்தி செய்து கொண்டிருந்தன.

அதைத் துடைத்துக் கொண்டவர், “ஹர்ஷூம்மா நீ சொல்லுறது என் மூளைக்குப் புரியுது, ஆனா பாழாப் போன மனசு கெடந்து துடிக்குதே… ஆல்ரெடி கண்ணிழந்து கலங்கிப் போயி வர்றவனை நானும் கலங்கடிக்க மாட்டேன், நீ பயப்படாதே…” என்றவர், “சஞ்சு எங்கேடா…” என்றார்.

“அவரும் இத்தனை நேரம் வருத்தப்பட்டு கலங்கிட்டு இருந்தார்… கொஞ்சம் சமாதானப்படுத்திட்டு வந்தேன்… பிரெஷ் ஆகிட்டு வந்திருவார் அத்தம்மா…” என்றாள்.

“சரி… எனக்கு ஒரு காபி குடுடா…” என்றவர் அவளது அழைப்பை கவனிக்கவில்லை.

ஹர்ஷா, அவருக்கு காபி எடுத்து வர, அடுத்து சஞ்சயும் வந்தான். ராணிம்மா காபியைக் கொடுக்க மௌனமாகவே குடித்து முடித்தனர்.

“அம்மா, என்னை மன்னிச்சிருங்க…” என்று தொடங்கிய மூத்த மகனை அன்போடு பார்த்தவர், “வேண்டாம்டா சஞ்சு… உன் மனசு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சு சந்தோஷமாவா இருந்திருக்கும்… எத்தனை துடிச்சுப் போயிருப்பே, என்னை விட உனக்கு உன் தம்பி மேல பாசம்னு எனக்கும் தெரியும் டா… நீ ஒண்ணு செய்தேன்னா அது இந்த குடும்பத்தோட நன்மைக்காக தான் இருக்கும்… நான் இனி கலங்க மாட்டேன்…” அவர் கூறிக் கொண்டிருக்கும் போதே வாசலில் கார் வந்து நிற்க, ராம் உடன் விக்கியும், ராஜீவும் இறங்கினர்.

அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வர்ஷா சோர்வுடன் பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள்.

“நிச்சயம் நடக்கப் போறதால அம்மா, அக்காவை மாமா வீட்டுக்குப் போக வேண்டாம்னு சொல்லி இருந்தாங்களே… மாமாவோட தம்பிக்கு எதோ பிரச்சனை, அத்தை கூட இருக்கணும்னு சொன்னாளே, என்னவா இருக்கும்… கடவுளே, அக்காவுக்கு நல்லபடியா நிச்சயம் நடந்து கல்யாணமாகி சந்தோஷமா இருக்கணும்….” வேண்டிக் கொண்டே பேருந்துக்காய் காத்திருந்தாள்.

தனது சோகத்தை மனதுக்குள் ஒதுக்கிக் கொண்டு வளைய வந்தாலும் பழைய உற்சாகத்துடன் காட்டிக் கொள்ள அவள் மிகவுமே சிரமப்பட்டாள்… வேலையில் தன்னைத் தொலைத்துக் கொண்டாலும் சில நேரத் தனிமையில் நெஞ்சில் குமிழ் விட்டு மேலெழும்பி வரும் அவனது நினைவுகளை அடக்க முடியாமல் திணறித்தான் போனாள். முன்பெல்லாம் தன்னைப் பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொள்பவள் இப்போது அதில் கவனமே இல்லாமல் இருந்தாள்.

அவளுக்கான பேருந்து வரவும் ஏறி ஜன்னலோர காலி இருக்கையில் அமர்ந்தாள் வர்ஷா. காற்றைக் கிழித்துக் கொண்டு பேருந்து முன்னோக்கி செல்ல பின்னோக்கி செல்லும் தெருவோரக் காட்சிகளோடு மனதும் போட்டி போட்டுக் கொண்டு பின்னால் சென்றது.

“உன் அருகாமையில் மட்டுமே

முளைத்தது என் காதல் சிறகு…

பறக்கப் பழகும் முன்னே

எனைவிட்டு நீ மட்டும்

பறந்து போனதெங்கோ…”

அவள் கண்ணில் துளிர்த்த கண்ணீர் காற்றில் சிதறிப் பறந்தது. தனிமையில் அவனை மட்டுமே தேடும் மனதினை தடுக்க வழியின்றித் தவித்தாள்.

“கன்னத்துக் குழியினிலே

கண்ணீரால் நிரப்பி வச்சேன்…

கண்ணா நீ எங்கு சென்றாய்…

கண்ணில் தாகம் தீரலையே…”

விக்கி அழகாய் கண்ணுக்குள் சிரித்தான். அவன் சிரிக்கும்போது கண்களும் சேர்ந்து சிரிப்பது அவனை மிகவும் வசீகரமாய் காட்டும்… அந்தக் கன்னக் குழியின் அழகில் சொக்கிப் போய் எத்தனை முறை தனை மறந்து விழுந்திருக்கிறாள்.

“விக்கி… என்னை விட்டு எங்கு சென்றாயடா, என்னை எப்போதும் பார்க்கத் தோன்றுகிறதென்று சொல்வாயே… இத்தனை நாளாய் எப்படிப் பார்க்காமல் இருக்கிறாய்… உன் கண்கள் என்னிடம் சொன்ன காதலில் உண்மை இருந்தது, நீ பொய்யானவன் இல்லை… என்னுடன் நீயிருந்த ஒவ்வொரு நிமிடமும் உன் கண்ணில் வழிந்த காதலில் நம் எதிர்காலத்தின் கனவுகள் இருந்ததை நான் அறிவேன்… அந்த மெசேஜில் நீ எழுதி இருந்த வார்த்தைகள் என்னை விலக்கி நிறுத்துவதற்கான முயற்சி மட்டுமே… புரிந்து கொண்டேன்… ஆனால் எதற்காக, உனக்கு என்னவாயிற்று என்று தெரியாமல் இருப்பது தான் பெரும் கொடுமை…”

கணநேரம் பிரிந்திருக்க

கலக்கத்தோடு இருந்தவனே…

கனவிலும் என் கை கோர்த்து

காதல் சொன்ன மன்னவனே…

கலங்கவிட்டு எங்கு சென்றாய்…

கடலில் சிக்கிய சருகைப் போல்

கலங்கி நானும் தவிக்கின்றேன்…

கரை சேர்க்க வருவாயோ…

கரம் கோர்த்து மகிழ்வாயோ…

கலங்கரை வெளிச்சமாய் என்

காரிருளை நீக்க வந்துவிடு…

கால்கள் தன்னிச்சையாய் சஞ்சயின் வீட்டை நோக்கி நடக்க, மனமோ விக்கியின் நினைவில் சிக்கித் தவித்தது. நிமிடத்திற்கொருமுறை கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டே தன்னை நிதானப் படுத்தி வீட்டுக்குள் நுழைந்தாள். ஹாலில் ராணி மட்டுமே இருந்தார்.

வர்ஷாவைக் கண்டதும் புன்னகைத்த ராணி, “வாம்மா, எல்லாரும் மாடில பேசிட்டு இருக்காங்க… உக்காரு, நான் காபி எடுத்துட்டு வறேன்…” என்று அடுக்களைக்குள் நுழைந்தார்.

அவர்கள் வீட்டு விஷயத்தை அவர்கள் பேசிக் கொள்ளட்டும்… நாம் எதற்கு நடுவில் செல்ல வேண்டுமென்று நினைத்தவள் அங்கிருந்த புத்தகம் ஒன்றைக் கையில் எடுத்து அதில் கண்ணைப் பதித்தாள். மனம் அதில் லயிக்காமல் மீண்டும் விக்கியின் நினைவுகள் அழற்றிக் கொண்டிருக்க, ராணிம்மா கொடுத்த காப்பியைக் குடித்துவிட்டு தோட்டத்தில் இருப்பதாகக் கூறி வெளியே வந்தாள்.

சிலுசிலுவென்று வீசிய மாலை நேரக் காற்றில் அழகாய் தலையாட்டி அவளை அருகில் அழைத்தன ரோஜாக்கள். சிவப்பு, மஞ்சள் வெள்ளை, ரோஸ் என ஏறக்குறைய எல்லா வண்ணத்திலும் மனத்தைக் கவர்ந்தது. சிறிது நேரம் அதை ரசித்துக் கொண்டே புல்வெளியில் கால் பதித்து நடந்தாள்.

“பட்டான உன்னை யாரும்

பறித்துவிடக் கூடாதென்று

படைத்தவனும் நினைத்தானோ…

பக்கத்தில் வைத்திட்டான் முள்ளை…”

லேசாய் சிரித்துக் கொண்டாள். “இப்போதெல்லாம் நானும் யோசிக்கும் வார்த்தைகள் எல்லாம் கவிதைத்தனமாகவே வருகிறதே… காதலித்துப் பார், கவிதை வருமென்று சொன்ன என் கண்ணாளனைத்தான் காணவில்லை…” பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு திரும்ப வீட்டை நோக்கி நடந்தாள்.

“என்ன டார்லிங்… போதும் அழுதது, இதுக்கு தான் நான் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உங்களைப் பார்க்க வரலாம்னு இருந்தேன்… என் வலியைப்  பொறுத்துக்க முடிஞ்ச எனக்கு உங்க கண்ணீரைப் பார்க்குற சக்தி இல்லை… நான் தான் இப்ப சரியாகிட்டனே… இன்னும் கொஞ்ச நாள்ல பழைய போல ஆயிடுவேன்… அப்புறம் எதுக்கு இந்த அழுகை…” தன் வேதனைகளை மறைத்துக் கொண்டு அன்னையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் விக்கி.

“வி..விக்கி… எப்படில்லாம் வேதனைல துடிச்சியோ, என்னால நினைச்சுப் பார்க்கவே முடியலை டா…” என்றவர், “டேய் ராஜீவ்… உனக்கு கால் சரியாகிடுச்சா, இப்ப பழைய போல நடக்க முடியுதா… நீதான் கால்வலியோட இவனையும் பக்கத்துல இருந்து கவனிச்சு கிட்டயாமே….” அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தழுதழுத்தார் ரேணுகா.

“எனக்கு கால் சரியாகிடுச்சு மா…. விக்கியைப் பத்தியும் நீங்க கவலைப் படாதீங்க, அவனுக்கு சீக்கிரமே சரியாகிடும்… அண்ணன் பார்த்துக்குவார்…” என்றான் ராஜீவ்.

“ரேணுகா, நீதான் அவங்களைப் பார்த்தியே… நல்லாதானே இருக்காங்க… போதும்மா அழுதது…” சமாதானப் படுத்தினார் ராம்.

“ஆமாம்மா… நீங்க ரொம்ப அழாதீங்க, அப்புறம் உங்களுக்கு உடம்புக்கு முடியாமப் போயிடப் போகுது… அவங்க ரொம்ப சோர்வா தெரியறாங்க, முதல்ல ஏதாவது சாப்பிடட்டும்…” என்றாள் ஹர்ஷா.

“அட… நம்ம மகாலட்சுமி எவ்ளோ சரியா சொல்லிட்டாங்க… மாம், உங்களைப் பார்க்கப் போற சந்தோஷத்துல மதியம் சாப்பிடவே இல்லை… உங்க கையால சாப்பிடணும் போல இருக்கு, ப்ளீஸ் டார்லிங்…” தலையை சாய்த்து கேட்டான் விக்கி.

“அ…அச்சச்சோ… பசங்க பசியைப் புரிஞ்சுக்காம நான் பாட்டுக்கு அழுது புலம்பிட்டு இருக்கனே…” என தன்னைத் தானே குட்டிக் கொண்டு, “ரெண்டு பேரும் வாங்க, சாப்பிடலாம்…” என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு அவர்களை கீழே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் வந்தார்.

விக்கி சாதாரணமாய் பேச முயன்றதில் ரேணுகாவின் மனம் சற்றுத் தெளிந்திருந்தது. அதைக் கண்ட சஞ்சய், ராம், ஹர்ஷாவின் மனமும் சற்று நிம்மதியானது. அவர்கள் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

“டார்லிங்… லாஸ்ட்ல நம்ம மகாலட்சுமி கிட்ட அண்ணன் மயங்கிப் போயிட்டாரே, உங்க மனசுக்கு பிடிச்ச பொண்ணே மருமகளா வரப் போறாங்க… செம ஹாப்பி தானே…” அன்னையிடம் கேட்டுக் கொண்டே நிமிர்ந்த விக்கி அதிர்ந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் வர்ஷாவின் காதில் விழுந்த அந்தக் குரல் அவள் உயிர் வரை தீண்ட அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

“இன்னும் என்னடா மகாலட்சுமின்னு கூப்பிடறே… அழகா அண்ணின்னு கூப்பிடு…” சொல்லிக் கொண்டே திரும்பிய ரேணுகா, அங்கே சிலையாய் நின்று கொண்டிருந்த வர்ஷாவைக் கண்டதும் முகம் மலர்ந்தார்.

“அடடே வர்ஷூ… வாடா, வந்து ரொம்ப நேரமாச்சா… எப்ப வந்தே, ஹர்ஷூ இங்க வாம்மா… வர்ஷு வந்துட்டா பாரு…” மேலே நோக்கி குரல் கொடுத்தவர், “காபி சாப்பிட்டியா…” என்று கேட்க அவள் எதுவும் பேசாமல் சிலையாய் நின்று கொண்டிருந்தாள்.

அவளது பார்வை அவர் அருகில் நின்றிருந்த விக்கி, ராஜீவின் மீது நிலைத்திருக்க, விக்கி அவசரமாய் முகத்தை திருப்பிக் கொண்டான்.

“என்னமா பாக்கறே… ஓ… இவங்க யாருன்னு பாக்கறியா, இது என் சின்ன மகன் விக்கி… இவன் ராம் அண்ணா பையன் ராஜீவ்… ஒரு ஆக்சிடண்ட்ல தப்பிப் பிழைச்சு இப்பதான் எழுந்து வந்திருக்காங்க…” என்றவரின் வார்த்தைகள் அவளை சென்று சேரவே இல்லை.

முதலில் ராஜீவின் மீது பார்வையைப் பதித்தவள், அவளை அங்கு எதிர்பார்க்காத அதிர்ச்சியில் குழப்பத்துடன் அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள அடுத்து அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த விக்கியின் மீது அவள் பார்வை படிந்தது.

அவனது அழகான ஹேர் ஸ்டைல் மாறி, மொட்டைத் தலையில் பெரிய தழும்புடன் அதைச் சுற்றிலும் அங்கங்கே கருப்பு நிறத்தில் முளைக்கத் தொடங்கி இருந்த முடிக் கற்றைகளுமாய் இருந்தான். அழகாய் சிரிக்கும் கண்களைக் கறுப்புக் கண்ணாடி மறைத்திருக்க, புருவத்தில் ஒரு தழும்பும் முகத்தை மாற்றி இருந்தது.

முகம் முழுதும் ஸ்டிட்ச் போடப்பட்டு பிரித்ததற்கான அடையாளத்தின் தழும்புகள். மீசையில்லாத முகத்தில் அவனது அழகான கன்னக் குழிகள் பெரிய குழியாய் அழகில்லாமல் தெரிந்தன. எக்சர்சைஸ் செய்து முறுக்கேறிய அளவான உடல்வாகு மாறித் தடித்து படுக்கையிலேயே இருந்ததால் குண்டாகி இருந்தான்.

அதற்குள் மற்ற மூவரும் கீழே வந்திருக்க, தான் அழைத்தது காதில் விழாமல், சிலையாய் நிற்கும் தங்கையின் பார்வை விக்கியின் மீது நிலைத்திருப்பதைக் கண்ட ஹர்ஷா குழப்பத்துடன் அவளை ஏறிட்டாள்.

“வர்ஷூ… என்னடா, என்னாச்சு… ஏன் இப்படி நிக்கறே…” என்றவள் அவளைப் பிடித்துக் குலுக்க, அவளிடம் திரும்பினாள் தங்கை.

“அ..அக்கா…” என்றவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய,

“என்னடா, என்ன ஆச்சு… சொல்லு…” என்றாள் ஹர்ஷா.

“வி…விக்கி…” என்றவள் அப்படியே மடங்கி சரிந்து கீழே அமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள்.

அவளை அங்கு எதிர்பார்க்காத விக்கி, என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தான். அவன் மனதில் நினைத்தது ஒன்றாக இருக்க, வேறொன்று அல்லவா நடந்து கொண்டிருக்கிறது.

“என்னடா ஹர்ஷு… வர்ஷு எதுக்கு அழறா, என்னம்மா, என்ன ஆச்சு, சொல்லுடா…” அன்புடன் கேட்ட ரேணுகாவை யோசனையுடன் பார்த்தாள் ஹர்ஷா.

தங்கையிடம் திரும்பியவள், “வர்ஷூ… இங்க பாரு, முதல்ல அழுகையை நிறுத்து… நீ சொன்னது இவரைதானா…”

குலுங்கி குலுங்கி அழுது கொண்டிருந்தவள் மௌனமாய் தலையாட்ட, அவர்கள் என்ன பேசுகிறார்கள் எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் ரேணுகாவும் சஞ்சயும்.

“என்ன ஹர்ஷு, எதுக்கு வர்ஷு இப்படி அழறா… உனக்குத் தெரியுமா…” என்றான் சஞ்சய்.

“ம்ம்… அது வந்து விக்கி…” என்றவள் திரும்பிப் பார்க்க அங்கே விக்கியும் ராஜீவும் நின்று கொண்டிருந்த இடம் காலியாய் இருந்தது.