Advertisement

                                        8

அப்படி திக்பிரமையுடன் அமர்ந்து இருந்தவளை பார்த்து பதட்டமடைந்த கருண் கவினுக்கு கண்காட்டவும் அவனோ புன்னகையுடன் சிந்துவையே பார்த்தவாறு இருந்தான்.கவின் சொன்னது அனைத்தையும் கிரகித்து முடித்தவள் திடீரென

ஹேய்என்ற கூச்சலுடன் பாய்ந்து கருணை கட்டிக்கொள்ளவும் திடீரென்று தன் மேல் இப்படி வந்து பாய்வாள் என்று எதிர்பார்க்காத கருண் பின்னால் சாய்ந்து சோபாவில் மோதுப்பட்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டான்..பின்னர் மெல்ல அவளை விலக்கியவன் அவளை முறைத்து

புண்ணாக்கு மூட்ட போல இருந்துக்கிட்டு எதுக்குடி இப்போ எனக்கு மேல வந்து விழுற?” என்று பாயவும்

யாருடா புண்ணாக்கு மூடை?? இப்போ உன் லவ் சக்ஸஸ் ஆக நம்ம சப்போர்ட் தேவை தலைவரே

அடக்கடவுளே என்று நெற்றியில் அறைந்து கொண்டவன்

ஹி..ஹி.. நான் தான் புண்ணாக்கு மூடை சிந்து..உனக்கெதுவும் அடிபடலையே?” என்று வினவியவனை பார்த்து இப்போது தலையில் அறைந்து கொள்வது சிந்துவின் முறையானது..எழுந்து கவினிடம் சென்றவள்

கவின் அண்ணா..இந்த குரங்குகாக இல்லை என்றாலும்..பாவனா அக்கா எனக்கு அண்ணியா வரத்துக்காகவாவது நான் நீங்க சொல்றபடி நடக்கிறேன்என்று கூறியவளை அமரவைத்து தங்களது திட்டத்தை விவரிக்க தொடங்கினான்.

பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டு இருந்த பாவனாவின் விழிகள் நொடிக்கொருமுறை வீதியை தவிப்பாக பார்த்துக்கொண்டபடி இருந்தது. அப்பொழுது அங்கே கறுப்புநிற பி.எம்.டபிள்யூ க்ர் ஒன்று வந்து பாவனாவின் அருகே நிற்கவும் திடுக்கிட்டு பின்வாங்கினாள்.அதில் இருந்து சிந்து இறங்கவும் சாரதி இருக்கையில் கருணை தேடினாள்.. ஆனால் அவனோ கோர்ட் சூட்டுடன் காரின் பின் கதவை திறந்து கொண்டு இறங்கினான்..

இறங்கியவன் அங்கிருந்த பாவனாவை பொருட்டே எடுக்காது சிந்து அறிமுகப்படுத்திய மற்ற பெண்களுடன் சிரித்து சிரித்து கதைக்கவும் இங்கே பாவனாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது..

பாவி..பாவி.. நான் முடியாது என்றூ சொன்னதுல கொஞ்சமாச்சும் வருத்தம் இருக்கா பாரேன் அவனுக்கு

பல்லு சுளுக்குற அளவிற்கு அவளுகளோட என்ன இளிப்பு வேண்டி கிடக்குது?’

நேற்று ஃபுள் டே நான் அழுதிட்டு வாரேன்

இவன் கூலா வந்து இறங்கி கடலை போடுறான் பாரேன்

நல்ல காலம் இவனை வேண்டாம் என்று கூறியது

இல்லனா மட்டும்?? வேணாம்,,வேணாம்..இவனாச்சும் சந்தோசமாக இருக்கட்டும்என்று அவனை பார்த்தபடியே சிந்தித்து கொண்டு இருந்தவள் அங்கு நடப்பவற்றை பார்க்கும் தைரியம் அற்றவளாக அருகில் ஸ்டான்ட்டில் நின்ற ஆட்டோ ஒன்றில் ஏறி சென்றாள்..அவள் அந்த புறம் சென்றதும் கருணும் சிந்துவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்து கொண்டனர்..

அங்கு மட்டுமல்ல கருண் அவள் நிற்கும் ஒவ்வொரு இடத்திலும் காட்சியளித்தான்..அவன் தோன்றாவிட்டாலும் அவனை பற்றி புகழ்ந்து புகழ்ந்தே இவளின் தோழிகள் இவளை ஒரு வழி பண்ணினர்.

எரிச்சல் ஏமாற்றம் பொறாமை அழுகை கோவம் இந்த உணர்வுகள் மட்டுமே பாவனாவை சுத்த தொடங்க அவனை ஏற்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தவித்து போனவள் ஆதிராவிடமும் எதையும் பகிராமல் ஸ்ரீயுடன் விளையாடாமல் மௌனமாகவே வலம் வர தொடங்கினாள்..அவளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் வித்தியாசமாக செல்லவும் அடக்க மாட்டாமல் ஆதிரா அவளை விசாரணைக்கு உள்ளாக்கினாள்..

அன்றும் மௌனமாகவே ஹாலினுள் நுழைந்து அறைக்குள் அடைய போனவளை

பாவனா ஒரு நிமிஷம் இங்க வாஎன்று ஆதிரா அழைத்தாள். மௌனமாக தன் முன்னே வந்து அமர்ந்தவளை கூர்மையாக நோக்கியவள் தரையிலேயே பார்வையை பதித்தவாறு இருந்தவளை என்ன செய்வது என்றூ தெரியாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தாள்..சிறிது நேரம் கழியவும் ஆதிரா ஏதும் வினவாமல் இருக்கவும் நிமிர்ந்து அவளை பார்த்து

சொல்லுங்க அண்ணிஎன்றாள்..

ஹோ..நான் யார் என்று இன்னும் உனக்கு நியாபகம் இருக்கா?”

அண்ணி!!”

பாவனா, இதுவரையும் ஸ்ரீயையும் உன்னையும் தனித்தனியே பிரிச்சு பார்த்ததில்லை..ரெண்டு பேருமே குழந்தை தான் என்று தான் இருந்தேன்.. ஆனா..இப்போ ஒரு குழந்தையில கள்ளத்தனம் ஒளிவு மறைவு இப்பிடி நிறைய விஷயம் வந்திட்டுது ?”

இல்லை அண்ணிஎன்று தொடங்கியவளை கைகாட்டி மறித்தவள்

உனக்கு நிறைய டைம் தந்தாச்சுஒவ்வொரு நாளும் இன்று சொல்லுவ..நாளை சொல்லுவ..என்று எவ்வளவு நம்பிக்கையோட இருந்தேன் பாவனா..போச்சு..எல்லாம்என்று விரக்தியாக கூறி முடிக்கவும்

அய்யோ அண்ணிஎன்ற கூச்சலுடன் அவள் மடியில் விழுந்து கதறியவள் முகத்தை அப்படியும் இப்படியுமாக புரட்டியபடி

முடியல அண்ணி..என்னால உங்க கிட்ட சொல்ல முடியல..எனக்கு கருணை பிடிச்சிருக்கு அண்ணி..ஆனா..ஆனா அது தப்பு என்று தெரியுது..ஆனா மறக்க முடியலையே

என்று அரற்றியவளின் முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டவளின் கண்களிலும் கண்ணீர் தடம்..

ஏன்டி லூசு மறக்கனும்? யார் காலில விழுந்தாலும் நான் உங்க திருமணத்தை முடிச்சு வைப்பேன்..என்னை நம்பு..இப்போ எதையும் யொசிக்கா போய் குளிச்சுட்டு வா..சாப்பாடு எடுத்து வைக்கிறேன். என்று பட படவென்று கூறியவள்

ஸ்ரீ..அம்முக்குட்டிஎன்று கூவியவாறே உள்ளே சென்ற பிறகும் அவ்விடத்திலேயே அமர்ந்திருந்தாள் பாவனா..

அன்று இரவு ஆதிராவிற்கு ஏனோ தூக்கமே வரவில்லை.ஏதோ தவறாக நடக்க போவது போலவே மனதுக்குள் உறுத்திக்கொண்டே இருக்கவும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தவளை தட்டி எழுப்பியது பாவனாவின் முனகும் ஒலி. ஆதிராவிற்கு சந்தேகம் வரவும் விரைந்து பாவனாவின் கதவை திறக்க முயல அதுவோ உள்பக்கமாக பூட்டி இருந்தது.வழமையாக பாவனா அவ்வாறு செய்வதில்லை ஆகையால் பதட்டம் அதிகரிக்க அந்த அறையின் ஜன்னலை திறக்க முயன்றாள்.

 

அதுவும் திறக்க முடியாமல் போகவும் அருகில் இருந்த இரும்பு பூச்சாடியால் ஜன்னல் கண்ணாடியை உடைத்தவள் அங்கு பார்த்த காட்ச்சியில் உறைந்து போய் நின்றாள். வலது கையில் ஆழமாக கத்தியால் கையை கிழித்து இரத்தம் சொட்ட சொட்ட மயங்கும் நிலையில் முனகிக்கொண்டிருந்தாள் பாவனா.அவளின் நிலையை பார்த்ததும் கண்ணை கட்டுவது போல இருக்கவும் அருகில் இருந்த சுவற்றை பற்றிய படி தன்னை நிலைப்படுத்தியவள் பாவனாவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றவும் சுதாவிற்கு அழைத்தாள்..

 

சற்று நேரத்தில் அழைப்பு எடுக்கபடவும் விபரம் சொல்லியவள் உடனே சென்று கதவின் பூட்டை அந்த இரும்பு சாடியாலேயே உடைக்க முயன்று கொண்டிருந்தாள்..பின்னர் சுதாவின் கணவர் வரவும் அவரின் முயற்சியால் ஏற்கனவே சற்று விலகி இருந்த பூட்டு உடைய கதவு திறந்து கொண்டது..சுதாவின் காரிலேயே பாவனாவை ஏற்றியவள் தானும் ஏறியபடி ஸ்ரீக்கு துணையாக இருக்கும் படி சுதாவை வேண்டி விட்டு பாவனாவை மடியில் சாய்த்து கையை தூக்கி பிடித்தபடி சுதாவின் கணவர் வாகனத்தை செலுத்த வைத்தியசாலையை நோக்கி விரைந்தாள்.

 

வைத்தியசாலையில் பாவனாவை அனுமதித்த பின் அங்கிருந்த கதிரையொன்றில் தொய்ந்து அமர்ந்தவளுக்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே தோன்றவில்லை.அனைத்துமே வெற்றிடமாக தான் தோன்றியது.விழிகளை இமைக்க கூட மறந்து சிலையென அமர்ந்து இருந்தவளை கண்டு பரிதாபமுற்ற சுதாவின் கணவர் அவளை அழைக்கவும் விழிகளை தூக்கி அவரை நோக்கினாள்..

 

என்னம்மா ஆதி..இப்படியே இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா? அடுத்தது செய்ய வேண்டியதை யோசிக்கனும்மா..இன்னும் கொஞ்ச நேரத்துல என் அம்மாவிடம் பிள்ளைகளை விட்டுவிட்டு வர்ரதா சுதா கால் பண்ணா..நீ யாருக்கும் இப்படி ஆனத சொல்லனுமா?”

என்று வினவவும் மறுப்பாக தலை அசைத்தவளுக்கு அப்பொழுது தான் கருணின் முகம் மனதில் ஒளிர்ந்தது..

 

அவசரமாக முகத்தை அழுந்த துடைத்தவள் கையுடன் தூக்கி வந்திருந்த தன் ஃபோனை எடுத்து கருணை அழைத்தாள்..அவளின் ஃபோனில் பணமிகுதி இல்லாமல் போகவும்

ச்சே” என்று சலித்தவள்

 

அண்ணா ஒருக்கா ஃபோனை கொடுங்கவேன்” என்று வாங்கி கொண்டு அங்கிருந்து சற்று தள்ளி சென்று கருணின் நம்பரை டயல் செய்தாள். அங்கு ரிங் போக போக இவளின் இதய துடிப்பும் அதிகரித்துக்கொண்டே இருந்தது..ஐ.சி.யு வில் ஒரு கண்ணும் ஃபோனில் ஒரு கண்ணும் என இருந்தவளுக்கு இரண்டு பக்கமிருந்தும் பதில் எதுவும் கிடைக்காமல் போனது தான் பரிதாபம்..

 

இரண்டு மூன்று முறை கருணுக்கு அழைத்தும் பதில் இல்லாமல் போக கருணின் பெயருக்கு சற்று கீழே தென்பட்ட கவினின் நம்பரை டயல் செய்தாள்.கருணை போல் அல்லாது கவினின் ஃபோன் ஒரு ரிங்கிலே எடுக்கப்பட்ட பின்னரும் பேச இவளால் தான் இயலாமல் இருந்தது..

 

ஹலோ.கவின் ஸ்பீக்கிங்க்” என்று கூறிய கவினுக்கு பதிலளிக்க முயன்று கொண்டிருந்தவளை பேச செய்தது கவினின் அடித்து வந்த

ஹலோ” என்ற கவினின் கர்ஜனையான குரல்..

 

ஹ..ஹலோ..நான் ஆதிரா” என்று அவள் கூறியதும்

 

எந்த..” என்று தொடங்கியவன் திடுக்கிட்டு நிறுத்தி

நீயா?” என்று அதிர்ச்சியாக கேட்டான்..உடனே மனதில் ஆயிரம் கேள்விகள் உதயமாகவும் சொல்லு” என்று மட்டும் கூறி விட்டு நிறுத்தினான்.

 

பா..பாவனா..பாவனா” என்று ஆதி திக்கவும்

என்ன?பாவனாக்கு என்ன?” என்று அந்த புறம் ஏகமாய் பதறினான்..

நடந்ததை ஒரே மூச்சில் கூறி முடித்தவள், இங்க சாரா ஹாஸ்பிடல்ல தான் நிற்கிறோம். என்று கூறி விட்டு அழைப்பை துண்டித்தாள்..

 

விஷயத்தை கேள்வியுற்று பதறிய கருணை சமாதானப்படுத்தி கருணுடன் ஐந்து நிமிடத்தில் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்த கவினுக்கு அந்த நேரத்திலும் தெளிவாக இருந்த ஆதியின் முகம் வியக்க வைத்தது.பதற்றமாக ஆதியின் அருகே வந்த கருண்

சிஸ்டர்..என்னாச்சு?டாக்டர் என்ன சொல்லுறாங்க” என்று பதறிப்போய் கேட்கவும் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள் அமைதியாகவே நின்றாள்.அவள் பதில் சொல்லாமல் இருப்பதை கண்டதும் கோவத்தில் பல்லை கடித்த கவின் ஆதியின் அருகே இருந்த சுதாவின் கணவரை பார்க்கவும்

தெரியல தம்பி..உள்ள பாவனாவை விடும் போது உள்ள போனவங்க தான்..நர்ஸ்மார் தான் அங்க இங்க நு ஓடு படுறாங்க” என்று சலிப்பாக கூறவும் ஐ.சி.யு வில் இருந்து வைத்தியர் இருவர் வந்தனர்.

அவர்களை கண்டதும் அவர்களை விரைந்து நெருங்கிய கருண்

சார்..பாவனா..என் பாவனா இப்போ எப்படி இருக்கா?” என்று கேட்கவும் அவர்களில் ஒருவர் கருணின் தோளில் கையை வைத்து அழுத்தினார். பின் கவினை நோக்கி

மிஸ்டர் கவின் நீங்க எங்க இங்க?” என்று கேட்கவும்

உள்ள இருக்கிறது எங்க ரிலேடிவ் தான் சார்..இப்போ எப்படி இருக்கு அவங்களுக்கு?”

நவ் ஷீ இஸ் குட்..ப்ளட் கொஞ்சம் லாஸ்..பட் கைல அவ்வளவு ஆழமா கிழிக்கல..ஸோ..காப்பாத்திட்டோம்” என்று கூறியபடி ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து அகலவும் அவ்வளவு நேரம் உறுதியாக நின்ற ஆதிரா அப்படியே நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து குமுறி குமுறி அழ தொடங்கினாள்..

அவள் அழ தொடங்கவும் பதட்டமாக அவளை நெருங்கிய கவின் அவளருகில் மண்டியிட்டவாறு அவள் தோளில் ஆறுதலாக கையை வைத்து அழுத்தியவன்

ஹேய் அது தான் ஒன்றும் இல்லை என்றாங்க ல? இனி பயப்பட தேவையே இல்ல..அழாத” என்று ஆறுதல் படுத்த எதுவுமே அவள் காதில் ஏறவில்லை..மாறாக அவ்வளவு நேரம் பட்ட பாட்டை எண்ணி நீண்ட நேரம் கண்ணீர் வடித்தவள் அந்த வழியாக சென்ற நர்ஸ் சத்தம் போடவேணாம்  என்று அதட்டவும் நிமிர்ந்து தன் தோள்களில் இருந்த கவினின் கையை விலக்கிவிட்டு அமைதியாகவே அங்கு இருந்த இருக்கைகளில் அமர்ந்தாள்..

அவளை விசித்திரமாக நோக்கினாலும் அவளின் தற்போதைய மனநிலையுணர்ந்து தானும் அமைதியாகவே கருணின் அருகில் சென்று நின்று கொண்டான்..கருணோ எதுவுமே மனதில் பதியாமல்

பாவனா..பாவனா” என்ற ஒரே இலக்கை நோக்கி தன் எண்ண அம்புகளை வீசிக்கொண்டு இருந்தான்.சிறிது நேரத்தில் ஒருவர் வந்து பாவனாவை சந்திக்க செல்லலாம் என கூறவும் அனைவரும் ஆதிராவையே நோக்கினர்.. ஏன் பதற்றமாக உள்ளெ செல்ல எத்தனித்த கருண் கூட சற்று தயங்கி ஆதிராவை நோக்க ஆதிராவோ கருணை நோக்கி புன்னகைத்து கண்ணாலேயே செல்லுமாறு காட்டினாள்..அதற்காகவே காத்து கிடந்தது போல கருண் உள்ளே நுழையவும் கவினோ ஆதிராவை விசித்திரமாக நோக்கி கொண்டிருந்தான்

உள்ளே வெண்ணிற போர்வைக்குள் கிழிந்த நாராக கிடந்த பாவனாவை கண்டவுடன் தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது கருணுக்கு..முதன் முதலில் பார்க்கும் போது எந்த கவலையும் இல்லாமல் மலர்வுடன் இருந்தவளுக்கும் இப்பொழுது இப்படி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டிருப்பவளுக்கும் ஓராயிரம் வேறுபாட்டை காட்டியது கருணின் கண்கள்..

சேலைன் ஏற்றப்பட்டிருந்த பக்கமாக அவளின் கட்டிலை நெருங்கியவன் அவள் நெற்றீயில் வழிந்த கூந்தலை ஒதுக்கி அங்கேயே தன் உதடுகளை புதைத்து ஒரு ஆழ முத்தம் ஒன்றை இட்டு விட்டு அப்படியே தன் மனதில் இருந்த பதட்டம் பயம் அனைத்தையும் கண்ணீராக வெளியிட்டான்..அப்போழுது தான் மயக்கம் தெளிந்து உறக்கத்திற்கு சென்றிருந்த பாவன நெற்றியில் ஈரம் உணர்ந்து திடுக்கிட்டு பார்க்கவும் கவினின் கழுத்து தான் தெரிந்தது..

பாவனாவிடம் தெரிந்த அசைவில் பதறி விலகியவன் விழிவிரித்து தன்னை பார்த்து கொண்டிருப்பவளின் விழிகளை நோக்கியவாறே அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவள் கைகளை இறுக பற்றி கொண்டான்.அவனின் கைகள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவள் கேள்வியாக அவனை நோக்கவும் அவளின் கைகளை பற்றி தன் கன்னத்தில் பதித்து கொண்டவன் அவள் விழிகளை கூர்மையாக நோக்கினான்.

அவனின் கோபவிழிகள் கேட்ட கேள்வியை நன்கு உணர்ந்து கொண்டவள் விழிகளை தாழ்த்தவும்

ஏன்டி” என்று மெல்லிய குரலில் அவளை வினவினான்..அவள் விழிகளை தாழ்த்தியபடி அமைதியாக இருக்கவும் சற்று குரலை உயர்த்தி

ஏன்டி?” என்று உறுமலாக கேட்கவும் விழி உயர்த்திபார்த்தவளின் விழிகளில் நீர் நிரம்பி இருந்தது..இப்பொழுது தான் ஒரு கண்டத்தில் இருந்து உயிர் பிழைத்து வந்திருக்கிறாள்,அனைத்தையும் பேசி இப்பொழுதே வேதனை படுத்த வேண்டாம் என்று எண்ணியவன் ஆழமாக ஒரு பெருமூச்சை வெளியிட்டுவிட்டு அவள் கைகளை எடுத்து நெஞ்சில் வைத்து

இங்க துடிப்பு இருந்திச்சா இல்லையானே தெரியலடி அப்படி ஒரு செய்திய கேட்டதும்.செத்தே போய்ட்டேன்..என்னை விட்டு போறது உனக்கு வேணா சந்தோசமாக இருக்கலாம்..ஆனா..ஆனா..என்னால இருக்க முடியாது..எங்க போனாலும் வருவேன்..அது சொர்க்கமா இருந்தாலும் சரி” என்று அவளின் கண்களை பார்த்தவாறே கூறினான்.. அவனின் பேச்சில் உடைந்தவள் தலையை மறுப்பாக அசைத்து

அய்யோ கருண்..இல்லை..நான் போகல..போகல..நான் அப்படி ஒரு காரியம் செய்ததுக்கு காரணம் ஏதோ ஒரு மடத்தனமான யோசனை தான்..அந்த யோசனைக்குள்ள எங்க உங்களை இழந்திடுவோமோ என்று பயமாவும் இருந்திச்சு..அம் சாரி” என்று விசித்தவாறு கூறவும் பதட்டப்பட்டு அவளின் அருகில் கட்டிலில் சென்று அமர்ந்தவன் அவள் தலையை வருடி விட்டவாறு

வேணாம்டா..எதையும் யோசிக்காத..இப்போ உனக்கு தேவை ஓய்வு தான்..நான் உன்னை விட்டு எங்கயுமே போகமாட்டேன்..அமைதியா இரு” என்று மெல்லிய குரலில் ஆறுதல் கூறினான்..

Advertisement