Advertisement

அதை நான் சொல்றத விட ஹரிஷே சொல்லடும்என்று அறைவாயிலை பார்க்கவும் அதில் சாய்ந்து புன்னகைத்தவாறு ஹரிஷ் நின்றிருந்தான்.

அவனைக்கண்டு அதிர்ச்சியாகி ஆதி நிற்கவும் கவின் எழுந்து சென்று அவனை தழுவி உள்ளே அழைத்து வந்தான். ஹரிஷ் அருகில் வரவும் தெளிந்த ஆதி அவனை கேள்வியாக நோக்கவும்

 

உன்னை தெளியவைக்க நேரம் இது தான் என்று தோனிச்சு. எவ்வளவு நாள் நானும் கெட்டவனா உங்களோட உலகத்தில இருக்கட்டும் சொல்லு? என்னை உனக்கு ப்ரூஃப் பண்ணனும் அதுனல தான் உன் மூலமா கவினை தூண்டி விட்டேன்.”

ஆதி சின்ன வயசில இருந்தெ என்னை பற்றிய விம்பம் என் அண்ணாவோட மனசில தப்பாவே விழுந்திடுச்சு. அதுவே அவன் கிட்ட இருந்து எனை விலக வைச்சுது. பாவனாவும் சின்ன பொன்னு, அவ என்னை அண்ணா என்ற கண்ணோட்டத்தோட பார்க்க சந்தர்ப்பமே வரல. எனக்கும் அவங்க கூட்டுக்குள்ள சேரனும் நு ஆசை. ஆனா அவங்களுக்காக விலகி இருந்தப்போ தான் உங்க வக்கீல் சார், அதாவது நீ, நம்பி உன்னோட சொத்துக்களை ஒப்படைச்சுட்டு வந்த அதெ குடும்ப வக்கீல் தான். சொத்துக்காக ஆசை பட்டு உங்க அப்பா இறந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த யோசிச்சார். நான் என்னோட பிஸ்னஸ் விஷயமா கோர்ட் போய் இருந்தப்போ அந்த ஆள் பேசிட்டு இருந்தத கேட்டேன். அண்ணாகிட்டயும் வார்ன் பண்ணேன்என்னை நம்பல. ஆனாலும், என்னோட பொலிஸ் ஃப்ரெண்ட் மூலமா அவங்களுக்கு பதுகாப்புக்கு ஏற்பாடு பன்றதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போய்..”

என்று கூறி ஆழ மூச்சை எடுத்து விட்டவன்

வேதனையை விழுங்கி கொள்பவன் போல சிறிது நேரம் மௌனமாக இருந்தான். அங்கிருந்த கனமான அமைதியை மீண்டும் கிழித்தவன்

அடுத்து நீ தான் என தெரியும். ஆனா பாவனா என்னை பார்த்து ஹாஸ்பிட்டல்ல அண்ணாவை கொல்ல எப்பிடிணா முடிஞ்சுது என்று அழுதப்போ தான் எனக்கே என்னை பற்றி என்னோட குடும்பம் யோசிச்சு வைச்சது புரிஞ்சுது. அந்த நேரம் உங்களை என்கூட வைச்சு பிரச்சனைகளை முடிக்கிறத விட என்னை பார்த்து பயந்து நீங்க என்னை விட்டு போனா தான் என்னால எல்லாம் சரி பண்ண முடியும் என்று தோணிச்சு. அந்த வக்கீல் பற்றி ஆதாரம் எல்லம் கலக்ட் பண்ணி அவனுக்கு எதிரா நடவடிக்கை எடுக்க தான் இவ்வளவு நாள் ஆதி. இப்போ நீ வேணும். உன்னோட அப்பா வளர்த்துட்டு போனத நீ தான் வந்து பார்க்கனும். உன்னை மறுபடியும் உளள எடுக்க தான் திரும்ப உன் லைஃப் நான் என்ட்ரி குடுத்தேன். நீ வந்தா நான் மறுபடியும் என்னோட உலகத்துக்குள்ள போய்டுவேன்

அவ்வளவு தான் என்பது போல சோபாவில் சாய்ந்து அமர்ந்து அங்கு இருந்த தண்ணீர் குவளையை எடுத்து மட மட வென குடித்து முடித்து ஓய்ந்து போய்  அமர்ந்தான். அனைத்து பிரச்சனைகளையும் ஒற்றையாளென தனது குடும்பத்துக்காக சமாளித்து ஓய்ந்து அமர்ந்த ஹரிஷை பார்க்கும் போது

தனக்கு இப்படி ஒரு அண்ணா இல்லையே என்ற ஏக்கம் எழுவதை ஆதியால் தடுக்க முடியவில்லை. அந்த ஏக்கம் விழிகளில் ஓட கவினை அவள் நிமிர்ந்து பார்க்கவும் அவளை பார்த்து கன் சிமிட்டி புன்னகைத்தவன்

ஆதி வர மாட்டா ஹரிஷ்என்று அமைதியாக அவனை நோக்கி கூறினான்.

அவன் கூறியதைக்கேட்டு ஹரிஷ் மட்டுமல்ல கார்த்திக்குமே அதிர்ச்சியாக நோக்க கவினை புரிந்தவளாய் அவன் தோள் சாய்ந்து ஆமோதிப்பாக புன்னகைத்தாள் ஆராஇப்பொழுது மற்றைய இருவரின் முகமும் கேள்வியாக மாற ஆதியை அணைத்தவாறே நன்கு சாய்ந்து கால் மேல் கால் போட்டு சக்கரவர்த்தியாய் தோன்றீயவன்

பின்ன என்ன ஹரிஷ்? எவ்வளவு நாள் குடும்பத்தை விட்டு ஒதுங்கியே இருக்க போற? இனி குடும்பம்னா என்னனு தெரிஞ்சுக்கோ. பாவனாவோட அன்பு ஸ்ரீயோட குறும்பு இது எல்லாத்தையும் அனுபவிக்க உனக்கு உனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. நீ ஆதிகிட்ட எல்லாத்தையும் கொடுத்துவிட்டு ஒதுங்கி விட பார்க்கிற. ஆனா உன்னை ஒதுக்க எனக்கு விருப்பம் இல்ல. என்ன ஆதி?”

கண்டிப்பா கவின்.” என்றவள் எழுந்து சென்று ஹரிஷின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள்

என்னோட அக்காவை, அப்பாவை திரும்ப பார்த்த மதிரி அவளோ சந்தோஷமா இருக்கு. எனக்காக யார்னே தெரியாத எனக்காக் இதெல்லாம் பண்ணி இருக்கீங்க. எனக்கு ஒரு அண்ணாவா எங்க கூட வாங்கண்ணாஎன்று இறைஞ்சலாக கேட்கவும் ஹரிஷின் கன்னத்தில் உருண்டோடிய கண்ணீர் ஆதியின் கரங்களில் பட்டுத் தெறித்தது.

                                                                                          *********

சக்கரவர்த்தியின் இல்லம் விழாக்கோலம் பூண்டு இருந்தது. அன்று அந்த மாளிகையின் இளவரசி சிந்துவுக்கு நிச்சயதார்த்தம். மணமகன் வேறு யாரும் இல்லை. இப்பொழுது பாவனாவின் பாசமிகு அண்ணன், ஸ்ரீயின் ஹான்ட்ஸம் மாமா, ஆதியின் தத்து அண்ணன் ஹரிஷே தான்.

ஹரிஷை பற்றி அறிந்து பாவனா உருகி வீட்டினர் மறுகி என்று இருக்க சிந்துவோ அவனை சைட் அடிக்க தொடங்கி விட்டாள். அதை அறிந்து கொண்டது கவின் தான். அவன் விழிகளை தாண்டி ஒரு விடயம் சென்று விடுமா என்ன? அறிந்ததோடு மட்டுமன்றி அதை நடத்தவும் வழி வகுத்து விட்டான். அது தான் இன்றைய நிகழ்வுக்கான அச்சாரம்..

ஹரிஷிற்கும் இவ்வளவு நாள் தனித்து இருந்துவிட்டு இந்த கூட்டுக்குள் சேர்வது பிடித்து தான் இருந்தது. சிந்துவை அவளது குறும்பை அதை விட பிடித்து இருந்தது. அதனாலே அவனும் மகிழ்வாக இதை ஏற்றுக்கொண்டான்.

விழா சிறப்பாக நிறைவேறி இரவும் கவிழ்ந்தது. அனைவரும் களைப்பில் உறங்க செல்லவும், ஸ்ரீ ஹரிஷுடன் செல்வதாக அடம் பிடிக்க அவளை அவனுடன் விட்டு விட்டு அனைத்தையும் மேற்பார்வையிட்டு விட்டு தனது அறைக்குள் நுழைந்த ஆதி கணணிக்குள் தலையை நுழைத்துக்கொண்டு இருந்த கவினை கண்டு தலையில் அடித்தவாறே கதவை தாளிட்டு கட்டிலின் மறுபுறம் வந்து அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தும் அதனை கவனிக்காமல்கவின் இருக்கவும் கோவம் மிகையுற தனது நகைகளை களைந்து சென்று பத்திரப்படுத்தியவள் நைட்டியை எடுத்து சென்று குளித்து விட்டு வந்து மீண்டும் கட்டிலில் அமர்ந்தாள். அப்பொழுதும் அவன் தன்னை கவனிக்காமல் இருக்கவும் எரிச்சலில் திரும்பி படுத்தது தான் தாமதம் சுழன்று போய் கவினின் மேலே இருந்தாள். எப்படி என்று அதிர்ச்சியாகி அவள் முழிக்கவும் அவளை தன் மேல் போட்டவாறு சிரித்துக்கொண்டிருந்தான் அந்தக்கள்வன்.

அவன் தான் என்று புரியகவின்என்று சிணுங்கியபடி அவனது மார்பில் அடிக்கவும் அவளது கையை பற்றி அதில் அழுத்தமாக முத்தமிடவும்கவின்என்று மீண்டும் உள்ளே போன குரலில் அழைத்தாள். அவளை அழுத்தமாக பார்வையிட்டுக்கொண்டே அவளது இடுப்பை இறுக்கியவன்

சந்தோஷமா இருக்கியா கண்ணம்மா?” என்று குழைவாக கேட்க அவனது நெற்றியில் இதழ் பதித்தவள்

ரொம்ப..ரொம்ப சந்தோஷமா இருக்கேன் கவின். எல்லாமே உங்களால தான். தாங்க் யூஎனவும் அவளது கீழுதட்டை கடித்தவன்

நமக்குள்ள தாங்க் யூ வரனுமா?” என்று கேட்கவும்ம்ஹூம்என்று தலையை மறுப்பாக ஆட்டியவள் அவனின் மார்பில் புதைந்து கொண்டாள்.

இப்போதான் மனசுக்கு ஆறுதலா இருக்கு ஆரா. உன்னோட பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நீ நிம்மதியா இருக்கிறத பாக்கிறப்போ

அவனின் நெஞ்சில் தன் தாடையை பதித்து அண்ணாந்து பார்த்தவள் ஒரு கையால் அவனின் கன்னத்தை தடவியவாறே

நீங்க இல்லனா இதெல்லாம் சாத்தியமே இல்ல கவின்என்றதும் தலை ஆட்டி மறுத்தான்.

இல்ல ஆரா..ஹரிஷ் என்ற தனி மனிதன் இல்லனா இதெல்லாம் சாத்தியமே இல்ல.. அவனுக்கு நம்ம சிந்துவை கொடுக்கிறதுல எனக்கு அவ்வளவு சந்தோஷம்எனவும் அதை ஆமோதித்தவள்

ஆனா..ஹரிஷ் மூலமா எனக்கு என்ன கிடைச்சு இருக்கும் கவின்? பாதுகாப்பும் சொத்தும் தானே? ஆனா  என்னை உயிர்க்க வைச்சது இந்த கவினோட அன்பு மட்டும் தான்என்று கூறி சிரித்தவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்

இவ்வளவு நாள் எங்க டி இருந்த? மென்மைனா என்னனு இப்போ தான் உணருறேன்எனவும் தான் இருக்கும் நிலை உணர்ந்து

ச்சீஎன்று வெட்கம் மேலிட விலக பார்க்கவும் அவளை அசையாமல் பிடித்தவன்

நான் அதை சொல்லல..ஆனா அதுவும் தான்என்று கண்சிமிட்டினான் அந்த கள்வன்.

அவனின் பார்வையிலும் பேச்சிலும் சிவந்து போனவள்கவின்என்று முணகி அவன் மார்பை சூடாக்கவும் இன்னும் அவளை நெருக்கியவன்

தன்னுள் புதைந்தவளை இறுக அணைத்தவாறே

நீட் யு ஆதி. உன்னை எனக்கே எனக்குனு தருவியா?” என்று காதருகில் கேட்ட்டான். பெண்மை என்ன பதில் சொல்லும்? நாணத்தில் இன்னும் அவன் மார்பில் புதையவும் பதில் கிடைத்த மகிழ்வில் அவளை சுவீகரிக்க தொடங்கினான் கவின் சக்கரவர்த்தி. தன்னவனின் கைகள் அவளுடலில் அத்து மீறிய போதும் சரி அவன் ஆடைகளை களைந்த போதும் சரி மார்பில் அழுத்தமாக புதைந்த போதும் சரி ஆதி கிறங்கி அவனுடன் கலந்திட துடிக்க அதை உணர்ந்த கவினும் தன்னவளை முழுமையாக தனக்குள்ளே உள்வாங்கிக்கொண்டான்.

கவினின் ஆளுகைக்குள் இருந்த ஆதியும் மெல்ல மெல்ல முழுமையாக ஆதிரா கவின் சக்கரவர்த்தியாக மாறிக்கொண்டு இருந்தாள்.

அங்கு கவின் ஆராவை சுவீகரிப்பதை கண்டு நிலவே மேகத்துக்குள் மறையும் போது நமக்கு அங்கே என்ன வேலை மக்களே? அவர்களை வாழ்த்தி விடை பெறுவோம்.

 

 

 

 

Advertisement