Advertisement

அங்கு ஹரிஷின் வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு காவலாளியிடம் தன் பெயரை கூறீய கவின் ஹரிஷை சந்திக்கவேண்டும் என கூறவும் அவனுக்கு சல்யூட் வைத்தவாறே

“தெரியும் சார், ஹரிஷ் தம்பி 3 நாளுக்கு முதலே நீங்க வருவீங்க என்று சொல்லிச்சுது. உள்ள போங்க” என்று கேட்டை திறந்து விடவும்

“ஹ.ஹ” என்று கார்த்திக் சிரிக்க தொடங்கினான். அவன் சிரிக்கவும் கோவம் வர பெற்றவனாய்

“எதுக்குடா இப்போ இளிச்சுட்டு இருக்கிற?’ என்று கவின் வினவவும்

“இல்ல. ஹரிஷ் மூன்று நாளைக்கு முன்னமே எல்லாம் கண்டு பிடிச்சு வருவ என்று எவ்வளவு நம்பிக்கையா இருந்து இருக்கான் பாரென்.” என்று கூறி மீண்டும் சிரிக்கவும் அவனோடு சேர்ந்து கவினும் சிரித்தான்.

தன்னுடைய சிரிப்புடன் கவினின் சிரிப்பு இணையவும் தனது சிரிப்பை நிறுத்திவிட்டு கேள்வியாக நோக்கிய கார்த்திக்கை பார்த்து கண்ணடித்த கவின்

“ஹரிஷ், யோசிச்சு இருப்பான் நான் நல்ல ஒருத்தனை இதை எல்லாம் கண்டு பிடிக்க ஒழுங்கு படுத்தி இருப்பேன் என்று. பாவம் அவனுக்கு தெரியாதே உன்னை பற்றி” என்று கூறி காலை வாரவும் இப்பொழுது முறைப்பது கார்த்திக்கின் முறையானது.

அவனை நோக்கி கண்ணை சிமிட்டியவாறே காரிலிருந்து இறங்கியவன் திறந்து இருந்த ஹால் கதவினை பார்த்து தயங்கி நின்றான்.

“ஏன் அங்கயே நிற்கிற கவின் உள்ளவா” என்ற குரல் திடீரென அன்கு ஒலிக்கவும் புருவம் சுருக்கியபடியே கார்த்திக்குடன் உள்ளே நுழைந்தவன் வலது புறமாக போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து மடிக்கணணியில் எதையோ ஆராய்ந்து கொண்டு இருந்த ஹரிஷை கண்டுவிட்டு அவனருக்கில் போனான். அவன் அருகில் வரவும் தனது கணனியை மூடி முன்னாலிருந்த டீப்பாயில் வைத்தவன் கைகளை தூக்கி நெட்டி முறித்தவாறே

“ஏன் ரெண்டு பேரும் நிற்கிறீங்க..ப்ளீஸ்” என முன்னாலிருந்த இருக்கையை காட்டினான்.

அவன் கூறியதை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட கவின் சோபாவில் நன்கு சாய்ந்து அமர்ந்தவாறே

“ஸோ ஹரிஷ் நான் வருவேன்னு நீ எதிர் பார்த்து இருக்கிற?”

“எப்படா வருவா அப்பிடினு பார்த்துட்டு இருக்கேன் நீ வேற”

“ஏன் இவ்வளோ நாளுக்கு அப்புறம் இப்பிடி ஒரு எதிர்பார்ப்பு ஹரிஷ்?”

என்று வினவவும் ஆழ மூச்சு எடுத்துவிட்டவன்

“ஆதியோட சொத்துக்கள ஆதிகிட்டயே ஒப்படைக்க இது, உன்னோட அவ செர்ந்த இந்த நேரம் தான் சரியானது கவின்.”

“ஏன் ஆதிகிட்ட இருந்து சொத்தை எல்லம் பறிக்கனும்? ஏன் மறுபடியும் அவ கிட்ட குடுக்கனும்? ஏன் அவளை என்னோட பெயர் சொல்லி மிரட்டனும்?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை கவின் முன்வைக்கவும்

இரு கைகளையும் தூக்கி

“ஹேய் ஈஸி..ஈஸீ.” என்றவன் கார்த்திக்கின் புறம் திரும்பியவன்

“என்ன டிடெக்டிவ் சார் உங்களுக்கு ஏதும் ஐடியா இருக்கா இதை பற்றி?” என்று புருவம் தூக்கி வினவினான்.

அவன் தன்னை நோக்கி கேட்டதும் கவினை பார்த்த கார்த்திக் மீண்டும் அவனை நோக்கியவாறே

“ஆதியை எதுலயோ சிக்க விடாம நீ காப்பாத்தி இருக்க.. இப்போ அந்த பிரச்சனை தீர்ந்ததும் திரும்ப கூப்பிட பார்ர்க்கிற”

எனவும் தலையை பின்புறம் சாய்த்து “ஹா..ஹா” என சிரித்தவன்

“அது மட்டும் இல்ல. என் அண்ணனை கொன்றவனை பழி தீர்த்துட்டு வந்து இருக்கேன்” என்று கூறும் போது அவன் கண்களில் மின்னிய கோவம்..ஹப்பா கார்த்திக்குக்கே புல்லரித்து விட்டது.

இருவரையும் பார்த்து தன்னை அமைதிப்படுத்தியவன்

“கையாலாகாதவனா இருந்தேன் அப்போ..என்னை என் குடும்பமே நம்பாத ஒருத்தன் நான் அப்போ..நான் சொன்னா யாருமே கேட்க மாட்டாங்க என்ற நிலை.. அந்த நேரத்துல என்னோட குடும்பத்தை என் அண்ணியோட வம்சத்தை காப்பாத்த நானே வில்லனா என்னை காட்டி என் கிட்ட இருந்து அவஙள ஓட வைச்சேன் கவின்”

“ஆதி பற்றி எனக்கு அண்ணி சொல்லி இருக்காங்க.. அண்ணனுக்கு என்னை எவ்வளவு தான் பிடிக்காம போனாலும் அண்ணி என்னை பாசமா தான் நடத்துவாங்க நான் அவங்க வீட்ட போறப்போ எல்லாம்..என்னோட இன்னொரு அம்மாவா பார்த்தேன் அவங்கள. ஆனா..ஆனா..கடைசியில அவங்களும் என்னை தப்பா நினைச்சுட்டாங்க என்றப்போ” என்று இழுத்தவன் முன்னால் இருந்த மேஜையில் கையை ஓங்கி அடித்து

“நரகம் கவின்” என்று கூறும் போது அவன் கண்களில் பொய்யே இல்லை.

மெல்ல மெல்ல அவன் நடந்தவற்றை விளக்கி முடிக்கவும் அங்கே ஒரு கணத்த மௌனம் நிலவியது. அதை முறியடிக்கவென்றே தொண்டையை செறுமிய கவின்

“இதுல சிவத்திரமை எப்பிடி ஹரிஷ் தனியாளா நின்று சமாளிச்ச?” என்று ஆச்சர்யம் விலகாமல் கேட்கவும்

“எப்பிடி ஆதியோட அப்பா அவனை நம்பி குடும்ப வக்கீலா நியமிச்சப்போ அவன் அவரோட சொத்தை அபகரிக்க திட்டம் போட்டாரோ, எப்பிடி ஆதி அவனை நம்பி தன்னோட சொத்துக்கு கார்டியனா அவனை நியமிச்சுட்டு போனாளோ, அதே நம்பிக்கையை தான் நானும் ஆயுதமா எடுத்தேன்.”

“கண்மூடித்தனமா அவன் நம்புற மதிரி நடிச்சு அவனை ஏமாத்தி அவனுக்கு எதிரான சாட்சிகளை திரட்டி இப்போ அவனை உள்ள தள்ளி ஆதியோட சொத்து பொறுப்பை என் கிட்ட எடுத்துகிட்டேன்.ஆனா அந்த கோவத்தை உன் மேல காட்டுவான்னு நான் கொஞ்சம் கூட யோசிக்கல”

“வாட்?”

“யெஸ் கவின். அவனோட ஆட்கள் செய்த வேலை தான் அது.அவன்களையும் உன்பாதையில இருந்து ஒதுக்கிட்டு தான் நான் இப்போ பேசிட்டு இருக்கேன். ஆனா கவின். அவன் அடிபட்ட பாம்பு. எப்போவேணா வெளியில வரலாம். அவனை உள்ள அனுபுரதுக்கு நான் எல்லாம் செய்துட்டேன். இனி அவன் வராமலே போக உன்னால தி கிரேட் கவினால தான் முடியும்.” என்று ஹரிஷ் கூறி முடிக்கும் போது ஆரம்பத்தில் ஹரிஷிடம் இருந்த கோவம் இப்பொழுது கவினிடம் இடம் மாறி இருந்தது.

                                                                        **************

அந்த அறையில் கவினின் கைகளை இறுக்க பற்றியபடி ஆரா அமர்ந்து இருக்க அவளின் முன்னால் கார்த்திக் அமர்ந்து இருந்தான்.

ஆரா.. நீங்க என்ன நடந்திச்சு நு சொன்னா தான் நம்ம இந்த பிரச்சனைல இருந்து வெளில வர முடியும். பழைய ஆராவா யோசிங்க. அப்பாவோட பிஸ்னஸை தனியா ஹண்டில் பண்ணி இருகிங்க. அவ்வளோ தைரியமானவங்க ஏன் இந்த விஷயத்தில இவ்வளவு பயப்பிடனும்?”

அவன் கேட்டவுடன் சற்று நிமிர்ந்து அமர்ந்தவள்

ஏன்னா கார்த்திக், பணத்தோட இழப்பை பார்த்து நான் எப்போவும் பயந்தது இல்ல. அதனால பிஸ்னஸ் எனக்கு ஈஸியா இருந்திச்சு. ஆனா உயிர் இழப்பு..என்னால அப்பா அக்காக்கு அப்புறம் யாரையும் எதுக்காகவும் இழக்க விருப்பம் இல்ல. அதனால தான் ஹரிஷை ஃபேஸ் பண்ணாம இங்க வந்தேன். அதோட பாவனா வயசு பொண்ணு கூட நான் தனியா போராட விரும்பல.

எனக்கு பாவனா ஸ்ரீக்கு முன்னால சொத்து தேவைப்படல. அதுக்காக என்னோட அப்பாவோட சொத்துக்கள நான் நம்பிக்கையான வக்கீல் கிட்ட விட்டுட்டு தான் வந்தேன். அத்தானோட சொத்துக்களை தான் ஹரிஷ் விரும்புனான் நு அக்கா சொன்னா, அத அவன் கிட்டயே விட்டுட்டு வந்தாச்சு. இன்னும் எதுக்கு துரத்துரான்னே தெரியல”  என சோர்ந்து போய் சொல்லவும்

ஏன்னா ஹரிஷ் உங்களை காப்பாத்த நினைக்கிறான்என்று அசராமல் ஒரு குண்டை தூக்கிப்போட்டான். அவன் கூறிய உண்மையை ஜீரணிக்க முடியாமல் அவள் கவினின் முகம் பார்க்கவும் அவனும் விழிகளை மூடித்திறந்தான்.

கார்த்திக்கை நோக்கி திரும்பிய ஆதி

ஆக்சுவலி அக்கா என்கிட்ட சொன்னப்போ நானும் அதை ஆராய முற்படல. எங்கயாச்சும் சேஃபா இருக்கனும் நு தான் தோணிச்சு.அக்கா அத்தானோட காரியங்கள் நடக்கிறப்போ கூட நான் அவனை பார்க்கல. ஆனா அப்புறம் ஹரிஷ் என்னோட வீட்ட வந்து தொந்தரவு கொடுக்க தொடங்குனான். பொலிஸ் கோட் கேஸ் என்று பாவனா ஸ்ரீ கூட அலைய என்னால முடியல. ஹரிஷ் மேல தப்பு இல்லனா பாவனாவும் ஏன் என்கோட எந்த மறுப்பும் சொல்லாம என் கூட வரனும்?”

ஏன்னா ஹரிஷ் பாவனாவை உன்கூடவே போக சொல்லி இருக்கான்என்று அடுத்த குண்டை கவின் ஆராவின் தலையில் போடவும் அதிர்ச்சியில் தலையை பிடித்து அமர்ந்துவிட்டாள்.

கவின் அவளது நிலையுணர்ந்து ஆறுதலாக அணைக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவள்என்னை சுத்தி என்ன தான் நடக்குது கவின்? பாவனா அவ கூட எதுவும் சொல்லலயே?” என்று வேதனையாக கூறவும் அவளது தோள்களை சற்று அழுத்தி வருடியவன்

உன்னோட அக்கா போல உனக்கு எதுவும் ஆகிட கூடாது நு தான் ஹரிஷ் பாவனாவை உன் கூட அனுப்பி உன்னை கண்காணிக்க தொடங்கினான். பாவனாக்கு இது எதுவுமே தெரியாது. பாவனாக்கே தெரியாம அவள் மூலமா எல்லாம் பண்ணி இருக்கான். கார்த்திக் என்ன நடந்திச்சு நு கொஞ்சம் சொல்லு இவளுக்கு பிளீஸ்என்று கூறி கவின் தவிப்பாக கார்த்திக்கை பார்க்கவும் ஆராவின் புறம் திரும்பிய கார்த்திக்

ஆரா! கவின் என்கிட்ட வந்து பிரச்சனையை சொன்னபிறகு நான் ஹரிஷை பத்தி முழுசா விசாரிச்சு தெரிஞ்சுகிட்டு தான் பேசுறேன். ஹரிஷ் இப்போ உங்க அத்தானோட சொத்துக்களை மட்டும் இல்ல உங்க சொத்துக்களையும் பார்த்துக்கிறாங்க. மீன்ஸ் டிரெக்ட் இல்ல, இன் டிரெக்ட் . ஹரிஷ் சின்ன வயசில இருந்தே ரிசர்வ்ட் ஆன ஆள்.

அவன் அண்ணா தங்கச்சி கிட்ட கூட ஒதுங்கியே இருப்பானாம், ஆனா அவங்க மேல ரொம்ப பாசமா இருந்து இருக்கான். ஃபோர் எக்ஸாம்பிள் பாவனா ஒரு தடவை அவ கிட்ட யாரோ வம்பு பண்ணாங்கனு உன்னோட அத்தான் கிட்ட சொல்லி இருக்கா. உன் அத்தான் பிரச்சனைகளை பார்த்து ஒதுங்கி போற ஆளு. அதனால பாவனாவை ஒதுங்கி போக சொல்லி இருக்கார். ஆனா ஹரிஷ் இத கேட்டுட்டு அவங்களை போய் வெளுத்துட்டு வந்து இருக்கான்

ஆதி கார்த்திக் கூறியவற்றை விழி விரித்து கேட்க்கவும் அவளை பார்த்து சிரித்தவன்

ஹரிஷ் யார் தெரியுமா? அவன் அவனுக்காகவே ஒரு சாம்ராஜ்யம் அமைச்சு இருக்கிறவன். ஷேர் மார்க்கெட் சின்ன வயசிலயே ஆர்வமா இருந்து பிஸ்னஸ் சம்பந்தமா தேவை படுற படிப்பு எல்லாமே செய்து இருக்கான். ஆனா அவன் இத எல்லாம் செய்றப்போ உங்க அத்தான் எதிர்த்ததால வீட்டை விட்டு போய் தனியா இருந்து சாதிச்சு இருக்கான். அதுல கோவமான உங்க அத்தான் அவனை உதவாக்கரை என்றே முடிவு பண்ணி அதே விம்பம் தான் உன் அக்கா மனதிலயும் அவன பற்றி விழுந்து இருக்கு

கார்த்திக் கூற கூற இருந்த சிக்கல்களெல்லாம் மெல்ல மெல்ல விலகுவது போல இருந்தது ஆதிக்கு.

உங்க அக்கா அத்தான் இறக்க முதல் நாள். ஹரிஷ் வந்து உங்க அத்தானை மீட் பண்ணி உங்க அக்காக்கு அவங்க சொத்துனால ஆபத்து என்றும் அதனால பார்த்து இருக்கும் படியும் சொல்லி இருக்கான். உங்க அத்தானுக்கு அவன் மேல இருந்த கோவத்துல இவ்வளவு நாள் வராதவன் திடீர்னு வந்து சொல்லவும் அத நம்பாம அவன் மறைமுகமா உங்க அக்காவோட சொத்தை குறி வைச்சு இருக்கான்னு தப்பா நினைச்சு அதையே உங்க அக்காகிட்ட சொல்லி இருக்காங்க

மை காட்..அப்போ ஒரு நல்லவனை தப்பானவன்னு..ச்சேஆதிக்கு தான் விசாரிக்காமல் விட்டது பெரும் தப்பாக போனது.

ஆனா..ஹரிஷ் என்னிடம் சொல்லி இருக்கலாமே?”

நீ நம்பி இருப்பியா ஆதி?” என்று கவின் கேட்கவும் மறுப்பாக தலை அசைத்தாள்.

அவளிடம் பல கேள்விகள் இன்னும் அணிவகுத்து கொண்டு இருந்தன.

அப்போ யார் என் அக்காவை கொல்லனும் நு யோசிச்சது? ஹரிஷ் எப்பிடி பாவனாவை என் கூட அனுப்புனாங்க? ஏன் இப்போ தன்னை கெட்டவனா என்கிட்ட காட்ட முயற்சி பண்ணாங்க?” என்று கேள்விகளை அடுக்கவும் அதை கண்டு புன்னகைத்த கார்த்திக்

Advertisement