Advertisement

25 அவனின் சிரிப்பு உள்ளுக்குள் ஏதோ ஒரு குளிரை பிறப்பிக்கவும் சிலிர்த்தவள் மீண்டும் அவனது மார்பில் சாய்ந்து கொண்டான்..

 

ஆரா

 

ம்ம்

 

நீ எதுவும் சொல்ல மாட்டியா?”

 

என்ன சொல்லனும்?”

 

அடிப்பாவி என்னை லவ் பண்ண கதையை தான்

 

அதான் உங்களுக்கே தெரியுமே? நான் உங்களை திரும்ப பார்த்தப்புறம் விலகிப்போக காரணம் என்னோட நிலைமை தான்..ஆனா உங்களை தவிர யாரையும் திருமணம் ..ம்ஹும் யோசிச்சே இருக்க மாட்டேன்..”

 

அவ்வாறு கூறியவளை விலத்தி நிறுத்தியவன் அவள் கண்களை கூர்மையாக பார்த்தவாறே

அப்போ என்னை விலக காரணம்?”

 

“…” முகம் வெளிற அவள் தலை குனியவும் அவளை விலத்தி தோள்களிரண்டையும் குலுக்கி

 

சொல்லு ஆரா..என்ன காரணம்

 

ஹரிஷ்

 

ஆரா?”

 

ஒரு விம்மலுடன் அவனை அணைத்தவள் விசித்தவாறே நடந்ததை கூறவும்

ஷிட் பைத்தியம்என்று கூறி அவளை சிறிது நேரம் அணைத்து முதுகை தடவி விட்டவாறே இருந்தான்..சற்று நேரத்தில் ஆரா என்று அழைத்தவன் அவளிடம் ஏதும் பதிலில்லாமல் போகவும் குனிந்து பார்த்தான்..

 

அப்படியே தூங்கி போயிருந்தவளை ஒரு புன்சிரிப்புடன் கட்டிலில் கிடத்தியவன் சற்று தள்ளி சென்று சில ஃபோன் கால்களை எடுத்து உத்தரவுகளை பிறப்பித்து ஆராவின் அருகில் அவளை அணைத்தவாறு உறங்க தொடங்கினான்.

 

காலையிலே அரக்கபறக்க கிளம்பி கொண்டிருந்த கவினை டீப்பாவில் இருந்த காபியுடன் சேர்ந்து கன்னத்தில் கைவைத்தபடியே ஆதிராவும் ஸ்ரீயும் நோக்கி கொண்டிருந்தனர்..

 

ஆரா என்னோட வாட்ச் எங்க?”

 

கண்ணாடிக்கு முன்னுக்கு கவின்”

 

ஆரா என்னோட புரொஜெக்ட் சி.டி?”

 

ச்சோ..பெட் ல பா”

 

சரிடா குட்டி..ஆரா என்னோட ஃபைல்?”

 

இங்க டீப்பால இருக்கு

 

ஆரா என்னோட பிரீஃப்கேஸ்?”

 

ப்பா..அதுவும் ம்மா கிட்ட”

 

சரி டா.. அப்புறம் என்னோட ஷூ?”

 

உங்க காலில கவின்”

உங்க காலில ப்பா”

என்று அம்மாவும் மகளும் ஒருமிக்க கூறி ஒருத்தருக்கு ஒருத்தர் ஹை ஃபை கொடுத்து கொண்டனர்..

 

இருவரையும் திரும்பி செல்லமாக முறைத்தவன்

ரெண்டு பேரும் என்னை கிண்டல் பண்ணுறீங்களா? “

ச்சே..ச்சே.. இல்லையே” என்று மீண்டும் ஒரு முறை இருவரும் கூறி ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்து கொண்டனர்..

 

போங்கடி” என்றபடி அவர்கள் அருகில் வந்தவன் ஸ்ரீயை தூக்கி

அப்புறம் என்னோட ஆராவும் ஸ்ரீயும் எங்க?” என்று கேட்க

இங்க இருக்கோம்” என்று கூறி இருவரும் அவனது கன்னத்தின் இருபுறமும் முத்தமிட்டு சிரித்தனர்..

 

இன்று கவினுடைய ஒரு சைட் வேலைகள் நிறைவுறுவதால் தான் இந்த ஆர்பாட்டம்.. மறுநாள் தன் நண்பன் கார்த்திக்கை சென்று சந்திப்பதாக இருந்தான்.. அனைத்து பிரச்சனைகளும் முடிந்தவுடன் தான் ஆதியுடன் இணைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்..

 

அதை ஆதியிடம் அவன் பகிராமல் விட்டாலும் ஆதியும் அதை உணர்ந்தே இருந்தாள்.. வருடக்கணக்கில் மனதில் சுமந்தவனது அசைவை பற்றியும் அவள் அறியாளா??

 

சரிடா..அப்போ நான் கிளம்புறேன்..லேட் ஆயிடுச்சு..ஹா..ஹ்ம்ம்..ஆரா இன்றைக்கு அப்பாவோட காலேஜ்க்கு போற ல?”

 

ஹ்ம்ம்..ஆமா கவின்”

 

ஹ்ம்ம்..குட். அப்புறம் ஸ்ரீகுட்டிய கமிங் வீக் ல இருந்து ஸ்கூலுக்கு அனுப்பலாம்..சரியா? தேவையான திங்க்ஸ் லாம் இன்றைக்கு ஈவ்னிங்க் வாங்கிக்கோடா..எனக்கு எப்பிடியும் லேட் ஆகும்..முடிய அங்க வருவேன்..சரியா?”

 

அய்யோ கவின்..சரிப்பா..நான் பாத்துக்கிறேன்..உங்களுக்கு லேட் ஆகுது பாருங்க..இந்த காபிய குடிச்சிட்டு..

 

ஹ்ம்ம்” என்றவன் ஒரு வாய் குடித்துவிட்டு

பாய்..பாய் ஸ்ரீகுட்டி” என்றவன் அறை வாசலுக்கு சென்று திரும்பி பார்த்தான்.

 

புன்னகையுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்த ஆதி அவன் திரும்பியதும் புருவம் தூக்கி என்ன என்பதாய் வினவவும் கண்ணை சிமிட்டிவிட்டு புன்னகைத்தபடியே கிளம்பி சென்றான்.

 

அன்றைய தினம் இருவருக்குமே விரைந்து செல்ல கல்லூரியில் இருந்து திரும்பி வந்த ஆதிரா கையுடனே அழைத்து சென்ற ஸ்ரீயை தனத்திடம் விட்டுவிட்டு ஃப்ரெஷ் ஆகி வீட்டு வேலைகளை கவனிக்க தொடங்கினாள்..இரவு உணவுக்கான உத்தரவுகளை சமையல்காரர்களிடம் பிறப்பித்துவிட்டு சுவாமி அறையில் சென்று விளக்கேற்றி வழிபட தொடங்கினாள்..

 

அவளை பின்பற்றி ஸ்ரீயும் சென்று வணங்க அத்தனை நேரமும் ஆதியை பெருமையாக ஹாலில் இருந்து பார்த்து கொண்டிருந்த பெரியவர்களும் அப்பொழுது தான் தத்தமது  அறையில் ஃப்ரெஷ் ஆகிவிட்டு வந்த கருண் பாவனாவும் சிந்துவும் பூஜை அறைக்கு சென்று வணங்க தொடங்கினார்கள்..

 

குடும்பமே தன்னால் பூஜை அறைக்குள் வந்து வணங்குவதை அறியாத ஆதிரா விழி மூடி இசையால் இறைவனை  வழி பட்டுக்கொண்டிருந்தாள்..

 

வணங்கி முடித்து விழி திறந்தவள் அனைவரும் அங்கிருக்கவும் ஆச்சர்யமாக புன்னகைத்துவிட்டு கற்பூரதட்டை எடுத்து அனைவரின் முன்னே நீட்டினாள். அனைவரும் வழிபட்டு முடியவும் ஹால் வாசலை எதேர்ச்சியாக நோக்க அங்கே  சஞ்சய் உதவியுடன் நொண்டியபடி வந்த கவினை கண்டு அதிர்ச்சியில் அப்படியே நின்றாள்..

 

அவளின் அதிர்ச்சியை கண்டு அனைவரும் வாசலை நோக்கி பின் பதறியபடியே கவினை நோக்கி ஓடினர்.. ஸ்ரீயை தூக்கியபடி சிந்துவும் அவர்களை தொடர ஆதி மட்டும் உறைந்து அவ்விடத்திலேயே நின்றாள்..

 

கவினின் அருகில் ஓடிய தனம் அவனை பதற்றமாக வருடி

“கவின்..என்னபா ஆச்சு?” என்று வினவவும் அவரை அணைத்து ஆறுதலாக தட்டி கொடுத்தவன்

 

“நதிங்க் மா..அம் ஓகே.. ஜஸ்ட் ஒரு சின்ன அக்ஸிடென்ட்..அவ்வளோ தான்.”

என்று கூறவும் வந்திருந்த சஞ்சய்

 

“சும்மா இருடா.. ஜஸ்ட் மிஸ் மா.. ஒரு கார் இவன் ரோட்டுக்கு வரும் போது அடிக்க பாத்திச்சு.. “

 

“டேய்” என்று கவின்  உறுமவும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்

“நல்லவேளை இவன் முன்னாடியே  பார்த்தான்.. இல்லனா”

என்று அவன் இழுக்கவும் கையிலிருந்த தட்டு கீழே விழ ஆதிரா மயங்கி சரியவும் சரியாக இருந்தது..

 

ஆதி விழவும் அனைவரும் ஆதியை நோக்கி செல்ல தன் கால் வலியை மறந்து அருகிலிருந்த மனேஜரையும் சஞ்சயையும் தள்ளிவிட்டு நொண்டியபடி விரைந்து ஆதியின் அருகே சென்று அவள் அருகில் அமர்ந்து அவளது கன்னத்தை தட்டி

ஆதீ..ஆதி…” என்று  கவின்  அழைக்கவும் சிறிது மயக்கம் தெளிந்தவள் மெலிதாக விழிகளை திறந்து பார்த்து அவனது முகத்தை தடவியபடி கேவினாள்.

 

டேய் ஆதி..எனக்கு ஒன்றுமில்ல மா.. இங்க பாரு உன்னோட கவின் ..முழுசா இருக்கேன்.. பாரு.. அம்மா..அப்பா சொல்லுங்கவேன்என்று அவன் தவிக்கவும்

 

ஆமா ஆதி..அவனுக்கு ஒன்றுமில்லை..” என்று தனம் ஆறுதலாக கூறவும் கவினை இறுக்கி அணைத்தபடிஉங்களுக்கு எதுவுமில்ல கவின்..எதுவுமாகாதுஎன்றபடி அழ தொடங்கினாள்..

 

அவளை தட்டி கொடுத்தவன் விழிகளும் கலங்க தொடங்க  மகாதேவன் தான்

சரி..சரி.. தனம் ஆதியை எழுப்பு..கருண் ம்ம்என்று கண்ணை காட்டவும் தலை அசைத்தபடி கவினை தூக்கி எழுப்பி விட்டான்..

 

அன்று இரவும் தன்னை அணைத்து விசித்தவாறு உறங்கும் மனைவியின் தலையை வருடியவாறே கவின் சில தீர்மானங்களை எடுத்தான்.. முடிவு எடுப்பதற்கான நேரம் நெருங்கிவிட்டதை அறிந்து கொண்டவன் சில முடிவுகளை எடுத்த பின்னர் தான் நிம்மதியாக உறங்கினான்..

 

காலையில் எழுந்தவன் மார்பின் கணம் உணர்ந்து புன்னகையுடனே தன் அணைப்பை இறுக்கவும்ப்பா வலிக்குதுஎன்ற ஸ்ரீயின் குரலில் பதறிபோய் கண்ணைத்திறந்தவன் வலியால் முகத்தை சுழித்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுஅச்சோ.. என் குட்டிக்கு வலிக்குதா? ஸாரிடாஎன்று அவளுக்கு பதிலளித்தாலும் கண்கள் என்னவோ ஆதியையே தேடியது.

 

 ஸ்ரீயை கட்டிலில் கிடத்தியவன் ஆதி கோவிலுக்கு சென்றிருப்பதை கேள்விப்பட்டு அதிலிருந்தே அவளது மனப்பாரத்தை அறிந்தவன், ஆதியுடன் கருணும் சென்றதை உறுதிப்படுத்தி பின்னர் தாயிடம், ஆதியிடம் கூறுமாறு கூறி தனது உளவுத்துறை நண்பன் கார்த்திக்கை பார்க்க விரைந்தான்.

 

நண்பனிடம் வேலைகளை ஒப்படைத்துவிட்டு களைத்துப்போய் வந்தவன் தலைவலிப்பது போல தோன்றவும் கழுத்து பட்டியை தளர்த்தியவாறே அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தான். அவன் காலின் வலியுடன் நடந்து வருவதையும் தலையை தடவியவாறே அறைக்கு செல்வதையும் கவனித்த ஆதி கையில் இருந்த ஸ்ரீயை தனத்தி அறையில் ஒப்படைத்து விட்டு சமையலை வேலைபார்ப்பவர்களிடம் தொடர பணித்துவிட்டு அறைக்கு விரைந்தாள்.

 

கட்டிலில் கண்மூடியிருந்த கவினுக்கு தலையை வளைக்கரம் ஒன்று இதமாக பிடித்துவிடவும் புன்னகைத்தவாறே விழித்தவன் அக்கரத்தை எடுத்து தன் கன்னத்தில் வைத்து அழுத்தினான். அவனை கனிவாக பார்த்தவாறேஎன்னப்பா? இந்த கால் வலியோட எங்க போனிங்க?” என்று ஆதி கேட்கவும். கண்களை சிமிட்டியவன்  “என்னோட லவ்வர் பார்க்க போனேன்எனவும் அவனை முறைத்தவாறே கன்னத்தில் இருந்த கையை எடுத்து மீண்டும் கன்னத்திலேயே அடித்தாள்.

 

ஸ்ஸ்..வலிக்குது டிஎன்று கன்னத்தை தேய்த்தவனை முறைத்தவள்நல்லா வலிக்கட்டும். லவ்வராம் லவ்வர்என்று முணுமுணுத்தாள். அவளது கையை இழுத்து தன் மேல் விழவைத்தவன் அவள் இடுப்பை வளைத்தவாறே

கவின் ராமன் டி. அவன் ஆராவை தவிர வேற யாரையும் லவ் பண்ண என்ன சைட் கூட அடிக்க மாட்டான்என்றவனின் கழுத்தை வளைத்தவள் அவனது கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தனது மகிழ்வை பிரதிபலித்தாள்.

 

விழிகளை மூடி அந்த முத்தத்தை ஆழ அனுபவித்தவனின் உணர்வுகள் தூண்டப்படவும் அவள் இடுப்பில் இருந்த கரத்தின் அழுத்தத்தை அதிகரித்தான். அவனின் விரல்களின் அழுத்தத்தில் சிலிர்த்தவள்  அவன் நிலையுணர்ந்து விலக பார்க்கவும் அவளை விலகவிடாமல் மற்றைய கரத்தாலும் வளைத்து பிடித்தான்.

கவின்என்று ஆதி மெல்ல அழைக்கவும்ம்ம்என்றவன் மீண்டும் அவளை தன்னுள் புதைப்பது போல அழுத்தினான்.

 

கவின் நாஎன்று அவள் ஏதோ கூற எத்தனிக்க அவளது இதழ்களை மூடி பேச்சுக்கு தடை விதித்தவன் அவளுள் மேலும் புதைய தொடங்கினான். கவினின் தாபம் உணர்ந்தோ என்னவோ ஆதியும் அவனுடன் இசைய தொடங்கியவள் நிலை உணர்ந்து வலுக்கடாயமாக கவினை பிரித்து எடுத்தாள்..

 

அவள் விலக்கியதும் தாபம் மேலிட பார்த்தவனை கண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டவள்கவின்?  நான் யாரு? உங்க ஆரா..நான் யாருக்கு இந்த கவினுக்கு மட்டும் தானே? ஏன் இவ்வளவு அவசரம்? ம்ம்?” என்று இதமாக வினவி முடி கோதியவளின் பேச்சில் தெளிந்தவன் எழுந்து அவளது மடியில் படுத்தவாறே

“எல்லாம் சரியாக போகுதுனு ஒரு சந்தோஷத்தில இப்பிடி அவசர பட்டுட்டேன் ஆரா” என்று தன்னிலை விளக்கம் கொடுக்கவும் அவனது தலையை கோதியவள்

 

“எப்போ வேணா ஆராவை நீங்க எடுத்துக்கலாம் கவின்..ஆனா உங்களுக்கு கால் ல அடி பட்டு இருக்கிறப்போ இதெல்லாம் வேணாம் நு தான் யோசிச்சேனே ஒழிய வேற எதுவும் இல்ல சரியா?” என்று அன்பாக எடுத்துரைத்தாள்.

 

அவளின் பேச்சில் புன்னகைத்தவன் அவள் வயிற்றில் முகத்தை ஆழ புதைத்தவாறே உறங்க தொடங்க முதலில் வெட்கத்தில் நெளிந்தவள் பின்னர் தாய்மை உணர்வு பெருக்கெடுக்க அவனின் தலையை அணைத்தவாறே மறுகையால் அவனை தட்டிக்கொடுக்க தொடங்கினாள்.

 

                                                            ***********************

                                                                                         

கார்த்திக்கும் கவினும் மறுநாளில் இருந்தே ஆதியின் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்தறிய முயன்றுகொண்டு இருந்தனர். இருவரின் அலசலிலும் அவர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு விடை “வக்கீல் சிவத்திரம்”

கார்த்திக்கை கவின் சந்தித்து சரியாக பத்து நாள் கழித்து.. கார்த்திக்கின் அலுவலக அறையில் தனது கூலர்ஸினை நெற்றியில் தட்டியபடி யோசித்துக்கொண்டிருந்த கவினையே கேள்வியாக நோக்கிக்கொண்டு இருந்தான் கார்த்திக்.

“டேய் கவின். எவ்வளவு நேரம் தான் இப்படியே யோசிச்சுட்டு இருக்க போற?” எனவும் அவன் புறம் திரும்பியவன் முறைப்புடனே கூலர்ஸை மேசையில் தூக்கிப்போடுவிட்டு அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்து

“தீர்வு கிடைக்கும் மட்டும் யோசிக்காம என்ன பண்ண சொல்ற?” என்று கடுப்பாக வினவினான்.

“ம்ச். இப்போ நீ அனுப்பின ஆட்கள் கூறியத வைச்சு பார்க்கிறப்போ இப்போதைக்கு ஹரிஷ் மேல எந்த தப்பும் இல்ல. ரைட்?”

“ஆமாடா. இதைத்தான் நான் வந்ததுல இருந்து சொல்லிட்டு இருக்கேன்.” எனவும் சிரித்தவன் கவினை நோக்கி ஒரு ஃபைலை தூக்கி போட்டவாறே

“இதை படி ஹரிஷ் மேல தப்பு இல்லைங்ன்கிறது மட்டும் இல்ல. ஹரிஷ் தான் இவ்வளோ நாட்களா ஆதி பாவனா ஸ்ரீ க்கு காவலா இருந்திருக்கான்” என்று கூறவும் அதிர்ச்சியானவன்

“அப்போ ஏன்? ஏன் ஹரிஷ் ஆதியை மிரடனும். தன்னை பற்றி தவறான விம்பத்தை ஆதிக்கிட்ட உருவாக்கனும்? உண்மையா ஹரிஷுக்கு என்ன தான்டா வேணும்?”

எனவும் தோள்களை குலுக்கிய கார்த்திக் “இதை நம்ம ஹரிஷ் கிட்டயே நேரா டீல் பண்றது தான் சரி என்று தோணுது.” என்று கூறவும் தலையை ஆமோதிப்பாக ஆட்டிய கவின்

“அப்போ இந்த சிவத்திரம்?”

“அதுக்கும் ஹரிஷ் கிட்ட தீர்வு இருக்கும் நிச்சயமா. அதனால நம்ம கிளம்பலாம் கவின். இப்போவே ஹரிஷை பார்த்துடலாம்” என்று கூறவும் அவனுக்கும் அதுவே சரியாக தோன்றியமையால் மறுக்காமல் கார்த்திக்குடன் சென்றான்.

                                                                   ****************

Advertisement