Advertisement

 

23

திருமணத்தில் கவினுக்கு கிடைத்த மரியாதையையும் அதை அவன் சிறு சிரிப்பின் மூலம் ஏற்றுக்கொள்வதையும் ரசித்தாலும் காட்டிக்கொள்ளாமல் அவள் வயது இளம்பெண்களுடன் இணைந்து மண்டபத்தில் இருந்த வேலைகளை பங்கிட்டு கொண்டாள்..

 

கவின் அங்கு வந்திருந்த தனது பிஸ்னஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்க பின்னால் சில இளவட்டங்கள் அங்கிருந்த இளம்பெண்களை பற்றி வர்ணித்துக்கொண்டு இருந்தனர்.. அப்பொழுது வாசலருகே ஏதோ தட்டு எடுக்க ஆதிரா வந்துவிட்டு உள்ளே செல்லவும் அவர்களின் பார்வை அவள் மேல் விழுந்தது..

 

ஆதிராவின் மேலேயே கண்களை அவ்வப்போது பதிய விட்டுக்கொண்டிருந்த கவினும் அவள் வந்து சென்றதை கண்டான்..

 

 

அப்பொழுது அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன் டேய் யாரு மச்சி இவ?? இப்பிடி அசத்துறா?” எனவும்

 

ஆமாடா.. ஆனா கல்யாணமாயிடுச்சு போல..குங்குமம் இருந்திச்சே?” என்று அவனுக்கு பதில் கொடுத்தான் இன்னொருவன்..

 

சும்மா போடா..இப்பிடி ஒரு ஃபிகர் கிடைக்கும் நா அவளோட ஹஸ்பண்ட் போட்டு தள்ளிட்டு நான் கல்யாணம் பண்ணிக்குவேன் மச்சிஎன்று ஒருத்தன் கூறவும் அவ்வளவு நேரம் அவர்களின் பேச்சிற்கு பல்லை கடித்துக்கொண்டிருந்த கவினின் பொறுமை பறந்தது..

 

இருக்கையை தள்ளியவாறு எழுந்து அந்த கூட்டத்தின் அருகே சென்றவன் ஷர்ட்டின் கையை இன்னும் மேலே இழுத்து விட்டவாறே

யாருடா?? யாருக்கு இப்போ என்னை போட்டு தள்ளனும்? ம்ம்?” என்று உறுமலாக கேட்கவும் அவனது ருத்திர முகத்தை பார்த்து மிரண்டாலும் நண்பர்கள் இருக்கும் தைரியத்தில்

 

என்ன சார்..சும்ம வந்து கலாட்டா பண்றீங்க?” என்று அதிலிருந்த ஒருவன் எகிறீனான்..

 

அவனது கன்னத்தில் ஓங்கி ஒன்று அறைந்தவன் அவன் பின்னே செல்ல செல்ல அவனை நோக்கி முன்னேறி அடுத்து அடுத்து கன்னத்தில் அறைந்தவாறே

ஏன்டா.. என் பொண்டாட்டியை ஃபிகர், அவ ஹஸ்பண்ட் என்னைய போட்டு தள்ளனும் இப்பிடிலாம் நீங்க பேசுவீங்க நான் ஆஹா நு கை தட்டிட்டு போகனுமா??

அவ நிழலை ஒருத்தன் தொடுவீங்களாடா?? தொடுங்கடா பார்ப்போம்என்றவாறே வாசல் வரை அந்த பையனை போக செய்தான்..அவனது கோவமும் ஒவ்வொரு அறையிலும் கதிகலங்கி போன மற்றையவர்கள் அமைதியாக நின்றனர்..

 

தொலைவிலிருந்து கவினின் செய்கையை கண்ணுற்ற ஆதி பதற்றமாக ஓடி வந்து அந்த இளைஞனை அடுத்த அறை வைக்கும் முன் தடுத்திராவிடில் அவன் மயங்கியே இருப்பான்..அவ்வளவு ரௌத்திரமாக அறைந்து கொண்டிருந்தான்..

அவனை மறித்தவள் மற்றையவர்களை நோக்கி

 

இவரை கூட்டிட்டு போங்கஎன்று அறை வாங்கியவனை காட்டி கூறவும் அந்த கூட்டம் அங்கிருந்து நகர்ந்தனர்..அவர்கள் நகர்ந்ததும் கவினை முறைத்தவள் அங்கிருந்த கூட்டத்தை நோக்கி மன்னிப்பு கோரி விட்டு அவர்களிடம் விடைபெற்று கொண்டு கவினை இழுத்த படி காருக்கு சென்றாள்..

 

காரினுள் மறந்தும் கூட ஒருவரின் முகம் ஒருவர் நோக்கவில்லை..கவின் இப்படி நடந்துகொண்டதில் சினத்தில் ஆதி அமைதியாக இருக்க ஆதியை கிண்டலடித்தவனை கொலை செய்யும் வெறி அடங்காமல் அமைதியை பற்றியவாறு கவின் அமர்ந்திருந்தான்..இருவரும் வீடு வந்து சேர இரவாகிவிடவும் தனம் மனோகருடன் ஸ்ரீ உறங்கிவிட கவினும் ஆதியும் தமது அறைக்கு சென்றனர்..

 

சென்ற வேகத்திலேயே கதவை மூடிவிட்டு கவினை முறைத்த ஆதிரா

கவின்என்று கோவமாக ஏதோ கூற வரவும் அவளை இழுத்து அவளது உதடுகளை கவ்வி அவளது வார்த்தைகளை தடுத்தான் கவின்..

 

அவனது செய்கையில் விழிகள் விரிய சிறிது நேரம் சமைந்து நின்றவள் தன்னிலை உணரவும் கைகளால் அவனை தள்ள தொடங்கினாள்.. அவளின் கைகளை ஒரு கையால் பற்றி மறு கையை அவள் பின்னந்தலையில் முட்டுக்கொடுத்து தனது முத்தத்தை இன்னும் இன்னும் ஆழமாக பதிக்க தொடங்கினான்..

 

அவனது செய்கை காதலுக்காகவோ காமத்துக்காகவோ அல்ல..அவளின் மேல் தனக்கு..தனக்கு மட்டுமே உரிமை உள்ளது எனக்காட்டும் செயற்பாடு..குழந்தையின் பொம்மையை யாரும் எடுப்பதாக கூறிப்பாருங்கள், அதை தன்னுள்ளே புதைப்பது போல அழுத்தி கொள்ளுமே அந்த இயல்பான செயற்பாடு..

 

ஆனால் பெண்ணின் உணர்வை உணராமல் அவளை முற்றுகையிடுவது தவறு என அவனுக்கு உரைக்கவில்லை ஆதியின் விழி நீர் உதட்டில் பட்டு உவர்ப்பு சுவையை பெறும் மட்டும்..

 

அவனது பிடி இளகவும் அவனது நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் கன்றிச்சிவந்திருந்த இதழை ஒரு கையால் அழுந்த துடைத்தபடி கண்களில் கனல் பறக்க அவனை முறைத்தாள்..

 

அவளின் இதழ்களின் நிறத்திலேயே தனது செய்கை உறைக்க தன் நெற்றியில் தட்டிக்கொண்டவன்ஆராஎன்று அழைக்கவும் காதுகளை இறுக்க மூடியவள்

கூப்பிடாதிங்க.. கூப்பிடாதிங்க..இன்னொரு முறை அந்த பெயரை கூப்பிடாதிங்கஎன்று வெறிப்பிடித்தது போல கத்தினாள்..

 

அவளின் செய்கையில் சட்டென்று அமைதியானவன் இறைஞ்சு பார்வையால் அவளை நோக்க அவனை அற்பமாக நோக்கியவள்

இது தான் கவின் நு நிரூபிச்சிட்டிங்க ??”

 

ஹேய்

 

ச்சீ..எவ்வளவு எவ்வளவு உயர்வா உங்களை நினைச்சு இருந்தேன்..இப்பிடி ச்சீப்பா பிஹேவ் பண்ணிட்டிங்களே..உங்கள போயா நான் விரும்பினேன்.. உங்களையா என்னோட கணவனா மனசில நினைச்சேன்..ச்சேசே..அந்த கவின் வேற..உருவம் மட்டும் தான் பொருந்தும்..மனசு முழுக்க அழுக்கு..அதை வைச்சு கொண்டு..ச்சே

 

..”

 

என்னை பேச விடுங்க.. உங்கள..உங்கள பார்த்ததுமே பிடிச்சுது எப்போ தெரியுமா?? என் வீட்டுல உங்க ஃபோட்டோவ அக்காக்கு பார்த்த மாப்பிள்ளையா பார்த்தபோ..அப்புறம் எவ்வளவு பிரச்சனை வந்தப்போவும் நான் உங்களை தான் மனசளவுல நினைச்சுக்கிட்டு இருந்தேன்..ஆனா..நீங்க ஒரு சீப் பெர்ஸனாலிட்டி மிஸ்டர் கவின்..உங்களுக்கு தேவை என்னோட காதல் இல்லை.. உங்களை எந்த விதத்துலயோ என் அழகு தாக்கி இருக்கு..அதுக்காக நீங்க இவ்வளவு நாடகம் ஆடி இருக்க தேவை இல்லை.. ச்சே..நான் கூட என்னமோ என்னை விரும்பி தான்..ச்சே

 

“………” அவளின் பேச்சுக்களால் மனதில் வலிகள் சரமாரியாக புறப்பட வெற்று பார்வை பார்த்தபடி அவள் முகத்தையே நோக்கி கொண்டிருந்தான் கவின்..

போதும்..போதும்..நீங்க இனி மேல் நடிக்க வேண்டியது இல்லை.. இப்போ..இப்போ..உங்களுக்கு என்னோட உடம்பு தானே வேணும்?? இந்த எடுத்துக்கங்கஎன்று கூறியவள் தனது புடவை முந்தானையில் கை வைக்கவும் கவினின் கரம் ஆதியின் கன்னத்தில் கை வைக்கவும் சரியாக இருந்தது..

 

அவனின் அறை வீச்சில் கட்டிலில் சுழன்று சரிந்தவளின் அருகே சென்று அவள் கூந்தலை கொத்தாக பற்றி தூக்கியவன்

 

என்னடி நினைச்சுக்கிட்டிருக்க?? என்னதான் நான் செய்யனும் என்று எதிர் பார்க்கிற?? எப்போ பாரு கருணுக்காக கல்யாணம் பண்ணேன்..கருணுக்காக கல்யாணம் பண்ணேன் என்று சொல்றியே?? நீ மட்டும் என்னை பாவனாவுக்காக தானே கல்யாணம் பண்ண? கல்யாணம் ஆகி இவ்வளோ நாளில எப்போவாச்சும் உன்னை தப்பா ஒரு பார்வை பார்த்து இருக்கேனா? இதோ இந்த கட்டில்என்று கட்டிலை சுட்டி காட்டியவன்

 

இதுல ஒன்றா தானே தூங்குறேன் உன் கூட..எப்போவாச்சும்..எப்போவாச்சும் என் விரல் நுனி உன் மேல பட்டிருகா?? சொல்லுடிஎன்று கூறி அவள் கூந்தலை இன்னும் இறுக்கியவன் அவள் கண்களில் நீர்வழிய அவள் முகம் சுழிக்கவும் கையை விடுவித்தவன் தன் நெற்றியிலேயே அறைந்து கொண்டான்.. பின்னர் அவளது முதத்தை பற்றி

 

ஏன்டி இப்பிடி வார்த்தையாலேயே கொல்லுற?? கவினை தெரியலையா?? இவ்வளவு நாள் உன்னை சீண்டுறப்போ எல்லாம் காதலே தெரியலையா?? கடைசிவரை என்னை புரிஞ்சுக்கவே இல்லையா?? நான் தான் அப்போ முட்டாள் தனமா..ச்சே..கவினுக்கு சோகமா இருக்க பிடிக்காது.. தெரியாது.. ஆனா அதையும் தெரிஞ்சுக்கோனு சொல்லி தந்திட்ட.. போதும்..போதும்.. எனக்கு .எனக்கு நீ இப்போ தந்த பரிசே போதும்என்று கூறீயவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று தலையை அழுந்த கோதிக்கொண்டான்..

 

பின்னர் கட்டிலில் அமர்ந்து அவனையே வெறித்துக்கொண்டிருந்தவளின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கலங்கிய முகத்துக்கு அருகில் அதை தாங்குவது போல கையை எடுத்து சென்றவன் பின்னர் அதை இறுக மூடி தன் தொடையில் அடித்துக்கொண்டான்,..

 

பின் அவளை நோக்கியவன்இந்த முகத்தில இனி மேல் கண்ணீரே வர கூடாதுனு இருந்தேன் டி.. என்னாலேயே நீ இப்பிடி அழுற நிலைமை வரவா டி..இதுக்கா டி நான் உயிரோட இருக்கேன்.. இதுக்கு நான் செத்தே போய் இருக்கலாம் டி

 

கவின்என்று பதற்றமாக அழைத்தவளை பார்த்து நக்கலாக சிரித்தவன் உயிரோட கொன்றுட்டு இப்போ என்ன அக்கறை உனக்கு.. போடி.நீ..நீ.. என்னை புரிஞ்சுக்கல..போ..இல்லை..இல்லை.. நான் போறேன்என்றவன் விறு விறுவென அறையை விட்டு வெளியேறினான்..

 

அவன் போனவுடன் முகத்தை மூடியபடி குலுங்கியவள் அப்படியே கட்டிலில் இருந்து சரிந்து நிலத்தில் அமர்ந்து முழங்காலில் முகத்தை புதைத்து விக்கி விக்கி அழ தொடங்கினாள்..எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது பாவனாவின்

அண்ணிஎன்ற அழைப்பில் நிமிர்ந்து நோக்கினாள்..

 

அங்கே வாசலில் பாவனாவும் கருணும் நிற்பதை கண்டதும் தன் முகத்தை அழுந்த துடைத்தவள் புன்னகைக்க முயன்றூ தோற்று தலையை கவிழ்த்து கொண்டாள்..

 

அண்ணிஎன்று அழைத்தபடி அவள் அருகே அமர்ந்து அவளை தன் தோளிலே சாய்த்துக்கொண்ட பாவனா வருத்தமாக கருணை பார்க்கவும் விழிகளை மூடி திறந்தவன்

 

அழுறதால எதையும் சாதிக்க முடியும் நு நினைக்கிறியா ஆதி?” என்று வினவினான்..

 

அவனது கேள்விக்கு தலையை மறுப்பாக அசைத்தவள் பாவனாவின் தோளில் இன்னும் அழுந்த புதைந்து கொண்டாள்..

 

உனக்கும் கவினுக்கும் இடையில என்ன பிரச்சனை என்று தெரியாது ஆதி..இந்த நேரத்தில அவன் வெளியில போறான்நீ அழுது கொண்டு இருக்க.. தற்செயலா கவின் போறத பார்த்ததால தான் இங்க வந்தோம்..இங்க வந்த நீயும் இப்படி அழுது கொண்டு இருக்க?”

 

“…..”

 

பச்..ஏதாவது பேசு ஆதி.. அவன் பாவம்.. முகமே சரி இல்லை..நான் கவினை இது வரைக்கும் இப்பிடி பார்த்து இல்ல..உண்மையை சொல்லட்டுமா?? உன்னை ..உன்னை .. திருமணம் செய்த பிறகு அவன் முகத்தில ஒன்றூ அளவில்லாத சந்தோஷம் இருக்கும்..இல்லனா அளவில்லாத சோகம் இருக்கும்..எனக்கு தெரியும் ரெண்டுமே அவனுக்கு உன்னால தான் கிடைக்குது..அவன் பாவம் ஆதி..”

 

அப்போ நான்?” என்று விழிகளில் நீர் வழிய நிமிர்ந்து பார்த்தவள் கருண் புரியாமல் நோக்கவும்

 

சொல்லுங்க கருண் நான் பாவம் இல்லையா?? கவின்..கவின் மட்டும் தான் நான் இவ்வளவு நாள் உடைஞ்சு போகாம இருக்க காரணம்..அவரை இங்க சுமந்துகிட்டு இருக்கேன்..அவருக்கு வலிச்சா எனக்கு அதை விட பத்து மடங்கு அதிகமா வலிக்கும்.. அப்போ நான் பாவம் இல்லையா??”

 

என்ன ஆதி பேசுற? அப்போ எதுக்கு இப்படி எல்லாம்?” விரக்தியாக சிரித்தவள்

 

எல்லாம் என் விதி.. எனக்கு பிடிச்சவங்க கூட நான் இருக்க கூடாது என்றது விதி

 

ஆதி??”

 

பயமா இருக்கு..கவினுக்கு ஏதும் ஆகிடுமோ நு..பயமா இருக்கு.. எதிரிகளுக்கு குறைவில்லாம இருக்கிற என்னால கவினுக்கு ஏதும் ஆகிடும் நு பயமா இருக்கு..அதனால தான் அவரை விலகி போக முடிவெடுத்தேன்.. “

 

என்ன பேசுற ஆதி?”

 

முட்டாள் தனமா இருக்குல?? உங்களுக்கெல்லாம் ஹரிஷை நியாபகம் இருக்கா??”

 

ஆதி!!!!!”

அண்ணி!!!”

 

ஹ்ம்ம்ம்..ஆமா.. அவன் என்னோட பேசுனான்

 

எப்போ? ஏன் யார்கிட்டயும் நீ சொல்லல?”

 

எப்பிடி சொல்லுறது கருண்?? அவன் செக் வைச்சிருக்கிறது என்னோட கவினோட உயிருக்கு என்றப்போ எப்படி அதை சொல்ல சொல்லுறிங்க? இதை சொன்னா உங்களோட மச்சான் சும்மா இருப்பாரா?” என்றவளுக்கு அந்த நிலையிலும் கவினை எண்ணி புன்னகை ஒன்று பிறந்தது..

 

என்ன ஆதி சின்னபிள்ளை போல பேசுற? உனக்கு தெரியும் இது சாதாரணமான விஷயம் இல்லை என்றுஎன்று கருண் அதட்டவும் விழிகளை அழுந்த துடைத்து விட்டு கருணை நிமிர்ந்து பார்த்தவள்

 

அன்று நான் என்னோட கடந்த காலத்தை பகிர்ந்த அன்று..கவின் என்னை சமாதான படுத்திட்டு ஆபிஸ் போனதும் எனக்கு ஒரு கால் வந்திச்சு..ஹரிஷ் தான் பேசினான்..என்று கூறியவளின் நினைவுகள் அன்றைய கலந்துரையாடலுக்கு சென்றது..

 

ஃபோன் அடிக்கவும் தூக்கம் கலைய அதை எடுத்தவள்

ஹலோ

 

என்ன ஆதி சந்தோஷமா இருக்கியா?”

 

ஹலோ..ஹலோ.. யாரு?”

 

அடடே என்னோட குரலும் மறந்து போச்சா?? அது சரி.. இப்போ உனக்கு கவினோட குரல் தானே நினைவில இருக்கும் ?”

 

யாரு பேசுறது?”

 

என்ன செல்லம் குரலெல்லாம் அதட்டலா வருது? நானா நான் தான் உன்னோட புருஷனுக்கு எமனாக போற ஹரிஷ் பேசுறேன்

 

ஹரிஷ்!!!!”

 

ஆமாடி..இங்க ஒருத்தனை ஏமாற்றி சொத்து எல்லத்தையும் பிடிங்கி கிட்டு..நீ பாட்டுக்கு சந்தோஷமா இருந்தா விட்டுடுவேனா??”

 

ஹேய்

 

ஏய்..குரலை உயர்த்தாத.. எனக்கு உன்னில ஒரு தனி பாசம் செல்லம்.. உன்னோட பாசம் எனக்கு மட்டும் கிடைக்கனும் நு இருந்தேன்..பச்..கிடைக்கலையா?? ஸோ உன்னோட பாசத்துக்கு உரிய கவினை கொல்ல போறேன்

 

ஹரிஷ்.. என்..என்ன பேசுற?”

 

பாருடா..பதறுறத?? உன்னோட கவினுக்கு எதுவும் ஆக கூடாதா??”

 

ஆமா..அவரை..அவரை ஒன்றும் பண்ணிடாத

 

அப்போ அவனோட நீ நெருங்காத.. நீ அவன் கூட சந்தோஷமா இருந்தா அவனை தான் கொல்லுவேன்என்றவுடன் ஃபோனை கட் பண்ணி விட்டான்..

 

நடந்ததை அவள் கூறி முடிக்கவும் “ஹா..ஹா” என்று பெருங்குரலெடுத்து சிரிக்க தொடங்கினான் கருண்..

Advertisement