Advertisement

உள்ளே கண்ணாடித்தடுப்பால் மனோகர சக்கரவர்த்தி என்று பலகை போடப்பட்டு இருந்த அறைக்கதவை மென்மையாக தட்டியவள் சற்று திறந்து

மே ஐ கம் இன் சார்” எனவும் ஏதோ கோப்பை பார்வை இட்டு கொண்டு இருந்த மனோகர் நிமிர்ந்து அவளை பார்த்து புன்னகைத்து உள்ளே வரும்படி தலை அசைத்தார்.

உள்ளே வந்தவளை தனது மேஜைக்கு முன்னே இருந்த இருக்கையை காட்டி அமர சொன்னவர்

 

என்ன ஆதி மேடத்தோட காத்து இந்த பக்கம் அடிக்குது? இன்டர்வ்யூ பண்ணும்போது என்னை மீட் பண்ணவங்க தான்..அப்புறம் ஸ்கூல்ல கண்டா ஒரு குட்மார்னிங்க் ஒரு சிரிப்பு அவளோ தான்.” என்று அவளுடன் குறும்பு பேசியவருக்கு அவள் இன்டர்வியூ க்கு வந்த அந்த நாள் கண்முன் விரிந்தது.

 

தன் முன்னே அமர்ந்து இருந்தவளையும் அவள் அளித்த கோப்பையும் அவள் கையில் இருந்த குழந்தையையும் பார்த்தவர் புருவத்தை சுருக்கியபடி அந்த கோப்பை மூடி சற்று தள்ளி வைத்தார்.பின் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தவர் முன்னே இருந்த மேஜையில் கையை ஊன்றி அதில் தன் நாடியை பதித்து

 

ஸோ மிர்ஸஸ் ஆதிரா ஆம் ஐ ரைட்?”

 

யெஸ் சார்”

 

ஹ்ம்ம்..உங்க ஃபைல்ஸ் எல்லாம் பார்த்தேன்..அதுல ஜஸ்ட் உங்க நேம் மட்டும் தான் இருக்குது.வேற விபரம் ஒன்றும் அறிய முடியலையே?’

 

ஹ்ம்ம்.. வேற விபரம் ?? ஓ சார் குடும்ப விபரம் கேக்குறீங்களா? இதோ இவ என் குழந்தை ஸ்ரீஜா..இவளோட அப்பா இப்போ உயிரோட இல்ல..என் நாத்தனாரோட இப்போ இங்க வந்து தங்கி இருக்கேன்.என் ஃப்ரெண்ட் சுதா சொல்லி தான் இங்க வேலை கேட்டு வந்தேன்.இதை விட சொல்ல ஒன்றும் இல்லை சார்”

என்று அவள் கூறியதில் இவ்வளவும் தான் என்ற தொனிக்கு பதில் இதற்கு மேல் எதுவும் கேட்காதே என்ற தொனியே இருந்ததை குறித்து கொண்டவர் மென்மையாக புன்னகைத்த படி

 

ஓகே ஆதிரா.. உங்களுக்கு வேலை தாரதுல எனக்கு எந்த ப்ரொப்ளமும் இல்லை..ஆனா உங்க தகுதிக்கு கல்லூரியில லெக்சருக்கு ட்ரை பண்ணி இருக்கலாமே? அக்சுவலி எங்க குடும்ப பெயர் அதான் மா சக்கரவர்த்தி காலேஜ் என்று ஒன்று இருக்கு..வேணும்னா நீ அங்க” என்று இழுக்கவும்

 

இல்லை சார்..நான் பணத்தை முன்னிறுத்தி வேலை தேடல..மன அமைதிக்கும் சேர்த்து தான் தேடுறேன்..அது இங்க கிடைக்கும் என்று நினைக்கிறேன்..”

எனவும் “ஹ்ம்ம்ம்” என்றபடி நாடியை தடவியவர் கையில் இருந்த குழந்தையை ஒரு முறை பார்த்து விட்டு

 

ஆனா மா ஒரு ஆறு மாத குழந்தையை வைச்சுக்கிட்டு”

 

இல்ல சார்..என் நாத்தனார் காலேஜ் போகனும்.ஸோ நான் இப்போ ஜாப் ஒன்று செய்ய வேண்டிய கட்டாயத்தில தான் இருக்கிறேன்.”

 

ஹா..ஹா..எல்லாத்துக்கும் ஒரு பதில் வைச்சிருக்கிற..சரிமா..நீ எப்போல இருந்தென்றாலும் இங்க சேர்ந்துகொள்ளலாம்..முதல் இந்த ஊர்ல செட்டில் ஆகிட்டு இங்க வந்தா போதும்”

என்று கூறவும் கண்கலங்க அவள் புன்னகைத்த முகம் இன்றும் அவருக்கு நினைவில் உள்ளது..

 

அன்று அவர் அவளிடத்தில் கண்ட நிமிர்வு பணிவு அமைதி தெளிவு அனைத்துமே அவள் மீது நல்ல அபிப்ப்ராயத்தை கொண்டு வந்து மனதில் அவளுக்கு உயர்ந்த ஸ்தானத்தை கொடுத்து இருந்தாலும் புறம்பாக சலுகைகள் என்று அவளுக்கு அவர் அளித்தது இல்லை..அவளும் அதை ஏற்க மாட்டாள் என்று தெரிந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம்..

 

தன்னை யோசனையுடனே பார்த்து கொண்டு இருந்தவரை ஆதிரா

சார்” என்று சற்று உரக்க அழைக்கவும் திடுக்கிட்டவர்

 

ஐ அம் ஸாரிமா..ஏதோ யோசனை”

 

ஐயோ பரவால்ல சார்..ஆனா ஒரு ப்ரொப்ளமும் இல்லையே?” என அக்கறையாக கேட்கவும் புன்னகைத்தவர்

 

எனக்கு பிரொப்ளம் வந்தா பார்க்க நிறைய பேர் இருக்காங்க மா..அது தெரிஞ்சும் இப்படி கேக்கிறியே?”

என்றவரை பார்த்து என்னவென்று வரையறுக்க முடியாத புன்னைகையை சிந்தியவள்

 

எத்தனை பேர் இருந்தாலும் ஷேர் பண்ண முடியாத ப்ரொப்ளம்ஸ் உம் இருக்கு சார்”

 

ஹ்ம்ம்..தட்ஸ் ட்ரூ..தட்ஸ் ட்ரூ” என்று தலையை அசைத்தவர் ஏதோ நியாபகம் வந்தவராக

 

 

ஏன்மா? எதுக்கு இப்போ என்னை பார்க்க வந்திருக்க?”

எனவும் தான் தான் வந்த காரியம் நியாபகம் வர

 

ஸாரி சார்..அது சுதாவை மீட் பண்ண வர சொல்லி இருந்தீங்களாம்.. அவளோட ஹஸ்பண்ட் கு உடம்புக்கு முடியலைனு லீவ் சொல்லி இருக்கா..அவ தான் உங்களை மீட் பண்ணி என்ன விபரம் என்று கேட்க சொன்னாள்.”

 

ஓஹ்..அதுமா..எங்க ஸ்கூல்கு நிறைய கம்பனிஸ் ல இருந்து ஸ்பொன்ஸர் பண்ணாலும் எங்க சக்கரவர்த்தி குடும்பத்தோட வாரிசுகள் என்னோட மகன் கவின்,என் தங்கையோட மகன் கருண் இரண்டு பேரோட பிஸ்னஸால வரும் பணத்தை தான் இங்க யூஸ் பண்ணுவோம்..அவங்க இங்க மட்டும் இல்லை நிறைய இடங்களில ஏகப்பட்ட பிஸ்னஸ் பண்றாங்க..

 

ஆனா ஹெட் ஆபிஸ் இங்க தான் இருக்கு..அவங்க இரண்டு பேர்ல யாராவது ஒருத்தங்க இங்க வரப்போ கம்பனி ஆடிட்டிங்க் உம் முடிஞ்சு இருந்தா நம்ம ஸ்கூல்ல இருந்து சுதா தான் போய் ஃபண்ட் அ எடுத்திட்டு வருவா..அதான் வர சொல்லி இருந்தேன்..ஆனா இன்றைக்கு அவ வேற வரலைனு சொல்லுற..ஹ்ம்ம்..ஆனா கருண் இன்றைக்கு ஆபிஸ்ல நமக்காக வெய்ட் பண்ணிகொண்டு இருப்பானே என்ன பண்றது “

 

அதுக்கென்ன சார்..இன்றைக்கு நான் போய் வாங்கி வருகிறேன்.”

 

இல்லமா..ஸ்ரீ என அவர் இழுக்கவும்

 

ஒரு ப்ரொப்ளமும் இல்லை சார்..நான் ஸ்ரீ க்கும் முடிய அவளையும் கூட்டிட்டே போகிறேன்.”

 

சரிமா..பத்திரம்..செக் ஆ தான் தருவான்.. ஸோ ப்ரொப்ளம் இல்லை.எனக்கு வேற வேலை இருக்கு அதான் உன்னையே அனுப்ப வேண்டியதா இருக்கு..பாத்து போ..ஸ்கூல் வண்டிலேயே போ..சரியா மா?”

எனவும் புன்னகையுடன் தலை அசைத்தவள் அவரிடம் அனுமதி பெற்று கொண்டு வெளியேறினாள்

 

அந்த மரத்தடியில் தன்முன் கூடி இருந்த அந்த கன்னிபெண்கள் குழுவையே மிரண்ட பார்வையுடன் பார்த்து கொண்டு இருந்தாள் சிந்து.கடும் பச்சை நிறத்தில் சற்று உயர்ந்த ரக ஷல்வாரும் மார்பை மறைத்த துப்பட்டாவும் கைகளில் கருநிற வளையல்களும் நெற்றியில் கரியநிற பொட்டும் அதன் கீழே சற்று சிறியதாக தீட்டப்பட்டிருந்த குங்குமகீற்றும் பார்த்தவுடனே அவளை எவ்வளவு அடக்கமானவள் என்று மற்றவர்கள் கணிக்க கூடிய தோற்றத்தில் இருந்தாள்.. அவள் கையில் கைபேசி யாருடனோ தொடர்பு படுத்தபட்டு இருந்தது..

அதை அறியாத அந்த கூட்டத்தில் இருந்த ஒருத்தி

என்னமா கண்ணூ..?? பெரிய பத்தினி போல ஒரு போஸ்ல வந்து நிற்கிற?”

ஹேய்..இந்த காலத்துல பத்தினிங்க எல்லாம் இவள போல இருக்கிறது இல்ல..”

அப்போ” என்று அந்த கூட்டம் இழுக்கவும்

அதெல்லாம் சொல்லமுடியாது போங்கடி.. இதோ இவளையே கேளுங்க”

ஏய் சொல்லுடி”

எனவும் கண்களில் துருத்திக்கொண்டிருந்த கண்ணீரை அழுந்த துடைத்தபடி நிமிர்ந்தவள்

எ.என்..என்ன சொல்லனும்?” என்று திக்கவும் ஒரு அடிமை சிக்கிய சந்தோஷத்தில் அந்த கூட்டத்தில் இருந்து எழுந்த ஒருத்தி அவளது துப்பட்டாவை பிடித்து இழுத்தபடி கிட்டவா சொல்றேன் என்று கூறி அதை உருவ பார்க்கவும்

பளார்” என்று அவள் கன்னத்தில் பதிந்தது பாவனாவின் கரம்..

ஏய்” என்று கூவியபடி அந்த கூட்டம் தமது எதிர்ப்பை காட்டவும் ஒரு விரல் நீட்டி அனைவரையும் எச்சரிக்கும் விதமாக உக்கிரமாக முறைத்தவள்

ச்சே..நீங்களாம் பொண்ணுங்களாடி?? ஒரு பொண்ணு கூட எப்பிடி நடக்கனும் என்று ஆண்களுக்கு பாடம் எடுக்க முன்னாடி உங்கள போல கேடு கெட்டவளுகளுக்கு தான் எடுக்கனும்”

ஏய் என்ன ஓவரா பேசுற?”

எவடி அவ?பின்னால இருந்து சௌண்ட் போடுறவ..தைரியம் இருந்தா முன்னாடி வாடி” என்று பாவனாவின் அருகில் இருந்த ரம்யா குரல் கொடுக்கவும் அந்த கூட்டத்தில் ஒரு அசைவில்லை..கராத்தேயில் ப்ளக் பெல்ட் வாங்கிய பாவனாவிடம் அடி வாங்க முடியுமா?

மீண்டும் அவர்கள் அனைவரையும் ஒரு முறைமுறைத்தவள் சிந்துவின் கையை பற்றி

நீ வாமா என்கூட”  என்று உள்ளே அழைத்து சென்றாள். தன்னை ஒரு ஜோடி விழிகள் ரசித்ததை கூட அறியாமல்..

கல்லூரியினுள்ளே தனது தங்கையை அனுப்பி வைத்துவிட்டு அவளது ஃபோனை ஆனில் வைத்திருக்கும் படியும் பணித்து விட்டு காரினுள்ளே அமர்ந்து இருந்த கருணுக்கு ஆரம்பத்தில் அந்த பெண்கள் தங்கையை மறிக்கவும் சும்மா ஏதோ விளையாட்டாக பேசி விட்டு விட்டுவிடுவார்கள் என்று அமர்ந்திருந்தான்.

 

சிறிது நேரத்தில் அவர்களின் பேச்சு வரைமுறையை மீறவும் தங்கையை நோக்கி விரைந்து சென்றவனின் கண்களில் பட்டது ஒரு பெண் அவர்களை நோக்கி கோபமாக செல்லும் காட்சியும் பின் அவர்களை பிரித்து மேயும் காட்சியும்..அதுவரை தங்கையை பற்றி எண்ணிக்கொண்டு இருந்தவன் பாவனா அவளை தன் பொறுப்பில் எடுக்கவும் அவளை பற்றி யோசித்தவாறே அந்த இடத்திலேயே சமைந்து நின்று விட்டான்.

 

 

சிறிது நேரத்தில் அருகே யாரோ

சார்..சார்” என்று அழைக்கவும் தான் தெளிந்தவன் அருகில் நின்றிருந்த வாட்ச்மேனை பார்த்தான்.என்ன என்பதை போல தன்னை நோக்கியவனை சற்றே நிமிர்ந்து பார்த்த அவன்

 

சார்..என்ன சார் நீங்க..?? நான் கூப்பிட கூப்பிட நிற்காமல் உள்ள வந்திட்டீங்க? எங்க மேம் கு தெரிஞ்சா அவ்வளோ தான்..இது லேடிஸ் காலேஜ் சார்..”

அவன் பேசுவது எதையுமே கவனிக்காமல் முகத்தில் உறைந்த புன்னகையுடன் தன் பின்மண்டையில் தட்டிய படி வாயிலை நோக்கி நடந்தவனை ஒரு முறைப்புடன் பார்த்த வாட்ச்மேன் தன் நெற்றியில் தட்டி தன் விதியை நொந்தபடி அடுத்த அலுவல்களை பார்க்க சென்றான்.

 

சிந்துவை கைப்பற்றி உள்ளே ஒரு ஓரமாக கொண்டுவந்து நிறுத்திய பாவனா அவளது கையில் இருந்த போனை புருவம் சுருக்கி பார்க்கவும்

 

இல்லங்க அண்ணா..அண்ணா கூட பேசி..பேசிக்கிட்டு வந்தப்போ தான் அந்த அக்கா கூப்பிட்டாங்க..அதான்” என்று பதறியவளை பார்த்து ஆறுதலாக புன்னகைத்த பாவனா அவள் தோளை அழுத்தி

 

பரவால்லை இப்போ பேசி முடி..அவங்களும் அங்க இப்போ பயந்திருப்பாங்க” என்றவுடன் ஹ்ம்ம் என்றூ மண்டை ஆட்டியவள்

 

அண்ணா..அம் ஓகே..ஃபோனை வைச்சிடுறேன்.” என்று கூறி ஃபோனை அணைத்து பர்ஸில் போட்டவள் அடுத்த உத்தரவிற்காக பாவனாவையே பார்த்தாள்..

 

சிந்துவின் செயல்கள் அனைத்தும் மிரண்டு போய் இருக்கும் போது ஸ்ரீ எப்படி இருப்பாளோ அப்படி தான் இருந்தது.அவளை பார்த்து ஆறுதலாக புன்னகைத்து தோளோடு அணைத்து விடுவித்தவள்

 

ஹ்ம்ம்..உன் பெயர் என்ன சொன்ன?”

 

சிந்து..சிந்துபைரவி”

 

வாவ்.. சிந்துபைரவி என்ன ஹிட் மூவி தெரியுமா அது?? எனக்கு பிடிச்ச மூவியோட பெயர வைச்சு இருக்கிறதாலேயே உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு” என்றூ கூறியவளை பார்த்த தோழிகள்

 

அடிபாவி” என்று மனதுக்குள்ளே கூறிக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டிருந்தனர்.

ஏனெனில் ஒருமுறை சிந்துபைரவி படம் ஒரு தியெட்டரில் ஓடுவதை அறிந்து அதற்கு போக ப்ளான் போட்டவர்களை ச்சே அதெல்லாம் ஒரு படமா என்று கூறி மறித்தது சாட்சாத் நம்ம பாவனா தாங்க..

 

அவள் தன்னை அவ்வாறு கூறியதும் சற்று தெளிந்த சிந்து இலேசாக புன்னகைக்கவும்

 

ம்ம்,,இப்போ தான் அழகா இருக்கிற.இங்க பாரு சிந்து..சீனியர்ஸ் என்றால் முதல் பார்த்து மிரள்றதை நிறுத்து.அவளுகள் உனக்கு ஒரு வருடம் முதல் பிறந்துட்டா பெரிய அப்பாடக்கரா??உன் துப்பட்டாவை பிடிச்சு இழுத்தாளே ஒருத்தி அவ இங்க வரும் போது எப்படி இருப்பா தெரியுமா? நல்லா எண்ணை வைத்து முகமெல்லாம் எண்ணை வடிய மிரள மிரள முழிச்ச படி” என்று பாவனா பாவனையோடு சொல்வதை பார்த்தவுடன் வாய்விட்டு சிரிக்க தொடங்கினாள் சிந்துபைரவி..

 

அதை திருப்தியான புன்னகையுடன் பார்த்தவள்

இதோ பாரு சிந்து..பயம் என்ற ஒன்று இருக்கணும்..அது தேவையான விஷயங்களுக்கு மட்டும் இருக்கணும் என்று எங்க அண்ணி சொல்லுவாங்க..ஸோ நீ தைரியமா இருக்கனும் சரியா? சரி நீ என்ன டிப்பார்ட்மென்ட்?”

 

அவள் கூறியதுக்கெல்லாம் மண்டையை ஆட்டியவள் டிப்பார்ட்மென்ட் பற்றி கேட்டவுடன்

ஆர்க்கி” என்றாள்.

 

ஹ்ம்ம்.. நாங்களும் ஸேம் டிப்பார்ட்மென்ட் தான்..இப்போ கிளாஸ் க்கு போ.ஃப்ரீயா இரு..இன்டர்வெல் டைம் நாங்க அதோ அங்க தெரியுது பாரு கன்டீன் அங்க இருப்போம்..உனக்கு தோணுனா எங்க கூட வந்து ஜாயின் பண்ணிக்கோ..ஹ்ம்ம்” என்று கூறியவள் அவளை அவள் கிளாஸில் கொண்டு போய் விட்டுவிட்டு தனது கிளாஸை நோக்கி பயணித்தாள்..

 

காரில் ஏறி அமர்ந்த கருணுக்கு மூளையில் மின்னல் வெட்ட காதில் இருந்த ப்ளூடூத்தில் கவனத்தை செலுத்தி பாவனாவின் குரலை கேட்க தயாரானான். ஆனால் அவள் சிந்துவை ஃபோனை அணைக்க சொன்னதும் ச்சே என்று ஸ்டியரிங்கில் ஓங்கி ஒரு போடு போட்டவன் காரின் கண்ணாடியில் அழகுக்காக தொங்கவிடப்பட்டிருந்த கீடெக்கில் இருந்த தன் உருவப்படத்தை பார்த்து

 

என்னடா இப்பிடி ஆகிப்போச்சு கருண்? இன்றைக்கு உனக்கு நாள் சரி இல்ல போல..ச்சே..ச்சே..அப்பிடி இருந்திருந்தா அவளை இன்றைக்கு பார்த்து இருப்பியா? ஆனாலும் இத நம்ம சொல்லியே ஆகனும் என்ன பொண்ணுடா அவ? சும்மா சுண்டி இழுக்குற கலர்ல செதுக்கிவச்ச சிலை போல..

 

அந்த கண்ணு இருக்குதே கண்ணு அம்மாடியோ  கோவத்துல அந்த பொண்ணை முறைச்சா பாரு..சபா..நானே ஆடி போய்ட்டேன்னா பாரேன்..ஆனா இதெல்லாம் சரி வருமா கருண்??சரி விடு.அத பற்றி அப்புறம் யோசிக்கலாம் இப்போ இந்த நிமிஷம் சும்மா ஜிவ்வுன்னு பறக்கிற போல ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு பாரு அத அனுபவிப்போம்”

 

என்று கூறியபடி காரில் இருந்த ப்ளேயரை போட்டவன் அதில் போய்க்கொண்டிருந்த வசீகரா பாடலுக்கேற்றபடி விசிலடித்தவாறே ஹெட் ஆபிஸை நோக்கி தன் வாகனத்தை செலுத்தினான்..

 

Advertisement